Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 496 online users.
» 0 Member(s) | 493 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  சமாதானச் சூரியன் - கவிதை
Posted by: தமிழரசன் - 05-24-2005, 09:13 AM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

சமாதானச் சூரியன்

எழுந்திரு மகனே
தூங்கியது போதுமடா
கண்களைத் துடைத்துக் கொண்டு
விடிதிசைநோக்கிப் எட்டிப்பார்
சமாதானச் சூரியன் - எங்கள்
சந்தியில் வந்து நிக்கிறான்
உலக நாடுகள் கையசைக்க - எம்
தலைவரின் கட்டளைக்காய்
விடிதிசை நோக்கிப் போக
வீரமுடன் வந்து நிக்கிறான்

நடுநிசிச் சூரியன் உதிக்கும் - அந்த
நோர்வே நாட்டின் தலைநகர் இருந்து
சூரியனின் பெயரைத் தன்னோடு
சூடிக் கொண்ட ஒருவர் (ளுழடாநiஅ) இன்று
சமாதானச் சூரியனை இழுத்துவந்து - எங்கள்
சந்தியிலே நிறுத்தியிருக்கிறார்

உலகம் எம்மை அறிந்து கொண்டது -எங்கள்
தலைவர்தனைப் புரிந்து கொண்டது
தமிழர்மீது பரிவு கொண்டது
சமாதானத்தைக் கையில் கொண்டது

உலகம் எங்கும் எங்களின் பேச்சு
சுதந்திரம் ஒன்றே தமிழரின் மூச்சு
அடங்கியே போச்சு சந்திரிக்கா பேச்சு
நியாயம் இப்போ எங்கள் பக்கம் ஆச்சு

உயிரைக் காற்றாக்கி
உடலை வித்தாக்கி
சமாதானச் சூரியனை - எங்கள்
சந்திக்கு வரவழைத்து
கல்லறையில் இருந்துகொண்டு-சூரியனோடு
கைகுலுக்கி நிக்கின்றார்
எங்கள் மாவீரரின்று.

"சமாதானச் சூரியனே -மீண்டும்
சலித்துப் போகும் காலம்வந்தால்
நீறுபூத்த நெருப்பாய் நாங்கள்
சாம்பலுக்குள் அடங்கியிருக்கிறோம்
தலைவர் ஆணையிட்டால் மீண்டும்
கல்லறையில் இருந்து முளைப்போம்
எங்கள் தேச விடிவிற்காய் - வேறு
வழியில்லை என்பதால்;"
என்று உரைக்கும் மாவீரை
எழுந்து நீ பாரடா...

அடம்பன் கொடிகூட என்றும்
திரண்டால் மிடுக்கு என்பார்
வாசல்தேடி வந்து நிற்கும்
சூரியனை நாம் வரவேற்போம்
எழுந்துவாடா ஒன்றாய் நாம்போவோம்

அழுது அழுது எங்கள்
கண்ணீரும் வற்றிப்போச்சு
அகதியாய் அலைந்து எங்கள்
காலிரண்டும் களைத்துப் போச்சு
எங்களை வாழவைத்த - தங்கக்
காணிகள் வீடுகள் எல்லாம்
சுடுகாடாய் மாறிப்போச்சு

எங்களுக்கு விடிவு வேண்டும்-எங்கள்
சந்ததிகள் வாழவேண்டும்
சந்தியிலே வந்து நிற்கும்
சமாதானச் சூரியனை நாங்கள்
கெட்டியாக பிடித்துக் கொள்வோம்
எழுந்துவாடா என் மகனே...

