Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 647 online users.
» 0 Member(s) | 645 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,447
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,289
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,681
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,266
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,531
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,760
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  கரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி!
Posted by: Vaanampaadi - 05-29-2005, 11:32 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

கரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி!

நவ.15கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள்

ஜன., 30, 1948. மாலை 5.10 மணி. டில்லி பிர்லா மாளிகை பிரார்த்தனை மைதானம். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகியோர் தோள்களின் மீது கைபோட்டவாறு பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார் காந்திஜி. பிரார்த்தனைக்காக காத்திருந்த ஏராளமானோர் காந்திஜியைக் கண்டவுடன் எழுந்து வணங்கினர். காந்திஜியும் அவர்களுக்கு வணக்கம் கூறியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த கொடுமை நடந்தேறியது. கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் காந்திஜியின் அருகில் வந்தான். கண்மூடி திறப்பதற்குள் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காந்திஜியை நோக்கி மூன்று முறை சுட்டான். மூன்று குண்டுகளும் மார்பில் பாய்ந்தன. ரத்தம் பீறிட "ஹே ராம்' என்றபடி மயங்கிச் சரிந்தார். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த அந்த தன்னலமற்ற புண்ணிய ஆத்மா, மண்ணில் இருந்து பிரிந்தது.

துப்பாக்கியால் காந்தியை சுட்ட அந்த இளைஞன் கையும், களவுமாக பிடிக்கப்பட்டான். முதலில் ஒரு முஸ்லிம் இளைஞன் தான் காந்திஜியை கொன்றதாக தகவல் பரவி, கலகம் வெடித்தது. ஆனால், காந்திஜியை சுட்டுக் கொன்றது ஒரு இந்து தீவிரவாதி என்பது பிறகு தெரிய வந்தது. அவன் தான் நாதுராம் விநாயக கோட்சே.

காந்திஜியின் போராட்டங்கள் இந்துக்களுக்கு பாதகமாக அமையும் என்று கருதியதால் அவரை சுட்டுக் கொன்றவன். இந்து சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவன். காந்திஜி இறக்கும் வரை தங்களது லட்சியம் நிறைவேறாது என்பதால் அவர்கள் காந்திஜியை சுட்டுக் கொல்ல திட்டமிட்டனர். அதற்காக உருவாக்கப்பட்டவன்தான் கோட்சே. புனாவை சேர்ந்த கோட்சேயின் தந்தை ஒரு தபால்காரர்.

காந்திஜியை கொலை செய்தது குறித்த வழக்கில் வாக்கு மூலம் கொடுத்தான் கோட்சே. அதில், "முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொண்டார் காந்திஜி. இதனால், இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவேதான் அவரை சுட்டுக் கொன்றேன்...' என்று கூறினான்.

காந்திஜி கொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் துõக்கு தண்டனை வழங்கப்பட்டது. இவர்களின் தூக்கு தண்டனை நவ., 15, 1949ல் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இருப்பினும், இவர்கள் இருவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காந்திஜியின் இரு மகன்களும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால், இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

இதனால், கோர்ட் உத்தரவுப்படி நவ., 15, 1949 அன்று, கோட்சே, ஆப்தே ஆகியோரை தூக்கிலிட இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அன்று காலை 7.55 மணிக்கு அவர்கள் இருவரும் சிறையில் இருந்து தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் "அகண்ட பாரதம் அமைத்தே தீர வேண்டும்' என்று கோஷமிட்டபடி நடந்து சென்றனர்.

தூக்கு மேடையில் நின்ற கோட்சேயிடம் அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அப்போது, "நான் இறந்த பிறகு என் உடலை எரித்து, கிடைக்கும் சாம்பலை பாதுகாத்து வைக்க வேண்டும். என்றைக்கு அகண்ட இந்துஸ்தானம் உருவாகிறதோ, அன்றைக்கு அந்த சாம்பல் சிந்து நதியில் கரைக்கப்பட வேண்டும்...' என்று கூறினான். அடுத்த சில நிமிடங்களில் கோட்சேயும், ஆப்தேயும் அடுத்தடுத்து தூக்கிலிடப்பட்டனர்.

இருவரின் உடலும் உடனடியாக சிறைச்சாலைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் ரகசியமாக எரிக்கப்பட்டன. உடல்கள் முழுதும் எரிந்து முடிந்தவுடன் இருவரின் அஸ்தியும் சேகரிக்கப்பட்டது. கோட்சே எரித்த இடத்தை அறிந்தால், அவரது ஆதரவாளர்கள் அங்கு அவனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பக் கூடும் என்ற நிலை இருந்ததால், கோட்சே உடல் எரிக்கப்பட்ட இடத்தை உழவு செய்து மறைத்தனர். அந்த இடத்தில் செடிகள் நடப்பட்டன.

பின்னர், கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோரின் அஸ்தி கலசங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, அருகில் ஓடிக் கொண்டிருந்த காக்கர் என்ற ஒரு சிற்றாறில் கலக்கப்பட்டது. கோட்சேயின் அஸ்தி காக்கர் நதியில் கரைக்கப்படும் விஷயத்தை அறிந்த அவனது ஆதரவாளர்கள், அதிகாரிகள் கரைத்துச் சென்ற கோட்சேயின் அஸ்தியில் ஒரு பகுதியை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட கோட்சேயின் அஸ்தி, அவனது சகோதரர் கோபால் கோட்சேயிடம் ஒப்படைக்கப்பட்டது. கோட்சேயின் அஸ்தி வெள்ளிக் கலசத்தில் வைக்கப்பட்டு புனா நகரில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15ம் தேதியன்று கோட்சே ஆதரவாளர்கள் அங்கு கூடி, "அகண்ட இந்துஸ்தானத்தை அமைத்தே தீருவோம்...' என உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர்.

