| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 568 online users. » 0 Member(s) | 565 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,445
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,289
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,681
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,266
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,531
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,759
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| சினிமாவில் புகை பிடிக்க தடை |
|
Posted by: Mathan - 06-02-2005, 01:15 PM - Forum: சினிமா
- Replies (13)
|
 |
சினிமாவில் புகை பிடிக்க தடை
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41205000/jpg/_41205719_indi.jpg' border='0' alt='user posted image'>
புகைத்தல் தொடர்பான நோய்களினால் வருடத்துக்கு 8000 இந்தியர்கள் இறக்கின்றனர்
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிக்கு இந்திய அரசு கொண்டுவந்துள்ள தடையை திரையுலகினர் எதிர்த்துள்ளனர்
இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சியைக் காட்டுவதாக வரும் காட்சிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து இந்தத் தடை அமலுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
புகை பிடிப்பதாக வரும் காட்சிகளை காட்டுவதை தவிர்ப்பதன் மூலம், புகை பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க முடியும் எனவும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவில் ஆண்டு தோறும் எட்டு இலட்சம் இந்தியர்கள் புகை பிடிக்கும் வழக்கத்தால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் சூழ்நிலையில் இந்தத் தடை சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு கூறுகிறது.
இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் இந்தத் தடையை கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
பழைய படங்களில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றால், அதில் எச்சரிக்கையும் குறிப்பிடப்பட வேண்டும்
இந்தத் தடை திரைப்படக் கலைஞர்களின் படைப்புரிமையை பாதிப்பதாகவும் இது போன்ற சட்டங்கள் மட்டுமே புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்காது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த சட்டம் குறித்து கருத்து வெளியிட்ட, இந்த் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜனநாதன், திரைப்படங்களின் மூலமாக புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுவதை மறுத்தார்.
இது போல் சட்டங்களை இயற்றுவதை விட திரைப்படத்துறையினரிடையே பிரச்சாரங்கள் மேற்கொள்வதன் மூலம் இது போன்ற காட்சிகளைத் தவிர்க்கலாம் எனவும் ஜனநாதன் கூறினார்.
BBC தமிழ்
|
|
|
| ஒரு வேவுக் போராளியின் உண்மைக் கதை. |
|
Posted by: hari - 06-02-2005, 06:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
ஒரு வேவுக் போராளியின் உண்மைக் கதை.
<img src='http://www.pathivu.com/content/varalaru/doc/pathivukal/image/ct.malaravan.gif' border='0' alt='user posted image'>
ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.
அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில், பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி.
நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் எதிரியின் முன்னணித் தடை வேலியை நெருங்கிவிட்டனர். நீண்டதொரு இரகசிய நகர்வை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியில் அவர்கள் இருந்தனர். ஆனால், இன்னுங்கூட அபாயம் நீங்கவில்லை. அப்போது எதிரியால் அவதானிக்கப்பட்டால், அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்படலாம். காவலரண்களின் முன்னாற் சில பத்து மீற்றரில் அவர்கள் நிலத்துடன் நிலமாகக் கிடக்க, அவர்களை வழிகாட்டி அழைத்துவந்த போராளி கைகளில் முட்கம்பி வேலித்தடையை அகற்றும் கருவியுடன் முன்னேறினான்.
சண்டை தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. முதலாவதாக இருந்த கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இரண்டாவது தடைக்கு அவன் „ டோப்பிட்டோ “ குண்டை பொருத்த, மறுமுனைகளிற் சண்டை தொடங்குகின்றது. அங்கே பொருத்திய “ டோப்பிட்டோ “ வெடிக்குமென எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க, அந்தக் குண்டு வெடிக்காமலே போய்விட்டது.
துப்பாக்கிகள் சடசடக்க, எதிரி வானில் ஏவிய “ பரா “ வெளிச்சக் குண்டுகள் இரவைப் பகலாக்கி வானில் ஒளிவீச, அங்கே எமது அணியினர் தமக்குரிய பாதைத் தடையைத் தகர்க்க முடியாமல் இருப்பதை எதிரி கண்டுகொண்டான். தனது சூட்டு வலுவை இப்போது அந்த அணியினர் மீது எதிரி மையங்கொள்ள வைத்தான்.
