Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 468 online users.
» 0 Member(s) | 465 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,648
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  plz help me
Posted by: kirishi - 05-19-2005, 10:06 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (1)

நண்பர்களே!!!! தாளி புதுசு பட பாடல் எங்கே கேட்க முடியும்

Print this item

  ஆகாய நுதலில் ஆனந்தமுத்தம்
Posted by: shanmuhi - 05-19-2005, 01:49 PM - Forum: கவிதை/பாடல் - Replies (24)

<img src='http://www.theddd.net/4s/4s3.jpg' border='0' alt='user posted image'>
[size=18]<b>ஆகாய நுதலில் ஆனந்தமுத்தம்</b>

கண்களை இமைகள் வருடியபோது
கருமணிக்குள் உன் உருவம் பதிந்து
கண்களின் பார்வையாக நீ என்னுடனே
கலந்துவிட்டாய் என்பதை உணர்ந்தேன்

உதடுகளை நாக்கு வருடிக்கொண்டபோது
உதட்டில் பதிந்திட்ட உன் முத்திரை
உள்ளமெங்கும் உவகை பொங்கிட இதழ்
உரசி உதிர்த்த இலக்கண வார்த்தை அது

கைகளை மெல்லென வருடிக்கொண்டபோது
இணைந்த எம் கரங்களின் ஈரமான வியர்வை
இன்னும் பசை நீங்காத விரல் இடுக்களில்
உன் கை விரல்கள் பதிந்தபடி

தலையினை வருடியபோதே நீ
சிந்திய கண்ணீர்த்துளிகள் என் தோள்களை
நனைத்தச் சென்றபோது கலங்கிய என் கண்களின்
கண்ணீர்துளிகள் கன்னங்களில் கோலங்களாய்

முன் நெற்றியை வருடியபோதே உணர்ந்தேன்
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தப் பொழுதுகள் தந்த ஆனந்தம்

<b>முத்தத்தில் தொடங்கி மோகத்தில்
சத்தமில்லாமல் என்னுள் சங்கமித்து
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தக் கணப்பொழுதுகள் என்றும் நினைவில்
ஆனந்த ராகமாய்...</b>

Print this item

  வெல்லும்வரை வேகம் குறைந்தால்..
Posted by: hari - 05-19-2005, 08:20 AM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

<img src='http://img277.echo.cx/img277/2826/u173xg.jpg' border='0' alt='user posted image'>
புதுவை இரத்தினதுரை

Print this item

  வெற்றி யார் பக்கம்...?!
Posted by: kuruvikal - 05-19-2005, 04:02 AM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

<img src='http://img264.echo.cx/img264/2447/jesus40ip.jpg' border='0' alt='user posted image'>

<b>வயற்கரைக் குருவியொன்று
வான்வெளிதனில் வட்டமடிக்க
வந்த வல்லூறும் நோட்டம் விட
வரம்பிருந்து ஒருவன் குறிவைக்க
வரவு காத்து ஒருவன் கண்ணி வைக்க
வரும் சுழற் காற்றுச் சமனிலை குழப்ப
வண்ணச் சிட்டது
வகையாய் சிறகடித்துக் களிக்கிறது
வரம்பில்லா வானத்தில் சுதந்திரமாய்...!

வண்ணம் வண்ணமாய்
வகை வகையாய் பேசும் மனிதரெல்லாம்
வக்கணையாய்ப் பேசுகிறார்
வரவால் தாம் உயர்வினராம்
வதையில்லா உலகு படைத்து
வரவு செலவு பார்த்து
வசதியாய் வாழ்கின்றனராம்
வரம்பில்லா அறிவு
வகையாய் கொண்டதால்
வரம்பிட்டு வாழ்கின்றனராம்
வடிவாய்ச் சொல்கின்றார்
வாட்டம் அவர் வதனத்தில்
வழிவது மட்டும் ஏன்...??!

