Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 665 online users.
» 0 Member(s) | 661 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,660
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,763
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  உங்கள் மனுக்களை சமர்ப்பியுங்கள்
Posted by: msuresh - 05-04-2005, 10:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் படுகொலையைக் கண்டித்து உங்கள் மனுக்களை சமர்ப்பியுங்கள்
http://www.PetitionOnline.com/Tharaki/petition.html

Print this item

  ஒரு நாள் வாழ்வு..!
Posted by: vasisutha - 05-04-2005, 01:15 AM - Forum: குறும்படங்கள் - No Replies

நேற்று முன்தினம் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில்
ஒரு குறும்படம் ஒளிபரப்பினார்கள். <i>இளந்தென்றல்</i> என நினைக்கிறேன்.
அத்திரைப்படம் ஏற்கனவே ரிரிஎன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி
அதை நான் பார்த்திருந்தேன்.

தந்தை இல்லாத மூன்று பிள்ளைகளும் தாயும்.. ஒரு வறிய குடும்பம்.
அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை காட்டுவதாக அப்படம் அமைந்திருந்தது.
வழமையான குறும்படங்கள் போல் கண்ணீரும் அழுகையும் இல்லாமல் சுவாரசியமாக அதே வேளை ஒரு உள்ளார்ந்த சோகத்துடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கதையில்.. இரண்டு ஆண் பிள்ளைகளும் முறையே பத்து வயது ஏழு வயது இருக்கும்ஒரு பெண் பிள்ளை 6 வயது மதிக்கலாம்.

அவர்கள் விளாங்காய் ஆய்வதும்.. காணிக்காரன் துரத்துவதும்
சுவாரசியம். தாய்க்கு உடல் நலமில்லாமல் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதும் கையில் காசு இல்லாத நிலையில் அவர்கள்
சமையல் செய்ய தேவையானவற்றை சேகரிப்பது இன்னும் சுவாரசியம்.

குளத்தில் மீன்பிடிக்கும் போது..அருகில் வெகுநேரமாக மீன் பிடித்துக்கொண்டிருந்த
வயோதிபருக்கு மீன்கள் எதுவுமே கிடைக்காத நிலையில் இச் சிறுவர்கள் நிறைய
மீன்கள் பிடிப்பதை பார்த்து எரிச்சலுடன் ஏசுவதும்.. பெரிய கல்லைத் தூக்கிப்
போட்டு தூண்டிலை குழப்புவதும் சிரிப்பு..
அதே சிறுவர்கள் பிடித்த மீன்களில் கொஞ்சத்தை அவருக்கு கொடுக்கும் போது
அம் முதியவருக்கு கண்கள் கலங்குகின்றன.. அருமையான காட்சிப் பதிவு.

நேற்று முன்தினம் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் இக் குறும்படம்
ஒளிபரப்பினார்கள்.. அதில் கூறிய முன்னுரைதான் இக்குறும்படத்தை மீண்டும்
பார்க்க விடாமல் செய்து விட்டது.
அக் குறும்படத்தில் நடித்த இரு குழந்தைகளும் சுனாமி என்ற கொடும் அரக்கனுக்கு
இரையாகி விட்டார்கள்.. அவர்களுக்கு இக் குறும்படம் சமர்ப்பணம் செய்திருந்தனர்.
அந்த குட்டிப் பெடியனும் துறுதுறுப்பான சிறுமியும்
இன்னும் என் கண்முன்னால் நின்று சிரிக்கிறார்கள்.

Print this item

  மித்ரு மை பிரண்ட்
Posted by: stalin - 05-04-2005, 12:36 AM - Forum: சினிமா - Replies (7)

mitr, my friend என்ற திரைப்படம் www.tamilstate.com என்ற வெப்சைற் இல் பார்க்ககிடைத்து இப்பொழுதும் பார்க்கலாம் இந்தப்படம் நடிகை ரேவதியால் டைரக்ட் செய்யப்பட்டது பவதாரினி இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது அமெரிக்காவில் படம் களமாகஇருக்கிறது நடிகை பத்மினியின் பொறாமகள் சோபனா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ஓரு இந்தியபெண் மண முடித்து வந்து புலத்தில் படும் போராட்டங்களை அற்பதமாக படமாக்கியுள்ளார் நல்ல ஒருபடம் பார்த்த நிறைவு--------------------------ஸ்ராலின்

