| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 667 online users. » 0 Member(s) | 663 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,660
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,763
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| சினிமா அம்மாக்கள் |
|
Posted by: KULAKADDAN - 05-04-2005, 07:32 PM - Forum: சினிமா
- Replies (5)
|
 |
மே 8 அன்று அன்னையர் தினம். அன்று அன்னையரைப் பற்றி ஒரு நல்ல பதிவு எழுதவேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு மாறுதலுக்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்களை எழுதலாமென்று தோன்றியது. எனவே இந்தப் பதிவு. மே 8 வரை காத்திருக்க முடியவில்லை :-)
அம்மாக்கள் கடந்த 70 வருடங்களாக தமிழ்ச் சினிமாவில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்து வருகிறார்கள். தாய்ச் சொல்லையும் அவளுடைய சபதங்களையும் நிறைவேற்றுவதே மகனான ஹீரோவின் ஒரே வேலையாக இருந்து வந்தது. மகன் தன் தாயைக் கொலை செய்தவர்களையோ, அவள் வாழ்க்கையை நாசம் செய்தவர்களையோ தேடிக் கண்டுபிடித்து பழிவாங்குவதே பெரும்பாலான தமிழ்ச் சினிமாவின் கதையோட்டமாக இருந்து வந்தது. சற்று வேறுபட்டு அந்த மகன் தன் அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்குவதாக இருந்தால் கூட அது அவனுடைய விதவைத் தாயின் வேண்டுகொளாகத் தான் இருக்கும். பெருமபாலான எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் அம்மாவை மையமாக கொண்டவை. படத்தின் பெயரிலேயே அம்மா செண்டிமெண்ட் தெரியும்(தாய் சொல்லை தட்டாதே, தாய்க்குப்பின் தாரம்). எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெரும்பாலான ரஜினி படங்களும் அப்படியே இருந்தன(தாய் வீடு, அன்னை ஓர் ஆலையம்). இந்த மாதிரி அம்மா பார்முலாக்கள் திரளாக தாய்க்குலங்களை கைக்குட்டையுடன் தியேட்டருக்கு கவர்ந்திழுத்தன.
அம்மாக்களை தியாகத்தின் சிகரங்களாக பிரதிபலித்த படங்களனைத்தும் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கின்றன. கண்ணாம்பா, பண்டரிபாய், கே.ஆர். விஜயா, மனோரமா இவர்களெல்லாம் அம்மா கதாபாத்திரங்காளுக்காகவே பிறந்தவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவர்களுக்குப் பிறகு சுஜாதா, ஸ்ரீ வித்யா, சுமித்ரா போன்றவர்கள் சற்று இளமையான அம்மா வேடங்களில் நடித்தார்கள். இப்பொழுது அம்பிகா,ராதிகா...இவர்கள் வரிசையில் 'மஜ்னு' என்ற படத்தில் ரத்தி அக்னிஹோத்ரியை அம்மா வேடத்தில் பார்த்தேன். ஜீரணித்துக்கொள்ளவேமுடியவில்லை. அதே போல் பாரதி ராஜாவின் 'ஈர நிலம்' படத்தில் சுஹாசினி அம்மாவாக! கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை.
அம்மாக்களில் ஒரு வித்தியாசமான அம்மாவை எந்த திரைப்படத்திலும் பார்க்கவே முடியாது. எப்பொழுதும் அவர்கள் தியாகத்தின், பாசத்தின்சின்னமாக, நேர்மையாக, கன்னியமாக இருப்பார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதெல்லாம் ஹீரோவின் அம்மாவுக்குத்தான் பொருந்தும். ஒரு படத்தில் பல அம்மாக்கள் இருந்தாலும், ஹீரோவின் அம்மாவுக்குத்தான் மேலே சொன்ன அனைத்து நற்குணங்களும் இருக்கும் பாக்கியம் கிடைக்கும்! இன்னொரு கொடுமை என்னவென்றால், ஹீரோக்களுக்கு ஜோடியாக ஹீரோயின்களாக நடித்த நடிகைகளெல்லாம் சில வருடங்களில் அதே ஹீரோவுக்கு அம்மாவாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடிக்கிறார்கள்! அப்படியொரு மகிமை அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு!
பல இயக்குனர்கள் அம்மா கதாபாத்திரங்களுக்கான நெஞ்சை உருக்கும் காட்சிகளை அமைக்க போட்டிபோடுவார்கள். உதாரணமாக, இயக்குனர் P.வாசு, ஹீரோவின் அம்மாவை வில்லன்களின் கையில் கொடுத்து அவளை பெரும் துன்பத்துக்கு ஆளாக்குவார். 'சின்னத் தம்பி' படத்தில்மனோரமாவை ஒரு தூணில் கட்டிவைத்து ஒரு பைத்தியக்காரனிடம் தாலியைக் கொடுத்து மனோரமாவுக்கு கட்டச்சொல்லுவார்கள். 'செந்தமிழ்ப்'பாட்டு படத்தில், சுஜாதாவின் கூந்தலை வில்லன் வெட்டிவிடுவார். கொஞ்சம் ஹைடெக் இயக்குனரான சங்கர் கூட இந்த அம்மா செண்டிமெண்ட்டை விட்டுவைக்கவில்லை. 'ஜென்டில்மேன்' படத்தில் மனோரமா தன் மகனுக்கு கல்லூரிப் படிப்பிற்காக பணம் கிடைப்பதற்காக, தன்னைத் தானே கெரோசின் ஊற்றி கொளுத்திக்கொள்வார்! இந்த அபத்தமான காட்சிகளெல்லாம் ஹீரோவுக்கு கோபம் வந்து பொங்கி எழுவதற்காக அமைக்கப்பட்டவை! இப்படி பலி ஆடுகள் போலத்தான் பல இயக்குனர்களால் அம்மாக்கள் கையாளப்பட்டிருக்கிறார்கள்.
இயக்குனர் பாலச்சந்தர் பெண்ணியம் என்கிற பெயரில் சில அபத்தங்களை அவருடைய படங்களில் செய்தாலும், சில பாராட்டக்கூடிய வித்தியாசமான கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். அவருடைய படங்களில் வந்த அம்மாக்களில், எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், 'அவர்கள்' படத்தில் ரஜினியின் அம்மா பாத்திரம். தன் மகன் கெட்டவன், ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டான் என்று தெரிந்ததும், அந்த பெண்ணின்(சுஜாதா) வீட்டிற்கே போய் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஆயாவாக வேலைக்குச் சேர்ந்து பாவத்தை கழுவிக்கொள்வது மட்டுமின்றி, சுஜாதாவை மறுமணம் செய்துகொள்ளவும் ஊக்குவிப்பார். எவ்வளவு அற்புதமான பாத்திரப் படைப்பு! அவரது மற்றொரு படமான 'அவள் ஒரு தொடர் கதை' யில் சுஜாதாவின் அலுவலகத் தோழி ஒருத்தியின் தாயாக ஒரு விதவை இருப்பார். அவர் தன் மகள் காதலிக்கும் ஒரு நபருடனேயே உறவு வைத்துக்கொள்வார். பின்பு மகளுக்கு விசயம் தெரிந்தவுடன் தற்கொலை செய்துகொள்வார். இதெல்லாம் கசப்பான உண்மைகளாகவே தாய்குலங்களால் கருதப்படுகிறதென்று நினைக்கிறேன்.
