| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 569 online users. » 0 Member(s) | 566 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,648
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,542
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| வணக்கம், |
|
Posted by: Taraki - 05-14-2005, 09:03 PM - Forum: அறிமுகம்
- Replies (19)
|
 |
அனைவருக்கும் அன்பு வணக்கம்,
கன நாளா யாழ் களம் வாசிக்கிறனான், எழுத இவ்வளவு கஷ்டம் எண்டு தெரியாது, எழுத கன விஷயம் இருக்குது, அனா நேரம் வருகுதோ தெரியாது. பேரக் காப்பாத வேணுமே ?
|
|
|
| குமுதினிப் படுகொலை |
|
Posted by: Mathan - 05-14-2005, 12:16 PM - Forum: தமிழீழம்
- Replies (10)
|
 |
குமுதினிப் படுகொலை - நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை
மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது.
குமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இறங்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற்றப்பட்டு திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குமுதினியின் சில பணியாளர்கள் தாங்கியிருக்கின்றனர். இவர்களிடம் செல்லும் சிறிலங்கா கடற்படையினர் 1985ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் தப்பிய படகுப் பணியாளர் எங்கே இருக்கிறார் என விசாரிக்கின்றனர். அதேபோல் குறிகட்டு வான் இறங்குதுறையிலும் நைனாதீவு சிறிலங்காக்கடற்படை இறங்குதுறையிலும் அந்த தப்பிய படகுப்பணியாளரைப்பற்றி தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் விசாரித்தே வருகின்றனர். இது ஏன்?.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது.
இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.
குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம் கோடரிகளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப்போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்த மக்களும் உண்டு.
இச்சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதிசெய்யப்பட்டுபோடப்பட்டது. உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.
ஒருவர் நுழைவாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும்கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழுமாதக் குழந்தைமுதல் வயோதிபர்களைவரை ஈவிரக்கமற்றமுறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் இறந்தவர் போலகிடந்த ஒரேஒரு படகுப்பணியாளர் மட்டும் உயிர்தப்பிக் கொண்டார். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனாவைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம்மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர். உயிரதப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். இருபெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர். படகுப்பயணிகள் தப்பிவிடக்கூடாது
என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சிகளை அழித்துக்கொள்வதிலும் தேடிக்கொள்வதிலும் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர்.
போர்கள் நடந்த மன்னர் கால ஆண்டுகள் 40,50 கடந்தாலும் போர்களை மீளவும் உயிர்பெற்று பெரும் விளைவுகளையும் பரபரப்புகளையும் ஏற்படுத்தும் அதேபோல விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக்காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். மனச்சாட்டிகளை உலுப்பப்வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பி இன்று அச்சம்காரணமாக தலைமறைவாகி உண்மைகளை மூடி மறைத்தவர்கள் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.
தவபாலன் ஈழநாதம்.
|
|
|
| கேணல் கிட்டுவின் குரங்கு |
|
Posted by: Mathan - 05-14-2005, 12:11 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
<img src='http://www.kumudam.com/theeranadhi/010505/pg6-t.jpg' border='0' alt='user posted image'>
என்னுடைய பெயர் சிவபாக்கியலட்சுமி. வயது 82. எனக்கு மறதி வரவரக் கூடிக்கொண்டே போகுது. காலையிலே மருந்துக் குளிசையை போட்டேனா என்பதுகூட மறந்துபோகுது. என் மூளையில
இருந்து சில ஞாபகங்கள் மறையுமுன்னர் அதை உங்களுக்கு சொல்லவேணும் என்பதுதான் என் ஆசை.
என்னுடைய புருசன் அரசாங்க உத்தியோகஸ்த்தர். அவர் ஓய்வு பெற்றபிறகு யாழ்ப்பாணத்தில் எங்கட சொந்த ஊரான கொக்குவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஒரே மகளைக் கட்டிக் கொடுத்து
வெளிதேசம் அனுப்பிவிட்டோம். வாழ்நாள் முழுக்க சேமித்த காசில் ஒரு சின்ன வீட்டை சொந்தமாக கட்டி அதில் தங்கியிருந்தோம்.
என்னுடைய புருசன் சும்மா இருக்கமாட்டார். தோட்டத்தில் கத்தரி, வெண்டி, தக்காளி என்று போடுவார். வாழை மரத்தில் குலைகுலையாக தள்ளும். மரவள்ளியில் கிழங்கு விழும். என்னுடைய தம்பியின் மகள்மார் இரண்டுபேரும் எங்களோட தங்கியிருந்தார்கள். வீட்டில்
இருந்து பள்ளிக்கூடம் போய்வருவார்கள். மூத்தவளுக்கு வயது 14, மற்றவளுக்கு 13. மாதாமாதம் வரும் பென்சன் காசில் மட்டுமட்டாக சீவித்துக்கொண்டு வந்தோம். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். அது 1986ஆம் ஆண்டு. என்னுடைய 82 வருட வாழ்க்கையில்
இது மிகவும் சந்தோசமான ஒரு பகுதி.
