![]() |
|
விஸா திருமணங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: விஸா திருமணங்கள் (/showthread.php?tid=4403) |
விஸா திருமணங்கள் - Mathan - 04-25-2005 விஸா திருமணங்கள் - 1 பிரிட்டனில் தற்போது விஸாவுக்கான திருமணங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகின்றது. பிரிட்டனில் நிரந்தர வதிவிட உரிமை இன்றி இருப்போருக்கும் பிற நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வந்து குடியேற விரும்புவோருக்கும் உள்ள குறுக்கு வழிகளில் ஒன்று பிரித்தானிய பிரஜை(அல்லது ஐரோப்பிய ஒன்றிய பிரஜை) ஒருவரை திருமணம் செய்வதாகும். பிரித்தானிய குடிவரவு சட்டங்கள் கடுமையாக்கபட்ட நிலையில் விஸா இல்லாத நிலையில் இங்கு தங்கியிருக்கும் பலர் இந்த வழியை நாடுகின்றார்கள். இவ்வாறு விஸா திருமணம் (Marriage of convinience) செய்து பலர் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லும் போதிலும் இதில் சில மோசடி திருமணங்களும் நடக்கத்தான் செய்கின்றன. நளதமயந்தி படத்தில் கூட மாதவன் அவுஸ்ரேலியாவில் தங்கியிருப்பதற்காக அவுஸ்ரேலிய தமிழ் பெண்ணை திருமணம் செய்வார். அது பின்னர் குடிவரவு அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு அவர் நாடுகடத்தப்பட்டது வேறு கதை. <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41073000/jpg/_41073739_jaswinder_gill300.jpg' border='0' alt='user posted image'> <b>Jaswinder Gill (வயது 42 west London)</b> அண்மையில் பிரித்தானிய பொலீசார் இது போன்ற மோசடி திருமணம் செய்யும் கும்பல் ஒன்றை கண்டு பிடித்தார்கள். Jaswinder Gill (வயது 42 west London) என்பவரும் அவருடைய கணவரும் வேறு சிலரும் சேர்ந்து போலி திருமணங்களை நடாத்தி இந்தியாவிலிருந்து பலரை பிரித்தானியாவிற்கு கொண்டுவந்துள்ளார்கள், இதன் மூலம் அவர் 1 மில்லியன் பவுண்ஸ் சம்பாதித்துள்ளார். தற்போது பொலீசாரார் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவருக்கு 10 வருட ஜெயில் தண்டனையும் இவருடைய கணவருக்கு 6 வருட ஜெயில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. படம் மற்றும் தகவல் நன்றி - BBC News - kuruvikal - 04-25-2005 நம்மாக்கள் இதுகள் செய்யுறதில்லையோ... வெள்ளையளும் செய்யிறதாக் கேள்வி... அப்படி என்னதான் பிரித்தானியாவில் சொர்க்கம் இருக்கோ இப்படி வாழ்வையே பணயம் வைத்து வாழ...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-25-2005 அடப்பாவிகளா..?ஃ முதலும் இப்படி ஒரு சம்பவம் வாசிச்ச நினைவு.. பறவாய் இல்லையே பிழைக்கத்தெரிஞ்சிருக்கு.. இப்படியும். :evil: :twisted: - Mathan - 04-25-2005 kuruvikal Wrote:நம்மாக்கள் இதுகள் செய்யுறதில்லையோ... வெள்ளையளும் செய்யிறதாக் கேள்வி... அப்படி என்னதான் பிரித்தானியாவில் சொர்க்கம் இருக்கோ இப்படி வாழ்வையே பணயம் வைத்து வாழ...! :wink: <!