Yarl Forum
கருவும் ஒரு நாள் விழா எடுக்கும்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கருவும் ஒரு நாள் விழா எடுக்கும்...! (/showthread.php?tid=4380)



கருவும் ஒரு நாள் விழா எடுக்கும்...! - kuruvikal - 04-29-2005

[b]சிங்கள தேசமே
இனவெறி பிடித்த நரகமே
புத்தன் பயங்கரவாதமே
தமிழன் குருதியென்ன
உனக்குக் கோடைகாலப் பானமா..??!
கொள்கையில்லாப் புல்லர்களே
உங்கள் கூலி என்ன
புள்ளட்டுக்கு ஒரு
அப்பாவி எலும்பா..??!

சனநாயகம் உச்சரிக்கும் ஓநாய்களே
அப்பாவிப் பத்திரிகையாளன்
நடேசன் குருதி குடித்தும்
உங்கள் வெறி அடங்கலையா...??!
சிந்தனையாளன் சிவராம்
சிங்கள தேசத்தில் சிந்தித்தது தவறா...??!
பேனாவை மிரட்டத் துப்பாக்கி
இதுதான் சிங்கள தேசத்தின்
அமெரிக்க சனநாயகமோ...???!

புல்லர்களே
கொடிய சிங்களப் பயங்கரவாதிகளே
அவர்கள் வால் பிடிக்கும்
தமிழினத் துரோகிகளே
கேளுங்கள் சேதி
இருக்கான் எங்கள் தமிழ் தலைவன்
பொங்கும் புலியாய்
அமைதிக்காய் தன்னை அர்ப்பணித்து
இல்லை இன்னேரம்
உருளும் உங்கள் தலைகள்...!
பாதகர்களே....
உங்கள் விதி முடிக்க
வருவான் ஒரு வீரன்
உண்மை ஜனநாயகத்தின்
தாய் மகனாய்....!

சந்திரிக்கா நீ
நரமாமிசம் தின்னும் ராட்சசி
புல்லர்கள் இருக்கார்
உனக்கு தீனி தேட
தெரிந்தும்...
பேனா கொண்டு முழங்கியவனை
துப்பாக்கி கொண்டா அடக்கினாய்
அன்றொரு குமார் பொன்னம்பலம்
நேற்றொரு நடேசன்
இன்றொரு சிவராம்
நாளை...????!

பாதகியே
சனநாயக உச்சரிப்பில்
உலகமே மயங்கிக் கிடக்க
ஜனநாயகப் புருஷர்களைக் கொன்று
மனிதக் குருதியாய் ருசிக்கிறாய்....
ருசி ருசி
காலம் உன்னைப் பதம் பார்க்கும்
கண்ணுக்கில்லை
உன் காலத்துக்கும் முடிவு வரும்
அன்று
சிங்கள தேசத்தில்
சனநாயகம் உயிர்த்ததாய்
ஒரு துளி
நம்பிக்கை பிறக்கும்...!
கருவும் தாய் வயிற்றில்
உன் சங்காரத்துக்காய்
விழா எடுக்கும்...!


- tamilini - 04-29-2005

இது தான் சனநாயகத்தின்
உண்மையான நாகரீகமோ..??
ஊடக தர்மத்தை
ஊமையாக்கிட
துப்பாக்கி உயிர்களை
காவு கொள்கிறதோ...??
:? :?


- eelapirean - 04-29-2005

நனறாக சொனனீர் குருவி


- KULAKADDAN - 04-29-2005

சன நாய் அகம்...............இதை யாரும் கண்டு கொள்வார்களோ...........


- shanmuhi - 04-29-2005

பேனா கொண்டு முழங்கியவனை
துப்பாக்கி கொண்டா அடக்கினாய்
அன்றொரு குமார் பொன்னம்பலம்
நேற்றொரு நடேசன்
இன்றொரு சிவராம்
நாளை...????!
இது இன்னும் தொடருமா...


