05-13-2005, 02:53 PM
Quote:இடை நிலை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும், தமது கருத்துக்களில் பிழை திருத்தம் செய்யவும் முடியும். மற்றும் இங்கு அங்கத்துவர்களாக இருப்பவர்களால் மட்டுமே கோப்புகளை (படங்கள்) தரவேற்றம் செய்ய முடியும்.
தேர்வு முறை:
ஆரம்பநிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் 50 கருத்துக்களைப் பதித்தபின் இடை நிலை அங்கத்துவத்துக்காக நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் உங்கள் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்படும்.
<b>நிபந்தனை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தாம் எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் மட்டுமே செய்ய முடியும். கருத்தின் பொருளில் எந்தவித மாற்றங்களோ, எழுதிய கருத்தை இல்லாமலாக்கி, வெறுமையாக்குவதையோ செய்யக்கூடாது. அப்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, இரண்டாம் தடவை, ஆரம்ப நிலை அங்கத்துவராகக் கீழிறக்கப்படுவீர்கள்.</b>
கள அன்பர்களுக்கு வணக்கம்
களத்தில் சிலகாலமாக தாம் எழுதிய கருத்துக்களை முற்றாக நீக்குகின்ற செயல் நிகழ்கிறது. இடைநிலை அங்கத்துவர்களுக்கு மட்டுமே தாம் எழுதிய கருத்துக்களை சீர்செய்ய/பிழை திருத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவது களநிபந்தனையை மீறும் செயல். நீங்கள் எழுதிய கருத்துக்கு ஒருவர் பதில் கருத்து எழுதியதன் பின் உங்கள் கருத்தின் பொருளை மாற்றுவதும், அல்லது அதை முற்றுமுழுதாக அழிப்பதுவும் வரவேற்கத்தக்கதல்ல. இது உங்களுக்கு பதில்கருத்து எழுதும் களஅங்கத்துவரையும் அவருடைய கருத்துக்களையும் அவமதிப்பதாக அமையும்.
நீங்கள் ஒரு கருத்தை எழுதும்போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து அந்தக் கருத்தைக் களத்தில் இடலாமா, அது மற்றவர் மனத்தைப் புண்படுத்துமா போன்ற விடயங்களை ஆராயுங்கள். அதன்பின் உள்ளீடு செய்யுங்கள். ஒரு தலைப்பின் கீழ் கருத்து எழுதும்போது அதற்குப் பொருத்தமாக உங்கள் கருத்தை எழுதுகிறீர்களா என்பதை முதலில் யோசியுங்கள். எழுதியதன் பின் அதுபற்றி சிந்திப்பதும், அதன்பின் எழுதிய கருத்தை அழிப்பதுவும் இனி களத்தில் நடைபெறாது என்று களநிர்வாகம் நம்புகிறது. அப்படி மறுபடியும் இதே செயல் நிகழ்கிற சந்தர்ப்பத்தில் மேல் குறிப்பிட்டதன் படி நிபந்தனை மீறலாகக் கருதி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்படி முற்றுமுழுதாக நீங்கள் கருத்தை நீக்க விரும்பின் களநிர்வாகத்திடம் அறியத் தாருங்கள். களநிர்வாகம் அதுபற்றி கவனத்தில் எடுத்து செயலாற்றும்.
நிபந்தனையை ஞர்பகப்படுத்துவதற்காகவே எழுதியுள்ளேன். எனவே, இதை கருத்திலெடுத்து உற்சாகமாகக் கருத்தாடுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->