| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 479 online users. » 0 Member(s) | 476 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,450
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,289
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| தென்னிலங்கையில் மினி சூறாவளி |
|
Posted by: hari - 05-26-2005, 07:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தென்னிலங்கையில் மினி சூறாவளி
தென் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மினி சூறாவளி வீசியுள்ளதுடன் வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன.
நாட்டில் பரவலாக பெய்து வரும் கடும் மழை மற்றும் தாழமுக்கம் காரணமாகவே சில இடங்களில் இந்த நிலமை தோன்றியுள்ளது
இதேவேளை கடல் அலைகளின் வேகமும் வழமைக்கு மாறாக காணப்பட்டுள்ளது.
கடலை அண்மித்த பிரதேசங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படும் சாத்தியம் தென்படுவதாகவும் எனினும், பாரிய பாதிப்புகள் எதுவும் இடம்பெறமாட்டாது என்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டாரகம பிரதேசத்தில் மட்டும் மினி சூறாவளி காரணமாக 15 க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் நேற்று காலை சேதமடைந்துள்ளன.
இதேவேளை இப் பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகளும் சீர் குலைந்திருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் காலநிலை இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாம் என்றும் அதுவரை இடி மின்னலுடன் கூடிய மழை பரவலாக பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி அஜித் வீரவர்தன தெரிவித்தார்.
நன்றி: தினக்குரல்
|
|
|
| கிறுக்கல்கள் [ மின்னூல் ] |
|
Posted by: kavithan - 05-24-2005, 11:59 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (26)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>கள உறுப்பினர் குருவிகளின் இருபத்தைந்து கவிதைகள் அடங்கிய மின்னூல் தமிழினியின் உருவாக்கத்தில் <i><b>\"குருவிகளின் கிறுக்கல்கள்\"</b></i> என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதற்கு வாசலிலே கோலமிட்டு வரவேற்றிருக்கிறார் எங்கள் பட்டிமன்ற நடுவர் சோழியன் அண்ணா. இன்றைய சூழலில் யாழ் உறுப்பினர்களின் ஆக்கங்களும் மின்னூலாக வருவது வரவேற்கத்தக்க விடயம். அந்த வகையில் இதனை அழகுற வடிவமைத்த தமிழினி அக்காக்கு வாழ்த்துக்களைக் கூறுவதுடன். இது போல மேலும் யாழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்ற சில கலைஞர்களின் அற்புத படைப்புக்களையும் இவ்வாறு மின்னூலாக்கி ஒருங்கிணைப்பு உதவி புரிய தமிழினி அக்கா தயாராயே உள்ளார். எனவே இன்றைய சூழலில் உங்கள் ஆக்கங்கள் என்றும் அழியாத படைப்புக்களாக, <i>குருவிகளின் கிறுக்கல்கள்</i> போல, எங்கும் வலம் வர மின்னூலே சிறந்தவழி. அந்த வகையில் இந்த<b> கிறுக்கல்களை </b>சுவைத்து உங்கள் கிறுக்கல்களை படையுங்கள். </span>
<i><b>குருவிகளின் கிறுக்கல்கள்</b></i>
<i><b>கவிதைத்தோட்டத்திலும்</b></i>
|
|
|
| DvD To MP3 |
|
Posted by: வியாசன் - 05-24-2005, 09:16 PM - Forum: கணினி
- Replies (6)
|
 |
DvD படங்களிலிருந்து பாடல்களை mp3யாகவோ அல்லது Wav ஆகவே பிரித்து எடுக்கக்கூடிய மென்பொருள் ஏதாவது இருக்கின்றதா? தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் சொல்லுங்கள்.
