| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 626 online users. » 0 Member(s) | 622 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,650
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| கருத்துக்களை நீக்குதல் |
|
Posted by: வலைஞன் - 05-13-2005, 02:53 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (11)
|
 |
Quote:இடை நிலை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும், தமது கருத்துக்களில் பிழை திருத்தம் செய்யவும் முடியும். மற்றும் இங்கு அங்கத்துவர்களாக இருப்பவர்களால் மட்டுமே கோப்புகளை (படங்கள்) தரவேற்றம் செய்ய முடியும்.
தேர்வு முறை:
ஆரம்பநிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் 50 கருத்துக்களைப் பதித்தபின் இடை நிலை அங்கத்துவத்துக்காக நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் உங்கள் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்படும்.
<b>நிபந்தனை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தாம் எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் மட்டுமே செய்ய முடியும். கருத்தின் பொருளில் எந்தவித மாற்றங்களோ, எழுதிய கருத்தை இல்லாமலாக்கி, வெறுமையாக்குவதையோ செய்யக்கூடாது. அப்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, இரண்டாம் தடவை, ஆரம்ப நிலை அங்கத்துவராகக் கீழிறக்கப்படுவீர்கள்.</b>
கள அன்பர்களுக்கு வணக்கம்
களத்தில் சிலகாலமாக தாம் எழுதிய கருத்துக்களை முற்றாக நீக்குகின்ற செயல் நிகழ்கிறது. இடைநிலை அங்கத்துவர்களுக்கு மட்டுமே தாம் எழுதிய கருத்துக்களை சீர்செய்ய/பிழை திருத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவது களநிபந்தனையை மீறும் செயல். நீங்கள் எழுதிய கருத்துக்கு ஒருவர் பதில் கருத்து எழுதியதன் பின் உங்கள் கருத்தின் பொருளை மாற்றுவதும், அல்லது அதை முற்றுமுழுதாக அழிப்பதுவும் வரவேற்கத்தக்கதல்ல. இது உங்களுக்கு பதில்கருத்து எழுதும் களஅங்கத்துவரையும் அவருடைய கருத்துக்களையும் அவமதிப்பதாக அமையும்.
நீங்கள் ஒரு கருத்தை எழுதும்போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து அந்தக் கருத்தைக் களத்தில் இடலாமா, அது மற்றவர் மனத்தைப் புண்படுத்துமா போன்ற விடயங்களை ஆராயுங்கள். அதன்பின் உள்ளீடு செய்யுங்கள். ஒரு தலைப்பின் கீழ் கருத்து எழுதும்போது அதற்குப் பொருத்தமாக உங்கள் கருத்தை எழுதுகிறீர்களா என்பதை முதலில் யோசியுங்கள். எழுதியதன் பின் அதுபற்றி சிந்திப்பதும், அதன்பின் எழுதிய கருத்தை அழிப்பதுவும் இனி களத்தில் நடைபெறாது என்று களநிர்வாகம் நம்புகிறது. அப்படி மறுபடியும் இதே செயல் நிகழ்கிற சந்தர்ப்பத்தில் மேல் குறிப்பிட்டதன் படி நிபந்தனை மீறலாகக் கருதி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்படி முற்றுமுழுதாக நீங்கள் கருத்தை நீக்க விரும்பின் களநிர்வாகத்திடம் அறியத் தாருங்கள். களநிர்வாகம் அதுபற்றி கவனத்தில் எடுத்து செயலாற்றும்.
நிபந்தனையை ஞர்பகப்படுத்துவதற்காகவே எழுதியுள்ளேன். எனவே, இதை கருத்திலெடுத்து உற்சாகமாகக் கருத்தாடுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
|
|
| கேன்ஸ் பட விழா |
|
Posted by: Mathan - 05-13-2005, 02:26 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
கேன்ஸ் விழா: தொடங்கி வைத்த ஐஸ்வர்யா
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/asih-450.jpg' border='0' alt='user posted image'>
கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழாவை பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி வைத்தார்.
பிரான்சிலுள்ள கேன்ஸ் நகரில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இவ்வருட திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதை பிரபல இந்தி நடிகையான ஐஸ்வர்யா ராய் மற்றும் அமெரிக்க டைரக்டர் அலெக்சாண்டர் பெய்ன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு விழாவின் இறுதி நாளில் விருதுகள் வழங்கப்படும்.
