| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 557 online users. » 0 Member(s) | 554 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,445
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,289
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,681
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,266
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,531
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,759
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| தங்க புதையல் ஆசை |
|
Posted by: hari - 06-04-2005, 06:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>தங்க புதையல் ஆசை காட்டி ரூ.2 ஆயிரம் மோசடி
நண்பர்- மந்திரவாதி கைது </b>
ஊத்துக்கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட வேலாக்கபுரத்தை சேர்ந்தவர் மணி என்ற சுப்பிரமணி (வயது 48 ). இதே பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் சுப்பிரமணி தனது நண்பர் வெங்கடேசனிடம் ஒரு இடத்தில் தங்க குண்டு புதையல் உள்ளது அதை எடுத்து விற்று அதில் வரும் பணத்தை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்வோம், ஆனால் புதையல் எடுப்பதற்கு சுமார் 20 ஆயிரம் வரை பணம் தேவைப்படும் என்று கூறியுள்ளார் உன்னிடம் இருந்தால் கொடு தங்க குண்டை விற்று எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். நண்பனின் பேச்சை நம்பிய வெங்கடேசன் பணம் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
இதற்கிடையில் மணி நாகலாபுரம், ஒட்லகுப்பத்தை சேர்ந்த மந்திரவாதி மோகன் (வயது 35) என்பவரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது என் நண்பனிடம் புதையல் இருப்பதாக கூறி 20 ஆயிரம் பணம் வாங்கிவிட்டேன் எனவே நீங்கள் புதையல் இருப்பதாக கூறி நம்பவையுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு சம்பந்தம் தெரிவித்த மந்திரவாதி வெங்கடேசனை அழைத்து பேசியுள்ளார். அப்போது புதையல் எடுக்க ப+ஜைகள் செய்ய வேண்டும், அதற்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டு மேலும் 3 ஆயிரம் வாங்கியுள்ளனர். பின்னர் தனது கோவிலில் இருந்து ஒரு பித்தளை சிலையை எடுத்து புதைத்து வைத்துவிட்டார். இரவு 1 மணிக்கு ப+ஜை போடவேண்டும். அப்போது யாரும் அருகில் இருக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து ப+ஜை போட்டு புதையல் எடுப்பதாக கூறி மந்திரவாதி உள்ளே தான் புதைத்து வைத்திருந்த சிலையை வெளியே எடுத்துள்ளார். பின்னர் வெங்கடேசன், சுப்பிரமணி ஆகியோரை அழைத்து தங்ககுண்டு சிலையாக மாறிவிட்டது என்று கூறி அவர்களிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த சிலையை எடுத்துக்கொண்டு நம்பாக்கத்தில் உள்ள ஆசாரி ஒருவரிடம் கொடுத்துள்ளனர். அதை பரிசோதித்த அவர் பித்தளை சிலை என்பதை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் ஊத்துக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் சுப்பிரமணி, மந்திரவாதி மோகன் ஆகியோர் தன்னை ஏமாற்றிவி;ட்டதாக தெரிவித் திருந்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தன்ராஜ வழக்குப் பதிவு செய்து மந்திரவாதி மோகன், மணி என்ற சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 23 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, வேலக்காபுரத்தி;ல் சமீபத்தில் அம்மன்சிலை காணாமல் போய்விட்டது. அந்த சிலைதானோ இது என்று அந்தப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
|
|
|
| தேசியத் தலைவரின் நோர்வே பயணம் |
|
Posted by: eelapirean - 06-04-2005, 05:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
தேசியத் தலைவர் இரு தடவைகள் நோர்வே நாட்டிற்கு சென்று வந்துள்ளாராம் - ஆங்கில இணையம்
றுசவைவநn டில நுடடயடயn ளுயவரசனயலஇ 04 துரநெ 2005
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இரு தடவைகள் நோர்வேக்கு சென்று வந்துள்ளதாக ஆங்கில இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடம் உள்ள விமானங்கள் மூலம் அவர் மாலை தீவிற்கு சென்று அங்கிருந்து விசேட விமானம் மூலம் நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு சென்று அதே வழியில் மீண்டும் வன்னி திரும்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுவதற்கு இரு தினங்கள் முன்னதாக நோர்வே ஏற்பாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும்
நோர்வேயில் ஒரு நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட போது ஒரு நாட்டின் தலைவருக்கு அளிக்கப்படும் மரியாதையை நோர்வே அரசாங்கம் தமிழீழத் தேசியத் தலைவருக்கு விமான நிலையத்தில் வைத்து அளித்ததாகவும்.
