![]() |
|
பிபிசி வேலைநிறுத்தம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பிபிசி வேலைநிறுத்தம் (/showthread.php?tid=4289) |
பிபிசி வேலைநிறுத்தம் - Mathan - 05-13-2005 பிபிசி ஊழியர்களின் தொழிற்சங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/03/20050323104504thompson203.jpg' border='0' alt='user posted image'> <b>பிபிசி இயக்குனர் மார்க் தோம்சன்</b> பிபிசி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் , பணியிழப்புக்கள் மற்றும் நிறுவனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான தகராறு ஒன்று தொடர்பாக, தொடர்ச்சியான பல வேலை நிறுத்தங்களை அறிவித்துள்ளன. செய்தியாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் பிற ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட வாக்கெடுப்பில் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிபிசியின் தலைமை இயக்குனர் , மார்க் தோம்ஸன், சுமார் 600 மிலியன் டாலர்கள் பணத்தைச் சேமிக்கும் ஒரு முயற்சியில் சுமார் 15 சதவீதப் பணியாளர்களை வேலையிலிருந்து அகற்றுவது என்று திட்டமிட்டிருப்பதை அவர்கள் எதிர்க்கின்றனர். இந்த முடிவால் பிபிசி நிகழ்ச்சிகளின் தரம் பாதிக்கப்படாது என்று மார்க் தோம்ஸன் கூறுகிறார். ஆனால் , இந்த வெட்டுக்கள் , பிபிசி ஒலிபரப்புகளுக்கு சரி செய்யமுடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர்களின் தேசிய சங்கம் கூறுகிறது. BBC Tamil - Nitharsan - 05-13-2005 மேற்படி வேலை நிறுத்தம் காரணமாக எதிர்வரும் மே மாதம் 23 ம் திகதி மற்றும் மே மாதம் 31 ம் திகதி மற்றும் ஜீன் மாதம் 1 ம் ஆகிய தினங்களில் பி.பி.சியின் தமிழ் சிங்கள சேவைகள் இடம் பெறமாட்டாது news from Tamilnet.com - Mathan - 05-23-2005 <img src='http://news.bbc.co.uk/media/images/41175000/jpg/_41175045_tvc1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://news.bbc.co.uk/media/images/41175000/jpg/_41175039_nuj.jpg' border='0' alt='user posted image'> இன்றைய வேலை நிறுத்தத்தை தொடந்து பிபிசி தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழமையாக நிகழ்ச்சிகள் பல நடைபெறவில்லை - Eswar - 05-23-2005 மதனுக்கு இன்னும் BBC யில பற்று இருக்கு. hock: hock: hock:
- Mathan - 05-24-2005 நிச்சயமாக இருக்கு, - Mathan - 05-24-2005 பிபிசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41176000/jpg/_41176583_picketnewget_203.jpg' border='0' alt='user posted image'> [img]பிபிசி ஊழியர்கள் வேலைநிறுத்தம்[/img] பிபிசி நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று 24 மணிநேரம் வேலை நிறுத்தம் ஒன்றினை நடத்துவதால் , பிபிசி தொலைக்காட்சி , பிபிசி வானொலி, பிபிசி இணையதள ஒலிபரப்பு ஆகியவற்றில் செய்திகள், நடப்பு செய்திகள் ஆகியன உட்பட நேரடி ஒலி, ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் பல பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனின் பல பாகங்களிலும் பரந்திருக்கும் பிபிசி கட்டிடங்களுக்கு வெளியே வேலை நிறுத்தம் செய்யும் பிபிசி ஊழியர்கள் மறியல் நடத்தி வருகிறார்கள். 4,000 வேலையிடங்களைத் துண்டிக்கும் திட்டம் சம்பந்தமாக இந்த தகராறு எழுந்திருக்கிறது. பிபிசியில் இப்போது 27,000க்கும் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள். இவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் இன்று வழக்கம்போல் பணியாற்றுவதாக தமது மதிப்பீட்டின்படி தெரிகிறது என்று பிபிசி அறிவித்திருக்கின்றது. பிபிசி தமிழ் - Mathan - 05-25-2005 பி பி சி மேலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை இங்கே பிரிட்டனில் பிபிசி நிறுவன மேலாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இருதரப்பும், நேற்றைய வேலைநிறுத்தத்தை அடுத்து, தொழிற் தகராறுகளைத் தீர்க்க உதவும் பக்கச்சார்பற்ற அமைப்புக்கு முன்பு எதிர்வரும் வியாழக்கிழமை செல்ல இருக்கிறார்கள். அடுத்த வாரம் 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் முயற்சியில் இருதரப்பும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பிபிசியில் அடுத்த மூன்று ஆண்டுகளில் நான்காயிரம் பணியிடங்களைக் குறைக்கும் நிறுவன மேலாளர்களின் திட்டத்தை எதிர்த்தே நேற்றைய வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. BBC News |