| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 492 online users. » 0 Member(s) | 489 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,291
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,659
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| சிங்கள அரசின் சதி வலையில் சிக்கியுள்ள தேசத்து துரோகிகளே |
|
Posted by: killya - 05-07-2005, 12:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிங்கள அரசின் சதி வலையில் சிக்கியுள்ள தேசத்து துரோகிகளே தமிழர் செய்த தியாகங்களை மறந்து விடாதீர்கள் என்ற தலைப்பிலான துண்;டுப்பிரசுரம் மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை விநியோகிக்கப்பட்டுள்ளது. 'தமிழ் மக்கள் பெருமன்றம்" என்ற பெயரிலேயே இத்துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துண்டுப்பரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கியுள்ள தேசத்து துரோகிகளே தமிழர் செய்த தியாகங்களை மறந்து விடாதீர்கள். எமது தாயக மீட்புக்காக நாம் கொடுத்த விலை அதிகம். யாரும் கொடுக்க முடியாத உயிர்களையும்ääஉடமைகளையும் இழந்து நாம் தமிழ்த்தேசியம் என்ற பரினாமத்துடன் வளர்ந்துவந்துள்ளோம் (வளர்ந்து வருகிறோம்.) எமது இலட்சியங்களை எட்டிப்பாக்கும் நேரத்தில் எம் இனத்தையே ஏப்பம் விட நினைக்கின்ற எட்டப்பொம்மன்களின் கதை என்ன நடக்கின்றது என்பது தற்கால கண்கூடு. நாம் கொடுத்த விலை போதாது என்று எம்மை ஏளனமாக நினைக்கும் சிங்கள வெறிபிடித்த ஜே.வி.பி.ää ஜாதிக ஹெல உறுமயää மற்றும் பேரின வாத சந்திரிக்காää ரணில் அரசுகள் செய்யும் துரோகத்தனத்திற்குள் மூழ்கி விலைமதிப்பற்ற போராளிகள்ää புத்தி ஜீவிகள் போன்றோரைப்பதம் பார்த்து சிங்கள அடி வருடிகள் செய்யும் துரோகத்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தச்செல்வதை இனியும் அனுமதிக்க முடியாது.
இவர்களது எண்ணம் என்ன? இவர்களது நோக்கம் தான் என்ன? எம்மையே அடித்து எமது சகோதரிகளின் கற்பைச்சூறையாடிய சிறிலங்காப்படையுடன் கைகோத்து எம் இனத்தையே காட்டிக்கொடுத்து கதறக்கதற கொலை செய்த கொலைப்பாதகர்களுடன் சேர்ந்து எதைச்சாதிக்கப்போகிறார்கள்? தமிழர் தாயகத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கவா இத்தனை சதித்திட்டங்கள்? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்கள் ஒருபொதும் உய்யமாட்டார்.
18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள்ää 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிர்களைக் காணிக்கையாக்கியே எமது விடுதலை வீரியம் பெற்றிருக்கின்றது. இந்த ஆத்துமாக்களுக்கு கூறும் பதில் என்ன? எந்த நோக்கத்திற்காக நாம் ஒன்று பட்டோமோ அது முடிவடையும் தறுவாயில் சோரம்போன சிங்கள அரசின் அடிவருடிகள் தாங்கள் எந்த நோக்கத்திற்காக இச்செய்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உணர்வார்களா?
அவர்களுக்கு எங்கே உணர்வு? மதிகெட்ட மடையர்களுக்கு எங்கே உணர்வு? எமது கையை எடுத்து எமது கண்ணில் குத்துகிறோம் என்று எங்கே புரியப்போகின்றது? எமக்கு இரண்டு கண்ணும் போனால் பறவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும் என்ற நிலையிலுள்ள சிறிலங்கா பேரின வாதிகளின் வலையில் சிக்கி எமது இளைய சந்ததியினரின் எதிர்காலத்தையும்ääஎமது தேசியத்தின் ஒருமைப்பாட்டையும் சிதைக்கின்றோம் என்பதை எண்ணிப்பர்க்காத தூரநோக்கில்லாத் துரோகிகள் இருண்டழ ஒரு சூனியத்திற்குள் தமிழினத்தை ஈழத்தச்செல்ல என்ன அவசரம்? எமது எதிர்கால இருப்பையும் அழித்துவித்தடிக்கம் அற்பர்களின் வலையில் வீழ்வதா?
எமது தேசியத்தலைவர் ஒரு வரலாற்றுப் புருஸர் எத்தனை எத்தனை உள்நாட்டுää வெளிநாட்டுப்படைகள் வந்தாலும் அவற்றில் வெற்றிபெற்று தமிழ்ப்படை தலை நிமிர்ந்து நிற்பதை சர்வதேசம் உணரும். எங்களது நகர்வுகள் சிறிலங்காவில் அல்ல உலக அரங்கில் உலகத் தலைவர்களின் மனங்களை நெகிழவைத்து இன்று தமிழர் பக்கம் ஈர்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம் தமிழரின் படைப்பலமே. வடக்கு கிழக்கைப்பிரித்த எங்களைச் சிறுபான்மையினராக்கி அதன்மூலம் தமிழர் பிரதேசங்களை சூறையாட நினைக்கும் சிங்கள வெறியர்களின் வாலைப்பிடித்துக்கொண்டு எமது ஆற்றல் மிக்க சொத்தான அறிவுஜீவிகள்ää பலகளம் கண்ட தானைத் தளபதிகளை இலக்கு வைத்து தாக்கத்துடிக்கும் சிறிலங்கா கைக்கூலிகள் தங்கள் சுகபோகத்திற்காக ஒரு தேசத்தின் குரல்வளையை நெரித்து விடத் துடிப்பது ஒரு காலமும் நடக்காது. இது ஒரு தர்ம யுத்தம் இதில் தர்மம் தான் வெல்லும் தனிப்பட்ட செல்வாக்கிற்காக செல்லாக்காசாகியவர்களின் கதி என்னவாகின என்பதனை வரலாறுகள் கூறும் பாடங்களை இவர்கள் புரட்டிப்பார்க்கட்டும். பிரேமதாஸா காலத்திலே வடக்கை மட்டும் எடுங்கள் கிழக்கை எங்களிடம் தாருங்கள் என்று கூறிய போது எமது தலைவர் வடக்கும் கிழக்கும் எமது பாரம்பரிய தேசம் அதை ஒரு காலமும் சிங்கள அரசாங்கத்திற்கு அடகு வைக்கமுடியாது என்று பிரேமதாஸாவின் முகத்திலே கரி பூசிய கதைகளை அறிவார்களா?
