| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 469 online users. » 0 Member(s) | 466 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,648
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| மனிதக் குளோனிங் - புதிய சாதனைகள் |
|
Posted by: kuruvikal - 05-21-2005, 03:37 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (13)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41167000/jpg/_41167193_embryo203.jpg' border='0' alt='user posted image'>
முட்டை பிளவுகள் கண்டு பல கல நிலைக்குரிய முளையமாகும் போது வரும் ஒரு நிலை...!
மனிதப் பெண்களின் இருந்து பெறப்பட்ட முட்டைகளின் பிறப்புரிமையியல் கூறுகளை அகற்றி முளையம் ஒன்றின் stem cells இருந்து பெறப்பட்ட டி என் ஏயை அதே முட்டைக்குள் செலுத்தி...அந்த முட்டையை முளையத்துக்குரிய பல கலப்படை நிலைக்கு விருத்தி செய்து... பிரித்தானியாவில் முதல் மனிதக் குளோனிங்கை நியூகாசிள் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செய்துள்ளனர்...!
இதேவேளை தென்கொரிய விஞ்ஞானிகளும் இதே முறையில் நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட டி என் ஏ யை முட்டைக்குள் செலுத்தி முளையத்தை விருத்தி செய்து பெற்ற கலங்கள் நோயாளிகளின் கலங்களுக்கு ஒத்த கலங்களாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன...! இதனை அடிப்படையாகக் கொண்டு நீரிழிவு மற்றும் உடற்குறைபாடுகளை தீர்க்கக் கூடிய புதிய வகை சிகிச்சை முறைக்கு வழிவகை செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்...!
முழு மனிதக் குளோனிங் உலகில் தடை செய்யப்பட்டிருப்பினும் இப்படியான பகுதியான மனிதக் குளோனிங் ஆய்வுகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளது...!
தகவல் : பிபிசி.கொம் தமிழாக்கம் : http://kuruvikal.blogspot.com/
|
|
|
| அமெரிக்க சிறையில் சதாம் |
|
Posted by: Mathan - 05-21-2005, 02:55 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (18)
|
 |
அமெரிக்க சிறையில் சதாம்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/05/20050520114759saddam_underwear_2.jpg' border='0' alt='user posted image'>
<b>உள்ளாடையுடன் சதாம் படம்</b>
'சன்' ஏட்டில் உள்ளாடையுடன் சதாம் ஹுசைன் படம் - விசாரணை வேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் புஷ்
இராக்கின் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், அரை நிர்வாணமாக, தமது உள்ளாடைகளுடன், அமெரிக்கப்படைகளின் காவலில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பிரித்தானிய 'சன்' பத்திரிகையில் முகப்பில் இன்று பிரசுரமாகியுள்ளன.
ஜட்டியுடன் ஒரு கொடுங்கோலன் என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்கள் குறித்து அமெரிக்க இராணுவம் கருத்து வெளியிடுகையில் இந்தப் படங்கள் உண்மையான படங்களாக இருக்கலாம் என்றும், ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்டவையாக அவை இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, இந்தப் படங்கள் ராணுவச் சட்டங்களையும், கைதிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவது பற்றிய ஜெனிவா உடன்படிக்கையையும் மீறியதாக கருத இடமிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
இந்தப் படங்கள் எப்படி பிடிக்கப்பட்டன, எப்படி 'சன்' பத்திரிகைக்கு அனுப்பப்பட்டன என்றெல்லாம் இப்போது விசாரணை நடப்பதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இத்தகைய விசாரணையை தாம் வலுவாக ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் புஷ் கூறியிருக்கிறார்.
