Yarl Forum
கைவிடப்பட்ட இராணுவமுகாமிலிருந்து பெண்ணின் எலும்புக்கூடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கைவிடப்பட்ட இராணுவமுகாமிலிருந்து பெண்ணின் எலும்புக்கூடு (/showthread.php?tid=4235)



கைவிடப்பட்ட இராணுவமுகாமிலிருந்து பெண்ணின் எலும்புக்கூடு - தமிழரசன் - 05-22-2005

கைவிடப்பட்ட இராணுவமுகாமிலிருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு


வடமராட்சி குடத்தனைப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் கைவிடப்பட்ட மினிமுகாம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கட்டட வேலைகளிற்கான மண் அகழும் பணியிலிடுபட்டிருந்த தொழிலாளர்களே இவ் எழும்புக் கூட்டை கண்டு பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக உடனடியாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் பருத்தித்துறை மாவட்ட நீதவான் க.அரியநாயகத்திற்கு இது தொடர்பாக அறிவித்தனர். இதனையடுத்து பருத்தித்துறை மாவட்ட வைத்;திய கலாநிதி சி.கதிரவேற்பிள்ளை நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த எலும்புக்கூடு சுமார் 20 தொடக்கம் 40 அகவைக்கு உட்பட்ட பெண் ஒருவருடையதாக இருக்கலாமென கருத்து வெளியிட்ட வைத்;திய கலாநிதி சி.கதிரவேற்பிள்ளை சுமார் ஒன்றரை வருட காலப் பகுதிக்கு முன்னர் அப்பெண் கொல்லப்பட்டு புதைக்கப் பட்டிருக்கலாமெனவும் தெரிவித்தார்.

இதனிடையே குறித்த பெண்னை கொலை செய்ய பயன்படுத்த பட்டதாக நம்பப்படும் இரு பொல்லுகளும் அதே புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக் கூட்டின்ன வலது கையில் இரு விரல்களைக் காணவில்லை. வடமராட்சி கிழக்கின் கடற்கரை பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரப்பகுதியில் அமைந்துள்ள இம்மணல் பிட்டி பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் எதுவுமில்லாதிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

sankathi