Yarl Forum
சந்திரமுகி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சந்திரமுகி (/showthread.php?tid=4875)

Pages: 1 2 3 4 5 6 7 8


சந்திரமுகி - Mathan - 03-06-2005

சந்திரமுகி பாடல்கள்

சமீப காலங்களில் தப்பட்டைராயனாக அவதாரம் எடுத்திருக்கும் வித்யாசாகர் இசை என்பதால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலேதான் கேட்கத் தொடங்கினேன். வித்யாசாகர் மிகத்திறமையான இசையமைப்பாளர்தான். வித்தியாசமாகவும் சிறப்பாகவும் பல படங்களில் பாடல்களும் பின்னணி இசையும் தந்திருந்தாலும் (உதாரணம் அன்பே சிவம்) இப்போதெல்லாம் வித்யாசாகர் பெயரைக் கேட்டாலே பயமாக இருக்கிறது. 'டண்டணக்கர டண்டணக்கர' என்று சராகமாகத் தொடங்கி காதுகளைப் பிளந்துபோடாமல் விடமாட்டேன் என்று படுத்துகிறார். சில காலத்துக்கு அவர் விஜய் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தால் தேவலை. உருப்பட வழியுண்டு.

சந்திரமுகி அந்த வரிசையில் முழுமையாகச் சேரவில்லை என்பது நல்ல சேதி. 'டண்டணக்கர' component இருக்கிறது. ஆனால் ஒரு பாடல்தான் ('அண்ணனோட பாட்டு'). மற்றபடி மெலடி என்று கணக்கு சொல்லத்தக்க வகையில் நான்கு பாடல்கள்! இன்றைய தமிழ் சினிமா நிலைமையில் இதுவே ஒரு ஆச்சரியமான விஷயம்.

தேவுடா தேவுடா என்று தலைவரின் ஒப்பனிங் சாங். கற்பூரம், ஆரத்தி சாமான்களுக்கு வேலைவைக்கும் நேரம். எனவே, அதற்கேற்ப தலையின் சூப்பர் சல்யூட், ட்ரேட்மார்க் சிரிப்பு, சமுதாய சிந்தனை வரிகள், நல்ல பளிச்சென்ற வெயிலில் அவுட்டோரில் பெருங்கூட்டம் புடைசூழ தலைவர் வேகமாக நடந்து வருவது, தாவணி (அப்படி ஒரு ஆடை உண்டு, நினைவிருக்கிறதா?!) உடுத்தி ஆடும் பெண்கள், ஏழைத் தொழிலாளியைக் கட்டியணைக்கும் தலைவர் என்று அத்தனைக்கும் ஸ்கோப் உள்ள பாடல். அத்தனையும் எதிர்பார்க்கிறேன். இதுகூட இல்லையென்றால் என்ன தலைவர் படம்? பாபா போல் தப்புத்தப்பாக யோசிக்காமல் ஒழுங்காக மன்னன், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா மாதிரி படமெடுத்தால் ஒரு வருடம் ஓடும். கியாரண்டி. இன்னொரு விஷயம். இந்தப் பாடலைப் பாடியிருப்பது எஸ்.பி.பி. தலைவரின் ஓப்பனிங் பாடலை இவர் பாடுவது ஒரு சென்டிமெண்ட். அதை உடைத்ததால்தான் (ஷங்கர் மகாதேவன் - பாபா) போன படம் ஊத்தியது என்று ஒரு எண்ணம் உண்டு. இந்த முறை எதிலும் கோட்டை விடுவதில்லை என்று முடிவோடு இருக்கிறார் வாசு. பாம்பு சீன், அம்மா ச்£ன் எல்லாம் எதிர்பார்க்கலாம்.

வரவர ஆஷா போஸ்லே, உதித் நாராயண், சாத்னா சர்கம் இவர்களெல்லாம் தமிழ் பாடக்கேட்டாலே அவர்கள் வாயில் சல்ப்யூரிக் அமிலம் ஊற்றவேண்டும் போல ஆசை வருகிறது. நம்மவர்களிடம் இல்லாமல் இவர்களிடம் என்ன இழவு இருக்கிறது என்று திரும்பத்திரும்ப இவர்கள் மேல் விழுகிறார்கள்? உதித், சாத்னா இருவரும் கிட்டத்தட்ட இப்போது வருகிற எல்லா தமிழ்ப்படங்களிலும் பாடுகின்றனர். ஆஷா எவ்வளவோ காலமாகத் தமிழில் பாடுகிறார். கொஞ்சம் சிரத்தை எடுத்து தமிழ் உச்சரிக்கக் கற்றுக்கொண்டால் குறைந்தா போய்விடுவார்கள்? அதுசரி. எ·ப். எம்மில் சுத்தத் தமிழச்சிகளே "நிகச்சியை இணாயிந்து வழங்குவவர்கள்" என்று தமிழ் பினாத்தும்போது இவர்களை எங்கே போய்ச் சொல்வது?