பாடல்களின்தரம் குறைவாக இருந்தால் அதை மெருகுபடுத்த ஏதாவது மென்பொருள் இருக்கின்றதா?
|
|
|
| தமிழோசையின் ஆனந்தி ஓய்வு |
|
Posted by: KULAKADDAN - 05-24-2005, 08:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
பி பி சி தமிழோசை ஆனந்தி பணி ஓய்வு
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பி பி சி தமிழோசையில் பணி புரிந்து வந்த மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் செவ்வாய்க் கிழமையோடு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
<img src='http://img157.echo.cx/img157/7959/20050524140550anandhi20318th.jpg' border='0' alt='user posted image'>
1970 களில் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானர். இவரது பல தொடர்கள், முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை தமிழோசை நேயர்களிடையே பிரபலம்.
இலங்கை யாழ்குடா நாட்டின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, தன் பணியில் மிகவும் ஊக்குவித்த முன்னாள் தமிழ்ப் பிரிவுத் தலைவர் சங்கரை மிக நன்றியோடு நினைவு கூறுகிறார். தன் பணியில் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக தமிழோசை நேயர்களுக்கும் அவர் தன் நன்றியினைத் தெரிவிக்கிறார்.
Thanks BBC tamil
|
|
|
| பிரபலமில்லா இணைய இணைப்புக்கள். |
|
Posted by: samsan - 05-24-2005, 06:10 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (58)
|
 |
அதிகமானவர்களுக்கு இன்று வீடுகளிளேயே இணைய இணைப்பு இருக்கும். தங்களுக்கும் அப்படியெரு இணைப்பிருந்தால் இணையஉலாவருவீர்கள்தானே. நீங்கள் செய்வீர்களே என்னமோ நான் செய்வேன். அங்கு சென்று இங்கு சென்று கடைசியில் பார்த்தால் ஒரு பிரபலமில்லாத ஆனால் பயனுள்ள இலவச அல்லது இலவசமற்ற இணையத்தளங்களில் நிற்பதுண்டு.அப்படி நான் அண்மையில் கண்டதுதான் இது:-http://www.geocities.com/pammal_sureshbabu/bharathidasan/index.html" இதுபோல தங்களுக்கும் தெரிந்ததை தாருங்களேன். :wink:
|
|
|
| பெண்ணொருத்தி புலம்புகிறாள். |
|
Posted by: victorp - 05-24-2005, 04:30 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
காதலித்து உன்னால்
கைவிடப்பட்ட
பேதைப் பெண் எனது
புலம்பலை எழுதுகிறேன்
பெற்றோரை பிரிந்து - உன்
பின்னாலே வந்து நான்
பட்ட துயரங்களில் - ஒரு
பகுதியை எழுதுகிறேன்
உன்னுறவால் நான் பட்ட
உவத்திரமும் கொஞ்சமல்ல
விலைகொடுத்து நீ எனக்கு
வாங்கித்தந்த வேதனைகள்.
விளைவுகளை விபரிக்க
தமிழிலே வார்த்தையில்லை
தமிழளை விட வேற்றுமொழி
தான் தெரிந்தால் அதில் சரி
நான் எமுதி தந்திருப்பேன்
வேற்றுமொழி படிப்பதற்கு
விரைந்தபோதுதானே
சிவபூசைக் கரடி போலே
சேர்ந்தாயே நீ வந்து
எரிகின்ற தேங்காய் நெய்
விளக்கதனின் திரியதனை
எலியிளுத்துச் சென்றதனால்
கருகிவிட்ட வீடதனில்
கவலையிலே என்வீட்டில்
நானிருந்த வேளையிலே - எனக்கு
துன்பங்கள் தீர்க்க
துணைவந்த தெய்வமென்றாய் - நானும்
துன்பமெனுங்கடலில் படகின்
துடுப்பு என நினைத்தேன் - நீயோ
இன்பமெனும் சொல்லுக்கு எனவாழ்வில்
எதிரியாய் மாறிவிட்டாய்
புழு நிறைந்த ஆலம் பழம் போன்ற உன்னுடலின்
பழு சுமக்க வந்த என்னை
கழு மரத்தில் ஏற்ற விட்டு
கை கழுவி விட்டாயே
வெறிபிடித்த வேங்கைக்கு - மானை
கறிசமைத்தா கொடுக்க வேண்டும்
அன்று நீ என்னை
கொன்று தின்றிருந்தால் - உன்
தேவை ஒன்று தீர்ந்திருக்கம் - அன்றி
கெடுத்து என்னை
குட்டிச்சுவராக்கி - நீ
கண்டபலன் என்னதானோ - நான்
கொண்டதுயர் உன்னுறவால் - அதனை எழுதி
கூடையிலே நிரப்பிடலாம்.
