| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 654 online users. » 0 Member(s) | 651 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,443
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,679
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| இணையம் இயங்குவது எப்படி? |
|
Posted by: இளைஞன் - 06-08-2005, 07:29 PM - Forum: இணையம்
- Replies (3)
|
 |
இணையம் இயங்குவது எப்படி, குறிப்பாக TCP/IP போன்றவற்றின் இயக்கம் எப்படி நிகழ்கிறது என்பது பற்றிய ஒரு அனிமேசன் படம் இது. இது ஐரொப்பிய மொழிகள் பலவற்றில் உள்ளது. ஐரோப்பிய மொழிகளில் அதிகம் தேர்ச்சியில்லாதவர்களுக்கு கூட இதனைப் பார்த்தால் இதன் அடிப்படை ஓரளவு விளங்கும் என்று நம்புகிறேன். இணையத்தில் பரிமாறப்படும் தகவல்கள் எப்படிப் பரிமாறப்படுகின்றன, TCP/IP என்றால் என்ன, Ports என்றால் என்ன, Router என்றால் என்ன என்பது போன்ற இணையம் சார்ந்த கேள்விகளுக்கான விளக்கங்கள் இப் படத்தில் உள்ளது. மொத்தம் 12:40 நிமிடங்கள் - 75 MB கோப்பு. வேகமான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு இலகுவாகத் தரவிறக்கலாம்.
முகவரி: http://www.warriorsofthe.net
தரவிறக்க: http://www.warriorsofthe.net/movie.html[/color]
|
|
|
| அலைக்கழிக்கும் வண்டிற்கு........ |
|
Posted by: இளைஞன் - 06-08-2005, 07:03 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
[size=18]அலைக்கழிக்கும் வண்டிற்கு........
எழுதியவர்: ஆ.ப.வசந்தன்
நன்றி: மரத்தடி
பிரியமானவளே!
நானெழுதிய முடங்கலுக்கு
நீயெழுதிய பதில்மடலில் பார்த்தேன்,
பயிர்ப்பும் படபடப்பும் நிரம்பிய
உன் பதிலை.
அரும்பாகி ஆழவேரோடும் நம் காதலில்
கரும்பாக நம் முதல் ஸ்பரிசம் - உன்
வலிந்த அதிரடி முத்தமாயிருக்க
வேட்கை கொண்டு, வெட்கம் கலைந்து
நானெழுதிய மடலுக்குப் பதில் வரைந்தாய்:
"பூக்கள் எப்போதும் வண்டைநாடிச் செல்வதில்லை."
பாரம்பரியத்திலிருந்து வெளிவரா உன்
பட்டிக்காட்டுத்தனம் என்னைப் பரவசப்படுத்தவில்லை.
பரந்துவிரிந்த உலகில்,
காதலில் மட்டுமல்ல, காமத்தில்கூட
உன் முன்முயல்வைக் காட்ட நீ முயற்சிக்கவில்லை.
நான் நன்றாகவே உணர்கிறேன்;
ஒவ்வொரு சந்திப்பிலும்
உன் நெஞ்சின் விம்மலை,
கைகளின் பிசைதலை,
உதட்டுச் சுழிப்புக்களை,
மயங்கும் கண்களின் படபடப்பை,
கால்கள் பிணைதலை,
அவற்றின் உரசலை.
உன் மேலுதட்டில் அரும்பும் வியர்வைத்துளிகளின்
அர்த்தம் கூடவா எனக்குப் புரியாமற் போய்விடும்?
இருந்தும்,
நீ ஏதுமின்றியே பிரிகிறாய்.
பத்தினியாய் இருப்பதாய்ப் பாசாங்கு காட்டி
பழமைவாத நினைப்பால்
உன்னைச் சமாளிப்பதாய் ஏமாற்றுகிறாய்.
அன்பே!
கவிஞரெல்லாம் காதலரை
மலரும் வண்டுமாகவே உவமானப்படுத்தினர்.
நானும் அதையே சொல்கிறேன்.
மலரும் வண்டுமாகவே இருப்போம்.
ஆனால்
நான் மலராகவும் -
நீ வண்டாகவும்.
திகைக்காதே!
அறிவியற்படி பார்த்தால்,
உறவில் சிநேகம் பேண
புதுமுறைப்படி பார்த்தால்
இது புரியும்.
நம் உறவின் முதிர்ச்சியில் -
அந்த இன்பத் திருநாளில் -
காமத்தின் சரசத்தில்,
உறவுணர்வின் உச்சத்தில்
தேன் வழங்குவது நானாகையாலும் - பூரண
திருப்தியின் மிச்சமாய் - அதைப்
பருகுவது நீ ஆகையாலும்
அன்பே என் உவமித்தல் தான்
அசலானது.
உலகின் கலவிகளெல்லாம்
இவ்வழி நடந்திட்டால்
உறவுகளில் தான் பேதமேது?
உணர்வுகளின் கொலைகளேது?
உற்பத்திகளில் களங்கமேது?
பாலியற் சேர்க்கை பற்றி
பலவிதமாய் அறிகிறோமே.
அனுமதியற்றவள் மேல் பலாத்காரப் புணர்தல்.
