![]() |
|
பெண்ணொருத்தி புலம்புகிறாள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பெண்ணொருத்தி புலம்புகிறாள். (/showthread.php?tid=4215) |
பெண்ணொருத்தி புலம்புகிறாள். - victorp - 05-24-2005 காதலித்து உன்னால் கைவிடப்பட்ட பேதைப் பெண் எனது புலம்பலை எழுதுகிறேன் பெற்றோரை பிரிந்து - உன் பின்னாலே வந்து நான் பட்ட துயரங்களில் - ஒரு பகுதியை எழுதுகிறேன் உன்னுறவால் நான் பட்ட உவத்திரமும் கொஞ்சமல்ல விலைகொடுத்து நீ எனக்கு வாங்கித்தந்த வேதனைகள். விளைவுகளை விபரிக்க தமிழிலே வார்த்தையில்லை தமிழளை விட வேற்றுமொழி தான் தெரிந்தால் அதில் சரி நான் எமுதி தந்திருப்பேன் வேற்றுமொழி படிப்பதற்கு விரைந்தபோதுதானே சிவபூசைக் கரடி போலே சேர்ந்தாயே நீ வந்து எரிகின்ற தேங்காய் நெய் விளக்கதனின் திரியதனை எலியிளுத்துச் சென்றதனால் கருகிவிட்ட வீடதனில் கவலையிலே என்வீட்டில் நானிருந்த வேளையிலே - எனக்கு துன்பங்கள் தீர்க்க துணைவந்த தெய்வமென்றாய் - நானும் துன்பமெனுங்கடலில் படகின் துடுப்பு என நினைத்தேன் - நீயோ இன்பமெனும் சொல்லுக்கு எனவாழ்வில் எதிரியாய் மாறிவிட்டாய் புழு நிறைந்த ஆலம் பழம் போன்ற உன்னுடலின் பழு சுமக்க வந்த என்னை கழு மரத்தில் ஏற்ற விட்டு கை கழுவி விட்டாயே வெறிபிடித்த வேங்கைக்கு - மானை கறிசமைத்தா கொடுக்க வேண்டும் அன்று நீ என்னை கொன்று தின்றிருந்தால் - உன் தேவை ஒன்று தீர்ந்திருக்கம் - அன்றி கெடுத்து என்னை குட்டிச்சுவராக்கி - நீ கண்டபலன் என்னதானோ - நான் கொண்டதுயர் உன்னுறவால் - அதனை எழுதி கூடையிலே நிரப்பிடலாம். சீதையவள் இராமர் பின் சென்றதனால் காடேறினாலும் காதலினிலே ஒன்றானார்கள் சேதனைகள் வந்த போதும் சேர்ந்தே பகிர்ந்தார்கள் இராமன் என நினைத்தே நான் உன் பின்தொடர்ந்தேன் - நீயோ கொடும் இராவணனாய் மாறி கூடேற வைத்தாய் - பல கொடுமைகள்தான் செய்தாய் நாதியின்றி நாயாக நடுத்தெருவில் அலைய விட்டாய் - அன்ற நான் மெய்யறிந்த வள்ளுவனாய் - இல்லை வீரமாமுனிவனாய் இருந்திருந்தால் விதி என்ற வேடன் - விரித்த வலை என்று உணர்ந்திருப்பேன். வலை என்று உணராமல் - அழகுச் சிலை என்று நினைத்தே - உன் தலைமீது கால்வைத்தேன் சிறகடித்துப் பறந்த என்னை சிறைப்பிடித்தாய் வலைவிரித்து - பின்னர் சென்றிடுவேன் ஊர்ந்து என்றா கறள் பிடித்த கம்பிவலைக் கூட்டில் விட்டு கட்டி வைத்தாய் கயிற்றாலும் இன்னும் நிறையவுண்டு எதைத்தான் விடுவது எதைத்தான் எழுதுவது சட்டியிலே சோறுமில்லை சத்திரத்தில் இடமுமில்லை குட்டிபோட்ட பூனை போலே குழுந்தையையும் காவிக்கொண்டு பட்டினியால் வாடி - தினம் பலர் படலை திறக்கின்றேன் கட்டியவனைக்கேட்டதற்கு காலமாகி விட்டாரெனெ பட்டினியின் கொடுமையினால் பதிலுரைத்தேன் பொய்யதனை போதுமா என் புலம்பல் - இல்லை தேவையெனில் கூறிவிடு விரைவில் - ஏனெனில் மீதி ஒரு செய்தி நீயறிவாய் - விரைவில் பாதி உயிர் பிரிந்த என்னுடல் வீதியிலே கிடக்குதென்று. அன்புடன் விக்ரர். பீ - kuruvikal - 05-24-2005 மாய மானை நம்பிக் கெட்டால்(ள்) சீதை மாயக் கண்ணனை நம்பி கெட்டால்(ள்) ராதை மாயக் கணவனை நம்பிக் கெட்டால்(ள்) கண்ணகி மாய மனிதரை நம்பிக் கெட்டால்(ள்) மனிதப் பெண் மாயமாய் மனிதர் மானுடத்துள் சகஜம் மயக்கம் தெளிந்து புத்தி தீட்டி மங்கையே வாழ்ந்திடு சீர்வழி மயங்கிச் சீரழிந்தால் மயானமல்லத் தீர்வு மனதோடு மனிதம் தாங்கி மலையாய் வா மாயம் அழிக்க...! யதார்த்தம் சொல்லும் நல் கவிக்கு வாழ்த்துக்கள்..! - hari - 05-24-2005 நல்லகவிதை! வாழ்த்துக்கள்! - poonai_kuddy - 05-24-2005 நல்லாருக்கு விக்ரர் அண்ணா ஆனா இராமன் இராவணன் எண்டு எல்லாருமெழுதி போரடிச்சிட்டுது மற்றது இராமன் நல்லவனா இராவணன் நல்லவனா எண்டு வேற சண்டை நடக்குது இதில நீங்கள் இராவணன தப்பா சொல்லிட்டீங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இராவணன் தமிழணெண்டுறதால