Yarl Forum
மலேசியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மலேசியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் (/showthread.php?tid=4160)



மலேசியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் - AJeevan - 06-03-2005

<b>மலேசியாவில் இலங்கையர்களுக்கு கட்டுப்பாடுகளின்றி தொழில் வாய்ப்புகள்</b>

இலங்கைத் தொழிலாளர்கட்கு மலேசியாவில் கட்டுப்பாடுகளின்றி தொழில் வாய்ப்பு வசதிகள் கிடைத்துள்ளதாக தொழில் உறவுகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலின் படி கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி இலங்கையர்களுக்கு தொழில் வழங்க மலேசிய பிரதி வெளிநாட்டு அமைச்சர் தாங் சாய்ஹோ முன்வந்துள்ளார். மலேசியாவிலுள்ள கட்டுமானப் பணிகள் சார்ந்த தொழில் துறைகள் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில்களுக்கும் இதர தொழில் துறைகளுக்குமாக இலங்கைத் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டா முறை கடைப்பிடிக்காத நிலையில் இலங்கையிலிருந்து மலேசியா செல்லும் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் மூலம் அறிவிப்புகள் தரப்பட்டுள்ளன. தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் அதாவுட செனவிரத்ன மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அரச பிரதிநிதிகளுடன் மேற்கொண்டு வந்த பேச்சுவார்த்தைகளின் பலனாகவே இலங்கையர்களுக்கு மட்டுப் படுத்தப்படாத நிலையில் தொழில் வழங்க அந்த நாடு முன்வந்துள்ளது.


- Nilavan - 06-03-2005

தகவலுக்கு நன்றி அஜீவன்


- Mathan - 06-03-2005

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்த வெளிநாட்டவர் பலர் .... குறிப்பாக இந்தோனோசிய நாட்டினர் பல்லாயிரக்கணக்கில் அண்மையில் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து மலேசியாவிற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய பட நாடுகளில் இருந்து சட்டபூர்வமான வழியில் தொழிலாளர்கள் மலேசியா வர அரசு அனுமதி அளித்துள்ளது

தகவல் நன்றி - பிபிசி செய்தி