நம்பிக்கை நட்சத்திரம் எங்கள்
ஈழத்து வான்வெயில்
எட்டி எட்டிப் பார்க்கிறது
சுதந்திரக் காற்றை நாங்கள்
சுவாசிக்கும் நாள் வரட்டும்
யாருக்கும் நாம் அடிமை இல்லை

நல்வழியில் அழைத்துச் செல்ல-எமக்கு
நல்லதொரு தலைமையுண்டு
தெளிவாக நாம் இருப்போம் -விடியும்
திசைநோக்கிப் பார்த்திருப்போம்
உலகநாடுகளிடம் நாமும்
நம்பிக்கை வைத்திருப்போம்
நம்பி நாங்கள் ஏமாந்துவிட்ட
அனுபவங்கள் வரலாற்றிலுண்டு
இருப்பினும்...
நம்ப நாங்கள் நடந்துகொள்வோம் - எவரையும்
நம்பி நாங்கள் நடாவாதிருப்போம்.

தூங்கியது போதுமடா நீ
எழுந்திரு மகனே..

nஐ.டானியல் யாழ்ப்பாணம்.
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை.
www.tamiloosai.com

Print this item

  பெயர்ப்பலகை அழிக்கும் போராட்டம்
Posted by: hari - 05-24-2005, 05:35 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (8)

பெயர்ப்பலகை அழிக்கும் போராட்டம்: ராமதாஸ், திருமாவளவன் கைது
மே 23, 2005

சென்னை:

சென்னையில் பிறமொழிப் பெயர்ப்பலகைகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

வணிக நிறுவனங்களில் தமிழ் அல்லாத பிற மொழிப் பெயர்களை அழிக்கும் போராட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தலைமையிலான தமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது.

இதன் படி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு முழுவதும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெயர்ப் பலகைகளை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி இன்று சென்னையில், அரசுத் தலைமை பொது மருத்துவமனை எதிரே உள்ள மேயோ ஹால் பகுதியில், ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில்இருந்த கடைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்களையும், ஆங்கில விளம்பரப் பலகைகளிலும் கரி பூசி அழித்தனர். இதையடுத்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல மதுரையில் கட்டபொம்மன் சிலை அருகே இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரும், கடலூரில் 500க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். வேலூர்,கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

thatstamil

Print this item

  கண்ணீர்
Posted by: Malalai - 05-23-2005, 10:00 PM - Forum: கவிதை/பாடல் - Replies (180)

<img src='http://img58.echo.cx/img58/6573/angel0pc.gif' border='0' alt='user posted image'>

அன்பின் அடிப்படையில்
ஆழமாகவும் பாசமாகவும்
அரும்பிய அன்புக் காதல்
ஆழ்கடலதனில் சிக்கிய படகாக
சென்றிடும் திசை தெரியாது
திக்கிமுக்காடி தறிகெட்டு தவிக்கிறதே.....!

காதலின் பார்வை தந்து
கண்களைப் பறிக்கும்
எண்ணம் ஏன் கண்ணே?
கண்களில் கவி பாடியே
களித்திருந்தேன் - ஆனால்
காலம் செய்யும் கோலம்
இதயத்தை இன்று
நார்நாராகக் கிழிக்கிறதே.........!

உன் பார்வைகளின்
பரிமாணங்களைப்
புரிந்து கொண்டது என் தவறா?
இல்லை தவறாகப் புரிந்து கொண்டேனா?
உன் இதயத்தின் அறைகளுக்குள்
என்னை வைத்தாய்
என நான் நினைத்தது தவறா?
இல்லை.......!

உன் இதயக் கூட்டினின்
இதமான வெப்பமதில்
இனியவளாய் இன்புற்று
இருந்தேன்
உன் இதய ராணியாக..............!
இதமான வெப்பமதை
எரிமலைக் குழம்பாக்கி
ஏன் என்னை எரிக்க நினைக்கின்றாய்?........!
நீ எரிப்பது என்னை மட்டுமல்ல
உன்னையும் சேர்த்து என்பது தெரியதா?

உன் மீது நான் கொண்ட காதலாலும்
உன் மீது நான் வைத்த பாசத்தாலும்
தாங்கும் சக்தி பெற்று
தகிக்கும் வெந்தணலை
தாங்குகிறேன் நம் காதலுக்காக.....!