விருதுக்கான படங்களை தேர்வு செய்யும் ஜூரி குழுவில் அழகி படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை நந்திதா தாஸ், டோனி மாரிசன், மெக்சிகோ நடிகை சல்மா ஹெய்க், பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜான் வூ,
ஸ்பெயின் நடிகர் ஜேவியர் பார்டம், பிரான்ஸ் படத்தயாரிப்பாளர்கள் பெனாய்ட் ஜேக்கட், ஆக்னஸ் வர்டா, ஜெர்மன் இயக்குனர் பதி அகின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயும் ஜூரி குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன. முதன் முதலாக ஈராக் நாட்டை சேர்ந்த ஒரு படமும் இந்த விழாவில் பங்கு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.indiainfo.com/specials/c...shwarya-21.html
|
|
|
| பிபிசி வேலைநிறுத்தம் |
|
Posted by: Mathan - 05-13-2005, 05:02 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
பிபிசி ஊழியர்களின் தொழிற்சங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/03/20050323104504thompson203.jpg' border='0' alt='user posted image'>
<b>பிபிசி இயக்குனர் மார்க் தோம்சன்</b>
பிபிசி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் , பணியிழப்புக்கள் மற்றும் நிறுவனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான தகராறு ஒன்று தொடர்பாக, தொடர்ச்சியான பல வேலை நிறுத்தங்களை அறிவித்துள்ளன.
செய்தியாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் பிற ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட வாக்கெடுப்பில் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிபிசியின் தலைமை இயக்குனர் , மார்க் தோம்ஸன், சுமார் 600 மிலியன் டாலர்கள் பணத்தைச் சேமிக்கும் ஒரு முயற்சியில் சுமார் 15 சதவீதப் பணியாளர்களை வேலையிலிருந்து அகற்றுவது என்று திட்டமிட்டிருப்பதை அவர்கள் எதிர்க்கின்றனர்.
இந்த முடிவால் பிபிசி நிகழ்ச்சிகளின் தரம் பாதிக்கப்படாது என்று மார்க் தோம்ஸன் கூறுகிறார்.
ஆனால் , இந்த வெட்டுக்கள் , பிபிசி ஒலிபரப்புகளுக்கு சரி செய்யமுடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர்களின் தேசிய சங்கம் கூறுகிறது.
BBC Tamil
|
|
|
| டோன்ட் வொறி முஸ்தப்பா! |
|
Posted by: கறுணா - 05-11-2005, 10:27 PM - Forum: புலம்
- Replies (35)
|
 |
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
"முஸ்தப்பா! முஸ்தப்பா!
டோன்ட் வொறி முஸ்தப்பா!
நீ செய்யும் கூத்து என்னப்பா!
டே பை டே, டே பை டே
நீ செய்யும் உருட்டுப் பிரட்டுக்கள்!
என்னையே மலைக்க வைக்கிறது!"
ஐயோ! அய்யோ!! அய்யய்யோ!!!
முஸ்தப்பாப்பாஆஆஆஆஆஆஆ................
உனக்கு உயிருக்குப் பயமுறுத்தலாம்! என்ன கூத்து உது? அதுகும் விடுதலைப் புலிகளால் பயமுறுத்தலாம்? நல்ல கேம் போடுகிராய்! உதை லண்டன் பொலிசீல் வேறு முறையிட்டாயாம்? அவர்களும் இதை நம்புவார்கள் என்று நீயும் உன் கூட்டமும் நம்புகிறதாம்! ம்ம்ம்ம்..... உந்தக் கூத்தை உன்னுடன் சேர்ந்த எச்சிலிலைகளின் இணையங்களும், சிங்கள இனவாதப் பத்திரிகைகளும் "அய்யோ ஆத்தையிரோ" என நெஞ்சிலே அடித்து அடித்து ஒப்பாறி வைத்தழுகின்றனவாம்!!! நானும் உனக்கு கிட்டடியிலே இல்லை, ஒருக்கால் கட்டிப் பிடித்து அழுவதற்கு!!!
