Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 599 online users.
» 0 Member(s) | 597 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,661
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,268
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,765
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  swiss இல புது வியாபாரம் !!!!
Posted by: sinnappu - 04-26-2005, 09:14 AM - Forum: புலம் - Replies (27)

உப்பிடித்தான் 4 நாளுக்கு முன்னம் ஒரு காட் வாங்கினாள் உவர் தம்பி பேரம்பலம் கடையில 4 நாள் களிச்சு காட்டை அடிச்சுப்பாத்தா காட் வேலை செய்யுது இல்லை போட்டன் போன் பேரம்பலத்துக்கு
அவர் சொல்லுறார் அப்பு அந்தக்கொம்பனி இழுத்துச்சாத்தி 2 நாள் ஆகுது எண்டு
நான் கேட்டன் அப்ப காசு ம் கூ தான் எண்டார் வெளிய வர ஒருவர் சொன்னார் swiss உது புது வியாபாரம் காட் கொம்பனியும் தமிழ் கடைக்காரரும் சேந்து செய்யிற புது வியாபாரமாம் (இளிச்சவாய் தமிழனிட்டை )
பிள்ளையள் சொல்லுங்கோ உங்கட swiss உறவுகளிட்டை நல்லா வாங்கி ஏமாறச்சொல்லி

அதோடை காட் விக்கேக்கை சொல்லுவினம் 74 நிமிசம் 10 பிராங் காட் வாங்கி அடிச்சா 60 தாண்டிறது பெரியவிசயம்

நான் கேக்கிறது அத தான் அவன் சுத்து மாத்து செய்யிறான் ஏன் நீங்கள் துணை போறீங்கள்

தமிழர்கள் மீது இந்த நாட்டவன் நல்ல மதிப்பு வைத்திருக்கிறான்

ஏன் 2 மாதங்களின் முன்பு சுரிச்சில 200 பேரில 157 தமிழர்களுக்கு பிரஐாவுரிமை ( 400+ குடும்ப அங்கத்தவர்கள் )

இதில இப்ப உது வேற ஏற்க்கனவே ஆடு கொலை ம் ம் பாப்பம்
எங்க போய் முடியுது எண்டு

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

அத்தோடு லோன் எடுத்துக்குடுப்பவர்கள் ஐயோாாாாாாா இம்சை 50.000 தாறன் 60.000 தாறன் எல்லாம் ஒரு சின்ன பம்மாத்து
ஓரு சிறிய பிளையான தகவலை உங்கள் விண்ணப்பத்தில பூர்த்தி செய்தால் அதிக வங்கிக்கடன்
இப்படி பல
ம் ம்

நான் நினைக்கிறன் உதுக்கெலஇலாம் காரணம் எங்கட ஆக்களுக்கு மொழிப்பிரச்சனை

சரி சொல்லுங்கப்பா உங்கட கருத்தை

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Print this item

  :: மண்ணுக்கு மரியாதை ::
Posted by: Kurumpan - 04-26-2005, 02:42 AM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

வணக்கம் அப்புச்சிமார்... ஆச்சிமார்.. அண்ணாச்சிமார்... அக்காச்சிமார்.... எல்லோரும் நலமா??

சுடச் சுட கவிதை கேளும்....
சுட்டபின்.. கருத்து எழுதும்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

http://www.yarl.com/forum/music_page.php?song_id=56

Print this item

  கிழங்கில் கால்; முட்டையில் வால்
Posted by: ¦ÀâÂôÒ - 04-26-2005, 01:01 AM - Forum: பொழுதுபோக்கு - No Replies

<b>இராசவள்ளிக் கிழங்கில் கால்; முட்டையில் வால் காத்தான்குடிவாசி வீட்டில் நடந்த அதிசயம்</b>
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/April/25/rasa.jpg' border='0' alt='user posted image'>
இராசவள்ளிக் கிழங்கில் மனித உருவத்தில் இரு கால்களும், முட்டையில் மிருகங்களுக்கு உள்ளது போன்று ஒரு வாலும், காத்தான்குடி பிரதேசவாசி யொருவரின் வீட்டில் காணப்படுகின்றன. இந்த அதிசயத்தை பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

காத்தான்குடி பழைய வீதி முதலாம் குறிச்சியில் வசிக்கும் முகம்மது ஜலீல் என்பவரின் வீட்டிலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி ஜலீல் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் இராசவள்ளிக் கிழங்கை பிடுங்கியபோதுதான் இந்த அதிசயத்தை கண்டேன்.