பாரதிராஜாவின் படங்களில் ரவிக்கை போடாமல் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு, கரையேறிய பற்களுடனும், ஓட்டை பெரிதாகி தொங்கும் காதுகளுடனும் பாக்கு இடித்துக்கொண்டு பேச்சுக்கு பேச்சு பழமொழிகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் கிராமத்து 'ஆத்தா' கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறார்கள். (வேதம் புதிது சரிதா, மண்வாசனை காந்திமதி)
மணிரத்ணம் படங்களில் வரும் அம்மாக்கள் ஓரளவு 'casual type' ஆக இருப்பார்கள். 'தளபதி' படத்தில் ரஜினியின் அம்மா ஸ்ரீ வித்யா சிறு வயதில் ஒருவனால் ஏமாற்றப்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தவர். பிறகு ஜெயசங்கரைத் திருமணம் செய்துகொண்டு இன்னொரு மகனுடன் வாழ்கிறார், ஆனால் தனது மூத்த மகனின் நினைவு அவருடைய மனதில் அழியாத வடுவாக இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு ஜெய்சங்கரும் அவருக்கு ஆறுதலாக இருப்பார். 'ரோஜா' படத்தில் மகனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஒரு நகரத்து அம்மா(அவருடைய பெயர் தெரியவில்லை). இந்த கதாபாத்திரங்கள் சற்று நம்புவதற்கு சுலபமாக இருக்கின்றன.
இதெல்லாம் ஒரு 10 வருடங்களுக்கு முன் வந்த படங்கள். சமீகாலத்தில் வரும் படங்களில் அம்மா செண்டிமெண்டுகள் வெகுவாக குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இழுத்திப் போர்த்திய புடவையும், பெரிய குங்குமப் பொட்டுமாக வீட்டில் பூஜை செய்துகொண்டிருக்கும் அம்மாக்களை இப்பொழுது வரும் படங்களில் பார்க்கமுடிவதில்லை. இப்பொழுது ஹீரோக்களின் கவனம் சமூக சீர்திருத்தங்களில் திரும்பியிருப்பதாகத் தோன்றுகிறது - அதாவது, சென்னையிலுள்ள அத்தனை ரெளடிகளையும் தூக்குவது, அரசியல் ஊழல்களைத் தட்டிக்கேட்பது, ஹீரோக்களே தாதாக்களாக இருந்து பொது மக்களுக்கு உதவுவது - இப்படி! எப்படியோ அம்மாக்கள் தப்பித்தார்கள். இது நல்ல முன்னெற்றம் தான்! இனிவரும் திரைப்படங்களில் இயல்பு வாழ்க்கை அம்மாக்கள் - அதாவது வேலைக்குப் போகும் அம்மா, correspondence course ல் படிக்கும் அம்மா - இப்படி வித்தியாசமான கதாபாத்திரங்களைக் காட்டினால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த அன்னையார் தினத்தன்று நாம் நினைத்து சந்தோசப்பட வேண்டிய விசயம், தமிழ் சினிமாக்களில் அம்மா கதாபாத்திரங்கள் நல்ல மாற்றம் அடைந்திருப்பது!
நன்றி சிறகுகள் தாரா
|
|
|
| நல்ல தமிழ் |
|
Posted by: KULAKADDAN - 05-04-2005, 07:22 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (12)
|
 |
எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் -
மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன்
முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்.
வணக்கம்!
இன்று நல்ல தமிழ்ப்பாவனை பற்றி விவாதங்களும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. சிலர் அதைக் கொச்சைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு கிண்டல்களையும் கேலிகளையும் செய்கிறார்கள். பலரைப் பொறுத்தவரை இது நடைமுறைச் சாத்தியமேயற்ற விடயம் என்பது போலப் பேசுகிறார்கள். இதுபற்றி எனது சில அவதானிப்புக்களைச் சொல்லுகிறேன்.
தற்போது நாம் பாவிக்கும் எல்லாச் சொற்களையும் தூயதமிழ்ப்படுத்திப் பாவிப்பது கடினமானதுதான். ஏராளமான பாவனைச் சொற்களுக்கு இன்னும் தமிழ் வடிவம் வரவில்லை. அப்படி வந்தவையும் மக்களிடம் போய்ச்சேரவில்லை. சில சொற்களுக்குத் தமிழ் அறிஞர்களிடமே பிடுங்குப்பாடு. ஆனால், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வடிவத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை. முயன்றால் முடியும் என்பதே என் கணிப்பு. இதற்குக் கடுமையான உழைப்பு வேண்டும். சில தீவிர நடவடிக்கைகள் வேண்டும். (தனிமனித உரிமை, ஜனநாயகம் என்ற கோசங்கள் இங்கே வேலைக்காகாது.)
யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மட்டுமே என் வாழ்க்கை ஓடியதால் அந்த இடங்களின் அவதானிப்புக்களையே என்னால் வெளிப்படுத்த முடியும். வன்னியில் நீங்கள் தமிழில்தான் பெயர்ப்பலகைகள் பார்க்கலாம். வணிக நிலையங்களின் பெயர்கள் கட்டாயம் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வடிவங்களையே பயன்படுத்த வேண்டும். பேக்கரி என்று பெயர்ப்பலகை யாரும் போட முடியாது. அதை வெதுப்பகம் என்ற சொல் மூலமே வெளிப்படுத்த வேண்டும். இதைப்போலவே அங்கே ஜூவலறி, ரெக்ஸ்டைல் என்ற சொற்கள் பயன்படுத்த முடியாது. விளம்பரங்களில் கூட தமிழ்ப்பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ரெஸ்டோரண்ட், கூல் பார் போன்றனவும் பயன்பாட்டிலில்லை. வங்கி என்பது கூட அங்கே தமிழீழ வைப்பகம் என்ற பேரில் புலிகளின் நிதித்துறை வங்கியே செயற்படுகிறது. ஏனைய அரச வங்கிகள் வழமைபோல சிலோன் பாங், பீப்பிள் பாங் என்ற ஆங்கிலப் பெயர்களுடனும், இலங்கை வங்கி, மத்திய வங்கி என்ற தமிழ் பெயர்ப்பலகையுடனும் இயங்குகின்றன.
இப் பெயர்மாற்றம் என்ன சாதித்தது என்று கேட்டால், நிறையச் சாதித்தது என்றே சொல்வேன். இன்று வன்னியிலிருக்கும் ஒரு சிறுபிள்ளைகூட 'ரெக்ஸ்டைலுக்குப் போறன்' என்றோ 'ஜூவலறிக்குப் போறன்' என்றோ 'பாங்குக்குப் போறன்' என்றோ 'ஷொப்புக்குப் போறன்' என்றோ 'ரெஸ்ரோறண்டுக்குப் போறன்' என்றோ கதைப்பதில்லை. இவை யோசித்து வருவதில்லை. மாறாக இயல்பாக அவர்களின் நாவுகளில் தமிழ்ச் சொல்லே வருகின்றன. வானதி அழகுமாடம், அழகுநிலா நகைமாடம், போன்ற சொற்கள் அப்படியே இயல்பாக வந்து விழுகின்றன. வானொலி உட்பட விளம்பரங்களுக்கும் இதே பெயர்கள் பாவிப்பதால் அப்பிடியே அதே பெயர்களில் மக்களிடத்திற் பாவனையிலுள்ளது. தமிழீழ வானொலி விளம்பரங்கள் மிகப்பெரிய அளவில இவற்றுக்குத் துணை புரிகின்றன.
சில சொற்கள் இன்னும் எம்மக்கள் மத்தியில் முற்றாக ஒட்டவில்லை. எடுத்துக்காட்டு பேக்கரி. வெதுப்பகம் எனும் சொல்தான் பெயர்ப்பலகை மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அரைவாசிப்பேருக்கும் மேல் பேக்கரி என்றே அன்றாட வாழ்வில் கதைக்கிறார்கள். ஆனால் சிலர் வெதுப்பகம் என்று கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களது வாயில் அது இயல்பாக வரவில்லையென்றே நினைக்கிறேன். காலப்போக்கில் மாறலாம். அனால் சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் வெதுப்பகம் என்றால் பேக்கரி, வெதுப்பியென்றால் பாண் (Bread) குளிர் களி என்றால் ஐஸ்கிறீம் என்று தெரிந்து வைத்திருக்கிறாரகள். ஆனால் அவர்கள் மறந்தும் bread என்று சொல்வதில்லை.
