| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 774 online users. » 0 Member(s) | 772 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,660
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,268
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,764
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் தமிழ் பேசும் உறவுகளும் |
|
Posted by: சிலந்தி - 04-30-2005, 12:42 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (4)
|
 |
புலம்பெயர்தமிழ்ஊடகங்களும்தமிழ்பேசும்உறவுகளும்
தமிழ் மக்களின் புலம்பெயர்வாழ்வியலில் இன்று பல வருடங்களைக்கடந்துவிட்ட நிலையில் பொருளாதார வரவு ஒட்டுமொத்த தமிழினத்தின் வளர்ச்சிநிலையில்என்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என பார்க்வேண்டும் .
அதில் தனிப்பட்ட தொழிலில் வர்த்தகர்களின் வளர்ச்சி நிலை எப்படியு;ள்ளது?
குறிப்பிட்ட தொகை மக்கள் புலம்பெயர்ந்தோம்.பல நாடுகளில் வாழ்கிறோம். வர்த்தகப்போக்கில் எந்த நிலையிலுள்ளோம்.
சரி எமக்கு ஏன் இத்தனை ஊடகங்கள் அதற்கு என்ன தேவை.
ஓரு ஜபிசி வானொலி இப்போதைக்கு போதும்.
ஒரு ரிரிஎன் தொலைக்காட்சி போதும்
இவ்வளவு காலம் தவறுகளை விட்டுவிட்டோம் இனியாவது எமது தேசிய இனச்சிந்தனைப்போக்கில் கவனம் செலுத்த வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு தமிழ் உறவுகளுக்குமுன்டு.
சிந்தித்து சொல்லுங்கள் .
அண்மையில் வெக்ரோன் நிறுத்தப்பட்டமை
-----------------------------------------------------------------------
சன்-கேரிவி.....
இப்படி எத்தனைவரவுகள் .....
என்ன சொல்கிறீர்கள்
உங்கள் கருத்துக்களை ஒட்டு மொத் தமிழினச்சிந்தனையில் முன் வையுங்கள்
எமக்கென்றொறு நாடு வந்த பின் எத்தனை வானொலி தொலைக்காட்சி வரட்டும் அதற்கு முன்....
|
|
|
| சாத்தானின் வேதம் |
|
Posted by: வியாசன் - 04-29-2005, 03:44 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (4)
|
 |
சிவராமின் படுகொலைக்கு சிறீலங்கா அரசு கண்டனம்!
சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யுத்த நிறுத்தத்தின் பின்னர் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் அரசியல் படுகொலைகளின் ஒரு அங்கமாக இது கருதப்படுவதாக சிறீலங்கா ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ரி.ஜெயரட்ணம் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டார். அதற்கு முன்னர் கிழக்கில் மாவட்டச் செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சுpவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் பூரண விசாரணைகளுக்கு உத்தரவிடுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி புதினம்
|
|
|
| கருவும் ஒரு நாள் விழா எடுக்கும்...! |
|
Posted by: kuruvikal - 04-29-2005, 11:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
[b]சிங்கள தேசமே
இனவெறி பிடித்த நரகமே
புத்தன் பயங்கரவாதமே
தமிழன் குருதியென்ன
உனக்குக் கோடைகாலப் பானமா..??!
கொள்கையில்லாப் புல்லர்களே
உங்கள் கூலி என்ன
புள்ளட்டுக்கு ஒரு
அப்பாவி எலும்பா..??!
சனநாயகம் உச்சரிக்கும் ஓநாய்களே
அப்பாவிப் பத்திரிகையாளன்
நடேசன் குருதி குடித்தும்
உங்கள் வெறி அடங்கலையா...??!
சிந்தனையாளன் சிவராம்
சிங்கள தேசத்தில் சிந்தித்தது தவறா...??!
பேனாவை மிரட்டத் துப்பாக்கி
இதுதான் சிங்கள தேசத்தின்
அமெரிக்க சனநாயகமோ...???!