இந்தப் படத்துடன் 'சன்' பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியில், முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்நாளில் எளிமையான நிலையில் உள்ள முதுமையடைந்துவரும் ஒரு வயோதிபர் என்று இராக்கில் உள்ள கிளர்ச்சிப் படைகளுக்குக் காட்டி, அவர்களை ஊக்கமிழக்கச் செய்யவே இந்தப் படம் பிரசுரிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி எழுதியிருந்தது
பிபிசி தமிழ்
|
|
|
| பிரான்ஸ் விழாவில் தமிழ் ! |
|
Posted by: anpagam - 05-21-2005, 12:55 AM - Forum: குறும்படங்கள்
- No Replies
|
 |
பிரான்ஸ் விழாவில் தமிழ் குறும்படம் !
பிரான்சின் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில்இ சுனாமியை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட் தமிழ் குறும்படமான 'நீலம்' திரையிடப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 58வது திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவிலான பல்வேறு திரைப் படங்கள் போட்டியில் உள்ளன.
நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தத் திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்தார். இந்தத் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராக நடிகை நந்திதா தாஸ் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேன்ஸ் விழாவில் தமிழிலிருந்து நீலம் என்ற குறும்படமும் கலந்து கொண்டுள்ளது. சுமார் 10 நிமிடமே ஓடக் கூடிய இந்தப் படத்தை பிரபல கவிஞர் அறிவுமதி இயக்கியுள்ளார். தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்துள்ளார் நிரு இசையமைத்துள்ளார்.
சுனாமியால் தாய் தந்தையை இழந்த சிறுவனின் அவலத்தை சித்தரிக்கிறது இந்தப் படம். அந்தச் சிறுவனாக தங்கர்பச்சானின் மகன் அரவிந்த் பச்சான் நடித்துள்ளார்.
நன்றி: thatstamil
|
|
|
| bbc short films |
|
Posted by: stalin - 05-21-2005, 12:09 AM - Forum: குறும்படங்கள்
- Replies (11)
|
 |
நிறைய குறும்படங்கள் இந்த வெப்சைற் இல் இருக்கின்றன www.bbc.co.uk/filmnetwork ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்
|
|
|
| அன்புடன் அகலிகை |
|
Posted by: akalikai - 05-21-2005, 12:02 AM - Forum: அறிமுகம்
- Replies (75)
|
 |
யாழ் களம் அறிவு தந்தது ஆண்களுக்கு மட்டும் அல்ல என்போன்ற பெண்களுக்கும் .................
பல நாள் வாசகி இப்போது எழுதவும் துணிந்துவிட்டாள்..
அன்புடன்
அகலிகை
|
|
|
| "தொடையழகி" - ரம்பாவா? இல்லை ஜெயலலிதாவா? |
|
Posted by: கறுணா - 05-20-2005, 06:05 PM - Forum: சினிமா
- Replies (6)
|
 |
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய்! காய்ய்!! காய்!!! உங்களோடு...........
தமிழக இடைத்தேர்தல் முடிபுகள்! இந்தக் கோணலைக் குழப்பிப் போட்டுது!! வேறொன்றுமில்லை அம்மா! தாய் மூகாம்பிகை!! அன்னை வேலாங்கன்னி!!! கன்னியோ? கண்ணி! வெண்டுவிட்டாவாம்! பாவ்வ்வ்.... அரையை சந்தோசத்திலை அடிச்சுப் போட்டு பொத்திக் கொண்டு குப்புறப் படுத்திட்டன். அப்பதான் என் புலு நாய் வாளர்கள் அரை குரை நித்திரையில் எழுப்பி ஆணை வெண்டதின் இரகசியத்தைச் சொன்னார்கள்! வேறொண்டுமில்லை ... ஆணை தனது தொடையைக் காட்டிப் போட்டுதாம்.. இல்லை இல்லை ரிவிக்களிலை காட்டிப் போட்டார்களாம். சன் டிவியும், ஜெயா டிவியும் மாறி மாறி அம்மா வாத்தியாருடன் அங்கை பிடித்து, இங்கை பிடித்து, அரை குறை உடுப்புக்களுடன் தொடைகளைக் காட்டியதைப் பார்த்து தொகுதி வாக்காளர்கள் வாவ்வ்வ்..வெண்று வாயைப் பொளந்து காணாததைக் கண்டுவிட்ட புண்ணியத்தில் அம்மாவிர்கு வாக்கலித்து விட்டார்களாம்!!! முதலில் வெண்ட அம்மாவின் தொடைக்கு ஒரு ஓப் போடுங்கள்!!!!!!!!!