Print this item

  மாமனிதர் சிவராம் அவர்களின் சில கட்டுரைகள்!
Posted by: hari - 05-03-2005, 04:07 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (15)

<b> உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்...</b>
<img src='http://www.tamilnaatham.com/special/taraki20050502/sivaram010505/sivaram010505.jpg' border='0' alt='user posted image'>

பட உதவி: விக்டர்

ஆனையிறவிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்திக்கள செயல்வீரன் சிவராம்

மாமனிதர் சிவராம் தமிழ்நாதத்துடன் நெருக்கமான உறவுகளை பேணியவர். அந்த உயரிய பண்புள்ள துணிச்சலான ஊடகவியலாளனின் ஆக்கங்களை தமிழ்நாதம் தாங்கி வந்தபோதெல்லாம் வாசகர்களாகிய நீங்கள் தரும் கருத்துக்களை நாங்கள் கிரமமாக அவருக்கு அனுப்பிவைத்தோம். அவற்றை மிகவும் ஆவல்கொண்டு வாசிக்கும் மாமனிதர் சிவராம் அவர்கள் அது குறித்த கருத்தாடல்களை எம்முடன் மேற்கொண்டுள்ளார்.

தான் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்கின்ற மமதை இல்லாமல் வாசகர்களின் கருத்துக்களை உள்வாங்கும் அவரது பாங்கு அவர் மீதான மதிப்பை எம்முள் ஒருபடி உயர்த்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உரையாடும் போது தனக்கு ஏற்படும் நெருக்குதல்கள் குறித்து கருத்துப்பகிர்ந்த மாமனிதர் சிவராம் அவர்கள்ää என்னையும் இவர்கள் முடித்துவிடுவார்கள். அப்படி நான் மரணமடைந்தால் பெரிய படமாக போட்டு விடுங்கள் என்று கூறியிருந்தார்.

யதார்த்தம் புரிந்தும் அச்சம் கொள்ளாமல் தமிழ்த் தேசியத்திற்காக உரக்க குரல் கொடுத்த அந்த மாமனிதனுக்கு எவ்வாறு அஞ்சலி செலுத்துவது என்று தெரியாமல் தமிழ்நாதம் திக்கித்திணறுகிறது.

அந்த உயரிய ஊடகவியலாளன் விட்டுச் சென்ற பணியை தொடர்வோம் என்ற திடசங்கற்பத்துடன் அவரது முன்னைய ஆக்கங்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறது.

விரைவில் சந்திக்கும் வரை
தமிழ்நாதம் இணையக் குழுவினர்

முப்படைகளுக்கும் மரபு வழி போர்த்தகைமை உண்டா?(28.03.05)



இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்(24.11.04)

இராணுவச் சமநிலையைப் பேணுவதாயின் அரசியல் மயமாக்கல் தேவை(07.11.04)

ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்(31.10.04)
தினக்குரல் பத்திரிகையில் 26.10.04 அன்று வெளிவந்த ஆசிரியர் தலையங்கமும் அதற்கு டி.சிவராம் (தராக்கி) அளித்த பதிலும்(05.11.04)

சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்(24.10.04)

விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை..? எனக்கேட்கும் சிங்கள தேசம்(11.10.04)

தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்(03.10.04)

உங்கள் செல்லிடத் தொலைபேசியின் குருதிக்கறை(27.09.04)

இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்(12.09.04)

அந்நிய இராணுவ தலையீட்டை விரும்பும் சிங்கள தேசம்(05.09.04)

அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை(30.08.04)

சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம்(17.08.04)

சூடான் - தமிழ் ஈழம்; அமெரிக்கா இரட்டை வேடம் போட இயலாது(08.08.04)

காலத்தின் தேவை அரசியல் வேலை(25.07.04)

நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி(19.07.04)

கருணா ஓடியது எதற்காக?(27.04.04)

கருணாவுக்கு ஒரு கடிதம்(16.03.04)


நன்றி தமிழ் நாதம்.