புல்லர்களே
கொடிய சிங்களப் பயங்கரவாதிகளே
அவர்கள் வால் பிடிக்கும்
தமிழினத் துரோகிகளே
கேளுங்கள் சேதி
இருக்கான் எங்கள் தமிழ் தலைவன்
பொங்கும் புலியாய்
அமைதிக்காய் தன்னை அர்ப்பணித்து
இல்லை இன்னேரம்
உருளும் உங்கள் தலைகள்...!
பாதகர்களே....
உங்கள் விதி முடிக்க
வருவான் ஒரு வீரன்
உண்மை ஜனநாயகத்தின்
தாய் மகனாய்....!
சந்திரிக்கா நீ
நரமாமிசம் தின்னும் ராட்சசி
புல்லர்கள் இருக்கார்
உனக்கு தீனி தேட
தெரிந்தும்...
பேனா கொண்டு முழங்கியவனை
துப்பாக்கி கொண்டா அடக்கினாய்
அன்றொரு குமார் பொன்னம்பலம்
நேற்றொரு நடேசன்
இன்றொரு சிவராம்
நாளை...????!
பாதகியே
சனநாயக உச்சரிப்பில்
உலகமே மயங்கிக் கிடக்க
ஜனநாயகப் புருஷர்களைக் கொன்று
மனிதக் குருதியாய் ருசிக்கிறாய்....
ருசி ருசி
காலம் உன்னைப் பதம் பார்க்கும்
கண்ணுக்கில்லை
உன் காலத்துக்கும் முடிவு வரும்
அன்று
சிங்கள தேசத்தில்
சனநாயகம் உயிர்த்ததாய்
ஒரு துளி
நம்பிக்கை பிறக்கும்...!
கருவும் தாய் வயிற்றில்
உன் சங்காரத்துக்காய்
விழா எடுக்கும்...!
|
|
|
| சில குறிப்புக்கள் |
|
Posted by: sathiri - 04-29-2005, 02:56 AM - Forum: சமையல்
- Replies (5)
|
 |
என்னை மாதிரி தனி கட்டையளுக்கு சில குறிப்புக்கள் நீண்டநாட்கள் நீங்கள் செய்த மீன் குழம்பை வைத்து சாப்பிட வேண்டுமா? முதலில் குழம்பை புறம்பாக வழமைபோல் வையுங்கள் பின்னர் மீனை புறம்பாக பொரித்து அரைவாசி பொரிந்த நிலையில் எடுத்து குழம்பையும் மீன் பொரியலையும் வேறு வேறு பிளாஸ்ரிக் பெட்டியில் போட்டு உங்கள் குளிர்சாதன பெட்டியில் வையுங்கள் சுமார் பத்துநாட்கள் வரை கெடாமல் இருக்கம்.உங்களிற்கு தேவையான போது கொஞ்சம் குழம்பையும் வேண்டிய மீன் துண்டையும் எடுத்து குழம்பில் போட்டு சூடாக்கி சாப்பிடலாம்.
சோற்றை நீண்ட நாட்கள்வைத்து பாவிக்க வேண்டுமானால் சோற்றை அவித்ததும் அதை நன்றாக கஞ்சி போகும்வரை ஒன்றேடு ஒன்று ஒட்டாதபடி தண்ணீரில் கழுவியபின் நன்றாக தண்ணீர் வடிய விட்டு பிளாஸ்ரிக் பெட்டியில் போட்டு ழூடி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
குளிர் சாதன பெட்டியில் என்ன உணவுபொருளை வைத்தாலும் அதனை பிளாஸ்ரிக் பொட்டியிலேயே வைக்கவும்
|
|
|
| புதியதோர் உலகம் செய்வோம் |
|
Posted by: இளைஞன் - 04-29-2005, 01:55 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<img src='http://kurumpoo.yarl.net/images/bharathithasan2.gif' border='0' alt='user posted image'>
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவர் 29.04.1891 புதுவையில் பிறந்தார். அப்பா: கனகசபை முதலியார் (புதுச்சேரியில் பெரும் வணிகர்), அம்மா: இலக்குமி அம்மாள், மனைவி: பழனி அம்மாள் (1920 இல் திருமணம்)
மற்றும்படி பாரதிதாசன் பற்றி நீண்டு விரித்து எழுத நான் விரும்பவில்லை. காரணம், புரட்சிக் கவிஞரின் கவிதைகள் புரட்சிக் கவிஞர் யார் என்பதைச் சொல்லும். அவர் கவிதைகள் பேசும் - இரத்தத்தைச் சூடாக்கும் - நரம்பினில் மின்சாரம் செலுத்தும் - கண்கள் விரியச் செய்யும் - நெஞ்சு நிமிர்த்தச் சொல்லும் - உலகமே உனதென்று உறுதிசொல்லும்!