யாழ்ப்பாணத்தில் சங்கிலியின் காலம், பரநிருபசிங்கன் காலம் என்று இருக்கிறதல்லவா? அதுபோல கேர்ணல் கிட்டுவின் காலம் என்று ஒன்று இருந்தது. சனங்கள் அவரில் அளவில்லாத
மதிப்பு வைத்திருந்தார்கள். யாழ்ப்பாணம் கோட்டையில் அப்போது கேப்டன் கொத்தலாவலை இருந்தார். கிட்டுவும் அவரும் எதிரிகள் என்றாலும் நட்பாக இருந்தார்கள். கோட்டைக்குவிறகு, மாம்பழம் என்று கிட்டு அவ்வப்போது அனுப்பி வைப்பார். இப்ப ஜனாதிபதியாக
இருக்கும் சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்கா யாழ்ப்பாணம் வந்தபோது சுமுகமான வரவேற்பு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியவர் இவர்தான்.
கிட்டுவுக்கு ஒரு காதலி இருந்தது யாழ்ப்பாணம் முழுவதுக்கும் தெரியும். அவர் பெயர் சிந்தியா. மருத்துவக் கல்லூரி மாணவி. ஒரே ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். இவரைப் பார்த்துவிட்டு மிற்சுபிசி லான்சரில் திரும்பும்போதுதான், யாரோ இனம்
தெரியாதவர்கள் வீசிய கைக்குண்டில் கிட்டு தனது வலதுகாலை இழந்தார். பின்னாளில் எங்கள் வீட்டில் கிட்டு தங்கியிருந்தபோது செயற்கை காலுடன்தான் இருந்தார்.
இயக்கக்காரர்கள் அவ்வப்போது வந்து எங்கள் வீட்டு விறாந்தையில் தங்கிவிட்டு அதிகாலையிலேயே போய்விடுவார்கள். வாய் திறந்து ஒரு கோப்பை தேத்தண்ணி என்று கேட்கமாட்டார்கள். நாங்களாக கேட்டுக் கொடுத்தால் உண்டு. விதம்விதமான ஆயுதங்களை
எல்லாம் காவி வருவார்கள். கைக்குண்டுகள், துப்பாக்கிகளை கழட்டி கழட்டி பூட்டுவதும் துடைப்பதுவுமாக இருப்பார்கள். திடீரென்று ஒரு செய்தி வரும், உடனேயே மறைந்துவிடுவார்கள்.
கிட்டு எப்பொழுதாவது அபூர்வமாகத்தான் வருவார். வந்தால் தன் சகாக்களுடன் சில நாட்கள் தங்குவார். சட்டு புட்டென்று ஓடர்கள் போடுவார். வீடு ஒரு புதுப்பொலிவு அடைந்து அமளிதுமளியாக இருக்கும். அந்தச் சமயங்களில் எல்லாம் இந்த இரண்டு பெட்டையளும் என் காலைச் சுற்றியபடி நிற்பாளவை. என்னைவிட்டு ஒரு இன்ச் அகலமாட்டினம்.
ஒரு முறை கிட்டு வெளி விறாந்தையில் அமர்ந்திருந்தார். ஒரு கையை கதிரையின் கைப்பிடியில் வைத்திருந்தார். மற்றக் கையின் ஒரு விரலால் தேத்தண்ணி கோப்பையின் கைப்பிடியை சுற்றி வளைத்துப் பிடித்திருந்தார். சேர்ட்டைக் கழற்றியிருந்தபடியால் கையில்லாத பனியனில் அவருடைய கைகள் உருண்டை உருண்டையாகத் தெரிந்தன. என்னை இடித்தபடி பின்னால் இவள்கள். என்ன அம்மா என்றார் கிட்டு. உங்கள் கையெழுத்து வேணுமாம். அதற்கென்ன என்று சிரித்தபடி இரண்டு பேருக்கும் போட்டுக்கொடுத்தார்.
அப்பொழுதுதான் முதன்முதல் பார்த்தேன். அவருடைய வலது பக்கத்தில் ஒரு குரங்கு. பார்த்த உடனேயே அது கண்ணுக்கு தெரியாது. அவருடைய ஆர்மி உடுப்புக் கலரிலேயே
இருப்பதால் மறைந்துபோய் இருந்தது. கிட்டுவின் எந்த முக்கியமான கூட்டம் என்றாலும் அங்கே குரங்கு இருக்கும். அடிக்கடி அதை திரும்பி பார்த்தபடிதான் கிட்டு பேசுவார். ஏதோ ஆலோசனை கேட்பதுபோல அது இருக்கும்.
கிட்டு துப்பாக்கி சுடுவதில் வல்லவர். இரண்டு கைகளிலும் துப்பாக்கி வைத்துக்கொண்டு இலக்குகளை மாறி மாறி சுடுவார். புதிதாக இயக்கத்தில் சேர்ந்த பையன்கள் வாய் பிளந்து
பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவர்களோடு ஒரு இளம் பையன் இருந்தான். ஊதிவிட்டால் விழுந்துவிடுவான். அடிக்கடி சிரிப்பான். அவனுடைய முன் பல்லில் ஒரு துண்டு உடைந்து போனதால் சிரிக்கும்போது மிக அழகாக தென்படுவான்.