தான்அவர கூடாதவர் மாதிரி சொன்னவையாம். இண்டைக்கு தமிழீழத்தில நடக்கிற சண்டையால பிரபாகரன் மாமாவையும் பயங்கரவாதியெண்டுதானே வெளில சொல்லுகினம் அதமாதிரி நாளைக்கு கதையள் திரிபட்டு கவிதையெழுதுறவை எல்லாம் பிரபாகரன் மாமாவையும் பிழையான உதாரணத்துக்கு எடுப்பினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->ஆனா உங்கட கவிதைல பெண்ணின்ர அவலங்கள சொன்னிங்கள் நல்லா இருந்திச்சு குருவியண்ணா சீதை ராதை கண்ணகியெல்லாரும் மனுசரில்லையோ :? - kuruvikal - 05-24-2005 Quote:குருவியண்ணா சீதை ராதை கண்ணகியெல்லாரும் மனுசரில்லையோ கற்பனைப் பாத்திரங்களாக காலத்துக்கு ஏற்ற சமூக நியாயம் சொல்ல காட்டப்படுபவை...அப்படியேதான் கருதப்படுகின்றன..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- poonai_kuddy - 05-24-2005 அப்ப கற்பனைப் பாத்திரங்களா அவை பிறகெதுக்கு அதுகள மதிப்பான்? உண்மைல நடந்து காட்டாமல் கற்பனைப் பாத்திரத்த வச்சு சமூக நடமுறைல நடக்காதத சொல்லி என்ன பிரயோசனம். அப்ப உந்த பொய்யத்தான் திரும்ப ஒரு பொய்யெழுதுறதுக்கு எல்லாரும் பாவிக்கினமா சரி சரி இப்பதான் விளங்கிச்சு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 05-24-2005 இப்ப இதில நிஜமா ஒராள் பூனைக்குட்டியாத்தான் தெரியுது..காலால அடிச்சா வானத்தில பறக்கும்...உண்மை அதுவோ... அந்தாள் எழுதிறத மியா மியா என்றா பாக்கிறம் கருத்தாத்தானே பாக்கிறம்..பாத்திரம் கற்பனையாகிலும் சொன்ன கருத்து காலத்துக்கு ஏற்ப அவசியமானதாக இருக்கலாம்... உண்மையை கற்பனைப் பாத்திரங்களூடாகச் சொல்வதுதான் கதை... இலக்கியம்..! பூனைக்குட்டி... இப்படி துள்ளிக்குதிச்சுத்தான் பறந்ததுகள் இந்தக் குருவிகளும்...அடக்கும் அடக்கும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- poonai_kuddy - 05-24-2005 ஹி ஹி ஹி ஹி ஹி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குருவியண்ணாக்கு திரும்பவும் நான் எழுதினத ஒழுங்கா வாசிக்கல அதான் கரையுறார் கா கா எண்டு உண்மையை கற்பனைப் பாத்திரத்துக்குள்ளால சொல்றதுதான் இலக்கியமெண்டால் இலக்கியத்தில சொன்னது கற்பனை இல்லத்தானே குருவியண்ணா நான் என்ன சொன்னான்? நடக்காதத கற்பனைபஇ பாத்திரத்துக்குள்ளால சொல்லி என்ன பிரயோசனமெண்டுதானே கேட்டனான். அப்ப நடந்தததான் கற்பனைப்பாத்திரத்துக்குள்ளால சொன்னவையா? அப்பிடி சொல்லுங்கோவன். சொல்லுறது ஒழுங்கா சொல்லாமல் இப்ப கா கா எண்டால் நான் என்னத்த செய்யிறது. முதலில நான் கேட்ட கேள்விக்கெ ஒழுங்கா இன்னும் பதிலெழுதல :evil: - poonai_kuddy - 05-24-2005 kuruvikal Wrote:Quote:குருவியண்ணா சீதை ராதை கண்ணகியெல்லாரும் மனுசரில்லையோ மனிசரோ மனிசரில்லயோ அத சொல்லுங்கோ இப்ப - kuruvikal - 05-24-2005 poonai_kuddy Wrote:ஹி ஹி ஹி ஹி ஹி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:<b>உண்மையை கற்பனைப் பாத்திரங்களூடாகச் சொல்வதுதான் கதை... இலக்கியம்..!</b> இப்ப புரியுதா..மியா மியாவுக்கும் கீச் கீச்சுக்கும் உள்ள வேறுபாடு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- poonai_kuddy - 05-24-2005 kuruvikal Wrote:poonai_kuddy Wrote:ஹி ஹி ஹி ஹி ஹி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடடா திரும்பவும் கரையுறீங்கள். இப்ப எதுக்கு உந்த பதில்? உங்கள திருப்திப் படுத்துறதுக்காண்ணா? இல்லாட்டி எனக்கு விளக்குந் தாறதுக்கா? எனக்கு விளக்கந் தாறதுக்கெண்டால் நான் கேட்ட வேள்விக்கு ஒழுங்கா பதில சொல்லுங்கோ சீதை ராதை கண்ணகி எல்லாம் மனிசரில்லையோ?? - shanmuhi - 05-24-2005 நல்லகவிதை! வாழ்த்துக்கள்! - kavithan - 05-25-2005 கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 05-25-2005 வாழ்த்துக்கள் |