அனுமதிக்கப்பட்டவள் மேல் ஆவேசப்படர்தல்.
கட்டிய மனைவியானாலும் கட்டாயக் கலவி.
தான் விரும்பிய போதெல்லாம் - அவளின்
விருப்பமின்றியே பலாத்கார வன்முறை.
இவற்றிலெல்லாம் பெண்ணே உன்
உணர்வுகள் மதிக்கப்படவில்லை.
ஒரு வகையிற் பரிதாபம் தான்
இயற்கையின் நியதியில்,
உடலமைப்பு முறையில்.
பெண்ணே!
உன் மீதான கலவியென்பது
உன் அனுமதி இருந்தாலும் நடக்கும்.
இம்மியளவேனும்
இல்லாவிட்டாலும் நடக்கும்.
ஆனால்
ஆணுக்கு அப்படியில்லை.
அவன் உணர்வுகள் தூண்டப்படாமல்,
வேட்கையின் உச்சம் கொள்ளப்படாமல்
உறவு என்பது சாத்தியமில்லை.
ஆகவே,
கலவிக்கான துணையை
ஆண் நாடிச் செல்வதென்றால்,
ஒருபக்க விருப்பின்றி
உணர்வுக்கொலை நடக்கலாம்.
பெண் தேடிச் செல்வதென்றால்,
இருபக்க விருப்புடனும் - இன்ப
இமயத்தைத் தொடலாம்.
எனவே தான் அன்பே!
வண்டாக நீயிருந்து,
தேன் வேண்டும் போதெல்லாம்
பூ என்னைத் தேடி வா.
உன் அலைபாயும் கூந்தலில்
மலரென்னைச் சூடிக்கொள்.
பாவாடைப் பாயிலே என்
காம்பினை ஊன்றிக் கொள்.
இம்மடல் கிடைத்த பின்னும்
ஏனிந்தக் குழப்பம்?
உரிமையுள்ள நதியிறங்கி நீர்குடிக்க
தாகமுள்ள மானுக்கேன் தயக்கம்?
தணலெறிக்கும் தரிசுமீது பொழிய
மழை முகிலுக்கேன் மயக்கம்?
நதி இரந்து கேட்குமென்றோ,
தரிசுநிலம் தவம்பண்ணிக்
காத்திருக்குமென்றோ
காலம் கடத்தாதே.
வா!
வேட்கை தணியும் வரை என்னை
முத்தங்களால் ஒத்தியெடு.
உன் உணர்வு அடங்குமட்டும் - என்
உதடு கடித்து ரத்தமெல்லாம்
உறிஞ்சியெடு.
ராட்சசி போல் என்
பாதாதி கேசமெல்லாம்
உன் பசிக்கு ஏற்றாற்போல்
புசித்து முடித்துவிடு.
நான் விரும்புவது இப்படித்தான்.
உன் முன்முயல்வான முத்தத்தில் தொடங்கி
காமத்தில் முக்தி அடையும்வரை
அன்பே!
நீதான் எல்லாம் ஆரம்பிக்க வேண்டும்.
எதிர்பாரா நேரமென்னை இழுத்தணைத்து, - நான்
சாப்பிடும் போது என் சதை கடித்து,
தூங்கும்போது என்மேற் படர்ந்து,
படிக்கும்போது என்மடி விழுந்து,
கோபத்தின் உச்சத்தில் நான் வசைபாடும்போதும்
வலிந்தஉன் முத்தத்தால் என் வாய் அடைத்து,
இப்படியிப்படியெல்லாம்
எதிர்பாரா வகையில் - உன்
சின்னச் சின்ன சில்மிசங்களால்
என்னை நீ தூண்ட,
உன்னை நான் ஆற்ற
அன்பே நம் காம எல்லை
ஆயுள் வரை நீளும்.
காதற் பாடத்தில் ஒருவேளை
நம் பேரும் சேரும்.
பரஸ்பர புரிதலால், - இரு
மனம் நிறை புணர்தலால்,
காதலும் காமமும் களங்கமின்றி வாழ
நானொரு வகை கண்டு
மடல் வரைந்தேன்.
அன்பே!
நான் மலராகவும் நீ வண்டாகவும்
காலமெல்லாம் இருப்போம்.
நீ விரும்பின் கலப்போம்.
பூவின் மென்மையுடன்
உன்னை ஸ்பரிசிப்பேன். நீ விரும்பின்
புயலின் வேகத்துடன்
உன்னைப் பூசிப்பேன்.
எதிலும்,
உன் உணர்வையே மதிப்பேன்.
எனக்குத் தெரியும்,
என் உணர்வையும் நீ மதிப்பாயென்று.
உணர்வுகள் ஊறினாலும்
இதழ் மூடிக் காத்திருப்பேன்,
உன் வேண்டுகைக்காய்.
ஆனாலும் வண்டே!
ஒரு வேண்டுதல்.