விமான நியைத்தில் இருந்து நோர்வே பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நோர்வே பிரதமரை தமிழீழத் தேசியத் தலைவர் சந்தித்து பேசியதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கதி
|
|
|
| மலேசியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் |
|
Posted by: AJeevan - 06-03-2005, 08:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>மலேசியாவில் இலங்கையர்களுக்கு கட்டுப்பாடுகளின்றி தொழில் வாய்ப்புகள்</b>
இலங்கைத் தொழிலாளர்கட்கு மலேசியாவில் கட்டுப்பாடுகளின்றி தொழில் வாய்ப்பு வசதிகள் கிடைத்துள்ளதாக தொழில் உறவுகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலின் படி கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி இலங்கையர்களுக்கு தொழில் வழங்க மலேசிய பிரதி வெளிநாட்டு அமைச்சர் தாங் சாய்ஹோ முன்வந்துள்ளார். மலேசியாவிலுள்ள கட்டுமானப் பணிகள் சார்ந்த தொழில் துறைகள் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில்களுக்கும் இதர தொழில் துறைகளுக்குமாக இலங்கைத் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டா முறை கடைப்பிடிக்காத நிலையில் இலங்கையிலிருந்து மலேசியா செல்லும் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் மூலம் அறிவிப்புகள் தரப்பட்டுள்ளன. தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் அதாவுட செனவிரத்ன மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அரச பிரதிநிதிகளுடன் மேற்கொண்டு வந்த பேச்சுவார்த்தைகளின் பலனாகவே இலங்கையர்களுக்கு மட்டுப் படுத்தப்படாத நிலையில் தொழில் வழங்க அந்த நாடு முன்வந்துள்ளது.
|
|
|
| நிதியுதவிகளை நேரடியாகவே வழங்குங்கள் - தமிழ்ச்செல்வன் |
|
Posted by: AJeevan - 06-03-2005, 08:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>பொதுக்கட்டமைப்பில் எமக்கு நம்பிக்கையில்லை
நிதியுதவிகளை நேரடியாகவே வழங்குங்கள்
சுவிஸ் தூதுவரிடம் தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு </b>
(அ. நிக்ஸன்)
சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளுக்கு இதுவரை அரசாங்கம் எந்தவித உதவிகளையும் வழங்கவில்லையென புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் சுவிற்சர்லாந்து தூதுவர் பேனாடினோ றகானிடம் தெரிவித்துள்ளார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவியுடனேயே சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணப் பணிகளும் மீள் நிர்மாண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுவிஸ் தூதுவரிடம் அவர் தெரிவித்துள்ளார். சுவிற்சர்லாந்து தூதுவர் பேனாடினோ றகான் நேற்று வியாழக்கிழமை காலை ஏ9 வீதியூடாக கிளிநொச்சிக்குச் சென்று அங்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து
கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போதே தமிழ்ச்செல்வன் சுவிஸ் தூதுவரிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலுள்ள சமாதான செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரமாக இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ்ச்செல்வனுடன் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் சுனாமி நிவாரணப் பணிகளில் தமிழ் பிரதேசங்களைப் புறக்கணிக்கிறது. எனவே, சர்வதேச நாடுகள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக உதவிகளை வழங்க வேண்டும். சுனாமி புனரமைப்பு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்க பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்ற புலிகளின் யோசனையை அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளது. இதனால், பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுமென்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இல்லையெனவும் தமிழ்ச்செல்வன் சுவிஸ் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நிவாரண பணிகளுக்காக சுவிஸ்லாந்து அரசாங்கம் வழங்கவுள்ள உதவி குறித்து தூதுவர் பேனாடினோ றகான் தமிழ்ச் செல்வனிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன் நேரடியாக உதவி வழங்குவது மற்றும் யுத்தத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவது பற்றியும் அதற்கான உதவிகள் தொடர்பாகவும் தாங்கள் பரிசீலிப்பதாகவும் தூதுவர் எடுத்துக் கூறியுள்ளார்.
