| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 496 online users. » 0 Member(s) | 493 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| தினகரன் சினிமா விருது |
|
Posted by: MUGATHTHAR - 05-22-2005, 09:59 PM - Forum: சினிமா
- Replies (17)
|
 |
தினகரன் நாளிழ் வருடந்தோறும் மெடிமிக்ஸ் நிறுவனத்துடன் இனைந்து நடத்தும் சினிமா விருது இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்றது
இன்று சண் ரிவீயில் இதன் 9வது விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது இதன் ஒரு குறுகிய கண்ணோட்டம்
<b> 1. சிறந்த ஆர்ட் டைரக்டர் -- ராஜீவன் --- "மதுர"
2. சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்-- கனல் கண்ணன் --" M.குமரன் S/O மகாலட்சுமி
3. சிறந்த நடன மாஸ்டர் --ராஜ சுந்தரம் -- "கில்லி"{அப்பிடி போடு}
4. சிறந்த பாடலாசிரியர் -- பா.விஜய் -- "ஆட்டோகிராப்"
5. சிறந்த புதுமுக இயக்குனர்-- K.ராதாமோகன் -- அழகிய தீயே"
8. சிறந்த புதுமுக நடிகன் -- ரவிகிருஷ்ணா --7G RAINBOW காலணி
9. சிறந்த புதுமுக நடிகை -- சந்தியா--" காதல்"
10.சிறந்த குணசித்திர நடிகன் --விஜயன் --" 7G RAINBOW காலணி"
11.சிறந்த குணசித்திர நடிகை --தேவயாணி -- "நியு"
12.சிறந்த நகைச்சுவை நடிகர் -- வைகைபுயல் வடிவேல் --"ஏய் .கிரி"
13.சிறந்த வில்லன் நடிகர் -- பிரகாஷ்ராஜ் -- "கில்லி"
14.சிறந்த கதாசிரியர் --சிலம்பரசன்--"மன்மதன்"
15.சிறந்த ஒளிப்பதிவாளர் -- விஜய்மில்டன் -- "காதல்"
16.சிறந்த பாடகர் -- கார்த்திக் --"7G RAINBOW காலணி"
17.சிறந்த இசையமைப்பாளர் -- யுவன்சங்கர்ராஜா--"மன்மதன்"
18.சிறந்த இயக்குனர் -- சேரன் --"ஆட்டோக்கிராப்"
19.சிறந்த நடிகர் --தளபதி விஜய் -"கில்லி"
20.சிறந்த நடிகை --ஜோதிகா -- "பேரழகன்"
** சாதனையாளர்கள்--"நாகேஷ்" "வாலி" </b>
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புக்கு இணங்க ரசிகப் பெருமக்களின் கருத்துகணிப்பின் படி இவை தெரிவு செய்யப்பட்டன.........
{என்ன மதன் யாழ்களத்தில் நடைபெற்ற சிறந்த நடிகை தெரிவில் முதல் 2 இடங்களையும் பெற்ற சினேகா திரிஷா இரண்டு பேரையும் ஏரியா பக்கமே காணோம் டிப்போசிட் இழந்த ஜோதிகா தூள் கிளப்பிட்டா.... !!!!!!!}
|
|
|
| கணவரின் துர்நடத்தைகளுக்கு முடிவுகட்ட மனைவியொருத்தி செய்த கார |
|
Posted by: eelapirean - 05-22-2005, 04:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (19)
|
 |
கணவரின் துர்நடத்தைகளுக்கு முடிவுகட்ட மனைவியொருத்தி செய்த காரியம்
மதுவுக்கும் மாதுகளுக்கும் அடிமையாகிப்போன தனது கணவரை திருத்த வேண்டுமென்று உறுதிபூண்ட இளம் மனைவியொருவர் கணவரின் ஆணுறுப்பை கத்தியால் துண்டாடி விட்டார்.
