![]() |
|
தமிழோசையின் ஆனந்தி ஓய்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழோசையின் ஆனந்தி ஓய்வு (/showthread.php?tid=4213) |
தமிழோசையின் ஆனந்தி ஓய்வு - KULAKADDAN - 05-24-2005 பி பி சி தமிழோசை ஆனந்தி பணி ஓய்வு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பி பி சி தமிழோசையில் பணி புரிந்து வந்த மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் செவ்வாய்க் கிழமையோடு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். <img src='http://img157.echo.cx/img157/7959/20050524140550anandhi20318th.jpg' border='0' alt='user posted image'> 1970 களில் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானர். இவரது பல தொடர்கள், முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை தமிழோசை நேயர்களிடையே பிரபலம். இலங்கை யாழ்குடா நாட்டின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, தன் பணியில் மிகவும் ஊக்குவித்த முன்னாள் தமிழ்ப் பிரிவுத் தலைவர் சங்கரை மிக நன்றியோடு நினைவு கூறுகிறார். தன் பணியில் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக தமிழோசை நேயர்களுக்கும் அவர் தன் நன்றியினைத் தெரிவிக்கிறார். Thanks BBC tamil - Sriramanan - 05-24-2005 பிபிசி தமிழோசையில் இனி றோவின் ஆட்சிதான்....! - Eswar - 05-24-2005 தமிழுக்கு திருமதி ஆனந்தி செய்த சேவைக்கு எனது நன்றிகள். - Nellaiyan - 05-24-2005 "ஆனந்தி அக்கா" தமிழ்த் தேசியத்தில் காதல் கொண்ட ஓர் அற்புதமான ஊடகவியலாளர். தமிழில் அற்புதமான உச்சரிப்பு கேட்கும் எல்லோரையும் கவரக்கூடியது. மிக எளிமையான, தமிழ்ப் பண்பாட்டில் பற்றுக்கொண்ட படைப்பாளி. பல வருட இருண்ட் அடக்குமுறையின் போதும் தமிழீழம் சென்று தேசியத் தலைவனின் செய்திகளை வெளி உலகுக்கு கொன்டுவந்த பெருமை ஆனந்தியக்காவையே சாரும். நான் நினைக்கிறேன், "மாமனிதர்" சிவராமின் தேசியத்திற்கான பாதைக்கு வழி சமைத்தவரும் "ஆனந்தியக்கா" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட ஆனந்தி சூரியப்பிரகாசம்தான். சில வருடங்களுக்கு முன்னம் "பிபிசி"யில் இந்திய ஆதரவு ஊடுருவல்களும், இவரின் ஊடக செயற்பாட்டிற்கு பல இடைஞ்சல்கள் வந்தபோதும் உறுதியாக உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவர். இன்று பிபிசியில் பல இந்திய அறிவிப்பாளர்கள் மாத்திரமின்றி இந்திய உலவுப் பிரிவின் இலண்டன் தமிழ் வானொலியின் முன்னால் அறிவிப்பாளர்கலும் ஊடகவியலாளர்கள் போர்வையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்றும் ஊடக உலகிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் "பிபிசி" எனும் விருட்சத்தில் எமக்காக உழைத்த எம் குரலான "ஆனந்தியக்காவை" நன்றியுடன் வாழ்த்துவோம். - THAVAM - 05-24-2005 தமிழ் ஓசையில் இருந்து ஓய்வு பெந்றாலும் தமிழுக்கு செய்யும் சேவையில் இருந்து ஓய்வு எடுக்கமாட்டா! _______________________________________________________________ [size=18]'' தான் ஆடாவிட்டாலும் தசையாடும் '' ______________________________________________________________ - adsharan - 05-24-2005 தமிழுக்கு திருமதி ஆனந்தி தமிழுக்கு செய்த சேவைக்கு எனது நன்றிகள் - anpagam - 05-25-2005 Sriramanan Wrote:பிபிசி தமிழோசையில் இனி றோவின் ஆட்சிதான்....!:| நல்ல காலத்தில் ஒய்வெடுப்பது அவரின் பிரியாவிடைக்கு கிடைத்த உயர்ந்த மகிழ்சியான பரிசாகும்... :| 8) - Nilavan - 05-25-2005 Sriramanan Wrote:பிபிசி தமிழோசையில் இனி றோவின் ஆட்சிதான்....!இப்ப மட்டும் என்ன....யாரின் ஆட்சியில் தமிழோசை இருக்கு எல்லாம் இந்திய சாhபு ஊடக வாதிகளினது தானே....!!! ஆனாலும் அவர்களிடம் நாம் பிழை பிடிக்க முடியாது ஏனெனில் அவர்கள் தங்கள் நாட்டுக்காக தானே வக்காலத்து வாங்குவார்கள். எம்மவர்களும் அந்த சேவைக்குள் நுழைய முற்படனும் அப்பதான் இதை சரி செய்யலாம்..... நிலவன் |