Yarl Forum
மகன்களே இது உங்களுக்குத் தான் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மகன்களே இது உங்களுக்குத் தான் (/showthread.php?tid=4332)

Pages: 1 2


மகன்களே இது உங்களுக்குத் தான் - Malalai - 05-06-2005

[size=18][b]இப்படி ஒரு மகனைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி

ஒன்றல்ல... இரண்டல்ல... ஒன்பது வருடங்கள் தனது தாயைத் தோளில் சுமந்தபடிஇ ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்துஇ ராமேஸ்வரத்தை அடைந்திருக்கிறார் ஒரு வைராக்கிய மகன்.

வயதான_நடக்க முடியாத_பார்வை இழந்த தனது தாயாரின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அம்மாவைத் தோளில் சுமந்தபடி கடந்த 96_ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்த போதுஇ அந்த மகனுக்கு வயது முப்பத்து மூன்று. அவனது தாயாருக்கு வயது எழுபத்தொன்பது. ராமேஸ்வரம் கோயிலை இருவரும் அடைந்தபோது தாயைச் சுமந்த அந்தத் தனயனுக்கு வயது நாற்பத்து மூன்று. நல்ல மகனைப் பெற்ற அந்த மகராசிக்கு வயது எண்பத்தெட்டு.

‘இந்த கம்ப்யூட்டர் கலியுகத்திலும் இப்படியும் ஒரு மகன் இருப்பாரா?!’ என்று வியக்க வைக்கிற உருக்கமான நிஜ ஸ்டோரிதான் இவர்களுடையது.

மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜபல்பூர் பர்கிரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்திதேவி. கணவனை இழந்த இவருக்கு கைலாஷ்கிரி என்ற ஒரே மகன். தீவிர ராமபக்தையான கீர்த்திதேவிக்கு அவரது மகன் மட்டுமே துணை. கூலி வேலை செய்து தன் தாயைக் காப்பாற்றி வந்தார். தூங்கும் சொற்ப நேரத்தைத் தவிரஇ மற்ற எல்லா நேரமும் ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டுஇ தன்னை அக்கறையாய் கவனித்துக் கொள்ளும் தன் மகனுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தார் அந்தத் தாய்.

ஒருநாள் மதியம் அதிர்ச்சியூட்டும் சேதியோடு கீர்த்திதேவியைத் தேடி வந்தார்கள்இ கைலாஷ்கிரியுடன் வேலைபார்க்கும் சகநண்பர்கள்.

‘‘அம்மாஇ வேலை பார்க்கும் போது கைலாஷ் மரத்து மேலிருந்து கீழே விழுந்துட்டான். ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்’’ என்று தயங்கித் தயங்கி அவர்கள் சொன்னபோதுஇ நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது கீர்த்திதேவிக்கு. பதறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்.

அங்கே_

காலிலும்இ கையிலும் எலும்புமுறிவு ஏற்பட்ட நிலையில்இ கவலைக்கிடமாகக் கிடந்தார் கைலாஷ்கிரி. மகன் கிடந்த கோலத்தைப் பார்த்துக் கதறிய கீர்த்தி தேவிக்கு ‘எங்கே தன் மகன் தன்னை விட்டுப் போய்விடுவானோ’ என்ற பயமும் பிடித்து ஆட்ட... அந்த நிமிடமே ராமேஸ்வரம் இருக்கும் திசையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டு பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார் அந்த வயதான தாய்.

‘‘ராமநாதா... நான் வணங்கும் தெய்வமேஇ என் பிள்ளையைக் குணமாக்கி எந்தக் குறையுமில்லாமல் எனக்கு திருப்பிக் குடுத்துடு. அப்படி நீ செய்தால்இ நீ குடியிருக்கிற கோயிலுக்கு உன்னைத் தரிசனம் பண்ணஇ இங்கிருந்து பாதயாத்திரையாவே வருவேன். இது சத்தியம்!’’

அந்தப் பாசமிக்க தாயாரின் வேண்டுதலின் வலிமையோ என்னவோஇ ஆச்சரியப்படத்தக்க வகையில் கைலாஷ்கிரி உடல்நலம் தேறினார். உடல் முழுவதுமாய் தேறி சில வருடங்கள் ஓடிவிட்ட நிலையில்இ கீர்த்தி தேவிக்குப் புதிதாய் பிரச்னை ஏற்பட்டது. அவர் நடக்கும் சக்தியை இழந்தார். போதாக்குறைக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.

