| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 530 online users. » 0 Member(s) | 527 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,444
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,679
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| தேசவிரோதி மார்க்கன் சுட்டுக்கொலை |
|
Posted by: Sriramanan - 06-06-2005, 03:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தேசவிரோத கருணா கும்பலின் முக்கியஸ்தனான மார்க்கன் என்பவன் சுட்டுக் கொல்லபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. வெலிகந்தைப் பகுதியிலிருந்து சுங்காவில் பகுதியை நோக்கி தேசவிரோதி மார்க்கன் உள்ளிட்ட கருணா கும்பலின் உறுப்பினர்கள் பயணித்துக் கொண்டிருந்தவேளையே அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் தேசவிரோதி மார்க்கன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அவருடன் பயணித்தவர்களுக்கும் இழப்புக்கள் ஏற்பட்டதா என்பது பற்றி எதுவும் தெரிய வரவில்லை.
இத் தாக்குதல் பற்றிய உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
நன்றி: சங்கதி
http://www.sankathi.net/index.php?option=c...sk=view&id=1031
|
|
|
| Swiss vote to join Schengen area |
|
Posted by: AJeevan - 06-05-2005, 11:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050605_5845423_0.jpg' border='0' alt='user posted image'>
President Samuel Schmid was satisfied with the poll results (Keystone)
<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050603_5840965_0.jpg' border='0' alt='user posted image'>
<b>Switzerland will abandon systematic
<span style='font-size:25pt;line-height:100%'>border checks
by 2008,
but customs controls remain (Keystone)</b></span>
<b>Fifty-four per cent of Swiss have backed closer cooperation with the European Union on security and asylum issues in a vote on Sunday.</b>
A proposal on legalising same-sex partnerships was also approved - with 58 per cent in favour.
Final results of the twin referendums showed 54.6 per cent had voted for membership of Schengen/Dublin, with 58.03 per cent supporting a legal basis for gay partnerships.
A majority of cantons came out in favour of the gay-rights legislation, with opposition concentrated in the mainly Roman Catholic central and southern regions.
Support for Swiss membership of the Schengen and Dublin accords was also divided along geographical lines, with western Switzerland in favour and eastern Switzerland - excepting Zurich and Zug - against.
Turnout was above average, at around 56 per cent.
Reaction
On behalf of the government, President Samuel Schmid welcomed the positive outcome of the two votes.
Schmid said the yes vote for Schengen/Dublin vindicated the government's policy on Europe and the conclusion of bilateral treaties with the EU.
"The government is convinced that the bilateral way is currently the only option and will allow Switzerland to intensify its cooperation with the EU," Schmid told a news conference.
The Swiss president said the government would now focus its efforts on the next referendum, to be held in September, on extending an EU treaty on the free movement of people.
The EU also welcomed the result of the vote.
Diana Wallis, head of the European Parliament delegation responsible for relations with Switzerland, told swissinfo it was "good news for Switzerland".
"Although Swiss membership of Schengen is not that important for the EU, it's nice to have a successful vote after last week (when voters in France and the Netherlands rejected the EU's constitution.")
Wallis added that the real test of Swiss/EU relations would come in September, when Swiss voters are due to decide whether to extend an accord on the free movement of labour to the ten new EU member states.
The EU is waiting for that vote before it ratifies a second set of bilateral treaties with Switzerland.
The rightwing Swiss People's Party, which had campaigned for a no vote, reacted by calling on the government to retract its application for EU membership. It was supported by the Campaign for an Independent and Neutral Switzerland, which also opposed joining Schengen/Dublin.
Schengen and Dublin
Joining the Schengen area will mean Switzerland agreeing to abandon systematic identity checks on its borders. In return the country will gain access to a Europe-wide electronic database on wanted and missing persons, illegal immigrants and property.
By signing up to the Dublin accord, the Swiss will be party to an agreement allowing member countries to turn away asylum seekers who had already filed a request in another signatory country.
