| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 458 online users. » 0 Member(s) | 455 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,650
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| உன் கண்கள் சொல்வதே!! |
|
Posted by: sWEEtmICHe - 05-10-2005, 03:39 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<img src='http://img75.echo.cx/img75/8179/sweetmiche662xq.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>உன் கண்கள் சொல்வதே!!
அன்பே உன் முகம் நான் காணும் கனவே அல்லவா...
நான் மட்டுமே உந்தன் வாழ்வில்...
தினம் தேன் தந்திடும்.. ஒற்றைப் பூவாய் மலர்கிறேன்...
உன் கண்கள் சொல்வதே...
நான் எழுதிய கவிதை அல்லவா...
உன் கவிதை அல்லவா... :roll: :roll:
இது MCgal(சுவிற்மிச்சி) எழுதிய கவிதை <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_30.gif' border='0' alt='user posted image'></span>
|
|
|
| நினைவலைகள் |
|
Posted by: Malalai - 05-10-2005, 01:11 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (46)
|
 |
<img src='http://img165.echo.cx/img165/1830/wave23ox.jpg' border='0' alt='user posted image'>
நெஞ்சினில் நெருக்கமாக
நெருங்கி உறவாடிடும்
நினைவலைகள்
மிஞ்சி வழிகிறதே
அணைகள் ஏதுமின்றி...!
நினைவலைகள் மோதிடவே
பொங்கிடும் ஞாபகக்கடல்...!
அடங்கிடாத மனமதுவும்
ஆசையுடன் ஆர்ப்பரிக்கும்...!
ஆதங்கமாய் ஞாபகங்கள்
அடியதனை விடைகேட்கும்
அடியிலருந்து விடைபெற்று
மேல் நோக்கி நீந்திடவே...!
நீந்திய ஞாபகத் துளிகள்
கண்களைப் பனிக்க வைக்கும்...!
கண் நீர்த்துளிகள்
ஆறாக அணி சேர்ந்து
நதியாகி தரையை முட்டும்...!
எட்டிய ஞாபகங்கள்
தட்டியே எழுப்பிடுமே
பொக்கிஷமாய்
பூட்டி வைத்த
பொன்னான நாட்களையே....!
செயற்கையான மின்னொளியை
விஞ்சிய
இயற்கையான நிலவொளியில்
அம்மாவுடன் கொஞ்சி
கும்மாளமடித்த
குழந்தைப் பருவம்
பசுமரத்தாணியாய்
நெஞ்சில் பதிந்திருக்கிறதே...!
பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!
மனமதனை மகிழ வைக்கும்
மழைக்காலம்
பாடப்புத்தகங்களுக்கு
வேட்டு வைக்கும் காலமது...!
படித்த பாடங்கள் கப்பலாக
மழை நீரில் தத்தளித்து
கரை சேர்ந்திட துடிதுடிக்கும்...!
கப்பல் செய்த களிப்பு
இறுதியாண்டு பரீட்சையினை
மறக்கடிக்க செய்துவிடும்...!
ஆண்டு இறுதியில் தான்
செய்து விட்ட கப்பல்கள்
கொண்டு சென்ற பாடங்கள்
நினைவுக்கு வரும்...!
ஒன்றில்லை இரண்டில்லை
ஒராயிரம் ஞாபகங்கள்...!
இதயத்தின் ஓரத்தில்
அடக்கமாய் அடங்கியிருந்தாலும்
அவ்வப்போது அடங்காது
கடலாக ஆர்ப்பரிக்கும்
கடந்த கால
பசுமையான
நினைவலைகள்...!
|
|
|
| இது சாத்தியமா?? |
|
Posted by: selvanNL - 05-10-2005, 12:55 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
நண்பர்களே உங்களிடம் ஒரு கேள்வி!!!!!!!