அது நிற்க! ஆரம்பத்தில் "புளொட்" அமைப்பில் மலையக உறுப்பினராகச் சேர்ந்து, இந்திய உளவுத்துறையானது "புளொட்டினுள்" ஊடுருவுவதற்கு முதலாவதாக களமமைத்துக் கொடுத்த பெருந்தகை அல்லவா நீங்கள்!! பின் புளொட்டில் செய்த மோசடிகள், கடத்தல்கள், கற்பளிப்புக்கள், உட் கொலைகள் எல்லாவற்றிலும் முன் நின்று உழைத்து புளொட் இயக்கத்தையே இந்திய உளவுத் துறையினரின் வேண்டுகோலுக்கமைய நாறடித்த பெருமைக்குரிய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தகர் அல்லவா நீங்கள்!!!!
பின் புளொட்டிலிருந்து நீர் சார்ந்த பரந்தன் ராசன் கும்பல் வெளியேற்றப்பட்டபின் வடபழனி, அண்ணாநகர், கொட்டிவாக்கம் பகுதிகளில் இருந்து கடத்தல்கள், கொள்ளைகளென உங்கள் அரசியல் பணி தொடர்ந்தது. தொடர்ந்து வந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் உங்களெல்லோருக்கும் மீண்டுமொருக்கால் தமிழீழத்திற்கு வர வழி சமைத்தது. முதலில் "திறீஸ்ரார்" எனும் பெயரில் உலாவந்த நீங்கள், பின் டக்லஸை அதிலிருந்து களற்றி விட்டு "ஈ.என்.டி.எல்.எப்" எனும் பெயரில் செய்துவிட்டவைகளை ஈழத்தமிழர்களின் சரித்திரம் மறக்காது. அதிலும் முஸ்தப்பா ஆகிய நீங்கள் திடீரென கிழக்கு மாகானத்தவராக அவதாரமெடுத்து "மண்டையன் குழு" எனும் பெயரில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நேற்றுக் கொள்ளப்பட்ட தம்பலகாமம் "வியஜன்" உட்பட்ட நரகாசுரர்களைக் கொண்ட கும்பலின் தலைவனாக செய்து விட்ட தமிழ் மனித வேட்டையை திருமலை மாவட்டம் வரலாற்றில் மறக்காது. விடுதலைப் புலிகளின் குடும்ப அக்கத்தவர்கள், ஆதரவாளர்கள் எத்தனை பேரை உனது கைகளினாலேயே கொண்றிருப்பாய்? அந்த இரத்தக் கறைகள் காய்ந்து விட்டனவா? இல்லை கழுவி விட்டாயா? எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரளித்தாய்?...
.... பின் இந்தியா தப்பியோடிய கும்பலின் முதல் ஆளாக, நாய்கள் பிடிப்பது மாதிரி பிடிக்கப்பட்ட உறுப்பினர்களையெல்லாம் விட்டுத் தப்பியோடினாய்! பின் கொட்டிவாக்கத்தில் காரியாலயம் எனும் பெயரில் ஒரு வீட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர் அங்கிருந்த பணத்தைச் சுத்திக் கொண்டு லண்டனின் வேறொரு அவதாரமெடுத்தீர்.
ஆரம்பத்தில் லண்டனிலுள்ள முன்னால் புளோட் அங்கத்தவர்களுடன் பிரட்சனை பண்ணி முறையாக சாப்பாடு வாங்கினீர். போதாததற்கு லண்டனிலுள்ள முன்னால் புளொட் அங்கத்தவர்களான சங்கர், ... போன்றோரால் உன் பல ஆயிரக்கணக்கான பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதாகவும் சொத்துக்கள் சேதமாக்கியும், திருடப்பட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் "லண்டனில் காலம் பூராக அகதிப் பணத்தில் இருந்த உமக்கு! எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது?" என நீதிபதியால் கேட்கப்பட்டு துண்டைக் காணேலை துணியைக் காணேலை என்று நீர் ஓடியதையும் லண்டன் பொலிசார் அறிவார்கள். உடனடியாக நீர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக "சன்றைஸ்" வானொலிகளில் வலம் வரத்தொடங்கினீர். பின் பலரின் பணங்களில் "ரிபிசி" தொடங்கி மிகப் பெரிய விடுதலைப் புலிகலின் ஊடகமெனும் முகமூடியணிந்து வலம் வந்ததையும், அதைச் சுத்தியதையும், பின் சுவிஸில் உமக்கு மணி கட்டத் தொடங்கியதையும், அதன் பின் உம் சாயம் வெளுக்கத் தொடங்கியதையும் யாவருமறிவர்.