சீதையவள் இராமர் பின் சென்றதனால்
காடேறினாலும் காதலினிலே ஒன்றானார்கள்
சேதனைகள் வந்த போதும் சேர்ந்தே பகிர்ந்தார்கள்
இராமன் என நினைத்தே நான் உன் பின்தொடர்ந்தேன் - நீயோ கொடும்
இராவணனாய் மாறி கூடேற வைத்தாய் - பல
கொடுமைகள்தான் செய்தாய்
நாதியின்றி நாயாக
நடுத்தெருவில் அலைய விட்டாய் - அன்ற நான்
மெய்யறிந்த வள்ளுவனாய் - இல்லை
வீரமாமுனிவனாய் இருந்திருந்தால்
விதி என்ற வேடன் - விரித்த
வலை என்று உணர்ந்திருப்பேன்.
வலை என்று உணராமல் - அழகுச்
சிலை என்று நினைத்தே - உன்
தலைமீது கால்வைத்தேன்
சிறகடித்துப் பறந்த என்னை
சிறைப்பிடித்தாய் வலைவிரித்து - பின்னர்
சென்றிடுவேன் ஊர்ந்து என்றா
கறள் பிடித்த கம்பிவலைக் கூட்டில் விட்டு
கட்டி வைத்தாய் கயிற்றாலும்
இன்னும் நிறையவுண்டு
எதைத்தான் விடுவது
எதைத்தான் எழுதுவது
சட்டியிலே சோறுமில்லை
சத்திரத்தில் இடமுமில்லை
குட்டிபோட்ட பூனை போலே
குழுந்தையையும் காவிக்கொண்டு
பட்டினியால் வாடி - தினம்
பலர் படலை திறக்கின்றேன்
கட்டியவனைக்கேட்டதற்கு
காலமாகி விட்டாரெனெ
பட்டினியின் கொடுமையினால்
பதிலுரைத்தேன் பொய்யதனை
போதுமா என் புலம்பல் - இல்லை
தேவையெனில் கூறிவிடு விரைவில் - ஏனெனில்
மீதி ஒரு செய்தி நீயறிவாய் - விரைவில்
பாதி உயிர் பிரிந்த என்னுடல் வீதியிலே கிடக்குதென்று.
அன்புடன்
விக்ரர். பீ
|
|
|
| கதாநாயகனாகிறார் தங்கர்பச்சான்(நாயகி நவ்யா நாயர்) |
|
Posted by: Kalai - 05-24-2005, 04:29 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
இயக்குநராக இருந்து வந்த சேரனை, நடிகராக மாற்றிய பெருமை தங்கர்பச்சானுக்கு உண்டு. இப்போது தங்கர்பச்சானே ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/thangarbachan200.jpg' border='0' alt='user posted image'>அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல் என மூன்று வித்தியாசமான படங்களை இயக்கி கோலிவுட்டில் ஒரு வித்தியாசமான டைரக்டர் என்று பெயர் எடுத்தவர் தங்கர்பச்சான்.
தென்றல் படத்திற்குப் பிறகு புதிய படம் எதையும் முடிவு செய்யாமல் இருந்து வந்த தங்கர், தற்போது "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தை தயாரித்து இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார் தங்கர் என்பதுதான் விசேஷச் செய்தி.