இந்தச் சம்பவம் வடஇந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இடம்பெற்றதாக நேற்று சனிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதான றெஷ்மா அஹமட் என்ற இப்பெண்மணி 10 வருடங்களுக்கு முன்னர் மேற்படி நபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கணவன் விபசாரியொருவரையும் வீட்டுக்குக் கூட்டிவந்தார். இதனால்இ ஆத்திரமடைந்த றெஷ்மா விபசாரிகளுடன் சல்லாபிக்கும் தனது கணவரின் துர்நடத்தைக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஒரு முடிவு கட்டுவதற்கு அவருக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமென்று உறுதி பூண்டார்.
ஹஅவர் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரின் துர்நடத்தைகளுக்கு இடம்கொடுத்தது போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு. அவரது கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டுஇ சமையலறைக் கத்தியினால் ஆணுறுப்பை துண்டித்து விட்டேன். கணவரின் காமக்களியாட்டத்துக்கு ஒரேயடியாக முடிவுகட்டவேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன்' என்று மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கணவரின் ஆணுறுப்பை டாக்டர்கள் பின்னர் தையல் போட்டு இணைத்திருக்கிறார்கள்.
அவர் வழமைபோன்று பாலியல் உறவு கொள்ள முடியுமாமென்பதை சில நாட்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது என்று சத்திரசிகிச்சையைச் செய்த டாக்டர்களில் ஒருவரான ஏ.கே.சிஸ் தெரிவித்தார்.
துர்நடத்தையில் ஈடுபடும் ஆண்களே ரொம்பவும் ஜாக்கிருதயாய் இருங்கப்பா
தினகுரல்
|
|
|
| பெற்றோரைச் சந்திக்க உதவுமாறு சோனியா காந்திக்கு நளினியின் மகள |
|
Posted by: eelapirean - 05-22-2005, 04:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பெற்றோரைச் சந்திக்க உதவுமாறு சோனியா காந்திக்கு நளினியின் மகள் கடிதம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் - நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா தனது பெற்றோரைச் சந்திக்க இந்தியா வருவதற்கு விசா பெற உதவுமாறு இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜீவ் காந்தியின் 14 ஆவது நினைவு தினம் நேற்றாகும். இந்நிலையிலேயே அரித்ரா தனக்கு உதவுமாறு சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் இருக்கிறார். இவரது கணவரான முருகன் ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை பெற்று அதே ஜெயிலில் இருக்கிறார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நளினி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில்தான் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டு இருவரும் கைதானார்கள்இ வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அங்கு நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அரித்ரா என்று பெயரிட்டனர்.
அரித்ரா சில மாதங்கள் வரை நளினியுடனே ஜெயிலில் வளர்ந்தாள். ஜெயிலில் குழந்தையை வளர்ப்பதற்கு கஷ்டமாக இருந்ததால் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோரிடம் அரித்ராவை ஒப்படைத்தனர்.
அங்கே அவள் வளர்ந்து வருகிறாள். தற்போது அவளுக்கு 13 வயது ஆகிறது. அரித்ரா தாய் நளினி மற்றும் தந்தை முருகனை பார்க்க மிகவும் ஆசைப்படுகிறாள். ஆனால்இ அவருக்கு விசா கிடைக்கவில்லை. எனவே சோனியாவின் உதவியை அரித்ரா நாடி இருக்கிறாள்.
ராஜீவ் கொலை வழக்கில் முருகன் - நளினி இருவருக்குமே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இதில் அப்போது சோனியா காந்தி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இருவருக்குமே தூக்கு தண்டனை அளித்தால் குழந்தை அரித்ரா அனாதையாகி விடுவாள். எனவேஇ இதில் கருணை காட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனால் நளினிக்கு விதித்த தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அப்போது கருணை காட்டியது போல் இப்போதும் சோனியா காந்தி கருணை காட்டுவார் என்ற எண்ணத்தில் அரித்ரா சோனியாவுக்கு இப்போது கடிதம் எழுதி இருக்கிறாள்.