மனித உருவத்தை ஒத்த இருகால்கள் போன்று இந்த கிழங்கு காணப்படுகின்றது. ஒவ்வொரு காலிலும் பெருவிரல் உட்பட நான்கு விரல்கள் காணப்படுகின்றன. மேலும் முட்டையிலும் மிருகங்களுக்கு காணப்படும் வாலைப்போன்று ஒரு வாலும் காணப்படுகின்றது என்றார்.

¿ýÈ¢ ¾¢ÉìÌÃø 25 º¢ò¾¢¨Ã 2005

Print this item

  தமிழ் OPEN OFFICE
Posted by: வியாசன் - 04-25-2005, 10:04 PM - Forum: கணினி - Replies (2)

தமிழ் OPEN OFFICE தரவிறக்கம் செய்துகொள்ள................

அண்மையில் இந்தியாவில் வெளியிடப்பட்ட தமிழ் இலவசமென்பொருட்களை தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பை பயன்படுத்துங்கள்.

http://www.ildc.in/

Print this item

  விஸா திருமணங்கள்
Posted by: Mathan - 04-25-2005, 06:09 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (79)

விஸா திருமணங்கள் - 1

பிரிட்டனில் தற்போது விஸாவுக்கான திருமணங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகின்றது. பிரிட்டனில் நிரந்தர வதிவிட உரிமை இன்றி இருப்போருக்கும் பிற நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வந்து குடியேற விரும்புவோருக்கும் உள்ள குறுக்கு வழிகளில் ஒன்று பிரித்தானிய பிரஜை(அல்லது ஐரோப்பிய ஒன்றிய பிரஜை) ஒருவரை திருமணம் செய்வதாகும். பிரித்தானிய குடிவரவு சட்டங்கள் கடுமையாக்கபட்ட நிலையில் விஸா இல்லாத நிலையில் இங்கு தங்கியிருக்கும் பலர் இந்த வழியை நாடுகின்றார்கள். இவ்வாறு விஸா திருமணம் (Marriage of convinience) செய்து பலர் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லும் போதிலும் இதில் சில மோசடி திருமணங்களும் நடக்கத்தான் செய்கின்றன. நளதமயந்தி படத்தில் கூட மாதவன் அவுஸ்ரேலியாவில் தங்கியிருப்பதற்காக அவுஸ்ரேலிய தமிழ் பெண்ணை திருமணம் செய்வார். அது பின்னர் குடிவரவு அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு அவர் நாடுகடத்தப்பட்டது வேறு கதை.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41073000/jpg/_41073739_jaswinder_gill300.jpg' border='0' alt='user posted image'>
<b>Jaswinder Gill (வயது 42 west London)</b>

அண்மையில் பிரித்தானிய பொலீசார் இது போன்ற மோசடி திருமணம் செய்யும் கும்பல் ஒன்றை கண்டு பிடித்தார்கள். Jaswinder Gill (வயது 42 west London) என்பவரும் அவருடைய கணவரும் வேறு சிலரும் சேர்ந்து போலி திருமணங்களை நடாத்தி இந்தியாவிலிருந்து பலரை பிரித்தானியாவிற்கு கொண்டுவந்துள்ளார்கள், இதன் மூலம் அவர் 1 மில்லியன் பவுண்ஸ் சம்பாதித்துள்ளார். தற்போது பொலீசாரார் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவருக்கு 10 வருட ஜெயில் தண்டனையும் இவருடைய கணவருக்கு 6 வருட ஜெயில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

படம் மற்றும் தகவல் நன்றி - BBC News

Print this item

  ஜெயரட்ணம் கடத்தல்
Posted by: Sriramanan - 04-25-2005, 09:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (26)

புலிகளின் புலனாய்வு துறையை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்புக்கு குறுகிய விஜயமென்றை மேற்கொண்டு வந்து சென்றதின் பின்னரே பொலிஸ் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் காணாமல் போனதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது.

