Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 460 online users.
» 0 Member(s) | 457 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,650
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  நமது பண்பு??
Posted by: tamilini - 05-09-2005, 11:20 AM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

எழுதியவர் கலையரசி குகராஜ்


அண்மையில் எமக்கு ஒரு அழைப்பு வந்தது... விழாவாம்இ பூப்புனித நீராட்டு விழாவாம்.....

மகள் வயதுக்கு வந்துதான் ஆறு மாதமாயிற்றேஇ அப்போது கூட ஒரு விழா எடுத்தீர்களே வினாவினோம்... அது.. அவசரமாய் உடனுக்கு செய்தது உறவுக்கு மட்டுமே எடுத்த விழா...

இப்போது இது...ஊருக்கு சொல்லி செய்வது...இயம்பினார்கள்...

ஐந்நூறு பேர் கூடும் மண்டபமாம் - அதை நிரப்ப மனிதர்கள் வேண்டுமாம். தேடி அலைவதாய் சொன்னார்கள்... என்னே அன்பு... வியந்தேன் நான்... மண்டபம் நிரப்ப மக்கள் தேடும் பண்பு...

வெட்கமே இல்லாமல்இ வெளிப்படையாய் சொன்னார்கள். மண்டபம் நிரம்பாவிட்டால் வீடியோ அழகிராதாம் - அதனால் கட்டாயம் வரும்படி கட்டளை போட்டார்கள்... மண்டபத்தை நிரப்பத்தான் மனிதர்கள் தேவையா? மனங்களை நிரப்ப இல்லையா? மனதில் எழுந்தது கேள்வி.

எதற்காக கொண்டாட்டம் என்ற கேள்விக்கு. நமது கலாச்சாரம் பேணவாம் பதில் வந்தது.

நடந்து முடிந்தது பகட்டு விழா. போகத் தோன்றவில்லைஇ போகவுமில்லை. பங்கு கொண்ட அனைவருக்கும் குத்து விளக்கு பரிசாம்.

குழந்தையவள்... பத்து வயதேயானவள். விழா பற்றி கேட்டேன். நகை நட்டு அலங்காரம்இ பளபளக்கும் உடைகள்இ அழகாயிருந்ததுவாம். நிறையப்பேர் வந்தார்கள்இ நிறையப் பரிசுகளாம். குழந்தையவள் மனதின் எஞ்சிய பதிவுகள் இவை...

இப்படியாக நடத்தப்படும் விழாக்களைப்பற்றி யோசித்துப் பார்க்கிறேன். இந்த ஆடம்பர கொண்டாட்டங்கள்தான் நமது கலாச்சாரமா? இந்த கொண்டாட்டங்களே நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து விடுமா?

சடங்குகள் சம்பிரதாயங்கள் எதற்கு செய்கிறோம்? காலங்காலமாய் செய்ததை நாமும் செய்கிறோம் சொல்கிறார்கள். ஆனால்..... பழையவர் செய்ததில்இ பல பல மாற்றங்கள் பகட்டுக்காகவென வசதிக்கேற்பவெனஇ செய்துதானே இருக்கிறோம். அப்படி மாற்றங்களை கொண்டு வர தெரிந்த நமக்குஇ அவசியம் இல்லாதவற்றை ஒதுக்கியும்இ அவசியமானவற்றை செய்யவும் கூடிய மாற்றங்கள் மட்டும் ஏன் பிடிக்காமல் போயிற்று? புரியவில்லை எனக்கு. சடங்குகள்இ சம்பிரதாயங்கள் எல்லாம் அந்தந்த காலத்திற்கேற்ப மாறி கொண்டுதான் வந்திருக்கின்றன. உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாமலே எதுவும் இருந்தது இல்லை. அப்படி இருக்கையில்இ பகுத்தறிவதன் மூலம் தேவையற்ற சடங்குகளை தவிர்த்துஇ தேவையானவற்றை தொடர்ந்தால் என்ன கெட்டுப் போய் விடும்?