இனியும் வடக்கு தமிழர்ää கிழக்குத் தமிழர் என்று பல்லவி பாடி பழந்தமிழர்களின் ஒருமைப்பாட்டைச் சிதைக்க நினைக்கும் சிங்கள அரசுக்கும்ää அதன் அடிவருடிகளக்கு நாங்கள் கூறிக்கொள்வதாவது!
'நெருப்பாறு என்றாலும் நீந்திக்கடந்தால்த்தான் வருங்காலம் என்றாவது வசந்தமாய் இருக்கும்"
|
|
|
| காட்டு முயல் பார்த்தீர்களா |
|
Posted by: KULAKADDAN - 05-07-2005, 11:56 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (1)
|
 |
<img src='http://img194.echo.cx/img194/893/rab1ew.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img194.echo.cx/img194/431/dsc7437525x3757wa.jpg' border='0' alt='user posted image'>
இதில் பாருங்கள் மூன்று முயல்கள் புல் மேய்ந்து கொண்டிருக்கிறன. நம்ம ஊரிலும் இவ்வாறான முயல்கள் இருக்கிறன. ஆனால் மனிதருடைய அசுமாத்தம் கண்டதும் பாய்ந்தோடி ஒளித்துவிடும். நம்ம ஆக்களும் விடுவாங்களா கொட்டனும் வேட்டைநாயுமாக திரிந்து முயல் வேட்டை ஆடுவதில் வீரர்கள். அதனால் தான் போலும் அவை சிறு அசுமாத்தம் கண்டதும் ஓடி ஒளிக்கிறன. ஆனால் இங்கு நாமிருக்கும் பகுதியில் தெருக்கரையோரம் சாதாரணமாக இருக்கும். மனித காலடி ஓசையை கேட்டு ஓடுவதில்லை. அதாவது இங்கு யாரும் அவற்றிற்கு தீங்கு செய்வதில்லை என நினைக்கிறேன்.
ஏன் நாங்கள் மட்டும் நமது இயற்கை வளத்தை கவனமற்று அழிக்க முற்படுகிறோம்?
நம்ம மக்களுக்கு சூழலியல் விழிப்ர்ணர்ச்சி போதாதா?
ஆனால் இதே காட்டு முயல்கள் அளவுக்கதிகமாக பெருகி அவற்றினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவற்றை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் முயன்றதாக இணையத்தில் கட்டுரைகள் இருக்கிறன.
|
|
|
| இளவரசன் இளவரசி காதல் |
|
Posted by: Malalai - 05-06-2005, 08:32 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (7)
|
 |
[size=18][b]மனைவிக்கு மரியாதை
சமீபத்தில் ஜப்பானில் நடந்த விஷயம் இது.....
ஜப்பானிய இளவரசர் தன் மனைவிக்குத் தந்த மரியாதையை மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு உலகின் அத்தனை பெண்களும் புருவம் உயர்த்தி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகிலேயே அரச குடும்பங்கள் இன்னும் வலுவாக இருக்கும் சில நாடுகளில் முக்கியமான ஒன்று ஜப்பான்.
ஜப்பானின் சக்கரவர்த்தியான அகினிடோஇ சக்கரவர்த்தினி மிச்சிக்கோவின் ஒரேயரு ஆண் வாரிசு நருஹிட்டோ.
சக்கரவர்த்தி அகினிடோவுக்குப் பிறகு சிம்மாசனம் ஏறப் போகிறவரும் இவர்தான்.
இப்படி ராஜ சிம்மாசனத்தில் அமரும் சக்கரவர்த்தியை ஜப்பானிய மொழியில் ஷாமாம் என்று அழைக்கிறார்கள்.
இளவரசர் நருஹிட்டோ நன்கு படித்தஇ சுறுசுறுப்பான இளைஞர். நவீன சிந்தனை உள்ளவர். அரசாங்க அலுவல்களில் ஆர்வம் கொண்டவர். பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அரசாங்க விழாவின்போது வெளியுறவுத்துறையில் பதவியிலிருந்த மசாகோ என்ற பெண்ணை தற்செயலாக சந்தித்து காதல் கொண்டார் இளவரசர்.
அவர் சக்கரவர்த்தியிடமும்இ தாயிடமும் தன் காதலை வெளிப்படுத்தியபோதுஇ அவர்கள் இந்தக் காதலுக்கு சம்மதிக்கவில்லை. காரணம்இ ராஜகுடும்பத்திலேயே இளவரசருக்கு அவரது தாய்வழிஇ தந்தைவழி உறவில் திருமண வயதில் பெண்கள் இருந்தனர்.
இன்னொரு காரணம்இ மசாகோ அரசாங்க வேலை செய்யும் ஒரு சாதாரணப் பெண் என்பது.
ஆனால் நருஹிட்டோ விடுவதாகயில்லை. மணந்தால் மசாகோவைதான் மணப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார். வேறு வழியின்றி மசாகோவை நேரில் பார்க்க சம்மதித்தார்கள் அவரது பெற்றோர்.