Print this item

  அம்மாவிடம் இருந்து மகளுக்கு `டைவர்ஸ்'
Posted by: Vaanampaadi - 05-29-2005, 11:23 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

அம்மாவிடம் இருந்து மகளுக்கு `டைவர்ஸ்'
ஆஸ்திரேலிய கோர்ட்டில் நூதன தீர்ப்பு!

கணவனிடம் இருந்து மனைவியோ, மனைவியிடம் இருந்து கணவனோ `டைவர்ஸ்' (விவாகரத்து) வாங்குவது வாடிக்கையாக நடப்பது தான்.ஆனால் அம்மாவிடம் இருந்து மகள் `டைவர்ஸ்' வாங்கியதாக இதுவரை யாரும் கேள்விப்பட்டு இருக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

17 வயது இளம்பெண்

டைவர்ஸ் வாங்கி உள்ள பெண்ணின் பெயர் கயே (வயது 17). நிïசவுத்வேல்ஸ் மாநிலத்தில் தனது தாயுடன் வசித்து வந்தாள். சமீபத்தில் இவள் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்தாள்.

``நான் 10 வயதாக இருக்கும்போதே என் தாய் என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபட வைத்தாள். ஒரு கொடுமைக்கார ஆசாமியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவனுடைய `செக்ஸ்' ஆசைக்கு என்னை பயன்படுத்தினாள். 7 வருடமாக நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். இனிமேலும் என் தாயிடம் அடிமையாக வாழ முடியாது. தாயிடம் இருந்து குடும்ப உறவை துண்டித்து எனக்கு `டைவர்ஸ்' வழங்க வேண்டும்'' என்று மனுவில் அந்த பெண் கூறியிருந்தாள்.

சேர்ந்து வாழ முடியாத கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கோ, குழந்தைகளிடம் இருந்து பெற்றோருக்கோ டைவர்ஸ் வழங்கும் புதிய சட்டம் சமீபத்தில்தான் அந்த மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.

டைவர்ஸ் கிடைத்தது

இளம்பெண் கயேவின் மனுவை விசாரித்த மாஜிஸ்தி ரேட்டுதீவிர விசாரணை நடத்தி அவளுக்கு தாயிடம் இருந்து `டைவர்ஸ்' (குடும்ப உறவு ரத்து) வழங்கி தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பை கேட்ட சந்தோஷத்தில் கயே நிருபர்களிடம் கூறும்போது, `என் தாயையும், எனக்கு செக்ஸ் கொடுமை இழைத்த நபரையும் ஒருபோதும் மன்னிக்கவும் மாட்டேன், மறக்கவும் மாட்டேன்' என்றாள். 4 வருட கனவு இன்று நனவாகி விட்டதாகவும் அந்த பெண் மகிழ்ச்சி தெரிவித்தாள்.

Print this item

  கடவுள் பயங்கரவாதியா?
Posted by: adithadi - 05-29-2005, 06:27 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (14)

800 கடாக்கள்வரை பலியிடப்பட்டன. கவுனாவத்தை ஆலயத்தில் நேற்று வேள்விப்பொங்கலில் அடியார்கள் திரண்டன்ர் என்று உதயன் பத்திரிகையில் படித்தேன்.

நாம் 21ம் றூற்றாடின்ல் வாழ்கிறோமா ? அல்லது கற்காலத்தில் வாழ்கிறோமா?
ஒரு உயிரை கொன்று ஆண்டவுனுக்கு காணிக்கை கொடுப்பதின் மூலம் கடவுள் இன்பம் அடைகின்றாரா? அப்படியாயின் அக் கடவுள் பயங்கரவாதியே !

Print this item

  தீ தின்ற எங்கள் யாழ்நூலகம் 24ஆண்டுகள் தாண்டிய நினைவுப்பதிவு.
Posted by: shanthy - 05-29-2005, 05:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

2001ம் ஆண்டு யாழ்பொதுநூலகம் எரிப்பின் நினைவாகத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி 4ஆண்டுகளின் பின்னாக நாளை மறுதினம் யாழ் நூலக எரிப்பின் 24ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு இன் நிகழ்ச்சி மீள்பதிவாக மீளும் நினைவுகளாக.....
எழுத்துப்பிரதி - அருணன்.
நிகழ்ச்சித் தயாரி;ப்பு குரல்வடிவம் - சாந்தி ரமேஷ் வவுனியன்.
http://home.t-online.de/home/vavuniyan/aud...arlnoolakam.ram

Print this item

  வணக்கம்
Posted by: kathirs - 05-29-2005, 01:06 AM - Forum: அறிமுகம் - Replies (49)

என்ர பெயர் கதிர்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
யாழிற்குள்ள நுழைஞ்சிட்டம்....எங்களையும் சேர்த்து கொள்ளுவீங்களோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  பெண்ணழகு
Posted by: சாமி - 05-28-2005, 11:07 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

கணவன் இறந்த துக்கத்தில் இளம் மனைவி கண்ணீர் வடித்துக் கொண்டு, திருவான்மியூர் கல்லறைத் தலத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். அவர்கள் ஜாதியில் கணவன் சவ அடக்கத்துக்கு மனைவி வரலாம்.