கேமராவுக்குப் பின்னால் இருந்து வந்த இயக்குநர் சேரனை, சொல்ல மறந்த கதை மூலம் நல்ல நடிகராகவும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் தங்கர். அந்தப் படம் கொடுத்த தைரியத்தில் தான் ஆட்டோகிராப்பில் துணிச்சலாக ஹீரோவாக வேடம் கட்டி புகுந்து விளையாடினார் சேரன்.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி , வெகு இயல்பான ஒரு கதை என தங்கர் கூறுகிறார். சுருக்கமாக சொன்னால் ஒரு சோம்பேறியின் கதை. அந்த சோம்பேறியாக நடிக்கப் போவது தங்கர் தான். கடமைகள், பொறுப்புகளை மறந்து, தான்தோன்றித்தனமாக, எந்தவித கவலைகளும் இல்லாமல் வாழும் ஒருவர் தான் அப்பாசாமி. அவரது கதைதான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.
இதில் தங்கருக்கு ஜோடியாக நவ்யா நாயர் நடிக்கிறார். இவர்கள் தவிர பிரமிட் நடராஜன், டி.பி. கஜேந்திரன், ஆர்.சுந்தரராஜன், கஞ்சா கருப்பு எனப்படும் கருப்பு ராஜா, பொன்னம்பலம், கூத்துப் பட்டறைக் கலைஞர்கள் லோகு, கருணா பிரசாத், ஜெகன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/navyanair_02-440.jpg' border='0' alt='user posted image'>
அழகி படத்திற்கு இசையின் மூலம் பெரும் பலம் சேர்த்த இளையராஜாவிடமிருந்து தென்றல் படத்தில் பிரிந்தார் தங்கர். இப்போது மீண்டும் ராஜாவுடன் கை கோர்த்து களம் காணப் போகிறார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிக்கு இசை வடிவம் கொடுக்கப் போவது இசை ஞானி.
பாடல்களை வாலி, கங்கை அமரன், .மேத்தா, முத்துலிங்கம், பழனிபாரதி ஆகியோர் எழுதவுள்ளனர். தங்கர் பச்சானின் சொந்த நிறுவனமான தங்கர் திரைக்களம் மூலம் இப்படம் தயாராகவுள்ளது.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி மிகவும் வித்தியாசமான அதே சமயத்தில் எதார்த்தமான ஒரு கதையாக இருக்கும் என்று உறுதியாக கூறுகிறார் தங்கர்.
நன்றி: www.thatstamil.com
|
|
|
| கனாக்கண்டேன் |
|
Posted by: stalin - 05-24-2005, 02:52 PM - Forum: சினிமா
- Replies (20)
|
 |
கனாக்கண்டேன் www.kathallife.com இல் பார்க்க கிடைத்தது இதில் நடித்த வில்லன் மலையாள நடிகர் பிரித்வ்ராஜ் அற்புதமாக நடித்துள்ளார் அவரின் அற்புதமான மெனரிச நடிப்பால் மெருகூட்டிஇருக்கிறார் தமிழ் திரையுலகத்துக்கு புதிய திறமையான வில்லன் கிடைத்திருக்குது என்று கருதுகிறேன் எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிச்சாலும் ஆச்சிரிய படுதற்க்கில்லை ---இவரில் நடிகர் மோகனின் சாயல் இருக்கிறது-------------------------------------ஸ்ராலின்
|
|
|
| மீண்டும் தமிழக அரசியலாக்கப்படும் புலிக் கிலி..! |
|
Posted by: kuruvikal - 05-24-2005, 01:08 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
<b>என் உயிருக்கு குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண் - ஜெ</b>
சென்னை:
எனது உயிரைப் பறிக்கும் பொறுப்பை விடுதலைப் புலிகள், தற்கொலைப் படையை சேர்ந்த ஒரு வெடிகுண்டு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டி பெட்ரோல், டீஸல், மருந்துகள் முதலிய பொருட்களை இலங்கைக்கு திருட்டுத்தனமாக கடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக்தை தொடர்ந்து ஒரு தளமாக பயன்படுத்தி வருகிறது என்று சில பத்திரிகைகள் பிரதானமாக தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சில பத்திரிகைகள் இதனைப் பெரிது படுத்தியுள்ளன. இது முற்றிலும் ஆதாரமற்றதாகும்.