தேன் சுரந்து நிறைந்து என்
மகரந்தப்பை வெடிக்கவோ,
வீணே வழிந்து
நிலத்திற் சேரவோ
வகை செய்து விடாதே
|
|
|
| எந்த கடையில நீ அரிசி வாங்கிறாய்? |
|
Posted by: தூயா - 06-08-2005, 04:57 PM - Forum: மருத்துவம்
- Replies (3)
|
 |
¯¼ø ±¨¼ «¾¢¸Á¡ÉÅ÷¸¨Çô À¡÷òÐ ¿£ ±ó¾ì¸¨¼ «¡¢º¢ º¡ôÀ¢Î¸¢È¡ö? ±ýÚ ¸¢ñ¼Ä¡¸ §¸ðÀ¡÷¸û. «¾¢¸Á¡¸î º¡ôÀ¢ÎŨ¾ò¾¡ý «ùÅ¡Ú §¸Ä¢ ¦ºöÅ¡÷.
¿¡ý ¦¸¡ïºÁ¡¸ò¾¡ý º¡ôÀ¢Î¸¢§Èý. ¬É¡ø ¦Ã¡õÀ ¦Å¢ð §À¡ÎÐí¸ ±ýÚ ¦º¡øÄôÀÎŨ¾ ÀÃÅÄ¡¸ §¸ð¸ Óʸ¢ÈÐ. ¯ñ¨Á¾¡ý.
̨ÈÅ¡¸ º¡ôÀ¢ð¼¡Öõ «¾¢¸Á¡¸ º¡ôÀ¢ð¼¡Öõ ¯¼õÒ ¯ð¸¢Ã¸¢ìÌõ ¾ý¨Á¨Âô ¦À¡ÚòÐ Á¡ÚÀÎõ. þò¾ý¨Á ¿õ ¯¼ø¸Ç¢ÖûÇ ¿¡ÇÁ¢øÄ¡î ÍÃôÀ¢¸Ç¡É À¢ðä𼡢, ¨¾Ã¡öÎ, «ð¡¢Éø, ÁüÚõ ¸¨½Âõ §À¡ýÈÅüȢĢÕóÐ ÍÃì¸ôÀÎõ †¡÷§Á¡ý¸Ç¡ø ¸ðÎôÀÎò¾ôÀθ¢ÈÐ.
†¡÷¦Á¡ý º¡¢Å¢¸¢¾õ þøÄ¡Áø ÍÃ󾡸 ¯¼ø ÀÕÁÉ¡¸×õ ¦ºöÔõ. þ¨ÇòÐô§À¡¸×õ ¦ºöÔõ.
¿Îò¾Ã ž¢É÷ ±¨¼§À¡ÎÅÐ, ¦Àñ¸Ç¡¸ þÕ󾡸 ¾¢ÕÁ½Á¡¸¢ ÌÆó¨¾ À¢Èó¾À¢ÈÌ ²üÀÎõ ¨¾Ã¡öÎ À¢Ã¨É ´Õ ¸¡Ã½Á¡¸ þÕì¸Ä¡õ. ¯¼üÀ¢üº¢Â¢ý¨Á ±ô§À¡Ðõ µö×, ¦¿¡ÚìÌò ¾£É¢, §À¡ýȨб¨¼¨Âì ÜðÊÅ¢Îõ.
¬ñ¸ÙìÌ «¾¢¸Á¡¸ º¡ôÀ¢Îž¡Öõ, ÁÐ «ÕóО¡Öõ ±¨¼ÜÎõ. Áɾ¢ø Á¸¢ú «¾¢¸Á¡É¡ø ܼ ±¨¼ ÜÎŨ¾ ¿Îò¾Ã Å÷ì¸ò¾¢É¡¢¨¼§Â ¸¡½Ä¡õ. «ôÀÊ ±ýÉ â¡¢ô§À¡, ¯¼õÒ ´§ÃÂÊ¡ö ÀÕòÐô §À¡ÌÐ ±ýÀ÷.
ÓШÁ¢ø «§¿¸Á¡¸ º¢Ä §¿¡ö¸Ç¢ý ¾ý¨Á¡ø ±¨¼ ÜÊÅ¢Îõ. ¯¼üÀ¢üº¢Â¢ý¨Á¡ø °¨Ç¾ §À¡ðÎ §¿¡ö¸û ²üÀ¼ Å¡öô¨À ¯ñ¼¡ì¸¢Îõ.
Ìñ¼¡ÉÅ÷¸û ¾í¸û À½¢¸¨Ç ¯üº¡¸Á¡ö ¦ºö ÓÊ¡Ð. ãðÎ ÅÄ¢, ÓÐÌ ÅÄ¢, ¾¨º ÅÄ¢ ±É «Êì¸Ê º¢ÃÁôÀ¼ §¿¡¢Îõ. ¾í¸û Ũ¾Å¢¼ Ó¾¢ÂÅá¸×õ, ¸Å÷ÂÁ¡É §¾¡üÈÓõ þøÄ¡Áø þÕôÀ÷. §ÁÖõ ³õÀÐ ÅÂÐìÌ §Áø þ¾Â §¿¡ö, þÃò¾ì¦¸¡¾¢ôÒ, ¿£ÃÆ¢× §¿¡ö §À¡ýȨÅÔõ §º÷óЦ¸¡ûÙõ. º¡¢ þ¾üÌ ÅÆ¢¾¡ý ±ýÉ?