Both accords " part of a second series of bilateral treaties with the EU " were approved by the Swiss government and parliament last year.
The justice ministry says the accords will not enter into force before 2008.
The Schengen SIS information system and Eurodac fingerprint database both have to be updated.
Gay partnership
The endorsement of the same-sex partnership proposal means that gay couples will receive the same legal rights as married couples in the areas of pensions, inheritance and taxes. But unlike married couples they will not be allowed to adopt children or have access to fertility treatment.
Same-sex unions will be considered legally binding and only a court will have the power to dissolve them.
The law, which will bring Switzerland into line with neighbouring Germany and France, was passed by parliament last year.
It is expected to come into force in 2007.
Registered partnerships already exist at a regional level in cantons Zurich, Geneva and Neuchâtel.
swissinfo
|
|
|
| வணக்கம் |
|
Posted by: hamson - 06-05-2005, 06:10 PM - Forum: அறிமுகம்
- Replies (41)
|
 |
நான் புதிதாக இணைந்துள்ளேன். உங்கள் அனைவரின் ஆதரவும் எனக்கு வேண்டும். என்னால் முடிந்ததை நானும் செய்வேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| தமிழன் அன்றும்... இன்றும்... |
|
Posted by: hari - 06-05-2005, 02:59 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
தொ.சூசைமிக்கேல் அவர்கள் எழுதிய "பட்டுமணல் மொட்டுக்கள்" என்ற புத்தகத்தில் இருந்து....
<img src='http://img294.echo.cx/img294/561/81ll.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழன் அன்றும் இன்றும்</b>
வாளொடு தோன்றிய மூத்த குடியென்று
வர்ணனை பெற்றவன் தமிழன் - இந்த
வையம் அளந்தவன் தமிழன் -இன்று
கோழையர் கும்பலாய்க் கூழைக் குடிகட்கு
கொற்றம் அமைப்பவன் தமிழன் -அஞ்சிக்
குற்றம் வளர்ப்பவன் தமிழன்
சென்ற தலமெங்கும் அன்பு தலைப்படச்
சிந்தை செழித்தவன் தமிழன் -பெரும்
சீர்புகழ் கண்டவன் தமிழன் -இன்று
நன்றி தினைத்துணை இன்றி மனத்தினில்
நஞ்சு வளர்ப்பவன் தமிழன் -உண்மை
நட்பு மறந்தவன் தமிழன்
நீதி பிழைத்தவன் மைந்தன் என்றபோது
நியாயம் புரிந்தவன் தமிழன் -மன
நேயம் வளர்த்தவன் தமிழன் -இன்று
வீதி வீதியாக நீதிக் கேடருக்கு
விழா எடுப்பவன் தமிழன் -உண்டு
விலாப்புடைப்பவன் தமிழன்
வாடும் பயிர்கண்டு வாடும் உயிர்கொண்டு
வாழ்ந்து சிறந்தவன் தமிழன் -கொடை
வள்ளல் மனத்தவன் தமிழன் -இன்று
கூடிப்பழகிய நண்பன் வறுமையைக்
கொச்சை புரிபவன் தமிழன் -வசை
கொட்டித்திரிபவன் தமிழன்
தப்பு நிகழ்ந்த தருணம் சிவனையே
சண்டைக்(கு) அழைத்தவன் தமிழன் -மொழித்
தர்க்கம் விளைத்தவன் தமிழன் -இன்று
உப்புச் சப்பில்லாத ஊளைக் கவிஞர்க்கும்
ஒப்புதல் தந்தவன் தமிழன் -கலை
ஒட்பம் இழந்தவன் தமிழன்
தன்னைப் பழித்தவனின் தலை மீதினில்
கல்லை பதித்தவன் தமிழன் -இனம்
காத்து மதித்தவன் தமிழன் -இன்று
அன்னைத் தமிழை அழிக்க முனைபவர்க்(கு)
அடிமை யானவன் தமிழன் -முற்றும்
அடங்கிப் போனவன் தமிழன்
ஒன்றே குலமென்று ஓங்கி முழங்கிய
ஒற்றுமைத் தூதுவன் தமிழன் -எங்கும்
ஒப்புமை காத்தவன் தமிழன் -இன்று
வந்தேறிகள் வந்து வீசும் ஜாதிமத
அலையில் வீழ்ந்தவன் தமிழன் -பண்பை
வழியில் விற்றவன் தமிழன்
புவனம் முழுதும்தன் பண்பு விளங்கிடப்
புகழ் படைத்தவன் தமிழன் -இன்றோ
புரை படர்ந்தவன் தமிழன் -இந்தக்
கவலை மிகுந்த அவலம் களைந்திடக்
கடமைப் பட்டவன் தமிழன் -இதைக்
கருத்தில் கொள்வானா தமிழன்..?
தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
|
|
|
| 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை |
|
Posted by: hari - 06-05-2005, 08:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>கொட்டாஞ்சேனையில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை </b>
[ஞாயிற்றுக்கிழமை, 5 யூன் 2005, 09:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அதிகாலை 5.00 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்குளி பக்கமாகச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போதே கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக வைத்து இவர்கள் சுடப்பட்டார்கள்.
குறிப்பிட்ட பேரூந்தை தொடர்ந்து ஓட்டோ ஒன்றில் வந்த இரண்டு இளைஞர்களே, பேரூந்து பொன்னம்வலவாணேஸ்வரர் கோவில் முன்பாக நிறுத்தப்பட்ட போது அதற்குள் ஏறி குறிப்பிட்ட இரு இளைஞர்களையும் சுட்டுக்கொன்றனர்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் அப்பகுதியைச் சுற்றிவளைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப் படுகொலைகளின் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. இருந்த போதிலும் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் எனத் தெரியவந்திருக்கின்றது.
puthinam
<b>Two Tamil youths killed in Colombo</b>
[TamilNet, June 05, 2005 05:22 GMT]
Two Tamil youths, identified as Mr. Francis Denisius and Mr. Thevathas Emmanuel from Gurunagar, Jaffna, were shot and killed by unidentified gunmen who followed the victims in a three wheeler in Kochchikkadai, Colombo. The incident took place in front of a Kali Temple located near the Ponnambalawaneswar Temple in Kochchikkadi Sunday morning around 5.50 AM, according to residents in the area.
Two cellphones, 4 identity cards and around 5 000 rupees in cash were found with the victims by the Police.
Kotehena Police OIC, B.L.B Appuhamy, is conducting the investigations into the killings.
|
|
|
| ஐ.நா. செயலாளர் பதவியும் சிறிலங்காவும் |
|
Posted by: hari - 06-05-2005, 07:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஐ.நா. செயலாளர் பதவியும் சிறிலங்காவும்
கடந்த முதலாம், இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட விளைவுகளின் பலனாக, உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் அத்துடன், சர்வதேச மனித உரிமையையும் நிலைநாட்ட 1948ம் ஆண்டு உதயமானாதே ஐக்கிய நாடுகள் சபை. இதன் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஏழு செயலாளர் நாயகங்கள்;, இவ் அதி உயர்ந்த உலக நடுநிலை ஸ்தாபனத்தில் கடமையாற்றியுள்ளார்கள்.
தற்போதைய செயலாளர் நாயகமாகிய திரு. கோபி அணனின் சேவைக்காலம் 2006ம் மார்கழி மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கான நியமனத்தை, ஐ.நா பாதுகாப்பு சபையின் சிபாரிசில் பொதுச்சபை நியமிக்கும். இந்த நியமனம் பூகோளா அடிப்படையிலானது. இந்த ரீதியில், கோபி அனான் அவர்களின் பதவிக்காலம் முடிவுற்றதும், இப்பதவிக்கான அடுத்த நியமனம் ஆசிய கண்டத்திற்கே உரியதாக நம்பப்படுகிறது.