தனது அடக்கமான குணத்தாலும்இ பெரியோர்களிடம் காட்டும் மரியாதையாலும்இ குறிப்பாக... நல்ல பண்புகளாலும் முதல் சந்திப்பிலேயே சக்கரவர்த்தி குடும்பத்தினரை கவர்ந்துவிட்டார் மசாகோ.
அப்புறமென்ன?..... நருஹிட்டோவுக்கும்இ மசாகோவுக்கும் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் கோலாகலமாக நடந்தது திருமணம்!
சார்லஸ்_டயனா திருணத்துக்கு இணையாக உலகையே கலக்கியது இந்த அரச குடும்பத்து திருமணமும்! ஆனால் இந்தத் திருமணத்தின் மூலம் சிலர் படு எரிச்சலும்இ ஆத்திரமுமாக இருந்தனர். இளவரசருக்கு பெண்தர காத்துக் கொண்டிருந்த அவரது அரண்மனை உறவினர்கள்தான் அவர்கள்!
இதனால்இ அரண்மனைக்குள் மருமகளாக நுழைந்த மசாகோவை ஓரங்கட்ட முதலிலிருந்தே ரகசிய முயற்சிகள் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அரண்மனை காரியங்களில் மசாகோ தலையிடாமலிருக்கஇ பல விஷயங்கள் அவரிடமிருந்து மறைக்கப்பட்டதாம். நருஹிட்டோவுக்கும் இது புரிந்தது. அதனால் மனைவியை எங்கும் விட்டுத் தராமல் அவரை அரவணைத்துஇ ஆறுதலாக இருந்துள்ளார்.
அரண்மனைக்குள் யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த விழாவுக்கு எப்படி உடை உடுத்த வேண்டும் என்பது முதற்கொண்டு அரண்மனை உணவுப் பழக்கங்கள் வரை நருஹிட்டோதான் தன் காதல் மனைவிக்கு தனி அக்கறையுடன் சொல்லிக் கொடுத்தாராம்.
இனிமையாக கழிந்த இந்தக் காதல் தம்பதியின் திருமண வாழ்வில் கடந்த சில வருடங்களாக இருவரும் ஒரு பெரும் மனக்கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது!
திருமணமாகி பல வருடங்கள் கழிந்தபின்பும் இளவரசி கர்ப்பமாகாமல் இருந்தார். இதுதான் சாக்கு என்று அரண்மனை வம்புவட்டம் இளவரசியை குறை சொல்ல ஆரம்பித்து விட்டது. அரண்மனைக்கு வாரிசு இல்லாமல் போய்விடக்கூடாது என்பதால் சக்கரவர்த்திகளும் கூட பொறுமை இழந்தனர்.
தவிர திருமணத்தின் போதே இருபத்தி ஒன்பது வயதாக இருந்த இளவரசிக்கு வயதும் ஏறிகொண்டே சென்றது!
ராஜகுடும்பத்துக்கு நேர் வாரிசு இல்லாமல் போகப்போகிறது என்று இளவரசர் நருஹிட்டோவின் காதுபடவே பேசியுள்ளனர். அவருக்கு வேறு திருமணம் செய்யப் போவதாக பேச்சுவார்த்தைகளும் எழுந்தன.
இதனால் வெளியே சொல்ல முடியாத மனவேதனையில் தவித்த மசாகோவுக்கு நருஹிட்டோதான் ஆறுதலாக இருந்திருக்கிறார்.
ஒருவழியாக கடவுளின் அருள் கிடைத்தது..... தனது 39 வயதில் கர்ப்பம் தரித்தார் மசாகோ. சக்கரவர்த்திகள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள்.
மிக அழகாகப் பிறந்தது ஒரு பெண் குழந்தை. தங்கள் செல்ல வாரிசுக்கு அய்கோ என்று பெயர் வைத்தனர் நருஹிட்டோவும் மசாகோவும். அய்கோ என்றால் ஜப்பானிய மொழியில் அன்புக் குழந்தை என்று அர்த்தமாம்!
ஆனால் அப்போதும் ஒரு பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ராஜவம்ச சட்டப்படி ஆண்குழந்தை பிறந்தால் தான் முடிசூடமுடியும். இதனால் இன்னொரு குழந்தையை ஆண்குழந்தையாகப் பெற்றுக்கொடு என்று மசாகோவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர் அரண்மனை உறவுகள்.
தொடர்ந்து இவர்கள் கொடுத்த நெருக்கடிகள்இ அவமானங்கள்இ ஐயோ.... இவர்கள் அரச வாரிசுக்காக இளவரசருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற திகில்இ எல்லாம் கலந்து பலத்த மன உளைச்சலுக்கு ஆளானார் மசாகோ.
நடப்பவைகளைப் பார்த்து நருஹிட்டோவுக்கோ பயங்கர கோபம்!.... தன் காதல் மனைவியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்ததைப் பார்த்த இளவரசர் உடனடியாக ஒரு விஷயத்தை செய்ய முடிவெடுத்தார்.
அரண்மனை முக்கியஸ்தர்களைக் கூப்பிட்டு நாட்டின் அந்த பாரம்பரிய சட்டம் பற்றி ஆலோசித்தார். பின்பு பெண்களும் முடிசூடிக் கொள்ளலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார்...!
தனதுஇ இந்த முடிவுக்கு ஜப்பானிய மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களா இல்லையா என்று பல்வேறு குழுக்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தவும் சொன்னார். விஷயம் அவர் மகிழத்தக்க அளவில்தான் வந்தது. ஜப்பானிய மக்களில் பெரும்பாலானவர்கள்இ பெண் சக்கரவர்த்தினி முடிசூட்டப்படுவதை ஆதரித்துள்ளனர்!....
தவிரஇ ஜப்பானில் உள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து ராஜ குடும்பத்து வாரிசுரிமை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர ஆவன செய்யப்படுகிறது. இதன்படி இளவரசர் நருஹிட்டோவுக்கு அப்புறம் அடுத்து ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள அய்கோ வுக்குத்தான் முடிசூட்டப்படும்!