- sathiri - 04-29-2005

துப்பில்லாதவரே
எம்மவர் துப்பாக்கிகள்
துருப்பிடித்து போகவில்லை
தூய்மையான எண்ணத்திற்காய்
தூங்கவைக்கப்பட்டிருக்கின்றன
துயிலெழுப்பிவிடாதீர்
துட்டர்களே. உமது
தூக்கத்தில்கூடஅவை
துரத்தும் :twisted:


- Nilavan - 04-29-2005

உணர்வுக்கு அடியான தமிழா!
உருப்படியாய் ஏதாவது செய்...
உணர்வு பொங்க கவி எழுதி என்ன பயன்
உரத்து நீ கத்தி தான் என்ன பயன்
சிங்கள சீமையிலே உன் உறவு
உதிரியாய் இக்கிறான்
நீ என்ன செய்தாயதற்க்கு?
உலகெங்கும் துரோகத்தில் வாசம்
அதற்க்கு தான் என்ன செய்தாய்...
உன்னிணையத்தில் நீ கவி எழுதி என்ன பயன்
ஊரரிய நீ ஒப்பாரி வைத்து என்ன பலன்...
உறங்கி கிடக்குமு;...இந்த
உன்னதம் மீண்டெழுவானா?
உயிர் எடுத்த துரொகியின்
உயிர் தான் போயிடுமா?
நாய்களிடம் நாடாளும் உரிமையை கொமுத்து விட்டு
நல்லது நடக்குமென்றும்
கனவு கானலாமா?
உன் வார்த்தைகளை மதிக்கிறேன்..-ஏனெனில்
நானும் உன் பொல் உணர்வுக்கு அடிமை
யாதார்த்தில் உன் கவியை எதிர்க்கிறேன்
காரணம்.....
கருத்துக்கு கருத்தினி பதிலாகது என்பதால்...
நிலவன்


- kuruvikal - 04-29-2005

Nilavan Wrote:உணர்வுக்கு அடியான தமிழா!
உருப்படியாய் ஏதாவது செய்...
உணர்வு பொங்க கவி எழுதி என்ன பயன்
உரத்து நீ கத்தி தான் என்ன பயன்
சிங்கள சீமையிலே உன் உறவு
உதிரியாய் இக்கிறான்
நீ என்ன செய்தாயதற்க்கு?
உலகெங்கும் துரோகத்தில் வாசம்
அதற்க்கு தான் என்ன செய்தாய்...
உன்னிணையத்தில் நீ கவி எழுதி என்ன பயன்
ஊரரிய நீ ஒப்பாரி வைத்து என்ன பலன்...
உறங்கி கிடக்குமு;...இந்த
உன்னதம் மீண்டெழுவானா?
உயிர் எடுத்த துரொகியின்
உயிர் தான் போயிடுமா?
நாய்களிடம் நாடாளும் உரிமையை கொமுத்து விட்டு
நல்லது நடக்குமென்றும்
கனவு கானலாமா?
உன் வார்த்தைகளை மதிக்கிறேன்..-ஏனெனில்
நானும் உன் பொல் உணர்வுக்கு அடிமை
யாதார்த்தில் உன் கவியை எதிர்க்கிறேன்
காரணம்.....
கருத்துக்கு கருத்தினி பதிலாகது என்பதால்...
நிலவன்

இதுதான் நிலவன் அநியாயத்துக்குப் பதில் இப்ப...

Quote:பாதகர்களே....
உங்கள் விதி முடிக்க
வருவான் ஒரு வீரன்
உண்மைச் ஜனநாயகத்தின்
தாய் மகனாய்....!



- Nilavan - 04-29-2005

கொலை செய்யப்பட்ட ஊடக வியலாளர் சிவராம் அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்

வணக்கம்!
குருவிகள்:- உங்கள் கவிதைக்கு பதில் கருத்து எழுத வேண்டும் என்பதற்காய் நான் அதை எழுத வில்லை.. யதார்த்தம் எதோ அதை எழுதினேன்....
நிலவன்


- Vasampu - 04-30-2005

புத்தி கெட்ட புல்லுருவிகளின் செயல்களுக்கு புத்தர் தான் என்ன செய்வார்.


- Malalai - 05-02-2005

தீட்டிய கத்தியினும் கூர்மை
தட்டிக் கேட்க வைக்கும் பேனா முனை....!
தட்டிக் கேட்க நினைப்பவர்களை
வெட்டி சாய்க்கிறார்கள - இருந்தும்
வெட்ட வெட்ட
தழைப்பவர்கள் தான் தமிழர்கள்