Yarl Forum
பெய்யெனப் பெய்யும் மழை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பெய்யெனப் பெய்யும் மழை (/showthread.php?tid=4165)

Pages: 1 2


பெய்யெனப் பெய்யும் மழை - vasisutha - 06-03-2005

<b>பெய்யெனப் பெய்யும் மழை</b>

[b]<span style='color:blue'>வைரமுத்து


மழைக்குருவி

<img src='http://img191.echo.cx/img191/3395/dsc9184rainbirdlo9nj.jpg' border='0' alt='user posted image'>

[size=13]
நீல மலைச்சாரல் - தென்றல்
நெசவு நடத்துமிடம்
ஆல மரக்கிளைமேல் - மேகம்
அடிக்கடி தங்குமிடம்

எந்திர ஓசைகளைக் - கழற்றி
எங்கோ எறிந்துவிட்டு
மந்திரம் போட்டதுபோல் - ஒரு
மெளனம் வசிக்குமிடம்

கட்டடக் காடுவிட்டு - நிழல்
கனிகின்ற காடுவந்தேன்
ஒட்டடை பிடித்தமனம் - உடனே
உட்சுத்தம் ஆகக்கண்டேன்

வானம் குனிவதையும் - மண்ணை
வளைந்து தேடுவதையும்
காணும் பொழுதிலெல்லாம் - ஒரு
ஞானம் வளர்த்திருந்தேன்

வெவ்வேறு காட்சிகளால் - இதயம்
விரிவு செய்திருந்தேன்
ஒவ்வோர் மணித்துளியாய் - என்
உயிரில் வரவுவைத்தேன்

சிட்டுக் குருவியொன்று - ஒரு
சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல் - என்னை
வாவென்றழைத்தது காண்

மொத்தப் பிரபஞ்சமும் - என்
முன்னே அசைவதுபோல்
சித்தப் பிரமைகொண்டு - அந்தச்
சிட்டை ரசித்திருந்தேன்

அலகை அசைத்தபடி - அது
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டுச் - சற்றே
உயரப் பறந்ததுவே

பறக்க மனமிருந்தும் - மனிதன்
பறக்கச் சிறகுமில்லை
இறக்கை துடிக்கையிலே - என்
இமைகள் துடிக்கவில்லை

சொந்தச் சிறகுகளில் - வானைச்
சுருட்டி எடுத்துக் கொள்ளும்
இந்தக் குருவியினும் - மனிதன்
எங்ஙனம் உயர்ந்துவிட்டான்?

கீச்சுச் கீச்சென்றது - என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே - என்மேல்
பிரியமா என்றது

அறிவுக்கு விரிவுசெய்ய - மனிதர்
ஆயிரம் மொழிகாண்பினும்
குருவிக்கு விடையிறுக்க - ஒரு
குறுமொழி கண்டதுண்டா?

ஒற்றைச் சிறுகுருவி - நடத்தும்
ஓரங்க நாடகத்திலே
சற்றே திளைத்திருந்தேன் - காடு
சட்டென்று இருண்டதுகாண்

மேகம் படைதிரட்டி - வானை
மிரட்டிப் பிடித்ததுகாண்
வேகச் சுழற்காற்று - என்னை
விரட்டியடித்தது காண்

சிட்டுச் சிறுகுருவி - பறந்த
திசையும் தெரியவில்லை
விட்டுப் பிரிந்துவிட்டேன் - விரைந்து
வீட்டுக்கு வந்துவிட்டேன்

வானம் தாழ்திறந்து - இந்த
மண்ணில் வீழ்ந்ததென்ன
காணும் திசைகளெல்லாம் - மழையில்
கரைந்து போனதென்ன

மின்னல் பறிக்குதென்று - சாரல்
வீட்டில் தெறிக்குதென்று
ஜன்னல் அடைத்துவைத்தாள் - மனைவி
தலையும் துவட்டிவிட்டாள்

அந்தச் சிறுகுருவி - இப்போ(து)
அலைந்து துயர்ப்படுமோ?
இந்த மழைசுமந்து - அதன்
இறக்கை வலித்திடுமோ?

காட்டு மழைக்குருவி - போர்த்தக்
கம்பளி ஏதுமில்லை
ஓட்டை வான்மறைக்க - அதன்
உயரே கூரையில்லை

கூடோ சிறுபுதரோ - இலைக்
குடைக்கீழ் ஒதுங்கிடுமோ?
தேடோ தேடென்று - இடம்
தேடி அலைந்திடுமோ?