வட்டு ஒன்று
வடிவாய் நோக்கியது
வட்டமடிக்கும் வண்ணச் சிட்டையும்
வளவிருந்த மாளிகை வீட்டு மனிதரையும்...!
வரைவிலக்கணம் ஒன்று வரையலானது
வர்ணம் முதலாய்
வகை பிரித்து பகை வளர்த்து
வம்புகள் அங்கு வரவாக்கி
வரம்புகள் கற்பனையாகினும்
வகை வகையாய் தேசங்கள் பிரித்து
வஞ்சனைகள் பெருகி
வகையான அமைதியழித்து
வரமாம் இயற்கையின் விதி மறந்து
வசதி என்று உண்மை வாழ்வழித்து
வருங்காலந்தனை மாசுறுத்தி
வாழும் மனிதரை
வண்ணச் சிட்டது
வகையாய் வாழ்வியலில் வென்றதாய்...!</b>

Print this item

  குளக்கோட்டான் படைபிரிவு..
Posted by: Danklas - 05-18-2005, 03:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

<b>தீர்மானியுங்கள் அன்றேல் தீர்மானிப்போம் - குளக்கோட்டன் படைப்பிரிவு எச்சரிக்கை </b>

<b>திருகோணமலை இரவோடு இரவாக திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலையை அங்கிருந்து உடனடியாக அகற்றுமாறும் இல்லாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குளக்கோட்டன் படையப்பிரிபு என்ற அமைப்பின் பெயரில் எச்சரிக்கைத் துண்டுபிரசுரம்

அந்த எச்சரிக்கை துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்ட விடயங்கள்.....

"தீர்மானியுங்கள் அன்றேல் தீர்மானிப்போம்'

தமிழர்களின் கலாசார பூமியில் சட்ட ஒழுங்குகளையும் மீறி புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்தை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஓர் அடித்தளமாகவே பார்க்கிறோம்.

எனவே உடனடியாக அங்கிருந்து சிலை அகற்றப்படாவிட்டால் எம்மால் முடிவு எடுக்கப்பட்ட மாற்று வழியை பயன்படுத்துவோம்.

இருப்பினும் இதற்கு உரிய முடிவு இல்லையேல் இன்று புதன் கிழமையும் எதிர்ப்பை தொடருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். சகலரும் பொதுவான சட்டத்தை பாரபட்சமின்றி செயற்படுத்துமாறு பொலிஸ் நீதித்துறை சார்ந்தவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

தவறும் பட்சத்தில் தீர்மானிக்கப்பட்ட மாற்று வழிகள் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கின்றோம்ää எனவே பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு மேலே கூறப்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</b>

Pathivu.com
--------------------------------------------------------------------

ஜோவ்வ் "புத்தபயல் பிள்ளை படைகளா" உங்களுக்கு மட்டும் தான் அறிக்கைகள் விடத்தெரியுமா? பாருங்கப்பா இப்ப புதிய ஒரு படையனி "குளக்கோட்டான்" எண்டு ஒண்டு முளைச்சுட்டுது. இயலுமெண்டால் அந்த நிராயுதபாணி சிவராம கடத்திக்கொண்டே போட்ட மாதிரி, குளக்கோட்டான் படைகளின் செயற்பாடுகளை முடங்குங்கட பார்ப்பம். உண்மையான நாட்டில் பற்றுதி கொண்ட சிங்களவன் எண்டால் நிருபியுங்கடா பார்ப்பம்.. அதற்க்கு பிறகு என்னுடைய ஆதரவு உங்க பக்கம்.. (இப்பவும் அப்படித்தான்,, ஆனால் அதற்க்கு பிறகு பீபீசில உங்களுக்கு ஆதரவா பேட்டி குடுப்பன், பேசுவன்) Idea 8)

Print this item

  காதல்
Posted by: kuruvikal - 05-18-2005, 11:37 AM - Forum: கவிதை/பாடல் - Replies (17)

<img src='http://img276.echo.cx/img276/2658/296530092992300929973007296529.gif' border='0' alt='user posted image'>

<b>உணர்வோடு உருவாகி
உள்ளத்தை ஆளும் - நோய்
உள்ளவர்கள் சித்தம்
உறங்காமல் சிந்திக்கும் - அறிகுறி
உலகில் காண்பதெல்லாம்
உள்ளத்தில் உள்ளவர்க்காய் ஏங்கும் - ஏக்க நிலை
உறங்கா விழிகள்
உறங்க தொடரும் கனவு - பரவல் நிலை
உளறல் என்பது
உண்மையாகும் - தன்னை உணரா நிலை
உண்பது கூட உணர மறுக்கும்
உண்மை தளரும் - முத்திய நிலை
உண்மைக் காதல் உனையாள
உன்னை நீயே
உன் வாழ்வில் ஓர் உறவுக்காய் இழப்பாய்
உன்னத நிலை....!