அங்கே பெயர்ப்பலகை விடயத்திற் சரியான கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் இப்போது சில சமரசங்கள் செய்யப்படுகிறது. சில தென்னிலங்கை நிறுவனங்களின் விளம்பரங்கள் தனி ஆங்கிலத்தில் பெரிதாக பல்லிளிக்கிறது. வந்து போகும் வெளிநாட்டவருக்காக ஆங்கலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. (முந்தி சில கடைப் பெயர்ப்பலகையில் ஆங்கிலத்தை உன்னிப்பாய்ப் பாத்துத்தான் வாசிச்சுப் பிடிக்கலாம். இப்ப எல்லாரும் வாசிக்கக் கூடிய மாதிரி கொஞ்சம் பெரிசா எழுதுகினம். என்ன இருந்தாலும் தமிழ் எழுத்தின்ர அளவவிடக் குறைவா இருக்கும்).
பேச்சு வழக்கில் வராத நிறைய தமிழ்ச்சொற்கள் எழுத்துவழக்கிற் பயன்படுத்துகிறார்கள். சிலவற்றைப் பேச்சு வழக்கிற்குக் கொண்டு வர முடியுமா என்று நான் சந்தேகப்பட்டதுண்டு. ஆனால் அச்சந்தேகமும் ஒரு சந்தர்ப்பத்தில ஆட்டம் கண்டது. நாங்கள் 'தேத்தண்ணி' எண்டுதான் தேநீரைச் சொல்லிறனாங்கள். 'தேத்தண்ணி' மிக இயல்பா எங்கட சனத்திட்ட பாவனையில இருக்கிற சொல். ஆனால் தேநீர் எண்ட சொல் இயல்பா பாவனையில இருக்கிறத அறிஞ்சு உண்மையில திகைப்பு ஒருபக்கம், அதோட நல்ல தமிழின்ர சாத்தியம் பற்றின நம்பிக்கை ஒருபக்கம்.
விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தியைப் பற்றி அறிந்திருப்பீர்களோ தெரியாது. 'இறஞ்சித் அப்பா' என்று முன்பு அறியப்பட்டவர். இப்போது அந்தப் பேர் ஏறத்தாள மறைந்து போய் விட்டது. அவர் ஒரு தமிழ் உணர்வாளர். சிலர் அவரை தமிழ் வெறியாளர் என்றும் சொல்வார்கள். எப்போது பாரத்தாலும் தமிழ் தமிழ் என்று தான் அவரது பேச்சு இருக்குமாம். முனைவர் கு.அரசேந்திரனிடம் அவரைப்பற்றிக் கேட்டால் நிறையச் சொல்லக்கூடும். அவருக்குக் கீழே பணிபுரிபவர்களிடமும் அவர் தமிழ் மீதான பற்றை எதிர்பார்ப்பாராம். அவரைப் போலவே அவரது அடுத்த கட்டப் பொறுப்பாளர்களும் இருப்பார்களாம். மதுரன் என்றொருவர், அ.ந.பொற்கோ என்றொருவர். (அ.ந.பொற்கோ ஒரு நாடக எழுத்தாளர் மற்றும் சிறுகதை கவிதைகள் எழுதி நன்கு அறியப்பட்டவர்). அவர்களது வழங்கல் பணிமனையில் வேலைபார்க்கும் ஒரு குடிமகனோடு எனக்குப் பழக்கமுண்டு.
அவர்களது பணிமனையில் எல்லாரும் தேநீர் என்ற சொல்லைத்தான் பாவிப்பார்கள். அது கடமை நேரத்தில் அப்பிடி பாவிப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த நண்பரின் வீட்டுக்கு ஒருமுறை போனபோது, அவரது மனைவி “குளிரா ஏதும் தரட்டோ? இல்லாட்டி தேனீர் குடிக்கப் போறீரோ?”என்று கேட்டா. எனக்கு ஆச்சரியம். தேனீர் என்ற சொல்லை பொதுமக்களிடம் பேச்சு வழக்கில் நான் எதிர்பாரக்கவில்லை. ஆனால் அவவின்ர புருசன் தேனீர் என்று தான் வழமையாகப் பாவிப்பாராம். அவரிடமே கேட்டேன். “பின்ன என்ன தம்பி? மூண்டு வருசமா வழங்கல் பகுதியில வேல செய்யிறன். பகல் முழுக்க அங்கதான் நிக்கிறன். அந்தக் கத தானே வரும்?” (அத்தோடு, "தண்ணி எண்டா குளிரான நீர் எண்டுதான் அரத்தம். என்னெண்டு அத வெந்நீருக்குச் சொல்லிறது?" எண்டு விளக்கம் வேறு கிடைத்தது.)
அதன்பின் அங்கு வேலை செய்யும் இன்னும் இரண்டு மூன்று பேரின் வீட்டிலும் பரிசோதித்துப் பார்த்தேன். சந்தேகமில்லை. தேனீர் என்றே பாவிக்கிறார்கள். ஆக எதையும் பழக்கத்தில் கொண்டு வரலாம். இதைவிட அவர்களின் நிர்வாக அலுவலகங்களின் தமிழ்ப்பாவனை ஆட்களை அசத்தும். புதிதாய் அங்கு போகிறவர்களுக்கு வித்தியாசமாகவே இருக்கும். படிவம் நிரப்புதல், சிட்டை போடுதல், கோரல் போடல், என்று தான் அனைத்துக் கடமைகளும் நடக்கும்.
இன்று அணிநடையை (March-Past) முழுவதும் தமிழ்க்கட்டளைகள் மூலமே நடத்தலாம் என்று சொன்னால் உங்களுக்குச் சிரிப்பு வரலாம். தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இப்படிச் சொன்னபோது மேதாவிகள் சிலர் சிரிக்கத்தான் செய்தார்கள். ஆனால் இன்று அவர்களே வன்னிக்கு வந்து தமிழ்க்கட்டளைகளுடன் நடக்கும் அணிநடை மரியாதையை ஏற்றுச் செல்கிறார்கள். இன்று வன்னியில் ஆங்கில அணிநடைக் கட்டளை முறைகள் ஏறத்தாள மறந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டன. புலிகளின் படையணிகளும் அவர்களது துணையணிகளும் (காவல்துறை, துணைப்படை) முழுவதும் தமிழ்ப்படுத்தப்பட்ட அணிநடையினையே செய்கின்றனர். தமிழில் கட்டளையிட்டால் கம்பீரம் வராது என்று சிலர் பசப்பினார்கள். இன்று பார்த்துவிட்டுச் சொல்லட்டும் கம்பீரம் எங்கிருந்து வருகிறதென்று. தமிழீழக் காவல்துறையின் அணிவகுப்பை ஆவணப்படுத்திய பி.பி.சி. அதை சிலாகித்துச் சொன்னது. குறிப்பாக அவர்களின் கம்பீரத்தை.