விபரம்:
http://sankathi.com/index.php?option=com_c...d=326&Itemid=41

Print this item

  கருணா குழு வலுவிழந்து செல்வதையிட்டு
Posted by: வியாசன் - 04-24-2005, 09:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கருணா குழு வலுவிழந்து செல்வதையிட்டு கவலையடையும் இராணுவ புலனாய்வுப் பிரிவு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்த ஆயுத குழுவை காப்பாற்ற வந்த படையினர்
கருணா குழு கிழக்கில் தொடர்ந்தும் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்ற போதும் புலிகளுக்கெதிராக இடையிடையே தாக்குதல்களை நடத்தி கிழக்கில் மேலும் குழப்பத்தை உருவாக்கவும்ää தாங்கள் வலுமிக்க சக்தியாக இருப்பதாகக் காண்பிக்கவும் முற்பட்டு வருகிறது.

பொலநறுவை மாவட்டத்தில் வெலிக்கந்தைக்கு சமீபமாக சொறிவில் பகுதியில் கருணா குழு மீதும் ஈ.என்.டி.எல்.எப். மீதும் இடம்பெற்ற தாக்குதல் அவர்களை மட்டுமல்லாது அவர்களை இயக்கி வருவதாக புலிகளால் கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரையும் பெரும் குழப்பமடையச் செய்துள்ளது.

புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி அல்லது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் புலிகளுக்கெதிராக அடிக்கடி தாக்குதல்களை நடத்துவதன் மூலம் புலிகளின் நிம்மதியைக் குலைக்க வேண்டுமென்பதே இவர்களது நோக்கமாகும். மட்டக்களப்புää அம்பாறைää பொலநறுவை மாவட்டமென மாறிமாறி தாக்குதல்களை நடத்த இவர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும்ää புலிகளின் கடுமையான பதிலடி இவர்களை மட்டுமல்லாது இவர்களுக்கு ஆதரவு வழங்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் நிலைகுலைய வைத்துவிட்டதுடன் இந்தக் குழுக்கள் மீதான நம்பிக்கையை இழக்குமளவிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவும் வெறுப்படைந்து போயுள்ளது.

கருணா குழுவின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியேற்பட்டதையடுத்து பொலநறுவை மாவட்டத்தில் கருணா குழுவிற்குப் புதிதாக ஆட்களைச் சேர்க்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பணத்தாசை காட்டியும் பொருளாசை காட்டியும் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களையும் குறைந்த பயிற்சியுடன் களமிறக்குமளவிற்கு ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சொறிவிலில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இருவர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களென்பதால் இது தெளிவாகத் தெரிகிறது.

அதேநேரம்ää கருணா குழுவுடன் ஈ.என்.டி.எல்.எப். உம் கடந்த வருட நடுப்பகுதியில் இணைந்து கொண்டதால்ää தற்போதைய ஆட்பற்றாக்குறையைச் சமாளிக்க ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்களையும் கிழக்கில் புலிகளுக்கெதிராக களமிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொறிவில் தாக்குதலில் ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதன் மூலம் இது தெளிவாகிறது.

ஈ.என்.டி.எல்.எவ்.பிற்குää இலங்கையில் முகாம்களெதுவுமில்லாததால் இந்தியாவிலிருந்து வந்தே இங்கு கருணா குழுவுடன் இணைந்து செயற்படுகிறார்கள். சொறிவிலில் இவர்கள் இருவர் கொல்லப்பட்ட போது அவர்களது குடும்பத்தவர்கள் தமிழகத்தில் சேலத்தில் இருந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து மேலும் சில ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினர்கள் இங்கு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலிலேயே ஈ.என்.டி.எல்.எவ். செயற்படுவதால் கிழக்கில் தற்போது புலிகளுக்கெதிராகத் தொடரும் நிழல் யுத்தத்தில்ää இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் இயக்கப்படும் கருணா குழுவும் இந்தியப் புலனாய்வுப் பிரிவால் இயக்கப்படும் ஈ.என்.டி.எல்.எவ்.பும் ஒருங்கிணைந்து களமிறங்கியுள்ளன.