உண்மை இதுவும் ஆகலாம்...
உலகில் கலப்படம் என்பது
உண்மை மனிதருக்குள் - ஒரு நிலை
உண்மைக் காதல் என்று உலகை ஏய்த்து
உடல் தேடும் காமம் - அசுர நிலை
உண்மைக்குள் அசுரம் அரசாள
உன்னை மதியால் நீ இழந்து
உடலைக் கலங்கடிக்கும் - ஆபத்து நிலை
உண்மை அறியா உன்னை இழந்து
உயிர் உள்ளவரை
உள்ளம் வருத்தித் துடிக்கும்
உலகில் கொடிய நிலை...!

உண்மைகள் இப்படியும் அமையலாம்....
உலகில் எத்தனை மனிதர் எத்தனை கோலம்
உண்மை எது - யாரும் அறியா நிலை
உள்ளத்தாலன்றி
உணர்வுக்கு வடிகால் தேடும் - ஒரு நிலை
உன்னைக் கண்டதும் கவரும்
உண்மை அறிந்து உன்னை அளந்து - கழரும் நிலை
உண்மையாய் இது
உணர்வுக்கு அடிமையான - இழி நிலை
உன்னை கவர்ந்தழிக்கும்
உலகின் அசிங்க நிலை
உண்மையில் இதுதான்
உலகில் சாதாரணம்
உண்மைக் காதலின் பெயரால்....!

உள்ளத்தே உணரும்
உணர்வுக்கு முன்
உன் அறிவுக்கும் சுயத்துக்கும்
உண்மைக்கும் மதிப்பளி
உண்மையில் காதல்
உண்மையாகி உன்னதமாகும்...!
உன் கண்களால் பேசி
உள்ள கணணியை நம்பி
உள்ளம் இழந்து காதல் என்று உளறாதே
உண்மையில் காதல்தன் புனிதம் அன்றி
உன் உள்ளத்தின் புனிதமிழந்து
உன்னத வாழ்வையே இழப்பாய்...!
உணர்ந்து தெளிந்து
உணர்வுகள் ஆளப்பழகிக் கொள் - அன்றி
உண்மை உணர்ந்து
உள்ளத்தால் காதல் செய்
உண்மைக் காதலுக்கு
உறுதியான ஆயுள் கொடு...!</b>

Print this item

  இந்தியாவுக்கு வீட்டோ: அமெரிக்கா சீனா கவலை
Posted by: vasisutha - 05-18-2005, 02:03 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (16)

<b>இந்தியாவுக்கு வீட்டோ: அமெரிக்கா சீனா கவலை </b>

ஐநா பாதுகாப்பு சபையில் தங்களுக்கு வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியா, பிரேஸில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா வந்த ஐநா செயலாளர் கோபி அன்னனிடமும் இந்தியா இந்த கோரிக்கையை வலியுறுத்தியது.

இந் நிலையில் ஐநாவில் உள்ள ஜெர்மனியின் தூதரக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த 4 நாடுகளும் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐநாவில் இந்த நான்கு நாடுகளும் சுற்றுக்கு விட்டுள்ளன.

அதில், ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15லிருந்து 25 ஆக உயர்த்த வேண்டும். நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5ல் இருந்து 9 ஆக உயர்த்த வேண்டும்

ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவிலிருந்து தலா ஒரு நாட்டையும் நிரந்தர உறுப்பினர்களாக்கும் வகையில் இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி மற்றும் இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்க வேண்டும்.