இளவரசரின் காதல் மனைவி சக்கரவர்த்தினி ஆவார். இப்போது மசாகோவை எதிர்த்த அரண்மனை உறவுகள் செய்வதறியாது விழிக்கிறார்கள். மசாகோவுக்கு அடங்கி நடக்க முயற்சிக்கிறார்கள்.
தன் வாழ்க்கை இனி தொலைந்து போகாமல் இருக்கும் என்று மசாகோவின் முகத்தில் இப்போதுதான் ஒரு நிம்மதி தெரிகிறது!
இதைவிட பெரிய பரிசாக ஒரு கணவர் மனைவிக்கு வேறென்ன தர முடியும்?
_ பவானி
நன்றி: குமுதம்
|
|
|
| 15வயதில் எழுதி 90வயதில் முடித்த புத்தகம்!!!! |
|
Posted by: Malalai - 05-06-2005, 08:18 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
[size=18]<b>15 வயதில் எழுத ஆரம்பித்து 90 வயதில் முடித்த புத்தகம்!!!!</b>
தன்னுடன் பல்லாங்குழி ஆடிய தன் வயது தோழி திடீரென்று ஒரு நாள் வந்து இனிமேல் நீ தான் என் சித்தி... என் அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக உன்னைத்தான் கல்யாணம் பண்ணப் போறாங்களாம்! என்று சொன்னால் ஒரு பன்னிரண்டு வயது சிறுமிக்கு எப்படி இருக்கும்?
சம்பூரணியும் அதிர்ந்துதான் போனாள்.
முடியாது... நான் நாப்பது வயசுள்ள ஒருத்தரைக் கட்டிக்க மாட்டேன்! என்று அழுதிருக்கிறாள். அவளுடைய தந்தையால் அதிகம் பணம் செலவழித்து நல்ல இடத்தில்இ இளைஞனாக மாப்பிள்ளை பார்த்து தன் மகளுக்குத் திருமணம் செய்து தர முடியவில்லை.
ஆனால் அந்தப் பால் வடியும் சிறுமியின் அழுகையும் அந்த மனஉறுதியும் அவளுடைய அப்பாவை உலுக்கியெடுக்க நல்ல வேளையாக அந்தத் திருமணத்தை நிறுத்தி தன் மகளுக்கு நிம்மதி தந்தார் அந்தத் தந்தை!...
இது நடந்தது கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்பு... அந்தச் சிறுமிதான் இன்று கவிஞராகவும்இ எழுத்தாளராகவும் உருவாகி தன்னுடைய தொண்ணூறு வயதில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த பூரணி என்று அறியப்படும் சம்பூர்ணம்மாள்.
அப்பாவின் தமிழ்ப் புலமைஇ மகள் சம்பூரணியையும் தொற்றிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை. அதனால்தான் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த சம்பூர்ணம்மாளுக்கு மரபுக் கவிதைகள் எழுதும் அளவிற்குப் புலமை வந்திருக்கிறது.
பதினைந்து வயதில் வேறொரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொண்டு புகுந்தவீடு சென்ற சம்பூரணம்மாளுக்கு அந்த வீட்டின் வித்தியாசமான சூழலே முதன் முதலில் பாட்டெழுத வைத்ததாம்..!
புகுந்த வீடு ஒரு வியாபாரக் குடும்பம். ஆண்கள் காலையில் கடைக்குச் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார்கள். என் ஓர்ப்படிகள் வீட்டு வேலைஇ பகல் தூக்கம்இ அக்கம்பக்கத்தாரோடு அரட்டை என்று பொழுதைக் கழித்தார்கள். நான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் சென்று நான்கு சுவர்களையும் பார்த்துக் கொண்டு ஜடம் போல வீற்றிருப்பது ரொம்பத் துயரமாக இருந்தது.
அப்போதுதான் பாட்டெழுதிப் பார்க்கலாமே என்ற எண்ணம் உதித்தது. நான் பாட்டின் மூலம் என் மன உளைச்சலையும்இ வேதனையையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. என் மனதை ஈர்த்த நல்ல விஷயங்களைப் பாட்டாக்கினேன். தடங்கலின்றி வார்த்தைகள் வெளிப்பட்டுஇ பிசிர் இல்லாத மரபுக் கவிதைகளாக எழுத ஆரம்பித்தேன் என்கிறார் சம்பூரணம்மாள்.
இவருடைய ஆர்வத்தைப் பார்த்த கணவர்இ நூலகத்திலிருந்து பல அரிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்து அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
எதேச்சையாக இவருடைய கவிதைகளைப் படித்த இவருடைய அண்ணன்இ தன்னுடைய மேடை நாடகங்களுக்கும் சம்பூரணம்மாளைப் பாட்டெழுத வைத்திருக்கிறார். அந்தப் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதன்பிறகு சம்பூர்ணம்மாளுக்கு காங்கிரஸின் மீதும் காந்தியக் கொள்கைகளிலும் ஈடுபாடு அதிகம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் குடும்பமும்இ குழந்தைகளும் இருந்ததால் வீதியில் இறங்கி சுதந்திரத்துக்காகப் போராட முடியாத சம்பூர்ணம்மாள்இ தனது கருத்துக்களைப் பாட்டுகளாக இயற்றிஇ ஆண்களும் பெண்களும் கூடும் திருமணங்களின்போது பாட வைத்தார். வெறும் வாய் மொழியாகஇ அச்சில் ஏறாத நிலையிலிருந்த அந்தப் பாடல்கள் தமிழகம் முழுவதும் திருமணங்களின்போது அப்போதெல்லாம் பாடப்பட்டனவாம். இவை தவிர பல வில்லுப்பாட்டு வசனமும்கூட எழுதிக் கொடுத்திருக்கிறார் சம்பூரணம்மாள்.