ஒரு நாள் இவன் என்னிடம் அவசரமாக வந்து, அம்மா அந்தப் பிலாப்பழம் பழுத்துப் போச்சு போல கிடக்கு என்று மேலே சுட்டிக்காட்டினான். அது அருமை அருமையாய் காய்க்கிற மரம்.
பழம் தேன்போல இனிப்பு. தம்பியவை நீங்கள் புடுங்கி சாப்பிடுங்கோ என்றேன்.
நான் இந்தப் பக்கம் திரும்பியதும் ஒரு பெடியன் அணில் ஏறுவதுபோல ஏறி நிமிடத்தில் பழத்தை இறக்கிவிட்டான். கீழே வந்தபிறகு மரத்தில் இருந்ததிலும் பார்க்கப் பழம்
பெண்ணம்பெரிய சைஸாக இருந்தது. நான் வீட்டுக்குள்ளே போய் கத்தியையும், நல்லெண்ணெய் போத்தலையும் எடுத்து வந்தேன். அதற்கிடையில் பழத்தை கல்லிலே போட்டு பிளந்து கைகளால்
சுளைகளைப் பிடுங்கிப் பிடுங்கி சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். கொட்டைகளை எல்லாம் குவித்து தென்னோலை போட்டு எரித்து அதையும் சாப்பிட்டார்கள். தடல்கள்தான் மிச்சம். நான் அதை மாட்டுக்குப் போட்டேன். சில நிமிடங்களுக்கு முன் மரத்திலே பழமாகத்
தொங்கியதற்கு அத்தாட்சியாக ஒன்றுமே மிஞ்சவில்லை.
இந்தக் காலங்களில் எனக்கிருந்த ஒரே கஷ்டம் இந்த இரண்டு குமரகளையும் கட்டிக்காப்பதுதான். அதுவும் இளையவளோடு மாரடிக்க ஏலாது. ஒருநாள் இந்தப் பையன் அம்மா, எல்லோரும் கனடாவுக்கு ஓடினம். இது எங்கையிருக்கு? என்று அப்பாவியாகக் கேட்டான். நான் வாய் திறக்கும்முன் இளையவள் வந்து, அஞ்சாம் குறுக்குத் தெரு
என்று சொல்லிவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு ஓடிவிட்டாள். உள்ளே இரண்டுபேரும் கெக்கே கெக்கே என்று வயித்தைப் பிடிச்சுக்கொண்டு சிரிக்கிறாளவை.
சனிக்கிழமை காலை வேளை என்றால் இவளவையின் அரியண்டம் தாங்காது. அன்றைக்கு கடுமையான வெக்கை. நான் கை வேலையாய் இருந்தேன். ஒருத்தரை ஒருத்தர் இடிச்சுக்கொண்டு சிரித்தபடியே ஓடி வந்தாளவை. ஏதோ வில்லங்கம்தான். மாமி உங்கடை மூளைக்கு ஒரு வேலை என்றாள் மூத்தவள். மற்றவள் சாடையாக சிரிச்சுக்கொண்டு கால்களை விரிச்சபடி நின்றாள். ஒரு அறையின் சுவரில் இருந்து ஒரு நத்தை எதிர்ச் சுவருக்கு வெளிக்கிட்டது. அது பாதித் தூரத்தை இரண்டு நிமிடத்தில் கடந்தது. மீதித் தூரத்தில் பாதியை ஒரு
நிமிடத்தில் கடந்தது. மீதி தூரத்தில் பாதியை இன்னும் பாதி நேரத்தில் கடந்தது. இன்னும் மீதி தூரத்தில் பாதியை இன்னும் பாதி நேரத்தில் கடந்தது. இப்படியே போனது. நத்தை எப்போது மற்றச் சுவரை அடையும்? போங்கடி, எனக்கு வேலை கிடக்கு. நான்
உளுந்து நனையப் போடவேணும் என்று எழும்பினேன்.
அப்ப பாத்ரூம் கதவு கொஞ்சம் திறந்திருந்தது. உள்ளே யாரோ சோ சோ வென்று குளிக்கும் சத்தம் கேட்டது. என்னுடைய புருசன் வெளியே போனவர் இன்னும் வரவில்லை. இது யார் என்று
எனக்கு பயமாயிருந்தது. மெதுவாய் எட்டிப் பார்த்தேன். இவளவை எனக்குப் பின்னால். நான் கண்ட காட்சி மறக்கக்கூடியதல்ல.
