Yarl Forum
ஒழிவு மறைவு இன்றி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஒழிவு மறைவு இன்றி (/showthread.php?tid=4222)



ஒழிவு மறைவு இன்றி - eelapirean - 05-23-2005

கொழும்பு வடக்கிலுள்ள ஒரு தேவாலயத்தின் பின்புறமாகச் செல்லும் வீதியில் ஒரு தமிழ் இளைஞன் இரவு சுமார் 7 மணியளவில் கையடக்கத் தொலைபேசியைக் காதில் வைத்துப் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரின் கழுத்தில் தேர்வடம் போல் ஒரு மொத்தமான தங்கச் சங்கிலி காணப்பட்டது.

அப்போது திடீரென வந்து நின்ற ஒரு முச்சக்கர வண்டியிலிருந்து இருவர் குதித்தனர். ஒருவன் தங்கச் சங்கிலியைப் பறிக்க கையை நீட்டியபோது தமிழ் இளைஞன் விட்டாரே ஒரு புறூஸ் லீ கராட்டி அடி! காலினால் விட்ட அந்த அடிஇ வழிப்பறிக்காரனின் மர்ம உறுப்பில் நேராகத் தாக்கியதால் அம்மேயென அலறியவண்ணம் தனது மர்ம உறுப்பைப் பொத்திக்கொண்டு ஓடஇ மற்றவன் நெருங்கிவர இன்னொரு கராட்டி அடி! அவனும் பெரிய அலறலுடன் ஓடஇ முச்சக்கர வண்டிக்காரனும் வண்டியை விரைந்து ஓட்டிச் சென்றுவிட்டான்.

தமிழ் இளைஞன் புன்முறுவல் பூத்தவண்ணம் மீண்டும் தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடலைத் தொடர்ந்து கொண்டு அனாயாசமாக நடந்து சென்றார்.

சபாஷ் தமிழ் கராட்டி வீரனே. அந்த வழிப்பறிக் கும்பலுக்கு இனி அந்த வழிப்பக்கமே தலைகாட்ட உதறல் எடுக்கும்!

கொழும்பு வடக்கில் இப்போது அடிக்கடி வழிப்பறிக்காரர்களின் தொல்லை அதிகரித்து வருவதால் ஆலயங்கள்இ பாடசாலை வட்டாரங்களில் போதிய பொலிஸ் கண்காணிப்பு இருத்தல் அவசியம்.
தினகுரல்