அதுமட்டுமன்று, இயன்றவரை இராணுவக் கட்டளைகளைக்கூட (துப்பாக்கி சுடுதல் நிலையெடுத்தல் போன்ற) தமிழிலேயே கொண்டு வந்துவிட்டார்கள். எல்லைப்படை, துணைப்படை என அவர்களது இராணுவப் பயிற்சிகளுக்கான கட்டளைகள் கூட தமிழிலேயே இருக்கின்றன. ஆக தமிழில் செய்ய முடியாது என்றுவிட்டு ஒதுங்கியிருப்பது முட்டாள்தனம். முதலில் முயற்சிக்க வேண்டும். இன்று தமிழீழக் காவல்துறையை, கனவிற்கூட யாரும் போலீஸ் என்று சொல்வதில்லை. காவல்துறை என்றே சொல்கிறார்கள்; அச்சொல் மூலமே சிந்திக்கிறார்கள். காவல்துறை என்றால் அது தமிழீழக் காவல்துறையையும் பொலீஸ் என்றால் அது சிறிலங்காக் காவல்துறையையும்தான் குறிக்கும். மேலும் பொலிஸ்ரேசன் என்றுகூட கதைப்பதில்லை.
கடைக்குத் தமிழில் பெயர்ப்பலகை வையுங்கோ என்று யாழ்ப்பாணத்திற் சொல்லப்பட்டபோது, ஒருவர் சொன்னாராம்:
“நீங்கள் கப்டன், மேஜர், லெப்ரினட் கேணல் எண்டதுகள முதலில தமிழில கொண்டு வாங்கோ. பிறகு எங்களிட்ட வந்து தமிழில போட் போடச்சொல்லிக் கேளுங்கோ”எண்டு சொன்னாராம்.
“அன்புமணியை வேட்டி கட்டச்சொல், சைக்கிள் உதிரிப்பாகங்களைத் தமிழில சொல்லு பாப்பம்” என்று வினவுவது போல்தான் இருக்கிறது அவரது பதில். இதே இராணுவ நிலைகள் விவகாரத்தை அண்மையில் சக்கரவரத்தியும் நையாண்டி செஞ்சிரிக்காரு ஓப்பாய். (சே!... சக்கரவத்தியப் பற்றிக் கதைக்கேக்க அந்தாளிண்ட பாணியும் சேந்தே வருது)
இராணுவ நிலைகளையும் தமிழிலேயே மாற்றுவது நல்லதென்பதே என் கருத்தும். பண்டிதர் பரந்தாமனோடு ஒருமுறை கதைத்துக்கொண்டிருந்தபோது இதுசம்பந்தமான கதை வந்தபோது சொன்னார், அப்படி மொழிமாற்றப்பட்ட இராணுவ நிலைகள் உருவாக்கப்பட்டு பரிந்துரைத்ததாகவும், ஏறத்தாள ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வரும்வேளையில் யாழ். இடப்பெயர்வோடு அதுவும் நின்றுவிட்டதாகவும் பின் அது நடைமுறைக்கு வரவில்லையென்றும் சொன்னார். ஏன் வரவில்லையென்பது தெரியவில்லை. ஆனால் அதைச் சாட்டாக வைத்து, தமிழில் பேர் மாற்று எனும் கோரிக்கையை தட்டிக்கழிப்பது சுத்த அயோக்கியத் தனம். இன்று ஈழநாதத்தில் 'அழகுநிலா நகைமாடம்' என்றும் 'எழில்நிலா அழகுமாடம்' என்றும் வன்னியிலிருக்கும் கடைகளின் விளம்பரங்கள் வருகின்றன. அதே பக்கத்தில் 'சந்திரா ஜூவலறி' என்றும் 'வேல்ட் பான்சி' (world fancy) என்றும் யாழில் இருந்து விளம்பரங்கள் வருகின்றன.
இப்படி அதிகாரத்தைப் பாவித்து தமிழை நடைமுறைப்படுத்துவது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு என்னிடம் இடமில்லை. தனிமனித உரிமை, ஜனநாயகம் என்று கதைப்பவர்களோடு என்னால் வாதிட முடியாது. ஆனால் அப்படி நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சில சிக்கல்கள் உள்ளன. தவிர்க்கப்பட வேண்டியவைகளாக நான் கருதும் சில நடைமுறைகள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் தருகிறேன்.
[size=18]நன்றி வசந்தன்
|
|
|
| கிராமியம் மழை சார்ந்த பழமொழிகள் |
|
Posted by: Malalai - 05-04-2005, 05:35 PM - Forum: தமிழும் நயமும்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>கிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்</span>
மழைதான் வாழ்வின் ஆதாரம். மனித வாழ்வில், இந்தக் காலத்தில் தண்ணீர், ஆகாரத்தை அடுத்த இடத்தை வகிக்கிறது. மழையின் தேவையை, மழையின் சிறப்பை மக்கள் காலங்காலமாக உணர்ந்துதான் இருக்கின்றனர்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துப் பாடிய பிறகு, வான் சிறப்பைத்தான் பாடினார். கடவுள் வாழ்த்தையும், வான் சிறப்பையும் சேர்த்து அதைத் திருக்குறளுக்கான பாயிரம் என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்.
இளங்கோ அடிகள், தன் சிலப்பதிகார காவியத்தில், கடவுள் வாழ்த்துப் பாடாமல் மாமழை போற்றதும்! மாமழை போற்றுதும் என்று இயற்கையைப் போற்றித்தான் பாடியுள்ளார்.
செவ்வியல் இலக்கியங்கள் இப்படிச் சிறப்புற பதிவு செய்த மழையைப் பற்றிக் கிராமத்து மக்கள் தங்கள் பேச்சு மொழிகளில், பழமொழிகளில், வாழ்வியல் அனுபவத்தில் எப்படி எல்லாம் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் கூற விரும்புகிறேன்.
மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்த கிராமத்து மக்கள், மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள். மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது. முதலில் மனிதன் இயற்கையின் ஒரு கூரான மழையை வணங்கியுள்ளான் என்பதை நாம் எண்ணிப் பார்க்க இடமுள்ளது.
மழையை நம்பி வாழ்கின்ற சம்சாரிகளுக்குத்தான் மழையின் அருமையும் பெருமையும் தெரியும். மழையை மட்டும் நம்பி பயிர் செய்து வாழும் மக்களுக்கு மாதம் மும்மாரி மழை பெய்தால் யோகம்தான்.
சாதாரணத் தாவரங்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பத மழை பெய்தால் போதும் எந்த நீர் நிலைகளில் இருந்தும் நீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. இந்த உண்மையைத் தான் மாதம் மும்மாரி என்ற தொடர் விளக்குகிறது.
அந்தக் காலத்தில் ராஜாக்கள் நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா..? என்றுதான் முதலில் மந்திரிகளிடம் கேட்பார்களாம். மாதம் மும்மாரிப் பொழிகிறது ராஜா என்று பதில் கூறிவிட்டால் ராஜாவுக்கு நிம்மதி வந்து விடுமாம். மழை பெய்து செழித்து வெள்ளாமை விளைச்சல் வந்து விட்டால் போதும் மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள் என்ற உண்மையைத்தான் இச்செய்திகள் பதிவு செய்துள்ளன.
மழையைப் பற்றியே நிறைய பழமொழிகளை மக்கள் கூறுகின்றார்கள். மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்று கேட்கிறது ஒரு பழமொழி. கருக்கொண்ட மேகம் எப்போது எங்கு இறங்கிப் பெய்யும்? என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த கிராமத்து மக்கள், மழை எப்போது, எந்த அளவு பெய்யும் என்பதைக் கணிக்க முற்பட்டுத் தோற்றுப் போனபின் இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்கின்றார்கள். மழையைப் போலவே கருவுற்ற பெண்ணும் எப்போது பிரசவிப்பாள் என்பதைக் கணித்துக் கூற முடியாது என்பதை உணர்ந்த கிராமத்து மக்கள் உண்டாக்கிய பழமொழிதான் மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்பதாகும்.
கோடை காலத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அப்போது கடுமையான மின்னலும் மின்னும். ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.
