Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 508 online users.
» 0 Member(s) | 505 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,442
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  இயக்கச்சியில் நேற்று வெடிபொருள்கள் அழிப்பு!
Posted by: hari - 06-11-2005, 06:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>இயக்கச்சியில் நேற்று வெடிபொருள்கள் அழிப்பு! </b>

மனிதநேய கண்ணி வெடியகற்றும் பிரிவினர் நேற்று அகற்றப்பட வேண்டிய வெடிபொருட்களை நேற்று இயக்கச்சியில் அழித்தனர். மக்கள் வாழ்விடங்களில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட மிதிவெடிகள், வெடிக்கக்கூடிய நிலையில் இருந்த ஆட்லறி, மோட்டார் எறிகணைகள், கைக்குண்டுகள் உள்ளடங்கலான வெடிபொருட்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

அவ்வகையில் கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் வன்னி நிலப்பரப்பில் மீட்கப்பட்ட 1528 வெடிபொருட்கள் நேற்று பிற்பகல் மணியளவில்; இயக்கச்சிப் பகுதியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தகர்த்தழிக்கப்பட்டன.

<img src='http://www.battieelanatham.com/news/06/11b.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.battieelanatham.com/news/06/11al.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610007.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610008.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610009.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610010.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610011.jpg' border='0' alt='user posted image'>
மட்டக்கிளப்பு ஈழநாதம் / புதினம்

Print this item

  ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி: ஆட்சிமைக்க ஜே.வி.பி. தயார
Posted by: narathar - 06-11-2005, 02:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி: ஆட்சிமைக்க ஜே.வி.பி. தயார் என்கிறார் சோமவன்ச
[சனிக்கிழமை, 11 யூன் 2005, 04:06 ஈழம்] [காவலூர் கவிதன்]
புதிய கூட்டணி அமைத்து, நாட்டில் புதிய ஆட்சிமைக்க ஜே.வி.பி. தயார் என்றும், ஐ.தே.க. அதற்கு முன்வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.


காலியில் நடைபெற்ற ஜே.வி.பி. பாலமண்டலய பொதுக்கூட்டத்தின் பின்னர் கருத்துக்கூறிய சோமவன்ச, தமது கட்சி தேர்தலுக்குக் தயாராகி விட்டதாகவும், ஐ.தே.க.வுடன் இணைந்து நாட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்று கூட்டணி அரசு அமைக்க தமது கட்சி தடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திட்டு, அரசியல் தற்கொலையொன்றைப் புரிவதற்கு ஜனாதிபதி சந்திரிகா முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.


போச்ச்டா போச்சு அண்ணய்க்கு பதவி ருசி நல்லாத்தான் கண்டூட்டுது,

Print this item

  short films
Posted by: stalin - 06-11-2005, 01:30 AM - Forum: குறும்படங்கள் - Replies (5)

இந்த website இலும் குறும் படங்களையும் பார்க்கலாம்----ஸ்ராலின் www.atomfilms.com

Print this item

  மனைவியிடம் மன்னிப்பு
Posted by: victorp - 06-11-2005, 01:26 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

உண்மையைச் சென்னால்
பைத்தியமென்று
உலகம் சொல்லுது - அதில்
உன்னையும் சேர்த்து -அது
நல்லது கெட்டது
பு(தெ)ரிஞ்சுக்காமல்
நடந்து கொள்ளுது - அதில்
என்னையும் சேர் நீ

Print this item

  இது யாயமா
Posted by: simran2005 - 06-10-2005, 09:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இது யாயமா cannan ஒரு பேப்பரில் இருந்து
வெளியேற்ற பட்டுள்ளார் ஏன்???????????????????? :oops:

Print this item

  நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும்
Posted by: hari - 06-10-2005, 06:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

<b>நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும்
சுடரவன்</b>

போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, சமஷ்டி, இடைக்கால நிர்வாகம் என கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் மனங்களை நிறைத்திருந்த சமாதான மாயை படிப்படியாக விலகி மீண்டுமொரு யுத்த சூழல் விரைவாக உருவாகி வருகிறது.