இதுவரையில் கடமையாற்றிய செயலாளர் நாயகங்கள் நோர்வே, சுவீடன், மியான்மார் (பார்மா), ஒஸ்திரியா, பேரூ, ஏகிப்த், கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்;. இதில் மியான்மாரை சேர்ந்த திரு. யூ.தாண்ட்; உதவி செயலாளார் நாயகமாக கடமையாற்றிய வேளையில், செயலாளர் நாயகமாக பதவி வகித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த திரு. டக் கமார் ஜொல்ட்; 1961ம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் மரணமாணாதை தொடர்ந்து, யூ.தாண்ட்; அவர்கள் ஐ. நா. செயலாளர் நாயகமாக பதவி ஏற்றார்.
இந்த ரீதியில் யூ.தாண்ட் அவர்கள் ஆசியா கண்டத்திலிருந்து பதவி வகித்த முதலாவது ஐ.நா செயலாளர் நாயகமாக விளங்கினார். தற்போது ஆசியா கண்டத்தில் சூடுபிடித்துள்ள செயலாளர் நாயகத்திற்கான வேட்பாளர் நியமனம், ஆசியாவில் பல நாடுகளுக்கு இடையே பல சச்சரவுகளை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆனால் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா, இவ் விடயத்தில் மிக மெனமாக இருக்கிறது. இதையிட்டு பலர் ஆச்சரியப்படுகின்றார்கள். சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, அமெரிக்கா அடுத்த செயலாளர் நாயகத்தை, ஆசிய நாட்டிலிருந்து எதிர்பார்கவில்லையாம். காரணம், அமெரிக்காவின் கைப்பொம்மையாக அண்மைக்காலங்களில் விளங்கி வரும் கிழக்கு ஜரோப்பாவிலிருந்தே, அடுத்த ஜ.நாவுக்கான செயலாளர் நாயகத்தை அமெரிக்கா விரும்புகின்றதாம். கிழக்கு ஜரோப்பாவிலிருந்து செயலாளர் நாயகத்திற்கான நியமனம், ஓர் வழியில் நியாயமானதாயும் கூறப்படுகிறது. காரணம், மிக அண்மைக்காலங்களில் கிழக்கு ஜரோப்பா ஓர் தனித்துவம் கொண்ட ப+கோளப்பிரிவாக ஜக்கிய நாடுகள் செயற்பாடுகளின் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது இப்படியாக இருக்க, சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் திரு. லக்ஸ்மன் கதிர்காமர் கடந்த டிசம்பர் மாதம், திரு ஜயந்த தனபாலா சிறிலங்காவின் சார்பில் ஜ.நா செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இவ்வேளையில், சிறிலங்கா இந்த அதியுயர்ந்த நடுநிலையாளரின் பதவியை அடைய தகுதியுள்ளதா என்பதை நாம் ஆராய்வது மிக அவசியம். அப்படியாக ஆராயுமிடத்தில் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகைள், சிறிலங்கா ஜக்கிய நாடுகள் சபை மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் கௌரவம், அத்துடன் இப் பதவிக்கு போட்டியிட நியமிக்கப்பட்ட வேட்பாளர் ஜயந்த தனபாலா பற்றி, தனித்தனியாக பார்ப்பது சாலச்சிறந்தது.
சிறிலங்கா நிலைமைகள்
இலங்கை தீவான சிறிலங்காவில், இருபது வருடத்திற்கு மேலாக இரத்தக்களரிகள் கொண்ட இன ரீதியான மாபெரும் யுத்தம், இத்தீவில் வாழும் தேசிய இனமான தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை சிறிலங்கா ஏற்க மறுத்ததினால் ஏற்ப்பட்டது. இதன் விளைவாக இத்தீவில் 79 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர். அதேவேளை 13 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட தமிழ்ப் பெண்கள் சிறிலங்கா அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்குட்பட்டு கொலை செய்யப்பட்டுமுள்ளனர். இவற்றின் காரணமாக எட்டு லட்சத்துக்கு மேலான தமிழ் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தும், ஐந்து லட்சத்துக்கு மேலானோர் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியும் உள்ளனர்.