þ§¾¡:
1. º¡ôÀ¡ð¨¼ ̨ÈòÐ ¯¼üÀ¢üº¢ ®ÎÀÎÅо¡ý º¢Èó¾Ð.
2. º¡¢Â¡É §¿Ãò¾¢ø º¡ôÀ¢¼×õ.
3. ±ñ¦½ô À¾¡÷ò¾í¸¨Ç ¾Å¢÷ì¸×õ.
4. Á¡Á¢º ¯½× §Åñ¼§Å §Åñ¼¡õ.
5. Á¾¢Â ¯½Å¢ø ¸¡ö¸È¢¸û «¾¢¸Á¡¸î §º÷ì¸×õ.
6. þÃÅ¢ø À¡¾¢ º¡ôÀ¡Î «øÄÐ º¢üÚñÊ À¡¾¢ Å¢üÚìÌ ÁðÎõ º¡ôÀ¢ðÎ Á£¾¢ìÌ ¾ñ½£÷ ÌÊì¸×õ.
7. À¡ø, ¾Â¢÷, À ¦Åí¸¡Âõ (50 ¸¢Ã¡õ) º¡ôÀ¢¼×õ.
8. Àº¢ìÌõ§À¡Ð ¦¿¡ÚìÌò¾£É¢ ¾Å¢÷òÐ ¾ñ½£÷, ¾ì¸¡Ç¢îº¡Ú «øÄÐ Ó𨼧¸¡Š º¡ôÀ¢¼Ä¡õ.
9. Á¡×îºòР̨ÈôÀ¾ý ãÄõ ÀΧŸÁ¡¸ ¯¼ø ±¨¼ ̨È šöôÒñÎ.
10. ÅÂÐ째üÀ ¯¼üÀ¢üº¢¨Â §¾÷ó¦¾ÎòÐ ¦ºöÂ×õ. ¿¼ò¾ø, µÎ¾ø ±ÐÅ¡¸ þÕó¾¡Öõ º¢Èó¾Ð.
11. ãðÎ ÅÄ¢ þÕ󾡸 ¨ºì¸¢û µðξø, ¿£îºø §À¡ýȨН¸ó¾¨Å.
12. §º¡õ§ÀÈ¢ò¾ÉÁ¡¸ Å£ðÊø µÂ¡Ð µö¦ÅÎ측Áø ²¾¡ÅÐ ´Õ §Å¨Ä¢ø ¿õ¨Á ®ÎÀÎò¾¢ì ¦¸¡ñ¼¡ø ºì¾¢ ¾£÷óÐ ¯¼ø ÀÕÁɡŨ¾ò ¾ÎòÐÅ¢Îõ.
§Áü¸ñ¼ Å÷¢¸¨Çô À¢ýÀüÚŧ¾¡Î º¡¢Â¡É ÁÕòÐÅ ¬§Ä¡º¨ÉÔ¼ý À¢ý Å¢¨Ç׸ǢøÄ¡¾ §†¡Á¢§Â¡À¾¢ ÁÕóÐ º¡ôÀ¢¼Ä¡õ.
Disclaimer: þôÀ̾¢Â¢ø þ¼õ ¦ÀÚõ ¸ðΨøû ±ÁÐ Å¡º¸÷¸û «Å÷¸Ç¢ý «ÛÀÅò¨¾§Â¡ ÀÊôÀÈ¢¨Å§Â¡ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ ±Ø¾¢Â¨Å. þó¾ì ¸ðΨøǢý ¿õÀ¸ò¾ý¨ÁìÌ ¿¢Ä¡îº¡Ãø ¦À¡ÚôÀøÄ. þÅü¨È ¦ºÂüÀÎòÐÓý ÁÕòÐÅâý ¬§Ä¡º¨É ¦ÀÚÅÐ ¿Äõ.
ctsy - nilacharal
|
|
|
| ¸¡ö¸È¢ °Ú¸¡ö |
|
Posted by: தூயா - 06-08-2005, 04:15 PM - Forum: சமையல்
- Replies (9)
|
 |
¸¡ö¸È¢ °Ú¸¡ö
þó¾ °Ú¸¡ö Ò¾¢Â ¸È¢¸¡ö¸¨Çì ¦¸¡ñÎ ¾Â¡Ã¢ì¸ô ÀΞ¢É¡ø þðÄ¢, §¾¡¨º, ¾Â¢÷ º¡¾ò¾¢üÌî ͨЧº÷ôÀ§¾¡Î, ¬§Ã¡ì¸¢Âò¾¢üÌõ ¯¸ó¾Ð.