Print this item

  காதலே இனிச்சாகுமோ..?
Posted by: tamilini - 05-03-2005, 03:22 PM - Forum: கவிதை/பாடல் - Replies (231)

<img src='http://www.yarl.com/forum/files/1.gif' border='0' alt='user posted image'>
<b>சின்னச்சின்ன கோடுகள்
சிக்கலாய் போனது
இடியப்பச்சிக்கலாய்
என்ன தான் செய்வது
சிக்கித்தவித்தது இதயங்களாச்சே
நவ நாகரீக உலகில்
இதுவும் நாகரீகமாம்
காதல்.
கண்ணுக்கு தெரியாதாம்
கற்பனையில் காலம்
ஓட்டிடும் இளம்
உள்ளங்களின்
இம்சைக்கு அழவே இல்லை..
இது தான் காதல் என்று.
உருவமும் இல்லை
இது தான் நியதி என்று
வரையறையும் இல்லை
அறுக்கப்பட்ட வரையறையின்றி
இதுவும் காதல் என்று.
இஸ்டத்திற்கு நடக்கிறது
கட்டியணைத்தலும் முத்தமிடலும்
காதலிற்கு முக்கிய விதிகளாய் ஆச்சு.
இதயத்தை சின்னமாக்கி..
உடல் உறுப்பொன்றை
ஊனமாக்கி
இவர்கள் பண்ணும் கூத்து.
கண் கொண்டு பார்க்க
முடிவதில்லை..
காதல் இன்றி சாதல்
இது வேதவாக்காய்
காதலுக்காய் இங்கு
சாதல்களும் நடக்கிறது..
சினிமாக்காதல் இவர்களிற்கு
தீனி போட
காதலிற்கு ஆயுள் குறைகிறது..??
கண்டபடி காதலிற்கு
வரைவிலக்கணம் வந்தால்..
கலிகாலத்தில்.
காதலே இனிச்சாகுமோ..?
கண்கெட்ட
காதலர் செய்கையால்..??</b>

Print this item

  4 தமிழ் இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை
Posted by: Sriramanan - 05-03-2005, 10:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

தமிழ் இளைஞர் ஒருவரை கோடரியை வெட்டிக் கொன்றமைக்காக நான்கு தமிழ் இளைஞர்களுக்கு பிரித்தானிய நீதி மன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது.

மேலதிக விபரம்:
http://sankathi.com/index.php?option=com_c...d=450&Itemid=41

Print this item

  பனித்துளிக்கு ஆசை
Posted by: mayooran - 05-03-2005, 08:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

பனித்துளிக்கு ஆசை
பகல் முழுவதும் இருக்க
கண்ணீருக்கு ஆசை
கண்களுக்குள் இருக்க
பெற்றோருக்கு ஆசை
பிள்ளைகளுடன் இருக்க
ஆசைகளோ ஏராளம்
நிறைவேற தடைகளோ
பல்லாயிரம்

Print this item

  உறுதியான ! இறுதிக் கட்டுரை.
Posted by: anpagam - 05-03-2005, 02:42 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (1)

<img src='http://www.tamilnaatham.com/special/taraki20050502/sivaram010505/sivaram010505.jpg' border='0' alt='user posted image'>
மாமனிதர் சிவராமின் இறுதிக் கட்டுரை


சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் 'எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முழுவடிவம். இக் கட்டுரையே அவர் எழுதிய இறுதிக் கட்டுரையாகும்.

எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும்
தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்

- தராக்கி டி.சிவராம் -

நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தும். அவர் வந்த வழியே திரும்பிப் போவார். ஊடக ஆரவாரங்கள் அடங்கும். பின்னர் வழமைபோல அதுää இது என்று எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். சொல்ஹெய்ம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டாக்கக்கூடிய வகையில் அறிக்கை விடுகிறார். அல்லது செய்தியாளர்களுக்குக் கருத்துச் சொல்கிறார்.



இன்னும் சில கிழமைகளில் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு வந்துவிடும் என அவர் இம்முறை இங்கு வருவதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டுச் செய்தி நிறுவனத்திற்குச் செவ்வி கொடுத்திருந்தார். அது மட்டுமன்றி புலிகளின் மட்டு-அம்பாறை படைத் தளபதி பானுவைச் சந்தித்த பின்னர் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசும்ää விடுதலைப் புலிகளும் மிக ஆர்வத்துடன் இருப்பதாக அவர் அழுத்திக் கூறினார்.

