![]() |
|
சாத்தானின் வேதம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: சாத்தானின் வேதம் (/showthread.php?tid=4379) |
சாத்தானின் வேதம் - வியாசன் - 04-29-2005 சிவராமின் படுகொலைக்கு சிறீலங்கா அரசு கண்டனம்! சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்தத்தின் பின்னர் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் அரசியல் படுகொலைகளின் ஒரு அங்கமாக இது கருதப்படுவதாக சிறீலங்கா ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவி;க்கப்பட்டுள்ளது. அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ரி.ஜெயரட்ணம் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டார். அதற்கு முன்னர் கிழக்கில் மாவட்டச் செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சுpவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் பூரண விசாரணைகளுக்கு உத்தரவிடுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி புதினம் - Danklas - 04-29-2005 ஆஹா மறந்துபோய் கண்டன அறிக்கையை இவ்வளவு சீக்கிரத்தில விட்டுட்டாங்களே... hock: அதுசரி கெளசல்யனை படுகொலை செய்யிறதுக்கு 2 மணித்தியலம் முன்னாடி அவர் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை சொன்ன அரச ஊடகங்களுக்கு இந்தமுறை அடுத்த கொலை எங்கே எப்போ எண்டு சொல்ல மறந்ததன் மர்மம் என்ன?? எல்லாம் அந்த RISK செயல் (RISK - றோ,இன்ரலிஜன் ஒவ் சிறிலங்கா அண்ட் கறூனா) :!:(ஒருக்கால் RISK க்கை கேழுங்கப்பா என்னம் எத்தனை பேரின் பெயர்கள் கண்டன அறிக்கைவிடும்பக்கத்தில் இருக்கு எண்டுறதை) :roll: - Nilavan - 04-29-2005 கொலைகளை செய்து விட்டு அறிக்கை வீடும் ஒரே அரசு என்ற மகுடத்தில் இப்போது சிறிலங்கா இருக்கிறது. கடந்த 3 வருட சமாதானகாலத்தில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர்? சிங்களவர் கொல்லப்படவில்லை என்று சொல்ல வில்லை ஆகால் தமிழர்கள் அதிகம் கொலை செய்யப்பட்டார்கள் என்று சொல்ல வந்தேன்! தமிழனுக்காய் தமழீழத்துக்காய் குரல் கொடுப்பவர்களை ஏன் கொலை செய்ய வேண்டும் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியத கோழைகள் கருத்துக்கு முன்னே கொல கரங்களை நீட்டு கின்றனர்பாதக அரசுடன் தமிழ் நாம் ஒரே நாட்டில் ஒன்றாக வாழ்வதா? இது முடியுமா.... சமாதானத்தின் பெயரால் எங்களை எங்கள் புத்தியீவிகளை அழிக்கும் சிங்கள தேசம் எமக்கு முடிவான தீர்கமான ஒரு தீர்வைத்தருமா? சுகந்திரமான ஊடகம் இல்லாதா நாட்டில் ஜனநாயகம் ஒரு கேடா.. ஜனநாயகத்தை பற்றி பிணந்தின்னும் நாய்கள் பேசுகின்றார்கள்... அதற்க்கு பிற்பாட்டு பாட்_______________ தமிழ் அருவருடிகள் வெறு...இ தமிழ்ர்கள் சிறிலங்கா தமிழர்களாக இருக்கும் வரை.... தமிழன் சிறிலங்காவின் பருந்தகளுக்கு இரையாகிக் கொண்டே இருப்பான்.. நிமலராஜனாய்.... நடேசனாய்... குமார் பொன்னப்பலமாய்.... இன்று விசராமாய்... நாளை ஒரு புத்தியீவியாய்.. தமிழினத்தின் கொடரிக்காம்புகளால் தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும் இதற்க்கு தீர்கமான முடி வெடுக்க வேண்டியது................................................ நிலவன் - THAVAM - 04-29-2005 இதுதான் பாருங்கோ பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது என்பது ______________________________________________________________________ '' உண்மைகள் என்றும் உறங்குவதில்லை'' ______________________________________________________________________ - ஊமை - 04-30-2005 மாவீரர் தின உரையில் தலைவர் அவர்கள் தீர்க்க தரிசனமாகக் கூறியது போன்று சமாதானப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் அரசியல் வெறுமை ஏற்படுத்தி மக்களைத் திசைதிருப்பி போராட்ட வெறுமையை (வெறுப்பு) ஏற்படித்தி தமிழ் மக்களை நிரந்தர கொத்தடிமையாக்குவதே சிங்களத்தின் இன்றைய திட்டம். அதன் படிகளில் ஒன்றுதான் தராக்கியெனும் தமிழ்ப்பேனாவை இன்று மீளாத்துயிலில் இட்டது. இவைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒருநாள் பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்காய் மாறிய கதையாக முடியும். தருணம் வரும்வரை காத்திருந்து தக்க பதிலடி எம் தலைவன் கொடுப்பான் அது நிஜம். |