![]() |
|
சவூதி அரேபியாவில் ஓர் தமிழ் இலக்கிய விழா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: சவூதி அரேபியாவில் ஓர் தமிழ் இலக்கிய விழா (/showthread.php?tid=4886) |
சவூதி அரேபியாவில் ஓர் தமிழ் இலக்கிய விழா - hari - 03-05-2005 [size=16]"சவூதி அரேபியாவில் ஓர் தமிழ் இலக்கிய விழா" - நெல்லை சுதன் <img src='http://img185.exs.cx/img185/948/80ye.jpg' border='0' alt='user posted image'> கவிஞருக்குப் பாராட்டு விழா : சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியான அல்கோபார் நகரில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள் மற்றும் தமிழ்க் கவிஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்ப்புலமை மிக்கவரும், சக கவிஞருமான திரு. தொ. சூசை மிக்கேல் அவர்களுக்கு 24-01-2005 திங்கள் கிழமையன்று ஒரு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். <img src='http://img185.exs.cx/img185/8577/untitled17fg.jpg' border='0' alt='user posted image'> கடந்த 2004 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட "பட்டுமணல் மொட்டுக்கள்" என்ற கவிதைத் தொகுப்பிற்காகக் கவிஞரைப் பாராட்டும் வகையிலும், அத்தொகுப்பில் அடங்கிய கவிதைகளை ஆய்வு செய்கின்ற வகையிலும் இவ்விழா அமைந்திருந்தது. குறிப்பாக சவூதி அரேபியாவில் வெளிவந்த முதன்முதல் தமிழ்க் கவிதை நூல் என்ற பெருமையும் இந்நூலுக்கு உண்டு. அன்றைய தினம் கவிஞரின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, "வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்" என்னும் பாரதி பாடலைத் திரு. தொ. சூசைமிக்கேல் அவர்கள் பாட, விழா ஆரம்பமானது. திரு. மு. காளியப்பன் (நெல்லை சுதன்) வரவேற்புரையாற்ற, அதனைத் தொடர்ந்து விழாவிற்குத் தலைமை வகித்து, இலக்கிய ஆர்வலரும், சமுதாயச் சிந்தனையாளருமான திரு. இரா. வீரசேகரன் (மன்னை மாதேவன்) அவர்கள் தலைமை உரையாற்றினார். <img src='http://img79.exs.cx/img79/4446/untitled20ak.jpg' border='0' alt='user posted image'> அதன்பின் திரு. முகமது ஜாபர்ää திருமதி. ஜானகி கண்ணன், திரு. மை. மாத்யூ, திரு. அந்தோனி ஜார்ஜ், திருமதி. அல்லி ராஜன், திரு. மு. காளியப்பன் போன்ற இலக்கியச் சிந்தனையாளர்களும், கவிஞர்களும் பட்டுமணல் மொட்டுக்களின் ஆசிரியர் திரு. சூசைமிக்கேல் அவர்களைப் பாராட்டிப் பேசினர். அதனைத் தொடர்ந்து திரு. இரா. வீரசேகரன் அவர்கள் கவிதைத் தொகுப்பைப் பற்றிய மிகச் சிறந்த ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார். அதனையடுத்து, பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒலி பரப்பாகும் டி.ஆர்.டி வானலையில் ஒலிபரப்பப் பட்ட திரு. சூசை மிக்கேல் அவர்களின் "என்ன செய்யும்! என்ன செய்யும்!" என்ற கவிதையை ஈழத்தமிழர் திரு. உதயகுமார் அவர்கள் வாசிக்க, பாராட்டு நிகழ்ச்சி இனிது நிறைவு பெற்றது. <img src='http://img79.exs.cx/img79/3716/untitled39el.jpg' border='0' alt='user posted image'> கவியரங்கம் : இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிறப்புக் கவியரங்கம் ஒன்றும் நடைபெற்றது. இக்கவியரங்கிற்குää கவிஞர் சூசைமிக்கேல் அவர்கள் தலைமைக் கவிஞராகப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினார். கீழ்க்கண்ட கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்களின் சிறப்பான கவிதையை வழங்கியது ஓர் இனிய இலக்கிய விருந்தாகவே