--emo& ஈழத் தமிழர்களிடையேயும் இப்படியான திருமணங்கள் நிகழ்கின்றன. அவற்றில் பெரும்பாலான திருமணங்கள் நிலைத்து நிற்கின்றன. விஸாவுக்கு மட்டுமே என்றும் சில திருமணங்கள் நடக்கின்றன. பிரித்தானியா அல்லது வெளிநாட்டிற்கு அவர்கள் வாழ்வை பந்தயம் வைத்து வர காரணம் வசதி, வாய்ப்புகள், சுதந்திரம் என்பவை தான் - sathiri - 04-26-2005 உவையள் என்னட்டை பொருத்தம் பார்க்காமல் கலியாணம் செய்தா உப்பிடித்தான் பொலிசுகாரன் அள்ளி கொண்டு போவான் :mrgreen: - இராவணன் - 04-26-2005 சாத்திரி கருத்தை திசை திருப்பாதீர்கள். - Mathan - 04-26-2005 போலித் திருமணங்களை ஏற்பாடு செய்த பெண்ணுக்கு பத்து வருடம் சிறை பிரிட்டனில் வசிக்க விரும்பும் ஆசிய ஆண்களுக்கு போலித் திருமணங்களை ஏற்பாடு செய்த ஒரு பெண்ணுக்கு ஒரு பிரிட்டிஷ் நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ஜாஸ்விந்தர் கில் என்பவர் பிரிட்டனிலும் இந்தியாவிலும் நடக்கும் திருமணங்களுக்காக ஆசிய பெண்களை தேர்ந்தெடுத்து வந்தார். அத்துடன் அவர்களுக்கு மாடலிங் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாகவும் அவர் உறுதி கூறிவந்தார். ஒரு பெண்ணை இந்தியாவுக்கு அழத்து சென்ற இந்த பெண்மணி, அங்கு திருமணக் காட்சி போன்று புகைப்படங்களை பிடித்து விட்டு அதனை உண்மையான திருமணங்கள் போன்று காண்பித்தார் என்று சட்டவாதிகள் கூறியுள்ளனர். மற்றுமொரு சம்பவத்தில் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணை அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவோம் என்று மிரட்டியதாக அவர்கள் கூறுகிறார்கள். நன்றி - பிபிசி தமிழ் - sinnappu - 04-26-2005 Quote:இராவணன் சாத்திரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கத்தி ரெடிஇருக்கட்டும் தம்பி மார் ஊரில பல பிரச்சனை களில் உள்ள ஒருவர் இப்படி செய்வது தவறில்லை தானே அவர்களும் வாழத்தானே வேணும் ஏன் கூடாது எனக்குத் தெரிந்த எத்தனையோ மிகவும் அருமையான தமிழ் இளைஞர்கள் இங்கு செய்து இருக்கிறார்கள் நான் சொன்னது விசாவுக்கு மட்டும் பணம் கொஞ்சம் அதிகம் என்ன செய்ய :wink: :wink: :wink: :wink: :wink: ஊரிலே கடன் அக்கா தங்கை சுமை ம் ம் சிலருடைய கதை பரிதாபம் ஆணாலும் இப்ப நல்லா இருக்கிறாங்கள் தெரிந்த நண்பர் 30.000 பிராங் குடுத்து விசா கல்லயாணம் செய்தார் 2 அக்கா 1 தங்கை இப்ப 2 அக்காவுக்கு திருமணம் ஆகிவிட்டது ஒரு தங்கை கொழும்பில் நல்ல படிப்பு அத்தோடு இப்ப ஒரு அருமையான தமிழ் பெண்னை திருமணம் செய்துள்ளார் அவருடைய கொழும்பு வீட்டுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது அங்கு அவரை கடவுளாகவும் அவருடைய மனைவியையும் (தமிழ் பெண்னை ) மிகவும் உயாந்த இடத்தில் வைத்திருந்தார்கள் அத்தோடு அவனுடைய நண்பனாகிய எனக்கும் மிக அதிக வரவேற்ப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தற்ப்போது அவர்களுக்கு ஒரு ஆண்பிள்ளை :wink: :wink: :wink: :wink: :wink: ம் ம் கஸ்ட துன்பம் அவனவனுக்கு வந்தா தான் தெரியும்
- aswini2005 - 04-26-2005 sathiri Wrote:உவையள் என்னட்டை பொருத்தம் பார்க்காமல் கலியாணம் செய்தா உப்பிடித்தான் பொலிசுகாரன் அள்ளி கொண்டு போவான் :mrgreen: என்ன சாத்திரி ஐயா உப்பிடி சொல்றியள். பாவமெல்லோ பாதிக்கப்படுறவை. அப்பு சொன்னமாதிரி ப திருமணங்கள் நடந்திருக்கு நடக்கிறது. அவரவருக்கு வந்தால்தான் அது அது புரியும். குருவிகள் நீங்கள் என்னத்தைக் கண்டு லண்டனிலை இருக்கிறிங்கள் ? நீங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் அதுதானே. வாழ்க உங்கள் பரந்த சிறந்தமனம்.