பாரத மாதா மாதர் சங்கத்திற்குப் பணம் தேவைப்பட்டபோது இவரே முன்னின்று நாடகம் போட்டு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வசூலித்துக் கொடுத்திருக்கிறார். அந்தக்காலத்தில் இது ஒரு மிகப்பெரிய தொகை.
இதற்கிடையில் தான்இ தன்னுடைய ஒன்பது குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார் சம்பூர்ணம்மாள். சித்தன் பாரத ஜோதி போன்ற இதழ்களிலும்கூட இவருடைய கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.
வீட்டு வேலை முடிந்தவுடன் எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பாராம். ஆனால் எழுதியவற்றை தபாலில் அனுப்பவோஇ பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்க்கவோஇ பிறரின் உதவி தேவைப்பட்டதால் எழுதிய படைப்புகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டு விடுவாராம்.
அவரது படைப்புகள் புத்தகமாக வெளிவந்தது அவருடைய தொண்ணூறாவது வயதில்தான். பூரணி கவிதைகள் என்ற பெயர் கொண்ட அற்புதமான கவிதைத் தொகுப்பு அது!
சம்பூர்ணம்மாள் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்இ ஒரு சீர்திருத்தவாதியாகவே வாழ்ந்துள்ளார். அவரிடம் இந்தி கற்க வந்த ஒரு விதவைப் பெண்ணுக்குப் பூ வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆசை உண்டாம். அதை அறிந்த சம்பூர்ணம்மாள் தனிமையில் அந்தப் பெண்ணுக்குப் பூச்சூட்டி மகிழ்வித்திருக்கிறார்.
தன்னுடைய மகன் காதலித்த பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் என்ற போதும் பயப்படாமல் திருமணத்தை நடத்திக் காட்டியவர் இவர்.
இன்னொரு விஷயம் தெரியுமா...? சம்பூரணம்மாளின் மகள்தான் கவிஞர் கிருஷாங்கிணி.
வாழ்க்கையில் எத்தனையோ கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டபோதிலும்இ முடியாது என்ற வார்த்தை அம்மா வாயில் இன்றுவரை வந்ததே கிடையாது. முடிந்தவரை முயற்சி செய்வோம் என்பதுதான் அவரின் கொள்கை என்று அம்மாவை பற்றிப் பெருமிதத்துடன் சொல்கிறார் கிருஷாங்கிணி.
இந்த மன உறுதிதான் அவரை தொண்ணூறு வயதிலும் துணி துவைப்பதுஇ தானே குளித்துக் கொள்வது என்று தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் அளவிற்கு வைத்திருக்கிறது.
சம்பூரணம்மாளின் புத்தகம்இ இலக்கிய உலகில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அவரின் படைப்புகள் அத்தனையும் அடுத்தடுத்து இன்னும் பலப் புத்தகங்களாக வெளிவர இருக்கின்றன.
வாழ்த்துக்கள் அம்மா!
_ மு.வி. நந்தினி
நன்றி: குமுதம்
|
|
|
| மகன்களே இது உங்களுக்குத் தான் |
|
Posted by: Malalai - 05-06-2005, 07:58 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (27)
|
 |
[size=18][b]இப்படி ஒரு மகனைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
ஒன்றல்ல... இரண்டல்ல... ஒன்பது வருடங்கள் தனது தாயைத் தோளில் சுமந்தபடிஇ ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்துஇ ராமேஸ்வரத்தை அடைந்திருக்கிறார் ஒரு வைராக்கிய மகன்.
வயதான_நடக்க முடியாத_பார்வை இழந்த தனது தாயாரின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அம்மாவைத் தோளில் சுமந்தபடி கடந்த 96_ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்த போதுஇ அந்த மகனுக்கு வயது முப்பத்து மூன்று. அவனது தாயாருக்கு வயது எழுபத்தொன்பது. ராமேஸ்வரம் கோயிலை இருவரும் அடைந்தபோது தாயைச் சுமந்த அந்தத் தனயனுக்கு வயது நாற்பத்து மூன்று. நல்ல மகனைப் பெற்ற அந்த மகராசிக்கு வயது எண்பத்தெட்டு.
‘இந்த கம்ப்யூட்டர் கலியுகத்திலும் இப்படியும் ஒரு மகன் இருப்பாரா?!’ என்று வியக்க வைக்கிற உருக்கமான நிஜ ஸ்டோரிதான் இவர்களுடையது.
மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜபல்பூர் பர்கிரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்திதேவி. கணவனை இழந்த இவருக்கு கைலாஷ்கிரி என்ற ஒரே மகன். தீவிர ராமபக்தையான கீர்த்திதேவிக்கு அவரது மகன் மட்டுமே துணை. கூலி வேலை செய்து தன் தாயைக் காப்பாற்றி வந்தார். தூங்கும் சொற்ப நேரத்தைத் தவிரஇ மற்ற எல்லா நேரமும் ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டுஇ தன்னை அக்கறையாய் கவனித்துக் கொள்ளும் தன் மகனுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தார் அந்தத் தாய்.
ஒருநாள் மதியம் அதிர்ச்சியூட்டும் சேதியோடு கீர்த்திதேவியைத் தேடி வந்தார்கள்இ கைலாஷ்கிரியுடன் வேலைபார்க்கும் சகநண்பர்கள்.
‘‘அம்மாஇ வேலை பார்க்கும் போது கைலாஷ் மரத்து மேலிருந்து கீழே விழுந்துட்டான். ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்’’ என்று தயங்கித் தயங்கி அவர்கள் சொன்னபோதுஇ நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது கீர்த்திதேவிக்கு. பதறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்.
அங்கே_
காலிலும்இ கையிலும் எலும்புமுறிவு ஏற்பட்ட நிலையில்இ கவலைக்கிடமாகக் கிடந்தார் கைலாஷ்கிரி. மகன் கிடந்த கோலத்தைப் பார்த்துக் கதறிய கீர்த்தி தேவிக்கு ‘எங்கே தன் மகன் தன்னை விட்டுப் போய்விடுவானோ’ என்ற பயமும் பிடித்து ஆட்ட... அந்த நிமிடமே ராமேஸ்வரம் இருக்கும் திசையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டு பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார் அந்த வயதான தாய்.