உது ஒரு பக்கத்தில் கிடக்க .... உந்த வெற்றியின் பின் இந்தக் கோணலின் கூர்மையான அரசியல் அறிவின் பலனாக பல சிந்தனைகள் என்னுள் எழுந்தன. அம்மாவின் நேற்றைய, இன்றைய, நாளைய வெற்றிகள் தொடைக்குக் கிடைத்ததென்றால் "தொடையழகி" ரம்மா தமிழ்நாட்டின் நாளைய முதலமைச்சரா? இல்லை இந்தியாவின் நாளைய பிரதமரா?
தமிழ்நாட்டினென்ன இந்தியாவினதே தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போவது இந்த தொடை விவகாரமே என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை!! இது எனது அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு!! ஜனதொடைநாயகிகளே நாளைய இந்தியாவின் தலைவர்களென்பது அறிவுக் கொழுந்துகளான இந்திய மக்களின் நிலைப்பாடும் அதேதான்!!!
எனது அறிவிற்கு எட்டியவரை நாளை ஒரு தேர்தலில் "ரம்பாவும்", "ஜெயலலிதாவும்" நிற்கும்போது, தொடைகளுக்கிடையிலான பலத்த போட்டியில் நெக் அன்ட் நெக்காக ஆதரவிருக்குமென நினைக்கிறேன். தொடைகளைத் தீர்மானிக்கப் போகும் போட்டியை முதல் முறையாக உங்களிடம் விட்டு விடுகிறேன். எங்கே பார்ப்போம் உங்கள் வாக்கு யாருக்கென்று????????????????? கமோன்ன்ன்ன்........????????????????
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
|
|
|
| எனக்குள்ளும் ஆசைதான்... |
|
Posted by: shanmuhi - 05-20-2005, 01:09 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>எனக்குள்ளும் ஆசைதான்...</b></span>
பின் தூங்கி முன் எழும் உனக்காக...
உனக்கு முன்பாக வேலையால் வந்தே
உன் கஷ்டம் நினைந்து நான் உருகி
என் கஷ்டம் பஞ்சாய் பறந்தே போனதே…
உனக்காய் சங்கடமான சமையல் செய்தே
உனக்காய் வழிமேல் காத்திருந்தேன் வாசல்வரை
வந்தாய் நீயும் களைத்தே வந்த களை தீர ஆசையுடன்
தந்தேன் என் அன்பை அன்புக்காணிக்கையாய்....
உறைப்பு அதிகமாகிவிட்ட உப்பில்லா
சமையல்தனை கண்ணீர் சிந்தி சிந்தியே
முறைப்பில்லாமல் சிரித்தமுகத்துடன்
சாப்பாட்டில் உப்பை சமன் செய்து
சாப்பிடும் கொள்ளை அழகுதனை என்னென்று
சொல்வேன சகியே வார்த்தையில்லை
சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்..