§¾¨ÅÂ¡É ¦À¡Õð¸û: ¦À¡Ê¡¸ ¿Ú츢Â
¸¡ö¸È¢ò Ðñθû - 8 ¸ô,
±ÖÁ¢îºõ ÀÆí¸û - 6
º¢¸ôÒ Á¢Ç¸¡öò àû - Ó측ø ¸ô,
¦À¡Ê ¯ôÒ - Ó측ø ¸ô ,
L.G ¦ÀÕí¸¡Âõ - ´Õ º¢È¢Â ¸ðÊ
¸ÎÌ - 1 §¾ì¸ÃñÊ,
±û¦Çñ¨½ - 1 ¸ô,
¸¡ö¸È¢¸û - ¸¡Ãð, Óð¨¼ì§¸¡Š, áø§¸¡ø, º£¨Áì ¸ò¾Ã¢ì¸¡ö, ¯Õ¨Ç츢ÆíÌ, Àô À𼡽¢, ¸¡Ä¢ ·ôÇÅ÷, º¢È¢Ð Á¡í¸¡öò Ðñθû, º¢È¢Ð þﺢò Ðñθû
¦ºöÓ¨È: Òò¾õ Ò¾¢Â ¸¡ö¸È¢¸¨Ç ¿ýÈ¡¸ì ¸ØÅ¢ Å¢ðÎô ¦À¡Ê¡¸ ¿Úì¸¢ì ¦¸¡ûÇ×õ. ±ÖÁ¢îºõ ÀÆí¸¨Çô À¢Æ¢óÐ ¨ÅòÐì ¦¸¡ûÇ×õ. ±û¦Çñ¦½¨Âî ͼ ¨ÅòÐô ¦ÀÕí¸¡Âò¨¾ô ¦À¡Ã¢òÐ, ¸Î¨¸ò ¾¡Ç¢òÐ ¨ÅòÐì ¦¸¡ûÇ×õ. ´Õ ƒ¡Ê¢ø ¸¡ö¸È¢ò Ðñθ¨Çô §À¡ðÎ, «¾Û¼ý ¯ôÒ, Á¢Ç¸¡öò àû, ±ÖÁ¢î¨º úõ, ¸¡öîº¢É ±ñ¦½ö ±øÄ¡õ §º÷òÐ ¿ýÈ¡¸ì ¸ÄóРŢ¼×õ Á¡í¸¡öò Ðñθû «¾¢¸õ §º÷ò¾¡ø ±ÖÁ¢î¨º úõ ºüÚì ̨ÈÅ¡¸î §º÷ì¸Ä¡õ. þÃñÎ, ãýÚ ¿¡ð¸û ¸Æ¢òÐì ÌÇ¢÷ º¡¾Éô ¦ÀðÊ¢ø ¨ÅòÐô ÀÂý ÀÎò¾Ä¡õ.
நன்றி- நிலாசாரல்
|
|
|
| கலங்குகிறார் பாலுமகேந்திரா |
|
Posted by: vasisutha - 06-08-2005, 04:06 PM - Forum: சினிமா
- Replies (15)
|
 |
<b>இறைவா... என்னை வாழவிடு! </b>
<b>கலங்குகிறார் பாலுமகேந்திரா </b>
<img src='http://img17.echo.cx/img17/1780/p1588mb.jpg' border='0' alt='user posted image'>
அதிக குளிரை அறை முழுக்க நிரப்பிவிட்டு இன்னும் குளிரை அழுத்துகிறது ஏ.சி. ஒரு பைபிள்... சில கவிதைப் புத்தகங்கள். தலையில் இருக்கும் காட்டன் ஜீன்ஸ் தொப்பியும் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட முகமும் பாலு மகேந்திராவை இளமையாகக் காட்டினாலும் உடம்பில் தளர்வு தெரிகிறது. ஆவி பறக்க கண்ணாடிக் குவளையில் லெமன் டீ தருகிறார்.
கறுப்பன்கூட சினிமாவில் ஒரு நடிகனா வந்து ஜெயிக்க முடியும்ங்கறதை ரஜினிக்குப் பிறகு எனக்கு உணர்த்தியது தனுஷ்தான். இந்தப் புள்ளையோட (தனுஷை இப்படித்தான் சொல்கிறார்) கண்ல அப்படி ஒரு சக்தி இருக்கு. பார்த்தா ஏதோ சாதாரண நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கார் தனுஷ். கொஞ்சம் கூர்ந்து பார்த்தா ஒரு பிரெஞ்ச் மாடலோட உடலமைப்பு இருக்கு.
<img src='http://img293.echo.cx/img293/4507/p1598fy.jpg' border='0' alt='user posted image'>
அது ஒரு கனாக்காலம் தனுஷ், ப்ரியாமணி
அது ஒரு கனாக்காலத்துல சீனுவா நடிச்சிருக்கார் தனுஷ். சீனு பேச விரும்பற விஷயங்களையெல்லாம் அவனோட கண்ணே பேசிடும். மனசோட தவிப்பை, காதலை, கண்ணால் பேசியிருக்கிறார் தனுஷ். தன் மகனுக்கு பெஸ்ட்டா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற தகப்பன், தன் மகனுக்காக ஒரு முடிவெடுக்கிறான். Best of Intension-என்று சொல்வோம் இல்லியா, அது மாதிரி! ஆனால், அந்த முடிவு தன் மகனை எப்படியெல்லாம் சூறாவளியாய்ச் சுழற்றி அடிக்கிறது என்பதுதான் அது ஒரு கனாக்காலம். இந்தப் படத்துக்குக் கதை சொல்ல நான் நம்பியது நான்கு கண்களை. இரண்டு தனுஷோடது. இரண்டு ப்ரியாமணியோடது.