கிட்டுவின் குரங்கு ஒரு மனிதரைப்போல நின்று தண்ணியை அள்ளி அள்ளி தலையிலே ஊத்தியது. பைப் திறந்து தண்ணி ட்ரம்மை நிறைத்துக்கொண்டிருந்தது. சற்று திரும்பி குரங்கு என்னைப் பார்த்தது. எதையுமே சட்டை செய்யாமல் மீண்டும் தண்ணீரை அள்ளி அள்ளி தலையிலே ஊத்தியது. திடீரென்று ஒரு எட்டு பாய்ந்து சோப் பெட்டியை தட்டியது. மூடி கழன்று சோப் உருள அதை எடுத்து கை, வயிறு, கழுத்து என்று முறையாக தேய்த்து, பிறகும் அள்ளிக்
குளித்தது. எல்லாம் முடிந்தபிறகு பைப்பை மூடியது. இனி டவலை எடுக்கும் என்று எதிர்பார்த்தேன். எடுக்கவில்லை. இன்னொருமுறை என்னை திரும்பி பார்த்துவிட்டு அப்படியே துள்ளிப் பாய்ந்து யன்னல் வழியாகப் போய்விட்டது.
கிட்டு எங்கள் வீட்டில் தங்கிய சமயங்களில் எல்லாம் சரியாக 11 மணிக்கு குரங்கு வந்து குளித்துவிட்டுப் போகும். பெட்டையள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் கேட்கும் முதல் கேள்வி மாமி, இன்றைக்கும் குரங்கு குளித்ததா? என்பதுதான்.
ஒரு நாள் இரவு நாங்கள் மூன்றுபேரும் உட்கார்ந்து கல், கத்திரிக்கோல், பேப்பர் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். இவளவை இரண்டு பேரையும் என்னால் ஏய்க்க முடியாது. நான் பேப்பரைக் காட்டினால் ஒருத்தி கத்தரிக்கோலை காட்டுவாள்; நான்
கல்லைக் காட்டினால் மற்றவள் பேப்பரைக் காட்டுவாள். இப்படி அளாப்பி அளாப்பி இரண்டுபேரும் மாறிமாறி வென்று கொண்டிருந்தார்கள். என்னுடைய இவர் அடிக்கடி சரி,
போய்ப் படுங்கோ என்று சொல்லி அலுத்துப் போனார். நேரம் போய்க்கொண்டே இருந்தது.
அப்ப பார்த்து வெளியிலே தடதடவென்று சத்தம் கேட்டது. நான் இவளவையை பேசவேண்டாம் என்று சைகை காட்டிவிட்டேன். எங்கள் வீட்டில் வழக்கமாகத் தங்கும் பையன்களுடன் சேர்த்து
இன்னும் புதிதாக மூன்றுபேர் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் சீரியஸ் முகத் தோற்றமுள்ளவர்களாக காணப்பட்டார்கள். இதற்குமுன் நாங்கள் பார்த்திராத கனமான ஆயுதங்களை எல்லாம் காவிக்கொண்டிருந்தார்கள். இதிலே ஒன்று தோளிலே வைத்து விமானத்தை சுட்டு விழுத்தும் ஆயுதம்.
நான் மரியாதைக்காக, தம்பியவை, சாப்பிட்டீங்களா? என்று கேட்டு வைத்தேன். எங்களுக்கு பழக்கமான இளம் பையன் இங்கையுமில்லாமல், அங்கையுமில்லாமல் எல்லாம்
பழகிப் போச்சு அம்மா என்றான். எனக்கு என்ன தோன்றியதோ தெரியாது. வதவதவென்று வீட்டிலே கிடந்த மா அவ்வளவையும் எடுத்து அரித்து புட்டு அவிக்கத் தொடங்கினேன்.
இதற்கிடையில் என் மருமகள்மார் இரண்டுபேரும் உற்சாகமாக தேங்காய் துருவி சம்பலும் போட்டுவிட்டார்கள். மூன்று நீத்துப்பெட்டி நிறைய புட்டையும், சம்பலையும் எடுத்துக்கொண்டு போனேன். அவர்கள் வெளி லைட்டை நூர்த்துவிட்டு மெழுகுத்திரி
வெளிச்சத்தில் ஒரு வரைபடத்தை சுற்றியிருந்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
சாப்பாட்டைக் கண்டதும் அவர்கள் முகத்தில் பொங்கிய சந்தோசத்தை சொல்லமுடியாது. ஆர் பெற்ற பிள்ளைகளோ. மௌனமாக அவ்வளவு புட்டையும் ஒரு சொட்டு மிச்சம் விடாமல் சாப்பிட்டு
முடித்தார்கள். அம்மா உங்களை மறக்க மாட்டோம் என்றார் அவர்களில் மூத்தவர்போல தோற்றமளித்த ஒருவர். அன்று இரவு வெகுநேரம் வரை அவர்கள் சத்தம் கேட்டபடியே இருந்தது.
அடுத்தநாள் அதிகாலை நான் எழும்பி வந்து பார்த்தபோது அவர்கள் போய்விட்டார்கள். அதுவே கடைசி. அவர்கள் இருந்ததற்கான தடயம் ஒன்றுகூட இல்லை. அதற்கு பிறகு போர் உச்ச நிலையை
அடைந்தது. கூட்டைவிட்டு வெளியேறின தேனீக்கள் போல அவர்கள் பிறகு வீடு திரும்பவே இல்லை.
