Yarl Forum
இதையும் கொஞ்சம் பாருங்களேன்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இதையும் கொஞ்சம் பாருங்களேன்... (/showthread.php?tid=4352)



இதையும் கொஞ்சம் பாருங்களேன்... - Malalai - 05-04-2005

<b>எப்படிங்க இப்படி?இதையும் கொஞ்சம் பாருங்களேன்...</b>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>மகா பணக்காரர்கள்</span>

இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் என்கிற பட்டியலை வெளியிட்டிருக்கிறது எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வுக் குழு. அந்த மெகா பணக்காரர்களின் சொத்து விவரம் இதோ: (கட்டுரையைப் படித்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு விடாதீர்கள்!).

1. லஷ்மி என் மிட்டல்

இவர்தான் நம்பர் ஒன் இந்தியப் பணக்காரர். ஐம்பதே வயதான இவரை இரும்பு ராஜா என்று அழைக்கலாம். இவருடைய இஸ்பேட் கம்பெனிஇ மிகப் பெரிய அளவில் இரும்பு உற்பத்தி செய்கிறது. இவருடைய பிசினஸ் சாம்ராஜ்ஜியம் மூன்று கண்டங்களில் பரவியிருக்கிறது. எழுபத்துநான்காயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்.

மிட்டலின் சொத்து மதிப்பு 2இ500 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய்.

2. அசீம் பிரேம்ஜி

சாஃப்ட்வேர் உற்பத்தியில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் அசிம்பிரேம்ஜி இந்தியாவின் இரண்டாவது பணக்காரர். இவரது விப்ரோ நிறுவனம்இ இந்தியாவிலேயே மிக அதிகமாக கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை உற்பத்தி செய்துஇ ஏற்றுமதி செய்கிறது. கம்ப்யூட்டர் துறையில் உலக அளவில் பில்கேட்ஸ் முதல் பணக்காரர் என்றால்இ அசீம் பிரேம்ஜி பதினோராவது பணக்காரர். சாஃப்ட்வேர் தவிரஇ சோப்பு தயாரிக்கிறார்இ சமையல் எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.

பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 930 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 40இ920 கோடி.

3. முகேஷ் ரூ அனில் அம்பானி

திருபாய்அம்பானி கடந்த நாற்பது ஆண்டுகளில் உருவாக்கிய பிசினஸ் சாம்ராஜ்யம்தான் ரிலையன்ஸ் குழுமம். முதலில் ஜவுளி உற்பத்திஇ பிறகு பெட்ரோலியம் என்று அடியெடுத்து வைத்த எல்லாத் துறையிலும் ரிலையன்ஸ§க்கு வெற்றி மேல் வெற்றி தான். இப்போது தகவல் தொடர்பிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டே ஆண்டுகளில் ஒரு கோடி செல்போன்களை விற்றுத் தீர்த்துவிட்டார்கள்.

முகேஷ்இ அனில் அம்பானி சகோதரர்களின் சொத்து மதிப்பு 700 கோடி அமெரிக்க டாலர். அதாவதுஇ இந்திய மதிப்பில் 30இ800 கோடி.

4. ஹிந்துஜா குடும்பம்.

லண்டனில் இருக்கும் ஹிந்துஜா குடும்பம்இ 1944_லேயே பட்டு ஏற்றுமதிஇ இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிட்டது. கனரக வாகனங்களை உற்பத்தி செய்வதிலும் ஹிந்துஜா குடும்பம் மிகப் பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கிறது. லாரிஇ பஸ் போன்ற வாகனங்களைத் தயாரிக்கும் அசோக் லேலண்ட் லிட் ஹிந்துஜா குடும்பத்தின் நிறுவனம்தான். நிதித் துறையிலும் இந்த நிறுவனம் வெற்றி நடை போடுகிறது. ஹிந்துஜா சகோதரர்களுக்கு இந்தியாவில் தான் நான்காவது இடம். சுவிட்சர்லாந்தில் மூன்றாவது இடம்.

இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 370 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 16இ280 கோடி.

5. குமார்மங்கலம் பிர்லா

இளம் தொழிலதிபர்களின் சிம்ம சொப்பனம் என்றால் அது குமார் மங்கலம் பிர்லா தான். தன்னுடைய இருபத்தெட்டாவது வயதிலேயே பிர்லா குழுமத்துக்குத் தலைவராக ஆகிவிட்டார். ஜவுளிஇ இன்சூரன்ஸ்இ இரும்பு உற்பத்திஇ தொலைத் தொடர்புஇ சிமெண்ட் என்று பலவிதமான பிசினஸ்களில் முக்கியமான கம்பெனியாக இருக்கிறது ஆதித்ய பிர்லா நிறுவனம்.

குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு 370 கோடி டாலர் இந்திய மதிப்பில் 16இ280 கோடி ரூபாய்.