ஆஷா இந்தப்படத்தில் 'கொஞ்ச நேரம்' என்ற பாடல் பாடியிருக்கிறார். உடன் பாடுவது மது பாலகிருஷ்ணன் (பிதாமகன் 'பிறையே' புகழ்). அழகான மெலடி. இதமாக இருக்கிறது. தலைவர் படமாக இருந்தாலும் தம்மடிக்கப் போக வேண்டாமா? அதற்கேற்ற பாடல்.

"அத்திந்தோம்" என்று தொடங்கும் பாடல் எஸ்.பி.பி. குரலில் இனிமையாக இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து எஸ்.பி.பி இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். இவரிடம் தமிழ் இசையமைப்பாளர்களுக்கு என்ன பிரச்னை? இவர் பாட மறுக்கிறாரா, அல்லது போரடித்துவிட்டது என்று இவரை ஒதுக்கிவிட்டார்களா? போரடிக்கும் குரலா அது!

"கொக்கு பறபற கோழி பறபற" என்றபடி ஒரு ஜாலியான பாடல். 'ரா ரா' என்று ஒரு தெலுங்கு கர்நாடக சங்கீதம் இருக்கிறது. கேட்க நன்றாக இருக்கிறது.

பாடல்களை ஒரு முறை கேட்டிருக்கிறேன். சந்திரமுகி பரவாயில்லை. தலைவர் படத்துக்கென்று ஸ்பெஷலாக ஏதுமில்லை. ஆனால் குப்பையும் இல்லை. நான்கைந்து முறை கேட்டால் பிடித்துப்போய், நான்கைந்து மாதங்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, பிறகு காணாமற்போகும் வரிசையில் சேரப்போகும் பாடல்களைக் கேட்க ராகா இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் (இத்தளத்திலுள்ள பாடல்கள் அனுமதி பெற்று வெளியிடப்படுபவை என்று கேள்வி).

Shankar


- Mathan - 03-07-2005

சந்திரமுகி பாடல்களை MP3 வடிவில் தரவிறக்கம் செய்ய http://www.arthi.net/tamil/chandra/


- Mathan - 03-07-2005

நான் பாயும் குதிரை ரஜினி

<img src='http://cinesouth.com/images/new/06032005-THN30image4.jpg' border='0' alt='user posted image'>

நான் விழுந்தால் எழுந்திருக்க முடியாத யானை அல்ல, விருட்டென எழுந்து பாய்ந்தோடும் குதிரை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள சந்திரமுகி படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது. கேசட் மற்றும் சி.டியை பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே வெளியிட்டார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சீனிவாசன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் டி.ஜி. தியாகராஜன் ஆகியோர் முதல் கேசட் மற்றும் சிடியைப் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், தனது அரசியல் எதிரிகளுக்குப் பஞ்ச் வைத்துப் பேசினார். ரஜினியின் பேச்சிலிருந்து சில பகுதிகள்:

ஜக்குபாய் படத்தின் கதை குறித்த விவாதத்தின்போது அந்தக் கதையில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. காரணம் அது பாட்ஷா படக் கதையைப் போலவே இருந்தது.

இன்னொரு பாட்ஷாவை நான் செய்ய விரும்பவில்லை. எனவே வேறு ஒரு கதையைக் கொண்டு வாருங்கள் என்று ரவிக்குமாரிடம் கூறியிருந்தேன்.

இதன் பிறகு நான் கேரளாவுக்கு சென்றிருந்தேன். நான் வழக்கமாகப் படிக்கும் பகவத் கீதையை அங்கும் அமைதியான சூழலில் படித்தேன். அப்போது எனக்கு ஒரு புதிய சிந்தனை தோன்றியது.

அதாவது, போர்க்களத்தில் அர்ஜூனன் ஒரு புறம், கௌரவர்கள் எதிர்புறம் நிற்கின்றனர். தேரோட்டியாக வந்த கண்ணன், அம்புகளை எய்தி கௌரவர்களைத் தாக்குமாறு அர்ஜூனனுக்கு கட்டளையிடுகிறான்.

ஆனால் என் முன் நிற்பவர்கள் அனைவரும் எனது உறவினர்கள், சகோதரர்கள், எப்படி நான் அவர்களைத் தாக்குவேன் என்று தயங்குகிறான் அர்ஜூனன்.

அப்போது கண்ணன் உபதேசம் செய்கிறான். அவர்கள் உன் உறவினர்கள் என்று நினைத்து நீ தயங்கினால், பயந்து ஓடுகிறான், கோழை என்று இழிவாகப் பேசுவார்கள்.


உனது கடமையிலிருந்து நீ தவறக் கூடாது என்று அறிவுரை கூறுகிறார். இதைப் படித்தவுடன் எனக்குள் ஒரு வேகம் வந்தது.

உடனடியாக ஏதாவது ஒரு படத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் பி.வாசுவின் ஆப்தமித்ரா குறித்து தெரியவந்தது.

படத்தைப் பார்த்தேன். ரொம்பவே பிடித்து விட்டது. உடனடியாக இதை ஆரம்பித்தோம். 3 வருடங்களுக்கு முன்பு பாபா படம் செய்தோம். அது சரியாக போகவில்லை.

