Yarl Forum
இவள் மனிதஜடம்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இவள் மனிதஜடம்....! (/showthread.php?tid=4233)

Pages: 1 2 3


இவள் மனிதஜடம்....! - tamilini - 05-22-2005

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pen1.jpg' border='0' alt='user posted image'>

<b>
வானத்து விண்மீனாய்
மிளிர்ந்திட கனவுகண்டவள்.
குளத்து மீனாய்
தன்னுள் வெதும்புறாள்.
எட்டி தொட்டிட
நினைத்த நிலவதை
நிழலில் கூட தொடமுடியாமல்
தலை குனிகிறாள்.
எட்ட நின்று விறைத்துப்பார்க்கிறாள்.
கற்பனையாய் மட்டும் போய்விட்ட
இவளது கனவுகள்
கண்ணீரைத்தான் விட்டுவைத்தது...!

விடியல் இல்லாத இரவுகள்
விடிந்தபின்னும்விட்டு அகலாத
கனவுகள் காட்சிகள்..
எப்படி விடியவைக்கும்
வாழ்வதனை
வாழ்வு கூட கடமையாய் ஆச்சு..!

நுணுக்கமறிந்து
நுட்பமறிந்து
கலையாய் விந்தையாய்
வாழ நினைத்த இவளது
வாழ்க்கை வெறும்
மணல் கோட்டையாய்
மட்டும் இவள்
மனமடி தவழ்கிறது
கண்ணீர் சொல்லும்
கதையது இவள் வாழ்வின்
கசப்பான வரலாறு..!

ஏதிலையாய் ஏங்கித்தவிக்கும்
எண்ண அலைகள்
என்றும் நிறைவேறப்போதில்லை
என்பதை அறிந்து
ஆண்டுகள் பல சென்றபின்னும்
ஏமாற்றங்கள் தான்
உறுதிப்படுத்துகிறது
உண்மை அவை என்று
மறுபடியும்..!

இனியும் ஒருமுறை
இறந்து மீண்டும் பிறக்க
இனி இவளுள் உயிரில்லை
இன்றே இவள் ஜடம் தான்
இறந்த பின்பும் நடமாடும்
இவள் மனிதஜடம்....!
</b>
<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>

யாவும் கற்பனை


- KULAKADDAN - 05-22-2005

முகம் மூடி ஜடமாயிருத்தலால்
முகவரியா கிடைக்கும் பெண்ணே?
முகாரி பாடி என்ன கண்டாய்
முதலுக்கே மோசம் செய்யும்
வஞ்சக உலகத்தில்
முகம் மூடி நீயிருக்கும்
கணப்பொழுது போதுமவர்க்கு

துணிந்து நீ எழுந்து நின்றால்
துயரங்கள் பறந்தோடும்
வானம் வசப்படும்
வசந்தம் உனைச்சேரும்.
நிழல் நிலவெதற்கு
நிஜநிலவே பிடிக்கலாம்

நிமிர்ந்து நீ
நிஜ உலகை எதிர் கொள்ளு
நிச்சயமாய் வென்றிடுவாய்

[கிறுக்கி பார்த்தோம்]


- eelapirean - 05-22-2005

நன்றி


- hari - 05-22-2005

நல்லாயிருக்கு இருவரின் கவிதைகளும்
வாழ்த்துக்கள் இருவருக்கும்!


- tamilini - 05-22-2005

Quote:[கிறுக்கி பார்த்தோம்]
நல்லாய் இருக்கே கிறுக்கல். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 05-22-2005

நன்றி..........


- vasisutha - 05-22-2005

நல்லா இருக்கு கவிதைகள் :roll: :roll:


- tamilini - 05-22-2005

கவிதை புரியலையா வசி...?? :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- vasisutha - 05-22-2005

நல்லா புரியுது.. ஏன் இப்படி சோகமா
எழுதிறீங்களோ என்று தான் யோசித்தேன்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:


- tamilini - 05-22-2005

அது சும்மா கற்பனை தானே.. முதல் தனிய முழிச்சிருந்திச்சே அது தான் கேட்டன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 05-22-2005

முகம் மூடி
முழு நிலவு மறைந்தது போதும்
முகத்திரைகள் கிழித்து
முழு உலகும் ஆளும்
முதல் நிலவாய் நீ வா...!
முயற்சிதனை உனதாக்கி
முடியாத கற்பனைக்கு
முடிவு கட்டி
முகமன் காட்டும் வாழ்த்துக்கு
முகம் சுழித்து
முதற் பெண்ணாய் நீ வா...!
முடியாதது எதுவுமில்லை
முயன்றதைச் சாதனையாக்கி
முடிவுல்லா முழக்கங்களுக்கு
முடிவு கட்டி
முழு உலகும் அன்பு காட்டி
முழு மனிதனாய் நீ வா...!

முன்னின்று அரவணைத்து
முதல் மனிதனாய் முடி சூட
மனிதம் காத்திருக்கும்...!