கோடைகாலத்தில் அந்தி நேரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் அந்தக் காலத்தில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்திருக்கின்றது. அந்தி மழை அழுதாலும் விடாது! என்ற தொடர், கோடை காலத்தின் இரவு நேரத் தொடர் மழையைக் குறிக்கிறது.
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே,
சேற்று நன்கு சேற்றில் ........
ஏற்றடிக்குதே..
கேணி நீர் படுசொறித் தவளை
கூப்பிடுகுதே! என்ற நாட்டுப் புறப்பாடல் மழை வருவதற்கான அறிகுறிகளைப் பற்றிப் பேசுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மேகம் திரண்டு வருவதை எங்கள் பகுதி மக்கள் மேகம் கொம்பில் முறுக்குகிறது என்று கூறுவார்கள். குளிர்ந்த தென்றல் காற்று சுற்றிச் சுற்றி வீசினால் மழை வரும் என்று நாட்டுப்புறத்து மக்கள் கணித்திருக்கிறார்கள்.
எறும்புகள், பள்ளமாக உள்ள இடத்தில் இருந்து தன் உணவுகளைத் தூக்கிக் கொண்டு மேடான இடத்திற்குச் சாரை சாரையாகச் சென்றால், விரைவில் மழை வரும் என்று கூறுகிறார்கள். எறும்புகளுக்கு மழையின் வருகையைப் பற்றிய முன் அறிவிப்புகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
நிலநடுக்கம் ஏற்பட இருப்பதைச் சில பறவைகளும் , நாய் போன்ற விலங்குகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
நண்டு மேடான இடத்திற்கு இடம் பெயர்வது தவளை சத்தம் போடுவது போன்றவை. மழை வரும் என்பதற்கான முன் அறிவிப்பாக கிராமத்து மக்கள் கருதி இருக்கிறார்கள். தவளைகள் போடும் சத்தத்தை கிராமத்து மக்கள் தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா... என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல் வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.
கோடை காலத்தில் ஈசான மூலையில் மின்னல் மின்னினால், விரைவில் நல்ல மழை பெய்யும் என்று கிராமத்துப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஈசானத்துல மழை கால் ஊன்றி இறங்கிப் பெய்ய ஆரம்பித்தால் ஈசானத்தில் இறங்குன மழை இருந்து பெய்யும் என்று கூறுகின்றார்கள்.
கார்த்திகை மாதம் பெய்யும் கனமழை கார்த்...... திருநாளுடன் நின்றுவிடும் என்று கூறுகின்றார்கள். கார்த்திகைத் திருநாள் அன்று கார்த்திகை தீபம் ஏற்றினால், மழை வெறித்துவிடும் என்று கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். விளக்கிட்டபின் மழை கிழக்கிட்டுப் போகும் என்று ஒரு பழமொழி கூறுகின்றார்கள். விளக்கு என்பது கார்த்திகை விளக்கு அதாவது கார்த்திகை தீபம் என்று பொருள் கொள்ளலாம். கிழக்கிட்டு என்றால் மெலிந்து அதாவது குறைந்து போகும் என்று பொருள் கொள்ளலாம். கார்த்திகையின் பின் பகுதியில் மழை வெறித்துப் பொசுங்கலிகத்தூவும். அதைக் கெப்பேரி என்ற வட்டார வழக்குன சொல்லில் எங்கள் பகுதியில் கூறுகிறார்கள். கெப்பேரி முடிந்ததும் மார்கழி மாதம் பனி பெய்ய ஆரம்பித்துவிடும்.
புரட்டாசியில் நாற்றுப் பரவினால் ஐப்பசி, கார்த்திகை மாத மழையால் யார் நன்றாக நீர் பாய்ந்து செழிந்து வளரும். மார்கழி மாதப் பனியில் கதிர் தலை காய்ந்து விளையும். தை மாதம் கதிர் அறுத்துப் பொங்கலிடுவார்கள்.
எவ்வளவு வெயில் என்றாலும் அலைந்து திரிகிற மக்கள் மழையில நனைய மாட்டார்கள். ஆயிரம் வரவைத் தாங்களிடம் ஒரு பாராட்டைத் தாங்க முடியுமா? ஆயிரம் வெயிலைத் தாங்கலாம். தலை ஒரு மழையைத் தாங்குமா..? என்று கேட்கிறார்கள் கிராமத்து மக்கள் பாராட்டைத் தாங்க முடியாது என்று கூறுகிறார்கள். அதற்குச் சான்றாக மழையையும், வெயிலையும் கூறியுள்ளார்கள்.
இன்றைக்கு நாகரிக மனிதனால் ஒரு வசவைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், அவனால் ஆயிரம் புகழைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. இதுதான் கிராமத்தானும், நகரத்தானுக்கும் உள்ள வித்தியாசமாகும்.
மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு முகம் உண்டு என்று கூறும் கிராமத்து மக்களின் ரசனை அனுபவிக்கத் தகுந்ததாகும். மழை கால் ஊன்றி விட்டது என்ற வாக்கியத்தில் மழைக்கு கால் இருப்பதாகக் கூறி இருக்கும் கற்பனையும் ரசனையானதாகும். பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு கண் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மழையை ஒரு உயிருள்ள உருவமாகப் பார்த்துப் போற்றிய கிராமத்து மக்களின் அன்பை என்ன சொல்ல...
ரொம்பக் காலமாக மழையே பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.
தொடர்ந்து தேவைக்கு அதிகமாக மழை பெய்து கொண்டே இருந்தால் தீப்பந்தங்களில் தீப்பற்ற வைத்துக் காட்டி...... மழை நின்று விடும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.
கழனியூரன்
நன்றி: குமுதம்
|
|
|
| மழலையின் குரல்! |
|
Posted by: Malalai - 05-04-2005, 05:28 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (12)
|
 |
நான் எழுதலைங்க..ஆனா என் குரல் இருக்கு
பள்ளி விட்டுத் திரும்பியதும்
முத்தமொன்று தர
என் தக்காளிக்கன்னம் தேடி அலையும்
அக்காவின் அன்புக்குரல்
தீனமாய்க் கேட்கிறதே!
கையில் லாலிபாப்புடன்
வேலை முடிந்த வரும் அப்பா என்னை
பாப்பு என அழைக்கும்
பாசம் குழைத்த குரல்
அலையோசனையையும் மிஞ்சிக் கேட்கிறதே!
தொட்டிலில் தூங்கிடும் தம்பியை
அழாமல் பார்த்திட
என் அம்மா என்னை
கொஞ்சி அழைப்பதும்
தூரமாய் கேட்கிறதே!
என்னுடன் ஓடி விளையாட
பணிமுடியுமுன்னே ஓய்வுபெற்ற
பாசமுள்ள என் தாத்தா
பரமபதம், பாண்டியுடன்
அன்புடனேஎனை அழைப்பதுவும்
லேசாக என் காதில் விழுகிறதே!
காலையில் தோன்றிடும் சூரியனை
பக்திப் பணிவுடன் நான் வணங்க
நித்தம் உனை நோக்கி எனை நிறுத்தும்
என் ஆசைப் பாட்டியின் கணீர்க்குரல்
ஏனோ, சோகமாய் இன்று ஒலிக்கிறதே!
நாளை, என் நாலாம் பிறந்த நாளாம்
அம்மா சொன்னாங்க.
புதுச்சட்டை, பூவுடன், சடை பின்னிக்கட்டி
கோவிலுக்கு சென்று வந்த பின்னர்
கலர், கலராய் பலூன்கள் ஊதிக் கட்ட
விரைந்து நான் வீட்டுக்குப் போக வேணும்!
பாட்டியும், தாத்தாவும் தரும்
ஆசை முத்தம் எனக்கு வேணும்.