அதேநேரம்ää இவர்களுக்கெதிராக புலிகள் நடத்தும் தாக்குதல்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரைப் பெரும் கவலையடையச் செய்துள்ளதுடன் இவர்கள் மூலம் புலிகளுக்கெதிராக அடுத்தடுத்து தாக்குதல்களை நடாத்தி இவர்கள் மிகப் பெரும் சக்தியாக இருப்பதாய் காட்டவும் வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதற்கு வசதியாக கிழக்கில் புலிகளுக்கெதிராக ஏதாவதொரு சிறு தாக்குதல் நடந்துவிட்டால்ää கிழக்கில் இனி புலிகளால் தலையெடுக்கவே முடியாதென்றளவிற்கு இலங்கை அரச ஊடகங்களும் ஆங்கிலää சிங்களப் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டு விடுகின்றன.

கடந்த வியாழக்கிழமையும் அம்பாறையில் திருக்கோவிலுக்கு மேற்கே வம்மியடி வட்டமடுப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆயுதக் குழுவொன்று ஊடுருவி புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் மீது தாக்குதல் தொடுக்கவேää பதில் தாக்குதல் தொடுத்த புலிகள் அவர்களை துரத்திச் சென்ற போது அவர்கள் தப்பியோடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுந்துவிட்டனர்.

அண்மைக் காலமாக வெலிக்கந்தைப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல் திடீரென திருகோணமலைக்கு மாறியது. கிழக்கில் மட்டக்களப்புää அம்பாறை மாவட்டங்களிலும் அதற்கப்பால் பொலநறுவை மாவட்டத்திலும் மட்டுமல்லாது திருகோணமலையிலும் கருணா குழு செயற்படுவதாகக் காண்பிக்கும் நோக்கமே இந்தத் தாக்குதல்களின் பின்னணியாகும்.

புலிகளின் ஹவாக்கி டோக்கி' தொடர்பாடல்களை படையினரால் இடைமறித்து ஒற்றுக் கேட்க முடியும். இது புலிகளுக்கும் தெரியும். ஆனாலும்ää அவசரத் தகவல் பறிமாற்றத்திற்காக இந்தத் தொலைத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததொன்று. இவ்வாறான ஹவாக்கி டோக்கி' உரையாடல் மூலம் புலிகளின் முக்கியஸ்தர்கள் எப்பகுதியில் நிற்கின்றனரென்பதையும் படையினரால் அறிந்து கொள்ள முடியும்.

இதனால்ää அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் முக்கிய தளமான கஞ்சிகுடிச்சாறை இலக்காக வைத்து எண்மரைக் கொண்ட ஆயுதக் குழுவொன்று கடந்தவார முற்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவியது. இதுபற்றிய தகவல் ஏதோவொரு விதத்தில் புலிகளுக்கும் கிடைக்கவே அவர்கள் உhரடைந்தனர். தங்கள் பகுதிக்குள் அடர்ந்த காடுகள் மேய்ச்சல் தரைகளூடாக ஊடுருவும் ஆயுதக் குழுவிற்காக காத்திருந்தனர்.