_ ஏ.ஆர். குமார்

நன்றி: குமுதம்


- tamilini - 05-04-2005

Quote:கட்டுரையைப் படித்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு விடாதீர்கள்!).
இதில பெருமூச்சு விட என்ன இருக்கு.. கஸ்டப்பட்டார்கள் பலன் கிடைச்சிருக்கு.. கஸ்டப்படுங்கள் உளையுங்கள் பலனை அனுபவிக்கலாம் :wink:


- Malalai - 05-04-2005

Quote:கஸ்டப்படுங்கள் உளையுங்கள் பலனை அனுபவிக்கலாம்

ஆகா...அக்காவின் தாரக மந்திரம்...பயன் படுத்துங்க எல்லோரும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Thaya Jibbrahn - 05-05-2005

கஸ்டப்படுவதற்கும் உழைப்பதற்கும் கொஞ்சமஇ பின்புலமும் அவசியம். இதில் யாராவது பரம்பரை சொத்தினது பின்புலம் இல்லாமல் இருக்கின்றார்களா?
அதற்காக முயற்சி கூடாது என்பதல்ல. 28 வயதிற்குள் பணக்கார பட்டியலில் இடம்பிடிப்பதெல்லாம் சற்று கடினம்.

நாமும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்கலாம். அதை தொடர்ந்து வழிநடாத்திச் செல்ல கூடிய வாரிசுகள் அவசியம்.


- தூயா - 05-05-2005

மொத்தத்தில அங்க ஒரு தமிழன் பெயரும் இல்லை :?


- Malalai - 05-05-2005

Quote:மொத்தத்தில அங்க ஒரு தமிழன் பெயரும் இல்லை
எப்படி பபா இருக்க முடியும்....தெரியுமோ பெட்டிக்குள்ள நண்டு என்ற கதை? பபாக்களுக்கு தெரிந்திருக்கணுமே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 05-05-2005

[quote="tamilini"][quote]
கஸ்டப்படுங்கள் உளையுங்கள் பலனை அனுபவிக்கலாம் :wink:[/quote]
ஆன நாட்டு நடப்பைப் பாத்த பெட்டையளை பெத்த தகப்பன்மார் தான் கஸ்டப்பட்டு உழைக்கினம் போல எனக்கு தெரியுது பெடியளை பெத்தவங்கள் சும்மா இருந்து போட்டு கடைசிலை சீதனம் எண்ட பேரிலை அள்ளிக்கொண்டு போயிடுவாங்கள்...ம்....ம்..... அப்ப அவங்கள் கஸ்டப்படாமலே பணக்காரங்கள் ஆகிவிடுவாங்களே அதுக்கு என்ன செய்யிறது..........?


- stalin - 05-05-2005

MUGATHTHAR Wrote:[quote=tamilini]
Quote:கஸ்டப்படுங்கள் உளையுங்கள் பலனை அனுபவிக்கலாம் :wink:
ஆன நாட்டு நடப்பைப் பாத்த பெட்டையளை பெத்த தகப்பன்மார் தான் கஸ்டப்பட்டு உழைக்கினம் போல எனக்கு தெரியுது பெடியளை பெத்தவங்கள் சும்மா இருந்து போட்டு கடைசிலை சீதனம் எண்ட பேரிலை அள்ளிக்கொண்டு போயிடுவாங்கள்...ம்....ம்..... அப்ப அவங்கள் கஸ்டப்படாமலே பணக்காரங்கள் ஆகிவிடுவாங்களே அதுக்கு என்ன செய்யிறது..........?
2 , 3,4 பொடியன்களை பெறுகிறததுக்கு try ஓன்று போட்டு பார்க்கிறது தான்


- Eswar - 05-06-2005

முதல் 5 பேர்களுக்குள் எனது பெயர் போடாததையிட்டு நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஆரது லிஸ்ட்டுப் போட்டது.


- Niththila - 05-06-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll:


- Malalai - 05-06-2005

Quote:முதல் 5 பேர்களுக்குள் எனது பெயர் போடாததையிட்டு நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஆரது லிஸ்ட்டுப் போட்டது.
உலத்தையே சொத்தாக வைத்திருக்கும் ஈஸ்வரா உங்களை லிஸ்டில் சேர்த்தால் தான் தெரியுமா நீங்க பணக்காரன் என்று..... :wink: :wink: :wink: :mrgreen:


- kavithan - 05-07-2005

ஈஸ்வரா.. வானும் மண்ணும் பிரன்ஸிப் ஆகுது ஈஸ்வரா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 05-07-2005

kavithan Wrote:ஈஸ்வரா.. வானும் மண்ணும் பிரன்ஸிப் ஆகுது ஈஸ்வரா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன சொல்லுறீங்க கவிதன் அண்ணா :? :?