பெய்யோ பெய்யென்று - மழை
பெய்தால் என்ன செய்யும்
அய்யோ பாவமென்று - குருவி
அழுவதை நினைத்திருந்தேன்

காட்டில் அந்நேரம் - நிகழ்ந்த
கதையே வேறுவிதம்
கூட்டை மறந்துவிட்டுக் - குருவி
கும்மியடித்ததுகாண்

வானப் பெருவெளியில் - கொட்டும்
மழையில் குளித்ததுகாண்
கானக் கனவுகளில் - அது
கலந்து களித்ததுகாண்

சொட்டும் மழைசிந்தும் - அந்தச்
சுகத்தில் நனையாமல்
எட்டிப் போனவனை - அது
எண்ணி அழுதது காண்
O</span>

(தொடரும்..)


- kavithan - 06-03-2005

வசி ரொம்ப நன்றி.. அருமையான கவிதை ஒன்றை நாமும் சுவைக்க இட்டதற்காக. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 06-03-2005

நன்றி வசியண்ணா. தொடரும் கவிதைகளையும் வாசிக்க ஆவலாக இருக்கிறது. தொடருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 06-03-2005

கவிதையை அறிய தந்தமைக்கு நன்றி வசி


- Malalai - 06-03-2005

நன்றி வசி அண்ணா...அது தான் குருவி அண்ணா மழையில் மலரோடு டுயட் பாடுறாறோ..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Niththila - 06-03-2005

நன்றி வசி அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 06-03-2005

நன்றி வசி.. தொடருக்கு.. :mrgreen:


- vasisutha - 06-04-2005

<b>சிறுமியும் தேவதையும்</b>

<img src='http://img92.echo.cx/img92/5311/lgcassandrasangelthemusical1ym.jpg' border='0' alt='user posted image'>

திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி

மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு
வைரக்கோடு

கோடு வளர்ந்து
வெளிச்சமானது

வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது:

''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது

ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்

இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்

உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''

புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்

அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு

'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி

தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்

உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.

இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்

அவர் கையில் மருந்து புட்டி

அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்

ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை

தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி

கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்

கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை

கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியொருத்தி

பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்

செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்

'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை

'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு

சிலிர்த்த வேகத்தில் சிதறிவிழந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.
-O-

(தொடரும்..)


- kavithan - 06-04-2005

நன்றி வசி தொடருங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kathirs - 06-04-2005

நன்றி வசி...உங்கள் கவிச்சேவை தொடர வாழ்த்துக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- KULAKADDAN - 06-04-2005

வசி நன்றி.......... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 06-04-2005

அருமையான தேர்வுகள் வசி... நன்றி தொடருங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 06-04-2005

Quote:கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியொருத்தி

பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்

செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்

'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை

'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு

சிலிர்த்த வேகத்தில் சிதறிவிழந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.

இன்னொரு உயிரை விட பிடித்த பொருள் வேறு ஏதும் இருக்கிறதா என்ன


- shiyam - 06-04-2005

வசி அருமையாக உள்ளது பாராட்டுக்கள்


பெய்யெனப் பெய்யும் மழை - vasisutha - 06-05-2005

பாராட்டெல்லாம் வைரமுத்துக்கு சொல்லுங்கள் சியாம்<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இது அவரின் பெய்யெனப் பெய்யும் மழை கவிதை
தொகுப்பில் இருந்து எடுத்து போடுகிறேன்.


பெய்யெனப் பெய்யும் மழை - vasisutha - 06-05-2005

மெளனத்தில் புதைந்த கவிதைகள் - வைரமுத்து

<img src='http://img97.echo.cx/img97/6020/lotusflower49246il.jpg' border='0' alt='user posted image'>

கம்மாக் கரையோரம்
களையெடுக்கும் வேளையில
கறுப்புக் கொடபுடிச்சுக்
கரைவழியே போனீரு

அப்ப நிமிந்தவதான்
அப்புறமாக் குனியலையே
கொடக்கம்பி போலமனம்
குத்திட்டு நிக்கிறதே

நீர்போனபின்னும் ஒம்ம
நெழல்மட்டும் போகலையே
நெஞ்சுக்குழியில் ஒம்ம
நெழல்வந்து விழுந்திருச்சே

வண்ண மணியாரம்
வலதுகையிக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கிவைக்கும் அதிகாரம்