மனைவியை ஒரு நடுத்தர வயது ஆடவன் - செல்வந்தன் மெல்ல மரியாதையுடன் அணுகி, "உங்கள் கணவன் இறந்ததற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் இந்த நிமிஷம்கூட எனக்கு அழகு தேவதையாகத் தெரிகிறீர்கள். இப்போதே தங்களை மணக்க நான் தயார்" என்றான்.

இதைக் கேட்ட மனைவி கோபத்தில் சீறினாள். "ஏன்யா! இதுவா சமயம், இதைப் பற்றிப் பேசுவதற்கு? போங்கள், என் கண்முன்னே நிற்காதீர்கள்" என்றாள்.

கனவான், "மன்னித்துக் கொள்ளுங்கள்! உங்கள் வனப்பு உங்கள் துக்கத்தையும் கடந்து என்னைக் கவர்ந்துவிட்டது" என்றான்.

அதற்கு, அந்த இளம் விதவை, "இதற்கே இப்படிச் சொல்கிறீர்களே! நான் அழாமல் இருக்கும்¢போது நீங்கள் பார்த்திருக்கவேண்டும்" என்றாள்.

நீதி : - எந்த சமயத்திலும் ஓர் அழகான பெண், தான் அழகானவள் என்பதை மறக்க மாட்டாள்.

நன்றி: அம்பலம்

Print this item

  பகுதிநேர வேலை...
Posted by: shanmuhi - 05-28-2005, 07:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

<b>பகுதிநேர வேலை...</b>

உனக்காக ஒரு கவிதை எழுதக் கேட்ட போது
உன்னை நினைத்து என்ன எழுதுவது புரியாமலே
உன் பெயரினை எழுதித் தந்த போது அதை
உள்ளன்போடு எற்று பத்திரப்படுத்தினாய்

பாதி உடைந்த வளையல் துண்டுகளை
பாதையோரம் எறிந்த போது அதனையும் எடுத்து
பக்குவமாய் ஒன்றுவிடாமல் தேடி தேடியே
ஆசையாய் பத்திரப்படுத்திக் கொண்டாய்

கூந்தலில் இருந்து விழுந்த மலரினையும் எடுத்து
சூடிய மலரில் வாசம் அதிகம் என்றெண்ணி
ஆவி அதனுள் அடக்கம் என்று அதையும்
தாவும் மனதுடன் பத்திரப்படுத்தினாய்

உன்னை எண்ணி என்ன சொல்வது
மணிக்கணக்கில் நாள்தோறும்
என்னுடன் பழகிக்கொண்டே ஊமையாய்
பகுதிநேர வேலையாக குப்பை பொறுக்கும்
வேலைக்குள் தள்ளப்பட்டிருப்பதை நினைத்தால்
வேதனை ஆகத்தான் இருக்கின்றது

Print this item

  நான் என்னை நானே
Posted by: shanmuhi - 05-28-2005, 07:30 PM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

<b>நான் என்னை நானே நக்கிக் கொள்ளும் நாய்</b>

உங்களில் அனேகம் பேருக்கு நாய் பூனை வளர்த்த அனுபவம் இருக்கும்.மிருகக் காட்சிச் சாலையிலேயோ தொலைக்காட்சியிலோ மிருகங்களின் வாழ்வியலை அவதானித்த அனுபவம் இருக்கும்.

நீங்கள் யாராவது காயம்பட்ட நாயோ,பூனையோ,புலியோ, சிங்கமோ காலைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குப் போனதைப் பார்த்திருக்கிறீர்களா?.நீங்களாகச் சிலவேளை உங்கள் வளர்ப்புப் பிராணியை சிகிச்சைக்காகக் கொண்டு போயிருக்கலாம் ஆனால் அவை தமது நோய்களுக்கோ,காயங்களுக்கோ மருத்துவரை நாடுவதில்லை.

அவை என்னதான் செய்கின்றன?.காயம் பட்ட வேளையில் தம்மைத் தானே நக்கிக் கொள்கின்றன.காயம் ஆறும் வரையில் நாயாகிலும் சரி புலியானாலும் சரி சிங்கமானாலும் சரி காயத்தை நக்கி நக்கியே குணப்படுத்துகின்றன.அடிபட்ட பூனையைப் பாருங்கள் அது தனது உடல் முழுவதும் நாவால் நக்கி நக்கியே உடல் நோவைக் கூடக் குணப்படுத்துகிறது.

அடிபட்ட போது மட்டுமென்றில்லை.அழுக்கடைந்த போது கூட மிருகங்கள் தம்மைத் தாமே நக்கியே சுத்தப்படுத்துகின்றன

இது என்ன மருத்துவ முறை என்று கேட்கிறீர்களா ஜெயகாந்தன் கூட்டத்திலே சொன்ன தம்மைத் தானே நக்கிக் கொள்ளும் நாய் முறை.