ஜ.நா. மீதான கௌரவம்!
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை பார்த்து சகிக்க முடியாத ஜக்கிய நாடுகசபை, இதன் செயலாளர் நாயகங்கள,; சர்வதேச அரச சார்பற்ர நிறுவனங்கள் கண்டனங்களை தெரிவித்த காரணத்திற்காக, சிறிலங்கா அரசினால் கௌரவக் குறைவாக நடத்தப்பட்டும் இம்சிக்கப்பட்டனர்.
1. 1995ம் ஆண்டு ய+லை மாதம் நவாலித்தேவாலயப் படுகொலையை இட்டு செய்தி வெளியிட்ட செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்கா அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
2. 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகர்கோவிலில், பாடசாலையில் வைத்து சிறுபிள்ளைகளை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்த ஜக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாச்சார ஸ்தாபனம், சிறிலங்கா அரசினால் எச்சரிக்கப்பட்டது.
3. 1995ம் ஆண்டு ஒக்டோபர் மாத இடப்பெயர்வையிட்டு இட்டு தனது கருத்தை வெளியிட்ட ஜ.நாவின் செயலாளர் நாயகம் திரு. பூட்டஸ் காலி சிறிலங்காவினால் இம்சிக்கப்பட்டார்.
4. 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஓர் படுகொலையையிட்டு அறிக்கை வெளியிட்ட ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை, 'உங்கள் வேலை, மலேரியா தொற்றுநோய் உலகில் பரவாமல் பார்ப்பதே. அதை விட்டுவிட்டு, எங்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிடாதீர்கள்." என்று சிறிலங்காவினால் அவமானப் படுத்தப்பட்டார்கள்.
5. கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவிற்கு மனிதாபிமான விஜயத்தை மேற்கொண்ட ஜ.நா செயலாளர் நாயகம் திரு. கோபி அனானின் மனித உரிமையே சிறிலங்காவில் பறிபோனது இங்கு குறிப்பிடத்தக்கது. செயலாளர் நாயகம் அவர்கள,; தனது கடமையை சுகந்திரமாக செய்யும் உரிமையை மறுத்த பெருமை சிறிலங்காவிற்கே உரியது.
இப்படியாக பல தடவை சிறிலங்காவினால் கௌரவ குறைவாக நடத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், இம்சிக்கப்பட்ட அதே நிறவனத்திற்கு சிறிலங்கா தற்போது தனது வேட்பாளரை முன்வைப்பது பெரும் வேடிக்கையானது.
யார் இந்த வேட்பாளர்?
சிறிலங்காவினால் ஜ.நா செயலாளர் பதவிக்கு போட்டியிட நியமிக்கப்பட்ட திரு. ஜயந்த தனபால ஒர் முதிர்ந்த இராஜதந்திரியாக இருந்தாலும், இவர் தற்பொழுது சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்திற்கு பொறுப்பாளராகவும், சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்காவின் ஆலோசகாராகவும் பதவி வகிக்கிறார்.
அதாவது, ஓர் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளை மறுத்து, அவ்வினத்தை கொன்று குவித்த அரசின் பங்காளராக திரு. ஜெயந்த தனபால உள்ளார். அத்துடன் வேடிக்கை என்னவெனில், இவர் பதவி ஏற்ற காலத்திலிருந்து இன்று வரை, இச்சாமாதானச் செயலகத்தினால் சமாதானதையோ, பேச்சுவார்தையையோ ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை.
மேற்கு நாடுகளில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் யாவும் அறிந்த உன்மை என்னவெனில், ஏதாவது ஓர் அரச சார்பற்ற நிறுவனம், இலங்ககைத் தீவில்; தமிழர்களின் தாயக ப+மியான வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை, சர்வதேச அரங்குகளில் எடுத்துக் கூறுவார்களேயானால், உடன் அந்த அரச சார்பற்ற நிறுவனங்கள், சிறிலங்கா அரச பிரதிநிதிகளினால் பல விதங்களில் பயமுறுத்தப்படுவதும,; இம்சிக்கப்படுவது வழக்கம்.