போறபோக்கில் ஒரு
புஞ்சிரிப்பால் உசுர்கசக்கி
வேரோட பிடுங்கிஎன்ன
வெயில்தரையில் போட்டீரே

வெல்லப் பார்வைஒண்ணு
வீசிவிட்டீர் முன்னாடி
தாங்காத மனசுஇப்பத்
தண்ணிபட்ட கண்ணாடி

0

பச்சி ஒறங்கிருச்சு
பால், தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து
எலகூடத் தூங்கிருச்சு

காசநோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரநிமிசம் தூங்கலையே

ஒறங்காத கண்ணுறங்க
உபாயம் ஒண்ணு உள்ளதய்யா
அழகா! நான் ஒறங்கஒம்ம
அழுக்குவேட்டி தாருமய்யா

0

குத்துதய்யா கொடையுதய்யா
குறுகுறுன்னு வருகுதய்யா
சூறாவளி புகுந்து
சுத்துதய்யா தலக்குள்ள

தைலந்தான் தேச்சேன்
தலவலியோ தீரலையே
நொச்சிஎல வச்சேன்
நோய்விட்டுப் போகலையே

தீராத தலவலியும்
தீரவழி உள்ளதய்யா
நீவச்ச தலையணைய
நான்வச்சாத் தீருமய்யா

0

ஒருவாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் எறங்கலையே

ஆத்து மீன்கொழம்பு
அடுப்பில் கொதிக்கையில
ஏழுதெரு மணக்கும்
எனக்குமட்டும் மணக்கலையே

சோறுதண்ணி கொள்ளஒரு
சுருக்குவழி உள்ளதய்யா
எங்கஞ்சி நீர்வந்து
எச்சில்வச்சுத் தாருமய்யா

0

உள்நெஞ்சுக்குள்ள
ஒம்மநான் முடிஞ்சிருக்க
எங்கே எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

தவிப்புக்கு ஒருத்தன்
தாலிக்கு வேறொருத்தன்
எத்தனையோ பெண்தலையில்
இப்படித்தான் எழுதிருக்கோ?

ஏழப் பொம்பளைக
எதுவும்சொல்ல முடியாது
ரப்பர் வளவிக்குச்
சத்தமிட வாயேது?

OOO

(தொடரும்...)


- kavithan - 06-05-2005

நன்றி வசி .. தொடர்ந்து தாருங்கள் .. மிகவும் விரும்பி படிக்கிறேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 06-05-2005

தொடருங்கள் வசியண்ணா


பெய்யெனப் பெய்யும் மழை - vasisutha - 06-10-2005

<b>பெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து</b>

<img src='http://img273.echo.cx/img273/456/girlwewachampion4508ib.jpg' border='0' alt='user posted image'>


<b>குளக்கரை</b>

முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின
இந்தக் குளக்கரையில் நான் நடந்து

இன்றுதான் மீண்டும்
நடைபயில்கிறேன்

காலில் பரவசம்
நெஞ்சில் வலி

அன்று கூவிய பறவைகளில்
ஒன்றையும் காணோம்!

எந்த மழையில்
எந்தக் கோடையில்
மாண்டிருக்குமோ?

அன்று குடைபிடித்த மரங்களில்
ஏதுமில்லை இப்போது
கதவாய் - சாம்பலாய்
எவ்வடிவம் பூண்டனவோ?

உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன
இலங்கைத் தமிழராய்
இடம்பெயர்ந்து போயினவோ?

அன்று
சேலையைக் கல்லிலும்
மார்பால் மனசையும்
துவைத்துப் பிழிந்த பெண்கள்
மூத்து முதிர்ந்தாரோ
செத்தழிந்து போனாரோ?

அன்று
தத்தியெறிந்த தவளைக்கல்
தூர்வாரக் குளத்தாழத்தில்
கிடக்குமோ? கிடக்காதோ?

இப்போதென் நுரையீரல் நிறைப்பது
சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?
புழுதிசுமந்த புதிய காற்றோ?

அதோ
ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்
வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்
நான் அன்றுகண்ட மங்கையரோ
இல்லை
முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?

அன்று
குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா
இன்று முக்குளித்தால்
கிட்டுமோ? கிட்டாதோ?

பூமியின் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
எல்லாம் எல்லாம்
மாறித் தேய்ந்தன

ஆனாலும்
நம்பிக்கையோடு தேடுகிறேன்
குளக்கரையில் பதிந்த என்
பிஞ்சுக்கால் தடங்களை

O


- Niththila - 06-10-2005

நன்றி வசி அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->