ஜெயகாந்தன் இழிவுக்காக இதனைச் சொன்னார் என்றுதான் நான் நினைக்கிறேன்.தமிழ்ப்பாதுகபபு இயக்கத்தை முடிந்தளவு இழிவுபடுத்துவதற்காக இதனைச் சொல்லியிருக்கக் கூடும் ஆனால் தம்மைத் தானே நக்கிக் கொள்வதில் எந்த இழிவுமில்லை என்று அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.ஏனென்றால் அடிபட்ட போதெல்லாம் மற்றவனிடம் ஓடி மருந்திட்ட அனுபவம் தான் அவருக்கு இருக்கும்.இல்லாது போனால் ஏதாவது தேவைக்காக மற்றவன் காலை நக்கிய அனுபவம் இருக்கும்.அதைவிட இது கேவலமில்லை என்று உணர்ந்திருந்தால் இதைச் சொல்லியே இருக்கமாட்டார்

நாய் பூனைகளை ஒழுங்காக அவதானித்தவர்களுக்கு ஒன்று புரியும் நாய் செயற்கரிய வீரச்செயல்களை ஏதாவது செய்துவிட்டுத் தன்னைத் தானே நக்கிக் கொள்வதில்லை.அப்படி ஏதாவது செய்தால் கம்பீரமாக ஒரு குரைப்புக் குரைக்கும் வேறு என்னவோவெல்லாம் செய்யும் ஒரு போதும் தன்னைத் தானே நக்கிக் கொள்வதில்லை.தன் மகவு மீதான பாசத்தை அவற்றை நக்கித் தெரிவிக்கின்றன.ஆனால் தம்மீதான பாசத்தை தம்மைத் தாமே நக்கித் தெரிவிப்பதில்லை

பூனை சிங்கம் புலி எல்லா மிருகங்களுமே இதனைத்தான் செய்கின்றன அவை ஒரு போதும் மகிழ்ச்சியில் தம்மைத் தாமே நக்குவதில்லை.காயம்பட்ட வேளையிலேயே தம்மைத் தாம் நக்குகின்றன,

அதே நிலைதான் காயம்பட்ட நாயின் நிலைதான் இன்று எங்களுக்கும் எங்கள் மொழிக்கும் ஏற்பட்டிருக்கிறது.அழியும் தறுவாயில் மொழி இருக்கிறது என்பதை கேள்விப்படுவதை விட நோயின் தீவிரத்தைக் காட்ட வேறு சொல் வேண்டாம்.
இது நம்மை நாமே நக்கிக் கொள்ளவேண்டிய வேளை.எங்கள் வீரச்செயல்களை மற்றவர்கள் கைகளை நக்கிப் பிரகடனப்படுத்தும் நேரமல்ல .எங்கள் மொழி காயப்பட்டுக் கிடக்கிறது அதை மற்றவர்கள் வந்து நக்கிக் குணப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது எங்களை நாங்களே நக்கித்தான் குணப்படுத்த வேண்டும்.

ஒரு நாயைப் போல,ஒரு சிங்கத்தைப் போல எங்களை நாங்களே நக்கித்தான் அந்தக் காயத்தை ஆற்றவேண்டியிருக்கிறது

தமிழ் மொழி மாசடைந்துகொண்டிருக்கிறது ஒரு பூனையைப் போல தன்னைத் தானே நக்கித் தான் அதனைச் சுத்தப்படுத்த வேண்டும்.

கடைசியாக ஒரு விடயம் பூனை காயப்பட்டால் நாய் வந்து நக்காது,சிங்கம் காயப்பட்டால் புலி வந்து நக்காது.ஏன் ஒரு நாய் இன்னொரு நாயிடமிருந்து ஒரு துண்டு எலும்பையும் சண்டையிட்டுப் பறிக்குமே தவிர நாய் கெஞ்சி மன்றாடி வாங்கியதைப் பார்த்திருக்கிறீர்களா.சிங்கம் பிடித்த இரையை புலி அதனுடைய காலை நக்கி இரந்துண்டு வாழ்ந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இல்லை. இல்லவே இல்லை ஏனென்றால் அவை ஜெயகாந்தன் பேச்சைக் கேட்டதில்லை.

நான் "தன்னைத் தானே நக்கிக் குணப்படுத்தும் நாயாக" இருக்க ஆசைப்படுகிறேன். ஜெயகாந்தனாக அல்ல

நன்றி - ஈழநாதன்
http://kavithai.yarl.net/archives/003070.html#more

அண்மையில் தமிழ்மணத்தில் வாசித்தவற்றில் என்னை வெகுவாக கவர்ந்த சிறந்த ஆக்கம் இது. யாழ்கள உறவினர்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன்.

Print this item

  புலர்வின்பூபாளம்
Posted by: நேசன் - 05-28-2005, 02:21 AM - Forum: புலம் - Replies (1)

வருகிற ஞாயிற்றுக்கிழமை 29.05.05 அன்று நோர்வே ஒஸ்லோ மாநகரத்தில் தமிழர்புனர்வாழ்வுக்கழ்கத்தின் நோர்வேக்கிளையினரால் வருடாவருடம் நடாத்தப் படுகின்ற புலர்வின்பூபாளம் கலைநிகழ்வில் தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரெஜி அண்ணா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றார்


இந்நிகழ்வில் 2005 ம் ஆண்டுக்காண சிறந்த தாயகப்பாடகர் இறுதி தெரிவுப்போட்டியும் இடம் பெறும்.இதில் பாடுவோர் எமது புலம் பெயர்ந்த கவிஞர்களால் அல்லது தாயக கவிஞர்களால் எழுதப்பட்ட ஈழம் பற்றிய,ஈழவிடுதலை பற்றிய பாடல்களையே பாடவேண்டும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

நேசன்

Print this item

  பூமியின் முதல் விஞ்ஞானி யார்?
Posted by: hari - 05-27-2005, 05:38 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (3)

<b>பூமியின் முதல் விஞ்ஞானி யார்? இறைவன் 10! குழந்தை 100! </b>(நக்கீரன் - கனடா)


சென்ற கிழமை இறுதியில் நியூயேர்சி மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 'தமிழர் திருவிழா" விற்குப் போயிருந்தேன்.