உடனே, ஆஹா, அண்ணன் அவ்வளவுதான் என்று சிலர் கேலி பேசினார்கள், எள்ளி நகையாடினர். ஆனால் அதைக் கேட்டு நான் பயந்து விடவில்லை.

காரணம், நான் சறுக்கி விழுந்தால் எழுந்திரிக்க முடியாத யானை அல்ல, மாறாக பாய்ந்து ஓடும் குதிரை. எனவே உடனே எழுந்து விட்டேன்.

சந்திரமுகி மூலம் மீண்டும் வேகம் எடுத்து ஓடப் போகிறேன். பி.வாசு பேசும்போது சொன்னார். நான் இந்தப் படத்தில் மிகவும் அழகாக வந்திருக்கிறேன் என்று.

அது சினிமாவுக்காக மேக்கப் போட்டு செய்த செட் அப். வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே நம்மை விட்டுப் போய் விடும். அது ஆரோக்கியம், அழகு, நல்ல நேரம்.

இது இருக்கும் வரை அது நமக்குப் புரியாது, தெரியாது. ஆனால் போகும்போதுதான் அதை நாம் உணர்ந்து கொள்வோம். பிரபுவின் சித்தப்பா சண்முகம் குறித்து நிறையக் கேள்விப்பட்டுள்ளேன்.

ரொம்பவும் பர்பக்ட் என்று கூறுவார்கள். அதேபோல, ராம்குமாரும், பிரபுவும் ரொம்ப பர்பக்ட். படப்பிடிப்பில் எனக்கு எந்த டென்ஷனும் ஏற்படாமல், ஒரு குழந்தையைப் போல பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

சிவாஜி பிலிம்ஸ் இனிமேல் வருடத்திற்கு 2 படங்கள் செய்ய வேண்டும். இது எனது வேண்டுகோள், ஆசை.

சந்திரமுகி ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நானும் அழகாக காட்டப்பட்டுள்ளேன். தமிழ்ப் பட வரலாற்றில் இதுமாதிரியான ஒரு படம் இதுவரை வந்ததில்லை என்று நிச்சயம் பேசப்படும்.


சந்திரமுகி குறித்து இப்போது நான் அதிகம் பேசவிரும்பவில்லை. என்னைக் கேலி செய்தவர்களுக்கும் சேர்த்து, சந்திரமுகியின் வெற்றி விழாவில் விரிவாக, விலாவாரியாக பேசுவேன் என்றார் ரஜினி.


- Mathan - 03-08-2005

<b>சந்திரமுகி படத்தின் டிரைலர் இதோ http://www.angelfire.com/ult/chandramugi/c...dramugi.swf[/b]

நன்றி - முத்து


- kavithan - 03-08-2005

நன்றிமதன் பாடல்களுக்கு


- tamilini - 03-10-2005

http://www.cinesouth.com/rajini.swf
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-10-2005

Mathan Wrote:<b>சந்திரமுகி படத்தின் டிரைலர் இதோ http://www.angelfire.com/ult/chandramugi/c...dramugi.swf[/b]

நன்றி - முத்து

இந்த இணைப்பு தற்போது வேலை செய்யவில்லை. மேலே தமிழினியின் இணைப்பில் பாருங்கள். இணைப்பிற்கு நன்றி தமிழினி.


- Nilavan - 03-10-2005

கிழட்டுச்சிஙகளம் கர்ச்சித்தால் எப்pடி இருக்கும்... அது பொல தான் ரஜனி.. தன்ரை பிள்ளையோட சோர்ந்து ஜோடியா படம் நடக்கலாமே!!! ஏன் சொல்லுறன் என்றால் இவருக்கு ஆஜாடி சேருற எல்லோரும் சின்ன பிள்ளையள் அதான்
நிலவன்


- Mathan - 03-10-2005

சந்திரமுகி இசை விமர்சனம் II

<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/nayan-rajik400.jpg' border='0' alt='user posted image'>

சூப்பர் ஸ்டாரின் "நிலையை" உணர்ந்து, பட்டையைக் கிளப்பும் பாட்டுக்களைக் கொடுத்துள்ளார் வித்யாசாகர். சந்திரமுகியில் அரசியல் இல்லை என்று யார் சொன்னது? இரண்டு பாடல்களைத் தவிர மற்ற அத்தனைப் பாடல்களிலும் அரசியல் வரிகள் கலங்கடிக்கின்றன.

வித்யாசாகரின் அதிரடி இசையில் ரஜினிக்கான "பில்டப்" பாடல்கள் ரசிக்கும்படியாகவே உள்ளன.

சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்ரத் தாழ் படத்தில் பாட்டுக்கள் அனைத்தும் மெலடி ரகம். அத்துடன் சாஸ்திரீய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் ரஜினி படத்தில் கர்நாடக மியூசிக் போட்டால் எடுபடுமா?. அதான், வாத்தியங்களை ஹைபிட்ச்சில் விட்டு 'சாத்தியிருக்கிறார்' வித்யாசாகர்.

