Yarl Forum
கடவுள் பயங்கரவாதியா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கடவுள் பயங்கரவாதியா? (/showthread.php?tid=4191)



கடவுள் பயங்கரவாதியா? - adithadi - 05-29-2005

800 கடாக்கள்வரை பலியிடப்பட்டன. கவுனாவத்தை ஆலயத்தில் நேற்று வேள்விப்பொங்கலில் அடியார்கள் திரண்டன்ர் என்று உதயன் பத்திரிகையில் படித்தேன்.

நாம் 21ம் றூற்றாடின்ல் வாழ்கிறோமா ? அல்லது கற்காலத்தில் வாழ்கிறோமா?
ஒரு உயிரை கொன்று ஆண்டவுனுக்கு காணிக்கை கொடுப்பதின் மூலம் கடவுள் இன்பம் அடைகின்றாரா? அப்படியாயின் அக் கடவுள் பயங்கரவாதியே !


- hari - 05-29-2005

கடவுள் பயங்கரவாதியில்லை, அவரின் பெயரை சொல்லி சுத்துமாத்து செய்கிறவங்கள் தான் பயங்கரவாதி!


- hari - 05-29-2005

பெரியார் சொன்னதை கேட்கமாட்டார்கள், பாரதியார் சொன்னதை கேட்கமாட்டார்கள், ஆனால் ஒரு போலி சாமியார் சொன்னால் கேட்பினம் :evil:


- vasisutha - 05-29-2005

கடவுள் இல்லை என்று சொல்கிறவனையும் நம்பலாம்
கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனையும் நம்பலாம்
ஆனால்.. நான் தான் கடவுள் என்று சொல்கிறானே அவனை
நம்பக்கூடாது..


- MUGATHTHAR - 05-29-2005

Quote: பெரியார் சொன்னதை கேட்கமாட்டார்கள், பாரதியார் சொன்னதை கேட்கமாட்டார்கள், ஆனால் ஒரு போலி சாமியார் சொன்னால் கேட்பினம்



தம்பி பெரியாரும் பாரதியாரும் என்னத்தை குடுப்பினம் ஆனா போலிச்சாமியார் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை கொடுக்கிறாரே... பெண்டுகள் கூட்டம் அலை மோதாமல் என்ன செய்யும்


- Vaanampaadi - 05-29-2005

கடவுளும் ஒருவிதத்தில் பயங்கரவாதிதான்.... இல்லையெனில் அவன் உனது உயிரை பறிப்பானா?


Re: கடவுள் பயங்கரவாதியா? - Vaanampaadi - 05-30-2005

Quote:800 கடாக்கள்வரை பலியிடப்பட்டன. கவுனாவத்தை ஆலயத்தில் நேற்று வேள்விப்பொங்கலில் அடியார்கள் திரண்டன்ர் என்று உதயன் பத்திரிகையில் படித்தேன்.
ஹலோ அதிரடி
அதுசரி சுமார் 800 ஆடுகள் பற்றி பேசுகிறீர்கள்..... நல்லது...நன்றி... வரவேற்கிறேன் ஆனால் அந்த 100ற்கு மேற்பட்ட கோழிகளின் உயிர்கள் உங்களுக்கு உயிராக தெரியவில்லையா......?


- sOliyAn - 05-30-2005

தற்போதைய சைவம் புலால் உண்ணவேண்டாம் என்று கூறுகிறது.. ஆனால் ஆதி சைவத்தில் பலிகள் உண்டென அறிகிறேன்.
இதேபோல, வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலும் பலி பற்றி கூறப்படுகிறது.
ஆதியில் மனிதன் வேட்டையாடி உணவைத் தேடும்போது.. கடவுளுக்கு பலியிடும் முறை தோன்றியிருக்கலாம்.
'உலகத்திலுள்ளவை மனிதனுக்காக தேவனால் படைக்கப்பட்டவை' என வேதாகமம் கூறுகிறது. ஆனால்.. ஆதி சைவம் என்ன கூறுகிறது என்பதை விபரம் தெரிந்தவர்கள்தான் கூறவேண்டும்.