தங்களின் ஊடுருவல் பற்றித் தெரிந்து புலிகள் உhரடைந்து விட்டதை இவர்கள் அறிந்திருக்கக்கூடும். எந்த வழியால் சென்றாலும் புலிகள் பதுங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்திருக்கலாம். இதனால் வட்டமடுப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை தங்களின் முன்னால் எதிர்ப்பட்ட புலிகளை நோக்கி துப்பாக்கிச் சு10டு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

புலிகளும் இவர்களைத் துரத்திச் செல்லவே அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினர். இவ்வேளையில் இந்த மோதல் பற்றி ääஆயுதக் குழுவின் தாக்குதல் நடைபெற்ற வம்மியடியிலிருந்து மேற்கே சுமார் 12 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சாகாமம் விடே அதிரடிப் படைமுகாமைச் சேர்ந்த படையினரும்ää வம்மியடியிலிருந்து தெற்கே சுமார் 9 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள முகாமைகடை (ஆலையடிவேம்பு பிரதேச செயலர் பிரிவு) அதிரடிப் படை முகாமைச் சேர்ந்த படையினரும் அறிந்து உhரடைந்தனர்.

என்ன காரணமோ தெரியவில்லை. திடீரென சாகாமம் அதிரடிப் படைமுகாமைச் சேர்ந்த படையினர் பவள் கவச வாகனமொன்றில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தபோது புலிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஹஇதற்கு மேலும் நகரக்கூடாது. போர் நிறுத்த உடன்பாட்டையும் மீறி எமது கட்டுப்பாடுப் பகுதிக்குள் வந்துவிட்டீர்கள். திரும்பிச் செல்லுங்கள்ää இல்லையேல்' தாக்குதல் நடத்துவோம்' என்று புலிகள் எச்சரித்தனர்.

நீங்கள் ஆபத்தில் சிக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு உதவவே வந்தோம் என அதிரடிப்படையினர் கூறவேää உங்கள் உபத்திரம் வேண்டாம் திரும்பிச் சென்று விடுங்கள் எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். அதேநேரம் இவர்களது வருகைக்கு உள்நோக்கமிருப்பதாகவே புலிகள் கருதுகின்றனர்.

தாக்குதல் நடத்த வந்த ஆயுதக் குழு ஆபத்தில் சிக்கிவிட்டதை இவர்கள் அறிந்திருப்பர். புலிகள் அவர்களைச் சுற்றி வளைப்பதற்குள் அவர்களைத் தப்பவைத்துவிடும் நோக்கமாகவும் இது இருக்கலாமெனப் புலிகள் கருதுகின்றனர். அதேநேரம் வம்மியடியின் பின்புறமாக இந்த ஆயுதக் குழு தப்பியோடி மாதோட்டம் சிங்களப் பகுதிக்குள் நுழைந்து விட்டது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியென்றாலும் அந்த ஆயுதக் குழுவைப் பிடித்துவிட வேண்டுமென்பதற்காக புலிகளின் அணியொன்றும் அதற்குள் நுழைந்திருக்கும்ää ஆனால் அப்பகுதியெங்கும் விடே அதிரடிப் படையினர் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கவே புலிகள் தங்கள் முயற்சியை கைவிட்டனர். அதேநேரம்ää ஆயுதங்களுடன் தப்பியோடியவர்கள் படையினரிடம் பிடிபட்டதாக எதுவித செய்தியும் வெளிவரவில்லை.

அன்று மாலை அரச வானொலிää தொலைக்காட்சி செய்திகள்ää அம்பாறையில் கருணா குழு நடத்திய தாக்குதலில் ஐந்திற்கும் மேற்பட்ட புலிகள் உயிரிழந்தும் பலர் காயமடைந்ததுடன் கருணா குழுவின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாது புலிகளின் முக்கிய தளபதியான ஜனார்த்தனன் உட்பட பல புலிகள் தப்பி வந்து சாகாமம் அதிரடிப்படை முகாமில் தஞ்சமடைந்ததாகக் கூறின.

நடந்த செய்தியை தலை கீழாகக் கூறி உண்மையை மறைக்கப் படையினர் முற்பட்டதையே இது காட்டுவதாகவும்ää இந்த ஆயுதக் குழு இப் பகுதியிலுள்ள அதிரடிப் படை முகாமொன்றிலிருந்தே வந்திருக்க வேண்டுமெனவும் புலிகள் தெரிவித்ததுடன்ää தப்பியோடியவர்கள் பின்னர் அங்குள்ள முகாமொன்றுக்குச் சென்றிருக்கலாமென்றும் கூறினர்.