‘‘ராமநாதா... நான் வணங்கும் தெய்வமேஇ என் பிள்ளையைக் குணமாக்கி எந்தக் குறையுமில்லாமல் எனக்கு திருப்பிக் குடுத்துடு. அப்படி நீ செய்தால்இ நீ குடியிருக்கிற கோயிலுக்கு உன்னைத் தரிசனம் பண்ணஇ இங்கிருந்து பாதயாத்திரையாவே வருவேன். இது சத்தியம்!’’
அந்தப் பாசமிக்க தாயாரின் வேண்டுதலின் வலிமையோ என்னவோஇ ஆச்சரியப்படத்தக்க வகையில் கைலாஷ்கிரி உடல்நலம் தேறினார். உடல் முழுவதுமாய் தேறி சில வருடங்கள் ஓடிவிட்ட நிலையில்இ கீர்த்தி தேவிக்குப் புதிதாய் பிரச்னை ஏற்பட்டது. அவர் நடக்கும் சக்தியை இழந்தார். போதாக்குறைக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.
பாதயாத்திரை வேண்டுதலை தன் மகனிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார்.
‘‘அம்மாஇ உன்னால் நடக்க முடியலேன்னா என்னம்மா... உனக்காக நான் நடக்கறேம்மா. எனக்காக வேண்டிக்கிட்ட உன்னைத் தோளில் சுமந்து ராமேஸ்வரம் போறேன். எத்தனை வருஷமானாலும் சரிஇ உன்னை ராமேஸ்வரத்துக்கு அழைத்துக் கொண்டு போய் உன் வேண்டுதலை நிறைவேற்றுவேன் அம்மா!’’ என வைராக்கியமான குரலில் தன் தாயாருக்கு உறுதி கொடுத்திருக்கிறார் கைலாஷ்கிரி.
சொன்னதோடு நின்றுவிடாமல் மளமளவென காரியத்திலும் இறங்கிவிட்டார். பெரிய தராசு போன்ற தூளி ஒன்றை தயார் செய்துஇ ஒருபக்கம் தன் தாயாரை உட்கார வைத்துஇ மறுபக்கம் பயணத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வைத்து அதனை சுமந்து கொண்டு நர்மதை ஆற்றங்கரையிலிருந்து தனது நீண்ட பாதயாத்திரைப் பயணத்தைத் தன் தாயாருடன் ஆரம்பித்தார் கைலாஷ்கிரி.
1996_ம் வருடம் ராமநவமியன்று ஆரம்பித்த அவரது பாதயாத்திரைப் பயணம்இ பல தடைகளையும் சோதனைகளையும்இ முழுதாய் ஒன்பது வருடங்களையும் கடந்து உழைப்பாளர் தினமான கடந்த மே 1_ம் தேதியன்று ராமேஸ்வரம் கோயிலில் நிறைவு பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமநாதசுவாமி கோயிலின் வி.ஐ.பி. பக்தர்கள் இந்த இருவரும்தான்.
தாயும்இ மகனும் அன்று அதிகாலையிலேயே எழுந்து விட்டார்கள். அந்த நேரத்திலும் அவர்களை வேடிக்கை பார்க்கவும்இ கீர்த்தி தேவியிடம் ஆசி வாங்கவும் கூட்டம் கூடியது. மாலை நான்கு மணிக்கு கைலாஷ்கிரியும்இ கீர்த்தி தேவியும் கோயிலுக்குப் புறப்பட ஆயத்தமானார்கள். முதல் காரியமாக தன் தாயுடன் அக்னி தீர்த்த கடலுக்குச் சென்றார் கைலாஷ்கிரி.
அங்கே...
தனது தாயை முதலில் தீர்த்தமாடச் செய்து விட்டு... பிறகுஇ தானும் தீர்த்தமாடினார். அந்தக் காரியங்கள் முடிந்ததும் தன் அன்புத் தாயை அரவணைப்பாய் கைகளில் தூக்கியபடி கோயிலை நோக்கி நடந்தார் கைலாஷ்கிரி.
உள்ளேயுள்ள இருபத்தொரு தீர்த்தங்களிலும் இருவரும் நீராடிவிட்டு ராமநாதசுவாமியை ஸ்பெஷலாய் தரிசித்தார்கள் தாயும் மகனும். அப்போது அந்தத் தாயின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம். விழிகளில் ஆனந்தக் கண்ணீர்!
தன் வேண்டுதலை நிறைவேற்றிய தன் ஆசை மகனைக் கட்டியணைத்தபடி கண்ணீர் விட்டார் அந்த மூதாட்டி. பிரார்த்தனையும்இ சுவாமிதரிசனமும் திருப்தியாய் முடிந்த மகிழ்ச்சியில் தன் தாயை சுமந்தபடி அருகிலிருந்த பஞ்சமுக அனுமார் கோயிலில் வந்தமர்ந்தார் கைலாஷ்கிரி.
இந்தி தெரிந்த யாத்ரீகப் பணியாளர் ஒருவரின் உதவியுடன் கைலாஷ்கிரியுடன் பேசினோம்.
‘‘இந்த நாளை என்னோட உயிர் உள்ள வரை மறக்க முடியாது. நானும்இ என் மாதாவும் இன்னிக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம். நான் என் ஊரிலிருந்து பாதயாத்திரை கிளம்பியபோதுஇ என் நண்பர்களும்இ உறவினர்களுமே கேலியும் கிண்டலும் பேசினார்கள். எனது வைராக்கியமும்இ என் மாதாவின் இடைவிடாத பிரார்த்தனையும்இ ராமநாத சுவாமியின் கருணையுமே இந்தப் பாதயாத்திரை வெற்றிகரமாக நிறைவேற உதவியிருக்கிறது. கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை ஒன்பது வருடங்களாக நடந்து நடந்தே கடந்து ராமேஸ்வரம் வந்திருக்கிறேன். சில நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கிவிட்டு ரயிலில் எனது சொந்த ஊருக்குத் திரும்புகிறேன்!’’ என்றார் கைலாஷ்கிரி.