அதவது கடந்த சனிக்கிழமை 07.05.2005ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி நெதர்லாந்துக்கு விஜயம் செய்திருந்தார். 2ம் உலகபோரிலே கிட்லருக்கு படைக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த அமெரிக்க படைகளின் சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செய்துவிட்டு உடனடியாகவே பறந்துவிட்டார்,
இப்போது விடயத்துக்கு வருகிறேன். அவர் வருவதற்க்கு முதலே நெதர்லாந்தில் உள்ள ரேடியோக்கள் ஜோர்ஜ் புஸ்ஸை இங்கு வைத்து கைது செய்யலாம் என்று கூறினார்கள் ( நெதர்லாந்த் வானொலிகளில்). காரணம் ஈராக் போர்.,, :!:
இதைமாதிரியே ஒரு முறை சந்திரிக்கா நெதர்லாந்து வந்தபொழுதும் தமிழ் ரேடியோக்கள் முழங்கின.. :!:
இப்ப கேள்வி என்னெவெனில் ஒரு ஜனாதிபதியை அவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்யும்பொழுது அந்த நாட்டு அரசாங்கத்தால் கைது செய்து உலக நீதிமன்றத்தில் நிறுத்த முடியுமா?? :?:
|
|
|
| DVD-R ISO |
|
Posted by: விது - 05-09-2005, 05:17 PM - Forum: கணினி
- Replies (5)
|
 |
Dvd-r isoஎன்னும் formatல் படம் தரவிறக்கம் செய்துள்ளேன் ஆனால் எந்த player ம் திறக்க முடியாமல் உள்ளது இதற்கு மருந்தென்ன தெரிந்தவர்கள் சொல்லவும் நன்றி. :roll:
|
|
|
| வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள் |
|
Posted by: Malalai - 05-09-2005, 04:53 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (15)
|
 |
[b][size=18]வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள்
சக்ஸஸ் ஸ்டோரியில் இந்த வாரம் கண்ணதாசன் பதிப்பக நிறுவனர் காந்தி கண்ணதாசன் இடம் பெறுகின்றார். அவர் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகளை விளக்குகின்றார்.
எண்ணங்கள்தான் ஒரு மனிதனின் வெற்றி தோல்விகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன. அதனால்தான் "உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல்" என்ர்கள். வட்டத்துக்குள் சிந்திப்பதென்பது வழக்கமாக நாம் வளர்க்கப்பட்ட சுழலுக்கேற்பவே அமையும். நானும் விக்ரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள், போன்றவற்றை சின்னச்சின்ன புத்தகங்களாக தயார் செய்து விற்பனை செய்து வந்தேன். ஆனால் எந்த வித வளர்ச்சியும் இல்லை. மாற்றமும் இல்லை. பதிப்பகத்துறையில் எவரும் செய்யாத முயற்சியை நாம் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதாவது மேல்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி பாராட்டப் பட்ட படைப்புகளை தமிழில் கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது.
தன்னம்பிக்கை, மற்றும் வாழ்வியல் சிந்தனைகளுடன் எழுதப்பட்ட நூலை மொழியாக்கம் செய்து வெளியிட்டேன். நல்ல வரவேற்பு. அதைத் தொடர்ந்து எம்.எப்.ஹhப் மேயரின் நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பெரிய அளவில் விற்பனையாகின.
எனக்குள் ஏற்பட்ட இந்த சிந்தனை மாற்றத்துக்கு எனது தந்தையார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்தான் நல்ல ரோல் மாடலாக இருந்தவர். அவரிடம் இருந்து நான் மூன்று விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
1. எழுதக்கூடிய படைப்பு எதுவாக இருந்தாலும் அது பாமரனையும் சென்றடையவேண்டும்.
2. மாற்றங்களை கால ஓட்டத்திற் கேற்ப ஏற்றுக் கொள்ளவேண்டும்.
3. தான் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலும் தவக இருந்தாலும் அதனை உறுதியோடு எடுக்க வேண்டும். இந்த மூன்று குணாம்சங்களும் வெற்றி பெற்ற எவருக்கும் அடிப்படையானவை ஆகும்.
மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவன் என்பதால் எனக்கு பிற மொழி இலக்கியங்களின் பொக்கிஷமான கருத்துக்களை தமிழ்மொழிக்கு கொண்டு வந்து சேர்க்கவேண்டும் என்று எண்ணினேன். இத்தகைய ஆங்கில இலக்கியங்களை பெருநகரங்களான டெல்லி, மும்பை, சென்னையில் உள்ளவர்கள் மட்டுமே வாங்கி வாசித்து வந்தனர்.
தமிழகத்தின் கடை கோடியில் ஒரு குக் கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளைஞன் படித்த இளைஞன், எதிர்காலம் எப்படி என்று எங்கும் இளைஞனின் கைகளில் இந்த வாழ்க்கை வழிகாட்டி நூல்களை கொண்டு சேர்ப்போம் என்று அல்லும் பகலும் பாடுபட்டேன். பலன் கிடைத்தது.
வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணுகிற இளைஞர்கள், தன்னம்பிக்கை கட்டுரை நூல்களை வாசிக்கவேண்டும். அப்போது அவர்களுக்கு மன ரீதியாக அநேக மாற்றங்கள் ஏற்படும். இந்த உலகிலேயே ஒரு மனிதன் அதிகம் சந்தோஷப்படுவது தன்னுடைய பெயர் உச்சரிக்கப்படும் போதுதான் என்று சொல்வார்கள். அப்படி உங்கள் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட வேண்டும் என்றால் நீங்கள்தான் "நம்பர் ஒன்" என்ற எண்ணம் முதலில் உங்களுக்கு வரவேண்டும்.
