Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள் வாழ்வு..!
#1
நேற்று முன்தினம் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில்
ஒரு குறும்படம் ஒளிபரப்பினார்கள். <i>இளந்தென்றல்</i> என நினைக்கிறேன்.
அத்திரைப்படம் ஏற்கனவே ரிரிஎன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி
அதை நான் பார்த்திருந்தேன்.

தந்தை இல்லாத மூன்று பிள்ளைகளும் தாயும்.. ஒரு வறிய குடும்பம்.
அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை காட்டுவதாக அப்படம் அமைந்திருந்தது.
வழமையான குறும்படங்கள் போல் கண்ணீரும் அழுகையும் இல்லாமல் சுவாரசியமாக அதே வேளை ஒரு உள்ளார்ந்த சோகத்துடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கதையில்.. இரண்டு ஆண் பிள்ளைகளும் முறையே பத்து வயது ஏழு வயது இருக்கும்ஒரு பெண் பிள்ளை 6 வயது மதிக்கலாம்.

அவர்கள் விளாங்காய் ஆய்வதும்.. காணிக்காரன் துரத்துவதும்
சுவாரசியம். தாய்க்கு உடல் நலமில்லாமல் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதும் கையில் காசு இல்லாத நிலையில் அவர்கள்
சமையல் செய்ய தேவையானவற்றை சேகரிப்பது இன்னும் சுவாரசியம்.

குளத்தில் மீன்பிடிக்கும் போது..அருகில் வெகுநேரமாக மீன் பிடித்துக்கொண்டிருந்த
வயோதிபருக்கு மீன்கள் எதுவுமே கிடைக்காத நிலையில் இச் சிறுவர்கள் நிறைய
மீன்கள் பிடிப்பதை பார்த்து எரிச்சலுடன் ஏசுவதும்.. பெரிய கல்லைத் தூக்கிப்
போட்டு தூண்டிலை குழப்புவதும் சிரிப்பு..
அதே சிறுவர்கள் பிடித்த மீன்களில் கொஞ்சத்தை அவருக்கு கொடுக்கும் போது
அம் முதியவருக்கு கண்கள் கலங்குகின்றன.. அருமையான காட்சிப் பதிவு.

நேற்று முன்தினம் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் இக் குறும்படம்
ஒளிபரப்பினார்கள்.. அதில் கூறிய முன்னுரைதான் இக்குறும்படத்தை மீண்டும்
பார்க்க விடாமல் செய்து விட்டது.
அக் குறும்படத்தில் நடித்த இரு குழந்தைகளும் சுனாமி என்ற கொடும் அரக்கனுக்கு
இரையாகி விட்டார்கள்.. அவர்களுக்கு இக் குறும்படம் சமர்ப்பணம் செய்திருந்தனர்.
அந்த குட்டிப் பெடியனும் துறுதுறுப்பான சிறுமியும்
இன்னும் என் கண்முன்னால் நின்று சிரிக்கிறார்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)