அன்று காலை பேப்பரை படித்தபோதுதான் பெரிய ஒரு ஒப்பரேசன் நடந்தது தெரியவந்தது. நான் அவித்துக் கொடுத்த புட்டை நடுச்சாமத்துக்கு மேல் சாப்பிட்டுவிட்டு போன அத்தனை
போராளிகளில் எத்தனைபேர் திரும்பினார்களோ தெரியாது. அல்லது எல்லோருமே இறந்துபோனார்களோ, அதுவும் தெரியாது.
என் புருசன் மாரடைப்பில் திடீரென்று காலமானபிறகு நான் வெளிநாட்டுக்கு வந்து மகளுடன் தங்கியிருந்தேன். இங்கே வந்த ஒரேயரு தமிழ் பேப்பரில் கிட்டு இறந்துபோன செய்தியை
பிரசுரித்திருந்தார்கள். 33 வயது என்ன பெரிய வயதா? 33 வயதுக்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும்போது அவருக்கு மரணம் வந்தது. தானாக வரவழைத்த மரணம். 16 ஜனவரி 1993 என்பது
எனக்கு நல்ல ஞாபகம். கிட்டுவும் அவருடைய சகாக்கள் எட்டுப் பேரும் வந்த கப்பலை இந்திய ராணுவம் சுற்றி வளைத்துப் பிடித்தது. கிட்டுவும் போராளிகளும் தற்கொலை செய்துகொண்டார்கள். நடுக்கடலில் கப்பல் தீப்பற்றி எரிந்துபோனது. இப்படி படித்தேன்.
இப்பொழுது இங்கே தமிழ் பேப்பர்கள் கூடிவிட்டன. அவற்றினுடைய மறதியும் கூடிவிட்டது. சமீபத்தில் கிட்டுவினுடைய 12ஆவது நினைவுதினம் வந்தது. ஒரு பேப்பர் பத்தாவது தினம்
என்று எழுதியது. இன்னொரு பேப்பர் அவருடைய சகபோராளிகளின் எண்ணிக்கையை தவறாக எழுதியது. ஒவ்வொரு முறையும் நினைவுதின பேப்பர்களை நான் துழாவிப் படிப்பேன். ஒரு
இணைத் தளபதிபோல அவருக்கு பக்கத்திலேயே காணப்பட்ட குரங்கு பற்றி ஏதாவது சேதி வந்திருக்குமா என்று பார்ப்பேன். சரியாக காலை 11 மணிக்கு பைப் தண்ணீரில் குளிக்கப் பழக்கப்படுத்திய ஒரு வளர்ப்பு பிராணிக்கு நஞ்சுக் குப்பி கடிக்க பழக்கப்படுத்தியிருக்க மாட்டார்களா, என்ன? ஒரு வேளை அது கடல் தண்ணீரில் மூழ்கியும்
இறந்துபோயிருக்கலாம். அதுபற்றி ஒரு பேப்பரும் இன்றுவரை எழுதவில்லை.
அ. முத்துலிங்கம், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தற்போது மனைவியுடன் கனடாவில் வசித்து வருகிறார். அ.முத்துலிங்கம் கட்டுரைகளின் முழுத்தொகுப்பு (அங்கே இப்ப என்ன நேரம்) சமீபத்தில் தமிழினி பதிப்பகம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
நன்றி:- குமுதம்
|
|
|
| குமுதினிப் படுகொலை... |
|
Posted by: kuruvikal - 05-14-2005, 11:35 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
<img src='http://img42.echo.cx/img42/4166/one18co.jpg' border='0' alt='user posted image'>
<b>குமுதினிப் படகேறி
உறவுகள் சென்றனர்
கரைதனை எட்டாமல்
கறைதனில் வீழ்ந்தனர்
அலைகடல் நடுவினில்
அராஜகம் நடந்தது
புத்தன் புதல்வர்கள்
கொலைவெறியாட்டம் போட்டனர்
அகிம்சை என்பது
அகத்தினில் அழிந்தது
ஆயுதம் என்பது
ஆர்ப்பரித்து எழுந்தது
திசைகள் எங்கினும்
முடிவுகள் கோரம்...!
புலிதனின் வீரத்தில்
கிளர்ந்தனர் வேங்கைகள்
அப்பாவிகள் அழித்தவன்
கலம்தனைத் தகர்த்தனர்
ஆதிக்கம் என்பது
அடங்கியே போக...!
வேங்கையின் வீரத்தில்
விடுதலைக்காய் ஏங்கினர்
வேள்விகள் தனில்
ஆயிரம் ஆயிரமாய்
உயிர்கள் உறங்கின...!
விடியல் என்பது
விலை கொடுத்த பொருளாய்
வாங்க மடியேந்தும் நிலை
இன்னும் தொடர்கதையாய்..!
முடிவுகள் என்பது
முடிவிலியாய்.....
தமிழன் குருதியென்பது
பெருகும் ஆறாய்
தீர்வுகள் மட்டும்
கேள்விக் குறியாய்...???!