<img src='http://img293.echo.cx/img293/8600/p1600ki.jpg' border='0' alt='user posted image'>
நம்ம தமிழ்ப் பொண்ணுங்க கேமராவிலும், கேமராவுக்கு வெளியிலும் பேரழகிகள்தான்ங்கிறதை ப்ரியாமணி நிரூபிக்கிறாங்க. மேக்அப் இல்லாத முகத்திலும் அந்தப் பொண்ணு அத்தனை அழகு! ஒரு நாள் ஷ¨ட்டிங் ஸ்பாட்ல வெச்சு, நீங்க சினிமாவுக்கு வரலைன்னா என்னவா இருப்பீங்க?னு என்கிட்டே அந்தப் பொண்ணு கேட்டுச்சு. வாத்தியார் ஆகியிருப்பேன்னு சொன்னேன்.
இன்றைக்கும் விசிட்டிங் லெக்சரரா பல காலேஜுக்கும் போறேன். தினமும் ஒன்றரை மணி நேரம் என்னோட அலுவலகத்தில் சினிமா பற்றி மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கறேன். அப்புறம் ரொம்பச் சந்தோஷமா இருந்தா நானே சமையல் செய்து எல்லோருக்கும் பரிமாறு கிறேன். நல்ல சமையல்காரன்தான் நல்ல கிரியேட் டரா இருக்க முடியும்னு நம்பறேன். ரொம்பச் சந்தோஷமா இருக்கிறேன்.
கடற்கரையோரமாக எங்க வீடு. கடலில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் எங்க சமையலில் வறு படும். கடல்காற்று, உப்பு, உணவுன்னு வாழ்ந்தோம். அப்பா பாலநாதன் பௌதிகப் பேராசிரியர். நல்ல சுதந்திரம் தந்தார். அப்பாவை மாதிரியே வாத்தியாராகணும், அம்மாவை மாதிரி விதவிதமா சமைக்கணும்னெல்லாம் ஆசைப்பட்டிருக்கேன். இப்பவும் ஒவ்வொரு தடவை பிளாக் டீ குடிக்கும் போதும் அம்மாவோட ஆக்சிஜன் அதுல இருக்குன்னு நம்பறேன். ஏன்னா... கசக்குற தேநீரை குடிக்கப் பழக்கினது அம்மாதானே! வாழ்க்கையிலே ஆசைப்பட்ட எல்லாத்தையும் அனுபவிச்சாச்சு!
என் பையன் (இயக்குநர்) பாலா என்னைப் பார்க்க அடிக்கடி வர்றான். உடம்பு சரியில்லாம இருந்தப்போ உதவி பண்ணட்டுமானு அன்பா கேட்டான்! அன்பு காரணமா ஒரு பொஸசிவ் வரும்ல... அப்படி ஒரு சங்கடம் எனக்கும் அவனுக்கும். காலம் அதைத் துடைச்சுத் தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. பாலா யாரு... பாலுமகேந்திரா யாரு? ஒவ்வொருத்தருக் குள்ளேயும் ஒளிஞ்சிக் கிட்டிருக்கிற ஒரு கர்வம்... திமிர்தானே! இந்திய சினிமாவுக்குப் பாலாங்கிற அற்புத இயக்குநர் கிடைச்சிருக்கார். அது சந்தோஷமா இருக்கு. ஏன்னா, பாலாதான் நான் என்றபடி பெருவிரலை மூக்கில் வைத்து நீண்ட மௌனத்துக்குப் பிறகு,
எனக்குனு சில ஆசைகள் இருக்கு. ஆண்டவனோட அனுக்கிரஹத்துல அது ஒரு கனாக்காலம் நல்லா வந்திருக்கு. அதிலே இசை ஞானி இளையராஜா ஒரு பாட்டு தானே எழுதி பாடி இருக்கார்.
<i>காட்டு வழி கால்நடையாய் போற
தம்பி! பொழுதாகு முன்னே போற எடம்
சேர்ந்துவிடு
காலையிலே எளவெயிலு
கடுமையில்லே! ஒங்காலடியில்
எடுத்துவச்சாக் கவலயில்லே!</i>
இப்படிப் பொழுதெல்லாம் கேட்கிற மாதிரி நான்கு பாடல்கள் நல்லா வந்திருக்கு. அது ஒரு கனாக்காலத்துக்குப் பிறகு இன்னும் மூன்றே மூன்று சினிமா எடுக்கணும். அதில் முக்கியமானது ஈழத்தமிழர்கள் பற்றி. வேதனைகளைச் சுமந்தபடி கால் நூற்றாண்டு காலம் போராடிக்கொண்டு இருக்கிற தமிழினம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்ட கண்ணீரைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
திரையுலகில் என் இறுதி ஆசை இதுதான். ஆண்டவன் அதுவரை என்னை உயிரோடு விட்டு வைத்திருந்தால் போதும். 'இறைவா! நான் நேசித்த சினிமாவையும் என்னையும் பிரித்து விடாதே. என்னை வாழவிடு' என்பதுதான் என் பிரார்த்தனை. அவ்வளவுதான்! என கலங்குகிறார் பாலுமகேந்திரா.