தமிழக அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக உறுதியான சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டை எடுத்து வருகின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் தீயநோக்கிலான இந்த முயற்சி எனக்கு ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்து நான் எடுத்து வருகின்ற உறுதியான நிலைப்பாட்டை நான் விரிவாக எடுத்துச் சொல்ல தேவையில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
தமிழகத்தில் இவ்வியக்கத்தினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகவும் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என மாநில அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகள் தனிப்பட்ட அதிகபட்ச பேரபாயத்திற்கு என்னை இலக்காக்கி தொடர்ந்து எனக்கு குறி வைத்துள்ளனர் என்பதை நான் மத்திய உள்துறை அமைச்சருக்கு எடுத்துக் காட்டியுள்ளேன்.
விடுதலைப்புலிகளிடமிருந்து தனிப்பட்ட குறிப்பான அபாயம் உள்ளது என்றும், இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் பணி தற்கொலை வெடிகுண்டு பெண்மணி ஒருத்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அளிக்கப்பட்ட தகவல் குறித்து உள்துறை அமைச்சரின் சிறப்பு கவனத்தை நான் ஈர்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------
<b>ஜெ.வுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு</b>
சென்னை:
பெண் மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் மனித வெடிகுண்டு ஜெயலலிதாவைத் தீர்த்துக் கட்ட அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புக்குக் கூடுதலாக, 30 போலீஸார் சாதாரண உடையில் பாதுகாப்பை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களில் 10 பேர் சப் இன்ஸ்பெக்டர்களாக இருப்பார்கள்.
ஏற்கனவே இசட் பிரிவு கருப்புப் பூனைப் பாதுகாப்புப் படை வளையத்தின் கீழ் ஜெயலலிதா உள்ளார். தற்போது கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸாரையும் சேர்த்து 70 போலீஸார் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதேபோல, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸார், காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் முதல் ரிசர்வ் வங்கி வரை கண்காணிப்புப் பணியை மேற்கொள்வார்கள்.
வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை இவர்கள் கண்காணித்து வருவார்கள். சந்தேகத்திற்கு இடமானவர்களை தடுத்து நிறுத்தி விசாரிக்கவும் இவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கோட்டையில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டைக்குள் வரும் வாகனங்களை சோதனையிடுவதும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பொதுமக்கள் குறை தீர்ப்புப் பிரிவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வருவோர் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
கூடுதல் பாதுகாப்பு காரணமாக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------
<b>விடுதலைப்புலிகள்: ஜெ. அறிக்கைக்கு கருணாநிதி கண்டனம்</b>
சென்னை:
விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் ஆதாரமற்ற பல தகவல்கள் அடங்கியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குறை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பத்மநாபா கொலை குறித்தும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்தும் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை. விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடுமையான நிலையை எடுத்து வரும் ஜெயலலிதா முன்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததை மக்கள் மறக்கவில்லை.
இதே ஜெயலலிதா, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளதை யாரும் மறக்கவில்லை. அந்தப் பேட்டிகளில், விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆட்சி ஆதரவு அளிக்கவில்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டுள்ளார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
பத்மநாபா கொலை செய்யப்பட்ட கால கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஜெயலலிதா தீவிர ஆதரவு அளித்து வந்தார். விடுதலைப்புலிகளுக்கு அன்றைக்கு குரல் கொடுத்து விட்டு இன்றைக்கு திமுக மீது பாய்வது ஏன்?
ஏனோதானோ என்று பேசுவதும், ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும், எமர்ஜென்சி காலத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம்.
ஆனால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தக் கால கட்டத்தில் இதை ஏற்க முடியுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
தற்ஸ்தமிழ்.கொம்
|
|
|
|