''தேவுடா தேவுடா'' முதல் பாட்டிலேயே டாப் கியருப்புப் போய்விடுகிறார் வித்யாசாகர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்காக குரல் கொடுத்துள்ளார் எஸ்.பி.பி. சும்மா சொல்லக் கூடாது, எத்தனையோ போருக்கு "வாய்ஸ்" கொடுத்துள்ள ரஜினிக்கு ஏற்ற வாய்ஸ், தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல், வரிகள் முழுக்க ரஜினியைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் வாலி. இந்தப் பாடல் மூலம் "யாரையோ" குட்டியும் இருக்கிறார் ரஜினி.

''உன்னப் பத்தி என்ன சொன்னால் என்ன?
இந்தக் காதில் வாங்கி அதை அந்தக் காதில் தள்ளு

மேகம் மிதந்தாலும், காகம் பறந்தாலும்,
ஆகாயம்தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு
பூப்பந்தை யாரும், நீ ரில் பொத்தித்தான் வச்சாலும்,
பந்து வரும் தண்ணி மேலதான்

அட உன்ன யாரும் ஓரம் கட்டித்தான்
வச்சாலும் தம்பி, வாடா பந்து போலதான்
மூனாம்பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்
வளர்வதை மின்மினிகள் தடுத்திடுமா?''

அத்தனையும் நிறைய 'அர்த்தம் பொதிந்த' வரிகள். பாட்டின் மூலம் பல பேருக்கு "மெசேஜ்" கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார். பாதிப் பாட்டில் , யாரையோ மனதில் வைத்துக் கொண்டு மெஸேஜாக சொல்லிவிட்டு, மிச்ச மீதிப் பாட்டில் சமூக அக்கறை கொண்ட தலைவனாக மாறி கருத்து சொல்கிறார் ரஜினி.

சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு,

நாலு நாளு லீவு போட்டா நாறிப் போகும் ஊரு.. என்று சமூக அக்கறையை ஒரு கிளாய் டீயில் கொஞ்சமாய் சக்கரை மாதிரி கரைத்துத் தந்திருக்கிறார்.

''கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்''... ஒரு அழகிய பாடல். அழுத்தமான மெலடி. கொஞ்சும் குரலில் பின்னியிருக்கிறார் கானக் குயில் ஆஷா போன்ஸ்லே. குரலில் ஆங்காங்கே அவரது வயது எட்டிப் பார்க்க முனைந்தாலும், கூடப் பாடியிருக்கும் மது பாலகிருஷ்ணன் அதைச் சரிக் கட்டியிருக்கிறார். மனிதருக்கு என்ன இதமான வாய்ஸ்?

பாடல் வரிகளில் யுகபாரதி, ஜாலம் புரிந்திருக்கிறார்.

''மழை நீயாக, வயல் நானாக
வெள்ளாமை நீ ..

கொக்கிப் போடும் விழி
கொத்திப் போகும் இதழ்
நித்தம் கோலமிடுமா ..

அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா .. ''

என்று கொஞ்சமாய் வைரமுத்துவை ஒட்டி வரும் நளினமான வரிகள். வித்யாசாகரும் வார்த்தைகளை டிரம்ஸ் கொண்டு உடைத்துவிடாமல் மெல்லிய பேக்கிரவுண்ட் மியூசிக் கொடுத்து வாழ வைக்கிறார்.

மொத்தப் பாடல்களிலும் இது ஒன்றுதான் மெலடி என்பதால் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது பாட்டு.

ஆனால், இதிலும் ரஜினிக்காக ஒரு "பஞ்ச்".

''பல கோடிப் பேரின் அபிமானம்
உனைப் பார்த்து ஏங்கும் எதிர்காலம்'' ..

இந்த வரிகள் என்ன சொல்ல வருகிறதென்று ரஜினி ரசிகர்களுக்குப் புரியாதா என்ன? பாலிட்டிக்ஸை நாம் கஷ்டப்பட்டு மறந்துவிட்டுக் கேட்டால் , சுகானுபவம் தரும் பாடல்.

''அத்திந்தோம்'' என்னொரு பாடல். எஸ்.பி.பியின் 'எவர்' சில்வர் குரலில் சிலிர்க்க வைக்கும் பாட்டு. மனுஷனுக்கு வயசு ஆனாலும், வாய்ஸில் இன்னும் சிலிர்ப்புப் போகலையே..

இசையும், எஸ்.பி.பி.யின் குரலும் இணைந்து குலைந்து போதையூட்டுகின்றன. அழகிய "ஃபோக்" சாங். பா.விஜய்யின் வரிகளில் வசீகரம்.

''சின்ன சின்னத் தொட்டில் கட்டி
அம்மா சொல்லும் ஆராரோ
இசைதானே ஓ இசைதானே

ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
ஆச மெட்டுக் கட்டறதும்
இசைதானே ஓ இசைதானே'' என்ற வரிகள் ரசிக்க வைக்கின்றன.