- hari - 05-30-2005

தவறுதலாக இருதடவை பதிவானது நீக்கப்பட்டுள்ளது!


- hari - 05-30-2005

<b> நண்பர் குருவி அவர்கள் ஆனி 22, 2003 அன்று எழுதிய கருத்து தேவை கருதி மீள்பிரசுரம்!</b>

செய்திகள்...
கீரிமலைப் பகுதியில் 800 ஆட்டுக்காடாக்கள் கோவில் திருவிழாவொன்றில் பலியிடப்பட்டன.

கோஷ்டி மோதல்களால் வீடுகள் பாலர் பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் சேதம் அத்துடன் வீதியில் செல்லும் யுவதிகள் மீது 'சேட்டைகள்' வீதி மோதல்கள் அதனால் வயோதிபர்களும் மற்றும் பொது மக்களூம் பாதிப்பு.

செய்திகள் உதயன்.

இதே செய்திகளோடு சிறிலங்கா இராணுவ பொலிஸ் ஆக்கிரமிப்புக்கு முன்னிருந்த யாழ்ப்பாண நிலைமைகளையும் ஒப்பிட்டால் செல் அடிகளும் பொம்பர் அடிகளும் தூசாகத்தான் தெரிகிறது!
இவ்வளவு உயிர் தியாகங்களின் பின்னும் கல்வி அறிவு உயர்ந்த யாழ்ப்பாண சமூகம் இப்படி மூட நம்பிக்கைகளிலும் சமூகப் பொறுப்பற்ற செயல்களிலும்தன்னை இடுபடுத்திக் கொள்வது மன்னிக்க முடியாத குற்றங்கள். இவற்றை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்! எமது மக்களிற்கு தென் பகுதி ,மேற்கத்தைய அநாகரிகங்கள் தேவையில்லை! அவை எமது சமூகத்தை சீரழிக்குமே ந்றி சீர்படுத்தாது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகவே காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து இச் சமூகச் சீரழிவுக்கான காரணிகளை அடியோடு ஒழிக்க வேண்டும்!

தேசம் விடுதலைக்காககவும் சமூக உயர்வுக்காகவும் தம்முயிரை துச்சமென மதித்து அளப்பரிய தியாகங்கள் செய்த தியாகிகள் வாழ்ந்த மண்ணில் அந்நியப் பாதுகாப்பில் சமூகச் சீரழிவென்றால் அதற்கு மக்களின் தெளிவற்ற சிந்தனைகளூம்சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளுமே காராணங்களாகும். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக சமூகமும் பாடசாலைச் சமூகமும் இது தொடர்பில் மக்களையும் இளைஞர்களையும் விழிபுணர்வுடன் செயற்பட வழிகாட்ட வேண்டும்!

இல்லையேல் ஆயிரமாயிரம் உயிர்களின் அளப்பரிய தியாகங்களால் நமது சமூகம் கண்டது பூச்சியமாகவே அமையும்!
:evil: Idea :evil:


- sinnappu - 05-30-2005

இருக்கட்டும் பிள்ளையள் எங்கையப்புமார் இருக்கு உந்த கவுனாவத்தை
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

(இல்லை போய் இருந்தா நல்ல ஆட்டுக்கறியோடை நல்ல மெனு கிடைச்சிருக்கும் )
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குறுக்காலை போவார் 800 ஆடோ எட கிலோ இங்கை 9 பிராங்
இல்லை அடிச்ச ஆடுவளை திண்டவங்களோ இல்லை தாட்டிட்டாங்களோ
அங்க சனங்கள் சாப்பாட்டுக்கு படுற பாடு ம்ம் நடத்துங்கோ

கோஷ்டி மோதல்களால் வீடுகள் பாலர் பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் சேதம் அத்துடன் வீதியில் செல்லும் யுவதிகள் மீது 'சேட்டைகள்' வீதி மோதல்கள் அதனால் வயோதிபர்களும் மற்றும் பொது மக்களூம் பாதிப்பு.

