![]() |
|
ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு .. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு .. (/showthread.php?tid=4238) |
ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு .. - ottan - 05-21-2005 ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசிடம் வேண்டுகோள் நமது கட்சி உறுப்பினர்கள் மீதான தொடர்ச்சியான கொலைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென இது தொடர்பாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாம் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருப்பதை ஒரு காரணமாகக் கூறியே புலிகள் இந்த சமாதான முயற்சிகளை திசை திருப்பக்கூடும் என்பதைக் கருத்திற் கொண்டு சமாதான முயற்சிகள் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு விரைவில் கௌரவமானதும் நியாயமானதுமான தீர்வு காணப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடும் நாம் எமது தற்பாதுகாப்புக்கு ஏந்தியிருந்த கருவிகளை கையளித்தோம். புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் புலிகள் தமது கொள்கைகளை மாற்றி ஜனநாயக செயற்பாட்டுக்கு ஊறு விளைவிக்கமாட்டார்கள் என பலராலும் நம்பப்பட்டது. இந்த மூன்று வருடங்களில் எமது கட்சியின் ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் பல விதத்திலும் இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். இதுவரையில் நாற்பதுக்கும் அதிகமான கட்சிப் பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொல்லப்படும் நிலையை தோற்றுவித்தார்கள். இதுவரையில் எமது உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போது அதற்கெதிரான உணர்வுகளையும் எதிர்ப்பையும் ஜனநாயக வழியிலேயே வெளிப்படுத்தியிருந்தோம். இதனைச் சர்வதேசமும்மனித உரிமை அமைப்புகளும் வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களும் அறிந்த ஒன்றே. தொடர்ச்சியாக எமது உறுப்பினர்கள் பலியாகி வருவது எம்மை அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றுக்கு தள்ளியுள்ளது. இதனால் எமது உறுப்பினர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கூடிய பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டுமெனவும் அல்லாவிடில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். லங்காசிறியிலிருந்து சுடப்பட்டது அதுசரி முதலிலை டக்கிளசிடமிருந்து அவையளை காப்பாற்றவேணும். அரசாங்கத்தை அவை அதை கேட்க மறந்துவிட்டினம். டக்கிளசுதானே அவையளை போட்டு தள்ளுறாhர். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் எல்லாத்தையும் தூக்கிபோட புலியள் இருக்கினம் எண்ட துணிவிலை டக்கிளசு ரொம்பத்தான் ஆட்டம் போடுறார். - Sriramanan - 05-24-2005 Quote:லங்காசிறியிலிருந்து சுடப்பட்டதுநீங்கள் லங்காசிறியிலிருந்து சுட்டீர்கள். ஆனால் லங்காசிறி எங்கிருந்து சுட்டது??? - Nellaiyan - 05-24-2005 யாருக்கு யார் பாதுகாப்பு! அற்புதன் தொடக்கம் சின்னபாலாவிற்கு பின் இன்றுவரை நடக்கும் உட்கட்சிக்கொலைகளை யார் தடுப்பது? .... எது எப்படியிருப்பினும் உள்ளுக்குள்ளாலேயோ, வெளியிலாலேயோ போடப்பட்டு ஒரு முடிபுக்கு வரட்டும். |