இது போன்ற நாட்டுப்புற இசையில் புகுந்து விளையாடும் இசைஞானிக்கு ஈக்வலாக கலக்கியிருக்கிறார் வித்யாசாகர்.

''கொக்கு பற பற'... சரியான ஜாலி பாட்டு. ரஜினி, பிரபு சேர்ந்து பாடும் பாட்டு. இதுவும் ரஜினிக்காகவே எழுதப்பட்ட சூப்பர் "பில்டப்" பாட்டு.

ரஜினிக்காக, ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியை பிடித்தவர்கள்பிடிக்காதவர்களுக்காக என்று அனைத்துத் தரப்பினருக்கும் மெசேஜ் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.

''பாஞ்சு பாயிற பட்டம்
இது சூப்பர் ஸ்டாரு பட்டம்

காத்து இப்ப நம்ம பக்கம்
சாதகமாக வீசுதே

நூலோட போட்ட இந்த மாஞ்சா
யாரோடும் டீலு போடுமே

ஏத்தி விட்டத மறந்தாக்கா அந்த
நன்றி என்னும் வார்த்தைக்கொரு
அர்த்தம் இல்லை.

மீனாட்சியம்மனப் பார்த்தாக்கா
கந்து வட்டியோட கொடுமையப்
போக்கச் சொல்லு

ஸ்ரீரங்கநாதனப் பார்த்தாக்கா
தலக்காரிவிய அடிக்கடி வரச் சொல்லு

என்று காவிரியை பட்டும் படாமல் தொட்டும் தொடமல் டச் செய்துவிட்டுப் போகிறது இந்த 'ரஜினி' பாட்டு.

தனக்குத் துரோகம் செய்தவர்களுக்கு, தன்னை நட்டாற்றில் விட்டவர்களுக்கு இந்தப் பாட்டின் மூலம் பஞ்ச் கொடுத்துள்ள ரஜினி, துவண்டு போயுள்ள ரசிகர்களுக்கும் குளுக்கோஸ் கலக்கி கொடுத்துள்ளார். பாட்டு ரசிகர்களிடையே ஹிட் ஆகும்.

''ரா ரா.... '' இது ஒரு தெலுங்குப் பாட்டு. ஆனால் இதுதான் கிளைமாக்ஸ் பாட்டாம். இந்தப் பாட்டை புவனா சந்திரா எழுதியுள்ளார். திப்புவும், பின்னி கிருஷ்ணகுமாரும் பாடியிருக்கிறார்கள்.

தமிழில் எதற்கு தெலுங்கு பாட்டு என்று குழப்பம் வருகிறது. வரிகள் புரியாவிட்டாலும், ரசிக்குமாறு மெட்டமைத்துள்ளார் வித்யாசாகர்.

''அண்ணனோட பாட்டு'' என்று இன்னொரு செம 'பில்டப்' பாட்டு.
முறிலும் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து இந்தப் பாட்டைப் போட்டுள்ளார்கள்.
அண்ணனோட பாட்டு
ஆட்டம் போடடா

அக்கறையோட கேட்டா
அர்த்தம் நூறுடா

அன்பின் உறவாயிரு
உண்மை மறவாதிரு

சொந்தக் காலில் நீ நில்லம்மா
நீ நின்ன பின்னால ஊரே கேட்கும்
அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா ('அம்மாவுக்கே' மெஸேஜா?)

கண் இமைக்கும் நொடியில்
அட எதுவும் நடக்கும்
இது எனக்குத் தெரியும்
நாளை உனக்கும் புரியும்

அஞ்சுக்குள்ள நால வை

ஆழம் பார்த்துக் கால வையடா ..

கபிலனின் வரிகளை, கடிக்காமல் பாடியிருக்கிறார்கள் கார்த்திக்கும், சுஜாதாவும்.

விஜய், திஷாவின் ஆட்டத்தால் பிரபலமான 'அப்படிப் போடு' பாட்டைப் போலவே ஒரு பாட்டு வேண்டும் என்ற ரஜினியின் கேட்டதற்கு ஏற்ப வித்யாசாகர் அதே பாணியில் போட்ட பாட்டாம் இது.

சந்திரமுகிப் பாடல்களைப் பொருத்தவரை, வித்யாசாகர் ரஜினி ரசிகர்களை நிச்சயம் வெல்வார்.

Thats Tamil


- Mathan - 03-14-2005

ரஜினி படம் வருது... சச்சினை தள்ளி போடுங்க...
-ரஜினியின் வேண்டுகோளும், தாணுவின் சம்மதமும்!