நன்றி: Vikatan
|
|
|
| பாதங்கள் வலிக்கின்றதா? |
|
Posted by: தூயா - 06-08-2005, 04:00 PM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
பாதங்கள் வலிக்கின்றதா?
இப்படி செய்து பாருங்கள். பலன் கிடைக்கும்.
<img src='http://www.newyorkmetro.com/images/shopping/04/11/week1/footmassage041101_400.gif' border='0' alt='user posted image'>
1. மெதுவான வெந்நீரில் euclyptus oil, lavender oil போன்றவற் கலந்து , பாதங்களை அதில் 5 - 8 நிமிடங்கள் வைக்கவும்.
2. எண்ணெய் அல்லது லோசன் எடுத்து கொஞ்சம் காலில் போட்டு, பெரு விரலால் வட்டமாக தேய்க்கவும்.
3. மேலிருந்து கீழாக மேல் குறிப்பிட்ட முறையில் தேய்க்கவும். 15 விநாடிகள் தொடர்ந்து ஒரு இடத்தில் தேய்த்த பின்னரே அடுத்த இடத்தில் அழுத்தவும்.
4. மைக்ரன் தலை வலி உள்ளவர்கள் கால் பெருவிரல்களுக்கு மசாஜ் கொடுத்தால் நன்று.
நன்றி. -newyorkmetro
|
|
|
| பல் துலக்கும் முறை |
|
Posted by: தூயா - 06-08-2005, 03:34 PM - Forum: மருத்துவம்
- Replies (53)
|
 |
பல் துலக்குவது எப்படி?
<img src='http://www.healthysmileshawaii.com/image/children/how_to_brush_your_teeth.gif' border='0' alt='user posted image'>
Thank you - healrhysmileshawaii.
|
|
|
| ஜீன்களும் பெண்களில் பாலியல் உச்சமும் |
|
Posted by: kuruvikal - 06-08-2005, 10:17 AM - Forum: மருத்துவம்
- Replies (15)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41226000/jpg/_41226477_couple203.jpg' border='0' alt='user posted image'>
பெண்களில் உடல் உறவின் போது பாலியல் உச்ச இனபம் ( Orgasm) பெறுதல் என்பது அவளின் சமூக, உளவியல் மற்றும் ஆண் துணையின் சக்தி பலம் பலவீனம் நம்பகத்தை என்பவற்றுக்கு அப்பால் அவள் காவும் பரம்பரை அலகுகள் சார்ந்தும் இருப்பதாக பிரித்தானிய உயிரியல் ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவொன்று தெரிவிக்கிறது...!
இவ் ஆய்விற்கு 19 - 83 வயது வரையான 4000 பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்..! இவர்களில் பாதிப்பேர் ஒத்த இரட்டையர்களாவர்....!
பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் பாலியல் உச்ச இன்ப நிலையையே அடைந்ததில்லை என்று கூறியுள்ளதுடன் பத்தில் ஒன்றுக்கும் அதிகமான பெண் உடலுறவின் (intercourse) போது மட்டும் பாலியல் உச்ச இன்ப நிலையை அடைவதாகவும் சுமார் 34% பெண்கள் சுய இன்பச் செயற்பாட்டின் (masturbation) போது பாலியல் உச்ச இன்ப நிலையை அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்...!
ஆண்களில் உடலுறவின் (intercourse) போது வெறும் 2% பேரே பாலியல் உச்ச இன்பத்தைப் பெற முடியாதவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்...!
இதில் ஒத்த இரட்டைப் பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாலியல் உச்ச இன்ப நிலை அவதானிக்கப்பட்டதானது இவ்வியல்பு சார்பில் அப்பெண்கள் காவும் பரம்பரை அலகுகளுக்கும் (ஜீன்கள் - genes) தொடர்பு உண்டு என்பதை இனங்காட்டுவதாகவும்...அப் பரம்பரை அலகுகள் எவை என்று தீர்மானிப்பது பெண்களில் காணப்படும் பாலியல் உச்ச இன்பம் பெறுதல் குறைபாட்டைத் தீர்க்க வகை செய்யும் மருந்துகளைக் கண்டு பிடிக்க உதவும் என்றும் இவ்வாய்வு முடிவு பரிந்துரைக்கிறது...!
பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் மேலாண்மையும் அவள் சார்ந்த மதம் மற்றும் இனமும் மட்டும் செல்வாக்குச் செலுத்த முடியாத வகையில் உயிரியல் காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!
தகவல் ஆதாரம் மற்றும் மேலதிக தகவலுக்கு - http://kuruvikal.blogspot.com/
|
|
|
| சுப்பர் கொம்பியூட்டர் மூளை...! |
|
Posted by: kuruvikal - 06-08-2005, 01:36 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (5)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40600000/jpg/_40600142_neo_imb_b203.jpg' border='0' alt='user posted image'>
பல ஆயிரக்கணக்கான நரம்புக்கலங்கள் கொண்ட நிரல்களால் ஆக்கப்பட்ட மனித மூளையின் நியோகோட்டெக்ஸ் (neocortex) - படம் bbc.com
சுப்பர் கொம்பியூட்டர்களைப் (Super computer) பயன்படுத்தி மனித மூளையில் உள்ள மொழியாற்றல், கற்றல், ஞாபகம், சிக்கலான எண்ணங்களுக்கு உரிய பகுதியான நியோகோட்டெக்ஸை (neocortex) ஒத்த செயற்பாட்டுத்திறனிடைய முப்பரிமான மாதிரி ஒன்றை சுவிஸ்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கிப்படுகிறது...!