பொதுக்கட்டமைப்பு கிடைக்கப்போவதில்லை. ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் சிறிலங்காவின் அரசியல் நுனிப்புல் மேய்ந்தவர்களுக்குக்கூட மிகமிக அப்பட்டமாகப் புரிந்திடக்கூடிய உண்மையாகும். இதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டால் தாம் சந்திரிகாவின் அரசிலிருந்து வெளியேறிவிடுவோம் என ஜே.வி.பி மிகத் தெளிவாக அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ்ரினா ரொக்காவிடம் கூறிவிட்டது.

இங்கு நாம் சொல்ஹெய்ம்மைக் கடிந்து கொள்ளமுடியாது. எம்மை இலவு காத்த கிளிகளாக்கும் நோக்குடன்தான் அவர் இங்கு வருகிறார் என்றோää சந்திரிகா அரசு எமது காதில் வழமைபோல் பூச்சுற்றுவதற்கு அவர் மலர் கோத்துக் கொடுக்கிறார் என்றோ நாம் அவரைக் கண்டனம் பண்ண முடியாது. ஏனெனில் அவர் எமது உடன்பாட்டுடனேயே இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளராக அமர்த்தப்பட்டார். ஏதோ ஒரு தீர்வோ அல்லது அதைநோக்கிய முன்னேற்றமோ வருகிறது என்றுதான் அவர் சொல்வார். சொல்ல முடியும். அவருடைய கதையில் எடுபட்டு பேயராகுவதா இல்லையா என்பது எம்மைப் பொறுத்தது.

பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்துமாறு பல வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலிகளின் தடையை நீடித்து வரும் அமெரிக்காகூட இதையே வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பொதுக்கட்டமைப்பு சரிவராவிடின் புலிகளுக்கு நேரடியாகவே உதவி வழங்குவதற்கான ஏற்பாடொன்று உண்டாக்கப்படல் வேண்டுமென சில நாடுகள் கருதத் தலைப்பட்டுள்ளன. இதைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு நேரடியான எந்த வழியும் தற்போது இல்லை. எனவே இக்கட்டமைப்பு உண்டாக வேண்டும் என்பதில் தானும் அக்கறையாக இருக்கிறேன் என சிறிலங்கா அரசு அறிக்கை விடுகிறது. அக்கறையாக இருக்கிறோம் ஆனால் சில விடயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறிக்கொண்டிருந்தால் காலம் எப்படியாவது உருண்டோடி விடும். அந்த ஓட்டத்தில் உதவி வழங்கும் நாடுகளும் புலிகளும் தமிழ் மக்களும் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை வழமைபோல மறந்துவிடுவார்கள் என சிறிலங்கா அரசு கணக்குப் போடுகிறது. சொல்ஹெய்மினுடைய வருகைகளும் கூற்றுக்களும் இந்தக் கணக்கிற்கு மிகவும் வலுச்சேர்க்கின்றன. வடக்குக் கிழக்கின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கென ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ( Sihrn) உங்களுக்கு ஓரளவு ஞாபகம் இருக்கும் அதையும் அதன் பின்வந்த சில ஒழுங்குகளையும் சிறிலங்கா அரசு இப்படித்தான் பம்மாத்திற்று. அப்போதும் சொல்ஹெய்ம் வந்து போனார். இரு தரப்பும் ஏதோவொரு உடன்பாட்டை அண்மித்துக் கொண்டிருப்பதாக அறிக்கை விட்டார். அவருடைய ஒவ்வொரு வருகையையும் விழுந்தடித்துக்கொண்டு எமது ஊடகங்கள் ஆரவாரப்படுத்தின. (இதில் தமிழ்நெற்றும் விதிவிலக்கல்ல) நடந்ததோ ஒன்றுமில்லை. மாறாக தமிழ் பேசும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு அவர்களை ஒற்றையாட்சி அமைப்பிற்குள் வாழப்பழக்குவதற்கு சொல்ஹெய்மின் வருகைகளும்ää அதையொட்டி எழும் எதிர்பார்ப்புக்களும் அரிய வாய்ப்பாக அமைந்தன அமைகின்றன.