(சுவைத்த ஒரு கவிதையினால் ஏற்பட்ட வரிகள்)
|
|
|
| நிஜங்களையும் தாண்டி...சிறுகதை |
|
Posted by: shanmuhi - 05-20-2005, 01:00 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (5)
|
 |
<img src='http://www.vaarppu.com/2003/m/mukam_kilithu_jn03.JPG' border='0' alt='user posted image'>
<b>நிஜங்களையும் தாண்டி... </b>
அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. எழும்ப மனம் இல்லாமல் படுத்துக்கொண்டே இருந்தாள் சந்தியா. உடம்பு முழுவதும் ஒரே அசதியாய் இருந்தது அவளுக்கு. படுத்தபடியே ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஊரின் நினைப்புக்கள் அவள் கண்முன்னே நிழற்படங்களாக விரிந்து கொண்டிருந்தது. அவள் ஓடியாடி விளையாடி மகிழ்ந்த ஊர் இப்படி நிலைகுலைந்து போய் இருந்ததை தொலைக்காட்சியில் கண்டபோது துடித்துப்போனாள். அந்த மண்ணை அள்ளி தன் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போன்றதோர் துடிப்பு அவளுள் எற்படுத்தியிருந்தது.
சுனாமி ஏற்படுத்திவிட்ட தாக்கம் அவள் மனதையும் தாக்கிவிட்டுப் இருந்தது. சுனாமியால் அகதியாகிவிட்ட உறவினர்களின் நிலை, தாய் தந்தையரை இழந்த தன் ஒன்றுவிட்ட அண்ணாவின் மகன் செந்தூரனின் வாழ்க்கை, அவனை எப்பாடு பட்டாவது இந்த நாட்டுக்கு அழைத்துவிட வேண்டும் என்ற ஆவலில் செய்யும் ஆயத்தங்கள், இதற்கும் மேலாக மாதந்த கட்டணத்துக்காக வந்திருக்கும் பில்லுகள்... எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தபோது அவளுக்குள் இருந்த அசதி ஒடி மறைய இயந்திரமாகிவிட்ட வாழ்க்கையை எண்ணியபடியே எப்படியும் எழும்பத்தான் வேண்டும் என்ற நிர்பந்தத்தில் எழுந்திருந்தாள்.
முகத்தை கழுவி விட்டு மதிய உணவுக்கான உணவை தயாரித்துக் கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டே தேனீரையும் ஊற்றிக் குடித்தாள். அதையும் முடித்துவிட்டு சலவை இயந்திரத்திற்குள் உடுப்புகளையும் போட்டு விட்டு நேரத்தைப் பார்த்தாள்
மணி ஆறை எட்டி பிடித்துக் கொண்டிருந்தது.
பிள்ளைகளுக்கும் கணவருக்கும் உரிய காலை உணவையும் அவர்களுக்குறிய பெட்டியில் வைத்துவிட்டு பிள்ளைகளை எழுப்ப அறைக்குச் சென்றாள்.
பொய்த் தூக்கமில்லாத வயது தங்களை மறந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த காலைவேளையில் அவர்களை எழுப்ப அவளுக்கு கொஞ்சமும விருப்பம் இல்லை. ஆனால்... கட்டாயம் எழுப்பித்தான் ஆக வேண்டும் வேலைக்குப்போக வேண்டும் என்ற நிலைமை.
"சகானா… மோகனா... எழும்புங்கோ எழும்புங்கோ ஸ்கூலுக்குப் போக வேண்டும் நேரமாச்சு எழும்புங்கோ..." அவசரமும் அவதியுமாக எழுப்புகின்றாள்..
அவளின் அவசரம் தெரியாமல் "ம்... இன்னும் கொஞ்சநேரம் படுக்கப் போறன் அம்மா" சிணுங்கிக்கொண்டு திரும்பிப் படுக்க முயலும் அவர்களை வலுக்கட்டாயமாக எழுப்புகின்றாள்.
அழுது கொண்டு எழும் அவர்களையும் சமாதானப்படுத்தி முகம் கழுவ பண்ணி போட்டு, கையோடு அவர்களையும் பாடசாலைக்கு போக ஆயத்தம் செய்கின்றாள்.
அவையளின் அலுவல்கள் எல்லாவற்றையும் பார்த்தபின் அவளின் வசதிக்காக அவர்களை சிறிது நேரம் தொலைகாட்சி பார்க்க போட்டு விடுகின்றாள். அந்த சிறிய நேரத்துக்குள் அவள் வெளிக்கிட்டு எழுமணிக்குள் வேலைக்குப் போகவேண்டும்.