முட்டாயும், அம்மா செய்த அதிரசமும்
பக்கத்து வீட்டு கிச்சாவுக்கும்
எதிர்வீட்டு மீனாவுக்கும்
நானே கொண்டு கொடுக்க வேணும்!
நீயும் ஒரு தாய தான் என்று
முன்னர் என் தாய் சொன்ன குரல் நீ கேட்டு
இன்று, என்னையேவாரி இழுத்தணைத்து
உன் சேயாவே ஆக்கிவிட்ட
கடல் அம்மாவே,
கெஞ்சிக் கேட்கிறேன் உன்னிடம்.
யாரோ, உயிர் பறிக்கும் காலனாமே
அவனை, உன் அலைக்கைகளால்
காததூரம் தள்ளி விடு.
என் பெற்றோரும், உற்றாரும்
மகிழும் வண்ணம்
மீண்டும் என் தாயிடமே
என்னைக் கொண்டு சேர்த்து விடு!
_தார்சி எஸ்.பெர்னாண்டே
நன்றி: குமுதம்
|
|
|
| இதையும் கொஞ்சம் பாருங்களேன்... |
|
Posted by: Malalai - 05-04-2005, 05:21 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (12)
|
 |
<b>எப்படிங்க இப்படி?இதையும் கொஞ்சம் பாருங்களேன்...</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>மகா பணக்காரர்கள்</span>
இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் என்கிற பட்டியலை வெளியிட்டிருக்கிறது எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வுக் குழு. அந்த மெகா பணக்காரர்களின் சொத்து விவரம் இதோ: (கட்டுரையைப் படித்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு விடாதீர்கள்!).
1. லஷ்மி என் மிட்டல்
இவர்தான் நம்பர் ஒன் இந்தியப் பணக்காரர். ஐம்பதே வயதான இவரை இரும்பு ராஜா என்று அழைக்கலாம். இவருடைய இஸ்பேட் கம்பெனிஇ மிகப் பெரிய அளவில் இரும்பு உற்பத்தி செய்கிறது. இவருடைய பிசினஸ் சாம்ராஜ்ஜியம் மூன்று கண்டங்களில் பரவியிருக்கிறது. எழுபத்துநான்காயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்.
மிட்டலின் சொத்து மதிப்பு 2இ500 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய்.
2. அசீம் பிரேம்ஜி
சாஃப்ட்வேர் உற்பத்தியில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் அசிம்பிரேம்ஜி இந்தியாவின் இரண்டாவது பணக்காரர். இவரது விப்ரோ நிறுவனம்இ இந்தியாவிலேயே மிக அதிகமாக கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை உற்பத்தி செய்துஇ ஏற்றுமதி செய்கிறது. கம்ப்யூட்டர் துறையில் உலக அளவில் பில்கேட்ஸ் முதல் பணக்காரர் என்றால்இ அசீம் பிரேம்ஜி பதினோராவது பணக்காரர். சாஃப்ட்வேர் தவிரஇ சோப்பு தயாரிக்கிறார்இ சமையல் எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.
பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 930 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 40இ920 கோடி.
3. முகேஷ் ரூ அனில் அம்பானி
திருபாய்அம்பானி கடந்த நாற்பது ஆண்டுகளில் உருவாக்கிய பிசினஸ் சாம்ராஜ்யம்தான் ரிலையன்ஸ் குழுமம். முதலில் ஜவுளி உற்பத்திஇ பிறகு பெட்ரோலியம் என்று அடியெடுத்து வைத்த எல்லாத் துறையிலும் ரிலையன்ஸ§க்கு வெற்றி மேல் வெற்றி தான். இப்போது தகவல் தொடர்பிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டே ஆண்டுகளில் ஒரு கோடி செல்போன்களை விற்றுத் தீர்த்துவிட்டார்கள்.
முகேஷ்இ அனில் அம்பானி சகோதரர்களின் சொத்து மதிப்பு 700 கோடி அமெரிக்க டாலர். அதாவதுஇ இந்திய மதிப்பில் 30இ800 கோடி.
4. ஹிந்துஜா குடும்பம்.
லண்டனில் இருக்கும் ஹிந்துஜா குடும்பம்இ 1944_லேயே பட்டு ஏற்றுமதிஇ இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிட்டது. கனரக வாகனங்களை உற்பத்தி செய்வதிலும் ஹிந்துஜா குடும்பம் மிகப் பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கிறது. லாரிஇ பஸ் போன்ற வாகனங்களைத் தயாரிக்கும் அசோக் லேலண்ட் லிட் ஹிந்துஜா குடும்பத்தின் நிறுவனம்தான். நிதித் துறையிலும் இந்த நிறுவனம் வெற்றி நடை போடுகிறது. ஹிந்துஜா சகோதரர்களுக்கு இந்தியாவில் தான் நான்காவது இடம். சுவிட்சர்லாந்தில் மூன்றாவது இடம்.
இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 370 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 16இ280 கோடி.
5. குமார்மங்கலம் பிர்லா
இளம் தொழிலதிபர்களின் சிம்ம சொப்பனம் என்றால் அது குமார் மங்கலம் பிர்லா தான். தன்னுடைய இருபத்தெட்டாவது வயதிலேயே பிர்லா குழுமத்துக்குத் தலைவராக ஆகிவிட்டார். ஜவுளிஇ இன்சூரன்ஸ்இ இரும்பு உற்பத்திஇ தொலைத் தொடர்புஇ சிமெண்ட் என்று பலவிதமான பிசினஸ்களில் முக்கியமான கம்பெனியாக இருக்கிறது ஆதித்ய பிர்லா நிறுவனம்.
குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு 370 கோடி டாலர் இந்திய மதிப்பில் 16இ280 கோடி ரூபாய்.
_ ஏ.ஆர். குமார்
நன்றி: குமுதம்
|
|
|
| கணவனாக இருப்பவர்களே..கணவனாக போகிறவர்களே.. |
|
Posted by: Malalai - 05-04-2005, 05:11 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (50)
|
 |
<b>கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள் இவை தான்</b>
ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்....? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா....? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸ§ம் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?
இல்லவே இல்லை...! மனைவியின் எதிர்பார்ப்பே வேறு விதமானது. அவள் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்று கணவன் தெரிந்து கொண்டாலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை இன்னும் அன்னியோன்யம் கூடியதாக அமையும்!
இதோ ஆண்களே... உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்....
அன்பாக பிரியமாக இருங்கள்... அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.
மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூட சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.
சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோ, மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.
உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாக தோன்றச் செய்யும்.
எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
மனைவி சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.
மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நிறைய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
மனைவி வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசித்துப் பாராட்டுங்கள்.
மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.
பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொண்டு உதவி செய்யுங்கள். அப்படிச் செய்தால் மனைவிக்கு இன்னும் உங்கள் மீதுள்ள காதலை அதிகப்படுத்தும்.
இரவு விழித்து அழும் குழந்தையைப் பார்ப்பதில் உங்களுக்கு இருக்கும் அதே கஷ்டம் போலத்தான் உங்கள் மனைவிக்கும் இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
மனைவி உடல்நலம் இல்லாமல் இருக்கும் பொழுது அக்கறையுடன் உடன் இருந்து கவனியுங்கள். அவளுடைய சின்னச்சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்து சிறு சிறு உதவிகள் செய்தாலே அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்டுங்கள். தாயளவுக்கு தாரமும் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்தான்!
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.
மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.
ரொம்ப முக்கியமான விஷயம் இது... மனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.
கடைசியாக... கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.