நீங்களே உங்களை நம்பர் ஒன் என்று நினைக்காத பட்சத்தில் மற்றவர்கள் எப்படி உங்களை நம்பர் ஒன்னாக நினைப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். ஆனால் இந்த எண்ணம் உங்கள் மனதளவில் தான் இருக்கவேண்டும். இதை வெளியில் காண்பிக்கக் கூடாது.
நீங்களும் ஒரு சக ஊழியரைப் போல்தான் பணியாற்றவேண்டும். அப்படி பணியாற்றினால் தான் உங்களுடன் பணிபுரிபவர்கள் உற்சாகத்துடன் இரண்டு மடங்கு உழைப்பை உங்களுக்கு தருவார்கள். இனி வரும் காலங்களில், உருட்டல் மிரட்டல்களினால் எவரையும் வேலை வாங்கிட முடியாது. அதனால், உங்கள் ஊழியர்களை சுதந்திரமாகப் பணியாற்ற விடுங்கள்.
உங்கள் படைப்பின் உன்னதமான, வெற்றிக்கு காரணமான அநேக அம்சங்களை நீங்கள் ஒருவரே உருவாக்கி விட முடியும் என்று எண்ணாதீர்கள். ……டுநயஎந வை வடி வாந நுஒpநசவள* என்று ஹhப் மேயர் சொல்வார். திறமைசாலிகளிடம் அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதமான பொறுப்புகளை ஒப்படையுங்கள். அவர்கள் அதை சிற்பம் போல் செதுக்கித் தருவார்கள்.
ஒரு கேள்விக்கு ஒருவிடைதான் இருக்கும் என்ற கிணற்றுத் தவளை மனோபாவத்துடன் இருக்காதீர்கள். விடைகளைத் தேடிச் செல்லும் போதுதான் புதிய புதிய வழிகளை உங்களால் காண முடியும்.
அதேப் போல் உங்களுக்கு எங்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த இடங்களில் அதிகமாக பணியாற்றி நற்பெயர் எடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய பலனைத் தந்திடும்.
ஓஷேhவின் நூல்களை தொடக்கத்தில் விற்பனை செய்தபோது, செக்ஸ் புத்தகம் விற்கிறார்கள் என்று நடைபாதை வியாபாரிகளை கைது செய்து விடுவார்கள். அந்த காவல்துறை அதிகாரியிடம் ஓஷேhவின் புத்தகத் தையே கொடுத்து வாசிக்கச் சொல்லி விட்டு வந்தேன். அவரே ஓஷேhவின் எழுத்துக்களை தீவிரமாய் வாசிக்கும் வாசகரானார்.
இந்த மனநிலையில் தான் தமிழகத்தின் ஆன்மீகவாதிகள் கூட பலர் இருந்தனர். இப்போது அவர்களே ஓஷேhவை ஏற்றுக் கொள்கின்றனர்.
எங்கு உங்களுக்கு தடைகள் இருக்கிறதோ அந்த தடையை உடைத்து முன்னேறினால், உங்களுக்கு கிடைக்கும் பலன் பெரிதாக இருக்கும். இறுதியாக கூடி நெ pசநளநவே in வாந Pசநளநவே* என்ற ஜென் தத்துவ வரிகளை நினைவில் கொள்ளுங்கள். நிகழ் காலத்தில் இருங்கள், நடந்து முடிந்ததையே எண்ணி வருந்திக் கொண்டிருக்காதீர்கள். நடக்கப் போவதை எண்ணி பயந்து கொண்டிருக்காதீர்கள். இந்த நாளில், இந்த மணியில் இந்த நிமிடத்தில் இந்த வினாடியில் எதைச் செய்கிறீர்களோ அதை சரியாகச் செய்யுங்கள்.
- எஸ்.கதிரேசன்
* -அவர்கள் அச்சிலேயே சிறு தவறுகள்.
நன்றி: தினகரன்
|
|
|
| வார்த்தைச் சித்தனே! |
|
Posted by: hari - 05-09-2005, 04:21 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<b>வார்த்தைச் சித்தனே!</b>
<img src='http://www.dinakaran.com/health/vip/2002/jan/valampuri.jpg' border='0' alt='user posted image'>
வார்த்தைச் சித்தனே!
வளம் புரிந்த ஞானமுடன்
வலம்புரிந்த வலம்புரியே!