என்று உனக்கு என் உள்ளம் புரிகிறதோ
அன்று நிச்சயம் ஜெயிக்கும் நம் காதல்....!
என்றென்றும் உன்னை நேசிக்கும்
இளகிய இதயம் ஒன்று
இங்கே ஏங்குது உனக்காக.....!

Print this item

  ஒழிவு மறைவு இன்றி
Posted by: eelapirean - 05-23-2005, 04:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கொழும்பு வடக்கிலுள்ள ஒரு தேவாலயத்தின் பின்புறமாகச் செல்லும் வீதியில் ஒரு தமிழ் இளைஞன் இரவு சுமார் 7 மணியளவில் கையடக்கத் தொலைபேசியைக் காதில் வைத்துப் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரின் கழுத்தில் தேர்வடம் போல் ஒரு மொத்தமான தங்கச் சங்கிலி காணப்பட்டது.

அப்போது திடீரென வந்து நின்ற ஒரு முச்சக்கர வண்டியிலிருந்து இருவர் குதித்தனர். ஒருவன் தங்கச் சங்கிலியைப் பறிக்க கையை நீட்டியபோது தமிழ் இளைஞன் விட்டாரே ஒரு புறூஸ் லீ கராட்டி அடி! காலினால் விட்ட அந்த அடிஇ வழிப்பறிக்காரனின் மர்ம உறுப்பில் நேராகத் தாக்கியதால் அம்மேயென அலறியவண்ணம் தனது மர்ம உறுப்பைப் பொத்திக்கொண்டு ஓடஇ மற்றவன் நெருங்கிவர இன்னொரு கராட்டி அடி! அவனும் பெரிய அலறலுடன் ஓடஇ முச்சக்கர வண்டிக்காரனும் வண்டியை விரைந்து ஓட்டிச் சென்றுவிட்டான்.

தமிழ் இளைஞன் புன்முறுவல் பூத்தவண்ணம் மீண்டும் தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடலைத் தொடர்ந்து கொண்டு அனாயாசமாக நடந்து சென்றார்.

சபாஷ் தமிழ் கராட்டி வீரனே. அந்த வழிப்பறிக் கும்பலுக்கு இனி அந்த வழிப்பக்கமே தலைகாட்ட உதறல் எடுக்கும்!

கொழும்பு வடக்கில் இப்போது அடிக்கடி வழிப்பறிக்காரர்களின் தொல்லை அதிகரித்து வருவதால் ஆலயங்கள்இ பாடசாலை வட்டாரங்களில் போதிய பொலிஸ் கண்காணிப்பு இருத்தல் அவசியம்.
தினகுரல்

Print this item

  வணக்கம்
Posted by: samsan - 05-23-2005, 01:35 PM - Forum: அறிமுகம் - Replies (58)

எல்லோருக்கும் என் பணிவான வணக்கம். கருத்துக்களத்தில வாசித்துக்கொண்டிருந்த நான் சிலவேளை கடுப்பாகி எழுதலாம் என்று நினைப்போன். பிறகு அப்படியே விட்டுவிடுவேன். இப்பதாக் ஒரு முடிவெடுத்து களம் இறங்கியிருக்கிறேன். ம்......... பார்போம்.

Print this item

  குடாநாட்டில் படையினர் நடத்தும் வெசாக் நிகழ்வில் தமிழர் .....
Posted by: தமிழரசன் - 05-23-2005, 09:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

குடாநாட்டில் படையினர் நடத்தும் வெசாக் நிகழ்வில் தமிழர் பங்கேற்பது அரசுக்குத் துணைபோவதாக அமையும்