சிங்களப் பேரினவாதத்தால் தாம் மற்றுமொரு தடவை ஏமாற்றப்பட்ட உணர்வு, தமிழ் மக்கள் மத்தியில் ஆழப்பதிய ஆரம்பித்துவிட்டது. தீவிரமடைந்துள்ள சிறிலங்கா படைத்தரப்பின் மறைமுக மற்றும் நேரடி நடவடிக்கைகள் தமிழர் தரப்பை யுத்தத்திற்கு வலிந்திழுக்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்தப் புறச் சூழ்நிலையில் யுத்தம் தவிர்க்கப்படக் கூடிய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவே தோன்றுகிறது. பல்வேறு கட்டங்களாக பிரித்து நோக்கப்படும் தமிழீழ விடுதலைப் போர் பொதுவாக ஈழப்போர் என பல தரப்பினராலும் குறிப்பிடப்படுகிறது. ஈழப்போர் இதுவரை மூன்று கட்டங்களாக அதாவது ஈழப் போர்-1, ஈழப்போர்-2, ஈழப்போர்-3 என நடைபெற்றுள்ளதாகக் கொள்ளப்படுகிறது. இனிவர இருப்பது ஈழப்போர்-4!

ஈழப் போர் கடந்து வந்த ஒவ்வொரு கால கட்டத்தையும் ஆராயும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் சிறிலங்கா படைத்தரப்புடன் ஒப்பிடும் போது தமிழர் தரப்புப் பலம் மேலோங்கிச் சென்றுள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறிலங்கா படைத்தரப்பு தன் படைத்துறைக் கட்டுமானத்தை ஆள், ஆயுத ரீதியில் அதிகரித்த போதும் நவீன தொழில்நுட்பம், போரியல் உத்திகளை பயன்படுத்திய போதும் தமிழர் தரப்பு வலுவாற்றலை முறியடித்து வெற்றிகொள்ள முடியவில்லை. மாறாக தமிழர் தரப்பின் போரியல் உத்திகள் ஆயுதக் கையாள்கை என்பற்றால் சிறிலங்காப் படைத்துறையின் வலு சிதறடிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் சிறிலங்கா அரசும் படைத்துறையினரும் யுத்தத்தை முன்னெடுக்க முடிவெடுத்துவிட்டார்கள் என்பது திண்ணம். ஆனால், தமிழர் தரப்புடனான இந்த நான்காம் கட்ட ஈழப்போரை அவர்கள் எவ்வாறு நகர்த்தப் போகின்றனர் என்பதே சிந்திக்க வேண்டிய விடயமாகிறது.
<img src='http://www.battieelanatham.com/weeklymatter/1006/photo/1.jpg' border='0' alt='user posted image'>

ஜெயசிக்குறு போன்ற பெருமெடுப்பிலான நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க படைத்தரப்பு உடனடியாக முயலாது என நம்பலாம். கடந்த காலத்தில் பெற்ற கசப்பான பாடங்களை அவர்கள் அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். அத்துடன் ஒரு காலத்தில் புலிகளிடம் நீண்ட வீச்சு பிரதேசப் படைக் கலங்கள் (longe range area weapons) இல்லாத அல்லது குறைவாக இருந்த காலகட்டத்தில் இவ்வகையான நடவடிக்கைகள் சில வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும் தற்போது பற்றரிக் கணக்கில் (Battery) வளர்ந்துள்ள தமிழர் தரப்பின் மோட்டார், ஆட்டிலறிப் பலம் என்பவற்றின் முன் பெருமெடுப்பு நடவடிக்கைகளின் வெற்றி இலகுவான விடயமாக இருக்கப் போவதில்லை. மேலும் 85000 படையினர் படையை விட்டோடியுள்ள இச்சந்தர்ப்பத்தில் படையினரின் இத்தகைய நடவடிக்கைக்கான சாத்தியப்பாடு மேலும் வலுவிழக்கின்றது. இவ்வாறு நோக்கும் போது தமிழர் தரப்பின் வலுநிலைத் தளப்பிரதேசம் நோக்கிய பாரிய படை நடவடிக்கைகளுக்கான உடனடிச் சாத்தியப்பாடு மிகக் குறைவானதே.