பாதயாத்திரை வேண்டுதலை தன் மகனிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார்.

‘‘அம்மாஇ உன்னால் நடக்க முடியலேன்னா என்னம்மா... உனக்காக நான் நடக்கறேம்மா. எனக்காக வேண்டிக்கிட்ட உன்னைத் தோளில் சுமந்து ராமேஸ்வரம் போறேன். எத்தனை வருஷமானாலும் சரிஇ உன்னை ராமேஸ்வரத்துக்கு அழைத்துக் கொண்டு போய் உன் வேண்டுதலை நிறைவேற்றுவேன் அம்மா!’’ என வைராக்கியமான குரலில் தன் தாயாருக்கு உறுதி கொடுத்திருக்கிறார் கைலாஷ்கிரி.

சொன்னதோடு நின்றுவிடாமல் மளமளவென காரியத்திலும் இறங்கிவிட்டார். பெரிய தராசு போன்ற தூளி ஒன்றை தயார் செய்துஇ ஒருபக்கம் தன் தாயாரை உட்கார வைத்துஇ மறுபக்கம் பயணத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வைத்து அதனை சுமந்து கொண்டு நர்மதை ஆற்றங்கரையிலிருந்து தனது நீண்ட பாதயாத்திரைப் பயணத்தைத் தன் தாயாருடன் ஆரம்பித்தார் கைலாஷ்கிரி.

1996_ம் வருடம் ராமநவமியன்று ஆரம்பித்த அவரது பாதயாத்திரைப் பயணம்இ பல தடைகளையும் சோதனைகளையும்இ முழுதாய் ஒன்பது வருடங்களையும் கடந்து உழைப்பாளர் தினமான கடந்த மே 1_ம் தேதியன்று ராமேஸ்வரம் கோயிலில் நிறைவு பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமநாதசுவாமி கோயிலின் வி.ஐ.பி. பக்தர்கள் இந்த இருவரும்தான்.

தாயும்இ மகனும் அன்று அதிகாலையிலேயே எழுந்து விட்டார்கள். அந்த நேரத்திலும் அவர்களை வேடிக்கை பார்க்கவும்இ கீர்த்தி தேவியிடம் ஆசி வாங்கவும் கூட்டம் கூடியது. மாலை நான்கு மணிக்கு கைலாஷ்கிரியும்இ கீர்த்தி தேவியும் கோயிலுக்குப் புறப்பட ஆயத்தமானார்கள். முதல் காரியமாக தன் தாயுடன் அக்னி தீர்த்த கடலுக்குச் சென்றார் கைலாஷ்கிரி.

அங்கே...

தனது தாயை முதலில் தீர்த்தமாடச் செய்து விட்டு... பிறகுஇ தானும் தீர்த்தமாடினார். அந்தக் காரியங்கள் முடிந்ததும் தன் அன்புத் தாயை அரவணைப்பாய் கைகளில் தூக்கியபடி கோயிலை நோக்கி நடந்தார் கைலாஷ்கிரி.

உள்ளேயுள்ள இருபத்தொரு தீர்த்தங்களிலும் இருவரும் நீராடிவிட்டு ராமநாதசுவாமியை ஸ்பெஷலாய் தரிசித்தார்கள் தாயும் மகனும். அப்போது அந்தத் தாயின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம். விழிகளில் ஆனந்தக் கண்ணீர்!

தன் வேண்டுதலை நிறைவேற்றிய தன் ஆசை மகனைக் கட்டியணைத்தபடி கண்ணீர் விட்டார் அந்த மூதாட்டி. பிரார்த்தனையும்இ சுவாமிதரிசனமும் திருப்தியாய் முடிந்த மகிழ்ச்சியில் தன் தாயை சுமந்தபடி அருகிலிருந்த பஞ்சமுக அனுமார் கோயிலில் வந்தமர்ந்தார் கைலாஷ்கிரி.

இந்தி தெரிந்த யாத்ரீகப் பணியாளர் ஒருவரின் உதவியுடன் கைலாஷ்கிரியுடன் பேசினோம்.

