Yarl Forum
நினைவலைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நினைவலைகள் (/showthread.php?tid=4308)

Pages: 1 2 3


நினைவலைகள் - Malalai - 05-10-2005

<img src='http://img165.echo.cx/img165/1830/wave23ox.jpg' border='0' alt='user posted image'>

நெஞ்சினில் நெருக்கமாக
நெருங்கி உறவாடிடும்
நினைவலைகள்
மிஞ்சி வழிகிறதே
அணைகள் ஏதுமின்றி...!

நினைவலைகள் மோதிடவே
பொங்கிடும் ஞாபகக்கடல்...!
அடங்கிடாத மனமதுவும்
ஆசையுடன் ஆர்ப்பரிக்கும்...!
ஆதங்கமாய் ஞாபகங்கள்
அடியதனை விடைகேட்கும்
அடியிலருந்து விடைபெற்று
மேல் நோக்கி நீந்திடவே...!

நீந்திய ஞாபகத் துளிகள்
கண்களைப் பனிக்க வைக்கும்...!
கண் நீர்த்துளிகள்
ஆறாக அணி சேர்ந்து
நதியாகி தரையை முட்டும்...!

எட்டிய ஞாபகங்கள்
தட்டியே எழுப்பிடுமே
பொக்கிஷமாய்
பூட்டி வைத்த
பொன்னான நாட்களையே....!

செயற்கையான மின்னொளியை
விஞ்சிய
இயற்கையான நிலவொளியில்
அம்மாவுடன் கொஞ்சி
கும்மாளமடித்த
குழந்தைப் பருவம்
பசுமரத்தாணியாய்
நெஞ்சில் பதிந்திருக்கிறதே...!

பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!

மனமதனை மகிழ வைக்கும்
மழைக்காலம்
பாடப்புத்தகங்களுக்கு
வேட்டு வைக்கும் காலமது...!
படித்த பாடங்கள் கப்பலாக
மழை நீரில் தத்தளித்து
கரை சேர்ந்திட துடிதுடிக்கும்...!
கப்பல் செய்த களிப்பு
இறுதியாண்டு பரீட்சையினை
மறக்கடிக்க செய்துவிடும்...!
ஆண்டு இறுதியில் தான்
செய்து விட்ட கப்பல்கள்
கொண்டு சென்ற பாடங்கள்
நினைவுக்கு வரும்...!

ஒன்றில்லை இரண்டில்லை
ஒராயிரம் ஞாபகங்கள்...!
இதயத்தின் ஓரத்தில்
அடக்கமாய் அடங்கியிருந்தாலும்
அவ்வப்போது அடங்காது
கடலாக ஆர்ப்பரிக்கும்
கடந்த கால
பசுமையான
நினைவலைகள்...!


Re: நினைவலைகள் - Malalai - 05-10-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 05-10-2005

மனதில் நின்ற வரிகள்.........
உன் கண்கள் சொல்வதே!!
நல்ல கவிதை வரிகள் வாழ்த்துக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அன்புடன்
சுவிற்மிச்சி


- Malalai - 05-10-2005

நன்றி சுவிற்மிச்சி...வணக்கம் கனகாலங்களுக்ப்பிறகு யாழ்களத்தில் காலடி பதித்திருக்கிறீர்கள் போலுள்ளதே....மீண்டும் வருக.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 05-10-2005

வணக்கம் மழலை
நன்றி ....
நேரம் கிடைக்கவில்லை ...... மன்னிக்கவும் :oops:


- sOliyAn - 05-10-2005

Quote:ஆண்டு இறுதியில் தான்
செய்து விட்ட கப்பல்கள்
கொண்டு சென்ற பாடங்கள்
நினைவுக்கு வரும்...!
பொம்பிளைப்பிள்ளையள் கப்பல்.. ஆம்பிளைப்பிள்ளையள் ரொக்கெற்றா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Malalai - 05-10-2005

என்ன நீங்க ரொக்கட் செய்துவிட்டியளா? சரி கடைசில எல்லாமே ஒன்று தானே பரீட்சைக்கு திணறல் தானே... :wink: :wink: :wink:


- Malalai - 05-10-2005

Quote:வணக்கம் மழலை
நன்றி ....
நேரம் கிடைக்கவில்லை ...... மன்னிக்கவும்
அதில் என்ன....நேரம் கிடைக்கும் போது வாங்க.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 05-10-2005

Quote:பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!
அப்பவே அப்படி என்றால். இப்ப எப்படியோ..?? ம் ம்.. நல்லாய் இருக்கு பசுமை நினைவுகள், சொல்லிய விதமும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-10-2005

Quote:நினைவலைகள் மோதிடவே
பொங்கிடும் ஞாபகக்கடல்...!

ஞாபகக்கடல் பொங்கிவிட்டால சுகமாகவும் இருக்கும் அதேநேரம் அந்த பொழுதுகளை நினைத்து மனம் கவலையாகவும் இருக்கும்.