இந்த மூளைப் பகுதியை சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கும் போது பல நூறாயிரம் பராமீற்றர்கள் (parameters) பற்றிக் கவனம் செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது...!
இந்த இரண்டாண்டுத்திட்டம் வெற்றி அளிக்கும் பட்சத்தில் முழு மனித மூளையினதும் முப்பரிமான மாதிரி சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர்...!
மேலதிக தகவலுக்கும்... தகவல் ஆதாரத்துக்கும்... http://kuruvikal.blogspot.com/
|
|
|
| உங்களிடம் உள்ள செல்லிடப்பேசி |
|
Posted by: இளைஞன் - 06-07-2005, 11:57 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (16)
|
 |
வணக்கம் எல்லோருக்கும்...
உங்களிடம் இருக்கின்ற செல்லிடப்பேசியின் பெயர் அதன் படம் அதுபற்றிய விபரங்கள் என்பனவற்றை இணையுங்களேன். புதிதாக செல்லிடப்பேசி வாங்க இருப்பவர்களுக்கும் சிலவேளைகளில் அது பயனுள்ளதாக இருக்கலாம் அல்லவா.
இதோ என்னிடம் உள்ள செல்லிடப்பேசி பற்றிய விபரம்:
இதுவரை காலம் நான் பயன்படுத்திய மூன்று செல்லிடப்பேசிகளும் Nokia இனத்தைச் சேர்ந்தவை. முதலாவது Nokia 3210, அடுத்தது Nokia 7650, இறுதியாக அண்மையில் வாங்கியது Nokia 3230. இரண்டாவதாக செல்லடப்பேசி வாங்கியபோது அதில் உள்ள Java Technology இற்காகவே முக்கியமாக அதனை வாங்கினேன்.
இறுதியாக வாங்கிய Nokia 3230 செல்லிடப்பேசியின் விபரம்:
<img src='http://www.yarl.com/forum/files/43230.jpg' border='0' alt='user posted image'>
1.3 Megapixel உடைய Camera உள்ளது. ஒளிப்பதிவு செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் பதிவு செய்யலாம். ஆனால் தரம் அதிகூடிய தரமில்லை என்பது தெரிந்த விடயம்தானே. அதுதவிர ஒளிப்பதிவுக்காட்சிகளை எடிட் செய்வதற்கான மென்பொருளும் இந்த செல்லிடப்பேசியில் உள்ளது. அதேபோல் உளியோவியங்களையும் எடிட் செய்வதற்கான மென்பொருள் உள்ளது. தரவுகளைப் பதிவு செய்வதற்கு 32 MB மல்டி மீடியா காட் உள்ளது. இதனை கழட்டி விரும்பியபடி புதுசு மாற்றலாம். 512 MB கார்ட்டும் போடலாம். உதாரணமாக MP3 பாடல்களைப் பதிவு செய்து கேட்பதற்கு இது பயன்படும். அலார்மின் சத்தத்தைக்கூட நீங்கள் விரும்பிய பாடலாகப் போடலாம் அல்லது உங்களுக்கு விரும்பியவரின் குரலைப் பதிவு செய்து இணைக்கலாம். பல பேர் சேர்ந்து விளையாடுவதற்கான விளையாட்டுக்களும் உள்ளது. உதாரணமாக Bluetooth தொழில்நுட்பம் மூலம் பல செல்லிடப்பேசிகள் இணைந்து விளையாடலாம். Bluetooth, Infrared, Java தொழில்நுட்பங்கள் உள்ளன என்பதையும் குறிப்பிடவேண்டும். இவை தவிர சிம்பியான் என்கிற இயங்குதளமும் (கணினியில் வின்டோஸ் இயங்குதளம் போன்று) இதில் உள்ளது. உதாரணமாக உங்களுக்கு விரும்பா ஒருவர் உங்களுக்கு அழைப்பை மேற்கொண்டால் அந்த நபருக்கு மட்டும் நீங்கள் தற்போது வேறு தொடர்பில் இருப்பதாகக் காண்பிக்கும் படி செய்யலாம். மற்றும் இணையத்தளங்களை (செல்லிடப்பேசிக்கான தளங்களை) பார்ப்பதற்கான XHTML உலாவியும் உள்ளது. இதுதவிர சாதாரணமாக தற்காலத்தில் ஒரு செல்லிடப்பேசியில் அடங்கியுள்ள மற்றைய விடயங்களும் உள்ளன.
எனது செல்லிடப்பேசியின் மூலம் எடுத்த ஒளியோவியங்கள்:
<img src='http://www.yarl.com/forum/files/foto_0441_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/foto_043_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/foto_037_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/foto_038_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/foto_047_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/foto_017_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/foto_016_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/foto_014_.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/foto_010_.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
|