இந்த ரீதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜெனிவாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஓர் அரச சார்பற்ற நிறுவனம், சிறிலங்கா அரச பிரதிநிதிகளினால் பயமுறுத்தப்பட்டனர். இந்த பயமுறுத்தல் நடைபெற்று சில மாதங்களின் பின்னர், தற்போது ஜ.நா. செயலாளர் நாயகப் பதவிக்கு போட்டியிடவுள்ள திரு ஜெயந்தா தனபால, இந்த அரசசார்பற்ற நிறுவனத்தின் கௌரவ தலைவராக நியமனம் பெற்றார். அன்றிலிருந்து இந்த அரச சார்பற்ற நிறுவனம் வடக்கு கிழக்கின் நிலைமைகள் பற்றி; எடுத்துரைப்பதையும் நிறுத்தி விட்டார்கள். நியூயோhக்;;;கில் பல முக்கிய புள்ளிகளுக்கு சிறிலங்காவின் இருபது வருடகால யுத்தம் பற்றி கூறும் வேளைகளில், இது பயங்கரவாதத்தினால் உருவான போராக இவர்களினால் கூறப்பட்டதுடன், இப்போருக்கு தமிழரே காரணம் என கூறப்;பட்டது தற்போது உறுதியாகிறது.
மேற்கூறிய விடயங்களைக் கொண்டு நாம் ஊகிக்கக்கூடியது என்னவெனில், சிறிலங்காவில் சமாதானத்தையோ, சமாதானப் பேச்சுவார்த்தையோ முன்னெடுக்க முடியாத தனபால, உலக சமாதானத்துக்கு உறுதியான ஸ்தாபனமான ஜ.நா வுக்கு செயலாளராக வர முயற்சிக்கின்றார்.
சிறிலங்காவிலேயே மனித உரிமை மீறலுக்கு பரிகாரம் காண முடியாத அரசு, ஜ.நாவையே கௌரவக்குறைவாக நடத்திய அரசு, தனது சுயலாபங்களை மனதில் கொண்டு திரு ஜயந்த தனபாலாவை இப் பதவிக்கு போட்டியிட முன்மொழிந்துள்ளது.
இலங்கைத் தீவில் பிறந்தவன் என்ற வகையில், ஜயந்த தனபால ஜ.நா செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை மட்டுமல்ல, இவர் செயலாளர் நாயகமாக அமர்வதையே விரும்ப வேண்டியவனாக இருந்தும், சர்வதேச மனித உரிமையையும், உலக சமாதானத்தையும் அத்துடன் பாதுகாப்பையும்; மனதில் கொண்டு, சிறிலங்காவோ தனபாலவோ இப்பதவிக்கு தற்போதைய சூழலில் தகுதி அற்றவர்கள் என்பதை தெளிவாக காணுகிறேன்;.
<b>(ச.வி.கிருபாகரன், பொதுச் செயலாளர்,
தமிழர் மனித உரிமைகள் மையம், பிரான்ஸ்)
மே 2005</b>
நன்றி:தமிழ்நாதம்
|
|
|
| இராணுவம் அடாவடிச் சோதனை |
|
Posted by: hari - 06-05-2005, 06:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
மட்டக்களப்பு அரசியல்துறை அலுவலகத்தில் இராணுவம் அடாவடிச் சோதனை
[ஞாயிற்றுக்கிழமை, 5 யூன் 2005, 07:25 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நகர பிரதேச அரசியல்துறை அலுவலகம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரினால் சோதனையிடப்பட்டது.
