| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 653 online users. » 0 Member(s) | 650 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,443
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,679
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| திருக்காட்சி மலர்ந்திடாதா?.. |
|
Posted by: hari - 06-10-2005, 05:49 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
<b>திருக்காட்சி மலர்ந்திடாதா?..</b>
திரைசூழும் தென்னிலங்கைத் தீவு காணச்
சென்றுவந்தேன் ஆவலுடன் சிலநாள் முன்னே!
வரையாது தமிழ்கொழித்த கொழும்பு என்னை
வரவேற்ற காட்சிஇன்னும் என்கண் முன்னே!...
மருந்துக்குக் கூட,தமிழ் எழுத்தைக் காணோம்!
மாமதுரத் தமிழோசை முழங்கக் காணோம்!
வருந்திமிகத் தேடினும் வாகனங்கள் மீது
வண்டமிழின் எழுத்தொன்றும் விளங்கக் காணோம்!..
வாட்டமுடன் நான்பயணம் செய்த வேளை,
வந்தது,பார் அந்த "'வெலிகடைச் சிறைச் சாலை"!
நாட்டமுடன் ஏங்கியஎன் கண்க ளுக்கோர்
நல்லதமிழ் வாசகம்தான் கிடைத்த தம்மா!..
அன்றொருநாள் சோழன் உலா வந்த பூமி!
ஆறுமுக நாவலனின் அரிய பூமி!
தண்டமிழின் தூதுவனார் தனிநாயகமும்
தந்தை,செல்வ நாயகமும் தழைத்த பூமி!...
கடல்கடந்து கலம்செலுத்திப் படை நடாத்திக்
காடையனைச் சிறைப்பிடித்த வீர பூமி!
அடல்மறவர் தமிழர்இனம் ஆற்றல் பொங்க
ஆண்டிருந்த தென்னிலங்கை எங்கள் பூமி!...
நம்குலத்தோர் கோலோச்சி நடை பயின்ற
நாடிதுதான் என்றுசொன்னால் நம்பு வோமா?
சிங்களத்தார் நாகரிகம் தெருக்கள் தோறும்
சிலந்திவலை பின்னுவதைத் தாங்கு வோமா?..
மானமிகு தமிழ்மங்கை உடுத்து கின்ற
மணித்துகிலும் புடைவைகளும் அங்கே இல்லை!
நாணமற்ற நங்கையராய் மேனி காட்டி
நடக்கின்றார்.. நளினம் ஒரு துளியும் இல்லை!...
கண்டகண்ட மாமரத்து நிழலில் எல்லாம்
கௌதமனின் சம்மணத்துச் சிலைகள் கண்டேன்:
அண்டவந்து ஆட்சிகொண்ட அயலான் வம்சம்
அரங்கேற்றும் ஆணவத்து நிலைகள் கண்டேன்!...
தமிழினத்தைச் சூழ்ச்சியினால் ஓரங் கட்டும்
சாகசங்கள் கொடிகட்டிப் பறக்கு தம்மா!
தமிழினத்தான் தலைநிமிர்ந்து நடந்து செல்லும்
தரணியொன்று காண்பதினி எப்போ தம்மா?...
என்னருமைத் தமிழனுக்கோர் நாள் வாராதா?
இனியதமிழ் ஈழம்தான் புலர்ந்திடாதா?
பொன்னுலக வீதிகளில் தமிழாம் அன்னை
புன்னகைக்கும் திருக்காட்சி மலர்ந்திடாதா?..
தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
|
|
|
| இலக்கியாவின் வணக்கம் |
|
Posted by: ilakkiya - 06-10-2005, 01:40 AM - Forum: அறிமுகம்
- Replies (31)
|
 |
வணக்கம்
நான் இலக்கியா. உங்களோட என்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தமிழில் தட்டச்சு செய்வது இப்பொழுதுதான் பழகுகிறேன். அதனால் நிறைய எழுதமுடியாது. என்னால் முடிந்த அளவு உங்களோடு கருத்து பரிமாறுகிறேன். மகிழ்ச்சி
|
|
|
| þ¨½Â ¯Ä¸¢ø Ò¾¢Â «ÛÀÅõ |
|
Posted by: þ.þº¡ì - 06-09-2005, 11:46 PM - Forum: இணையம்
- Replies (5)
|
 |
அன்பு மிக்கவர்களே
மிக நீண்ட இடைவெளிக்கு பின்
தமிழின் மீதான தீராத தாகத்தினால்..
இயக்கம், இலக்கியம் என்று மட்டுமில்லால்
இதழிலும் கவனம் செலுத்த முயன்றேன்
தோழர்கள் பலரின் ஒத்துழைப்போடு..
துவக்கு என்னும் இதழை தொடங்கியுள்ளோம்.
இணையத்தில் pdf §¸¡ôÀ¡¸ ¸¢¨¼ì¸¢ÈÐ.
Å¡º¢òÐ ¸ÕòÐ ±ØÐí¸û.
www.thuvakku.da.ru
«ýÒ¼ý
þº¡ì
|
|
|
| காவியங்களின் ஓவியங்கள் |
|
Posted by: தூயா - 06-09-2005, 07:12 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
மாவீரராகிய காவியங்களின் நிழல்படங்களை இங்கு பிரசுரிக்கலாம். பெயர்களை மறக்காமல் எழுதவும்.
