![]() |
|
இளவரசன் இளவரசி காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: இளவரசன் இளவரசி காதல் (/showthread.php?tid=4330) |
இளவரசன் இளவரசி காதல் - Malalai - 05-06-2005 [size=18][b]மனைவிக்கு மரியாதை சமீபத்தில் ஜப்பானில் நடந்த விஷயம் இது..... ஜப்பானிய இளவரசர் தன் மனைவிக்குத் தந்த மரியாதையை மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு உலகின் அத்தனை பெண்களும் புருவம் உயர்த்தி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே அரச குடும்பங்கள் இன்னும் வலுவாக இருக்கும் சில நாடுகளில் முக்கியமான ஒன்று ஜப்பான். ஜப்பானின் சக்கரவர்த்தியான அகினிடோஇ சக்கரவர்த்தினி மிச்சிக்கோவின் ஒரேயரு ஆண் வாரிசு நருஹிட்டோ. சக்கரவர்த்தி அகினிடோவுக்குப் பிறகு சிம்மாசனம் ஏறப் போகிறவரும் இவர்தான். இப்படி ராஜ சிம்மாசனத்தில் அமரும் சக்கரவர்த்தியை ஜப்பானிய மொழியில் ஷாமாம் என்று அழைக்கிறார்கள். இளவரசர் நருஹிட்டோ நன்கு படித்தஇ சுறுசுறுப்பான இளைஞர். நவீன சிந்தனை உள்ளவர். அரசாங்க அலுவல்களில் ஆர்வம் கொண்டவர். பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அரசாங்க விழாவின்போது வெளியுறவுத்துறையில் பதவியிலிருந்த மசாகோ என்ற பெண்ணை தற்செயலாக சந்தித்து காதல் கொண்டார் இளவரசர். அவர் சக்கரவர்த்தியிடமும்இ தாயிடமும் தன் காதலை வெளிப்படுத்தியபோதுஇ அவர்கள் இந்தக் காதலுக்கு சம்மதிக்கவில்லை. காரணம்இ ராஜகுடும்பத்திலேயே இளவரசருக்கு அவரது தாய்வழிஇ தந்தைவழி உறவில் திருமண வயதில் பெண்கள் இருந்தனர். இன்னொரு காரணம்இ மசாகோ அரசாங்க வேலை செய்யும் ஒரு சாதாரணப் பெண் என்பது. ஆனால் நருஹிட்டோ விடுவதாகயில்லை. மணந்தால் மசாகோவைதான் மணப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார். வேறு வழியின்றி மசாகோவை நேரில் பார்க்க சம்மதித்தார்கள் அவரது பெற்றோர். தனது அடக்கமான குணத்தாலும்இ பெரியோர்களிடம் காட்டும் மரியாதையாலும்இ குறிப்பாக... நல்ல பண்புகளாலும் முதல் சந்திப்பிலேயே சக்கரவர்த்தி குடும்பத்தினரை கவர்ந்துவிட்டார் மசாகோ. அப்புறமென்ன?..... நருஹிட்டோவுக்கும்இ மசாகோவுக்கும் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் கோலாகலமாக நடந்தது திருமணம்! சார்லஸ்_டயனா திருணத்துக்கு இணையாக உலகையே கலக்கியது இந்த அரச குடும்பத்து திருமணமும்! ஆனால் இந்தத் திருமணத்தின் மூலம் சிலர் படு எரிச்சலும்இ ஆத்திரமுமாக இருந்தனர். இளவரசருக்கு பெண்தர காத்துக் கொண்டிருந்த அவரது அரண்மனை உறவினர்கள்தான் அவர்கள்! இதனால்இ அரண்மனைக்குள் மருமகளாக நுழைந்த மசாகோவை ஓரங்கட்ட முதலிலிருந்தே ரகசிய முயற்சிகள் செய்ய ஆரம்பித்துள்ளனர். அரண்மனை காரியங்களில் மசாகோ தலையிடாமலிருக்கஇ பல விஷயங்கள் அவரிடமிருந்து மறைக்கப்பட்டதாம். நருஹிட்டோவுக்கும் இது புரிந்தது. அதனால் மனைவியை