ஏலவே கூறியதுபோல இதில் நாம் நேர்வேயையோ அதன் சிறப்பு தூதுவரையோ குற்றஞ்சாட்டவும் முடியாது. குறை கூறவும் முடியாது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். இதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற கேள்வி உடனே தோன்றும். முதலாவது சொல்ஹெய்மின் வருகையைச் சுற்றி உண்டாகும் ஊடக ஆரவாரத்தில் மக்கள் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.

இந்த உண்மைகள் மறைந்துபோவது நுட்பமாகச் செயற்படும் சிங்கள மேலாண்மையாளர்களுக்கு மிக வாய்பாகிவிடுகிறது. ஏன்? பொதுக்கட்டமைப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம். வாழ்விட அழிவுகள்ää இடப்பெயர்வு அகதிகள் என்பவற்றை பற்றியதே இந்தப் பொதுக்கட்டமைப்பாகும். இந்த மூன்றையும் எப்படி எதிர்கொள்வது எப்படி இவற்றிற்குத் தீர்வு காண்பது என்பது பற்றியதாகவே புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆறுசுற்றுப் பேச்சுக்களும் அமைந்திருந்தன. நடந்ததென்ன? ஒன்றுமேயில்லை. வாழ்விட அழிவுகளைச் சரிசெய்வது என்றாலோ இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது என்றாலோ தேவைப்படுவது முதலில் நிலம். பின்னர் பணம். இவையிரண்டுமே சிறிலங்கா அரசின் அசைக்கமுடியாத கட்டுப்பாட்டில் உள்ளன. நிலத்தையும் நிதியையும் இவையிரண்டையும் உரிய முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நிறைவேற்று அதிகாரத்தையும் (executive power) எந்தவொரு கட்டமைப்பிற்கும் பகிர்ந்தளிப்பதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு தடைசெய்கிறது. இதனாலேயே போரில் அழிந்துபோன எமது வாழ்விடங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் எந்தவொரு வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர். இவ்வாறான ஒரு கட்டமைப்பு சிறிலங்கா சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என அப்போது சிங்களச் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமின்றி அப்படியொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அதை சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்க வேண்டுமென சில சிங்கள மேலாண்மையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இவையெல்லாம் ரணில் அரசுக்கு நல்ல சாட்டாகிவிட்டன. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பதும் வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவை பற்றியதே. எனவே அதை ஏற்படுத்துவதில் மேற்கூறிய அடிப்படை முட்டுக்கட்டைகள் உண்டாகுவதை எவ்வகையிலும் தடுக்க முடியாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பது வெறுமனே வெளிநாட்டு உதவிப் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல. அது அடிப்படையில் நிலம் பற்றியதாகும். மக்கள் குடியமரும் இடங்களுக்கு மின்சாரம் நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பது பற்றியதாகும். இவற்றைவிட மேலாக மேற்படி அலுவல்களைச் செய்வதற்கான அதிகாரம் பற்றியதாகும் இந்த சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயமாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு முற்றாகத் தூக்கியெறியப்படாமல் ஒரு வலுவுள்ள சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எப்படி சாத்தியம் என்பது கேள்விக்குறி. இதனாலேயே சிறிலங்கா அரசு சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மிக நுட்பமாகப் பம்மாத்து விடத் தொடங்கிவிட்டது. இந்தப் பேய்க்காட்டலுக்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அறிக்கைகளும் வலுச்சேர்க்கின்றன என்பதுதான் இங்கு மீண்டும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இதில் இருக்கும் ஒரு பேராபத்தைப் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். 1976 இலேயே நாம் தனித் தமிழ் ஈழமே எமது சிக்கலுக்கு ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அன்று எமக்கிருந்த காரணங்களைவிட இன்று 29 ஆண்டுகள் கழித்து மிக வலுவான காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அப்போதிருந்த அரசியல் ஒருமைப்பாடுää வெகுசன எழுச்சி முனைப்பு என்பன இன்று மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிப் போவதை நாம் காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு தீர்வு வரப்போகிறது என ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளும் இதில் ஒன்று என்பதுதான் உண்மை. நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மான உணர்வு மமக்களிடையே கூர்மையடைந்தமையாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது. அந்த அரசியல் எழுச்சியும் முனைப்புமே எமது போராட்டம் தடம்புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமானதொரு கூட்டாகி விடுவோம். எந்த ஒரு அரசும் அரசியல் ஒருமைப்பாடும் அறிவுமுள்ள ஒரு சமூகத்தை ஏமாற்றும்போது அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் முரண்பாடுகள் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இவ்வாறான முரண்பாடுகள் ஒருகட்டத்தை அடையும்போது அவை தமக்கெதிரான போராட்டங்களாக வெடிக்காமல் இருக்க அரசுகள் பலவழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று மாய எதிர்பார்ப்புகளை உண்டாக்குவதாகும்.

