![]() |
|
ஈழநாடு ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு ஈ.பி.டி.பி கொலை மிரட்டல்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஈழநாடு ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு ஈ.பி.டி.பி கொலை மிரட்டல்... (/showthread.php?tid=4227) |
ஈழநாடு ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு ஈ.பி.டி.பி கொலை மிரட்டல்... - Nitharsan - 05-23-2005 கனடா ஈழநாடு ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு கனடா ஈ.பி.டி.பி யில் பெறுப்பாளரால் கொலை மிரட்டல் தமிழீழ தேசத்தில் பத்திரிகையாய் 6 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் கனடா பதிப்பாசிரியர் திரு பரமேஸவரன் அவர்களுக்கு கடந்த செந்தாமரை கலையிரவு நிகழ்ச்சியில் வைத்து ஈ.பி.டி.பியில் கனடிய பொறுப்பாளர் லியோ டென்ஸில் என்பவரால் இக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. செந்தாமரை கலையிரவின் இடைவேளை நேரத்தில் சிற்றூண்டி வாங்க சென்ற ஈழநாடு பத்திரிகை ஆசிரியரை ஈ.பி.டி.பியில் கனடிய பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டு பரமேஸ்வரன் அவர்களை அணுகிய குறிப்பிட்ட நபர் " எங்களை யார் என்று நினைத்தாய்? நாங்கள் எத்தினை பேர் இருக்கிறோம் தெரியுமா? டக்கிளஸ் என்றால் உனக்கு இளப்பமா? செய்திகளை எழுதும் போது கவனமாய் எழுதும்.. எங்கள் கட்சிக்குள் ஏற்ப்படும் சின்னப்பிரச்சினைகளை பெரிது படுத்துகிறாய்... கனடாவில் புலிகள் பாதுகாப்பு தருவர்கள் என்று நினைக்க வேண்டாம். உன்னை நாங்கள் அவதானித்து கொண்டுதானிருக்கிறோம்..நீர் முதலில் லான்ஸ்டவுன் கலிடோனியா றோட் இப்போது வூட்பிரிஜ் பகுதியில் இருக்கிறீர். நீர் அளவுக்கு மீறி எழுதக் கூடாது. உனது எழுத்தை நிப்பாட்டுவது எமக்கு பெரிய வேலை இல்லை. நிமலராஜனுக:கு என்ன நடந்தது என்பது நினைவிருக்கும் தானே!..திருந்தி நடந்து கொள்ளும். பேப்பரில் எதையும் எழுதலாம். என்று நினையாதே என்று சொல்லிக் கொண்டிருக்கையில் பரமேஸ்வரன் அவர்களின் நண்பர்கள் என்ன பிரச்சினை என்று கேட்டுக்கொண்டு நெருங்கி வரவே குறிப்பிட்டநபர் அந்த இடத்தை விட்டு நழுவி விட்டார். பிறகு அந்நிகழ்வில் அவரை காண முடியவில்லை. இது பற்றி ஈழநாடு பத்திரிகை ஆசிரியர்குழு தெரிவிக்கையில்..இத்தகைய மிரட்டல்களை கண்டு இழநாடு அஞ்சப்சப் போவதில்லை. என்பதை வாசக அன்பர்களுக்கு தெரிவிப்பதாயும் ஈ.பி.டி.பி போன்ற துரோக குழுக்களுக்கள் செய்யும் எட்டப்பர் வேலைகளை உங்கள் அபிமான ஈழநாடு தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வரும் என்பதோடு தமிழ் தேசியத்தைப் பலப் படுத்தும் என்பதையும் ஈழநாடு ஆசிரியர் பீடம் அறியத்தருகின்றது. அத்தோடு இது தீவகம் இல்லை கனடா என்றும் அவர்களின் அராஜகத்துக்கு நாம் ஒரு பொதும் இடமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்தனர் தகவல் : ஈழநாடு ஆசிரியர், கனடா |