இதோ அவரின் கவிதை ஒன்று:
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். (புதிய)
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயீரென்று காப்போம். (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
"இது எனதெ"ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய)
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
"ஒருபொருள்தனி" எனும் மனிதரைச் சிரிப்போம்.(புதிய)
இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம். (புதிய)
|
|
|
| ஆனையிறவுத்தள வெற்றி மூலம்... |
|
Posted by: selvanNL - 04-28-2005, 11:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>ஆனையிறவில் புலிகளின் வெற்றி வரலாற்றுத்திருப்புமுனை</span>
2000ஆம் 2001ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவம் தனது காயங்களைக் கழுவிக் கொண்டிருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆனையிறவுப் பெரும் படைத் தளத்தைக் கைப்பற்றியதும் பாதுகாத்ததுமான பெரும் சமர்களில் வெற்றிபெற்று தாம் ஓர் அசைக்க முடியாததொரு சக்தி என்பதை உலகிற்கு வெளிக்காட்டியதோடு இவ்வெற்றிகள் குறித்து தமிழ் மக்களுடன்கொண்டாடிக் கொண்டிருந்தது.
இன்றும் இவ்வெற்றிகளின் ஐந்தாம் ஆண்டு நான்காம் ஆண்டு நிறைவினை விடுதலைப்புலிகள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இவ் வெற்றியானது ஐந்து ஆண்டுகள் என்ன ஐந்நூறு ஆண்டுகள் வரையிலும் தமிழ் மக்களினால் கொண்டாடப்படுவதற்கு ஏற்ற மகத்தான வெற்றி என்பதில் எவருமே சந்தேகமோ ஐயமோ கொள்ளத் தேவையில்லை.
ஆனையிறவுப் படைத்தளத்தின் வீழ்ச்சியானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனை என்பது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. உலகின் இராணுவ விற்பன்னர்கள் விமசர்கள் பலரும் பல கேள்விகளுடன் இச்சமரை அவதானித்து நிற்கையில் விடுதலைப்புலிகள் ஆனையிறவுப்படைத் தளத்தை தமது தொடர்தாக்குதல் மூலம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
ஓயாத அலைகள் - ஐ நடவடிக்கை வன்னிப் பெருநிலப்பரப்பில் பெரும் இராணுவ வெற்றிகளை ஈட்டியவேளை புலிகளின் அடுத்த இலக்கு ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தின் மீதான தாக்குதல்கள்தான் என்பது உணரப்பட்டதாகவே இருந்தது. இதற்கேற்ப சிறிலங்காப்படைத்தளமும் மிகப் பலம்மிக்கதானதொன்றாக புலிகளின் எத்தகைய சவால்களையும் சந்திக்கும் வகையில் சிறிலங்காப் படைத்தரப்பினால் பலப்படுத் தப்பட்டதாக இருந்தது.
ஆனையிறவுப் படைத்தளத்தைப் பாதுகாப்பதற்காக இரண்டு டிவிசன் படையணிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இப்படையணிகளில் நன்கு தேர்ச்சிபெற்ற கொமாண்டோப் படைப் பிரிவுகள் உட்பட அதிநவீன ஆயுத தளபாடங்களும் குவிக்கப்பட்டிருந்தன.