வெளிக்கிட்டுவிட்டு கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு… பிள்ளைகளிடமும் விடைபெற்றுக் கொள்ள வந்தபோது கதிரையிலே மோகனா நித்திரையாகி விட்டிருந்தாள். இருவரையும் முத்தமிட்டு விடைபெற்றுக் கொள்ள போகும்போது வழமையாக சகானா கேட்கும் கேள்வி "அம்மா எங்களை நீங்களே ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு போங்கோ..." கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
அவளை அன்புடன் அணைத்துக் கொண்டே "இல்லையம்மா அம்மா வேலைக்கு போக வேண்டும்தானே. ஸ்கூல் முடிய நானே நின்று கூட்டிக்கொண்டு வருவன்தானே வரேக்க சொக்கிலேட்டும் வாங்கிக் கொண்டு வாறன் என்ன" என்று சமாதானம் கூறிவிட்டு இறுக அணைத்து முத்தங்களையும் தந்துவிட்டு வேலைக்குப் போய் விட்டாள் சந்தியா.
அவளின் கணவர் மகேசன் வேலைக்குப் போகும் போது பிள்ளைகளையும் அப்படியே பாடசாலையில் விட்டுவிட்டுப் போவார். சந்தியாவின் வேலை முடிய பிள்ளைகளின் பாடசாலை முடியவும் சரியாகயிருக்கும். அப்படியே அவர்களையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவாள்.
பிள்ளைகள் பாடசாலை நேரத்தில்தான் அவளின் வேலைநேரம் அமைந்திருந்தது. இப்படி ஒரு வேலை கிடைத்தது நினைத்து தனது அதிர்ஷ்டம் என்று எண்ணி அவள் அடிக்கடி தனக்குள் பெருமைபட்டுக் கொள்வாள்.
இப்படித்தான் அவள் வாழ்க்கை நித்தமும் சென்று கொண்டிருந்தது.
ஆனால்... சுனாமியின் அழிவுக்குப் பிறகு அவளின் வாழ்க்கையில் சிறு மாற்றம் கண்டு கொள்ள ஆரம்பித்தது. சுனாமியால் அகதியாகிவிட்ட உறவுகளின் மேலதிக பண தேவைக்காக... மேலதிகமாக இரண்டு மூன்று மணித்தியால பகுதிநேர வேலைக்காக அவளின் தேடல் அமைந்து இருந்தது.
அதன் பலன் மாலை நேரங்களில் மூன்று மணிநேர பகுதி வேலை அவளுக்கு கிடைத்தது.
மத்தியாண வேலை முடிந்து வந்த கையுடனே பிள்ளைகளையும் கூட்டிவந்து அவர்களின் அலுவல்களையும் பார்த்து விட்டு, சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் பிள்ளைகளை பக்கத்து வீட்டு நண்பியிடம் விட்டு விட்டு மீண்டும் வேலைக்கு போவதில் சந்தியாவின் ஆர்வம் அதிகமாக இருந்தது.
அவள் உழைத்த பணம் முழுவதும் சுனாமியால் அநாதையாய் அகதியாக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவு செய்து கொண்டிருந்தாள்.
கணவனின் பணம் குடும்பத்துக்காகவும், அவளின் உழைப்பு தாயகத்துக்காகவும் செலவிடப்பட்டுக் கொண்டிருந்தது.
அன்றும் வழக்கம் போல் பாடசாலை முடிந்து பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தபோது... சாகானா தான் கேட்டாள்
"அம்மா... நானும் இங்கே சுனாமியால் அநாதரவாய் மாதிரிதானம்மா இருக்கிறன். இந்தாம்மா இந்த உண்டியல் பணத்தை நீங்களே வைத்துக்கொண்டு எங்களுடன் இருங்கள் அம்மா..." என்றாள்.
ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றாள் சந்தியா
மகள் சாகானாவின் பேச்சுத் தொனி... அவள் கொண்டு வந்த உண்டியலின் பணம் அவள் மனதின் திகைப்பும் கேள்விக்குறியுமாக அமைந்து விட சாகானாவையும் உண்டியலையும மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள்.
"எங்கேயிருந்தம்மா இந்த பணம்.." சந்தியா அன்பாக வினாவினாள்.
"நான் தான் ஸ்கூல்ல சொன்னனான். எங்கட சொந்தக்காரர் கணபேருக்கு வீடில்ல என்டனான். அவையளாத்தான் வகுப்பு பிள்ளைகள் எல்லாம் சேர்த்து தந்திச்சினம்" என்றவள் அழுதபடியே "அம்மா எப்போதும் நீங்களும் அப்பாவும் வேலை வேலை என்டு இருக்கிறீங்கள். எங்களுடனும் இன்று இருங்கோ." என்டு விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள்.
கூடவே வயதில் சிறியவளான மோகனாவும் அதைப்பார்த்து விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள்.
ஒருகணம் சந்தியா ஆடிப்போய் விட்டாள். சுனாமி என்ற பேரலை எங்கள் நாட்டை மட்டுமா தாக்கி விட்டுப்போனது...? இல்லை இல்லை அதன் தாக்கம் புலம் பெயர் நாட்டினில் மெல்லிய மறைமுகமாக தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை முதன் முதலாக உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். வேலை, பணம், பிள்ளைகளுக்கு விரும்புவதை நினைத்தவுடன் வாங்கித்தருவது இது இல்லை வாழ்க்கை. பொம்மையும் பள்ளிக்கூடமும் சொல்லக் கொடுத்தவற்றை மனப்பாடம் செய்யும் கள்ளமில்லா வயதில் அன்புக்காக ஏங்கும் அந்த பிஞ்சு உள்ளங்களை தவிக்க விட்டு விட்டேனே..?
வெங்காயத் தோலிகளைப் போல ஒன்றன் மேல் ஒன்றாக வந்து விழும் உறைகளாக... வந்து குவியும் சுமைகளுக்கு நடுவில் இளம் பச்சைக்குருத்துக்களுக்கு அன்பு என்ற அரவணைப்பை கொடுக்க தவறியது பெற்றோர்களாகிய தங்கள் பிழை என்பதை அவள் மெதுவாக உணரத் தொடங்கி... தன் வாழ்வியல் முறையினை மாற்ற மனத்திடமாக முடிவுசெய்து கொண்டாள்.
சுனாமி நடந்தது நிஜம். அந்த நிஜங்களைத் தாண்டி... இந்த புலம்பெயர்ந்த மண்ணில் வேலை வேலை என்று நாமும் அதில் முழ்கி எம் சிறுவர்களையும் அநாதரவான நிலைக்கு தள்ளத்தான் வேண்டுமா...!
தன்னை சுதாகரித்துக் கொண்டவள் "என்ட செல்லக்குஞ்சுகளே" வார்த்தைகள் வர மறுக்க முதன் முறையாக முத்தங்களை பொழிவது போன்ற உணர்வுகள் மேலிட... இருவரையும் மாறி மாறி இருக அணைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வடிய முத்தங்களைப் பொழிந்தாள்.
ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் என்னதான் அமைதியாக, ஆனந்தமாக இருப்பது போல் தோன்றினாலும்... மேலே சலசலத்தோடுவது போல் தோன்றும் ஆழநீர்ப்பரப்பின் அடிமட்டத்தில் பாறைகளைப் பிளந்து மண்ணை அறுத்துச்செல்லும் வேகம் இருக்குமே... அது போன்ற ஒரு வேகம்... குறையாக கறையாக பரிணமிக்கத்தான் செய்கின்றது. அந்த வேகமே கண்களை மறைக்கின்ற கறுப்பு கண்ணடிகளாகவும், மூகமுடிகளாகவும் அமைந்துவிடவும் செய்கின்றது.