இந்நிலையில் பெரு ஊடகவியலாளரான? உமக்கு பயமுறுத்தலாம்! உம்மைப் பற்றிய முழு சரித்திரமும் லண்டன் பொலீசுக்குத் தெரியாதென்று "பூனைப் பால் குடிக்கிறீராம்"? உமக்கு தற்போது எங்கிருந்து பண பட்டுவாடா நடக்கிறதுன்பது லண்டன் பொலீஸுக்குத் தெரியாதா? போதாக் குறைக்கு ஈழபதிஸ்வரரின் உண்டியலின் கடைக்கண் பார்வையும் கிடைத்துள்ளதாம்! ஆண்டவா! முஸ்தப்பாவைக் காப்பாற்று!! ஏன்ராப்பா! உந்த நாடகம்? நீர் என்னையே முந்தி விடுவீர் போலிருக்குது? யாராவது பொலிடோல் இருந்தால் தாங்கோ! ஒரே அடியாய் அடிச்சுடுவன்! இவன் பாவியின் கூத்து தாங்கேலாதாம்? என்னை இனி நிமிர விடமாட்டான் போலிருக்குது. ம்ம்ம்ம்ம்ம்ம்...
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
|
|
|
| களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு! |
|
Posted by: cannon - 05-11-2005, 09:04 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (104)
|
 |
வணக்கம்!
கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
* நாள் முழுக்க இருந்து தமிழ் எழுத்துக்களை தேடித் தட்டித் தட்டி அடித்து களத்தில் பிரசுரிக்கும் போது சில சமயம் சில வினாடிகளிலேயே மாயமாய் மறைந்து விடுகிறது!, இல்லையேல் கத்தி விழுகிறது! மிக விரக்தியாக இருக்கும் மீண்டும் எழுத மனம்வருமா?
* சர்ச்சைக்குரியவர்களின் சில பெயர்களைப் கருத்துக்களில் சேர்க்கும் போது கத்தி உடனேயே விழிகிறது! ஆனால் வேறு பல ஊடகங்களில் அதே சர்ச்சைக்குரியவர்களின் பெயர்கள் வந்த கட்டுரைகளை இதே களத்தில் வெட்டி ஒட்டுகிறார்கள். அது பிழை, இது சரியா?
* கருத்துக்களம் என்றால் பல சரியான, பிழையான கருத்துக்கள் வரத்தான் செய்யும். அவை பிழைகளாயின் சரியான கருத்துக்களை தெரிவிக்கலாம். மாறாக கருத்துக்களையே அகற்றுவதா?
* களத்தில் கருத்தெழுத முற்படும்போது பல தடவைகள் "நீங்கள் களத்தில் தடைசெய்யப் பட்டுள்ளதாக" செய்தி வருகிறது. ஏன்?
கருத்துக்களால் களத்தில் சூடான விவாதங்கள் நடைபெறும்போது கத்திகளுடன் கண்காணிப்பாளர்கள் உடனேயே வந்து விடுகிறார்கள். உண்மைதான் பண்பற்ற முறையில் எழுதிலால் அவற்றை அகற்றத்தான் வேண்டும். ஆனால் முழுக்கருத்துக்களையும் அகற்றி விடுகிறார்கள்.
ஆகவே மோகன் தயவுசெய்து இவற்றை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
|
|
|
| ஈழத்து அறிவுஜீவிகள், நவீன சடங்குகள் |
|
Posted by: Mathan - 05-11-2005, 02:50 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
ஈழத்து அறிவுஜீவிகள், நவீன சடங்குகள்.
கடந்த தடவை திருக்கோணமலை சென்றிருந்தபோது,
என்னுடைய நண்பர் ஒருவரை சந்தித்தேன்.