புதிதாக சேர்க்கப்படும் உறுப்பினர்களுக்கும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற தற்போதுள்ள நிரந்தர உறுப்பினர்களின் அதிகாரம் (வீடோ பவர் உள்ளிட்டவை) வழங்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியுடன் வீட்டோ அதிகாரமும் அளிக்க வலியுறுத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுச்சர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் இது தொடர்பாக அளித்த பேட்டி:

இந்தியாவுக்கும் இதர G4 நாடுகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்த உறுப்பினர் பதவி அளிக்க வலியுறுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு இது கவலை அளிக்கும் விஷயம். இப்பிரச்னையால் பல்வேறு நாடுகளுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழும். வீட்டோ அதிகாரம் அளிக்கப்படுவது பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.


விரிவுப்படுத்தப்படும் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவுக்கு கட்டாயம் வீட்டோ அதிகாரம் வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் ஜப்பானை நிரந்தர உறுப்பினராக சேர்க்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இப்போதைக்கு அந்த நிலையுடன் அமெரிக்கா நிற்கிறது.

இவ்வாறு பவுச்சர் கூறினார்.

<b>சீனா எதிர்ப்பு:</b>

இதற்கிடையே இந்த 4 நாடுகளின் கோரிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பீஜிங்கில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் காங் குவான் இன்று நிருபர்களிடம் கூறுகையில், இந்தியா உட்பட 4 நாடுகள் தங்களுக்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர அந்தஸ்து கோரியிருப்பது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.

இதனால் பாதுகாப்பு சபை விரிவாக்கத்தின் போது நியாயமாக நடக்க வேண்டிய காரியங்கள் தடைபடும் வாய்ப்பு உள்ளது.

வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளில் ஒன்றாக சீனாவும் உள்ளது. ஐநா பாதுகாப்பு சபை விரிவுபடுத்தும் விஷயத்தில் சீனாவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என்றார்.

செய்திகள்: தினமலர் மற்றும் தற்ஸ்ரமில்

Print this item

  ஆபிரிகரா காப்புலியா?
Posted by: KULAKADDAN - 05-18-2005, 01:07 AM - Forum: புலம் - Replies (12)

Sooriyakumar Wrote:அப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக
காரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்

காப்புலி எண்டு ஆபிரிக்கர்ளை தானே குறிப்பிடுகிறீர்கள்.
வெள்ளையர்கள் நிறபேதம் பாத்தால் நாமும் ஆபிரிக்கரும் கறுப்பர்கள் தானே.
அவர்களது நிறபேதம் பார்ப்பது மனித உரிமை மீறலாக கருதும் காலத்தில் ஏன் நாமும் அவர்களை அதாவது ஆபிரிக்கர்களை காப்புலி என தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்வது சரியா?
அவர்களும் மனிதர்கள் தனே. அவர்களது பாரம்பரை இயல்புகளால் சுருட்டை முடியும் கறுப்பாகவும் இருப்பது அவர்களது தப்பல்லவே.

அல்லது அவர்களில் சிலரது ஒழுங்கீனமான நடைகாரணமாக அவ்வாறு கூறினால் ............
தற்போது நமது மக்களது இளம் சந்ததியும் அதைவிட கூடுதலாக அடிதடி வெட்டு மட்டை போடுதல் என ஈடுபடுகிறார்களே?

உண்மையில் ஒரு மனித இனத்தை அவ்வாறு தரக்குறைவாக அழைப்பது சங்கடமாக இருக்கிறது.

இது சூரியகுமார் மட்டும் எழுதியதை பார்த்து கூறப்படும் கருத்தல்ல............. Idea
இதற்கு முதலும் பல உறுப்பினர்கள் அவ்வாறு கூறி விமர்சித்ததை அவதானித்த பின் தான் எழுதுகிறேன்

Print this item

  மத்திய கிழக்கில் கருணா பார்ட்டி !!!!!!!!!!!!!!!!!!!!!
Posted by: MUGATHTHAR - 05-17-2005, 07:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (10)

கள உறவுகளுக்கு வணக்கம்
நமது தமிழ் தேசியத்துக்கு எதிரான கூலிப்படையின் கைகூலிகள் மத்திய கிழக்கு நாடுகளில் இப்போ உயிருக்கு பயந்து தஞ்சம் அடைந்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என எனது உறவுப் பையன் எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்காக.............................