நிலமை மோசமாகிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையவேண்டிய அந்த அணி வழியிலேயே எதிரியின் சூட்டிற்கு இலக்காகிப் போராளிகளை ஒவ்வொருவராய் இழந்துகொண்டிந்தது. மீண்டும் அந்தத் தடையைத் தகர்க்க அவ்விடத்தில் கைவசம் மேலதிக "டோப்பிட்டோ " வோ,
பின்னாலிருந்து வரவழைக்க அவகாசமோ இருக்கவில்லை. இந்த இக்கட்டான நிலையில் எல்லோரும் தவிப்புடன் பார்த்திருக்க, கைவசம் இருந்த ஒரேயொரு கம்பிவெட்டும் " கட்டரு " டன் எழுந்தான்., அந்த அணிக்கு வழிகாட்டி முன்னே நகர்ந்து கொண்டிருந்த லெப்டினன்ட் மலரவன்.
துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டு உடலிலிருந்து குருதி வழிய வழிய, தள்ளாடியபடி எதிரியின் தடைக்கம்பி வேலியை நெருங்கியவன், ஒவ்வொரு கம்பியாய் வெட்டத்தொடங்கினான். எதிரியின் துப்பாக்கிகள் அவன் ஒருவனையே குறிவைத்தன. அந்தச் சொற்ப நேரத்தினுள்ளேயே தடையை வெட்டி அகற்றிவிடவேண்டும் என்ற உறுதியுடன் தடைக்கம்பிகளை வெட்டி அகற்றியவாறு அந்தக் கம்பிகளின் மீதே சரிகின்றான் மலரவன். இறுதிக் கம்பி மட்டும் இன்னும் வெட்டப்படாமல் இருந்தது. ஆயினும் பாதை ஏற்பட்டுவி;ட்டது.
அவன் ஏற்படுத்திக் கொடுத்த பாதையின் ஊடாக அணிகள் உள்ளே பாய்கின்றன.அவனது தோழர்கள் அவனைக் கடந்து எதிரியின் அரண்களை நோக்கி ஓடும் போது எஞ்சிய உயிர்த் துளியில் அவனது நாவு உச்சரித்தவை இவைதான்.
" மச்சான்! ஒன்றையும் விடமாற் பிடியுங்கோ "
அன்றைய அந்த அணியின் சண்டையின் முடிவை மாற்றியமைத்தவன் அந்தப் போராளி. எதிரியின் சூட்டிற்கு ஒவ்வொருத்தராய் வீழ்ந்துகொண்டிருந்த நிலையை மாற்றியது அவனது முடிவுதான்.
தன் உயிர்கொண்டு அவன் தடையகற்ற துணிந்தமையால் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்திக் கொண்டு முன்னேறியது அவனது அணி. அன்றைய சண்டையில் அவர்கள் ஏராளம் இராணுவத்தினரை கொன்றொழித்தனர். பலம் வாயந்த எதிரியின் பிரதான முகாமை ஊடுருவி அவனது பல ஆயுதங்கள் உள்ளிட்ட ஆட்லறித் தளத்தை அவர்கள் அழித்தனர். அத்தனையும் அன்று சாத்தியமாக்கியது தடையகற்றித் தன் சாவைச் சரித்திரமாக்கிவிட்ட அந்தப் போராளியின் இறுதி நேர முடிவே.
எமது விடுதலை வரலாற்றுப்பற்றித் தலைவர் அவர்கள் கூறுவது போல் „ ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் “ தானும் ஒருவனாய் சங்கமித்துப்போன இவனதும் சரித்திர நாயகர்களினதும் தியாகங்களே இன்றும் எம் விடுதலை நதியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கின்றன.
நன்றி :பதிவு
|
|
|
| முத்தலிப் கொலை, ஒருவாரத்துக்கு முன் எதிர்வு கூறிய பரபரப்பு |
|
Posted by: vasisutha - 06-02-2005, 05:03 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (15)
|
 |
<b>முத்தலிப் படுகொலை ஒருவாரத்துக்கு முன்னர் எதிர்வு கூறிய பரபரப்பு வார இதழ்</b>
<b>நன்றி : தமிழ்நாதம்</b>
<img src='http://img152.echo.cx/img152/3331/part49bk.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img152.echo.cx/img152/5273/part54fo.jpg' border='0' alt='user posted image'>
<b>part 1</b>
....................
<img src='http://img152.echo.cx/img152/241/part19fy.jpg' border='0' alt='user posted image'>
<b>part 2</b>
.....................