‘‘இந்த நாளை என்னோட உயிர் உள்ள வரை மறக்க முடியாது. நானும்இ என் மாதாவும் இன்னிக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம். நான் என் ஊரிலிருந்து பாதயாத்திரை கிளம்பியபோதுஇ என் நண்பர்களும்இ உறவினர்களுமே கேலியும் கிண்டலும் பேசினார்கள். எனது வைராக்கியமும்இ என் மாதாவின் இடைவிடாத பிரார்த்தனையும்இ ராமநாத சுவாமியின் கருணையுமே இந்தப் பாதயாத்திரை வெற்றிகரமாக நிறைவேற உதவியிருக்கிறது. கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை ஒன்பது வருடங்களாக நடந்து நடந்தே கடந்து ராமேஸ்வரம் வந்திருக்கிறேன். சில நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கிவிட்டு ரயிலில் எனது சொந்த ஊருக்குத் திரும்புகிறேன்!’’ என்றார் கைலாஷ்கிரி.

‘‘எம் பிள்ளை குணமாகணும்னு நான் வேண்டிக்கிட்டேன். என் வேண்டுதலை நிறைவேற்றணும்னு எனக்காக என் பிள்ளை என்னைத் தோளில் சுமந்து நடந்து வந்து என் பிரார்த்தனையை நிறைவேற்றிட்டான். நான் அவனை என் வயிற்றில் வெறும் பத்து மாதம் தான் சுமந்தேன். அவனோஇ ஒன்பது வருஷங்களா என்னை தன்னோட தோளில் சுமந்திருக்கான். அவன் என்னைச் சுமந்ததற்கு முன்னால் நான் அவனை சுமந்ததெல்லாம் வெறும் தூசு... இப்படி ஒரு பிள்ளையை எனக்குக் கொடுத்ததற்காக அந்த ராமநாதனுக்கு தினமும் நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்!’’ என்று கண்களில் பெருகும் ஆனந்தக் கண்ணீரோடு தன் மகனைப் பற்றி பெருமிதமாய்ச் சொல்லி முடித்தார்இ அந்த மகராசி!’

நன்றி: குமுதம்


- tamilini - 05-06-2005

அம்மா மாரே.. இப்படி ஒரு பிள்ளை உலகத்தில.. ம்.. எல்லாம் வளர்ப்பு தான். வாழ்க வளமுடன். 9 வருடம் சும்மாவா..?? நாங்கள் எத்தனை இடம் சுத்தி வந்திட்டம் அதுக்குள்ள.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 05-06-2005

குழந்தைகளைப் பாடுபட்டு வளர்த்த பெற்றோரை முதியோர் இல்லத்திலும் ஆதரவு அற்ற நிலைக்கும் தள்ளிவிடும் பிள்ளைகளை என்ன சொல்வது.... :twisted: :twisted: :twisted: :twisted:


- tamilini - 05-06-2005

டோன்ட் வெறி மழலை.. தள்ளிற நிலைக்கு போனவையுடன்.. வாழுறது நல்லதில்லை. அதைவிட முதியோர் இல்லத்தில வாழலாம். . :wink:


- Malalai - 05-06-2005

சரியா சொன்னிங்க அக்கா...பாசத்திற்கு இப்ப மதிப்பு இல்லை ஆனா விலைமதிப்பு தான் இருக்கு....என்ன செய்றது...இப்படி விரட்டுறவை தாங்களும் ஒரு காலத்திலை முதியவர்கள் ஆக மாட்டினம் என்று நினைக்கினம்போல....


- THAVAM - 05-06-2005

வேசத்திற்காக பாசமாக நடிக்கும் உலகிலே இது உண்மையிலேயே மனத்தை தொடுகிற விடயம்தான் பாருங்கோ
____________________________________________________________________
<span style='font-size:25pt;line-height:100%'>'' உணர்வுகள் அழிவதில்லை''</span>
____________________________________________________________________


- Malalai - 05-06-2005

அப்பு உங்களுக்த் தானே விளங்கும் என்ன....அது சரி உங்க பிள்ளைங்க எப்படியப்பு உங்களைப் பார்க்கிறாங்க.... :wink: :wink: :mrgreen:


- Vasampu - 05-06-2005

எனக்கும் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கக் கிடைத்தது. அந்த மகன் எனக்கு இராமாயண பரதனைத்தான் நினைக்க வைத்தார். வாழ்க அவரின் உயரிய பண்பு.


- kavithan - 05-07-2005

மனோதைரியத்தோடை செயற்பட்டிருக்கிறார்.. போற்றப்பட வேண்டும்.. நன்றி மழலை நல்ல ஒரு தகவலை எமக்காக தந்திருக்கிறீர்கள்.


