![]() |
|
கிழக்கில் இராணுவம் தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிழக்கில் இராணுவம் தாக்குதல் (/showthread.php?tid=4887) |
கிழக்கில் இராணுவம் தாக்குதல் - Thusi - 03-05-2005 மட்டக்களப்பில் விடுதலைப்புலிப் போராளியொருவர் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இன்னொரு போராளி காயமடைந்துள்ளார். LTTE member killed in Batticaloa ambush [TamilNet, March 05, 2005 12:07 GMT] A member of the Liberation Tigers was killed in an ambush near Kirumichchai, 48 kilometres north of Batticaloa, Saturday morning around 10. "He was killed in an ambush by the Sri Lanka army (SLA) in an area that is under our control. It about three kilometres from the SLA's Cadjuwatte camp", said an LTTE official in Batticaloa. "A Sri Lanka army helmet was found at the scene of the ambush," he said. The ambush party escaped to the SLA camp in Mankerni, according to the LTTE official. Tamilnet. - hari - 03-05-2005 :evil: :evil: - eelapirean - 03-05-2005
- Niththila - 03-05-2005 :evil: :twisted: :evil: :twisted: :evil: - Mathan - 03-05-2005 ஆயுதக் கும்பலின் தாக்குதலுக்கு புலிப் போராளி ஒருவர் பலி! மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் கிரிமிச்;சையில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஆயுதக் குழுவின் துப்பாக்கிச்; சூட்டில் விடுதலைப் புலிகள் இயக்க போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு போராளி காயமடைந்துள்ளார். வாகரையிலிருந்து கிரிமிச்;சை நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது. இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவொன்று பதுங்கியிருந்து இந்த துப்பாக்கிச்; சூட்டை நடத்திவிட்டு தப்பிச்; சென்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய இந்த கும்பல்ää துப்பாக்கிச்; சூடு நடத்திய பின்பு களுவத்தை இராணுவ முகாமை நோக்கி தப்பி ஓடியுள்ளனர். உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளி ஜெயராஜா என விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. Puthinam - Mathan - 03-05-2005 மட்டக்களப்பில் மூன்று துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், இருவர் பலி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட 3 வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின்போது இருவர்கொல்லப்பட்டுள்ளார்கள்;மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் விடுதலைப் புலிப் போராளி என்றும் அடுத்தவர் கருணா அணியுடன் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் மூலம் அறியப்பெறுகிறோம். இன்று முற்பகல் வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டிற்குட்பட்ட கிரிமிச்சையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றிலேயே குறிப்பிட்ட விடுதலைப் புலிப் போராளி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மற்றுமொரு போராளி காயமடைந்துள்ளார் என்றும், இனந்தெரியாத நபர்கள் பதுங்கியிருந்து இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. வந்தாறுமுலை, களுவன்கேனி வீதியில் இன்று நன்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் வந்தாறுமுலையச் சேரந்த 32 வயதுடைய வேலுப்பிள்ளை புலேந்திரன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். அநாமோதய தொலைபேசி தகவலொன்றின் பேரில், குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, சடலத்தை தாம் கண்டெடுத்தாக இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஏறாவூர் பொலிசார் கூறுகின்றார்கள். இந் நபர் கருணா அணியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார் என்று தமது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகக் கூறும் பொலிசார், கொலையாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறுகின்றனர். மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் போலீசார் விசாரணை இன்று முற்பகல் மட்டக்களப்பு நகரில் இடம் பெற்ற 3 வது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரான 28 வயதுடைய கந்தையா கனேசலிங்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு நகருக்கு வந்து சைக்கிளில் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் வீதியோரம் பதுங்கியிருந்த நபரொருவர் இவரது தலையில் கைத்துப்பாக்கியினால் சுட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமது உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சமபவத்திற்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு என புளொட் அமைப்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறை பொறுப்பாளர் அன்புமாறன் இதனை நிராகரித்தார். அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்று வரும் இப்படியான சம்பவங்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று அவர் கூறினார். BBC Tamil News |