களப் பகுதியில் 155 மில். மீற்றர் 122 மி. மீற்றர் ஆட்லறிகள் டாங்கிகள் மற்றும் மோட்டார்கள் கனரக பீரங்கிகள் என்பன நிலைநிறுத்தப்பட்டிருந்தன. இவற்றிற்கும் மேலாக யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருந்த ஆயுதப்படைப் பிரிவுகள் ஆனையிறவுப் படைத்தளத்திற்கு தரையாலும் கடலாலும் வானாலும் பாதுகாப்பு வழங்குவதற்குத் தயாராக இருந்தன. இவையாவற்றுடனும் வெளிநாட்டு இராணுவ ஆய்வாளர்களின் ஆலோசனையும் பெறப்பட்டிருந்தது.
ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலை விடுதலைப்புலிகள் ஆரம்பிக்கத் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியானபோது கொழும்பிலுள்ள பிரபல இராணுவ ஆய்வாளர்; ஒருவரிடம் சக்தி வாய்ந்த வெளிநாடு ஒன்றின் ஆலோசகர்களில் ஒருவர் தெரிவித்தாராம் ஆனையிறவைப் புலிகளால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது. வன்னியைப் போலல்லாது ஆனையிறவில் இராணுவம் சிறப்பாகப் போரிடும் எனத் தெரிவித்தாராம்.
ஆனால் சகலருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் வியூகம் இருந்தது. சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பு எவ்வளவு முனைந்தும் ஆனையிறவுப் படைத் தளத்தைக் காப்பாற்ற முடியாது போய்விட்டது. சிறிலங்கா இராணுவம் ஆனையிறவுப் படைத்தளத்தில் இருந்து தனது இறந்த சகாக்களையும் பெருந்தொகையான இராணுவத் தளபாடங்களையும் கைவிட்டுவிட்டு தப்பியோட வேண்டியிருந்தது.
ஆனையிறவில் கொல்லப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்களையும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க மறுத்தது. அவ்வாறு பொறுப்பேற்பது அவமானகரமானதென அது கருதியது. வழமை போலவே சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பு ஆனையிறவில் இருந்து இராணுவம் தந்திரோபாய ரீதியில் பின்வாங்கியுள்ளது எனத் தெரிவித்தபோது முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளே இதனைக் கேலி செய்தனர். ஏனெனில் சிறிலங்கா இராணுவம் சந்தித்த இத்தோல்வியானது இலங்கையின் இராணுவ அரசியல் ரீதியில் பெரும் பாதிப்பை விளைவிப்பதாகியது குறிப்பாக
1 கேந்திர முக்கியத்துவம் மிக்க ஆனையிறவு இழக்கப்பட்டமை.
2 இராணுவச்சமநிலையில் ஏற்பட்ட பாதிப்பு.
3 அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு.
ஆனையிறவுப் பிரதேசத்தில் முக்கியத்துவம் பற்றிக் கூறுவதானால் அது யாழ். குடாநாட்டின் நுழைவாயில் ஆகும். இவ்வாயில் யார் கையில் இருக்கின்றதோ அவர்கள் யாழ். குடாநாட்டை இராணுவ ரீதியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பெரும் வாய்ப்பாக இருக்கும்.
சிறிலங்கா இராணுவம் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைகளை யாழ். குடா நாட்டில் மேற்கொண்டபோது ஆனையிறவுப் படைத்தளம் சிறிலங்கா இராணுவத்திடம் இருந்தமை காரணமாகவே புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பிற்குத் தந்திரோபாய ரீதியிலான பின்வாங்கலை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. அன்று ஆனையிறவு புலிகளின் கையில் இருந்திருக்குமானால் தென்மாரட்சியையும் வடமராட்சியையும் சிறிலங்கா இராணுவம் இலகுவில் கைப்பற்றியிருக்க முடியாது. வேட்டுக்கள் தீர்க்கப்படாமல் வடமராட்சியைக் கைப்பற்றிவிட்டதாக அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பெருமைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.