<img src='http://img74.echo.cx/img74/1449/part27jo.jpg' border='0' alt='user posted image'>
<b>part 3</b>
<img src='http://img74.echo.cx/img74/8900/part2a4sk.jpg' border='0' alt='user posted image'>
<b>part 4</b>
.................
<img src='http://img152.echo.cx/img152/3486/part37ug.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| இந்தியப் பிரதமர் யார்? |
|
Posted by: parisian - 06-02-2005, 12:06 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
இந்தியப் பிரதமர் யார்?
மே 20ந் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனின் பேட்டி ஒன்று தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் போய்க் கொண்டிருந்தது. தமிழைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். தமிழனைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார். இப்படி தமிழையும் தமிழனையும் பெருமையாகச் சொன்னபடி, "நான் அவருக்கு அப்படிச் சொன்னேன் இவருக்கு இப்படிச் சொன்னேன்" என்று அடிக்கடி ஆங்கிலத்தில் அள்ளி அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.
இப்படி எனக்கு எல்லாமே அத்துப்படி என்கிற வகையில் அவரது பேட்டி போய்க் கொண்டிருந்தது. பேட்டியின் நடுவே இந்தியாவைப் பற்றி பேச்சு வந்தபோது பாவம் இலங்கைப் பாராளமன்ற உறுப்பினர் ஈழவேந்தனுக்கு இந்தியப் பிரதமர் யார் என்று தெரிந்திருக்கவில்லை. "இந்தியப் பிரதமர் யார்.. நரசிம்மராவ்..இல்லை.. " என்று அவர் தடுமாறியபோது பேட்டி கண்டவர் சொல்லிக் கொடுத்தார் அது மன்மோகன்சிங் என்று.
வெளிநாடுகளில் எங்களது பக்கத்து வீட்டுக்காரனைத் தெரியாமல்தான் இருக்கின்றோம். ஆனால் அயல் நாட்டு பிரதமரைத் தெரியாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கலாமோ?
அமெரிக்க அதிபர் புஸ் இந்தப் பேட்டியைக் கேட்டால் ரொம்பவே சந்தேசப்படப் போகிறார்.
http://apaththam.blogspot.com/2005/06/blog-post.html
|
|
|
| பிரிவுச் சோகம் |
|
Posted by: kuruvikal - 06-01-2005, 11:09 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (32)
|
 |
<b>எமது கள உறவு சோழியான் அண்ணாவின் தாயார் அவரையும் இவ்வுலகையும் விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற வருத்தம் மிக்க செய்தியை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்...!
அம்மையாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரின் பிரிவால் துயருறும் சோழியான் அண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்</b>
|
|
|
| குளக்கோட்டன் படை பிரிவு எச்சரிக்கை |
|
Posted by: hari - 06-01-2005, 06:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b> திருகோணமலையில் தமிழ் மக்களை பாதுகாக்க தற்கொலைத் தாக்குதல் - குளக்கோட்டன் படை பிரிவு எச்சரிக்கை </b>
(எஸ்.சசிக்குமார்)
திருமலை மாவட்டத்தில் யூன் 2ம் திகதி நள்ளிரவுக்கு பின் தமிழ் மக்கள் சிறிலங்கா படையினரால் தாக்குதலுக்குள்ளாகுமிடத்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தப் போவதாக குளக்கோட்டன் படைப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக குளக்கோட்டன் படைப் பிரிவு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அன்பான மக்களே! எதிர் வரும் 2ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பூரண கதவடைப்பு ஒன்று தமிழர்கள் ஏமாற்றப்பட்டதால் நடாத்தப்படவுள்ளதாக நாம் அறிகின்றோம். அந்த வேளையில் சிறிலங்கா கூலிப்படைகள் தமிழ் மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொள்ளவே பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.
எனவே மக்களை காக்கும் பொருட்டு எமது உயிர்களை அர்ப்பணித்து சில தற்கொலைத் தாக்குதல்களை நாம் நடாத்த எண்ணியுள்ளோம். எனவே இராணுவத்தினர் குவியலாக உள்ள இடங்களில் உள்ள மக்கள் சிரமத்தை பராது சற்று பின் நகர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காற்று நுழையாத இடத்திலும் நாம் நுழைவோம் என்பதை கூலிப் படைகளுக்கு கூறுகின்றோம். கார் மற்றும் மனித வெடி குண்டுத் தாக்குதலில் எமது மக்களுக்கு எதுவும் நடைபெறாத வண்ணம் நாம் நிச்சயமாக பார்த்துக்கொள்வோம். ஒன்றாக, ஐந்தாக உள்ள இராணுவத்தினர் மீது பிஸ்ரல் தாக்குதல் மட்டுமே நடத்தப்படும், வீதிகளில் திரிவதை தவிர்க்கவும் என குளக்கோட்டன் படைப் பிரிவு எச்சரித்துள்ளது.