திருமணத்தை எடுத்துக் கொண்டால்இ எத்தனை பவுணில் தாலி செய்யப்படுகிறது என்பதே பிரதானமாயிருக்கிறது. உண்மையில் நடந்த ஒரு விடயத்தை கூறுகிறேன். ஐரோப்பிய நாட்டில் வாழும் சகோதரர்கள் இருவருக்கு திருமணத்திற்கு தயாராய் பெண்கள் இருவர் அந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள். தம்பி திருமணம் முடிந்த பின்னரே தான் திருமணம் செய்து கொள்ளபோவதாய் அந்த அண்ணன் இருந்தார். காரணத்தை அறிந்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தம்பி எத்தனை பவுணில் தாலி போடுகிறானோ என்று பார்த்து விட்டுஇ அதை விட அதிகமாய் தாலி செய்து போடுவதற்காய் அண்ணன்காரன் காத்திருந்தான். பார்த்தீர்களா மனித பண்பை. கடைசியில் தம்பி 40 பவுணும்இ அண்ணன் 50 பவுணிலும் தாலி செய்து மனவிமாருக்கு போட்டுள்ளார்கள். அவர்கள் அந்த தாலியை காவிக் கொண்டு திரிவதில் உள்ள சிரமம் கருதியும்இ கள்ளர் பயத்திலும்இ தாலியை கழற்றி வங்கியில் வைத்து விட்டு இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து நமது கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று தெரியவில்லை.

நமது பழைய நடைமுறையில்இ விழாவுக்கு வருகிறவர்களுக்கு சந்தன கும்பாஇ குத்து விளக்குஇ எவர்சில்வர் தட்டு எல்லாம் கொடுத்து விடும் வழக்கம்தான் இருந்ததா? ஒரு சிலர் வாதிடலாம்இ இவை எல்லாம் ஒரு நட்புக்காய்இ மற்றவருக்கும் நமது அன்பை காட்ட கொடுக்கிறோம் என்று. ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்த்தால்இ ஒருவர் செய்வதை விட நாம் அதிகமாக செய்ய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை. ஒருவர் 100 பேரை விழாவுக்கு அழைத்தால்இ இதோ நான் 200 பேரை அழைக்கிறேன் பார் என்ற போட்டி. அவர் என்ன சந்தன கும்பாதானே கொடுத்தார்இ இதோ பார் நான் பெரிய குத்து விளக்கே கொடுக்கிறேன் என்ற அகங்காரம். அவர் 5 பலகாரம்தானே செய்து கொடுத்தார்இ நான் பார் 7 பலகாரம் செய்துள்ளேன் என்ற ஆணவம்.

இவை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படால் சந்தோஷம்தான். ஆனால் அதுவா இங்கே நடக்கிறது? இந்தப் போட்டி மனப்பான்மை உறவினர்களுக்குள்ளேயேஇ ஏன் சகோதரர்களுக்குள்ளேயே இருப்பதுதான் இன்னும் வேதனை. கடன்பட்டாலும் பரவாயில்லை. விழா பெரிதாக நடக்க வேண்டும் என்பது சிலரது ஆதங்கமாய் இருக்கிறது. இதுதானா நமது கலாச்சாரம்? இதுதானா நமது குழந்தைகளுக்கு நாம் புகட்டும் பண்பாடு? பொருளுக்கு இருக்கும் மதிப்பு அன்புக்கு இல்லை என்பதைத்தானா நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும்?

இதைவிட பெரிய கேலிக் கூத்து என்னவென்றால்இ எத்தனை பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்பதில் கூட ஒரு பெருமை. அதிகமானோருக்கு அழைப்பிதழ் அனுப்பினேன் என்பதை சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளுவதற்காகஇ என்றுமே கதைத்து அறிந்திராதவருக்கு கூடஇ நிச்சயமாக விழாவுக்கு அவர்கள் வரப்போவதில்லை என்பதை அறிந்தே இருந்திருந்தாலும் கூட அவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது.

இப்படி பெரிதாக எடுக்கப்படும் விழாக்களில்இ எத்தனை உறவினர்கள்இ நண்பர்களிடம் நின்று நிதானமாக பேச நேரம் கிடைக்கிறது? ஓடி ஒடி வீடியோவுக்கு ஒவ்வொருவராய் அழைத்து நிற்க வைத்து படங்கள் எடுத்துக் கொள்வதுடன்இ சாப்பாட்டுக்கு அழைத்து உட்கார வைத்து விடுவதுடன் நெருக்கம் நிறைந்து விடுமா என்ன? எவ்வளவோ தூரத்தில் இருந்து விழாவுக்கு வந்து போவார்கள். ஆனால் எவருடனும் நிதானமாக பேசக்கூட நேரம் கிடைக்காது.

