![]() |
|
நஞ்சுகளும் பரம்பரை நோய்களும்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: நஞ்சுகளும் பரம்பரை நோய்களும்...! (/showthread.php?tid=4155) |
நஞ்சுகளும் பரம்பரை நோய்களும்...! - kuruvikal - 06-04-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41214000/jpg/_41214125_gene_analysis203.jpg' border='0' alt='user posted image'> பங்கசு கொல்லி, பூடை கொல்லி (விவசாயத்தின் போது விசுறும் மருந்துகள்) கொண்டுள்ள இரசாயனங்களான vinclozolin மற்றும் methoxychlor ஆகியவை பரம்பரைக்குப் பரம்பரை நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தத் தக்க வகையில் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்...! இம்மருந்துகளின் தாக்கத்துக்கு முகம் கொடுத்த வளர்கரு (முளையம் - embryo) கொண்ட பெண் எலியில் இருந்து உருவான ஆண் எலிகள் குறைந்த அளவு விந்து உருவாக்கத்தையே காட்டியுள்ளன...! மேற்குறிப்பிட்ட இரசாயனங்கள் ஓமோன் சுரப்புக்களைப் பாதித்து இந்த நோய் அறிகுறியைக் காட்டியுள்ளன..! இவை நேரடியாக டி என் ஏ (Deoxy Ribo Nucleic acid - DNA) யில் பாதிப்பைச் செய்யாமல் பரம்பரை அலகுகளின் (Genes) செயற்பாட்டு முறையில் மாற்றங்களை உண்டு பண்ணி இப்படியான குறைபாடுகளுக்கு வித்திடுகின்றன...! இதேபோல் பாதிப்பு மனிதரினும் சாத்தியம் என்பதுடன் மார்பகப் புற்றுநோய் மற்றும் புரஸ்ரேட் புற்றுநோய்க்கும் இப்படியான தாக்கங்கள் காரணமாயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஐயம் வெளியிட்டுள்ளனர்...! எனினும் இது குறித்து மக்களை உடனடியாக எச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் காரணம் இப்பரிசோதனையின் போது எலிகள் வழமைக்குமாறாக அதிக அளவு இரசாயனங்களை எதிர் கொண்டன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...! தகவல் : bbc.com தமிழாக்கம் : http://kuruvikal.blogspot.com/ - KULAKADDAN - 06-04-2005 நன்றி............ குருவிகளே.......... - Mathan - 06-04-2005 பரம்பரையூடாக தான் பலவியாதிகள் கடத்தப்படுகின்றது. இவை குழந்தை பிறக்கும் போதே கடத்தப்பட்டு விடுகின்றன. பின்னர் வளரும் போது வியாதிகள் வெளிகாட்டப்படலாம். தகவலுக்கு நன்றிகள் குருவி - kavithan - 06-04-2005 நன்றி குருவிகளே - tamilini - 06-04-2005 Quote:பங்கசு கொல்லி, பூடை கொல்லி (விவசாயத்தின் போது விசுறும் மருந்துகள்) கொண்டுள்ள இரசாயனங்களான vinclozolin மற்றும் methoxychlor ஆகியவை பரம்பரைக்குப் பரம்பரை நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தத் தக்க வகையில் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்...!பாவம் எலிகள்தான் கிடைச்சிச்சா.. மனிசனில செய்து பாக்கிறது சே மனிதரில செய்து பாக்கிறது பரிசோதனையை. பாவம் எலிகள். :wink: :evil: - kuruvikal - 06-05-2005 tamilini Wrote:Quote:பங்கசு கொல்லி, பூடை கொல்லி (விவசாயத்தின் போது விசுறும் மருந்துகள்) கொண்டுள்ள இரசாயனங்களான vinclozolin மற்றும் methoxychlor ஆகியவை பரம்பரைக்குப் பரம்பரை நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தத் தக்க வகையில் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்...!பாவம் எலிகள்தான் கிடைச்சிச்சா.. மனிசனில செய்து பாக்கிறது சே மனிதரில செய்து பாக்கிறது பரிசோதனையை. பாவம் எலிகள். :wink: :evil: எலிக்குப் பதிலா நீங்க போனா..வேணாம் எண்டு சொல்லாயினம் போங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 06-05-2005 நன்றி குருவிகளே - tamilini - 06-05-2005 Quote:எலிக்குப் பதிலா நீங்க போனா..வேணாம் எண்டு சொல்லாயினம் போங்க...!அனுப்பிறது என்றே இருக்குதுகள் போல சனங்கள். :mrgreen: :evil: - வெண்ணிலா - 06-05-2005 தகவலுக்கு நன்றியண்ணா - kavithan - 06-06-2005 tamilini Wrote:சனங்கள் இல்லை பறவைகள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:எலிக்குப் பதிலா நீங்க போனா..வேணாம் எண்டு சொல்லாயினம் போங்க...!அனுப்பிறது என்றே இருக்குதுகள் போல சனங்கள். :mrgreen: :evil: |