வழக்கமாக இந்த விழாவை ஆண்டுதோறும் அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையும் தமிழ்நாடு அறக்கட்டளையும் சேர்ந்து நடத்தி வந்தன. இம்முறை தனித்தனியாக அ.த.ச. பேரவை நியூயேர்சியிலும் தமிழ்நாடு அறக்கட்டளை புளோரிடாவிலும் தனித்தனியாக நடத்தின.

இன்றைய நவீன தொழில் நுட்ப வசதிகளின் விளைவாக தில்லி இராஜ்பவனில் இருந்து கொண்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடக்கவுரையை நிகழ்த்தி அ.த.ச. பேரவையின் 16வது மாநாட்டை ஆரம்பி;த்து வைத்தார்.

'தமிழ்நாட்டின் இராமேசுவரம் தீவில் ஒரு நடுத்தர தமிழ்க் குடும்பத்தில் நான் பிறந்தேன். என் அப்பா ஜைனுல்தீன் பெரிய பணக்காரர் அல்ல. மெத்தப் படித்தவரும் கிடையாது. இருந்தாலும் அவர் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அவர் தரும சிந்தனை நிறைந்தவர். என் அம்மா ஆஷியம்மா அப்பாவின் மனதிற்கேற்ற துணை. தினந்தோறும் அம்மா எவ்வளவு பேருக்கு சாப்பாடு போடுவாள் என்பது துல்லியமாக என் நினைவுக்கு வரவில்லை. ஆனால் எங்கள் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களைவிட அதிகமான வெளியாட்கள் எங்களுடன் சாப்பிடுவார்கள் என்பதை என்னால் உறுதியகச் சொல்ல முடியும்." என்ற முன்னுரையோடு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாம் எழுதிய 'அக்கினிச் சிறகுகள்" தன் வரலாற்றை ஆரம்பிக்கிறார்.

தனது சொந்த முயற்சியால் பல்கலையும் கற்று இன்று இந்திய நாட்டின் முதல் குடிமகனாக கலாம் உயர்ந்து இருக்கிறார். அவர் ஒரு நாடறிந்த அறிவியலாளர். அமெரிக்க சனாதிபதி இந்தியா சென்றிருந்தபோது அவர் காண விரும்பிய ஒரே மனிதர் அப்துல் கலாம்தான். காரணம் அவர்தான் இந்திய அரசின் அணுக்குண்டு மற்றும் ஏவுகணை தயாரிப்பின் முதன்மை அறிவியல்வாதி. ஒலியின் வேகத்தைவிட 12 மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடிய அக்கினி, ஆகாஷ் போன்ற ஏவுகணைத் திட்டத்தின் சூத்திரதாரியும் அவர்தான். அதற்காக 1990ம் ஆண்டு குடியரசுத் தினத்தில் பத்மவிபூஷணன் விருது கொடுத்து மேன்மைப் படுத்தப்பட்டார்.

மதத்தால் முஸ்லிம் ஆக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராக அப்துல் கலாம் வாழ்கிறார். ஆரம்பக் கல்வியை தமிழ்மொழி மூலம் படித்தவர். தமி;ழ்ச் சிறார்களின் கற்கைமொழி எப்போதும் தமிழாக இருக்கவேண்டும் என்பதை அடிக்கடி வற்புறுத்தி வருகிறார். திருக்குறளில் நல்ல தேர்ச்சியும் ஈடுபாடும் உள்ளவர். அன்று அவர் ஆற்றிய உரையின் போது இரண்டு திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

அப்துல் கலாம்தான் அடுத்த குடியரசுத் தலைவர் என முடிவாகிய பின்னர் அவரது பதவி ஏற்பு விழாவை ஒட்டிய ஒழுங்குகளைச் செய்ய அமைச்சர் ஒருவரை இந்திய மைய அரசு நியமித்திருந்தது.

அமைச்சர்: 'எந்த நாளில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? சோதிடத்தின்படி நாள் நட்சத்திரம் பார்த்து சுபநேரத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்?"

அப்துல் கலாம்: 'பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கிறது. காலத்துக்கும் நேரத்துக்கும் இந்த சுழற்சிதான் காரணம். என்னைப் பொறுத்தளவில் எல்லா நாளும் நல்ல நாட்களே! எல்லா நேரமும் நல்ல நேரமே! எந்த நாளும் நேரமும் உங்களுக்கு வசதியோ அன்று பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம்" என்று பதில் அளித்தார்.

சனாதிபதி அப்துல் கலாம் அவர்களது அறிவுபூர்வமான பதிலுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் அவர் ஒரு அறிவியல்வாதி. இரண்டு அவர் ஒரு முஸ்லிம். இந்து மதம்போல் அல்லாது இஸ்லாமிய மதத்தில் நாள், கோள், நட்சத்திரம் போன்றவற்றுக்கு இடம் இல்லை. புராணக் கதைகளுக்கோ, புனைந்துரைகளுக்கோ, அர்ச்சனை அபிசேகத்துக்கோ, உருவ வழிபாட்டுக்கோ இடமில்லை.