(யாவும் கற்பனை )
|
|
|
| மலர் பேசினா(ல்)ள்...! |
|
Posted by: kuruvikal - 05-20-2005, 10:21 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (9)
|
 |
<img src='http://img285.echo.cx/img285/1539/lovelyrose2qb.jpg' border='0' alt='user posted image'>
<b>பேசா மலரே
பேசினாய் முதல் வார்த்தை
பேச்சிற்கு நாலு வார்த்தை
பேதைக் குருவியிவன்
போதை தீர....!
போ... மலரே
போன காலம் மெளனத்தால்
போனதே வீணா...
பேரன்பு உனை மலரவைக்க
போனதோ வீராப்பு
போனதை எண்ணி வருந்தி
பேசினாயோ அன்பு வார்த்தை..!
பேசியது தேனினும் இனிப்பாய்
பேசாச் செவிகூடச் சுவை அறிந்து
போதை கொண்டு
பேச்சுக்கு அடிமையாகிறது....!
பேசாமல் தொடர்வாயோ
பேச்செனும் அமுதம் தினமும் ஊட்டாயோ..??!
போதை எனித் தீராது
பேசியதும் இங்கினி
போகாது வீணே...!
பேதையெனினும் போதையெனினும்
போகும் அவை
பேதையிவன் மூச்சில் கலந்து...!
பேச்சின் மொழியும்
பேதையே உன் ஞாபகம் தந்து
போகும் இவன் இறுதி மூச்சுவரை...!
பேசியதை இங்கு பேசியதற்காய்
பேசாமல் பேசிடு என்ன
பேச்சதில் நீயும் மலர்வாய்
பேதையிவன் நெஞ்சில்
பேரழகு மலராய்...!</b>
|
|
|
| விநாயகர் 'பீர் பாட்டில்'...!? |
|
Posted by: anpagam - 05-19-2005, 10:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (31)
|
 |
விநாயகர் கையில் 'பீர் பாட்டில்' !!: அமெரிக்க நிறுவனம் மீது வழக்கு
வாஷிங்டன்:
விநாயகரின் கையில் பீர் பாட்டில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்ட பீர் பாட்டில்களை விற்பனை செய்த அமெரிக்க மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ்ட் கோஸ்ட் என்ற ஒரு மது தயாரிப்பு நிறுவனம்இ சமீபத்தில் 'இண்டிகா' என்ற புதிய பீர் ரகத்தை வெளியிட்டது. அந்த புதிய ரக பீர் பாட்டிலில் விநாயகரின் உருவத்துடன் கூடிய லேபிள் இருந்தது.
விநாயகரின் நான்கு கைகளிலும்இ தும்பிக்கையிலும் பீர் பாட்டில் இருப்பது போல அந்த லேபிள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமெரிக்காவிலுள்ள இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந் நிலையில்இ வாஷிங்டனிலுள்ள கோல்டன் கேட் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பிரிஜ் திர் என்ற இந்திய அமெரிக்க சட்ட மாணவர்இ லாஸ்ட் கோஸ்ட் மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து பிரிஜ் திர் கூறுகையில்இ அவர்களது கம்பெனி விளம்பரத்திற்காக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வை எப்படி புண்படுத்தலாம்?
விளம்பரம் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள்? இந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக அந்த மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
இதற்கிடையே விநாயகரின் உருவ லேபிளை லாஸ்ட் கோஸ்ட் மது தயாரிப்பு நிறுவனம் விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பார்பரா குரூம் கூறுகையில் எந்த இந்துவின் மனதையும் நாங்கள் புண்படுத்த விரும்பவில்லை என்றார்.
tnx: thatstamil
|
|
|
|