பேச்சுக்கிடையில், வ. ஐ. ச. ஜெயபாலன் இப்போது என்ன செய்கிறார் என்று கேட்டார்.
எழுத்தாளர்களுடன் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லையென்ற போதும், மேற்கண்ட எழுத்தாளரை நான் அண்மையிலேயே சந்தித்திருந்தபடியால் பதிலளிக்கக்கூடியதாக இருந்தது.
" எல்லா அறிவுஜீவிகளுக்கும், கடைசியில் என் ஜீ ஓ க்கள் தானே புகலிடம்" என்றார் அந்நண்பர்.
அவரும் தற்போது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுடதான் பணிபுரிந்துவருகிறார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் இங்கே என்ன செய்கின்றன, எப்படியெல்லாம் எம்மை கேவலப்படுத்துகின்றன என்பதை இந்த ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது.
சம்பவங்கள் எதையாவது சந்திக்க நேர்ந்தால் பகிர்ந்துகொள்கிறேன்.
ஆனால், அவர்களது பணம் எம்மவர்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை பார்த்தால் எரிச்சலாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
என் ஜீ ஓ க்களின் காசுக்காக எமது "அறிவுஜீவிகள்" நடத்தும் கருத்தரங்குகளும், புத்தகவெளியீடுகளும் மிகவும் அருவருப்பானவை.
சமாதானம் பற்றிய சிங்களப் பொதுப்பார்வையைக்காட்டிலும் அருவருப்பானவை.
திருக்கோணமலையில் நிகழும் இவ்வாறான ஒன்றுகூடல்களுக்கு நண்பர்களை சந்திக்கமட்டுமே போய்வருவதுண்டு. தற்போது அதுவுமில்லை.
அப்பா தான் இவ்வாறு தவறுதலாக கலந்துகொண்டு எரிச்சலடைந்துபோன நிகழ்ச்சிகள் பற்றி தொலைபேசியில் தனது அருவருப்பை கொட்டிக்கொள்கிறார்.
எல்லா ஒன்றுகூடல்களுக்கும் கருத்தரங்குகள்க்கும் பெயர் வைக்கும்போது, தலைப்பிடும்போது அதில் கட்டாயமாக "சமாதானம்" என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்பது தற்போது வடக்குக்கிழக்கில் எழுதப்படாத விதி.
பணமீட்டும் சூத்திரம்.
கூடவே விடுதலைப்புலிப் பிரமுகர் ஒருவரை அழைப்பது.
வசதிப்பட்டால் யாராவது ஒரு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரை அழைப்பது.
மேற்படியான"அழைப்புக்கள்", அழைக்கப்படுபவர்களை கௌரவப்படுத்துவதற்காக அல்ல,
முன்பெல்லாம் (இப்போதும்தான் ) முதற்பிரதி வாங்க காளிகோவில் ஐயர் (சிறீ பத்ர காளியம்மன் தேவஸ்தான ஆதீன கர்த்தா) அழைக்கப்படுவதைப்போன்ற அருவருப்பின் நீட்சிதான் இதுவும்.
முன்பெல்லாம் மார்க்சீயத்தின் பழமைவாதம்பற்றியும், பின்னவீனத்துவத்தின் போதாமைகள் பற்றியும், புலிகளின் பாசிசம் பற்றியும் தீவிரமாக பேசித்திரிந்த இன்றைய என் ஜீ ஓ புத்திஜீவிகள் , சமாதானப்பாடல்கள் ஒலிக்க, மும்மத குருமார்கள் (நாலுமதம்?) ஆசிவழங்க புலிப்பிரமுகர்களுக்கும் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, கருத்தரங்கு திருவிழா நடத்துகிறார்கள்.
டொமினிக்கின் இசைக்கச்சேரியிலிருந்து திருமறைக்கலாமன்ற நிகழ்வுகள் வரை எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல.
மக்களுக்கு உண்மையான சமாதானம் எதுவென போதிக்கிறோம் என்பதும், மக்களை அரசியல்மயப்படுத்துகிறோம் என்பதும், சிந்திக்கத்தெரிந்தவர்களுக்கென அவர்கள் வைத்திருக்கும் விளக்கம்.