அது மட்டுமா.... விழா முடிந்ததும் எத்தனை குறைகள் குற்றங்கள் வருகிறது. அது சரியாக இல்லைஇ இது சரியாக இல்லை என்று. தான் செய்ததை விட மற்றவர் அதிகப்படியாக செய்திருந்தால்இ அதை மட்டம் தட்டவென்றே ஏதாவது குறைகளை கண்டு பிடித்து சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

பூப்புனித நீராட்டு விழாவைப் பொறுத்த அளவில் அந்த விழாவே அவசியம் இல்லை என்பது எனது கருத்து. அந்த காலத்தில் அதை நம்மவர்கள் செய்தார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. பழைய காலத்தில் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பவர்கள். படிக்கவோஇ வேலைக்கோ போவதில்லை. எனவே தமது பெண் வயதுக்கு வந்து விட்டாள்இ திருமணம் செய்யலாம் என்பதை ஊருக்கு அறிவித்தார்கள். ஆனால் இப்போதைய நிலமை அப்படியா? நிலமைக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டாமா? அந்த காலத்தில் பெண்களை படிக்க அனுப்புவதுஇ அல்லது வேலைக்கு அனுப்புவது பாவமாக கருதப்பட்டது. அதுவே நமது கலாச்சாரம் என்று எண்ணிஇ அதையே தொடர்கிறோமா என்ன? மாற்றம் அதில் ஏற்படுத்திய நமக்குஇ இந்த தேவையற்ற விழாவை நிறுத்துவதால் மட்டும் கலாச்சாரம் பழுதுபட்டு போய் விடுமா என்ன?

உண்மையில் வயதுக்கு வரும் குழந்தைக்கு தகுந்த ஆரோக்கியமான ஆகாரங்களை வழங்கிஇ அவளுக்கு புரிய வைக்க வேண்டிய விடயங்களை புரிய வைத்தால்இ அதுவே குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாகும். அதை விடுத்துஇ இந்த அவசியமற்ற விழாவினால் எந்த பலனும் இல்லை. கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் சிந்தித்துப் பார்த்தால் என்ன? பகுத்தறிவோடு ஒத்துப்போகாத பண்பு ஒரு சமூகப்பண்பாகவோஇ அல்லது மனிதப் பண்பாகவோ இருக்க முடியுமா?

பூப்புனித நீராட்டுவிழா நடத்துவது அந்த குழந்தைகளுக்கு அவர்களது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லிப் புரியவைப்பதற்கே என ஒரு விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆண்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பருவ மாற்றங்கள் எப்படி புரிய வைக்கப்படுகிறதோஇ அதே போல் பெண்களுக்கும் புரிய வைக்கப்படலாம். தவிர விழா எடுக்கும் ஒரே நாளில் புரிய வைக்க கூடிய விடயமில்லை இந்த விடயம். படிப்படியாக பெண்ணின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றத்தைஇ படிப்படியாகத்தான் குழந்தைக்கு புரிய வைக்க முடியும். இப்படி விழா நடத்துபவர்களில் எத்தனை பேர் அப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்கிறார்கள்? உண்மையில் விழா எடுக்காதவர்கள் இந்த வேலையை திறம்பட செய்கிறார்கள் என்பது எனது கருத்து. தவிர வெளி நாட்டில் வாழும் குழந்தைகளைப் பொறுத்த அளவில்இ அவர்களுக்கு பாடசாலைப் பாடத்திட்டத்திலேயே எல்லாம் விபரமாக சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை எல்லாம் விழா வைத்துத்தான் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை.

பூப்புனித நீராட்டு விழா செய்வதன் மூலம்இ வயதுக்கு வந்த பெண்ணுக்கு தகுந்த கெளரவம் கண்ணியம் வழங்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் வைக்கப்படுகிறது. பெண்ணின் உணர்வுகளை மதித்தலிலும்இ அவளது கருத்துக்கள்இ செயல்பாடுகளை அங்கீகரித்தலிலும்இ அவளுக்குரிய கெளரவத்தை கண்ணியத்தை அளிக்க முடியாதா என்ன?

உண்மை கலாச்சாரம் எங்கோ ஒளிந்திருந்து தன்னைத்தானே தேடுகிறது. எளிமையில் இனிமை மறந்தும் போயிற்று. பெருமைக்காய் நிகழ்ச்சிகள் வளர்ந்தும் ஆயிற்று. அநாவசிய செலவுகள் ஆடம்பர கொண்டாட்டங்கள்.