அடுத்ததாக சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இராணுவச் சமநிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விடுதலைப்புலிகளுடன் எப்பொழுதும் இராணுவ மேலாதிக்க நிலையில் இருந்துகொண்டு பேசவே சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் விரும்பியது. இதனை அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்தரத்வத்தää வெளிவிவகார அமைச்சர் லகஸ்மன் கதிர்காமர் போன்றோர் வெளிப்படுத்தவும் தவறவில்லை. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த பின்னரே பேச்சுவார்த்தை புலிகளுடன் கைகுலுக்கல் எனப் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் போன்றவர்கள் கூறினர். செயற்பட்டனர்.
ஆனால் ஆனையிறவில் ஏற்பட்ட தோல்வியானது சிறிலங்கா ஆட்சியாளர்களின் இராணுவ மேலான்மையென்ற சிந்தனையினாலேயே இல்லாது ஒழிந்தது. ஓயாத அலைகள் ஜயசிக்குறு ரணகோச நடவடிக்கைகளை முறியடித்த போது ஓரளவு இராணுவச் சமநிலை காணப்பட்டதெனக் கொண்டாலும் ஆனையிறவு படைத்தளத்தின் வீழ்ச்சியுடன் இராணுவ சமநிலை என்பது விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகியது. சிறிலங்காப் படைத்தரப்பு இராணுவ ரீதியிலான மேலான்மையைப் பேசுவதென்பது கேலிக்குரியதொன்றாகியது.
மூன்றாவதாக அரசியல் சூழ்நிலையிலும் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சனாதிபதி சந்திரிகாவின் 'சமாதானத்திற்கான யுத்தம்" என்ற சித்தாந்தத்திற்கு ஆனையிறவில் பெரும் அடிவிழுந்தது. இராணுவ ரீதியில் விடுதலைப்புலிகளை ஒடுக்குதல் ஓரம் கட்டுதல் என்பது சாத்தியமாகாத நிலையில் சர்வதேச ஏற்பாட்டாளர்களின் துணையுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்தும் சிறிலங்கா அரசியல் தலைமை சிந்திக்கத் தொடங்கியது.
இந்த வகையில் ஆனையிறவுப் படைத்தளத்தின் வீழ்ச்சியானது இராணுவ அரசியல் ரீதியில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தியதோடு சிறிலங்கா படைத்தரப்பிற்கு சில அடிப்படைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதாகவும் இருந்தது. இதில் முக்கியமானது யாழ். குடாநாட்டின் ஏனைய பகுதிகள் மீதும் விடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்தலாம் என எழுந்த அச்சமே ஆகும்.
இந்நிலையில் ஆனையிறவைத்தவிர ஓயாத அலைகள் மூலம் விடுதலைப் புலிகள் நிலை கொண்ட பகுதிகள் மீது முதல் கட்ட நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டது. இதன் பிரகாரம் வலிகாமத்தில் கொழும்புத்துறை பகுதியிலும் தென்மராட்சியில் சாவகச்சேரி கைதடி நாவற்குழி பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளில் இராணுவம் பெற்ற வெற்றியானது சிறிலங்கா இராணுவத்திற்கு புதியதென்பை ஊட்டியது.
அது மட்டுமன்றிää ஆனையிறவு படைத்தளத்தை புலிகள் கைப்பற்றியதுடன் சர்வதேச நாடுகளிடம் சிறிலங்கா அரசு பகிரங்க இராணுவ உதவி கோரியதினால் பல அனுகூலங்களையும் ஈட்டியது. குறிப்பாக பாகிஸ்தான் செக்குடியரசு என்பனவற்றில் இருந்து பல நவீன பீரங்கிகளும் ஆயுத தளபாடங்களும் கிடைக்கப்பெற்றன. குறிபபாக பலகுழல் எறிகணை செலுத்தி - (மல்டிபெரல்) போன்ற ஆயுத தளபாடங்கள் சிறிலங்கர் ஆயுதப்படைக்குக்கிடைக்கப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஆனையிறவுப் படைத்தள வெற்றியின்பின் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பு அதற்கான முன்முயற்சிகள் எவையும் சிறிலங்கா அரச தரப்பினரால் கருத்திற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக நோhவேத் தரப்பின் சமாதான முயற்சிகளுக்கு விடுதலைப்புலிகள் வழங்கிய ஒத்துழைப்பு ஒருதலைப்பட் சமான யுத்த நிறுத்த அறிவிப்புகள் என்பன அரசாங்கத் தரப்பால் புறம்தள்ளப்பட்டன.