இந்தத் தகவலை நளினியின் வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; அரித்ரா தனது பெற்றோர்களை சந்தித்து பல வருடங்கள் ஆகின்றன. அவள் இந்தியாவுக்கு வந்து பெற்றோரை சந்திக்க விசா பெறுவதற்காக இந்திய தூதரகத்தை அணுகினாள். ஆனால்இ விசா கிடைக்கவில்லை.
எனவே சோனியாகாந்தியின் உதவியைக் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறாள். தூக்குத் தண்டனையில் இருந்து தனது தாயை காப்பாற்றிய சோனியா காந்தி இப்போதும் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கிறாள்.
நளினிஇ முருகன் இருவருமே ஜெயிலில் மிகவும் நன்னடத்தையுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் மகள் மீது மிகவும் பாசம் வைத்துள்ளனர். இருவரும் சந்திக்கும் போது மகளின் போட்டோவை பார்த்து கண் கலங்குகின்றனர். அரித்ராவின் கடிதத்தால் அவர்கள் குடும்பம் விரைவில் ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இதேவேளைஇ ஜெயிலில் இருந்தாலும் நளினியும் முருகனும் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.
நளினி உணவு - ஊட்டச்சத்து பாடத்தில் சான்றிதழ் படிப்பு முடித்துள்ளார். தற்போது கம்யூட்டர் பிரிவில் மாஸ்டர் டிகிரி 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். முருகன் பி.சி.ஏ. படித்து வருகிறார்.
முருகன் ஓவியம் படித்துள்ளார். இதன்மூலம் தேசத் தலைவர்கள் மற்றும் தனது மகளின் படத்தை வரைகிறார். இருவரும் 2 வாரங்களுக்கு ஒரு முறை பார்வையாளர் அறையில் சந்தித்துப் பேச ஜெயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
-----------------------------------------------------------------------
தினகுரல்
|
|
|
| இவள் மனிதஜடம்....! |
|
Posted by: tamilini - 05-22-2005, 04:11 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (44)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pen1.jpg' border='0' alt='user posted image'>
<b>
வானத்து விண்மீனாய்
மிளிர்ந்திட கனவுகண்டவள்.
குளத்து மீனாய்
தன்னுள் வெதும்புறாள்.
எட்டி தொட்டிட
நினைத்த நிலவதை
நிழலில் கூட தொடமுடியாமல்
தலை குனிகிறாள்.
எட்ட நின்று விறைத்துப்பார்க்கிறாள்.
கற்பனையாய் மட்டும் போய்விட்ட
இவளது கனவுகள்
கண்ணீரைத்தான் விட்டுவைத்தது...!
விடியல் இல்லாத இரவுகள்
விடிந்தபின்னும்விட்டு அகலாத
கனவுகள் காட்சிகள்..
எப்படி விடியவைக்கும்
வாழ்வதனை
வாழ்வு கூட கடமையாய் ஆச்சு..!
நுணுக்கமறிந்து
நுட்பமறிந்து
கலையாய் விந்தையாய்
வாழ நினைத்த இவளது
வாழ்க்கை வெறும்
மணல் கோட்டையாய்
மட்டும் இவள்
மனமடி தவழ்கிறது
கண்ணீர் சொல்லும்
கதையது இவள் வாழ்வின்
கசப்பான வரலாறு..!
ஏதிலையாய் ஏங்கித்தவிக்கும்
எண்ண அலைகள்
என்றும் நிறைவேறப்போதில்லை
என்பதை அறிந்து
ஆண்டுகள் பல சென்றபின்னும்
ஏமாற்றங்கள் தான்
உறுதிப்படுத்துகிறது
உண்மை அவை என்று
மறுபடியும்..!
இனியும் ஒருமுறை
இறந்து மீண்டும் பிறக்க
இனி இவளுள் உயிரில்லை
இன்றே இவள் ஜடம் தான்
இறந்த பின்பும் நடமாடும்
இவள் மனிதஜடம்....!