- kuruvikal - 05-10-2005

கடல் அலைகள் கரையோடு சரியும்...மன அலைகள் உடலோடு இருக்கும் உயிர் வரை...!

தன் மன அலைகளை களக் கடலில் பரப்பி விட்ட மழலைத் தங்கைக்கு வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 05-10-2005

Quote:மேற்கோள்:

பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!


அப்பவே அப்படி என்றால். இப்ப எப்படியோ..?? ம் ம்.. நல்லாய் இருக்கு பசுமை நினைவுகள், சொல்லிய விதமும்.
நன்றியக்கா....சும்மா இப்படித்தான் ஆனா காரியத்திலையும் கண் இருக்கும்....இப்ப நான் எங்க போறது அம்புலிமாமா கதைக்கு... Cry Cry Cry


- Malalai - 05-10-2005

Quote:ஞாபகக்கடல் பொங்கிவிட்டால சுகமாகவும் இருக்கும் அதேநேரம் அந்த பொழுதுகளை நினைத்து மனம் கவலையாகவும் இருக்கும்.
சுகமான நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது தான் சந்தோசமாக இருக்கும்....ம்ம் கவலையாவும் இருக்கும்...

Quote:கடல் அலைகள் கரையோடு சரியும்...மன அலைகள் உடலோடு இருக்கும் உயிர் வரை...!

தன் மன அலைகளை களக் கடலில் பரப்பி விட்ட மழலைத் தங்கைக்கு வாழ்த்துக்கள்...!
நன்றி குருவி அண்ணா.....பொங்கி வழிஞ்சிட்டா..அது தான் களத்திலையும் வந்திட்டுது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Mathan - 05-10-2005

Malalai Wrote:இப்ப நான் எங்க போறது அம்புலிமாமா கதைக்கு... Cry Cry Cry

அம்புலிமாமா கதை இப்போ கிடைப்பதில் கஷ்டமில்லை. ஆனால் கிடைத்தாலும் அது முன்பு போல் சுவைக்காது. ஏன் என்றால் அப்போது அம்புலிமாமா கதையுடன் அந்த நேரமும் சூழலும் சேர்ந்து இனித்தது இப்போது அப்படி கிடையாதே. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

புலம் பெயர்ந்து பல வகையான ஐஸ் கிரீம் வகைகளை ருசித்திருந்த போதிலும் முன்பு பாடசாலை முடிய நண்பர்களுடன் லிங்கம் கூல்பார் (அல்லது கல்யாணி கிரீம் ஹவுஸ்) என்று குடித்த ஸ்பெஷல் ஐஸ்கீரிமை நினைத்து மனம் ஏங்கியது. பின்பு யாழ் சென்றிருந்த போது தேடி சென்று அதே ஐஸ்கீரீமை சாப்பிட்டபோது அது இனிக்கவில்லை.


- tamilini - 05-10-2005

Quote:பின்பு யாழ் சென்றிருந்த போது தேடி சென்று அதே ஐஸ்கீரீமை சாப்பிட்டபோது அது இனிக்கவில்லை.
ஏன்.?? என்னாச்சு..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- Mathan - 05-10-2005

அப்போது அந்த சூழலில் அந்த நேர ஞாபகங்களுடன் இருந்த இனிமை இப்போது இல்லை.


- Malalai - 05-10-2005

Quote:மேற்கோள்:

பின்பு யாழ் சென்றிருந்த போது தேடி சென்று அதே ஐஸ்கீரீமை சாப்பிட்டபோது அது இனிக்கவில்லை.


ஏன்.?? என்னாச்சு..??
ஏன் என்றால் மதன் அண்ணாவின் கல்யாணி அங்கில்லை...(மதன் அண்ணா கண்டுகாதைங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 05-10-2005

ஆஆஆகா.. யாரது கல்யாணி.. புதுசு புதுசா எல்லாம் எடுத்து விடுறியள்.. மழலை.. :? :wink:


- Malalai - 05-10-2005

Quote:ஆஆஆகா.. யாரது கல்யாணி.. புதுசு புதுசா எல்லாம் எடுத்து விடுறியள்.. மழலை..
அக்கா முன்னாலை போய் பாருங்க மதன் அண்ணா சொன்ன கருத்தை அதுல கல்யாணி என்று போட்டு இருக்கிறார்....அப்புறம் மதன் அண்ணாக்கு நிஜமாகவே ஒரு கல்யாணி இருந்திடப்போகுது..பிறகு மதன் அண்ணா பாவம் வாங்கிக்கட்டணும்.... :mrgreen: :mrgreen: .


- Eswar - 05-10-2005

Quote:இதயத்தின் ஓரத்தில்
அடக்கமாய் அடங்கியிருந்தாலும்
அவ்வப்போது அடங்காது
கடலாக ஆர்ப்பரிக்கும்
கடந்த கால
பசுமையான
நினைவலைகள்...!
கண்களினோரம் கண்ணீர் வருதே.......