![]() |
|
நிதியுதவிகளை நேரடியாகவே வழங்குங்கள் - தமிழ்ச்செல்வன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நிதியுதவிகளை நேரடியாகவே வழங்குங்கள் - தமிழ்ச்செல்வன் (/showthread.php?tid=4161) |
நிதியுதவிகளை நேரடியாகவே வழங்குங்கள் - தமிழ்ச்செல்வன் - AJeevan - 06-03-2005 <b>பொதுக்கட்டமைப்பில் எமக்கு நம்பிக்கையில்லை நிதியுதவிகளை நேரடியாகவே வழங்குங்கள் சுவிஸ் தூதுவரிடம் தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு </b> (அ. நிக்ஸன்) சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளுக்கு இதுவரை அரசாங்கம் எந்தவித உதவிகளையும் வழங்கவில்லையென புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் சுவிற்சர்லாந்து தூதுவர் பேனாடினோ றகானிடம் தெரிவித்துள்ளார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவியுடனேயே சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணப் பணிகளும் மீள் நிர்மாண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுவிஸ் தூதுவரிடம் அவர் தெரிவித்துள்ளார். சுவிற்சர்லாந்து தூதுவர் பேனாடினோ றகான் நேற்று வியாழக்கிழமை காலை ஏ9 வீதியூடாக கிளிநொச்சிக்குச் சென்று அங்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போதே தமிழ்ச்செல்வன் சுவிஸ் தூதுவரிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள சமாதான செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரமாக இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ்ச்செல்வனுடன் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அரசாங்கம் சுனாமி நிவாரணப் பணிகளில் தமிழ் பிரதேசங்களைப் புறக்கணிக்கிறது. எனவே, சர்வதேச நாடுகள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக உதவிகளை வழங்க வேண்டும். சுனாமி புனரமைப்பு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்க பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்ற புலிகளின் யோசனையை அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளது. இதனால், பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுமென்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இல்லையெனவும் தமிழ்ச்செல்வன் சுவிஸ் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிவாரண பணிகளுக்காக சுவிஸ்லாந்து அரசாங்கம் வழங்கவுள்ள உதவி குறித்து தூதுவர் பேனாடினோ றகான் தமிழ்ச் செல்வனிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன் நேரடியாக உதவி வழங்குவது மற்றும் யுத்தத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவது பற்றியும் அதற்கான உதவிகள் தொடர்பாகவும் தாங்கள் பரிசீலிப்பதாகவும் தூதுவர் எடுத்துக் கூறியுள்ளார். - தூயா - 06-04-2005 சொல்வது எப்பொழுது செயலில் நடக்கும்???
|