கருணா குழு தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்காக தங்களுக்கு உதவுவதாகக் கூறி அதிரடிப்படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதைவிடää தப்பியோடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கருணா குழுவைப் பிடிக்கலாமே எனவும் புலிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

பொலநறுவையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கௌசல்யன் மீது தாக்குதலை நடத்தியது போன்று அம்பாறையில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி முக்கியஸ்தர்கள் எவரையாவது கொல்வதன் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மட்டுமல்லாது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும்ää எங்கும்ää எப்போதும் தாக்குதல் நடத்தும் வல்லமை கருணா குழுவுக்குண்டென்பதைக் காண்பிக்கும் நோக்கிலேயே இவர்கள் தங்கள் பகுதிக்குள் ஊடுருவியிருக்கலாமெனப் புலிகள் கருதுகின்றனர்.

கருணா குழுவின் மீதும் அது ஈ.என்.டி.எல்.எவ்.புடன் கூட்டுச் சேர்ந்த பின்பும் அவர்களுக்குள்ளிருந்தே அவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களால் இராணுவ புலனாய்வுப் பிரிவு பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறது. கொட்டாவவில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நீல் தம்மிக உட்பட கருணாவின் முக்கிய சகாக்கள் எண்மர் கொல்லப்பட்டபின் இராணுவ புலனாய்வுப் பிரிவு அடுத்தடுத்து பல தமிழ் உளவாளிகளை இழந்தது.

கொட்டாவவில் உடனிருந்த ஒருவரே அவர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு முக்கிய ஆவணங்களுடன் தப்பிச் சென்றார். அதன்பின் கருணாவின் சகோதரரான ரெஜியும்ää அவருக்கு மிகவும் நம்பிக்கையானவரெனக் கருதப்பட்டவரால் கொல்லப்பட்டதுடன் அவர் வசமிருந்த பல முக்கிய ஆவணங்களையும் அந்த நபர் எடுத்துச் சென்றார். அதேபோன்றே சொறிவிலில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் உடனிருந்தவர்களால் நடத்தப்பட்டது.

இங்கிருந்தும்ää இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் கருணா குழுவுக்குமிடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்தும் பல புகைப்படங்கள்ää ஆவணங்கள்ää தொலைபேசி இலக்கங்களைக் கொண்ட டயறிகள் என்பன எடுத்துச் செல்லப்பட்டதால் இராணுவ புலனாய்வுப் பிரிவு மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.

கருணா குழுவைப் பயன்படுத்தி அல்லது அதன் பெயரில் கிழக்கில் தொடர்ந்தும் குழப்ப நிலையை உருவாக்க நினைத்த இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குää தற்போது கருணா குழுவுக்குள் ஊடுருவி அவர்கள் மீதே தாக்குதல் நடத்துவோரால் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்களது திட்டங்களை மட்டுமல்லாது அதற்கான ஆதாரங்களும் சம்பந்தப்பட் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பெயர்களும் அம்பலப்படுத்தப்பட்டு வருவதால் அவர்கள் செய்வதறியாது திகைப்படைந்துள்ளனர்.

உண்மையிலேயே கருணா குழு என்ற பெயரில் இயங்குபவர்கள் ääபுலிகளின் புலனாய்வுப் பிரிவினரா அல்லது அவர்கள் உண்மையிலேயே புலிகளுக்கு எதிரானவர்களா என்று அறியாது இராணுவ புலனாய்வுத் துறை பெரும் குழப்பமடைந்துள்ளது. இதுவரை காலமும் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ளாத புலனாய்வுப் பிரிவு தற்போது இதுபோன்றதொரு புதிய நெருக்கடியை எதிர்கொள்கிறது.