மட்டக்களப்பு அரசடிச் சந்தியிலுள்ள இந்த அலுவலகத்தில் நள்ளிரவு 12.00 மணிமுதல் 12.30 வரை துணைப்படையினர் சகிதம் சென்ற இராணுவத்தினர் தேடுதல் நடத்த முற்பட்ட போதிலும் அங்கிருந்த விடுதலைப் புலிப் போராளிகள் 5 பேரும் அதற்கு இடமளிக்கவில்லை.
இராணுவத்தினர் தனியாக வந்து சோதனையிட அனுமதிக்க முடியாது. அப்படியானால் கண்காணப்புக் குழு முன்னிலையில் தான் சோதனையிட முடியும் என்று விடுதலைப் புலிகள் சுட்டிக் காட்டினர்.
வெளிநாட்டவர்களுக்கு இங்கு அலுவல் இல்லை. இது எங்கள் நாடு. நாங்கள் தான் சோதனையிட முடியும் என சோதனை நடவடிக்கைக்கு பொறுப்பாக வந்த இராணுவ அதிகாரி, கண்காணிப்புக் குழுவினரை அவமதிக்கும் வகையில் வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து விடுதலைப் புலிகளுக்கும் அங்கு வந்த இராணுவத்தினருக்குமிடையில் கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.
இது பற்றி விடுதலைப் புலிகளினால் கண்காணிப்புக் குழுவிற்கும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கண்கானிப்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்டப்டனர்.
பொலிசார் கசிதம் கண்கானிப்புக் குழுவினர் அங்கு வந்ததையடுத்து இராணுவம் வெளியே நிற்க பொலிசாரினால் சோதனை மேற் கொள்ளப்பட்டது.
தமது அலுவலகம் மீது தொடரும் இத்தகைய சோதனை நடவடிக்கை குறித்து விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மாவட்ட துணை அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகன் இது பற்றி கூறுகையில், தமது போராளிகள் அரசியல் வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கான சதி முயற்சி இது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கல்லாறு, வீரமுனை மற்றும் வாழைச்சேனை அலுவலகங்கள் மீதும் இப்படியான சோதனைகள் நடைபெற்ற பின்பே தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
போர் நிறுத்த கண்கானிப்புக் குழுவினரை அவமதிக்கும் வகையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டவார்ததைப் பிரயோகம் குறித்தும் தயாமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
puthinam
<b>SLA troopers attempt to enter LTTE office in Batticaloa</b>
[TamilNet, June 04, 2005 18:32 GMT]
Around hundred Sri Lankan Army (SLA) soldiers together with paramilitary cadres from Razeek Group entered the premises of the LTTE administrative office at Thamaraikerni in Batticaloa town Saturday night around 11.30 PM. However, LTTE officials did not allow the soldiers to enter the office building till the arrival of truce monitors, Deputy Head of Batticaloa-Amparai Political Wing of the LTTE, Mr. Daya Mohan, told TamilNet. The sudden siege by the SLA soldiers with the presence of paramilitary cadres, "in contradiction to the terms of the Cease Fire Agreement (CFA) was aimed at provoking the Tigers", he charged.
Truce monitors rushed to the scene.
Four policemen were later allowed to conduct search inside the office in the presence of SLMM officials.
The police did not find any weapons at the LTTE administrative office as charged by the SLA soldiers, Police sources said.
|
|
|
| பழகியசாலை [ கவிதன் ] |
|
Posted by: kavithan - 06-05-2005, 01:12 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (52)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'><b>பழகியசாலை [ கவிதன் ]</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/pazakiyasaalai_kavi.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>
அழகிய பூக்கள் நிறைந்த
பழகிய சாலையில்
இளகிய இதயம் இரண்டில்
துளிர்த்ததே இனிய காதல்.
காதலில் விழுந்த அவர்கள்
கண்களிலோ மயக்கம்
உதட்டினிலோ தயக்கம்
உடம்பினிலோ நடுக்கம்
கண்களில் தோன்றிய காதல் மயக்கமோ
விண்ணினில் தோன்றிய கார்மேகம்
சூரியக்கதிர்கள் பூமியை அடைவதை தடுப்பது போல்
வீரிய பார்வைகள் பூமியை நோக்கி தாழ்கின்றன.