|
|
|
| கடிச் செய்திகள் |
|
Posted by: sathiri - 06-03-2005, 08:37 PM - Forum: நகைச்சுவை
- Replies (39)
|
 |
நீங்கள் தினமும் படிக்கும் செய்திகளில் உங்களிற்கு உடனே நகைச்சுவையான எண்ணங்களை கடிசெய்தியாக இங்கே போடுங்கள்
உதாரணம் செய்திமாலை மலர்: குற்றவாளிகளிற்கு தண்டனை பெற்று தருவதில் தமிழக காவல் துறை முதலிடம் யெயலலிதா
கடி: அப்படி சொல்ல முடியாது நீங்கள்தான் வெளியிலை உலாவுறீங்களே
செய்தி தினமலர்: இந்திய இளைஞர்களே கனவு காணுங்கள் அப்துல்கலாம்
கடி: பாவம் அவங்களாலை அது மட்டும் தான் முடியும்
|
|
|
| இளைஞர்கள் மீது சிறிலங்கா வான்படையினர் துப்பாகிச் சூடு! |
|
Posted by: hari - 06-03-2005, 05:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
திருமலை: இரு தமிழ் இளைஞர்கள் மீது சிறிலங்கா வான்படையினர் துப்பாகிச் சூடு!
[வெள்ளிக்கிழமை, 3 யூன் 2005, 19:19 ஈழம்] [ம.சேரமான்]
திருமலையில் சிறிலங்கா விமானப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழ் இளைஞர்கள் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனன்குடாவில் உள்ள மிட்சுபிசி சீமெந்து தொழிற்சாலை அருகே இன்று பிற்பகல் 1.50 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தது.
இதில் ரவி, சத்தியசீலன் என்ற இரு தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தவர் என்றும் கைக்குண்டை எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருப்பினும் இதை தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் திருமலை வைத்தியசாலைக்கு விரைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களைச் சந்தித்தனர். ஆனால் இரு இளைஞர்களுக்கும் உடனடி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் நினைவிழந்த நிலையில் இருப்பதாகவும் இதனால் மேலதிக தகவல் எதுவும் பெற இயலவில்லை என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
puthinam
|
|
|
| மிக உயர்ந்த இடத்துத் திருமணம் |
|
Posted by: kuruvikal - 06-03-2005, 02:29 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (32)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41213000/jpg/_41213765_couple203ap.jpg' border='0' alt='user posted image'>
Pem Dorjee and Moni Mulepati தம்பதிகள்..!
தெற்காசியாவில் சாதி மதம் பிரதேசம் என்று மனிதப் பிரிவினைகள் ஊறிக்கிடக்கும் இக்காலத்தில் கூட இந்த நேபாளியச் சோடி உலகின் மிக அதி உயரமான எவரெஸ் சிகரத்தில் ஏறி அங்கே தமது திருமணத்தை முடித்துள்ளனர்...! திருமண அடையாளமாக நேபாளிய வழமைப்படி மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமமிட்டு அதை நிறைவு செய்துள்ளதுடன் இவர்கள் சாதி மாறியும் திருமணம் செய்து கொண்டு நேபாளில் ஊறிக்கிடக்கும் சாதிப் பிரிவினையின் போலித் தனத்தை முடிவுறத்த வலியுறுத்தியும் உள்ளனர்...!
இச் சோடி இந்தத் திருமணத்தை மிகவும் ரகசியமாகத் திட்டமிட்டு உலகின் அதி உயர் இடத்தில் நடத்தியுள்ளனர் அத்துடன் உலகின் அதி உயர் இடத்தில நடந்த முதல் திருமணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது...!
<b>சாதனைத் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...!</b>
<b>"With our interracial marriage, we also wanted to give the message that caste and race has no barriers when it comes to marriage"
Pem Dorjee</b>
மேலதிக தகவல் இங்கு...