- Thaya Jibbrahn - 05-07-2005

நான் வயசுபோகும் போது என் பாட்டிலேயே முதியோர் இல்லம் போறது தான் பிளான். யாரும் கொண்டு போய் விட தேவையில்லை. ஏனென்டால் அங்க தான் எங்கட வேலையை நாங்க எங்கட பாட்டில செய்யிற உரிமை கிடைக்கும். நான் Mean பண்றது Europe Altersheim a. இதுவரைக்கும் நான் மூச்சு விட்டதுக்கும் அக்கா அத்தான் மாமா மாமி etc etc என்று report குடுத்தது காணும். சாகிற நேரம் எண்டாலும் சுதந்திரமா நாலு விசயத்தை ஏழுதிப்போட்டு சாக வேணும் எண்டது என்ற பொலிசி


- tamilini - 05-07-2005

தயா.. நம்ம கொள்கையும் அப்படித்தான். மற்றவையில தாங்கிற நிலைமை வர நாங்களே.. விலகிடுறது தான் நல்லது இல்லையா.?? :mrgreen: :mrgreen:


- shobana - 05-07-2005

<!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->நான்  வயசுபோகும் போது  என் பாட்டிலேயே முதியோர் இல்லம் போறது தான் பிளான்.  யாரும் கொண்டு போய் விட தேவையில்லை. ஏனென்டால்  அங்க தான்  எங்கட வேலையை  நாங்க  எங்கட பாட்டில செய்யிற  உரிமை கிடைக்கும். சாகிற நேரம் எண்டாலும்  சுதந்திரமா  நாலு விசயத்தை ஏழுதிப்போட்டு சாக வேணும் எண்டது என்ற பொலிசி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றாகச்சொன்னீர்கள் தயா அண்ணா !!!


- kuruvikal - 05-08-2005

அம்மாவை ஒரு இடத்துக்குச் சுமக்க 10 வருசத்தை செலவு செய்ததைக் காட்டினும்...8 வருசங்கள் கடினமா உழைச்சு மிகுதி 1 அல்லது 2 வருடம் அம்மாவுக்கு இந்த உலகையே ஒருக்காச் சுத்திக் காட்டி இருக்கலாம்...அதுதான் அம்மாவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பிள்ளை செய்யும் உபயோகமான பங்களிப்பாக இருக்க முடியும்...!

அம்மா மட்டும் அல்ல உலகம்...ஒவ்வொருவரையும் சூழ உள்ளவர்களும் உறவுகள் தான்...அவர்களுக்கும் ஏதாச்சும் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கைக் காலத்தில்...உபத்திரம் மட்டும் செய்யாதேங்கோ...!

கடைசிக்காலத்தில எங்க போய் முடங்கிறது என்று சிந்திக்கிறியளே தவிர கடைசிக் காலத்தையும் எப்படி உலகத்துக்கும் உங்களுக்கும் ஏற்ப உபயோகம் ஆக்கிறது என்பது பற்றிச் சிந்திப்பதாக இல்லை... வயோதிப மடங்கள் அநாதைகள் இல்லங்கள் என்ற பாகுபாடுகள் வருங்காலத்தில் ஒழிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்... இது மனிதர்களை மனிதர்களோ தரம் தாழ்த்தி வேற்றுமைப்படுத்தி நோக்கும் எண்ணத்தையே வளர்க்கிறது...!

எல்லோரும் எல்லோருக்கும் உறவுகள் என்ற நிலையும் உதவும் நிலை வர வேண்டும்...அதற்காக சுதந்திரம் என்று குதர்க்கம் பேசிக் கொண்டு சமூகக் கட்டமைப்பை.. ஒற்றுமையை குலைத்து சுயநலத்துக்கா தங்கள் வாழ்வை தனிமையில் கழிக்க விரும்புவர்களை சிறையில் போட்டாலும் தப்பில்ல... அவர்கள் தான் மனித சமூக வாழ்வை அதிகம் சீர்குலைக்கிறார்கள்...!