சாண் ஏற முழம் சறுக்குவது போல்ää புலிகள் மீது சிறுதாக்குலொன்றை நடத்தää கருணா குழுவுக்குள் ஊடுருவியிருப்பவர்கள் பெரும் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இந்த ஊடுருவல் கருணா குழுவுக்குள் மட்டுமா அல்லது புலனாய்வுப் பிரிவின் உச்சிவரை சென்று விட்டதா என்ற அச்சமும் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

சுட்டபழம்
நன்றி தினக்குரல்

Print this item

  வசந்தம் வந்தும்...
Posted by: kuruvikal - 04-24-2005, 02:02 PM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

<img src='http://img256.echo.cx/img256/6562/bird127to.jpg' border='0' alt='user posted image'>

<b>வசந்தமிது வசந்தம்
பூமித்தாயின் விந்தையிது
அதிகாலை வேளையது
குருவி தானும் பாட்டெடுக்க
தென்றல் தானும் தாள மிட
தெம்மாங்கு விழுகுது காதெங்கும்..!

மலரவள் மொட்டு விரியும் நேரமது
பனித்துளி தூவுது பன்னீர்
ஆதவன் கரங்கள் சீராட்ட
காற்றுக் காவுது வசீகர வாசம்
கனவுகள் பெருகுது
வர்ணம் வர்ணமாய்...!

சோலையவள் கோலம் மாற்றி
பசுமைச் சேலை கட்ட
தோப்பெங்கும் பறவைகள்
கும்மியடிக்குது
துள்ளியோடும் புள்ளி அணில்
தூது செல்ல
சருகுகள் சரசரத்தே
சேதி சொல்லுது...!

பள்ளிச் சிட்டுக்கள்
பாடச் சுமை இறக்கிச் சிறகடிக்க
மகிழ்ச்சியங்கு களைகட்டுது..!
சின்ன உயிருமங்கே
சுறுசுறுப்பாய் இயங்குது
சிறப்பான காலத்துள்
தன்னினம் பெருக்கிட....!

வண்ணத்துப் பூச்சியவள்
"பஷன் சோ" காட்ட
மலர்களங்கே ஏங்கித் தவிக்குது
சமயம் பார்த்துத்
கள்ளனவன் கருவண்டு
திருடுகிறான் அமுதம்
மகரந்தமது காற்றில் பறந்து
துப்புத்துலக்குது...!

போர்த்துத் திரிந்த மனிதரெல்லாம்
போர்வை விலக்கி
முக்கால் முழத்தோடு அலைய
கண்கள் பலதும் கூட அலையுது
காட்சிகள் இலவசமாய்க் காண...!
அங்கு...
கார்கள் கூட விதிவிலக்கல்ல
அவையும் கூட ஆடை கழற்றுது...!

இப்படியாய்...
வசந்தக் கதை வாசமாய் வீச
சொந்தக் கதை சோகமாய்
அன்பு செய்யும் வேளை வந்தும்
மலரவள் ஊடல் நேரம் கூடிப்போச்சு...!
கொள்கை கொண்ட
குருவிதானும் என்ன செய்யும்
தனிய இருந்து
சோகம் ராகம் இசைக்குது...!</b>

Print this item

  jeya tv live
Posted by: stalin - 04-24-2005, 11:25 AM - Forum: சினிமா - Replies (6)

ஜெயா tvஐ www.jumptv.com வெப்சைட்டில் இப்பொழுது இலவசமாக live tvஆக பார்க்கலாம் இந்தபக்கத்துக்குச்சென்று ஜெயா ரிவி குறியீடு பக்கத்தில் freeview ஐ அழுத்தங்கள் live tv jeya பார்க்கலாம்---------------------------ஸ்ராலின்

Print this item

  ஆனையிறவு: வெற்றிவிழா நிழற்படங்கள்
Posted by: Sriramanan - 04-24-2005, 08:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஆனையிறவு மீட்பு மற்றும் தீச்சுவாலை முறியடிப்பு ஆகியவற்றி வெற்றி விழாவை முன்னிட்டு விடுதலைப் புலிப் போராளிகளிடையே இடம்பெற்று வரும் விளையாட்டு நிகழ்வுகளின் நிழற்படங்கள்.
http://sankathi.com/index.php?option=com_c...&id=9&Itemid=51

Print this item