</b>
<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>
யாவும் கற்பனை
|
|
|
| சீனப் பெண் வியாபாரியிடம் அடி, உதை வாங்கிய யாழ். பொலிஸ் |
|
Posted by: தமிழரசன் - 05-22-2005, 03:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் சீனப் பெண் வியாபாரியினால் சிறிலங்காப் பொலிசார் ஒருவர் நையப்புடைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ். நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளே நையப்புடைக்கப்பட்டவராவார்.யாழ். நகரில் மணிக்கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்த சீன நாட்டு பெண் வியாபாரியை யாழ். நகரில் வியாபாரம் செய்யக்கூடாது எனத் தடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ் வியாபாரியை சீண்டி அவரைத் தாக்கமுற்பட்டார்.
இதனையடுத்து ஆத்திரமுற்ற அந்த சீனப் பெண் வியாபாரி கைகளாலும் கால்களாலும் கான்ஸ்டபிளை நையப்புடைந்தார். இதனையடுத்து அங்கு வந்த பொலிசார் பெண் வியாபாரியை சமரசப்படுத்தி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு விசாரித்த பின் விடுதலை செய்ததாக தெரியவருகிறது.
Puthinam
|
|
|
| கைவிடப்பட்ட இராணுவமுகாமிலிருந்து பெண்ணின் எலும்புக்கூடு |
|
Posted by: தமிழரசன் - 05-22-2005, 03:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கைவிடப்பட்ட இராணுவமுகாமிலிருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு
வடமராட்சி குடத்தனைப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் கைவிடப்பட்ட மினிமுகாம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கட்டட வேலைகளிற்கான மண் அகழும் பணியிலிடுபட்டிருந்த தொழிலாளர்களே இவ் எழும்புக் கூட்டை கண்டு பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக உடனடியாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் பருத்தித்துறை மாவட்ட நீதவான் க.அரியநாயகத்திற்கு இது தொடர்பாக அறிவித்தனர். இதனையடுத்து பருத்தித்துறை மாவட்ட வைத்;திய கலாநிதி சி.கதிரவேற்பிள்ளை நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
குறித்த எலும்புக்கூடு சுமார் 20 தொடக்கம் 40 அகவைக்கு உட்பட்ட பெண் ஒருவருடையதாக இருக்கலாமென கருத்து வெளியிட்ட வைத்;திய கலாநிதி சி.கதிரவேற்பிள்ளை சுமார் ஒன்றரை வருட காலப் பகுதிக்கு முன்னர் அப்பெண் கொல்லப்பட்டு புதைக்கப் பட்டிருக்கலாமெனவும் தெரிவித்தார்.
இதனிடையே குறித்த பெண்னை கொலை செய்ய பயன்படுத்த பட்டதாக நம்பப்படும் இரு பொல்லுகளும் அதே புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக் கூட்டின்ன வலது கையில் இரு விரல்களைக் காணவில்லை. வடமராட்சி கிழக்கின் கடற்கரை பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரப்பகுதியில் அமைந்துள்ள இம்மணல் பிட்டி பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் எதுவுமில்லாதிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
sankathi
|
|
|
| புதிய உலக சாதனை |
|
Posted by: Nitharsan - 05-21-2005, 08:18 PM - Forum: புலம்
- Replies (7)
|
 |
புதிய உலக சாதனை
எழுதியவர்: 'மண்' சிவராஜா
சாதனையாளர்
செல்வன் துஸ்யந்தன் சத்தியமூர்த்தி
இலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் சத்தியமூர்த்தி தொடர்ச்சியாக சுரத்தட்டு இசை (Keyboard) மீட்டி புதிய உலக சானையை நிலைநாட்டியுள்ளார். ஒரு வயதுக் குழந்தையாக யேர்மனிக்கு தனது குடும்பத்தவர்களுடன் இடம் பெயர்ந்த இவர், இலங்கையின் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது 21 வயது நிறைந்துள்ள செல்வன் துஸ்யந்தன் தனது உலக சாதனை முயற்சியை 12-05- 2005 அன்று பகல் 12:00 மணிக்கு ஆரம்பித்து 15.05.2005 அதிகாலை 4:02மணிக்கு முடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். 62 மணி.15 நிமிடங்கள் இவரின் சாதனை நேரமாகும். அமெரிக்க நாட்டவரான முன்னைய சாதனையாளர் ரண்டி றும்பெலோவ் (Randy Rumbelow) தனது சாதனையை 4-08-2004 தொடக்கம் 6-08-2004 வரையிலான 53 மணி நேர உலக சாதனையை மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் இதனை முறியடிக்கும் வகைகயில் 9 மணி 15 நிமிடங்கள் கூடுதலான நேரமெடுத்து பழைய சாதனை முயற்சியை முறியடித்து புதிய உலக சாதனையாளராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இவரின் ஆரம்ப கால சுரத்தட்டு இசை ஆசிரியராக திரு மகேஸ் ஆசிரியர் இருந்துள்ளார். அவரிடம் முறையாகப் சுரத்தட்டு இசையை பயின்றார். அத்துடன் யேர்மன் பாடசாலையிலும் இதை ஒரு பாடமாகப் பயின்று இன்று ஒலி இசைத்துறையில் உயர் படிப்பை மேற்கொண்டுவருகிறார்.