அமைந்தது. பங்குபெற்ற கவிஞர்கள்: தலைப்பு: திரு. இரா. வீரசேகரன் - விழியோரம் ஓர் நீதி திருமதி. ஜானகி கண்ணன் - பாரதியும் நானும் திரு. மாரியப்பன் - படிப்பினை திருமதி. வசந்தி உதயகுமார் - கண்ணீர் கடலானது திரு. மை. மாத்யூ - மழலைக் குரல் திரு. மரிய சூசை - தனிமை திரு. சசிகுமார் - தன்னையே விற்றவன் திருமதி. அல்லி ராஜன் - பன்னீர்த் துளிகள் திரு. மு. காளியப்பன் - கிழக்கு திசை கவியரங்க நிகழ்ச்சியின் நிறைவாக, தலைமைக் கவிஞர் திரு. சூசைமிக்கேல் அவர்கள் தனது "எழுத்தாளனே, எழுந்திடு!" என்ற கவிதையை வழங்கினார். கவியரங்கம் முடிவடைந்ததும், திருமதி. வசந்தி உதயகுமார் அவர்கள் நன்றி நவில, விழா இனிது நிறைவு பெற்றது. இவ் விழாவிற்கு முன்னதாக, டிசம்பர் 31, 2004 வெள்ளியன்று நள்ளிரவில், அல்கோபார் நகரின் அனைத்துத் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் ஓர் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. சுனாமியின் துயர்மண்டிய சூழ்நிலையில், அந்தப் புத்தாண்டு தினம் ஓர் அஞ்சலி தினமாகவே நினைவுகூரப் பட்டு, சர்வ மதப் பிரார்த்தனையுடன் உணர்வுகள் ஒருமுகப்படுத்தப் பட்டு, ஓர் அமைதியான ஆண்டுப் பயணம் தொடங்கப் பட்டது. நன்றி <img src='http://img240.exs.cx/img240/4811/untitled49bs.jpg' border='0' alt='user posted image'> - Mathuran - 03-06-2005 சவுதி அரேபியாவிலும் தமிழ் இலக்கிய விழா என கேட்கும் பொழுது எவ்வளவு இனிமையாக இருக்கின்றது. தேமதுர தமிழ் மொழி உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்னும் பாரதியின் கனவு. இதோ இங்கே யாழ் வடிவில். அங்கே சவுதியில் தமிழ் இலக்கிய விழா வடிவில். அவர்களை பாராட்டுவோம். - tamilini - 03-06-2005 தகவலுக்கு நன்றியண்ணா..ம் திறமை மிக்க ஒரு கவிஞரை பாராட்டியதில் சந்தோசம். அதுவும் சவுதியல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 03-06-2005 அக்கா என்ன கணனி பிழைத்து விட்டதோ இல்லை பிறந்தநாள் கொண்டாட்டமோ? ஆள காண கிடைக்கிதில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-06-2005 tamilini Wrote:தகவலுக்கு நன்றியண்ணா..ம் திறமை மிக்க ஒரு கவிஞரை பாராட்டியதில் சந்தோசம். அதுவும் சவுதியல.. <!--emo&ஓமோம் நமக்கும் சந்தோசம்..... ஆமா இப்பத்தான் வாறியளோ அக்கா......... - tamilini - 03-06-2005 ம் கொஞ்சம் பிசி.. அது தான் வரலை.. கணணியைப்பாத்தாலே வெறுப்பாய் இருக்கு.. எப்ப காலை வாருது என்று தெரியல.. :wink: - Mathuran - 03-06-2005 சீ சீ உங்கள் கணனிக்கு ஆயுள் காலம் கூட. அது நிண்டு பிடிக்கும். கன காலத்திற்கு நிண்டு பிடிக்கணும். - tamilini - 03-06-2005 பாவம் கணணி அதுக்கு நான் குடுக்கிற தொள்ளை தான் அதிகம். ஒன்டரை வயசு தான் ஆகுது.. பாவம். :wink: - Mathuran - 03-06-2005 ஐயயோ அதுக்குரியா சாப்பட்டை கொடுக்கிறீங்களா முதல்ல. சரியான சாப்படு இல்லாமத்தான் அது அடம்புடிக்குது. நீங்க வேற தொல்ல கொடுத்தா, அது பாவம். றொம்ப கஸ்ரமா இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 03-07-2005 தகவலுக்கு நன்றி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nilavan - 03-09-2005 தகவலுக்கு நன்றி மிகவும் மனமகிழ்வடைகின்றேன்.. நிலவன் - sinnappu - 03-11-2005 பிள்ளையள் உதுவளை நடத்த தலையை எடுக்கமாட்டாங்களே ???? இல்லை ஏனென்டால் எதுக்கெடுத்தாலும் தொப்பியை போட்டுக்கொண்டு கவுண்டு கிடப்பாங்கள் அது தான் கேட்டனான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|