கலாச்சாரத்தை கற்று கொடுக்க விளைகையில்இ அங்கே மனித நேயத்தை அதிகமாய் கலந்து கொடுத்தால் என்ன? அதுதானே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதும்இ அவசரமானதும்.

http://www.tamilamutham.net/index.php?opti...id=55&Itemid=32

Print this item

  எங்களுக்காக அல்ல இனி உங்களுக்காக....
Posted by: shanthy - 05-09-2005, 10:00 AM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

சிதைகளை அடுக்குங்கள்
புதைகுழிகள் வெட்டுங்கள்
எங்களுக்காக அல்ல இனி உங்களுக்காக....
எழுதியவர் - போராளிக்கவி அம்புலி
குரல்வடிவம் தயாரிப்பு - சாந்தி ரமேஷ் வவுனியன்.
(இக்கவி பதியப்பட்ட ஆண்டு - 2003)
http://www.vimpam.net/kavi1.ram

Print this item

  'காதலால் ஆதலால்"
Posted by: shanthy - 05-09-2005, 09:56 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (16)

எங்கடை சயந்தனின்
'காதலால் ஆதலால்"
சிறுகதை இசையும் கதையானது.

குரல் வடிவம் தயாரிப்பு - சாந்தி ரமேஷ் வவுனியன்.

http://www.vimpam.net/kathal.ram

Print this item

  கூகுள் நிறுவனத்தின் புதிய வெளியீடு
Posted by: hari - 05-09-2005, 06:00 AM - Forum: இணையம் - Replies (11)

<img src='https://upload.video.google.com/images/video_sm.jpg' border='0' alt='user posted image'>
கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது! இதன் மூலம் உங்களுடைய பெரிய அளவிலான ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்து சேமித்துவைக்கலாம்! மற்றைய பாவனையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் படங்களை தரவிறக்கம்(பார்க்க) செய்ய கட்டணமும் அறவிடலாம்! கீழ் உள்ள இணைப்பில் மேலதீக விபரங்களை பார்க்கவும்!
https://upload.video.google.com/


[size=10]குறிப்பு: கூகுள் மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் தனிமடலில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்!

Print this item

  நான் முகுந்தன்
Posted by: muhunthan - 05-09-2005, 01:52 AM - Forum: அறிமுகம் - Replies (24)

hellow

Print this item

  ஜேர்மனியில் கவிஞர் த.சரிஷின் நூல் வெளியீட்டு விழா
Posted by: sandiya - 05-08-2005, 07:21 PM - Forum: நிகழ்வுகள் - Replies (3)

ஜேர்மனியில் கவிஞர் த.சரிஷின் நூல் வெளியீட்டு விழா

<img src='http://sharishonline.com/images/new_book.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...!
Posted by: kuruvikal - 05-08-2005, 07:12 PM - Forum: மருத்துவம் - Replies (88)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41103000/jpg/_41103469_fridgebbc.jpg' border='0' alt='user posted image'>

பெண்கள் உள்ளெடுக்கும் கருத்தடை மாத்திரைகளில் உள்ள ethinylestradiol எனும் இரசாயனக் கூறும் உணவுப் பண்டங்களை அடைக்கப்பயன்படும் பிளாஸ்ரிக் பாத்திரங்கள் கொண்டுள்ள bisphenol A எனும் இரசாயனக் கூறும் கருப்பையில் வளரும் எலிக்குஞ்சுகளின் சிறுநீர்ப் பாதையில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்கான் பகுதிகளில் குறைபாடுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவென்று அறியத்தந்திருக்கிறது...! இதே கூறுகள் மனிதச் சிசுக்களின் வளர்ச்சியின் போதும் இதே தாக்கத்தைக் காண்பிக்கலாம் என்றும் மனிதனில் சூழல் காரணிகளுடன் சேர்ந்து புரஸ்ரேட் புற்றுநோய் ஏற்பட இவையும் காரணமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்...!

எனினும் இவ்வாய்வு முடிவானது இது தொடர்பான இறுதி முடிவல்ல என்றும் இது இன்னும் தொடரப்பட்டாலே மிகவும் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...!

எதற்கும் பெண்கள் கருத்தடை மாத்திரிகளையே நம்பி இருக்காமல் இயற்கையான கருத்தடை முறைகளை பின்பற்றுவதும் ஆண்களுக்கு கருத்தடை சத்திரச் சிகிச்சைகளை செய்வதை ஊக்கிவிப்பதும் சிறந்தது...! பிளாஸ்ரிக் பாவனையைக் குறைப்பதும் சிறந்ததாகவே தோன்றுகிறது...உடலுக்கும் சூழலுக்கும்..!