சனாதிபதி அப்துல் கலாம் கொடுத்த பதிலைக் கேட்டு அரங்கு கையொலி எழுப்பி ஆரவாரித்தது. அந்தக் கையொலியின் சத்தத்தை வைத்துப் பார்த்தால் அங்கு வந்திருந்தவர்களில் குறைந்தது 90 விழுக்காட்டினர் நாளும் கோளும் பார்க்காத பகுத்தறிவுவாதிகள் என்று நினைக்கத் தோன்றும்! ஆனால் திரும்பி வரும் வழியில் Bridgewater என்ற இடத்தில் நல்ல அமைதியான சூழலில் கலையழகோடு கட்டியிருந்த ஸ்ரீ வெங்கடேசுவரர் ஆலயத்தையும் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனபோது நான் கண்ட காட்சி எனக்கு ஒரே வியப்பாக இருந்தது.

முதல்நாள் கைதட்டிய பலர் அங்கிருந்த நவக்கிரகங்களை சுற்றிக் கொண்டு இருந்தார்கள்!

நான் நினைக்கிறேன். இந்திய நாட்டின் வரலாற்றில் நாள் நட்சத்திரம் பாராது சனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டவர் அப்துல் கலாம் ஒருவர்தான். அவர் ஆழ்ந்த இறைபக்தி உடையவராக இருந்தாலும் காலம் நேரம் என்று வரும்போது அவர் ஒரு அறிவியல்வாதி என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்!

அண்மையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த சனாதிபதி அப்துல்கலாம் சென்னை மயிலாப்ப+ரில் உள்ள இராமகிருஷ்:ண மடத்து ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேடையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. மாணவர்கள் மேடையில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். சனாதிபதி உள்ளே நுழைந்ததும் மேடைக்கு செல்லாமல் நேராக மாணவர்கள் அருகிலேயே சென்று, அவர்களுடன் அன்பாக பெயர் விசாரிக்கத் தொடங்கினார். உடனே எல்லா மாணவர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். பத்திரிகை படப்பிடிப்பாளர்கள், தொலைக் காட்சி படப்பிடிப்பாளர்கள் அவரை நெருங்கிப் படம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாவலர்கள் சனாதிபதியிடம் மேடைக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். அதன் பிறகே அவர் மேடைக்கு சென்றார்

மீண்டும் மாணவர்கள் மேடையில் இருந்து சிறிது தூரம் தள்ளிப் போய் அமர்ந்தனர். இதைப்பார்த்த சனாதிபதி அவர்கள் அனைவரையும் மேடைக்கு அருகிலேயே வந்து அமரும்படி சொன்னார். உடனே அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி மேடைக்கு அருகில் போய் அமர்ந்தனர்.

பிறகு ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்கள் மத்தியில் பேசினார். ''உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து"" என்ற திருக்குறளை முதலில் சொல்லி மாணவர்களிடம் திரும்ப சொல்லச் சொன்னார். அவர்களும் ஒரே குரலில் திரும்பச் சொன்னார்கள். யாராவது ஒருவர் அதற்கு பொருள் சொல்லுங்கள் என்று கலாம் கேட்டார். ஒரு மாணவர் எழுந்து 'உயர்வான எண்ணத்தையே எண்ண வேண்டும். அது கூடாவிட்டாலும் எண்ணுவதைக் கைவிடக் கூடாது" என்று பதில் சொன்னார்.

'நமக்கு உயர்வான எண்ணம் இருக்க வேண்டும் நம்முடைய இலட்சியத்தில் வெற்றி பெற உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியும் அதிகம் கிடைக்கும். நீங்கள் எல்லாம் பத்தாம் வகுப்பு வரை இங்கு படிக்கிறீர்கள். படித்து முடித்த பிறகு என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று 'நான் மருத்துவராக வர விரும்புகிறேன், பொறியியலாளராக வர விரும்புகிறேன், ஐ.பி.எஸ் அதிகாரியாக வர ஆசைப்படுகிறேன்" என ஆளுக்கொரு பதில் சொன்னார்கள். இன்னொரு துடிப்பான மாணவர் எழுந்து 'நான் உங்களைப்போல விஞ்ஞானி ஆவேன்" என்றார். அப்போது தான் கலாமுக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? என்று ஆர்வத்துடன் கேட்க, மாணவர்கள் கடினமான உழைப்பு (hard work) வேண்டும் என்றனர்.

'அப்படி டாக்டர் ஆக, என்ஜினீயர் ஆக, விஞ்ஞானி ஆக வேண்டும் என்றால் உங்களுக்கு அப்படி ஆக வேண்டும் என்ற இலட்சியம் முதலில் தேவை. இரண்டாவதாக நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்க வேண்டும். மூன்றாவதாக தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாது. தோல்வியை விரட்டியடிக்க வேண்டும். இடும்பைக்கு இடும்பை கொடுக்க வேண்டும். அப்படியென்றால் துன்பத்திற்கு துன்பம் கொடுக்க வேண்டும். நீங்கள் எல்லாம் இறைவனின் மக்கள். நான் சொல்வதை அப்படியே திரும்ப சொல்லுங்கள். இறைவனின் மக்கள் நாங்கள், வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோர் வெல்வோம், சாதிப்போம். வேதனை துடைத்து எறிவோம். எந்தை அருளால் எதுவும் எம் வசமாகும். (இதை மாணவர்கள் அப்படியே திருப்பிச் சொன்னார்கள்) அடுத்து சனாதிபதி கலாம் மாணவர்களைப் பார்த்து கேள்வி கேட்டார்.