படைத் தரப்பைப் பொறுத்தவரை இம்முறை தென்தமிழீழப் பகுதியிலேயே அவர்களது படை நடவடிக்கைகள் பெருமளவு இடம் பெறும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. சிறிலங்கா படைத்துறை மூலோபாய வகுப்பாளர்களின் கருத்துப்படி கிழக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் என்பது மிக முக்கியமான விடயமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. (எனினும் சிறிலங்காவின் படைத்துறை நடவடிக்கைகள், படைத்துறை நோக்கிற்கு அப்பாற்பட்டதாக அரசியல் இலாப நோக்கில் முன்னெடுக்கப்படுவது மிகவும் பரிதாபகரமானது என மூத்த இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.) சிறிலங்கா படைத்துறை மூலோபாயக் குறிப்புக்களை நோக்கும் போது கிழக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதை வடக்கில் இருந்து பிரிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.


"If east deprived to the L.T.T.E eelam concept is killed"

"Jaffna / wanni are generally considered to be the head of the problem the heart lies in east"

-Alternative strategy - by SL Army

இதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழரது தாயகக் கோட்பாட்டை அவர்களது அபிலாசைகளை இல்லாதொழிப்பதற்கான வழியாக கிழக்கைப் பிரித்தல் எனும் விடயம் அமைவதுடன் படைத்துறை ரீதியில் தமிழர் தரப்பின் பலத்தை சிதறடிக்கும் தாக்கமான வழிமுறையாகவும் இது அமைகிறது. இத்தடவை இம்மூலோபாயத்திற்கு சிறிலங்கா அரசும் அதன் படைகளும் முன்னுரிமை கொடுத்து செயற்படும் என நம்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கருணாவால் கிழக்கில் தோன்றியுள்ள நிலையை படையினர் தமக்குச் சாதகமாக பயனபடுத்திவரும் தற்போதய நிலையில் இந்த மூலோபாயத்தை முன்னெடுப்பது பொருத்தமானதென படைத்தரப்புக் கருதலாம். அத்துடன் மட்டக்களப்பு போலவே திருமலையிலும் படையினர் ஒட்டுப்படையினரின் துணையுடன் படைச் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சாத்தியப்பாடுகளும் தென்படுகின்றன. அண்மையில் வெலிக்கந்த பகுதியில் கொல்லப்பட்ட ஈ.என்.டி.எல்.எப்; குழுவை திருமலைப் பகுதியில் பயன்படுத்தவே சிறிலங்கா படைத்துறைப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் தற்போது திருமலையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலைமைகளையும் இவற்றுடன் தொடர்புபடுத்தியே நாம் நோக்க வேண்டியுள்ளது.

கிழக்குக்குரிய படைத்துறையுத்திகள் இவ்வாறு வகுக்கப்பட வடக்கில் தமிழர் தரப்பின் வலுநிலைப் படைதுறைத் தளப் பிரதேசமாக விளங்கும் வன்னிப் பெருநிலப் பரப்பில் நிலைமைகள் வேறுவிதமாக அமையலாம்.
<img src='http://www.battieelanatham.com/weeklymatter/1006/photo/2.jpg' border='0' alt='user posted image'>