- shobana - 04-26-2005 இது லண்டனில் மட்டும் அல்ல வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெறுகிறது என கேள்விப்பட்டேன்.. ஆனால் எம்மவர் பலர் விசா உள்ள பல தமிழர் அப்படி விசாவுக்காக திருமணம் செய்கிறார்கள் தானே ஆனால் அவர்களினுடைய திருமணவாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது.. என்னைப்பெறுத்த அளவில் அது தப்பு அல்ல என நினைக்கிறேன்.. ஐரோப்பாவில் (நம்மவர்) விசா உள்ள ஆண் அல்லது விசா உள்ள பெண் விசா இல்லாதவரை திருமணம் செய்தால் நல்ல விடயமும் தானே... - kuruvikal - 04-26-2005 Mathan Wrote:[quote=kuruvikal]நம்மாக்கள் இதுகள் செய்யுறதில்லையோ... வெள்ளையளும் செய்யிறதாக் கேள்வி... அப்படி என்னதான் பிரித்தானியாவில் சொர்க்கம் இருக்கோ இப்படி வாழ்வையே பணயம் வைத்து வாழ...! :wink: <!--emo& ஈழத் தமிழர்களிடையேயும் இப்படியான திருமணங்கள் நிகழ்கின்றன. அவற்றில் பெரும்பாலான திருமணங்கள் நிலைத்து நிற்கின்றன. விஸாவுக்கு மட்டுமே என்றும் சில திருமணங்கள் நடக்கின்றன. பிரித்தானியா அல்லது வெளிநாட்டிற்கு அவர்கள் வாழ்வை பந்தயம் வைத்து வர காரணம் வசதி, வாய்ப்புகள், சுதந்திரம் என்பவை தான் தமிழர்கள் செய்யாத குழப்படி என்ற ஒன்று உலகில இருக்கா...??! இருந்தாச் சொல்லுங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஏன் மதன் பிரித்தானியாவில இருக்கிற வசதி வாய்ப்புக்கள் குறிப்பாக இலங்கையில் கிடையவே கிடையாதோ...???! இங்க விட அங்கதான் நிம்மதியான சுதந்திரமான பழுக்குறைந்த வாழ்வு என்று உறுதியாகச் சொல்லலாம்... இலவச உயர்கல்வி இங்க இல்லாத சிறப்பு...வறிய நாடு என்றாலும் அடிப்படை வசதிகள் எல்லாமே இருக்கு....! இங்க வரிகட்டவும் எடுத்த லோனுக்கு மோர்கேஷ் கட்டவும் மாடா உழைக்கிறதும் சரி...அங்க அளவோட உழைச்சு அளவோட வாழுறது மேல்..! என்ன ரெஸ்கோவுக்குப் பதில் கார்கில் போக வேணும்... தமிழர்களுக்கு என்னவோ சிங்களவர்களைப் போல அங்க வசதி இல்லை என்பதற்காக இலங்கை வசதிக் குறைவான நாடு என்றால்..வெள்ளைக்காரனே உங்களை மிதிப்பான்... பிரித்தானியர்கள் ஆசியாவில் தாய்லாந்துக்கு அடுத்ததாக உல்லாசப் பயணம் மேற்கொள்ள விரும்பும் சொர்க்கம் இலங்கையாம்...உங்களுக்கு உங்க நாட்டின் அருமை புரியல்ல.... குளிருக்க நடுங்கிறவனுக்குப் புரிஞ்சிருக்குது....அதுதான் அங்க வந்து சுரண்டிக் கொண்டாந்து உங்களுக்கே வசதி வாய்ப்புக் காட்டுறான்...நீங்க...அதைப் பார்த்து வாய்பிளக்க வேண்டியான்...! வசதி என்று நீங்க எதைக் கருதுகிறீர்கள் என்பதில் தான் சொர்க்கமும் நரகமும் தீர்மானமாகிறது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-26-2005 இராவணன் Wrote:சாத்திரி கருத்தை திசை திருப்பாதீர்கள். இராவணன் கோவிக்காதேங்கோ...வெறுமனவே மட்டுறுத்தினர் வேலையைச் செய்யாம கள உறுப்பினராகவும் பத்துத் தலையில ஒன்றையாவது யூஸ் பண்ணி ஒரு கருத்தை எழுதிட்டு பிறகு சொல்லுங்கோ கருத்தைத் திசை திருப்ப வேண்டாம் என்று...சனம் ஒரு தலையோட திசை தெரியாம நிக்குதுகள் எங்க வசதி வாய்ப்பு அதிகம் என்று தேடிக் குழம்பிப் போய்... அதுக்க நீங்க வேற...! சொல்லுறது சுலபம் செய்யுறது எப்பவும் கடினம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 04-26-2005 shobana Wrote:இது லண்டனில் மட்டும் அல்ல வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெறுகிறது என கேள்விப்பட்டேன்.. ஆனால் எம்மவர் பலர் விசா உள்ள பல தமிழர் அப்படி விசாவுக்காக திருமணம் செய்கிறார்கள் தானே ஆனால் அவர்களினுடைய திருமணவாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது.. என்னைப்பெறுத்த அளவில் அது தப்பு அல்ல என நினைக்கிறேன்.. ஐரோப்பாவில் (நம்மவர்) விசா உள்ள ஆண் அல்லது விசா உள்ள பெண் விசா இல்லாதவரை திருமணம் செய்தால் நல்ல விடயமும் தானே... இங்க கதைக்கிறது சாதாரண திருமணத்தைப் பற்றியல்ல...