அதனைப் புறக்கணிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள் படையினர் நடத்தும் வெசாக் கொண்டாட்டத்தில் தமிழ் மக்கள் கலந்துகொள்வது தமிழர்கள் அரசுடனும் படையினரு டனும் நெருக்கமாக உள்ளனர் என்ற தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு துணை செய்வதாகவே அமையும். அதற்குத் தமிழ் உறவுகள் துணை போகவேண்டாம்.
- இவ்வாறு குடாநாட்டு மக்களுக்கு பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாகத் தமிழ்த்தேசிய விழிப்புணர்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
யாழ்ப்பாண விளையாட்டரங்கில் வெசாக் பண்டிகை யைக் கொண்டாட படையினர் ஒழுங்குகள் செய்துள்ளனர். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது சாந்த சொரூபியான புத்தபெருமான் பரிநிர்வாணம் பெற்ற நாளை சமூகää சமய பேதங்களைக் கடந்து எந்த வேறுபாடுமற்று சகோதர ஐக்கியத்துடன் யாழ்ப்பாணத்தில் அரச படையினர் கொண் டாடுகின்றனர் என்ற ஒரு தோற்றத்தை இது ஏற்படுத்தும்.
நேற்றுவரை கொன்றதும்ää வல்லுறவில் வதைத்ததும்ää செம்மணியில் புதைத்ததும்ää சிறையிட்டு சித் திரவதை செய்ததும் கடந்த காலங்களுடன் கழிய இன்று அரசும் படையினரும் தமிழ் மக்களை அணைத்துக்கொள்வதாகவும் அதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வதாகவும் பொருள் படுத்தும்.
ஆனால்ää இன்று நிலைமை என்ன?
கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கும் திருவடிநிலையில் தகனக்கிரியை செய்வதற் கும் படையினரின் அனுமதி தேவைப்படுகின் றது. பாலையூற்று தேவாலயத்தையும் கச்ச தீவு அந்தோனியாரையும் தரிசிக்கப் படையி னரின் ரட்சிப்புத் தேவைப்படுகின்றது. மாவிட்ட புரம் கந்தசாமியையும் கீரிமலை நகுலேஸ்வர ரையும் வழிபட படையினர் வழிபடும் நேரத் தைப் பார்த்திருக்கவேண்டியிருக்கின்றது. ஆனால்ää ஒரே நாளில் திருகோணமலை சமா தான நகரத்தில் புத்தபிரான் எழுந்தருளி இடம் பெயர மறுத்து நின்கின்றார். இதனைப் பெரும் பான்மைச் சமூகத்தின் மேலாண்மை என்ப தைத் தவிர வேறு எவ்வாறு பொருள் கொள்ள முடியும்?
இந்நிலையில் தமிழ்மக்கள் இவ்விழாக் களில் கலந்துகொள்வதானது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இப்பண்டிகையின் மூலம் அதன் வீடியோப் படப்பிடிப்பின் மூலம் "தமிழ் மக்கள் அரசுடனும் படையினருடனும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்' என்ற தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்தமுயலும் அரசின் முயற்சி களுக்குத் துணைபோவதாக அமையும்.
தமிழ் மக்கள்ää புத்தபிரானின் அகிம்சை நெறிகளுக்கோ அந்நெறிகளை உண்மையா கவே ஏற்றுக்கொண்ட சிங்கள மக்கள் கொண் டாடும் வெசாக் பண்டிகைக்கோ ஒரு போதும் எதிரானவர்கள் அல்ல.
ஆனால்ää அரசு காலங்காலமாக பௌத்த மதத்தின் பெயராலேயே சிறுபான்மை இனங் களின் மீதும்ää மதங்களின் மீதும் அதிகாரம் செலுத்தி வந்துள்ளது. அதனாலேயே படையி னர் கொண்டாடும் வெசாக் பண்டிகையில் கலந்துகொள்வதன் மூலம் அரசினதும் படை யினரதும் எதிர்பார்க்கைகளுக்குத் துணைபோக வேண்டாம் என்று எம் தமிழ் உறவுகளைக் கேட்டுக்கொள்ளுகிறோம். - என்றுள்ளது.
தன்மானத் தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
யாழ். நகர பொது விளையாட்டு மைதா னத்தில் வொசாக் நிகழ்வுகளை பிரமாண்ட மான வகையில் காட்சிப்படுத்த படையினர் முற்பட்டுள்ளனர். அழைப்பிதழ்கள் அரச அதி காரிகளுக்கும்ää சமூக முக்கியஸ்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவை தமிழனை மதித்தல்ல. மாறாக தமி ழன் மீதான தமது மேலாதிக்கத்தை நினை வூட்டி அச்சுறுத்துவதற்கானவை. இந்தவகை வஞ்சகத்தை - கபடத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசின் பேரினவாத மேலாதிக்கம் அனைத்து லகத்தினாலும் புரிந்துகொள்ளப்பட்டுள்ள இன் றைய நிலையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான இன்னுமொரு தாக்குதல் கருவியாக பௌத்த மதம் பாவிக்கப்படுவது விசனத்திற்குரியது.
""நாட்டில் இரத்த ஆறு ஓடினாலும் புத்த சிலையை அகற்றமாட்டோம்'' என கொக்கரிக் கின்றனர் பேரினவாதிகள். இதன் அர்த்தம் தமிழனின் இரத்த ஆறு ஓடவைக்கப்படும் என்ற மறைமுக பயமுறுத்தல்தான்.
எனவேää பேரினவாத்திற்கும் சாமரம் வீச எந்தத் தன்மானத் தமிழனும் முன்வரவே மாட்டான் என்பதை அரசும் படைகளும் புரிந்து கொள்ள படையினரின் வெசாக் நிகழ்வுகளைப் புறக்கணிப்போம். - என்றுள்ளது.
Tamiloosai