‘‘எம் பிள்ளை குணமாகணும்னு நான் வேண்டிக்கிட்டேன். என் வேண்டுதலை நிறைவேற்றணும்னு எனக்காக என் பிள்ளை என்னைத் தோளில் சுமந்து நடந்து வந்து என் பிரார்த்தனையை நிறைவேற்றிட்டான். நான் அவனை என் வயிற்றில் வெறும் பத்து மாதம் தான் சுமந்தேன். அவனோஇ ஒன்பது வருஷங்களா என்னை தன்னோட தோளில் சுமந்திருக்கான். அவன் என்னைச் சுமந்ததற்கு முன்னால் நான் அவனை சுமந்ததெல்லாம் வெறும் தூசு... இப்படி ஒரு பிள்ளையை எனக்குக் கொடுத்ததற்காக அந்த ராமநாதனுக்கு தினமும் நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்!’’ என்று கண்களில் பெருகும் ஆனந்தக் கண்ணீரோடு தன் மகனைப் பற்றி பெருமிதமாய்ச் சொல்லி முடித்தார்இ அந்த மகராசி!’
நன்றி: குமுதம்
|
|
|
| ̧ġô ƒ¡ãý |
|
Posted by: தூயா - 05-06-2005, 12:00 PM - Forum: சமையல்
- Replies (31)
|
 |
̧ġô ƒ¡ãý
§¾¨ÅÂ¡É ¦À¡Õð¸û:
À¡ø §¸¡Å¡(º÷츨à §º÷측¾Ð)-1/2 kg
¨Á¾¡ Á¡× - 150 gms
º¨ÁÂø §º¡¼¡ - 1 /2tsp
¦¿ö - 1 tbsp
º÷츨à - 500 gms
refined oil (±ñ¦½ö) - ¦À¡¡¢ì¸ò §¾¨Å¡ÉÐ
¦ºöÓ¨È:
1. ´Õ «¸ýÈ ¾ð¨¼ ±ÎòÐ즸¡ñÎ «¾¢ø º¨ÁÂø §º¡¼¡¨ÅÔõ ,¦¿ö¨ÂÔõ §º÷òÐ §À½¢ìÌ ¦ºöÅÐ §À¡ýÚ ¿ýÈ¡¸ Ѩà ÅÕõ Ũà §¾öì¸ §ÅñÎõ.
2. À¢ÈÌ À¡ø§¸¡Å¡¨ÅÔõ, ¨Á¾¡¨ÅÔõ §º÷òÐ ¿ýÈ¡¸ì ¸ÄóÐ Á¢ÕÐÅ¡¸, À¾Á¡¸ô À¢¨ºÂ×õ.
3. ¯Õñ¨¼Â¡¸§Å¡, oval ÅÊÅò¾¢§Ä¡ ¨¿º¡¸ ¯ÕðÊ ¨ÅòÐì ¦¸¡ûÇ×õ.
4. Áü¦È¡Õ Àì¸ò¾¢ø º÷츨ÃìÌ 1:1 ±ýÚ ¿£÷ §º÷òÐ ¦¸¡¾¢ì¸ ¨ÅòÐ ¸¨Ã Ţ¼×õ. ¿ýÈ¡¸ì ¸¨ÃóÐ ºüÚôôÀ¡Ì Åó¾Ðõ ƒ¡ãý ¸¨Çô ¦À¡È¢òÐô §À¡¼×õ.
5. ¦À¡È¢ôÀ¾üÌ Å¡½Ä¢Â¢ø ±ñ¦½ö (§¾¨Å¡ɡø º¢È¢Ð ¦¿ö §º÷òÐìì ¦¸¡ûÇÄ¡õ) °üÈ¢ ´ù¦Å¡Õ ®ðÊüÌõ ±ñ¦½öìÌò ¾ì¸Å¡Ú §À¡ðÎ Áð¼¡É ¾ÆÄ¢ø ¦À¡ýÉ¢ÈÁ¡¸ô ¦À¡È¢ò¦¾Îì¸×õ.
6. þõӨȢø ¿¡õ Å£ðʧħ ¾Â¡¡¢ò¾¡ø ¸½¢ºÁ¡É «ÇÅ¢ø ͨÅÂ¡É ƒ¡ãý¸¨Ç ¾Â¡¡¢ì¸Ä¡õ.
நன்றி-Nilasaral
|
|
|
| ¿Äõ ¾Õõ ÀÆí¸û |
|
Posted by: தூயா - 05-06-2005, 11:58 AM - Forum: மருத்துவம்
- Replies (4)
|
 |
ÀÆí¸Ç¢ø þÕõÒ ºòмý, À¡ŠÀÊ, ¸¡øº¢Âõ §À¡ýÈ "«ò¾¢Â¡Åº¢Â °ð¼îºòÐì¸Ùõ, ÀÄ Å¨¸Â¡É ¨Åð¼Á¢ý¸Ùõ ¯ûÇÉ. ÀÆí¸¨Çò §¾Û¼ý ¸ÄóÐ º¡ôÀ¢ÎÅÐ Á¢¸×õ ¿øÄÐ.
1. ¬ôÀ¢û - ¬ôÀ¢û ÀÆòмý §¾ý, §Ã¡ƒ¡ þ¾ú¸û ¸ÄóÐ º¡ôÀ¢ð¼¡ø Ãò¾ §º¡¨¸, ¿ÃõÒò ¾Ç÷ ¿£í¸¢Å¢Îõ. ¬ôÀ¢û ƒ¤Š ÌÆó¨¾¸Ùì¸¡É Å¢üÚô §À¡ì¨¸ ̽Á¡ìÌõ.