தனது கல்வியை யேர்மன் மொழியில் பயின்றாலும் தற்போது தமிழ் ஆங்கிலம் டொச் மொழிகளை எழுத பேச வாசிக்க ஆற்றல் படைத்துள்ளார்
இவரின் இந்த உலக சாதனை வெற்றி பெறுவதற்கு இவரின் பெற்றோரின் பெரு முயற்சியும் முக்கிய காரணமாகும். இவர் சாதனை முயற்சியில் ஈடுபட இராட்டிங்கன் நகர அரச அரசசார்பற்ற தாபனங்களும் யேர்மன் பத்திரிகைள் தொலைக்காட்சிகள் வானொலிகளும் யேர்மனிய மக்களும் துருக்கிய மக்களும் நிறைந்த ஆதரவு கொடுத்து உதவினார்கள். ஆனால் நமது தமிழ் மக்களின் ஆதரவு குறைவாக இருந்தது.
இவரது முயற்சிகளாக:
1.யேர்மனி, சுவீஸ்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளில் பல பாடல் போட்டிகளில் கலந்துகொண்டதுடன் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
2.பல இசைக்குழுக்களுடன் சேர்ந்து இசை அமைத்துப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்
3.தானே மெட்டமைத்துப் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
4.எட்டுப் பாடல்கள்கொண்ட அழகே!..அழகே!.. என்ற இசைப் பேழையை வெளியீடு செய்துள்ளார்.
5.சுவீஸ் நாட்டில்; தேசிய மட்டத்தில் நடைபெற்ற சுவீஸ் பொப் ஸ்ரார் (Popstars) பாடல் போட்டியில் இரண்டு சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்.
6.சுனாமிப் பாடல்களுக்கான இசையமைப்பை தானே தனித்து இயக்கியுள்ளார்.
7.இந்தியா ராஜ் தொலைக்காட்சி (Raj TV) நடாத்திவரும் ராஐ கீதம் பாடல் போட்டியில் நான்கு சுற்றுப்போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். அடுத்த மாதம் 20ம் திகதி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
[அப்பால்-தமிழ் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது]
|
|
|
| ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு .. |
|
Posted by: ottan - 05-21-2005, 04:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசிடம் வேண்டுகோள்
நமது கட்சி உறுப்பினர்கள் மீதான தொடர்ச்சியான கொலைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென
இது தொடர்பாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
நாம் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருப்பதை ஒரு காரணமாகக் கூறியே புலிகள் இந்த சமாதான முயற்சிகளை திசை திருப்பக்கூடும் என்பதைக் கருத்திற் கொண்டு சமாதான முயற்சிகள் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு விரைவில் கௌரவமானதும் நியாயமானதுமான தீர்வு காணப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடும் நாம் எமது தற்பாதுகாப்புக்கு ஏந்தியிருந்த கருவிகளை கையளித்தோம்.
புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் புலிகள் தமது கொள்கைகளை மாற்றி ஜனநாயக செயற்பாட்டுக்கு ஊறு விளைவிக்கமாட்டார்கள் என பலராலும் நம்பப்பட்டது. இந்த மூன்று வருடங்களில் எமது கட்சியின் ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் பல விதத்திலும் இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். இதுவரையில் நாற்பதுக்கும் அதிகமான கட்சிப் பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொல்லப்படும் நிலையை தோற்றுவித்தார்கள்.
இதுவரையில் எமது உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போது அதற்கெதிரான உணர்வுகளையும் எதிர்ப்பையும் ஜனநாயக வழியிலேயே வெளிப்படுத்தியிருந்தோம். இதனைச் சர்வதேசமும்மனித உரிமை அமைப்புகளும் வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களும் அறிந்த ஒன்றே.
தொடர்ச்சியாக எமது உறுப்பினர்கள் பலியாகி வருவது எம்மை அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றுக்கு தள்ளியுள்ளது. இதனால் எமது உறுப்பினர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கூடிய பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டுமெனவும் அல்லாவிடில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.
லங்காசிறியிலிருந்து சுடப்பட்டது
அதுசரி முதலிலை டக்கிளசிடமிருந்து அவையளை காப்பாற்றவேணும். அரசாங்கத்தை அவை அதை கேட்க மறந்துவிட்டினம். டக்கிளசுதானே அவையளை போட்டு தள்ளுறாhர். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் எல்லாத்தையும் தூக்கிபோட புலியள் இருக்கினம் எண்ட துணிவிலை டக்கிளசு ரொம்பத்தான் ஆட்டம் போடுறார்.
|
|
|
| உதிர்ந்த வார்த்தைகளால் உரைத்தது என்ன...?! |
|
Posted by: kuruvikal - 05-21-2005, 09:42 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (18)
|
 |
<img src='http://img283.echo.cx/img283/6348/rose9am.jpg' border='0' alt='user posted image'>
<b>உதிர்ந்த வார்த்தையொன்று
உள்ளத்தைக் கிழித்தது
உண்மை அன்பு தேடி
உன்னை உண்மையாய் நாடி
உலகமே நீ என்று கண்டதற்கு
உன் காணிக்கை இதுதானா....??!
உண்மையாய் இக்கணம்
உலகமே வெறுக்கிறது
உன் நினைவு வாட்டுகிறது
உறக்கம் தொலைகிறது
உண்மை என்ன...?!
உன்னில் என்ன அவநம்பிக்கை
உன்னை ஊரே ஏய்க்குதோ
உன் கண்களை மறைக்குதோ..??!
உயிரே...
உனக்கொரு வேண்டுகோள்
உள்ளத்தில் நீயே முதலாய்
உன் வார்த்தைகளால்
உன் நிலை தாழ்த்தாதே...!
உண்மை அன்புக்கு
உலகில் இடமில்லை
உண்மை என்று உணர்ந்து
உலகை வெறுத்தவன்
உன் வார்த்தைகளால்
உண்மையில் உறுதியாகிறான்...!
உண்மைக்காய்
உறங்கி விழித்தவன் - இவன்
உளறுவதாய் என்னாதே - இன்னும்
உலகை உணர்கிறான்
உள்ளங்கள் உணர்கிறான்...!
உண்மையில் அன்பு
உன்னிடத்தில் உண்டா...??!
உலகில் உண்டா....??!
உண்டு
உன்னால் அதை
உள்ளம் கொண்டு தெளிக்கக் கூட முடியவில்லை
உண்மைக் காரணம்....
உண்மைகள் என்று
உலகம் உன்னை ஏய்ப்பதால்
உன்னை நீயே உணர மறுப்பதால்
உண்மைத் தேடல் இன்றி
உறுதி இழந்ததால்....!
உண்மையில் இவன்
உறுதியின் உறைவிடம் - இருந்தும்
உண்மை அன்புக்கு
உள்ளது அடைக்கலம்
உனக்கு மட்டுமே என்றும் அது...!</b>
|
|
|
|