Print this item

  பெற்ற மகளை பணயம் வைத்து புடவை வாங்கிய தந்தை
Posted by: தமிழரசன் - 05-23-2005, 09:47 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

பெற்ற மகளை பணயம் வைத்து புடவை வாங்கிய தந்தை நெல்லியடியில் சம்பவம்; தந்தை தலைமறைவு
ஞாயிற்றுக்கிழமை 22 மே 2005 டி.சிவராம்
பெற்ற மகளை புடவை கடைக்கு கூட்டிச்சென்று கடையில் பணயமாக கொடுத்துவிட்டு புடவைகள் வாங்கிய சம்பவமொன்று நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் தனது 9 வயது பெண் பிள்ளையை நெல்லியடி கொடிகாம வீதியில் உள்ள புடவை கடைக்கு கூட்டிச்சென்று 2 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட உடுப்புகளை வாங்கிவிட்டு குழந்தையை பணயமாக கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். இத் தந்தையின் செயற்பாட்டால் செய்வதறியாது திகைத்த கடை உரிமையாளர் அன்று மாலை 7 மணிவரை குறித்த பிள்ளையை மீட்க வராத காரணத்தால் தமது வீட்டுக்கு கூட்டிச்செல்ல வேண்டி நேரிட்டது. பின்னர் மறுநாள் காலை வடமராட்சி அரசியற் துறையில் பிள்ளையை ஒப்படைத்ததுடன் அப் பிள்ளை மூலம் பெற்றோர்களின் விபரம் பெறப்பட்டது. தற்போது தந்தை தலைமறைவாகியுள்ளார். தயார் அரசியல் துறையினருடன் தொடர்பு கொண்டு பிள்ளையை பொறுப்பேற்க முற்பட்டவேளை குறித்த பிள்ளை மறுத்து விட்டது. இதேவேளை சம்பவம் பற்றி தயாரிடம் வினவிய போது தமது கோவிலில் திருவிழா நடைபெறுவதாகவும் திருவிழாவுக்கு அணிய புதிய புடவைகள் அனைவருக்கும் வாங்கி வருவதாகக் கூறிச்சென்ற தனது கணவர் பிள்ளையை புடவை கடையில் விட்டு விட்டார் எனவும் முன்னரும் அவ்வாறு பல தடவை செய்துள்ளார் எனவும் கூறினார்.