தகவல் மூலத்துக்கும் மேலதிக தகவல்களுக்கும்.. http://kuruvikal.blogspot.com/

Print this item

  Maranam
Posted by: Vasampu - 05-08-2005, 03:35 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - No Replies

எழுத்தாளரும் கவிஞரும் சிறந்த பட்டிமன்றப்பேச்சாளருமான வலம்புரி ஜான் நேற்று நள்ளிரவு சென்னையில் காலமானார். அன்னார் அரசியலிலும் ஈடுபட்டு தி மு க காங்கிரஸ் அ தி மு க என மாறி மாறி எம்பியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோயினாலும் சிறுநீரகக் கோளாறினாலும் பாதிக்கப்பட்டு போருர் இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அன்னாரின் உயிர் பிரிந்தது. அன்னாரின் உயிர் பிரிந்தாலும் அவர் தமிழ் உலகிற்கு செய்த சேவைகள் அவர் பெயரை வாழ வைத்துக் கொண்டேயிருக்கும். அன்னாரின் ஆத்மா சாநதியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.


அடிப்படைத்தகவல் : தற்ஸ்தமிழ்

Print this item

  போர் நிறுத்த நெருக்கடிக்குள் அரசின் மீது புலிகள் விசனம்
Posted by: eelapirean - 05-08-2005, 02:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

போர் நிறுத்த நெருக்கடிக்குள் அரசின் மீது புலிகள் விசனம்
ராய்ட்டருக்கு தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு.
போர் நிறுத்த உடன்படிக்கை கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்இ தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டுமாஇ இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம்இ உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்திலும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்னமும் இழுபறி நிலையிலேயே இருக்கிறார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

பொதுக் கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டாலும் அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகத்திற்கிடமானதே என்றும் தெரிவித்திருக்கும் அவர்இ இன்றைய நெருக்கடி நிலை குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று வருடங்களாக நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கை நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டு வருவதை தற்போது காண முடிகிறது.

இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த விடயத்தில் தவறிழைத்திருக்கும் அரசாங்கம். பிரபல்யமான தமிழர்களைப் படுகொலை செய்வதிலேயே கவனம் செலுத்திவருகிறது. இதனால் தற்போதைய இயல்பு நிலைக்கும் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

அதேநேரம்இ சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களைப் புனரமைப்புச் செய்வதற்காக உறுதியளிக்கப்பட்ட நிதியைப் பகிர்ந்து கொள்வதிலும் இழுபறி நிலையில் அரசு உள்ளது.

சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் தேவைப்படுகிறது. ஆனால்இ சுனாமி அனர்த்­தம் ஏற்பட்டு நான்கு மாதங்கள் கழிந்தும் அரசாங்கம் இது குறித்து அலட்சியமாகவே இருக்கிறது.

இந்நிலையில் போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இயல்பு நிலையை ஏற்படுத்தாது அதைப்புறந்தள்ளிவிட்டு தமிழ் புத்திஜீவிகளையும்இ ஊடகவியலாளர்களையும் படுகொலை செய்வதிலேயே கவனம் செலுத்துவதானதுஇ போர் நிறுத்த உடன்படிக்கையும் சமாதான நடவடிக்கைகளும் கடும் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றுகிறது

சமாதான அடிப்படையிலான தீர்வுக்குச் செல்வதையே நாம் எப்போதும் விரும்புகிறோம். அதற்குத் தயாராகவும் உள்ளோம்.

எனினும் தற்போதைய நிலையைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டுமாஇ இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.
சுட்டது வீரகேசரி

Print this item

  களத்தில் இருக்கு எல்லா அம்மாக்களுக்கும் !!!!
Posted by: sinnappu - 05-07-2005, 11:13 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (15)

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
களத்தில் இருக்கும் எல்லா <b>அம்மாக்களுக்கும்</b> !!!!
(ட .து நி. ச.) அப்புவின் அம்மா நாள் வாழ்த்து
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

கூடவே நம்மட ஆள் சின்னாச்சிக்கும்
பெடி பெட்டையள் சார்பா வாழ்த்துக்கள்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குறிப்பா புருசன் மாருக்கு சாப்பாடு போடமல் சின்னத்திரை எண்டு அலையும் வூட்டுக்காறியளுக்கும் பிரத்தியோக வாழ்த்துக்கள்

நன்றி வணக்கம்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item