வார்த்தைக்கு வார்த்தை வாயாடி திரிந்தவர்கள்
உதட்டினில் உருவான தயக்கமோ
ஊரடங்கு நேரத்தில்
ஊரினில் உருவான நிசப்தம்.
உடம்பினில் அரும்பிய நடுக்கமோ
உலகயே உலுக்கும்
பூமிப் பந்தின்
பூகோள அச்சில் உருவான ஆட்டம்
நாளுக்கு நாள் சந்திக்கும்
எத்தனையோ இதயங்களில்
ஆளுக்கு ஆள் பரிமாறிக் கொண்ட
இரண்டு இதயங்கள் இவர்கள்.
பல நாட்கள் நடந்து சென்ற பாதை- அவர்கள்
சிறுவர்களாய் ஒடிப் பிடித்து விளையாடிய சாலை
ஒரு நாளில் ஒரு காதல் கதை
உருவாக்கிய பழகியசாலை.</span>
கவிதன்
03/06/2005
இங்கு..
|
|
|
| அனைவருக்கும் வணக்கம்.... |
|
Posted by: Vishnu - 06-04-2005, 01:23 PM - Forum: அறிமுகம்
- Replies (22)
|
 |
அனைவருக்கும் வணக்கம்....
இந்த தளத்தில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... இதுவரை காலமும் இந்த தளத்துக்கு வரவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது...
என்னால் முடிந்த வரை எனது பங்களிப்புகளை தளவிதிகளை மீறாது தரலாம் என்று நினைக்கிறேன்....
நன்றி...
வாழ்க தமிழ்.... வழர்க நம் தேசம்,,,
விஷ்னு
|
|
|
| நஞ்சுகளும் பரம்பரை நோய்களும்...! |
|
Posted by: kuruvikal - 06-04-2005, 12:26 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (9)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41214000/jpg/_41214125_gene_analysis203.jpg' border='0' alt='user posted image'>
பங்கசு கொல்லி, பூடை கொல்லி (விவசாயத்தின் போது விசுறும் மருந்துகள்) கொண்டுள்ள இரசாயனங்களான vinclozolin மற்றும் methoxychlor ஆகியவை பரம்பரைக்குப் பரம்பரை நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தத் தக்க வகையில் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்...!
இம்மருந்துகளின் தாக்கத்துக்கு முகம் கொடுத்த வளர்கரு (முளையம் - embryo) கொண்ட பெண் எலியில் இருந்து உருவான ஆண் எலிகள் குறைந்த அளவு விந்து உருவாக்கத்தையே காட்டியுள்ளன...! மேற்குறிப்பிட்ட இரசாயனங்கள் ஓமோன் சுரப்புக்களைப் பாதித்து இந்த நோய் அறிகுறியைக் காட்டியுள்ளன..!
இவை நேரடியாக டி என் ஏ (Deoxy Ribo Nucleic acid - DNA) யில் பாதிப்பைச் செய்யாமல் பரம்பரை அலகுகளின் (Genes) செயற்பாட்டு முறையில் மாற்றங்களை உண்டு பண்ணி இப்படியான குறைபாடுகளுக்கு வித்திடுகின்றன...! இதேபோல் பாதிப்பு மனிதரினும் சாத்தியம் என்பதுடன் மார்பகப் புற்றுநோய் மற்றும் புரஸ்ரேட் புற்றுநோய்க்கும் இப்படியான தாக்கங்கள் காரணமாயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஐயம் வெளியிட்டுள்ளனர்...!
எனினும் இது குறித்து மக்களை உடனடியாக எச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் காரணம் இப்பரிசோதனையின் போது எலிகள் வழமைக்குமாறாக அதிக அளவு இரசாயனங்களை எதிர் கொண்டன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...!
தகவல் : bbc.com தமிழாக்கம் : http://kuruvikal.blogspot.com/
|
|
|
|