நிதர்சனம்.கொம்

Print this item

  ஈழநாடு ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு ஈ.பி.டி.பி கொலை மிரட்டல்...
Posted by: Nitharsan - 05-23-2005, 08:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கனடா ஈழநாடு ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு கனடா ஈ.பி.டி.பி யில் பெறுப்பாளரால் கொலை மிரட்டல்
தமிழீழ தேசத்தில் பத்திரிகையாய் 6 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் கனடா பதிப்பாசிரியர் திரு பரமேஸவரன் அவர்களுக்கு கடந்த செந்தாமரை கலையிரவு நிகழ்ச்சியில் வைத்து ஈ.பி.டி.பியில் கனடிய பொறுப்பாளர் லியோ டென்ஸில் என்பவரால் இக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. செந்தாமரை கலையிரவின் இடைவேளை நேரத்தில் சிற்றூண்டி வாங்க சென்ற ஈழநாடு பத்திரிகை ஆசிரியரை ஈ.பி.டி.பியில் கனடிய பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டு பரமேஸ்வரன் அவர்களை அணுகிய குறிப்பிட்ட நபர் " எங்களை யார் என்று நினைத்தாய்? நாங்கள் எத்தினை பேர் இருக்கிறோம் தெரியுமா? டக்கிளஸ் என்றால் உனக்கு இளப்பமா? செய்திகளை எழுதும் போது கவனமாய் எழுதும்.. எங்கள் கட்சிக்குள் ஏற்ப்படும் சின்னப்பிரச்சினைகளை பெரிது படுத்துகிறாய்... கனடாவில் புலிகள் பாதுகாப்பு தருவர்கள் என்று நினைக்க வேண்டாம். உன்னை நாங்கள் அவதானித்து கொண்டுதானிருக்கிறோம்..நீர் முதலில் லான்ஸ்டவுன் கலிடோனியா றோட் இப்போது வூட்பிரிஜ் பகுதியில் இருக்கிறீர். நீர் அளவுக்கு மீறி எழுதக் கூடாது. உனது எழுத்தை நிப்பாட்டுவது எமக்கு பெரிய வேலை இல்லை. நிமலராஜனுக:கு என்ன நடந்தது என்பது நினைவிருக்கும் தானே!..திருந்தி நடந்து கொள்ளும். பேப்பரில் எதையும் எழுதலாம். என்று நினையாதே என்று சொல்லிக் கொண்டிருக்கையில் பரமேஸ்வரன் அவர்களின் நண்பர்கள் என்ன பிரச்சினை என்று கேட்டுக்கொண்டு நெருங்கி வரவே குறிப்பிட்டநபர் அந்த இடத்தை விட்டு நழுவி விட்டார். பிறகு அந்நிகழ்வில் அவரை காண முடியவில்லை. இது பற்றி ஈழநாடு பத்திரிகை ஆசிரியர்குழு தெரிவிக்கையில்..இத்தகைய மிரட்டல்களை கண்டு இழநாடு அஞ்சப்சப் போவதில்லை. என்பதை வாசக அன்பர்களுக்கு தெரிவிப்பதாயும் ஈ.பி.டி.பி போன்ற துரோக குழுக்களுக்கள் செய்யும் எட்டப்பர் வேலைகளை உங்கள் அபிமான ஈழநாடு தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வரும் என்பதோடு தமிழ் தேசியத்தைப் பலப் படுத்தும் என்பதையும் ஈழநாடு ஆசிரியர் பீடம் அறியத்தருகின்றது. அத்தோடு இது தீவகம் இல்லை கனடா என்றும் அவர்களின் அராஜகத்துக்கு நாம் ஒரு பொதும் இடமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்தனர்
தகவல் : ஈழநாடு ஆசிரியர், கனடா

Print this item

  தமிழீழ நீதித்துறையின் உத்தியோக பூர்வ இணையம்
Posted by: Nitharsan - 05-23-2005, 04:49 AM - Forum: இணையம் - Replies (1)

தமிழீழ நீதித்துறையின் உத்தியோக பூர்வ இணையம்
http://www.eelamjudicial.org
தமிழ் ஆங்கில மொழிகளில் வெளிவருகின்றது.