_ கீதா நாகராஜன், சேலம்
நன்றி குமுதம்
|
|
|
| தமிழ் நெற் இணையத்துக்கு எமது வாழ்ததுக்கள |
|
Posted by: Nitharsan - 05-04-2005, 04:04 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (4)
|
 |
<img src='http://www.tamilnet.com/img/tnlogo.gif' border='0' alt='user posted image'>
தமது பிரதான ஆசிரியரின் கொலைக்குபின்னரும் தொடர்ந்து செய்திகளை உலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் நெற் இணையத்துக்கு எமது வாழ்ததுக்களை தெரிவித்து கொள்கின்றோம். அதே நேரம் தெபடர்ந்தும் சிவராம் அவர்கள் இருக்கும் பேர்து எவ்வாறு தமிழ் தமிழ்தேசியத்துக்காய் உழைத்ததோ அதே போல இருக்க வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்
|
|
|
| புகைபிடிப்பதை மறக்க வேண்டுமா? |
|
Posted by: vasisutha - 05-04-2005, 01:17 PM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
[size=13]<b>நீங்கள் புகை பிடிப்பவரா? அப்படியானால் இது உங்களுக்குத்தான்.</b>
புகையிலையில் உள்ள நிகோடின் பல்வேறு விதமான நோய்களுக்கு அச்சாரம் போடுகிறது. குறிப்பாக, புற்றுநோய் Êஏற்பட புகைப்பழக்கம் முக்கியமான காரணம். அதனால் அப்பழக்கத்தைத் தவிர்த்துவிடுவதே நல்லது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர்தான் இப்பழக்கத்திற்கு மனிதர்கள் அடிமையாகின்றார். அதனால், போதிய ஆலோசனைகள் கொடுத்து புகைப்பழக்கத்தை நிறுத்த முடியும் என்பது நிபுணர்களின் நம்பிக்கை. அவ்வாறு அதிலிருந்து அவர்கள் விடுபட்டது _ புகைபிடிக்கும் பழக்கம் குறித்தும் சிலரிடம் கருத்து கேட்டோம்.
<i>ராஜேந்திரன், ஆட்டோ ஓட்டுனர்:</i>
பதினான்கு வயதிருக்கும்போதே நான் புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால் நான் பெரியவன் ஆகிவிட்டதாக நினைத்தேன். தினமும் இரண்டு முதல் மூன்று பாக்கெட்டுகள் வரை சிகரெட் பிடிப்பேன்.
குளிக்கும்போது மட்டும்தான் சிகரெட் பிடிப்பதில்லை. மற்ற சமயங்களில் ஊதித் தள்ளிக் கொண்டிருப்பேன்.
ஒருமுறை எனக்குப் பயங்கர நெஞ்சுவலி. துடித்துப் போய்விட்டேன். வீட்டிலிருந்தவர்களும் பயந்து போய்விட்டனர். உடனே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். டாக்டர் பரிசோதித்துவிட்டு, இனிமேலும் தொடர்ந்து புகைபிடித்தால், உயிருக்கு ஆபத்து என்று சொன்னார். அதன்பின்னர் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன்.
<i>முத்துகிருஷ்ணன், தனியார் வங்கி அதிகாரி:</i>
பதினேழு வயதில் சிகரெட் பிடிக்கத் துவங்கிய நான், இருபத்திரண்டு வயதுவரை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன். எனது அப்பாவுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் உண்டு. ஐம்பது வயதிலேயே அவர் நுரையீரல் புற்று நோயால் இறந்து போனார். அதற்குக் காரணம் சிகரெட் பிடித்தது என்பது எனக்குத் தெரியவந்தது.
இருப்பினும் என்னால் உடனடியாக இப்பழக்கத்தை விட முடியவில்லை. அதனால் டாக்டர் அட்வைஸ் எடுத்துக்கொண்டேன். அவர்தான் நான் சிறுகச் சிறுக பழக்கத்தைவிட ட்ரெயினிங் கொடுத்தார். எப்பொழுதும் கையில் பேப்பர், க்ளிப்கள், பந்து போன்றவற்றை வைத்துக்கொண்டேன். அதன்பிறகு எட்டு ஆண்டுகள்வரை புகைபிடிக்காமல் இருக்கிறேன்.
அதனால் உடல் எடை கூடியிருக்கிறது. சுறுசுறுப்பாக இருக்கிறேன். பணியில் வேகம் கூடுகிறது. நிம்மதியாக இருக்கிறேன். அவ்வப்போது தியானம் செய்வதால் எண்ணத்தை ஒருமுகப்படுத்தவும் முடிகிறது.
<i>அரவிந்தன், விற்பனைப் பிரதிநிதி:</i>
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்தப் பழக்கம் உண்டானது. எப்பொழுதெல்லாம், போர் அடிக்கிறதோ, அப்போதெல்லாம் புகை பிடிப்பேன். சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஆறு பாக்கெட்டுகள் சிகரெட்வரை காலி செய்திருக்கிறேன்.
ஆனால் திருமணப் பேச்சுவார்த்தைத் துவங்கியபொழுது அப்பழக்கத்தை விட்டுவிட எண்ணினேன். எனது புகைப் பழக்கத்தால் சந்ததிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைத்தேன்.
ஆனால் உடனடியாக என்னால் இப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. முதலில் சிகரெட் பழக்கம் உள்ள எனது நண்பர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். யாரேனும் புகைபிடித்துக் கொண்டிருந்தால் அங்கிருந்து அகன்றுவிடுவேன். சூயிங்கம் போன்ற ஏதேனும் ஒரு பொருளை வாயில் போட்டு மென்று தின்னத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து புகைபிடிக்கும் பழக்கம் அறவே இல்லாமல் ஆயிற்று.
புகைப்பழக்கம் இருந்தபோது, அடிக்கடி உடற் சோர்வு ஏற்படும். வேலையில் கவனமின்மை, அடிக்கடி தலைவலி போன்ற உபாதைகள் உண்டாகும். அப்பழக்கத்தை விட்டபிறகு எந்த உடல் உபாதைகளும் வருவதில்லை. எனது வாரிசுகளுக்கும் உடல் ஊனமோ, குறைபாடுகளோ கிடையாது.
<i>முகுந்தன், அலுவலக உதவியாளர்</i>:
நண்பர்கள் சிகரெட் பிடிப்பதைப் பார்த்துத்தான் நானும் பிடிக்க ஆரம்பித்தேன். முதலில் புகை உள்ளே சென்றபோது லேசாக இருமல் வந்தது. நண்பர்கள்தான் தைரியம்(!) கொடுத்து பிடிக்க வைத்தார்கள். எனக்குக் குழந்தை கிடையாது. தத்தெடுத்த எனது மகன் வாழ்க்கையை நினைத்து, இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுவிட்டேன். இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு. தத்தெடுத்து பல வருடங்கள் கழித்து எனக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் ஒரு ப்ரீமெச்சூர் பேபி. அதற்கு எனது புகைப்பழக்கம்தான் காரணம் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
அப்பழக்கத்தை விட்டபிறகு இருமல் வருவதில்லை. குழந்தைகளுக்கு நாமே ரோல் மாடல£க இருக்க வேண்டும். அதனால் புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை விட்டுவிடுவது நல்லது.
<b>புகை பிடிக்கும் பழக்கத்தை மறக்க சில யோசனைகள்:</b>
புத்தாண்டு முதல் அல்லது வரும் பெர்த்டேயிலிருந்து சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்திவிடுவேன் என்று நண்பர்களிடம் சிலர் சவால் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் புத்தாண்டும் வந்து பார்த்டேயும் வந்து போயிருக்கும். சிகரெட் பிடிப்பதை மட்டும் நிறுத்தியிருக்க மாட்டார்கள். இப்படி கெடு வைத்து நிறுத்த முயற்சிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது கடினம்.