காலம் என்பது
மக்களுக்காய் கனிய
தலைவன் வழியில்
காத்திருப்புத் தொடருது..!
சேதி ஒன்று வரும்
தேசம் விடிந்ததென்று
எதிர்பார்ப்பு விரைவாக
ஒற்றுமை என்பது திடமாக
கடந்ததுகள் நினைவாக்கி
வேற்றுமைகள் கலைத்துக்
கலந்திடுவோம்
இலட்சியப் பயணத்தில்
வேங்கையின் பாதையில்...!</b>
|
|
|
| திருமண வாழ்த்து |
|
Posted by: kavithan - 05-14-2005, 12:57 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (28)
|
 |
<b><span style='font-size:30pt;line-height:100%'>நாளை 14/5/05 இல் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் கள உறுப்பினர் தியாகம் அண்ணாவுக்கு என் இனிய திருமண வாழ்த்துக்கள்.</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/new_kavi.jpg' border='0' alt='user posted image'>[b]<span style='font-size:25pt;line-height:100%'>வாழ்த்துக்கள்</span>
அவர் கருத்துக்கள்
|
|
|
| கத்தி பொல்லுகளுடன் கைது................ |
|
Posted by: KULAKADDAN - 05-13-2005, 10:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
யாழ் குடா நாட்டில் இப்ப ஊருக்கூர் கத்திவெட்டு அடி தடி வழமையான கரியம் போல் ஆகிவிட்டது.
அண்மைய நாட்களில் உதயன் பத்திரிகையில் கச்சாய் பகுதியில் பதற்றம் அடி தடி என செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இன்று மக்கள் அச்சம் காரணமாக இடம் பெயர்வு. வேறிடத்தில் இருந்து வந்தோரால் வாகனம் கடை சேதம். தெருவில் போனவரை வாகனத்தால் மோதி காயம். கர்ப்பிணி பெண்ணுக்கு வீடுபுகுந்து அடி .
குழுவாக யாழிலிருந்து கச்சாய்க்கு அடிபட சென்றவர்கள் கைது.
பொலிஸ் ரோந்து.
இவை தான் செய்திகள். :evil: :evil: :evil: :evil: :evil:
எப்ப நம்ம சனம் திருந்தும். இவர்களுக்கு என்ன நடந்தது. :oops: :twisted: :evil: :evil: :evil:
|
|
|
| கள்ளி கருமை நிறக்கள்ளி |
|
Posted by: Baarathi - 05-13-2005, 08:09 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (32)
|
 |
<b>
<span style='font-size:25pt;line-height:100%'>கள்ளி...
கள்ளி...
-கருமை நிறக் கள்ளி,
கிள்ளி...
-என் மனதை கிள்ளி,
வெள்ளி...
-என் வானில் முளைத்த வெள்ளி,
மல்லி...
என்னுள் மணம் வீசிய மல்லி,
பள்ளி...
-உனைப் பார்த்த முதல் கொள்ளவில்லை பள்ளி,
சல்லி ...
-உங்கப்பனட்டை நிறைய இருக்கு சல்லி,
கில்லி...
-உன்னை தூக்கிக் கொண்டோட நானில்லை கில்லி,
வில்லி...
-உங்கம்மா தான் எனக்கு வில்லி,
புள்ளி
-வைத்தாள் நம் காதலுக்கு புள்ளி,
கொள்ளி...
-என் இதயத்தில் வைத்துப்போனாய் கொள்ளி,
தண்ணி...
-காதல் என்னை விட்ட இடம் தண்ணி.
கள்ளி...
-கனவில் மட்டும் வந்து போடி கள்ளி. </b></span>
|
|
|
| சத்யராஜமுகி |
|
Posted by: vasisutha - 05-13-2005, 05:54 PM - Forum: சினிமா
- Replies (17)
|
 |
<b>சத்யராஜமுகி </b>
<img src='http://img259.echo.cx/img259/7609/p812yb.jpg' border='0' alt='user posted image'>
அட, ரஜினி சொல்லிப் பாத்தாச்சு. ஜோதிகா சொல்லியும் பாத்தாச்சு. இப்போ இந்த சத்யராஜ் சொல்லிப் பாக்கணும்ல... லகலகலகலக..! வென கிடுகிடுக்கவைக்கிற ஆறடி உயர சந்திர முகியாய் சத்யராஜ்!
அட! இது சும்மா தமாசுங்க... தமாசு... தமாசு
ஏனுங்க... சந்திரமுகி பார்த்தேனுங்க. கோழிமுட்டை முழியும், கோக்குமாக்கா தடவின கண்ணு மையும், லகலகலகாவும்னு ஜோதிகா பொண்ணு மெரட்டிருச்சுங்க. நல்ல விஷயங்களை எம்.ஜி.ஆர், சிவாஜி சார்கிட்ட மட்டுமில்ல, ஜோதிகாகிட்ட இருந்தும் சுட்டுக்கலாம்ல.