புலிப்பிரமுகர், மக்களை கூட்டவும், புலிக்கு வால் பிடிக்கவுமான ஆயுதம்.
பாராளுமன்ற உறுப்பினர், செல்வாக்கை பெற்றுக்கொள்ளவும், பத்திரிகைகளில் இடம்பிடிக்கவும், காசுக்குமான வழி.
அடிப்படையில் கருத்தரங்குகளே,
தமது எஜமானர்களாக இருக்கும், வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தாம் எதோ செய்து கொண்டிருக்கிறோம் என நிகழ்ச்சி நிரல்க்காட்டுவதற்காகத்தான்.
புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்களாக இருக்கவேண்டும் என அடிக்கடி கூறிக்கொள்ளும் பலர் தமது "செயற்பாடுகளாக" இவற்றை சொல்லிக்கொள்ளக்கூடியதாக இருப்பது மேலதிக வசதி.
சுனாமி நேரத்தில் இன்னுமொரு நண்பரோடு சுவாரசியமான உரையாடல் நடந்தது.
(ஆ..! மறந்துபோய்விட்டேன் பணமீட்டித்தரும் மற்றொரு சொல்- சுனாமி)
அவர் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் கிணறுகளை துப்புரவாக்கப்போவதாக சொன்னார்.
அட நல்ல பணியாயிற்றெ என்று, நான் சில ஊடகங்களின் கண்களுக்குப்படாத கிராமங்களின் பெயர்களை சொன்னேன்.
முடிந்தால் நல்ல மலசல கூடங்களை கட்டிக்கொடுக்கும் படியும் ஆலோசனை சொன்னேன்.
உடனே அவர், இல்லை இல்லை மட்டிக்கழிப்பகுதியில் தான் அதை செய்யவேண்டும் என்றார்.
அந்தப்பகுதிக்கு பெரிதாக தேவையில்லை.
எல்லோரும்தானே அங்கே செயற்திட்டங்களை செய்கிறார்கள், நீங்கள் பிரயோசனமாக ஏதாவது செய்யலாமே என்று சொன்னபோது,
அப்படியல்ல, கிணறு சுத்திகரிப்பதைத்தான் செய்யவேண்டும்.
ஏனெனில், அதுதான் சுனாமி பதிப்பிலிருந்து மீட்சியளிப்பதாய் இருக்கும்.
அதற்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட இடம் வேண்டும்/. தூர இடங்கள் என்றால் போய் வர கஷ்டம்.
சுனாமி ரிலீஃப் என்றால் தானே நிறைய காசு தருவார்கள் என்றார் சர்வசாதாரணமாக.
இதனால் வடக்குக்கிழக்கு வாழ் மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது யாதெனில்,
மேற்கண்ட நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்புவந்தால் வாய்விட்டு சிரித்து, மறுத்துவிடுங்கள்.
அவற்றால் உங்கள் நேரம் வீண்.
வீட்டில் கம்பிவழி தொலைக்காட்சியில் குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு, Nat Geo அல்லது டிஸ்கவரி சனல் பாருங்கள். ( குடும்பத்தாருக்கு தேனீர் போட்டுக்கொடுக்க மறக்கவேண்டாம்|).
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை சொல்லி சில கிலோபைட்டுக்களை வீணாக்க விருப்பமில்லை. ( (நடுக்கடலுக்குப்போன நாய்கள் தானே)
விடுதலைப்புலிபிரமுகர்களுக்கு,
உங்கள் இயக்கம் ( எனும்போதே "எங்கள் இயக்கம் எனும் மனத்து ஓசை ஒலித்து ஓய்கிறது) தற்போது மிக அவசியமான பாத்திரத்தை எமது விடுதலைப்போராட்டத்தில் ஆற்றிவருகிறது.
இவ்வாறு இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பணம் பெருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, இயக்கத்தின் மதிப்பைத்தான் குறைக்கும்.
சந்தோஷமாய் திருக்கோணமலைக்குப்போய் கலந்துகொள்வதற்கு உருப்படியாக ஏதேனும் நிகழ்ச்சிகள் நடக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.
இத்தகைய நவீன சடங்குகள் எதுவுமே அற்றதாய்.
நன்றி - மயூரன்
|
|
|
|