புகை பிடிப்பதை நிறுத்தப்போகிறேன் என்று இந்நிமிடத்தில் இருந்து தூக்கிப்போட வேண்டும். மறுநாள் காலை சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற அரிப்பு எழும். அந்த நிமிடங்களை வன்முறையாகத்தான் அடக்கியாள வேண்டும்.
சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற சிந்தனை எழும்போதெல்லாம் முடியாது என்று உங்களுக்கு நீங்களே வேகமாக மறுக்கவேண்டும். மனம் சமாதானமடையும்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த உந்துதல் எழும். இன்று ஒருநாள் மட்டும் பிடிப்போம். நாளையிலிருந்து விட்டுவிடுவோம் என்ற எண்ணம் தலை தூக்கும். உனக்கு சிகரெட் இல்லை. முடியாது, நீ எப்படிக் கெஞ்சினாலும் உனக்கு சிகரெட் கிடையாது. உனக்குத் தரப்படாது என்று உங்கள் மனதோடு நீங்களே போராட வேண்டியதிருக்கும். அந்த நிமிடத்திற்கு நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். உடனே, காலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டிய வேலை என்ன என்று தேடிப்போய்விட வேண்டும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கலாம். மதிய உணவு சாப்பிட்டபின் சிகரெட் பிடித்துப் பழகியதால், அந்த ஓய்வு நேரத்தில் சிகரெட் பிடிக்கலாம் என்ற எண்ணம் எழும்.
கொஞ்சமும் மசிந்து கொடுக்கக் கூடாது. ஓய்வு நேரத்தில் ஏதாவது வேலையைத் தேடி ஓடுங்கள். உறவினரையோ, குடும்பத்தாரையோ, மேலதிகாரிகளையோ மரியாதைக்குரியவர்களையோ சந்திக்கும் வேலையாகக் கூட அதை உருவாக்கிக் கொள்ளுங்கள். மரியாதைக்காக அவர்களைச் சந்திக்கும்போது புகை பிடிக்க வேண்டாம் என்று மனம் சொல்லும். இப்படி ஏதாவது ஒரு வேலைக்குள் நீங்கள் உங்களைச் சிக்க வைத்துக் கொண்டாலே பிற்பகல் எண்ணத்தை நீங்கள் தூக்கி எறிந்து விடலாம்.
அன்றைய இரவுதான் உங்களைப் படுத்தி எடுக்கும். ஒரே ஒரு தம் மட்டும் இழுத்துக்கொள்வோம் என்று மனம் சொல்லும். புகை நாற்றத்தில் ஊறிய வாய் நமநமக்கும். ரத்தத்துடன் கலந்துவிட்ட நிகோடின் உங்களுக்கு எதிராக மனத்தைத் தூண்டிவிடும். எப்படியாவது ஒரே ஒரு சிகரெட் இன்று இரவு மட்டும். நாளையிலிருந்து வேண்டாம் என்றெல்லாம் நீங்களே கூட நினைக்கக்கூடும்.
அடக்குங்கள். உங்களையும் உங்கள் மனதையும். அன்று இரவு கழிந்துவிட்டது. இரண்டாம் நாள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும். முடியாது. வேண்டாம் என்று அடக்கிவிட்டு அன்றைய பிரச்னைகளில் அலுவல்களில் வழக்கத்துக்கு முன்பே இறங்கிவிடுங்கள்.
மூன்றாம் நாள், நான்காம் நாள் என்று ஒரு எட்டு நாளைக்கு அடக்கிப் பாருங்கள். அடங்கியிருங்கள். நீங்கள் எட்டு நாள் வெற்றி பெற்ற மமதையில் இருப்பீர்கள். எட்டு நாள்தான் ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திலிருந்து மாறும் காலக்கெடு. எட்டு நாள் கடந்துவிட்டால் (ஒரு சிகரெட் கூட, ஒரு தம் கூட இழுக்காமல்) உங்களால் சிகரெட் பழக்கத்தை முற்றிலும் நிறுத்தமுடியும். இது உறுதி.
செயின் ஸ்மோக்கர் என்பதால் ரத்தத்தில் உள்ள நிக்கோடின் எப்படியும் சிகரெட் பிடிக்க வைத்துவிடும் என்றெல்லாம் நண்பர்கள் உசுப்பேற்றுவார்கள். அவர்களை அலட்சியப்படுத்துங்கள். எட்டு நாளைக்குப் பிறகு உங்களால் வாழ்நாள் முழுவதும் சிகரெட் பிடிக்காமல் இருக்க இந்த அடக்கியாளும் உத்தி உதவும்.
<b>இவையன்றி கீழே உள்ள சில யோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும்.</b>
*மற்றவர்கள் புகை பிடித்துக்கொண்டு இருந்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். புகை அலர்ஜி என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
* சூயிங்கம், நிகோடின் பேட்ஜ்கள் போன்றவற்றை உபயோகிக்கலாம். மூக்கு வழியாக உள்ளிழுக்கும் ஸ்பிரேயைப் பயன்படுத்தியும் புகைப்பழக்கத்தைத் தவிர்க்கலாம். இவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், பயன்களை முழுமையாக உணரமுடியும்.
* சிகரெட்டிற்குப் பதிலாக, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களைக் குடிக்கலாம். புகை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும்போது இவற்றை அருந்தலாம்.
* குழந்தைகளுடன் விளையாடலாம். கொஞ்ச தூரம் நடக்கலாம். கைகளில் க்ளோவுஸ் மாட்டிக்கொண்டால் சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற உந்துதல் வராது.
* காலையில் யோகா, மாலை வாக்கிங், முற்பகல் மந்திர ஜபம், பிற்பகல் தியானம் என்று ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறையை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டால் நிச்சயம் புகை பிடிப்பதை மறக்க முடியும்.
* எல்லாவற்றையும்விட புகை பிடிப்பதால் ஏற்படும் தொந்தரவு, சந்ததியினருக்கு வரும் பிரச்னைகள் ஆகியவற்றை மனதில் கொண்டு, இந்த தொந்தரவு நமக்கு அவசியம்தானா என்று விலகிவிடுவது உத்தமம். புகை ஒரு விஷம் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டால் விடுதலை நிச்சயம்
|
|
|
| சிக்கன் பிரியாணி |
|
Posted by: tamilini - 05-04-2005, 12:18 PM - Forum: சமையல்
- Replies (49)
|
 |
தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி - 500 கிராம்
சிக்கன் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
நெய் - 75 கிராம்
எண்ணெய் - 100 கிராம்
இஞ்சி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
மிளகுப்பொடி - 10 கிராம்
சீரகப்பொடி - 10 கிராம்
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
கலர் பவுடர் - இரண்டு சிட்டிகை
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
தேங்காய்பால் - ஒரு கப்
பட்டை கிராம்பு - அரைத்தது
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
செய்முறை
முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
வடிக்க போகும் முன் கலர் பவுடர், நெய்யில் வறுத்த முந்திரி இரண்டையும் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய்யும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளை போட்டு வதக்கவும்.
அவை சிவந்ததும், வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
எல்லாப் பொடிகளையும் சேர்த்துக் கிளறவும். பிறகு கறியை போட்டு 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
பிறகு தேங்காய் பால் 250 மில்லி, தண்ணீர் 100 மில்லி விட்டு நன்றாக வேக வைக்கவும்.
இது திக்காக வந்ததும், வடித்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் அடுப்பில் வைத்து மூடி மிதமான தீயில் வேகவிடவும்.
பிறகு நன்கு வெந்தவுடன் எடுத்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
http://www.arusuvai.com/blog/2005/05/blog-post_02.html
|
|
|
|