2. ¬ÃïÍ - ±ó¾ ž¢ÉÕõ ±ó¾ §¿¡Â¡Ç¢Ôõ º¡ôÀ¢¼Ä¡õ. ÃïÍ ¯¼ÖìÌ Òòн÷Ôõ ÅÖ×õ ¾Õ¸¢ÈÐ. ¸÷ôÀ¢½¢¸û, ÌÆó¨¾¸ÙìÌ Á¢¸×õ ¿øÄÐ.
3. ¾¢Ã¡ð¨º - º÷츨à §º÷측¾ ¾¢Ã¡ð¨ºô ÀÆîº¡Ú ¿£Ã¢Æ¢× §¿¡¨Â ̽Á¡ìÌõ . ´Õ "×ýŠ ¾¢Ã¡ð¨ºî º¡Ú¼ý º¢È¢Ð §¸Ãð º¡Ú §º÷òÐ ¦¾¡¼÷óÐ º¡ôÀ¢ðÎ Åà º¢Ú ¿£÷ ¾¡¨Ã¸Ç¢ø ¯ñ¼¡Ìõ ¸ø ¸¨ÃóÐÅ¢Îõ.
4. Á¡Ð¨Ç - þ¾Âõ, ̼ø, º¢Ú¿£Ã¸õ ¿ýÌ þÂí¸ Á¡ÐÇõ ÀÆîº¡Ú ¿øÄÐ. Á¡ÐÇõ ÀÆò¾¢ø ÌÙ째¡Š ºì¾¢ ¿¢¨È ¯ûÇÐ.
5. «ýÉ¡º¢- "«ýÉ¡º¢ô ÀÆõ þ¾Âò¾¢üÌ Á¢¸×õ ¿øÄÐ. Ò¨¸ À¢ÊìÌõ ÀÆì¸ò¨¾ ¿¢Úò¾ ÀÂý Àθ¢ÈÐ. ¯¼ø ÝÎ ¯ûÇÅ÷¸ÙìÌ Á¢¸×õ ¿øÄÐ.
6. ºô§À¡ð¼¡ - þÕõÒ, ¦À¡ð¼¡º¢Âõ, À¡ŠÀÊ ºòÐì¸û «¾¢¸õ ¯ûÇÐ. ºô§À¡ð¼¡×¼ý §¾ý ¸ÄóÐ º¡ôÀ¢ð¼¡ø ¬ñ¨Á «¾¢¸Ã¢ìÌõ.
7. ÀôÀ¡Ç¢ - ÀôÀ¡Ç¢ ÀÆò¨¾ Ðñθû ¬ì¸¢ º£Ã¸ô ¦À¡Ê, ±ÖÁ¢î¨º ÀÆîº¡Ú ¸ÄóÐ º¡ôÀ¢ð¼¡ø "ƒ£Ã½õ ̽Á¡Ìõ. ÀôÀ¡Ç¢Ô¼ý §¾ý ¸ÄóÐ º¡ôÀ¢ð¼¡ø ¿ÃõÒò ¾Ç÷ ¿£í¸¢Å¢Îõ. ¾¡öôÀ¡ø ÍÃì¸ ÀôÀ¡Ç¢ ÀÂýÀÎõ.
இதுவும் சுட்டது ஆனால் பிரயோசமானது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குறிப்புகள் எந்த அளவு வீதம் நிஜம் என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
Crtsy - Therasa
|
|
|
| 'தமிழ்த்திரை' சேனல் ! |
|
Posted by: anpagam - 05-06-2005, 11:28 AM - Forum: சினிமா
- Replies (4)
|
 |
'தமிழ்த்திரை' சேனல்: ஒளிபரப்பு இன்று துவக்கம்
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் தமிழ்த்திரை சாட்டிலைட் சானல் இன்று முதல் தனது ஒளிபரப்பை துவக்குகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் இந்த சேனலை தொடங்கி வைக்கிறார்.
தமிழக சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கூட்டமைப்பு சார்பில் "தமிழ்த்திரை' சாட்டிலைட் சேனல் துவக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர் கோவைத் தம்பி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரின் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சேனலைத் துவக்கும் பணிகள் நடந்தன.
கடந்த மாதம் 22ம் தேதி முதல் தமிழ்த்திரையின் சோதனை ஒளிபரப்பு துவங்கியது. இன்று முதல் 24 மணி நேர அதிகாரபூர்வ ஒளிபரப்பு துவக்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு இயக்குனர் பாலசந்தர் தலைமை தாங்குகிறார். நடிகர்கள் கமலஹாசன் விஜயகாந்த் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் தமிழ்த்திரை சேனலை துவக்கி வைக்கிறார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்இ தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுதர்சன சீனிவாசன் தமிழ்நாடு வினியோகஸ்தர் பேரவை தலைவர் வெள்ளைச்சாமி
இந்திய திரைப்பட சம்மேளன செயலாளர் அபிராமி ராமநாதன் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் விஜயன் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்இ தமிழ்த்திரையின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்குகிறது. விழாவில் தமிழ் சினிமாக்காரர்கள் மட்டுமின்றி உலக அளவில் அனைத்து மொழி சினிமா உலகினரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த சேனல் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா மத்திய கிழக்கு ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் உள்ள 10 நாடுகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
சேட்டிலைட் சானல் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்த்திரை சேனல் தமிழகத்தின் சட்டசபை தொகுதி வாரியாக 150 டீலர்களை நியமித்து 30 லட்சம் கேபிள் டிவி இணைப்புகளை நேரடியாக பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாயிலாக துவக்க நாளன்றே 50 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு இந்த சேனல் செல்லும் என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: Thatsதமிழ்
|
|
|
|