சனாதிபதி கலாம்: ப+மியின் முதல் விஞ்ஞானி யார்? சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவன்: இறைவன்!

சனாதிபதி கலாம்: உனக்கு 10 மதிப்பெண்தான் கொடுக்க முடியும்.

இன்னொரு மாணவன்: முதல் விஞ்ஞானி குழந்தை!

சனாதிபதி கலாம்: உனக்கு 100 மதிப்பெண்! ஏன் அப்படி? அதைச் சொல்லாமல் விடமாட்டேன்!

மாணவன்: குழந்தைதான் தனது அம்மாவிடம் நிறையக் கேள்வி கேட்கும்!

சனாதிபதி கலாம்: குழந்தைகள் 3 வயதில் இருந்து கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். அறிவியல் என்றால் என்ன? என்று கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் விடை கிடைக்கும். மின்சாரம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்டதால்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்தது. ப+மி சுற்றுவதால்தான் இரவும், பகலும் வருகிறது. ப+மி சூரியனை சுற்றுவதற்கு ஒரு வருடம் ஆகிறது. நான் 71 தடவை சுற்றி முடித்து இருக்கிறேன். இப்போது 72-வது தடவை சுற்றுகிறேன். அப்படி என்றால் என் வயது என்ன?

மாணவர்கள்: 72 வயது!

சனாதிபதி கலாம்: 71 முடிந்து 72-வது வயது நடக்கிறது. சூரியன் பாலுலகம் எனப்படும் galaxy யை ஒருதடவை சுற்றுவதற்கு 250 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. ப+மி, சூரியன் என எல்லாம் சுற்றும்போது நாம் ஏன் சுற்றக்கூடாது? மனிதன் மட்டும் ஏன் ஓய்வு எடுக்க வேண்டும்? வாழ்க்கையில் வெற்றிபெற உழைக்க வேண்டும். நான் சிறுவனாக இருந்த போது இரண்டு விடயங்களை படித்தேன். எனது ஆசிரியர் அய்யாத்துரைசாமி எண்ணெய் ஊற்றுவதால் விளக்கு எரியும். மனிதன் இறைவன் இல்லாமல் வாழ முடியாது என்று ராமகிருஷ்:ண பரமஹம்சர் கூறிய கருத்தை சொல்வார். நான் 8வது படிக்கும்போது அதை கேட்டேன். இன்னொரு ஆசிரியர் ராமகிருஷ:ணய்யர் எங்களை அடிப்பார். ஆனால் அன்பாகவும் இருப்பார் (உங்களை ஆசிரியர்கள் அடிப்பார்களா? என்று கேள்வியும் கேட்டு சிரிக்க வைத்தார்.) அவர் சுவாமி விவேகானந்தர் சொன்ன ஒளி பற்றி கூறினார். அதையெல்லாம் நான் கேட்டு பயன்பெற்றுள்ளேன்.

இனி நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்; (இதைத்தொடர்ந்து மாணவர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். அதற்கு ஜனாதிபதி கலாம் பதில் அளித்தார்)

கேள்வி: மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இதில் நீங்கள் வெற்றிபெற யார் பங்கு அதிகம்?

பதில்: குருதான். எனக்கு அருமையான தந்தை, அருமையான தாய் என் முன்னேற்றத்தில் அவர்களுக்கு பங்கு உண்டு. ஆனால் என் கல்விக்கு முதல் வழிகாட்டி எனது 5-வது வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம்தான். அவர்தான் அறிவு விளக்கு ஏற்றி வைத்தார். எனவே, அவரை என் வாழ் நாளில் மறக்க மாட்டேன்

கேள்வி: நீங்கள் இந்த அளவுக்கு உயர்வீர்கள் என்று இளமைப் பருவத்தில் எதிர்பார்த்தது உண்டா?

பதில்: எனது 5வது வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம் ஒரு தடவை பள்ளியில் பறவை எப்படிப் பறக்கும் என்று பாடம் நடத்தினார். வகுப்பில் மொத்தம் 40 மாணவர்கள் இருந்தோம். 40 நிமிடம் அவர் பாடம் நடத்தினார். பிறகு புரிந்ததா? என்று கேட்டார் நான் எழுந்து புரியவில்லை என்றேன் அதே போல 30 மாணவர்கள் புரியவில்லை என்றனர். பத்து மாணவர்கள் மட்டும் தெரிந்தவர்கள் போல உட்கார்ந்துகொண்டனர். உடனே ஆசிரியர், ரொம்ப சந்தோசம் நீங்கள் எல்லாம் உண்மையை சொன்னீர்கள். பறவை எப்படிப் பறக்கும் என்று இன்று மாலை உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். அதன்படி இராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பறவைகள் எல்லாம் பறப்பதை காட்டினார். இறக்கையை விரித்து அவை பறப்பதை பார்த்தபோது பறவை எப்படி பறக்கும் என்று எனக்கு 5 நிமிடத்தில் புரிந்தது. அந்தக் கணத்தில் நான் ஒரு முடிவு எடுத்தேன். அப்போது எனக்கு 10 வயது இருக்கும். விஞ்ஞானி ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தேன். physics (இயற்பியல்) படித்து Aero Nautical Engineering படித்து விஞ்ஞானி ஆனேன்.