பெண் ஒருத்தியின் ஏக்கங்கள் தங்கும் உள்ளத்தைச் சொல்லி கவிதை தந்த தமிழினிக்கும் பதில் கவிதை தந்த குளக்காட்டானுக்கும் வாழ்த்துக்கள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-22-2005

அக்காவின் கவிதையும் குளம் அண்ணாவின் கவிதையும் குருவி அண்ணாவின் "மு" கவிதையும் நன்று. வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 05-22-2005

ஆகா ஆகா வாழ்த்துக்கள் கவிஞர்களே வாழ்த்துக்கள்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அக்கா என்ன முகாரி கீதம் பாடுறமாதிரியிருக்கு....என்னக்கா நடந்தது...
குளம் சூப்பர் கவிதை...என்ன குளம் இன்னும் கொஞ்ச நாளையாலை காதல் கவிதை எல்லாம் எடுத்து விடுங்க என்ன...எத்தனை நாளுக்குத் தான் உள்ளதினுள் வைத்திருக்க போறியள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
குருவே...சே குருவி அண்ணா உங்கள் உற்சாகமூட்டும் கவிதை அருமை...அக்காக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- THAVAM - 05-22-2005

கரு ஒன்றாக இருந்தாலும் ழூன்று கோணத்தில் அழகாக கவி படைத்தமைக்கு நன்நி
<span style='font-size:30pt;line-height:100%'>சங்கே முழங்கு </span>


- KULAKADDAN - 05-22-2005

எழுதினத கவிதை எண்டு பெரிய மனதோடு சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி................


- Mathan - 05-22-2005

மூன்று கவிதைகளும் நன்றாக இருக்கின்றது. புதுக்கவி குளக்ஸ் பாராட்டுக்கள்


- KULAKADDAN - 05-22-2005

Mathan Wrote:மூன்று கவிதைகளும் நன்றாக இருக்கின்றது. புதுக்கவி குளக்ஸ் பாராட்டுக்கள்
அத கவிதை எண்டுறீங்க.........
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி.............

Quote:குளம் சூப்பர் கவிதை...என்ன குளம் இன்னும் கொஞ்ச நாளையாலை காதல் கவிதை எல்லாம் எடுத்து விடுங்க என்ன...எத்தனை நாளுக்குத் தான் உள்ளதினுள் வைத்திருக்க போறியள்


பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.............. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: இவள் மனிதஜடம்....! - akalikai - 05-23-2005

N
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pen1.jpg' border='0' alt='user posted image'>

<b>
வானத்து விண்மீனாய்
மிளிர்ந்திட கனவுகண்டவள்.
குளத்து மீனாய்
தன்னுள் வெதும்புறாள்.
எட்டி தொட்டிட
நினைத்த நிலவதை
நிழலில் கூட தொடமுடியாமல்
தலை குனிகிறாள்.
எட்ட நின்று விறைத்துப்பார்க்கிறாள்.
கற்பனையாய் மட்டும் போய்விட்ட
இவளது கனவுகள்
கண்ணீரைத்தான் விட்டுவைத்தது...!

விடியல் இல்லாத இரவுகள்
விடிந்தபின்னும்விட்டு அகலாத
கனவுகள் காட்சிகள்..
எப்படி விடியவைக்கும்
வாழ்வதனை
வாழ்வு கூட கடமையாய் ஆச்சு..!

நுணுக்கமறிந்து
நுட்பமறிந்து
கலையாய் விந்தையாய்
வாழ நினைத்த இவளது
வாழ்க்கை வெறும்
மணல் கோட்டையாய்
மட்டும் இவள்
மனமடி தவழ்கிறது
கண்ணீர் சொல்லும்
கதையது இவள் வாழ்வின்
கசப்பான வரலாறு..!

ஏதிலையாய் ஏங்கித்தவிக்கும்
எண்ண அலைகள்
என்றும் நிறைவேறப்போதில்லை
என்பதை அறிந்து
ஆண்டுகள் பல சென்றபின்னும்
ஏமாற்றங்கள் தான்
உறுதிப்படுத்துகிறது
உண்மை அவை என்று
மறுபடியும்..!

இனியும் ஒருமுறை
இறந்து மீண்டும் பிறக்க
இனி இவளுள் உயிரில்லை
இன்றே இவள் ஜடம் தான்
இறந்த பின்பும் நடமாடும்
இவள் மனிதஜடம்....!
</b>
<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>

யாவும் கற்பனை


தமிழினி

இயல்பான எமது வெளிப்பாடுகளும் சுயபச்சாதாபமாக பார்க்கப்படுது ஏன்?

ஆண்களின் பார்வையில் வரலாறு (History = His Story) எழுதப்பட்டதாலும் எழுதப்படுவதாலும் இந்த தவறு தொடர்கிறதா?


- kuruvikal - 05-23-2005

ஆண்கள் His story எழுதியிருந்தா இன்று எங்கையயோ போயிருப்பாங்க... History எழுதினப்படியாத்தான் பெண்களையும் மனிசரா மதிச்சு இழுத்துப் பிடிச்சு சமனா இருத்தி வைச்சிருக்காங்க...இல்லை நீங்க இருந்திடுவியளா என்ன...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kavithan - 05-23-2005

கவிதைகள் அனைத்தும் அருமை .. வாழ்த்துக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->