மாறாக விடுதலைப்புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த காலத்தை சிறிலங்காப் படைத்தரப்பு தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் யாழ். குடா நாட்டில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீளக் கைப்பற்றிக் கொள்வதற்குமான கால அவகாசமாகவே பயன்படுத்திக் கொண்டது. அத்தோடு இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற ஆயுத தளபாடங்களும் சில வெற்றிகளும் ஆனையிறவுப் பிரதேசத்தை மீளவும் கைப்பற்றுவதற்கான தூண்டுதலைச் சிறிலங்கா படைத் தரப்பிற்குக் கொடுத்தது. இதன் நிமித்தம் பெருமளவு பயிற்சி நடவடிக்கைகளிலும் தயாரிப்பிலும் சிறிலங்கா இராணுவத் தரப்பு இறங்கியது.
இந்நிலையில் 2001 ஏப்ரலில் 25ஆம் திகதி அதிகாலை விடுதலைப்புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் முடிவிற்கு வந்து நான்கு மணித்தியால இடைவெளியில் தீச்சுவாலை என்னும் பெயரில் பாரிய படை நடவடிக்கை ஒன்றைச் சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்தது.
நன்கு தயார் செய்யப்பட்ட நிலையில் மூன்று டிவிசன்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான துருப்புக்கள் டாங்கிகள் கவச வாகனங்கள் என்பனவற்றின் துணையுடன் ஆட்லறிகள் பலகுழல் எறிகணைச் செலுத்திகளின் ஆதரவுச் சூட்டுடனும் விமானப் படையின் குண்டு வீச்சு உதவி என்பனவற்றுடன் இப்பாரிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை ஊடறுத்து ஊடுருவிப் புலிகளின் முன்னணிப் படையணிகளை முற்று கைக்குள்ளாக்கித்தாக்கி அழிப்பதோடு ஆனையிறவு வரை முன்னேறி மீண்டும் ஆனையிறவை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே இப்படை நடவடிக்கையின் இறுதி இலக்காகும்.
சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பின் முப்படைத் தளபதிகளும் பலாலிப் படைத்தளத்தில் இருந்து இத்தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்தினர். பெரும் எடுப்பிலான இப்படை நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் நடத்திய உக்கிரச்சமரானது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரும் முறியடிப்புச் சமர்களில் ஒன்றாகும். இரவு- பகலின்றி நான்கு நாட்கள் நடைபெற்ற இவ் உக்கிரச்சமரில் சிறிலங்கா இராணுவம் பாரிய அளவிலான இழப்பைச் சந்தித்தது. இப்படை நடவடிக்கையின் வெற்றிச் செய்தியை எழுதுவதற்காகப் பலாலிப்படைத் தளத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு இறந்த மற்றும் காயமடைந்த படையணியினரின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதே சிரமமாகியது. இது குறித்துப் பின்னர் அவர்கள் பிரஸ்தாபிக்கவும் தவறவில்லை.
இந்த வகையில் விடுதலைப்புலிகள் ஆனையிறவுப் பிரதேசத்தை மீட்டெடுப்பதற்கு மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளையும் அப்பிரதேசத்தை பாதுகாக்க மேற்கொண்ட முறியடிப்புச்சமரும் ஒன்றிணைந்து இன்றைய இலங்கையின் இராணுவ அரசியல் வரலாற்றையே தீர்மானித்துள்ளது எனின் மிகையாகாது.