முதல் படத்தின் ரிலீசின் போது கூட இத்தனை டென்ஷன் இருந்திருக்காது ரஜினிக்கு. சந்திரமுகி ரிலீஸ் நெருங்க நெருங்க, கோவில் கோவிலாக டிரிப் அடிக்க ஆரம்பித்திருக்கிறார். திருவண்ணாமலை, திருப்பதி என்று அவர் அடிக்கிற தெய்வீக டிரிப்புகள், சினிமாவுலகத்தை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையும் கவனிக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் திருப்பதி சென்றிருந்த ரஜினி ஸ்பெஷல் கேட் வழியான உள்ளே நுழைந்து மின்னல் வேகத்தில் சாமி கும்பிட்டு விட்டு வெளியேறியிருக்கிறார். அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களுக்கும் கும்பிடு ஒன்றையே பதிலாக தந்துவிட்டு அவர் சென்றுவிட, அவர் பின்னால் சென்ற உதவியாளர்கள், ÔÔசந்திரமுகி நல்லா ஓடணும்னு பிரார்த்தனை பண்ணிட்டு போறாருÕÕ என்றார்கள்.

இதற்கிடையில் ரஜினி தரப்பிலிருந்து சந்திரமுகி ரிலீஸ் நேரத்தில் வர போகும் பிற படங்களின் ரிலீசையும் தள்ளி வைக்கிற முயற்சிகள் நடக்கின்றன. சச்சின் படத்தின் தயாரிப்பாளர் தாணு என்பதாலும், ரஜினிக்கு அவர் ஏற்கனவே நல்ல நண்பர் என்பதாலும், சச்சின் படத்தின் ரிலீசை தள்ளி போட வைத்திருக்கிறார்கள். அதைப்போலவே அந்நியன் படத்தின் ரிலீசையும் தள்ளி போட வைத்திருக்கிறார்களாம்.

ஏப்ரல்-14 ந்தே ரிலீஸ் ஆகும் படங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் இது இரண்டும்தான் என்பதால் பதட்டத்தில் இருந்த ரஜினி தரப்பு, இப்போது ரிலாக்ஸ் ஆகிவிட்டது.

ரஜினியின் இந்த சமாதானப்படலத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் சற்றே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்களாம். ஏனென்றால்,
தலைவன் நிமிர்ந்தா மலை...
சொறிஞ்சா தலை
என்று கோஷம் போட்டது அவர்கள்தானே!

தமிழ் சினிமா


- KULAKADDAN - 03-14-2005

பந்தயத்தில குதிர ஓடி வெண்டா தான் மதிப்பு.....
தனிய நடந்திட்டு வெண்டிட்டன் எண்டு அப்பு சொல்லபோறார் போல.............. :evil: :evil:


- tamilini - 03-14-2005

சரியாய் சொன்னியள் குளக்காட்டான்.. போட்டியே இல்லாமல் வெற்றியா..?ஃ :|


- KULAKADDAN - 03-14-2005

கிழட்டு நடிகர் மாரை அப்பா வேடத்துக்கு மட்டும் நடிக்க விடணும்.......... :evil: :evil:
இல்லாட்டி கிழவனுக்கேற்ற கதை பண்ணணும்...........


- tamilini - 03-14-2005

தாத்தா வேசம் என்று சொல்லுவியள் என்று பாத்தன்.. :wink:


- வியாசன் - 03-14-2005

KULAKADDAN Wrote:பந்தயத்தில குதிர ஓடி வெண்டா தான் மதிப்பு.....
தனிய நடந்திட்டு வெண்டிட்டன் எண்டு அப்பு சொல்லபோறார் போல.............. :evil: :evil:

சினிமாவிலை இது சகஜமுங்கோ


- kirubans - 03-14-2005

ரஜனியின் படங்களை விரும்பிப் பார்ப்பதுண்டு. இப்போதைய படங்கள் அல்ல, 85க்கு முன் வந்த அவள் அப்படித்தான், முள்ளும் மலரும் மற்றும் பதினாறு வயதினிலே. அருமையான நடிகனை தலைவன், அது இது என்று சொல்லிக் கெடுத்துவிட்டார்கள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 03-16-2005

சந்திரமுகி பெயரை மாற்ற வேண்டும்- திருமாவளவன் திடீர் கெடுபிடி

இது என்ன புதுத்தலைவலி? கமலுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் தானே கெடு வைத்தார்கள்? எப்போது 'சந்திரமுகி' இவர்கள் லிஸ்டில் சேர்ந்தது? சிண்டை பிய்த்துக் கொள்கிறார்கள் 'சந்திரமுகி' யூனிட்டில் உள்ளவர்கள்.

தமிழ்பாதுகாப்பு இயக்கத்தினருக்கு தமிழறிவு கம்மி. 'சந்திரமுகி' தமிழ்ப்பெயர் என்று நினைத்திருந்தனர். அதனால் தான் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ரஜினி விஷயத்தில் 'கம்'மென்று இருந்தனர். இந்நிலையில் ஆப்பசைத்து 'சந்திரமுகி'யை சந்திக்கு இழுத்தவர் வாலி.

'சந்திரமுகி' ஒலி நாடா வெளியீட்டு விழாவில்தான் வாலியின் நாரதர் கலகம் அரங்கேறியது. "தமிழில் பெயர் வை என்கிறார்கள். 'சந்திரமுகி' வட மொழி. தமிழில் சந்திர என்றால் நிலா. முகி என்றால் மூஞ்சி. தமிழில் பெயர் வைப்பதென்றால் 'நிலா மூஞ்சி' என்றா வைக்க முடியும்?"

புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, போராட்டக்காரர்கள் தலைசொறிய எரிகிற கொள்ளியை எடுத்துக் கொடுத்தார் வாலி. தமிழ் பாதுகாப்பு கழகத்தினருக்கு அடித்தது லக்கி பிரைஸ். ரஜினிக்கு 'செக்' வைத்தால் அகில உலக தமிழர்களிடம் தங்கள் தமிழ் புரட்சியை கொண்டு செல்லலாம், காசு கொடுக்காமல் இலவச விளம்பரம் வேறு. விடுவார்களா?

"நடிகர் ரஜினிகாந்த் படத்தின் 'சந்திரமுகி' பெயர் வடமொழிச் சொல் ஆகும். அதற்கு நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும்" என திருமாவளவனிடமிருந்து அறிக்கை வெளிவந்துள்ளது. ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க, அறிக்கை கற்களாகவும், உருட்டுக்கட்டையாகவும் மாறக்கூடும்.

வாலி இப்படி வம்பில் மாட்டிவிட்டுவிட்டாரே என்பதுதான் ரஜினியின் இப்போதயை வருத்தம். நாரதர் கலகம் முடிவது நன்மையில். வாலி கலகம் முடிந்தது வம்பில்.

Cine South


- Mathan - 03-19-2005

<img src='http://cinesouth.com/images/new/18032005-SP1image1.jpg' border='0' alt='user posted image'>

Cine South


- KULAKADDAN - 04-09-2005

தமிழ்ப் புத்தாண்டையொட்டி 'ரஜினி திருவிழா'வுக்கு அவரது ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள்.

அன்று வெளியாகப் போகும் சந்திரமுகிக்காக திரையரங்குகளை ஜோடிக்கும் வேலையை ரசிகர்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டனர். சந்திரமுகியை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டுவது, வால் பெயிண்டிங் செய்வது என பரபரப்புகளை தொடங்கிவிட்டனர்.

சினிமா விஷயத்தில் எப்போதுமே தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கும் மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஒரு படி மேலேயே போய்விட்டனர். சந்திரமுகி வெற்றி பெற வேண்டி காப்பு கட்டிக் கொண்டு விரதம் இருக்க ஆரம்பித்துள்ளனர் ரஜினி பக்தர்கள்.. ஸாரி ரசிகர்கள்.

சிவப்பு வேட்டி, உடம்பெல்லாம் சந்தனப் பூச்சு, நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை என இந்த ரசிகர்கள் சந்திரமுகிக்காக அடுத்த 15 நாட்களுக்கு தீவிர விரதமாம். கவுச்சி அயிட்டத்தையெல்லாம் இவர்கள் தொடப் போவதில்லையாம். டாஸ்மாக் கடை பக்கமோ மதுரை 'புரோட்டா' கடைகள் பக்கமோ ஒதுங்க மாட்டார்களாம்.

கோவிலில் விஷேசம் என்றால் கொடியேற்றத்துடன் தானே அதைத் தொடங்குவோம். அது மாதிரி இந்த ரசிகர்களும் தங்களது விரதத்தை ரஜினி மன்றத்தின் கொடியை கையில் உயர்த்தியபடியே தொடங்கி அமர்க்களப்படுத்திவிட்டனர்.

பி.வாசு இயக்கி இருப்பதால் மினிமம் கியாரண்டியாவது இருக்கும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள், படம் நிச்சயம் பாபா மாதிரி 'சூப்பராக' இருக்காது என்ற அதீத நம்பிக்øயில் இருக்கிறார்கள்.

14ம் தேதி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகியவற்றில் திரையிடப்படும் சந்திரமுகி, அடுத்த நாளே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் வெளியாகிறது. நியூஜெர்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6 காட்சிகள் இப் படம் திரையிடப்படுகிறதாம்.

பாபா படம் வெளியானபோது ரஜினியின் பாபா போஸ் லோகோவுடன் கூடிய வாட்ச், பனியன் ஆகியவற்றையும் தாங்களே விற்பது என்ற முடிவுக்கு வந்தார் லதா ரஜினிகாந்த், அதிலும் காசு பார்க்கும் திட்டத்துடன். பாபா ரஜினி படத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள்.

ஆனால், இரண்டாவது நாளே 'புவாத்து' ஆகிவிட பாபா படம் போட்ட வாட்ச், பனியன் வாங்க ஆள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.

இந்த முறை அப்படியாப்பட்ட ரிஸ்க் ஏதும் எடுக்கப் போவதில்லையாம். அதே நேரத்தில் படத்தில் ரஜினி பயன்படுத்திய காஸ்ட்யூம்கள், வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடப் போகிறார்களாம் (ரஜினி 'விக்'கை ஏலம் விடலயாப்பா?). கூடவே நயனதாரா பயனபடுத்திய சேலைகளும் இன்டர்நெட் மூலம் ஏலத்துக்கு வரப் போகிறதாம்.