கருணா குழுவின் சாட்டில் சிறிலங்கா படைகள் கிழக்கில் கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளுமின்றி வடக்கு-கிழக்கில் எமது மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். போர் அழிவுகள் இன்னமும் மாறாது உள்ளன. யாழ்ப்பாணத்தில் தமது காணிகளையும் வீடுகளையும் ஊர்களையும் சிறிலங்கா படைகளிடம் பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நாதியற்றுக் கிடக்கின்றனர். தமிழ்மொழி புறக்கணிப்பு இன்னமும் தொடர்கிறது. இப்படியே பல இன்னல்களைக் கூறிச் செல்லலாம்.

இவற்றையெல்லாம் விட சுனாமியும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றுவரை எதற்கும் தீர்வில்லை. ஆனால் இவையெல்லாம் எமது மக்களிடையே எந்தவிதமான அரசியல் கோபத்தையும் உண்டாக்கவில்லை. இந்த இன்னல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிராக அவர்கள் அணிதிரளவில்லை. திரட்டப்படுவதிலும் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலோ மன்னாரிலோ வவுனியாவிலோ மட்டக்களப்பிலோ அரசியல் பேரணிகளுக்கு வருகின்ற மக்களின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை. அவர்களிடம் விடுதலை உணர்வு இருக்கின்றது. ஆனால் அது அரசியல் ரீதியாக அணிதிரளும் அளவுக்கு எழுச்சியுள்ளதாக இல்லை.

எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரைப் புலிகள் சந்திக்கிறார்கள். சிரித்துக்கொண்டே கைகுலுக்குகிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போகிறது என்பதுபோல் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள். இப்படியான செய்தி விம்பங்களை பொதுமக்கள் திரும்பத் திரும்பக் காணும்போது அவர்களை அறியாமல் உளவியல் தாக்கம் ஒன்று ஏற்படுவது இயல்பு.

விரைவில் எமக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்ற உளப்பாங்கை இந்த விம்பங்கள் மக்களிடம் உண்டாக்குகின்றன. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் சொல்ஹெய்மின் கூற்றுக்களும் அமைந்துவிடுகின்றன. இவையெல்லாம் நமது மக்களிடையே எழக்கூடிய அரசியல் சு10ட்சுமங்களைத் தணிக்கின்றன. "ஏதோவொரு தீர்வு அண்மித்துவிட்டது. எனவே நாம் எமதுபாட்டில் இருப்போம்" என்ற அரசியல் மலட்டுத்தனம் அவர்களிடையே பரவுகிறது.

புதிய மக்கள் படை (New Peoples Army-NPA ) என்பது எண்பதுகளில் உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அது போராடி வந்தது. கடந்த பல ஆண்டுகளாக npa நோர்வேயின் அனுசரணையோடு பிலிப்பைன்ஸ் அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறது. (அமெரிக்காவின் பின்னணியிலேயே நோர்வே அங்கும் அனுசரணையாளராக அமர்த்தப்பட்டது) NPA ஐ ஒரு பயங்கரவாத இயக்கமாக ஏலவே அமெரிக்கா தடைசெய்திருந்தது. அமைதிப் பேச்சுக்களில் குறிப்பிட்ட காலம் ஈடுபட்டு வந்தால் தன்மீதான தடையை அமெரிக்கா நீக்கும் எனவும்ää தனக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமெனவும் npa எதிர்பார்த்திருந்தது. ஆனால் npய இன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பிலிப்பைன்சின் கிராமப்புற ஏழை மக்களிடம் காணப்பட்ட அரசியல் முனைப்பும் எழுச்சியும் பேச்சுக்கள் நடந்த காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடையலாயின. இன்று npய வலுவிழந்த ஒரு அமைப்பாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.