வெற்றிகரமான இவ்விரு சமர்களும் சிறிலங்கா இராணுவத்தின் தொழில்சார் திறமையைக் கேள்விக்குள்ளாக்கியதோடு சிறிலங்கா இராணுவ இயந்திரத்தை இயங்க வைக்க முடியாத இக்கட்டானதொரு நிலைக்கு இட்டுச் சென்றதெனலாம்.
இதனைத் தீச்சுவாலை நடவடிக்கையின் பின்னர் சிறிலங்கா இராணுவத் தரப்பு பாரிய படை நடவடிக்கைகள் எதையும் திட்டமிட முடியாமல் இருந்ததில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஆட்சியாளர்கள் சமாதான முயற்சிகளில் இணக்கப்பாட்டிற்கு வராது போனாலும் அவர்களின் காயங்கள் ஆற்றப்பட முடியாதவையாகவே இருந்தன.
அது மட்டுமல்ல பொ.ஐ.முன்னணி அரசாங்கம் அடுத்த பொதுத்தேர்தலில் தோல்வி அடையவும் சமாதானப்பேச்சுவார்த்தைகளை ஆதரித்த ஐ.தே.முன்னணி ஆட்சி அதிகாரத் தைக்கைப்பற்றவும் ஆனையிறவில் இராணுவம் சந்தித்த தோல்விகளும் அடிப்படையாயின.
இன்று கூடச் சிறிலங்கா ஆட்சியாளர்கள் யுத்தத்தையே விரும்புகின்றனர். ஆயினும் அவர்கள் கடந்த காலத்தில் இராணுவ ரீதியில் பெற்ற கசப்பான அனுபவங்கள் - அதிலும் குறிப்பாக புலிகளின் ஓயாத அலைகள் - பெற்ற வெற்றி இராணுவத்தின் தீச்சுவாலை நடவடிக்கையின் போது சந்தித்த இழப்பு என்பன அவர்களை யுத்தத்தைத் தேர்ந்தெடுக்க முடியாத அளவிற்கு அச்சத்தை கொடுப்பவையாகவுள்ளன.
அவ்வாறு இல்லாதுவிடில் ஐ.தே.முனனணி அரசாங்கம் செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்பாட்டை சமாதான முயற்சிகளுக்கான முன்னெடுப்பதற்கான இடைக்கால நிர்வாகம் சுனாமி அனர்த்த நிதி முகாமைத்துவத்திற்கான பொதுக் கட்டமைப்பு ஆகிய அனைத்தையும். எதிர்த்துக்கொண்டும்-அதேவேளை அவற்றை நிராகரிக்க முடியாமல் ஆளும் கூட்டணிக்குள் முரண்பட்டு பிணக்குகளை வளர்த்துக் கொண்டும் அவர்கள் இருக்க மாட்டார்கள். இது வரையில் யுத்தத்தை ஆரம்பித்திருப்பார்கள்.
நன்றி: ஈழநாதம் </b>
---------------------------------------------------------------------
<b>தமிழிழ மண்மீட்பு போரிலே தங்களை இன்னுயிர்களை தாய் மண்ணுக்கக அர்பணித்த மாவிரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவிக்கும் அதே நேரம் 240 வருடகால தொண்டைக்குள் முள்ளாய் சிக்கிகிடந்த ஆணையிறவை மீட்ட 5ம்வருட வெற்றிகழிப்பை கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழிழ விடுதலைபுலிகள் தமிழிழ மக்களுக்கு எனது வாழ்த்தையும் யாழ்களம் ஊடக தெரிவித்துக்கொள்கிறேன்... :!: </b>
|
|
|
| IP address பெற்றுக்கொள்வது எப்படி ? |
|
Posted by: Nada - 04-27-2005, 09:04 PM - Forum: இணையம்
- Replies (15)
|
 |
இலவசமாக அல்லது குறைந்த விலையில் IP address பெற்றுக்கொள்ள முடியுமா? என்னுடைய இணைய வழங்குனர்கள் வழங்கும் IP adress அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. நிலையானதை எப்படி பெற்றுக்கொள்வது?
தெரிந்தவர்கள் யாராவது உதவுங்களேன்.
|
|
|
|