Print this item

  அஜித்துக்கு ஜோடியாக நதியா
Posted by: KULAKADDAN - 05-22-2005, 11:52 PM - Forum: சினிமா - Replies (62)

<img src='http://img97.echo.cx/img97/4219/nadiya14157cf.jpg' border='0' alt='user posted image'>

எம்.குமரனில் இளமையான அம்மாவாக வந்துபோன நதியாவுக்கு அஜீத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

"நதியா நதியா நைல் நதியா' என்று ஒரு காலத்தில் இளசுகளை அலைய விட்டு ரகளை செய்த நதியா இப்போது இளமையான அம்மா நடிகையாகி விட்டார். எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமியில் அவர் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். இது கோடம்பாக்கத்தில் இரண்டாம் வரிசை கதாநாயகிகள் வாங்கும் சம்பளமாகும்.

காஸ்டிலியான அம்மா நடிகையானாலும், பழைய அழகு நதியா சேச்சியிடம் இன்னும் அப்படியே மிஞ்சிக் கிடக்கிறது. கூடவே அதே பழைய பந்தாவும் போகாமல் அப்படியே இருக்கிறது.

"எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' க்குப் பிறகு அவரைத் தேடி பல படங்கள் வந்தாலும், நதியாவின் பந்தா பிளஸ் அலப்பறை காரணமாக தயாரிப்பாளர்கள் நொந்து போனார்கள்.

அம்மா கேரக்டரில் தொடர்ந்து நடிக்க எனக்கு விருப்பம் கிடையாது. அப்படியே அம்மா கேரக்டரில் நான் நடிக்க வேண்டுமென்றால் அது ரொம்ப முக்கியமான கேரக்டராக இருக்க வேண்டும், ஹீரோயின் அளவுக்கு நானும் பேசப்பட வேண்டும்,

ஹீரோயினுக்கு சமமாக எனக்கும் சம்பளம் தர வேண்டும் என்று நதியா போட்ட "10 கமாண்ட்மெண்ட்ஸை" கேட்ட தயாரிப்பாளர்கள் தலை தெறிக்க ஓடத் தொடங்கினர்.

இதனால் படம் ஏதும் இல்லாமல் ஒரு மூலையில் உட்காரும் நிலைக்குத் தள்ளப்பட்டார் நதியா. இது மட்டுமா?

இப்படியே விட்டால் மறுபடியும் தமிழ் ரசிகர்கள் நம்மை மறந்து போய் விடுவார்கள் என்று நினைத்தாரோ, என்னவோ அவசரம் அவசரமாக இரண்டு படங்களை மட்டும் குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

இப்போது நதியாவைத் தேடி ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளதாம். அஜீத் நடிக்கும் காட்பாதர் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்குமாறு நதியாவை அணுகியுள்ளாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.



காட்பாதர் படத்தில் அஜீத் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் அப்பா வேடத்தில் வரும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்குமாறு நதியாவை ரவிக்குமார் அணுகியுள்ளார். இதுகுறித்து யோசித்து கூறுவதாக சொல்லி அனுப்பியுள்ளாராம் நதியா.

நிச்சயம் இந்த ரோலில் நடித்தே ஆக வேண்டும் என்று நதியாவிடம் தனிப்பட்ட முறையிலும் போனில் கேட்டுக் கொண்டாராம் அஜீத் சேட்டன். எனவே நிச்சயம் காட்பாதரில் நதியா நடிப்பார் என்கிறது யூனிட் வட்டாரம்.

நன்றி தற்ஸ் தமிழ்

Print this item