கிட்டு மாமா
<img src='http://www.vaanavil.dk/Essays/Images/003.jpg' border='0' alt='user posted image'>
இங்கு போடப்படும் அனைத்க்டு படங்களும் சுடப்பட்டதே. அவ் இணைய தளங்களுக்கு நன்றி,.
|
|
|
| சாகும் வரை உண்ணாவிரதம்-கொழும்பில் பதற்றம் |
|
Posted by: hari - 06-09-2005, 06:47 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (35)
|
 |
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்; ஓமல்பே சோபித்த தேரரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாம்
09 -06-2005
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/06/20050608140102fast.jpg' border='0' alt='user posted image'>
சாகும்வரை உண்ணாவிரதம் அனு;டித்துவரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித்த தேரரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித்த தேரருடன் மேலும் 8 பேர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் நீராகாரம் மாத்திரம் அருந்தி வரும் தேரரின் உடல் நிலையை மருத்துவர்கள் சோதனையிட்டதாகவும்,
தற்பொழுது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தேசிய பிக்குகள் முன்னணியினர் நேற்றைய தினம் கொழும்பு, கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
காலை சுமார் 11.45 மணியளவில் ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேசிய பிக்குகள் முன்னணயைச் சேர்ந்த ஏழு பிக்குமார் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| நாடாளுமன்றில் அமளி துமளி! |
|
Posted by: hari - 06-09-2005, 06:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
திருமலையில் படையினரை விலக்கக் கோரி நேற்றும் நாடாளுமன்றில் அமளி துமளி!
09-06-2005
(நமது நிருபர்)
திருமலை மாவட்டத்திலிருந்து படையினரை விலக்கிக் கொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசு உரிய பதிலளிக்கத் தவறியதை அடுத்து நேற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடிய போது திருமலை படைக்குவிப்பு விவகாரம் தொடர்பாக பிரதி அமைச்சர் டிலான் பெரேரா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதனை ஏற்க மறுத்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய பதில் வழங்குமாறு கோசம் எழுப்பினர். அத்துடன் திருமலைச் சம்பவங்களின் பின்னணியில் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த செயற்படுவதாக தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் குற்றம் சாட்டியதால் இரு தரப்புக்குமிடையில் கடும் வாதப்பிரதி வாதம் நடந்தது.
இதனையடுத்து பிரதி அமைச்சர் டிலான் பெரேரா ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசியதைத் தொடர்ந்து படைகளை கட்டம் கட்டமாக விலக்குவதெனவும் இது விடயம் பற்றி கூட்டமைப்பை ஜனாதிபதி சந்தித்து பேசவிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பினர் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டனர்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| பொதுக்கட்டமைப்பு என்பது கானல் நீர் |
|
Posted by: hari - 06-09-2005, 06:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பொதுக்கட்டமைப்பு என்பது கானல் நீர்: புலிகளுக்கு நம்பிக்கை இழந்து விட்டது என்கிறார் எழிலன்
09-06-2005
(திருமலை நிருபர்)
ஜனாதிபதி சந்திரிகா அமைக்கப் போவதாகக் கூறும் பொதுக்கட்டமைப்பு என்பது கானல் நீருக்குச் சமமானது. எனவே பொதுக்கட்டமைப்பு அமைக்கப்படும் அதன் மூலம் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என இல்லாமல் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள் நேரடியாக உதவ வேண்டும் இவ்வாறு திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் சேவை புரியும் சர்வதேச தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளை சம்பூரில் உள்ள அரசியல் பணிமனையில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது இந்த வேண்டுகோளை விடுத்தார் எழிலன்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- சுனாமிப் பொதுக் கட்டமைப்பு நிறுவப்படும் என்பது பகற்கனவு அதில் விடுதலைப் புலிகளுக்கு இருந்த நம்பிக்கை இழந்து விட்டது. ஏனெனில் புத்த பிக்குகள் உண்ணா விரதம் இருக்கத் தொடங்கிவிட்டனர்.
பண்டா - செல்வா ஒப்பந்தந்துக்கு நடந்த கதி இதுதான். தற்போது பொதுக்கட்டமைப்பு விவகாரத்தில் ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறினாலும் புத்த பிக்குகளின் தலையீடு அதிகரிக்கும் பட்சத்தில் அது கைவிட வேண்டிய நிலைக்கே வரும் எனக் குறிப்பிட்டார் எழிலன்.
சுனாமித் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக, நிரந்தர வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபடும் நீங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொதுமக்கள் கட்டடப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு இராணுவத்தினர் தடைவிதிக்கின்றனர். இச்செயற்பாடானது மக்களை மீண்டும், மீண்டும் துன்புறுத்தும் நிலைக்கு உள்ளாக்குகின்றது என்றும் குறிப்பிட்டார்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| என் காதல் |
|
Posted by: romio - 06-09-2005, 12:58 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
அன்பே!
நீ எங்கு இருகுறாயோ,
எப்படி இருகுறாயோ,
தெரியவில்லை,
இருப்பினும் நான் உன்னை நேசிக்குறேன்.
என் அன்பிற்கு உரியவழே!
என் அருகில் நீ இருக்க வேண்டும்
உன் அழகை நான் hசிக்க வேண்டும்
உன் இரு விழிகழில் என் விழிகழை பார்க்க வேண்டும்....
வருவாயா நீ என் கனவை நினைவாக்க?
|
|
|
|