நன்றி மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| மனிதம் எங்கே..?! |
|
Posted by: kuruvikal - 06-01-2005, 04:25 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (27)
|
 |
<img src='http://img81.echo.cx/img81/7271/safeingodsmall2rx.jpg' border='0' alt='user posted image'>
<b>மனிதம் நீ - மெலனியத்தில்
மரித்துவிட்டாயா - அன்றி
மரணப்படுக்கை இடப்பட்டாயா...??!
மனிதர் உள்ளம்
மரத்துப் போயிடிச்சே
மக்களாய் வாழ்ந்தோர்
மாக்களிலும் கேடாய்
மாற்றம் என்று
மறக்க வேண்டியதை நினைக்கின்றார்
மறக்காமல் முரண்டும் பிடிக்கின்றார்
மருந்துக்கும் பகுத்தறிவை
மறுக்கின்றார் பாவனையில்..!
மருளும் குமரன் குமரிகள்
மாண்பில் இருள்கின்றார்
மனிதம் தொலைத்து
மங்கியே தொலைந்து போகின்றார்..!
மற்றறொரு கூட்டம்
மதி மயங்கி பித்து நிலையில்
மறக்காமல் பாடுது பல்லவி
மனிதருக்குள் விடுதலையாம்
மனிதம் தந்த வாழ்வியல் அழித்து
மாக்களாய் வாழ வேண்டுமாம்
மந்தியாய் தாவ வேண்டுமாம் மனம்
மருட்சிக்குள் புரட்சி காண வேண்டுமாம்
மயக்கமில்லாத் தெளிவும் அதுவாம்
மந்திரம் போல் முழங்கித் தள்கிறார்
மாற்றம் தேடியோர் தெய்வம் அது என்று
மண்றாடித் தொழுகின்றார்
மனிதம்
மண் குழியில் சேர்ந்திட....
மனிதா நாளை உன் கதி
மகவும் ஏங்குகிறது தாய் வயிற்றில்...!</b>
|
|
|
| மெகா காமெடிச்செய்திகள்.. |
|
Posted by: Danklas - 06-01-2005, 02:58 PM - Forum: நகைச்சுவை
- Replies (15)
|
 |
[b]இங்கே உலகத்தை காப்பதற்கெண்டு இயேசு நாதர், அல்லா, சிவன், புத்தனால் ஆசிர்வசிக்கப்பட்டு உலகத்துக்கு அனுப்பப்பட்ட மகான்களின் பொன்னான வாயிலிருந்து உதிர்த்த தத்துவ முத்துக்களையும் சிந்திக்க வேண்டிய மாபெரும் நகைச்சுவைகளையும் இங்கே தருகிறேன்.. (முடிந்தால் நீங்களும் முன்வையுங்கள்)
* சூரியமூர்த்தியை கொலைசெய்தவர்கள் மனிதாபிமானத்தை கொன்றுவிட்டார்கள்... -- ஆ(ப்பு இழுத்த) சங்கரி--
* தான் ஒரு பீனிக்ஸ் பறவை என்பதை நிருபிக்கும் வகையில் தனது சாம்பலில் இருந்து ரிபிசி மீண்டும் உயிர்த்துள்ளது.. -- வீ(க்கினஸ்)இராமராஜ் --
* கொச்சியில் புலிகள் விமானத்தைக் கடத்த திட்டம்.. --இ(ழிச்ச)ந்திய மத்திய புலுனாய்வு துறை--
* வடக்கும் கிழக்கும் சிங்களவர்களின் தாயகப்பிரதேசங்கள் எனவே பொதுக்கட்டமைப்பை விடுத்து புலிகளை யுத்தத்தால் வெல்லவேண்டும்.. --அ(ரைலூசு)த்துரலிய தேரர் --
மகான்களின் காமெடிகள் தொடரும்.
|
|
|
|