எங்கும் விட்டுத் தராமல் அவரை அரவணைத்துஇ ஆறுதலாக இருந்துள்ளார். அரண்மனைக்குள் யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த விழாவுக்கு எப்படி உடை உடுத்த வேண்டும் என்பது முதற்கொண்டு அரண்மனை உணவுப் பழக்கங்கள் வரை நருஹிட்டோதான் தன் காதல் மனைவிக்கு தனி அக்கறையுடன் சொல்லிக் கொடுத்தாராம். இனிமையாக கழிந்த இந்தக் காதல் தம்பதியின் திருமண வாழ்வில் கடந்த சில வருடங்களாக இருவரும் ஒரு பெரும் மனக்கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது! திருமணமாகி பல வருடங்கள் கழிந்தபின்பும் இளவரசி கர்ப்பமாகாமல் இருந்தார். இதுதான் சாக்கு என்று அரண்மனை வம்புவட்டம் இளவரசியை குறை சொல்ல ஆரம்பித்து விட்டது. அரண்மனைக்கு வாரிசு இல்லாமல் போய்விடக்கூடாது என்பதால் சக்கரவர்த்திகளும் கூட பொறுமை இழந்தனர். தவிர திருமணத்தின் போதே இருபத்தி ஒன்பது வயதாக இருந்த இளவரசிக்கு வயதும் ஏறிகொண்டே சென்றது! ராஜகுடும்பத்துக்கு நேர் வாரிசு இல்லாமல் போகப்போகிறது என்று இளவரசர் நருஹிட்டோவின் காதுபடவே பேசியுள்ளனர். அவருக்கு வேறு திருமணம் செய்யப் போவதாக பேச்சுவார்த்தைகளும் எழுந்தன. இதனால் வெளியே சொல்ல முடியாத மனவேதனையில் தவித்த மசாகோவுக்கு நருஹிட்டோதான் ஆறுதலாக இருந்திருக்கிறார். ஒருவழியாக கடவுளின் அருள் கிடைத்தது..... தனது 39 வயதில் கர்ப்பம் தரித்தார் மசாகோ. சக்கரவர்த்திகள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள். மிக அழகாகப் பிறந்தது ஒரு பெண் குழந்தை. தங்கள் செல்ல வாரிசுக்கு அய்கோ என்று பெயர் வைத்தனர் நருஹிட்டோவும் மசாகோவும். அய்கோ என்றால் ஜப்பானிய மொழியில் அன்புக் குழந்தை என்று அர்த்தமாம்! ஆனால் அப்போதும் ஒரு பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ராஜவம்ச சட்டப்படி ஆண்குழந்தை பிறந்தால் தான் முடிசூடமுடியும். இதனால் இன்னொரு குழந்தையை ஆண்குழந்தையாகப் பெற்றுக்கொடு என்று மசாகோவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர் அரண்மனை உறவுகள். தொடர்ந்து இவர்கள் கொடுத்த நெருக்கடிகள்இ அவமானங்கள்இ ஐயோ.... இவர்கள் அரச வாரிசுக்காக இளவரசருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற திகில்இ எல்லாம் கலந்து பலத்த மன உளைச்சலுக்கு ஆளானார் மசாகோ. நடப்பவைகளைப் பார்த்து நருஹிட்டோவுக்கோ பயங்கர கோபம்!.... தன் காதல் மனைவியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்ததைப் பார்த்த இளவரசர் உடனடியாக ஒரு விஷயத்தை செய்ய முடிவெடுத்தார். அரண்மனை முக்கியஸ்தர்களைக் கூப்பிட்டு நாட்டின் அந்த பாரம்பரிய சட்டம் பற்றி ஆலோசித்தார். பின்பு பெண்களும் முடிசூடிக் கொள்ளலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார்...! தனதுஇ இந்த முடிவுக்கு ஜப்பானிய மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களா