<img src='http://img259.echo.cx/img259/2781/p800hj.jpg' border='0' alt='user posted image'>
இங்கிலீஷ்காரன் படத்துல நானு வடிவேலோட முறைப்பொண்ணு நமீதாவை டாவடிப்பேனுங்க. நானு அந்த அம்மணிய உம்மா உம்மம்மா பண்ணிட்டுத் திரியறதைப் பாத்ததும் வெறுப்பாகிப்போற வடிவேலு, என்ன வீட்ட விட்டு வெரட்டத் திட்டம் போடுவாருங்க.
<img src='http://img259.echo.cx/img259/4305/p828sr.jpg' border='0' alt='user posted image'>
ஒரு நா ராத்திரி நான் அசந்து தூங்கறப்ப, வெள்ளைச் சேலை, வெள்ளிக் கொலுசுனு பேய் வேஷத்துல வந்து என்னைப் பயமுறுத்த வருவாருங்க வடிவேலு. அவரு என்னென்னவோ செஞ்சும் நான் அசையாமக் கெடக்க, லேசா போர்வையை வெலக்கி என்னைப் பாப்பார்ல... அப்ப நானு லகலகலகலகனு சந்திரமுகி கெட்டப்புல எந்திரிப்பேனுங்க. பார்ட்டி பயந்து தெறிச்சு ஓடுவாருங்க.! கலகலக்கவைக்கிற சத்யராஜ், இங்கிலீஷ்காரன், 6.2, சுயேட்சை கொங்கு நாட்டு கோல்ட் என்று அரை டஜன் படங்கள் பண்ணுகிறார்.
இதுல ரெண்டு படம் நம்ம சிபியோட போட்டி போடறேனுங்க... என்று நக்கலாகச் சிரிக்கிறார்.
<b>அது எப்படிங்க... இப்படி இன்னும் யூத் மாதிரி கலக்குறீங்க?</b>
தலைவா... வாழ்க்கையில் ரெண்டு விஷயம் முக்கியமுங்க. ஒண்ணு லொள்ளு, இன்னொண்ணு ஜொள்ளு. சோத்துக்கு கவலையில்லைன்னா லொள் ளும் ஜொள்ளும் தானா வருமுங்க!
எனக்கு வயசு 51|ங்க. ஆனா, மனசு அப்பிடியே 15. ரொம்ப சீரியஸா சொல்லணும்னா தலைவர் எம்.ஜி.ஆர். குடுத்த கர்லாக்கட்டை புண்ணியத்தில் உடம்புக்கு ரெகுலர் எக்ஸர்சைஸ்ங்க, அப்புறம் இந்த ஜே.கே, பெரியார், ஓஷோ, மார்க்ஸ்னு பெரியவங்களோட புத்தகங்கள் வாசிக்கிறது மனசுக்கு ரிலாக்ஸ்ங்க. இதுதானுங்க நம்ம இளமை ரகசியம்!
<b>உங்க பையன் சிபி வயசுக்கு ஆட வேண்டிய நமீதா, மதுமிதாக் களோட நீங்க ஆடிக்கிட்டிருக்கீங்களே... வீட்டுல கண்டிக்கமாட்டாங்களா</b>?
அட, சும்மா உம்மா உம்மம்மானு நாம ரவுசு பண்ற பாட்டு டி.வி|யில வந்தா வீட்டுல விழுந்து விழுந்து சிரிப்பாங்க. இதுல என்ன சிக்கல்னா... நம்ம சிபிக்கு ஜோடியா நடிக்கிற வயசுப் பொண்ணுங்க என்கூட நடிக்க கொஞ்சம் யோசிக்கிறாங்ணா...
இந்த த்ரிஷா, அஸின், கஜாலால்லாம் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நமக்கு ஜோடியா நடிச்சா நல்லாயிருக்கும். புள்ளைங்க பயந்து ஓடுதுங்களாம். ஆனா, வாழ்க்கை சுவாரஸ்யமாத்தாங்க இருக்கு.
<b>கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அமைதிப் படைனு காலாகாலத்துக்கும் மனசுல நிக்கற மாதிரிகேரக்டர்கள் பண்ணின சத்யராஜைக் காணோமே இப்போது?</b>
மாட்டேன்னா சொல்றேன்? உமர்முக்தார் மாதிரி ஒரு படம் பண்ணணும். பெரியாரா நடிக்க ரெடி. ஆனா, யாரு எடுக்கிறது? கவர்ச்சியா அஞ்சு பாட்டு, அதுல ரெண்டு குத்துப்பாட்டு, நாலு ஃபைட், கொஞ்சம் லொள்ளு, கொஞ்சம் ஜொள்ளு, அப்பப்போ பஞ்ச் டயலாக்குனு எடுத்தாதான் காசு பார்க்க முடியும்னு முடிவு பண்ணிட்டாங்க.
நம்ம தொழில் நடிப்பு. கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கிறேன். இல்லேன்னா, வீட்டுல உட்கார்ந்துகிட்டு மெகா சீரியல் பார்த்துட்டுத்தான் பொழுதை ஓட்டிக்கிருக்கணும். கழுத அந்தக் கொடுமைக்கு நடிக்கிறது பெட்டருதானுங்ணா!