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை சிவாஜிபிரபு அறக்கட்டளையில் சேர்த்து அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவப் போகிறார்களாம்.

சந்திரமுகிக்காக ரஜினிக்கு விக் தயாரானது லண்டனிலாம். ரஜினியின் பழைய படங்களை அங்கு அனுப்பி வைத்து அதைப் போன்ற தோற்றத்தை மீண்டும் தரும் விக்கை லண்டன் காஸ்ட்யூம் நிபுணர்கள் தயாரித்தார்களாம்.


படத்தைப் பற்றி பத்திரிக்கைகள் நன்றாக 'ஏத்தி' எழுத வேண்டுமென்பதற்காக சிவாஜி பிலிம்ஸ் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. படத்தின் கேஸட் ரிலீஸ் அன்று சில குறிப்பிட்ட செய்தித் தாள்களின் நிருபர்களுக்கு 'சிறப்பு கவனிப்பு' செய்தார்கள். அதாவது குட்டி பீரோவை 'பரிசாக' தந்து அனுப்பியிருக்கிறார்கள்.

சந்திரமுகியின் பாடல் காட்சிகள் பெங்களூர், மைசூர், இஸ்தான்புல்லில் எடுக்கப்பட்டுள்ளன. முத்துவில் வந்த தில்லானா தில்லானா பாட்டுப் புகழ் தருண்குமார், ராஜு சுந்தரம், பிருந்தா ஆகியோர் நடன அமைப்பைக் கவனித்திருக்கிறார்கள்.

சண்டைக் காட்சிகளை தளபதி திணேஷ் கவனித்துள்ளார். பல சண்டைக் காட்சிகளில் ரஜினி டூப் போடாமலேயே நடித்து அசத்தியிருக்கிறார். ரஜினிக்கு இணையாக வடிவேலுவின் கேரக்டர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையே கடும் போட்டிக்கிடையே சந்திரமுகி படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

வழக்கமாக கோலிவுட்டில் ஏதாவது ஒரு படம் பூஜை போடப்பட்டால் உடனே அதற்கான உரிமையை (படம் முடியுதோ, இல்லையோ!) வாங்கி விடுவது சன் டிவியின் வழக்கம். அதுபோலவே சந்திரமுகியையும் வாங்க அது முயற்சிகளைத் தொடங்கியது.

ஆனால், ரஜினிக்கு பிடிக்காதவர்கள் பட்டியலில் சமீபத்தில் திமுக சேர்ந்துவிட்டதால் சன் டிவிக்கு சந்திரமுகி கிடைக்கவில்லையாம். நல்ல விலை கொடுத்தே படத்தை வாங்கியிருக்கிறதாம் ஜெயா டிவி. இதனால் படத்துக்கு ஜெயா டிவியில் நல்ல பில்டப் கொடுக்குமாறும் "அம்மா" உத்தரவிட்டுள்ளாராம்.

சந்தரமுகியின் வினியோக உரிமையை வாங்க திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, ரகுபதி ஆகியோர் களம் இறங்கினராம். அதுவும் அவர்கள் கேட்டது சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களை.

ஆனால் இவர்களது நோக்கம் ரஜினிக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். ரூ. 3 கோடி வரை மட்டுமே பிசினஸ் ஆகும் ஏரியாவைப் பிடிக்க பொன்முடி ரூ. 5 கோடி வரை தரத் தயாராக இருந்தாராம்.

அதிகபட்ச பிசினஸே 3 கோடி என்றிருக்கும்போது எதற்காக 5 கோடி வரை பொன்முடி இறக்குகிறார் என்று ரஜினியை சிலர் உஷார்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடிக்கு தருவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரபு, ராம்குமாரிடம் சொல்லிவிட்டாராம் ரஜினி.

பி.வாசு மலையாளி என்பதாலோ என்னவோ சந்திரமுகியில் ஏகப்பட்ட மலையாளிகள் நடித்திருக்கிறார்கள். பிரேம் நசீர் முதல் நம்ம ஊர் கமல்ஹாசன் வரை பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பழம்பெரும் அழகி செம்மீன் ஷீலா இதில் பிரபுவின் அத்தையாக நடித்துள்ளார். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னொரு மலையாளி கே.ஆர்.விஜயா.

இந்தப் படம் ரிலீஸ் ஆன பின்னர் ரிசல்டை பார்த்துவிட்டு எடிட்டர் மோகனின் (ஜெயம் ரவியின் அப்பா) தயாரிப்பில் அவரது மகன் ராஜா இயக்கத்திலோ அல்லது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீசிலோ ஒரு படம் பண்ண இருக்கிறாராம் ரஜினி.
from
Thatstamil

:evil: :evil: இந்த அப்பு எப்ப படம் நடிக்கிறத விடப்போறார் தெரியலை.........


- hari - 04-10-2005

முட்டாள் தமிழர்களை பயன்படுத்தி பிழைப்பு நடத்துகின்றனர் வேற்று இனத்தவர்கள்!
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/rajinifans-450.jpg' border='0' alt='user posted image'>