![]() |
|
பெற்ற மகளை பணயம் வைத்து புடவை வாங்கிய தந்தை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பெற்ற மகளை பணயம் வைத்து புடவை வாங்கிய தந்தை (/showthread.php?tid=4226) |
பெற்ற மகளை பணயம் வைத்து புடவை வாங்கிய தந்தை - தமிழரசன் - 05-23-2005 பெற்ற மகளை பணயம் வைத்து புடவை வாங்கிய தந்தை நெல்லியடியில் சம்பவம்; தந்தை தலைமறைவு ஞாயிற்றுக்கிழமை 22 மே 2005 டி.சிவராம் பெற்ற மகளை புடவை கடைக்கு கூட்டிச்சென்று கடையில் பணயமாக கொடுத்துவிட்டு புடவைகள் வாங்கிய சம்பவமொன்று நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் தனது 9 வயது பெண் பிள்ளையை நெல்லியடி கொடிகாம வீதியில் உள்ள புடவை கடைக்கு கூட்டிச்சென்று 2 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட உடுப்புகளை வாங்கிவிட்டு குழந்தையை பணயமாக கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். இத் தந்தையின் செயற்பாட்டால் செய்வதறியாது திகைத்த கடை உரிமையாளர் அன்று மாலை 7 மணிவரை குறித்த பிள்ளையை மீட்க வராத காரணத்தால் தமது வீட்டுக்கு கூட்டிச்செல்ல வேண்டி நேரிட்டது. பின்னர் மறுநாள் காலை வடமராட்சி அரசியற் துறையில் பிள்ளையை ஒப்படைத்ததுடன் அப் பிள்ளை மூலம் பெற்றோர்களின் விபரம் பெறப்பட்டது. தற்போது தந்தை தலைமறைவாகியுள்ளார். தயார் அரசியல் துறையினருடன் தொடர்பு கொண்டு பிள்ளையை பொறுப்பேற்க முற்பட்டவேளை குறித்த பிள்ளை மறுத்து விட்டது. இதேவேளை சம்பவம் பற்றி தயாரிடம் வினவிய போது தமது கோவிலில் திருவிழா நடைபெறுவதாகவும் திருவிழாவுக்கு அணிய புதிய புடவைகள் அனைவருக்கும் வாங்கி வருவதாகக் கூறிச்சென்ற தனது கணவர் பிள்ளையை புடவை கடையில் விட்டு விட்டார் எனவும் முன்னரும் அவ்வாறு பல தடவை செய்துள்ளார் எனவும் கூறினார். நிதர்சனம்.கொம் - Mathan - 05-23-2005 வருத்தமான செய்தி தான். அந்த குழந்தையின் மனம் எவ்வள்வு வேதனைபட்டிருக்குமோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 05-23-2005 பாடையில் போகவேண்டிய பரதேசி நாய்! :evil: - Mathan - 05-23-2005 சரி சரி மன்னர் ரிலாக்ஸ் - tamilini - 05-23-2005 இப்படியும் அப்பாவா.. வாழ்க வாழ்க.. :twisted: :evil: :evil: - kavithan - 05-23-2005 :twisted: - jeya - 05-23-2005 tamilini Wrote:இப்படியும் அப்பாவா.. வாழ்க வாழ்க.. :twisted: :evil: :evil:என்ன அக்கா இதற்குமா??????? ஒழிக ஒழிக என்றல்லோ.......... :twisted:
- kuruvikal - 05-23-2005 கவனிக்க வேண்டிய விசயம்..பிள்ளை அம்மாவிடம் கூடப் போக மறுத்ததுதான்... இதுக்கு அப்பா மட்டுமல்லக் காரணம்... அம்மாவின் பலமான பின்னணி இருந்திருக்கு... அது அந்தச் சின்னப் பிள்ளைக்குத் தெரியுது... இங்க இருக்கிற உங்களுக்குப் புரியல்லையே...! அம்மா சேலை வேண்டும் என்று சண்டை போல... மனிசனும் என்ன செய்யுறது... இப்படி செய்திட்டுது போல... அடுத்தது முன்னரும் இப்படி செய்தால்... இது தொடர்கதை போல...! எது எப்படியோ பெரிசுகளின்ர பேராசையால...சின்னாபின்னமாகிறது பிஞ்சு...!
|