உவரிப் பெருந்துறை கண்டெடுத்த
ஒப்பற்ற தமிழ்த் தோணியே!
நெய்தல் நிலம் பெற்றெடுத்த
நிமிர்ந்த தமிழ் நன்னடைத் திமிங்கலமே!
உலகெங்கும் தமிழ்விருந்து தந்தவண்ணம்
உலாவந்த பலாச் சுளையே!
"கற்றனைத்(து) ஊறும் அறிவு" எனும் குறளுக்குக்
கட்டியம் கட்டிய "பட்டங் கட்டி"யே!
உன்னை இழந்துவிட்டோம் எனும் செய்தி,
ஈட்டியைக் காட்டிலும் குரூரமானது என்பது
இப்போதுதான் தெரிகிறது..
நீ இறப்பெய்தி விட்டாய் என்ற துயரத்தில்
யாம் சிந்தும் கண்ணீர்த் துளிகளை விட,
தமிழன்னை வடிக்கும் கண்ணீர்த் துளிகளே
எண்ணிக்கையில் அதிகம் என்பதும்
இப்போதுதான் தெரிகிறது..
இறப்பெய்தியது நீமட்டும்தான்: ஆனால்
இழப்பெய்தி நிற்பது தமிழ்கூறு நல்லுலகன்றோ?..
எப்படியப்பா உன் இழப்பை யாம் தாங்குவது?
எவரையப்பா இனி உனக்கிணையாய்க் காண்குவது?
உன் அருந்தமிழ் நறுந்தேனை
அருகிருந்தே அருந்திய அருந்தருணங்கள் எல்லாம்
அத்தனை எளிதில் மறந்துவிடுமா, என்ன?
ஒவ்வோர் அதிகாலைப் போழ்திலும் - எம்மை
உறக்கம் கலைத்து உட்கார வைத்து,
"இந்தநாள் இனியநாள்!" என்று
வேத மந்திரம் ஓதிய வித்தகனல்லவா நீ?
பொதிகைமலைத் தென்றலின் எதுகையையும் மோனையையும்
பொதிந்து பொதிந்து வழங்கிவந்த புத்தகமல்லவா நீ?
எத்துறையைச் சார்ந்தவனும் உன்னை
ஏறெடுத்துப் பார்க்கும் வண்ணம்
ஏடெடுத்துப் பார்த்தவனல்லவா நீ?
"எழுத்தச்சன்" ஏந்திய எழுத்தாணியை ஏந்தி
மலையாள மண்ணில் மரியாதையோடு பவனிவந்த
மறத்தமிழ் வேழமல்லவா நீ?
"என்னுடைய கவிதைகள் சொல்ல இயலாததை
வலம்புரியின் உரைநடை சொல்லிவிடுகிறது.." என்று
கவிவேந்தன் கண்ணதாசனே சொக்கிப் பேசும் அளவுக்குச்
சுண்டியிழுத்துக் கொண்ட தமிழ்த் தூண்டிலல்லவா நீ?
ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களின் ஈடேற்றத்திற்காய்
இடையறாது முழங்கிய இந்திய முரசல்லவா நீ?
உனது உவமான உவமேய ஊற்றுக்களில்
அமிழ்தம் பொங்கிய நாட்கள் உண்டு:
அமிலம் பொங்கிய நாட்களும் உண்டு.
எனினும் தமிழ்நலம் வாய்ந்தபடி அல்லவா அவை பாய்ந்தன?..
எப்படியப்பா உன்னை மறக்க முடியும்?
எப்படியப்பா எமை நாங்கள் தேற்ற முடியும்?
சொல், சித்தனே! சொல்!
உன்னை இழந்ததால் விளைந்த சோக வடுக்கள்
உடனடியாக ஆறிடக் கூடியன அல்லவே!
அந்த உணர்வன்றோ எங்களை மேலும் மேலும் வடுப்படுத்துகிறது..
வடுமேல் வடுக்கொண்ட எமது இடுக்கண் தீர,
வருடிக்கொடுக்கும் மயிலிறகுகளாய்..
உனது வார்த்தைகள் மட்டும்
எம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும்!...
வார்த்தைச் சித்தனே! வலம்புரிச் சங்கே!
உன் உள்ளிருந்த நண்டுதான் உயிரிழந்தது..
ஆனால், உன்மீது உரசிச் சென்ற தமிழ்க்காற்றின்
ஓங்கார நாதம் ஒருபோதும் உயிரிழக்காது!..
இது, ஒட்டுமொத்தத் தமிழ்க்குலத்தின்
உள்ளம் எழுதுகின்ற உறுதிமொழி!..
தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
|
|
|
|