![]() |
|
இந்தியப் பிரதமர் யார்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: இந்தியப் பிரதமர் யார்? (/showthread.php?tid=4173) |
இந்தியப் பிரதமர் யார்? - parisian - 06-02-2005 இந்தியப் பிரதமர் யார்? மே 20ந் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனின் பேட்டி ஒன்று தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் போய்க் கொண்டிருந்தது. தமிழைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். தமிழனைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார். இப்படி தமிழையும் தமிழனையும் பெருமையாகச் சொன்னபடி, "நான் அவருக்கு அப்படிச் சொன்னேன் இவருக்கு இப்படிச் சொன்னேன்" என்று அடிக்கடி ஆங்கிலத்தில் அள்ளி அள்ளி வீசிக்கொண்டிருந்தார். இப்படி எனக்கு எல்லாமே அத்துப்படி என்கிற வகையில் அவரது பேட்டி போய்க் கொண்டிருந்தது. பேட்டியின் நடுவே இந்தியாவைப் பற்றி பேச்சு வந்தபோது பாவம் இலங்கைப் பாராளமன்ற உறுப்பினர் ஈழவேந்தனுக்கு இந்தியப் பிரதமர் யார் என்று தெரிந்திருக்கவில்லை. "இந்தியப் பிரதமர் யார்.. நரசிம்மராவ்..இல்லை.. " என்று அவர் தடுமாறியபோது பேட்டி கண்டவர் சொல்லிக் கொடுத்தார் அது மன்மோகன்சிங் என்று. வெளிநாடுகளில் எங்களது பக்கத்து வீட்டுக்காரனைத் தெரியாமல்தான் இருக்கின்றோம். ஆனால் அயல் நாட்டு பிரதமரைத் தெரியாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கலாமோ? அமெரிக்க அதிபர் புஸ் இந்தப் பேட்டியைக் கேட்டால் ரொம்பவே சந்தேசப்படப் போகிறார். http://apaththam.blogspot.com/2005/06/blog-post.html |