<b> மத்திய கிழக்கு
12 . 03 . 2005

அப்புக்கு வணக்கம்
நான் நலம் அதுபோல் உங்கள் சுகத்தையும் கடவுள் காப்பாத்துவாராக...... மேலும் இங்கு கருணா பார்ட்டியின் நடவடிக்கைகளை உங்களை போன்ற தமிழ் தேசிய பற்றுள்ளவர்களுக்கு அறியத்தர வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.
உங்களுக்குத் தெரியும் இந்த வேலைக்கு (பாதுகாப்பு அமைச்சு) Job Visa எடுப்பதிற்கு எவ்வளவு கஸ்டப்பட்டு எனக்கு 1996ல் கிடைத்தது என..இங்குள்ள அமைச்சு நேரடியாக இலங்கை அரசுக்கு விசாக்களை அனுப்புவதால் தமிழருக்கு கிடைப்பது மிக அரிது.இங்கு இருப்பவர்களில் 90% பெரும்பாண்மை இனத்தவர். அப்படியான இடத்தில் சென்ற October மாதம் திடீரென 40 தமிழர்கள் வந்தால் எப்பிடி இருக்கும் சரி தமிழ் சனம்தானே ஊர் சனங்கள் வந்திருக்கும் என பார்க்க போனால் அவ்வளவு பேரும் மட்டக்களப்பை சோ;ந்தவர்கள் நாமும் உறவுகள் என்ற முறையில் சில சில உதவிகளை செய்தோம் ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது.எங்களுடன் முகம் கொடுத்து பேசவே அவர்கள் விருப்பமில்லாமல் இருப்பதை அறிந்தோம்.அப்போதுதான் எமக்கு சில சந்தேகங்கள் உருவாக ஒருசிலரை தனியே அழைத்து விசாரித்தோம் ஆமாம் அவர்கள் உண்மையில் கருணாவின் விசுவாசிகள்தான்.இலங்கை அரசின் உதவியுடன கருணாதான் அவர்களை இங்கு அனுப்பியிருக்கிறார் என்றும் அவர்களை வழிநடத்தவென ஒரு பொறுப்பாளரையும் அனுப்பியிருக்கிறார்............................................பெயருடையவர்தான் கருணாவின் நம்பிக்கைகுரிய பொறுப்பாளர்.மட்டகளப்பில் சச்சி மாஸ்டருடன் சேர்ந்து யாழ்ப்பாணச்சனத்தை கலைப்பதில் முன்னுக்கு நின்றவர். அவர் இட்டுள்ள சட்டங்கள் தேவையில்லாமல் தமிழ் ஆட்களுடன் பேசப்படாது.வேலை முடிந்ததும் அவரின் Roomக்குதான் போக வேண்டும் Roomல் T.V , DVD என வாங்கி வைத்துள்ளார். நாங்கள் இங்குள்ள பழைய மட்டகளப்பு ஆட்களை மூலம் சில பேரை அழைத்து புத்திமதி கூறிப் பாத்தோம் வேலையில்லை திருத்த முடியாத ஜென்மங்கள்.....
சென்ற மாதம் அந்த Groupபிலிருந்து ஒருவர் Emergency vacation Fax Msg வந்தது என போனார் நாங்கள் விசாரித்து பாத்ததில் அவா; ஊர் போய் சேரவில்லை என்றும் Airportலேயே பேர் வந்து கூட்டி போனதாக அறிந்தோம்.தம்மை வந்து அடைந்ததாக பிறகு இங்குள்ள பொறுப்பாளருக்கு தகவல் வந்தது. இப்போதய புதிய தகவல்படி 4 பேரை அனுப்பும்படி Msg வந்திருக்காம் ஆள் தெரிவு நடைபெறுகிறதாம் இங்குள்ள புலி அலுவலகத்துக்கும் தெரிவித்தோம் அவகளும் அரசியல் பணியில் இருப்பதால் ஒண்ணும் செய்ய இயலாது. . விமான நிலையத்திலிருந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல இலங்கை இராணுவம் இருக்கும் போது எம்மால் எதுவும் செய்ய முடியாது இங்குள்ளவர்களை போல அரபு நாடுகளில் சிறு சிறு குழுக்களாக இயங்கும் இவர்கள் தங்களுக்குள் ஒரு தொடர்பினை வைத்துள்ளார்கள் இவர்களின் வருகையால் இங்குள்ள பழைய தமிழ் உறவுகள் (மட்டகளப்பை சேர்ந்தவர்கள்) புலி ஆதரவு காட்ட தயக்கம் காட்டுகிறார்கள் பயம்தான் முக்கிய காரணம் கிட்டதட்ட மத்திய கிழக்குநாடுகளில் 100 -----150 பேர் இருப்பார்களாம் சும்மா ஊரில் 2...3 பேரை சுடுவதால் மாத்திரம் இந்த துரோக கும்பலை அழித்து விட முடியாது ஒருவர் இருக்கும் மட்டும் காட்டிக் கொடுப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும் இவர்களின் முழுக்கனவும் இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்க வேண்டும் தாங்கள் போய் சேரவேண்டும் என்பதே.......
அப்பு எமது தமிழ் மக்கள் இப்போ தான் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் முக்கியமாக இந்த சமாதான பேச்சுவார்த்தை முறிவடையாமல் பாதுகாக்க வேண்டும்..இவர்களை பற்றிய மேலும் செய்திகள் வரும் போது எழுதுகிறேன் எல்லாரையும் சுகம் கேட்டதாக சொல்லவும்
இப்படிக்கு
அன்புடன் தேவன் </b>