மாணவர்களிடையே சனாதிபதி அப்துல் கலாம் ஒரு தமிழ் ஆசிரியரைப் போல முழுக்க முழுக்க தமிழிலேயே உரையாடி அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

நாங்கள் குழந்தைகள் கேள்வி கேட்டால் 'சும்மா இரு. கேள்வி கேட்காதே, எதிர்த்துப் பேசாதே, வாயை மூடிக்கொண்டிரு" என்று சொல்லித்தானே பெற்றோர்கள் அவர்களது வாயை அடைக்கிறார்கள்! அப்புறம் தமிழ்க் குழுந்தை ஒன்று ஒரு அறிவியல்வாதியாக எப்படி எப்போது வர முடியும்?

வாழ்க்கையில் உயர்வதற்கு உயர்ந்த எண்ணம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். தெளிவாகச் சிந்திக்கத் தெரிய வேண்டும். ஏன்? எப்படி? எதற்காக? எனக் கேள்வி கேட்கத் தெரிய வேண்டும்.

இது தெரியாத மூடர்கள் மந்திர தந்திரங்களால்: பூசை புனர்க்காரங்களால், அர்ச்சனை அபிசேகங்களால், தேர் தீர்த்தங்களால், தெட்சனை காப்புக்களால் இறை அருள்பெற்று வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் என்று நினைத்து கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார்கள்!

பூமியில் எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் அது எப்படி 792 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வாயுக் கோளமான சனியின் கெட்ட பார்வையை அல்லது தோசத்தை நீக்க முடியும்? அதென்ன உயிருள்ள பொருளா? ஆறறிவு படைத்த மனிதர்கள் இவற்றை இட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இன்று மூட நம்பிக்கைகள், முட்டாள்த்தனமான பழக்க வழக்கங்களால் பாழ்பட்டுப் போகும் தமிழ் சமூகத்திற்கு அவசர அவசியமாகத் தேவைப்படுவது அறிவியல் கல்வி. எத்தனை காலத்துக்குத்தான் முத்தமிழின் பெருமையை முழங்கிக் கொண்ருப்பது? நான்காவது தமிழாக அறிவியலைச் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ்மொழி மட்டுமல்ல தமிழ் இனமும் ஏனைய சமூகங்களோடு சரிநிகர் சமானமாக தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

தொடர்ந்து விட்ட இடத்தில் இருந்து எழுதுமுன் ஒரு சிலர் தேவ கணம், மனித கணம், ராட்ஸச கணம் என்றால் என்ன? நாங்கள் எல்லோரும் மனித கணம்தானே? பின் எப்படி தேவ கணமாகவோ இராட்ஸச கணமாகவோ இருக்க முடியும் என்று கேள்விகள் கேட்டு எழுதியுள்ளார்கள்.

முதலில் சோதிடம் என்பது ஒவ்வொருவரது மனதில் குடி கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை மட்டுமே என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை காரண காரியம் கொண்டு மறுக்க முடியாது.

இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி படித்தேன். புண்ணிய பூமி, புனித கங்கைகள், வானுயர்ந்த கோயில்கள், மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்வதாகக் கூறப்படும் இந்தியாவில் ஒரு மணித்துளிக்கு ஒருவர் காச (tuberculosis) நோயால் இறந்து கொண்டிருக்கிறார். இதேபோல் உலகத்தில் தொழுநோயால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் பாதிப் பேர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். பார்வை தெரியாதவர்கள் எண்ணிக்கையும் அப்படித்தான்.

இதற்குக் காரணம் என்ன? நாளும் கோளுமா? விதியா? அல்லது இந்தியாவில் நிலவும் வறுமை, ஏழ்மை, சூழல் சீர்கேடு, சத்துணவு இல்லாமை, நல்ல குடிதண்ணீர் பற்றாக்குறை போன்றவையா?

இங்குள்ள ஆலயங்கள் பக்தர்களை வானொலியில் தொலைக்காட்சியில் வருந்தி வருந்தி அழைக்கின்றன. ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் அம்பாள் வேண்டு மட்டும் அருள்பாலிப்பாள் என்கிறார்கள். இரண்டு கைகளால் முருகனுக்கு அள்ளிக் கொடுத்தால் முருகன் பன்னிரு கைகளால் திருப்பித் தருவான் என்கிறார்கள்.

தெரியாமல் கேட்கிறேன். தமிழீழத்தில் பக்தர்கள் செய்த அர்ச்சனை அபிசேகம் தேர்த் திருவிழா குடமுழுக்கு கொஞ்ச நஞ்சமா? வாரியாருக்குக் கொடுத்த பீசில் கஞ்சத்தனம் செய்தோமா? எதில் குறை வைத்தார்கள்? அவை என்னவாயிற்று? அங்கு நடக்காத அற்புதம் இங்கு மட்டும் நடந்து விடுமா?

தேவ கணம், மனித கணம், இராட்ஸச கணம் பற்றிய கேள்விக்கு விடை காண்பதற்கு வேதகாலத்துக்கு நாம் திரும்பிப் போக வேண்டும்.

நன்றி: தமிழ் நாதம்

Print this item