ம் உதுக்கு ஒரு வளி தானப்பு இருக்கு நாய்க்கு செய்யிறது போல ந...ம் எடுத்தா சரி
நாய்க்கூட்டம் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


Re: கடவுள் பயங்கரவாதியா? - sinnappu - 05-30-2005

Vaanampaadi Wrote:
Quote:800 கடாக்கள்வரை பலியிடப்பட்டன. கவுனாவத்தை ஆலயத்தில் நேற்று வேள்விப்பொங்கலில் அடியார்கள் திரண்டன்ர் என்று உதயன் பத்திரிகையில் படித்தேன்.
ஹலோ அதிரடி
அதுசரி சுமார் 800 ஆடுகள் பற்றி பேசுகிறீர்கள்..... நல்லது...நன்றி... வரவேற்கிறேன் ஆனால் அந்த 100ற்கு மேற்பட்ட கோழிகளின் உயிர்கள் உங்களுக்கு உயிராக தெரியவில்லையா......?

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
யோவ் பாடி ளொள்ளா இப்ப இங்க ஆடு கோழி பிரச்சனையா நடக்கிது
வெட்டிற நாயளைப்பற்றி கதைக்கிறம்
ஓகே
:evil: :evil: :evil: :evil: :evil:


- kuruvikal - 05-30-2005

கடவுள் என்ற ஒன்று வந்து இப்படி உயிர்களைப் பலியிடு என்று சொல்லேல்ல..ஆனா மனிதன் அனைத்துமுண்ணி...அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கான் இயற்கையில்.. அதற்காக தாவரபோசணியா இருந்தா உயிர் வாழமாட்டான் என்றில்லை...அப்படி இருந்தால் மற்ற உயிர்கள் பாதுகாக்கப்படும் தான்... என்றாலும் உணவுத் தேவைக்கு அதிகமாக மற்ற உயிர்களைப் பலியிடுதல் கண்டிக்கத்தக்கது... அது இயற்கையில் உயிரினச் சமனிலையைப் பாதிக்கும்...! மனிதன் தன் வக்கிரங்களைத் தீர்க்க கடவுள் என்றதை கருவியாக்கிறான் அவ்வளவும் தான்...! உண்மையில் பயங்கரவாதிகள் மனிதம் இழந்த மனிதர்களே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 05-30-2005

கடவுளையும் வழிபாட்டு முறைகளையும் உருவாக்கியது மனிதன் தான், அக அந்த முறைகளில் ஏதும் தவறுகள் இருந்து கடவுள் பயஙகரவாதி போல் தோன்றினால் அதற்கு காரணம் உருவாக்கிய மனிதனே.


- adithadi - 05-30-2005

kuruvikal Wrote:கடவுள் என்ற ஒன்று வந்து இப்படி உயிர்களைப் பலியிடு என்று சொல்லேல்ல..ஆனா மனிதன் அனைத்துமுண்ணி...அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கான் இயற்கையில்.. அதற்காக தாவரபோசணியா இருந்தா உயிர் வாழமாட்டான் என்றில்லை...அப்படி இருந்தால் மற்ற உயிர்கள் பாதுகாக்கப்படும் தான்... என்றாலும் உணவுத் தேவைக்கு அதிகமாக மற்ற உயிர்களைப் பலியிடுதல் கண்டிக்கத்தக்கது... அது இயற்கையில் உயிரினச் சமனிலையைப் பாதிக்கும்...! மனிதன் தன் வக்கிரங்களைத் தீர்க்க கடவுள் என்றதை கருவியாக்கிறான் அவ்வளவும் தான்...! உண்மையில் பயங்கரவாதிகள் மனிதம் இழந்த மனிதர்களே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அருமையான கருத்து, கடவுளின் பெயரால், புனிதமான ஆலயத்தில், வேள்வி என்ற பெயரில் கசாப்புகடை நடத்தும் மானிடர்களுக்கு அபராதம் கொடுக்க வேண்டும்.