உறவுகளே இது கதையல்ல உண்மை எமது போராட்ட வரலாற்றில் பெரிய அடியாக விழுந்த கருணாவின் பிளவு இன்னும் முடியவில்லை....சில பாதுகாப்புகள் காரணமாக இப்படி எழுதவேண்டியதாக போய் விட்டது மீண்டும் சந்திப்போம்

Print this item

  நீ எங்கே?
Posted by: Malalai - 05-17-2005, 05:42 PM - Forum: கவிதை/பாடல் - Replies (246)

<img src='http://img129.echo.cx/img129/8189/images3bq.jpg' border='0' alt='user posted image'>

மேகம் போர்த்த சூரியனாக
புத்தகம் மூடிய மயிலிறகாக
இலைமறை கனியாக
தலைமறைவாக தனியாக - நீ
ஏன் இருக்கிறாய்
என்னை ஏன் தவிர்க்கிறாய்?

உன்னை நான் தேடிடும் வேளையில்
என்னை நீ கண்டிடவில்லையா?
கண்ணுக்குள் கண்மணியாக
என்னுக்குள் உன்னை பாதுகாக்கின்றேன்
விண்ணுக்குள் நீ ஏன் ஒளிக்கின்றாய்?

சிதறிடும் சிந்தனைக்குள்
சிந்திடும் உன் நினைவுகள்
முந்திடும் வேளையில்
வந்திடு என்னிடமே....!

காற்றாகி உன்னை நான்
கடந்திட்ட பொழுதிலும்
மூச்சாகி உன்னுள்
கலந்திட்ட போதிலும்
வேராகி உன்னை நான்
சூழ்ந்த பின்னும்
தனியாக நீ ஏன் செல்கிறாய்?

கடலாக நான் மாறி
தீவாக உன்னை மாற்றி
என்னுள்ளே உன்னை
அன்புச் சிறை வைப்பேன்......!
பொறுத்திருந்த காதல்
பொறுமையான காதல்
பெருமை பெறும்
அன்று ஏற்றுவேன்
காதல் தீபம்....!

அன்றில் மலர்ந்த செந்தாமரையாக
உன் வருகை பார்த்து மலர்கின்றேன்....!
என் மனவானில் இன்று
உன் முகம் தேடிப் பார்க்கின்றேன்.....!
ஒரு நொடியில் உன்னுடன் சேர்ந்திடவே
உனக்காகவே இன்று நான் பிறக்கின்றேன்....!

Print this item