NPA ஐ புலிகளோடு ஒப்பிட முடியாதென சிலர் கூறலாம். படைபலத்தில் புலிகள் NPA ஐ விட பலநூறு மடங்கு வலுவுள்ளவர்களாக இருப்பது உண்மையாயினும் மக்களின் அரசியல் முனைப்பு வீழ்ச்சியடைவது பற்றிய யதார்த்தத்தை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்.

எமது போராட்ட எழுச்சி மக்களிடையே மழுங்கடிக்கப்படாமல் இருக்கவேண்டுமாயின் நாம் சில வேலைகளை செய்தல் நல்லது. முதலாவது நமது கையில் திட்டவட்டமாக எதுவும் கிடைக்கும்வரை நாம் அதுபற்றிய ஊடக ஆரவாரத்தை சற்றேனும் குறைக்கவேண்டும். பிழையான எதிர்பார்ப்புக்களை மக்களிடம் ஏற்படுத்தும் செய்தி விம்பங்களை கூடியளவு தவிர்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா அரசு எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சொல்ஹெய்ம் வந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் அதை நாம் உரத்துக் கூறவேண்டும்.

நன்றி: சங்கதி & படம் ஈழநாதம்

Print this item

  நோர்வே,ஒஸ்லோ: மாமனிதர் சிவராம் நினைவுகூரல்: உரைகளும்,கவிதை
Posted by: yarlmohan - 05-02-2005, 11:24 PM - Forum: புலம் - Replies (6)

நோர்வே, ஒஸ்லோவில் மாமனிதர் சிவராம் அவர்களின் நினைவு கூரலில் உரைக்கப்பட்ட சில உரைகளும், கவிதைகளும்

திரு உதயகுமாரின் அவர்களின் உரை
http://www.yarl.com/forum/music_page.php?song_id=62
கவிஞரும் எழுத்தாளருமான திரு ஜெயபாலன் அவர்களின் உரை
http://www.yarl.com/forum/music_page.php?song_id=63
நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணியாளர் திரு முரளி அவர்களின் உரை
http://www.yarl.com/forum/music_page.php?song_id=64
கவிஞர் சோதியாவால் வாசிக்கப்பட்ட கவிதை
http://www.yarl.com/forum/music_page.php?song_id=65
தமிழ்முரசம் வானொலிப் பணிப்பாளர் திரு உமைபாலன் அவர்கள் வாசித்த கவிதை
http://www.yarl.com/forum/music_page.php?song_id=67
நோர்வே தமிழ்ச்சங்கம் சார்பில் தர்சினி இளஞ்செழியன் வாசிக்கப்பட்ட அறிக்கை
http://www.yarl.com/forum/music_page.php?song_id=69

Print this item

  ¬ÔÙìÌ ¬Ú
Posted by: தூயா - 05-02-2005, 07:06 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (20)

[size=15][b]¬ÔÙìÌ ¬Ú

ÁÉ¢¾É¢ý ¬Ô¨Ç ÅÇ÷ôÀ¨Å ¸£ú측Ïõ ¬Ú.«¨Å

1.ºó§¾¸õ þøÄ¡¾ ÓØ ¿õÀ¢ì¨¸

2.«ýÀ¡É Á¨ÉÅ¢/கணவன் - [இதில தான் பிரச்சனை என்று உடனே சொல்லுவீர்களே]

3.Á¡¨Ä ¦Å¢ø

4.µÁôÒ¨¸

5.«ÕÅ¢ ¿£÷

6.þÃÅ¢ø À¡ø º¡¾õ - [அதிகம் சாப்பிட்டால் அதுவே பிரச்ச்னை ஆகிவிடும்]

Print this item