முக்கியமாக தமிழர் தரப்பின் தலைமை, முக்கிய தளபதிகளை குறி வைத்து சிறுகுழு நடவடிக்கைகள் (small unit operation) பரவலாக முன்னெடுக்கப்படலாம். இதில் ஆழ ஊடுருவித் தாக்குதல், பிரதான பங்கை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் அதன் டிவிசன்களால் கூட பெற முடியாமல் போன பயன் விளைவுகளை ஆழ ஊடுருவித் தாக்கும் சிறு பிரிவுகள் (Deep Penetration/ L.R.R.P) பெற்றுக் கொடுத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. வழமையாக சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவுகளால் (S.F, commando) முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளில் இம்முறை பொலிஸ் விசேட அதிரடிப் படையும் (S.T.F) இணைந்து கொள்ளும் வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிகிறது.
<img src='http://www.battieelanatham.com/weeklymatter/1006/photo/4.jpg' border='0' alt='user posted image'>
இவர்களுக்கான இத்தகைய பயிற்சிகள் முதன் முறையாக பொத்துவில் பகுதியில் கடந்த வாரங்களில் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்புப் படைப் பிரிவுகளைப் பயன்படுத்தி கொமாண்டோப் பாணியிலான அதிரடித் தாக்குதல்களை புலிகளின் முக்கிய இலக்குகள் மீது நிகழ்த்தும் வாய்ப்புக்களும் நிராகரிக்க முடியாதவையே. இச்செயற்பாடுகளில்; விமானப் படையும்;; ஒன்றி ணைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். சிறிலங்கா படைத் துறையினரின் நடவடிக்கைகள் மேற்கண்டவாறு அமையலாம் என நாம் எதிர்பார்க்கும் அதேவேளை

தமிழர் தரப்பின் உத்திகள் தொடர்பிலும் சிலவற்றை ஆராய்வது பொருத்தமானது.

தமிழர் தரப்பின் படைத்துறைத் தயார்ப்படுத்தல்களை உற்று நோக்கும் போது அவர்களும் சிறு குழு நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அவர்களின் படைத்துறைப் பயிற்சி தொடர்பாக வெளிவருகின்ற தகவல்களின் படி ஆழ ஊடுருவும் அணிகள், சிறப்பு அதிரடிப் பிரிவுகள் என்பனவற்றிற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் நடைபெற்று பெற்று வருவதை அறிய முடிகிறது. அத்துடன் சிறப்பு ஆயுத பயிற்சி நெறிகளை முடித்து வெளியேறும் அணிகள் தொடர்பான செய்திகளும் வெளி வருகின்றன. தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இம்முறை போரை சிறிலங்காவின் சகல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்குடனான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு சிறிலங்காவின் படைத்துறை இலக்குகள் மட்டுமன்றி பொருளாதார மையங்களும் குறிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் யாழ். குடாநாட்டை மீளக் கைப்பற்றும் விடயமானது விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அதிமுன்னுரிமை அளிக்கப்பட்ட விடயமாக இம்முறை அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இரு தரப்பினரதும் படைத்துறை உத்திகள் இவ்வாறு அமையலாம் என நாம் எதிர்பார்க்கும் அதேவேளை பயன்படுத்தப்படவுள்ள போர்க்கல வலுவாற்றல் பற்றியும் சிறிது நோக்குவது பொருத்தம். சிறிலங்கா படைத் தரப்பைப் பொறுத்தவரை கடந்த காலத்தில் பயன்படுத்திய போர்க் கலங்களைவிட புதிதாக எதையும் பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள் இதுவரை தெரியவில்லை. ஆயினும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து சூட்டுவலுவை அதிகரிக்க அவர்களால் இயலும்.
<img src='http://www.battieelanatham.com/weeklymatter/1006/photo/3.jpg' border='0' alt='user posted image'>

தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இம்முறை அவர்களது ஆட்டிலறி சூட்டு வலுவாற்றல் பன்மடங்கு அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. அவர்களது ஆட்டிலறி படைப்பிரிவில் 130 mm பற்றரிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிறிலங்கா படைத்தரப்பு முன்பை விட பன்மடங்கு பலமான தமிழர் தரப்பின் சூட்டாற்றலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இரு தரப்பினதும் கடற்படைப் பலம் பற்றிக் குறிப்பிடும் Jane"s பாதுகாப்பு சஞ்சிகை, கடந்த காலத்தில் சிறிலங்கா கடற்படையின் கடற்கல பலத்தில் மூன்றிலொன்று அல்லது அரைவாசி அழிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழர் தரப்பு கடற்படை வலுவாற்றல் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. அத்துடன் இம்முறை தமிழர் தரப்பில்; வான்வலு நிட்சயம் ஈடுபடுத்தப்படும் என்பது யாவராலும் இலகுவாக ஊகிக்கக் கூடியதொன்றே. இரண்டு விமானங்கள் என படைத் தரப்பால் கூறப்படுகின்ற போதும் தமிழர் தரப்பின் வான்வலு ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்குவாட்றன்களை (squadron) கொண்டதாக இருக்கலாம் எனவும் நம்பப்டுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதியுயர் செயற்றிறன் மிக்க தற்கொடை அணிகளும் முழுவீச்சுடன் களமிறகங்கும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க எதிர்வுகூறலேயாகும்.

சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் இடம்பெறப்போகும் நான்காம் கட்ட ஈழப்போரை தமிழர்; தரப்பை பலவீனப்படுத்தும் அல்லது பணிய வைக்கும் ஒரு கட்ட யுத்தமாக கருதினாலும் தமிழர் தரப்பு இதனை ஒரு இறுதி யுத்தமாகவே முன்னெடுக்கும் என்பதை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Print this item

  சந்திரிக்கா அம்மையார் தமிழரா ?
Posted by: adithadi - 06-10-2005, 03:57 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (4)

நாயக்க வம்சத்தின் வழித்தோன்றல்களான பண்டாரநாயக்க குடும்பம் ?

Print this item

  கணணியின் காதலரா?
Posted by: தூயா - 06-10-2005, 03:44 PM - Forum: மருத்துவம் - Replies (8)

[size=15][b]கணணியில் அதிக நேரம் வேலை செய்பவாரா நீங்கள்?

இதோ உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ள சில சுலபமான வழிகள்.

1. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, உங்கள் பார்வையை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பாருங்கள். இப்படி செய்வத்ன் மூலம் கண்ணில் பார்வை அளவை மாற்ற முடியும்.[focus length]

2.கண்களை தொடர்ந்து 20 முறை அடியுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஈரத்தன்மையை கண்கள் அடைகிறது.

3. 20 அடிகள் நடவுங்கள். - இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Print this item

  வெளிநாடுகளிலேயே தயாரான தமிழ்த் திரைப்படம் ! தேவியில் பூக்கள்
Posted by: ravi_dk - 06-10-2005, 11:32 AM - Forum: சினிமா - Replies (13)

<b>தமிழக சஞ்சிகை தேவியில் பூக்கள் பற்றிய கட்டுரை வெளியானது !</b>

தமிழகத்தில் இருந்து வெளிவரும் தேவி சஞ்சிகை டென்மார்க்கில் தயாராகி இப்போது வெற்றி நடைபயின்றுவரும் பூக்கள் திரைப்படம் பற்றி சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 08.06.05 நாளிடப்பட்ட தேவி இதழில் வெளியான கட்டுரையை அப்படியே தருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து சஞ்சிகைகளிலும் முதல் முதலாக புலம் பெயர் தமிழ் சினிமா மீது பார்வையைச் செலுத்தி செய்தி வெளியிட்ட சிறப்பைப் பெறுகிறது தேவி இதழ்.

<img src='http://www.tamilnet.dk/pookkal/thevi.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  நடிகர் எஸ்.வி. சேகர் கலந்துகொள்ளும் விழாவைப் புறக்கணியுங்கள்
Posted by: Aalavanthan - 06-10-2005, 09:19 AM - Forum: புலம் - Replies (9)

தமிழ்ப்படைப்பாளிகள் கழகம்
யூன் 9, 2005

ரொறன்ரோ

செய்தி அறிக்கை

நடிகர் எஸ்.வி. சேகர் கலந்துகொள்ளும் விழாவைப் புறக்கணியுங்கள்!