இல்லையா என்று பல்வேறு குழுக்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தவும் சொன்னார். விஷயம் அவர் மகிழத்தக்க அளவில்தான் வந்தது. ஜப்பானிய மக்களில் பெரும்பாலானவர்கள்இ பெண் சக்கரவர்த்தினி முடிசூட்டப்படுவதை ஆதரித்துள்ளனர்!.... தவிரஇ ஜப்பானில் உள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து ராஜ குடும்பத்து வாரிசுரிமை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர ஆவன செய்யப்படுகிறது. இதன்படி இளவரசர் நருஹிட்டோவுக்கு அப்புறம் அடுத்து ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள அய்கோ வுக்குத்தான் முடிசூட்டப்படும்! இளவரசரின் காதல் மனைவி சக்கரவர்த்தினி ஆவார். இப்போது மசாகோவை எதிர்த்த அரண்மனை உறவுகள் செய்வதறியாது விழிக்கிறார்கள். மசாகோவுக்கு அடங்கி நடக்க முயற்சிக்கிறார்கள். தன் வாழ்க்கை இனி தொலைந்து போகாமல் இருக்கும் என்று மசாகோவின் முகத்தில் இப்போதுதான் ஒரு நிம்மதி தெரிகிறது! இதைவிட பெரிய பரிசாக ஒரு கணவர் மனைவிக்கு வேறென்ன தர முடியும்? _ பவானி நன்றி: குமுதம் - tamilini - 05-06-2005 ம் காதல் யோடி;க்கு வில்லன் வில்லிகள் அங்கையுமா..?? :wink: எங்கட அண்ணன்ர மோளுக்கு.. இளவரசன் கிடைச்சிட்டான். அண்ணாவுக்கு கவலையில்லை என்று பாத்தன். இது வேறையாய் போச்சு.. - ottan - 05-06-2005 எங்களுக்கு இங்கு அக்கா வில்லி என்றால் ஜப்பானிலும் அக்கா மாதிரி ஆட்கள் இருக்கினம். :oops: :oops: :oops: - Malalai - 05-06-2005 Quote:எங்கட அண்ணன்ர மோளுக்கு.. இளவரசன் கிடைச்சிட்டான். அண்ணாவுக்கு கவலையில்லை என்று பாத்தன். இது வேறையாய் போச்சு..என்னத்தை ஏதோ முணுமுணுக்கிறிங்க போல.... :wink: :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 05-06-2005 அடடா பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். இளவரசியின் கவலை இளவரசிக்குத்தான் புரியுமோ????? பார்த்தீங்களே மழலை உங்களுக்கு காதலிலேயே பிரச்சினை அங்கே கல்யாணமாகியும் பிரச்சினை பொதுவாய் வாழ்க்கையே பிரச்சினைதான்.
- ottan - 05-06-2005 வசம்பு அண்ணா பொதுவாக அரசகுடும்பம் என்றாலே பிரச்சனைதான். - Malalai - 05-06-2005 Quote:இளவரசியின் கவலை இளவரசிக்குத்தான் புரியுமோ????? பார்த்தீங்களே மழலை உங்களுக்கு காதலிலேயே பிரச்சினை அங்கே கல்யாணமாகியும் பிரச்சினை பொதுவாய் வாழ்க்கையே பிரச்சினைதான்.வம்பு பண்ணாதீங்க வசம்பு அண்ணா....எனக்கு என்ன காதலிலை பிரச்சனை ஆஆஆ? இளவரசன் குத்துக்கல்லாட்ம் இருக்கிறார்..யஸ்ட் வரணும் அவ்வளவு தான்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-06-2005 Quote:வசம்பு அண்ணா பொதுவாக அரசகுடும்பம் என்றாலே பிரச்சனைதான்மம்மிக்கு தெரியதா பிரச்சனையா என்ன?..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|