<b>திடீர்னு சில வருஷங்கள் படங்களே இல்லாம இருந்தீங்களே... அப்போ எப்படி உணர்ந்தீங்க?</b>
ஒரு மனுஷனுக்கு காலையில எந்திரிச்சா ராத்திரி வரைக்கும் எதுவுமே வேலை இல்லேன்னா எப்படி இருக்கும்? எனக்கும் கவுண்டமணிக்கும் ஒரே நேரத்தில் இப்படி ஆச்சு. அப்பப்ப கவுண்டரு அண்ணன் போன் போடுவாரு... என்னய்யா பண்றே? சாப்பாடு ஆச்சா? இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்கே!Õனு பேசிட்டிருந்தோம். இதுதான் உண்மை.
ஏற்ற இறக்கங்கள் சகஜம். இதுல புலம்பறதுக்கு எதுவுமே இல்லை. இதோ, அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிட்டோம்ல!
<b>ஆமா! உங்களுக்கெல்லாம் அரசியல், முதலமைச்சர் ஆசையெல்லாம் கிடையாதா..?</b>
ஆசை இருக்குங்க... ஆனா, அரசியல்ல இறங்கி வோட்டு கேட்கப் போற இடத்துல ஆசை தோசை அப்பளம் வடைனு ஆகிப்போச்சுன்னா என்ன புண்ணியம்? நானெல்லாம் சினிமாவுல சி.எம். ஆகி சந்தோஷப்பட்டுகிற ஆளுங்க!
நன்றி:
vikatan.com
|
|
|
| பல்லவியை கண்டுபிடியுங்கள்...! |
|
Posted by: vasisutha - 05-13-2005, 04:21 PM - Forum: போட்டிகள்
- Replies (971)
|
 |
<span style='color:orange'><b>பல்லவியை கண்டுபிடியுங்கள்...!</b>
[size=13]கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே
புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன்
ஆரம்பமாகிறது..!
<b>போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்
பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி)
நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..</b>
என்ன நீங்கள் ரெடியா????
அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள்
அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்.....
யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள்
பார்ப்போமா????</span>
|
|
|
| புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? |
|
Posted by: MUGATHTHAR - 05-13-2005, 02:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (256)
|
 |
[b] புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா??????????
இன்று காலை தீபம் தொலைக்காட்சியில் மேலே குறிப்பிட்ட விடயம் தொடர்பான ஒரு உரையாடல் இடம்பெற்றது. அனேகா; இந்த நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது. இப்போ தீபம் சந்தாஅட்டை மூலமாகவே ஒளிபரப்பாவதாலும் வேலை காரணமாகவும் நேரம் கிடைத்திருக்காது. சரி நாங்களும் யாழ் களத்தில் இதைப்பற்றி ஒரு கருத்துகளை அலசுவம் என்ன?
புலம் பெயா; மக்கள் எத்தனையோ வகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் அதை மறுக்கவே முடியாது. முக்கியமாக பொருளாதாரத்தை குறிப்பிடலாம்
இதைவிட
1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என)
2) பெண்கள் சுதந்திரம்
3) பிள்ளைகள் சுதந்திரம்
4) சமய.கலாச்சார.கலை அறிவு
5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறது
இப்படி நிறைய நன்மையான விடயங்கள் இருக்கிறது
இதை விட இவர்களுக்குத் தெரியாமலே ஒரு சில பாதிப்புக்கள் தாயகத்திலிருக்கும் எமது உறவுகளை சென்றடைகின்றன. நிகழ்ச்சியில் ஒரு நேயா; குறிப்பிட்டது போல வெளிநாட்டில் இருப்பவர்களின் சில உறவுகள் கல்வியில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை இதுக்குக் காரணம் படிப்புச் சரிவராவிட்டால் அண்ணனைப் பிடிச்சு எப்பிடியும் வெளிநாடு போகலாம் எண்ட நினைப்பு இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறைகிறது.பெற்றோரும் இதையே ஊக்கிவிக்கிறார்கள்
அடுத்தது நாம் அனுப்பும் பணம் அவர்களின் அத்தியாவசிய தேவையைவிட மேலதிகமாக இருப்பதால் வீண்செலவுகள் செய்வதற்கு வழி வகுக்கிறது அவர்கள் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போய்விடுகிறது ஆனபடியால் நாங்கள்தான் அவர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றோம்..உண்மைதானே?
இன்று ஊரில் வரதட்சனை இவ்வளவு தூரம் உயர்ந்தமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் 4அண்ணன்கள் வெளிநாட்டிலிருந்தால் அவர்களின் தங்கைக்கு வரதட்சனையாக கேட்காமலே அள்ளிக் கொடுத்து பெருமைப் பட்டுகொள்கிறார்கள் இது தமிழ் சமூகத்துக்கு நன்மையா??
சரி இதேபோல் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கே வையுங்கள்
|
|
|
|