ரொறன்ரோவில் வெளியாகும் தங்கத் தீபம் செய்தித்தாளின் கலை விழாவிற்கு தமிழ்த் தேசியத்தின் பகைவர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி. சேகர் அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பகையாளியான நடிகர் சேகர் அழைக்கப்படுவதை தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் கனேடியத் தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்.

நடிகர் சேகர் காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களைக் கக்கி வந்திருக்கிறார். இராசிவ் கொலை வழக்கில் நால்வருக்குத் தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினப் பகைவன் ‘துக்ளக்’ சோ வின் கருத்தே தனது கருத்தும் என இவர் கூறியுள்ளார். இராசிவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகிய நான்கு பேருக்கும் கருணை காட்டுமாறு இந்திய ஆட்சித் தலைவருக்கு கையெழுத்துக்கள் வாங்கி அனுப்பப்பட்டன. திரைத்துறையில் இருப்பவர்களிடம் கையெழுத்து சேகரித்தவரில் கவிஞர், தமிழ்த் தேசிய உணர்வாளர் அறிவுமதியும் ஒருவர். கவிஞர் அறிவுமதி அவர்கள், நடிகர் சேகரிடம் கையெழுத்துக் கேட்டபோது கையெழுத்துப்போட மறுத்த அவர் சொன்ன பதில்தான் இது. 'தூக்குத் தண்டனையை ஒருபோதும் குறைக்கக்கூடாது' என்பதுதான் துக்ளக் சோவின் கருத்து.

தமிழில் பெயர்ப்பலகை, தமிழ்மொழியில் திருக்கோயில் வழிபாடு போன்றவற்றுக்கு நடிகர் சேகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர் செல்வி ஜெயலலிதா. தமிழீழ விடுதலைப்போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றும் வி. .புலிகளை பயங்கரவாதிகள் என்றும் கொச்சைப்படுத்தி கடுமையாகத் தாக்கிப்பேசி வருகிறார்.

விடுதலைப் புலிகளுக்கு வாய்மொழி ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக எல்லை கடந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்திய நடுவண் அரசால் கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தைத் தமிழ்த் தேசியவாதிகளான மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட 9 பேர் மீது ஏவி அவர்களைக் கைது செய்து வெஞ்சிறைகளில் 19 மாதங்கள் ஜெயலலிதா அடைத்து வைத்தார். ஜெயலலிதாவின் இப்படிப்பட்ட வெறிபிடித்த நடவடிக்கைகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்தான் நடிகர் சேகர்.

தமிழகத்தில் இருந்து கொண்டு எமக்காகக் குரல் கொடுக்கும் இனமானத் தமிழர்களது குரல்வளையை நசிப்பதில் முன்னிற்கும் ஜெயலலிதாவிற்கு தோள் கொடுக்கும் சேகர் போன்றவர்களை நாமே பெருந்தொகைப் பணம் கொடுத்து இங்கு அழைப்பது எமக்காக சிறை சென்றவர்களை அவமதிப்பது போன்றதாகும்.

நடிகர் சேகர் வருவதையிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோடு பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வர நண்பர்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நாம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

எனவே தமிழினப் பகைவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நடிகர் சேகர் கலந்துகொள்ளும் விழாவை முற்றாகப் புறக்கணிக்குமாறு கனடாவாழ் தமிழ் மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விழாவில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டாம் என்று கலைஞர்களையும் நடன ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

விழா பற்றிய விளம்பரங்களை வெளியிடவேண்டாம் என சகல இனமான ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே விழா விளம்பரங்களை முழக்கம், உலகத்தமிழர் போன்ற கிழமை ஏடுகள் பிரசுரிக்க மறுத்துள்ளதற்கு எமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் தேசியவாதிகள் தங்களுக்குள் முரண்படுவது விரும்பத்தக்கதல்ல. அது தமிழ்ப் பகைவர்களுக்கு அனுகூலமாக இருந்துவிடும். இந்தக் கடைசி நேரத்திலாவது நடிகர் சேகர் வருகையை விழா ஏற்பாட்டாளர் நிறுத்தினால் கலை விழா வெற்றி பெற சகல உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Print this item