அல்லது....மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற நடைமுறைக்கு முரணானதுகள திருந்தி முரண்பாடுகளைக் களைய உதவ வேண்டும்... வயோதிபர்கள் மடங்களுக்குள் முடங்காமல்...சமூகத்துக்கு தம்மால் இயன்றதைச் செய்ய முண்வர வேண்டும்..வயோதிபம் என்பது ஒரு பருவம்...ஆடி அடங்கும் நிலை என்று மட்டும் எண்ணக் கூடாது...! குழந்தை சிறுவன் இளைஞன் வயோதிபன்... மனிதப் பருவங்கள்..! எங்கையாவது யானை புலி சிங்கம் குருவி என்று வயோதிப மடம் நடத்துதுகளா...வயசு போட்டுது என்றிட்டு முடங்கிக் கிடக்குதுகளா.... இல்ல கடைச்சிக்காலம் பாரமா இருக்கப் போறம் என்று இப்பவே தங்கள் வாழ்க்கையை அழிக்குதுகளா.... இல்லை... மாறாக...மரணம் வரை அதுகள் தங்க காலில நிற்க முனையுதுகள்..ஆனால் மனிதருக்கு மட்டும் அதுகூட முடியல்ல...பகுத்தறிவு இருந்தும் பலனில்லாமல் எத்தனை கோடி மனிதர்கள்...இன்னும் உலகில்..மயக்கப் பேசி உலகத்தையே ஏமாற்றிய படி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 05-08-2005

8 வருடம் உழைச்சு.. உலகை சுற்றிக்காட்p என்ன பயன் தாய் விரும்பிய ஒரு செயலை விரும்பிய விதமாய் செய்து முடிக்காமல் விட்டிட்டு. விமானமே வாங்கி வந்து உலகை சுற்றிக்காட்டினாலும் அந்த தாய் மகிழ்வடைந்திருக்க முடியாது. இது தாய்களுக்கு தான' புரியும்.. :wink:


- MEERA - 05-08-2005

அனுபவமா....?


- tamilini - 05-08-2005

யாரை கேக்கிறீங்க.. மீரா..?? நமக்கு அனுபவம் தான்.. பல தாய் மாரைப்பாத்த அனுபவம். :wink:


- MEERA - 05-08-2005

அதைத் தானே சொன்னனான்.....?


- kuruvikal - 05-08-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->8 வருடம் உழைச்சு.. உலகை சுற்றிக்காட்p என்ன பயன் தாய் விரும்பிய ஒரு செயலை விரும்பிய விதமாய் செய்து முடிக்காமல் விட்டிட்டு. விமானமே வாங்கி வந்து உலகை சுற்றிக்காட்டினாலும் அந்த தாய் மகிழ்வடைந்திருக்க முடியாது. இது தாய்களுக்கு தான' புரியும்..  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அம்மா விரும்பிறத செய்ய வேணும் என்றதை ஏற்றுக்கொண்டாலும்..அவங்க விருப்பத்தின் நியாயத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் நிறைவேற்றும் வழி முறை அமைய வேண்டும்..சில வேளை அம்மா விரும்பியதை விட நீங்கள் அவங்க விருப்பத்தை அவங்களை அதியசக்க வைக்கும் முகமாக நிறை வேற்றினால் பெரு மகிழ்ச்சி அடையமாட்டாங்களா என்ன...??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 05-08-2005

கண்டிப்பா இந்த விடயத்தில் அப்படியில்.. ஒரு பல்லக்கை பிடிச்சு நாலு பேரை வைச்சு.. காவிக்கொண்டு போயிருந்தால் கூட அந்த அம்மாவின் மனம் அத்தனை குளிர்ந்திருக்காது. மகன் கடமையை நிறைவேற்றுறான் என்ற எண்ணம் தான் தோன்றும். இந்த மகன் செய்தது எத்தனை தியாகம். 10 வருடம் சும்மாவா..?? :wink:


- kuruvikal - 05-08-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கண்டிப்பா இந்த விடயத்தில் அப்படியில்.. ஒரு பல்லக்கை பிடிச்சு நாலு பேரை வைச்சு.. காவிக்கொண்டு போயிருந்தால் கூட அந்த அம்மாவின் மனம் அத்தனை குளிர்ந்திருக்காது. மகன் கடமையை நிறைவேற்றுறான் என்ற எண்ணம் தான் தோன்றும். இந்த மகன் செய்தது எத்தனை தியாகம். 10 வருடம் சும்மாவா..??  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நிச்சயமா எங்க அம்மா எங்க பத்து வருசத்தை வீண்டிக்க தனது ஆசை வளர்க்க மாட்டாங்க...! அப்படியும் அம்மாக்கள் இருப்பாங்க தானே...! தன் பிள்ளை தன் ஆசையறிந்து கருமம் ஆற்றட்டும் என்று... அப்ப அவங்களா இந்த அம்மாவா உசத்தி கொள்கை அளவில...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->