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4605711.stm
|
|
|
| பெய்யெனப் பெய்யும் மழை |
|
Posted by: vasisutha - 06-03-2005, 02:10 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (24)
|
 |
<b>பெய்யெனப் பெய்யும் மழை</b>
[b]<span style='color:blue'>வைரமுத்து
மழைக்குருவி
<img src='http://img191.echo.cx/img191/3395/dsc9184rainbirdlo9nj.jpg' border='0' alt='user posted image'>
[size=13]
நீல மலைச்சாரல் - தென்றல்
நெசவு நடத்துமிடம்
ஆல மரக்கிளைமேல் - மேகம்
அடிக்கடி தங்குமிடம்
எந்திர ஓசைகளைக் - கழற்றி
எங்கோ எறிந்துவிட்டு
மந்திரம் போட்டதுபோல் - ஒரு
மெளனம் வசிக்குமிடம்
கட்டடக் காடுவிட்டு - நிழல்
கனிகின்ற காடுவந்தேன்
ஒட்டடை பிடித்தமனம் - உடனே
உட்சுத்தம் ஆகக்கண்டேன்
வானம் குனிவதையும் - மண்ணை
வளைந்து தேடுவதையும்
காணும் பொழுதிலெல்லாம் - ஒரு
ஞானம் வளர்த்திருந்தேன்
வெவ்வேறு காட்சிகளால் - இதயம்
விரிவு செய்திருந்தேன்
ஒவ்வோர் மணித்துளியாய் - என்
உயிரில் வரவுவைத்தேன்
சிட்டுக் குருவியொன்று - ஒரு
சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல் - என்னை
வாவென்றழைத்தது காண்
மொத்தப் பிரபஞ்சமும் - என்
முன்னே அசைவதுபோல்
சித்தப் பிரமைகொண்டு - அந்தச்
சிட்டை ரசித்திருந்தேன்
அலகை அசைத்தபடி - அது
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டுச் - சற்றே
உயரப் பறந்ததுவே
பறக்க மனமிருந்தும் - மனிதன்
பறக்கச் சிறகுமில்லை
இறக்கை துடிக்கையிலே - என்
இமைகள் துடிக்கவில்லை
சொந்தச் சிறகுகளில் - வானைச்
சுருட்டி எடுத்துக் கொள்ளும்
இந்தக் குருவியினும் - மனிதன்
எங்ஙனம் உயர்ந்துவிட்டான்?
கீச்சுச் கீச்சென்றது - என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே - என்மேல்
பிரியமா என்றது
அறிவுக்கு விரிவுசெய்ய - மனிதர்
ஆயிரம் மொழிகாண்பினும்
குருவிக்கு விடையிறுக்க - ஒரு
குறுமொழி கண்டதுண்டா?
ஒற்றைச் சிறுகுருவி - நடத்தும்
ஓரங்க நாடகத்திலே
சற்றே திளைத்திருந்தேன் - காடு
சட்டென்று இருண்டதுகாண்
மேகம் படைதிரட்டி - வானை
மிரட்டிப் பிடித்ததுகாண்
வேகச் சுழற்காற்று - என்னை
விரட்டியடித்தது காண்
சிட்டுச் சிறுகுருவி - பறந்த
திசையும் தெரியவில்லை
விட்டுப் பிரிந்துவிட்டேன் - விரைந்து
வீட்டுக்கு வந்துவிட்டேன்
வானம் தாழ்திறந்து - இந்த
மண்ணில் வீழ்ந்ததென்ன
காணும் திசைகளெல்லாம் - மழையில்
கரைந்து போனதென்ன
மின்னல் பறிக்குதென்று - சாரல்
வீட்டில் தெறிக்குதென்று
ஜன்னல் அடைத்துவைத்தாள் - மனைவி
தலையும் துவட்டிவிட்டாள்
அந்தச் சிறுகுருவி - இப்போ(து)
அலைந்து துயர்ப்படுமோ?
இந்த மழைசுமந்து - அதன்
இறக்கை வலித்திடுமோ?
காட்டு மழைக்குருவி - போர்த்தக்
கம்பளி ஏதுமில்லை
ஓட்டை வான்மறைக்க - அதன்
உயரே கூரையில்லை
கூடோ சிறுபுதரோ - இலைக்
குடைக்கீழ் ஒதுங்கிடுமோ?
தேடோ தேடென்று - இடம்
தேடி அலைந்திடுமோ?
பெய்யோ பெய்யென்று - மழை
பெய்தால் என்ன செய்யும்
அய்யோ பாவமென்று - குருவி
அழுவதை நினைத்திருந்தேன்
காட்டில் அந்நேரம் - நிகழ்ந்த
கதையே வேறுவிதம்
கூட்டை மறந்துவிட்டுக் - குருவி
கும்மியடித்ததுகாண்
வானப் பெருவெளியில் - கொட்டும்
மழையில் குளித்ததுகாண்
கானக் கனவுகளில் - அது
கலந்து களித்ததுகாண்
சொட்டும் மழைசிந்தும் - அந்தச்
சுகத்தில் நனையாமல்
எட்டிப் போனவனை - அது
எண்ணி அழுதது காண்
O</span>
(தொடரும்..)
|
|
|
|