விசா இருந்தால் என்ன விட்டால் என்ன பிடித்தவரைத் திருமணம் செய்யுங்க அது உங்கள் சுதந்திரம்..இங்க கதைக்கிறது மோசடித் திருமணங்கள் பற்றி... விசாவுக்காக மட்டும் செய்யும் போலித் திருமணங்கள்... மற்றும் திருமணம் என்பதற்கு வழங்கப்படும் புது வரவிலக்கணம் பற்றி...! - kuruvikal - 04-26-2005 aswini2005 Wrote:sathiri Wrote:உவையள் என்னட்டை பொருத்தம் பார்க்காமல் கலியாணம் செய்தா உப்பிடித்தான் பொலிசுகாரன் அள்ளி கொண்டு போவான் :mrgreen: மேடம்...குருவிகள் இருப்பது மாந்தோப்பில்...லண்டனில் அல்ல...! நீங்களா நினைச்சுக்கிறதுகளுக்கு குருவிகள் பதில் சொல்லவேணும் என்று என்ன தலைவிதியா...! விரும்பினா வாங்க இருங்க போங்க யார் வேணாம் என்றா...! அதுக்கேன் மோசடி பண்ணுறீங்க....அப்ப மோசடி பண்ணி உலகத்தை ஏமாத்தி நீங்க மட்டும் வாழலாம் என்றீங்களோ....! சாறி...அதுதானே செய்துகிட்டு இருக்கீங்க...! உண்மையான அகதி இன்னும் அகதி முகாமில் இருக்கான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-26-2005 அமைதி அமைதி அமைதி.. குருவியாரே கொஞ்சம் மூச்சு விட்டுக்கதையுங்க. :wink: :mrgreen: - kuruvikal - 04-26-2005 tamilini Wrote:அமைதி அமைதி அமைதி.. குருவியாரே கொஞ்சம் மூச்சு விட்டுக்கதையுங்க. :wink: :mrgreen: இராவணன் கவனிக்கவும்...கருத்தைச் திசை திருப்புறாங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 04-26-2005 காக்கை வன்னியன் வேலையா..?? சரி சரி இராவணன் அண்ணா கத்தி தூக்கவேண்டாம் அடியேன்.. எஸ்கேப். :?
- kuruvikal - 04-26-2005 சட்டத்தின் பாயிண்டுகள எடுத்து வைச்சா காக்க வன்னியன் என்றீங்க...சட்டத்தின் முன் சகலரும் சமன்..மோசடிக் கலியாணம் பற்றித்தான் கதைக்க வேண்டும்..அதுதான் சட்டம் இங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 04-26-2005 sinnappu Wrote:Quote:இராவணன் யோவ் சின்னப்பு நீங்க இப்படிப் பண்ண நாளைக்கு ஒழுங்கா விசா உள்ள ஒருத்தன் அங்கினை ஒருத்தியை விரும்பிக் கலியாணம் முடிச்சா எவ்வளவு கிண்டல் கிண்டுவாங்க...போய் எம்பசி வாசலில தவங்கிடந்து பாத்தாத்தான் புரியும் வலி...! இப்ப பாருங்க ஏஜன்சிக்காரன் ரிக்கெட் கொடுக்க பிளேன் மட்டும் ஏறி அகதி என்று வந்து மோசடி பண்ணினதுகளால... உண்மையான அகதி இளைஞர்களுக்கும் விசா மறுக்கப்பட்டு இருக்கு... அரசியல் தஞ்சம் கோருவது கூட மோசடியில நடக்குது...டக்கிளசுக்கு காசைக் கொடுத்து கட்சிச் சேட்டிபிக்கற் வாங்கி புலியால பிரச்சனை...என்று சொல்லி இதுவும் நடக்குதுதானே....அதால தமிழருக்கே பிரச்சனை...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 04-26-2005 விசா திருமணங்கள் இலங்கை இந்திய ஒப்பந்த காலத்திலேயே நடைபெற தொடங்கிவிட்டன. இனவாதம் குறைந்த கொலண்ட் ஸ்கின்டினேவிய நாடுகளில்அதிகம் நடைபெற்றது அனுப்பபோறார்களென்ற அவசரத்தில் வெள்ளைக்கார பெண்களை திருமணம் செய்தார்கள் ஆனால் நிலமை மாறியது திருப்பி அனுப்பமுனைவதை நிறுத்தினார்கள் ஏன் திருமணம் செய்தோமென்று வேதனைப்பட்டார்கள் மற்றவர்களின் சராசரி வாழ்க்கையை நினைதது ஏங்கினார்கள் பின் 90 வீதமான திருமணங்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன--------------------------------------------ஸ்ராலின் |