Yarl Forum
நடிகர் எஸ்.வி. சேகர் கலந்துகொள்ளும் விழாவைப் புறக்கணியுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: நடிகர் எஸ்.வி. சேகர் கலந்துகொள்ளும் விழாவைப் புறக்கணியுங்கள் (/showthread.php?tid=4115)



நடிகர் எஸ்.வி. சேகர் கலந்துகொள்ளும் விழாவைப் புறக்கணியுங்கள் - Aalavanthan - 06-10-2005

தமிழ்ப்படைப்பாளிகள் கழகம்
யூன் 9, 2005

ரொறன்ரோ

செய்தி அறிக்கை

நடிகர் எஸ்.வி. சேகர் கலந்துகொள்ளும் விழாவைப் புறக்கணியுங்கள்!

ரொறன்ரோவில் வெளியாகும் தங்கத் தீபம் செய்தித்தாளின் கலை விழாவிற்கு தமிழ்த் தேசியத்தின் பகைவர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி. சேகர் அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பகையாளியான நடிகர் சேகர் அழைக்கப்படுவதை தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் கனேடியத் தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்.

நடிகர் சேகர் காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களைக் கக்கி வந்திருக்கிறார். இராசிவ் கொலை வழக்கில் நால்வருக்குத் தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினப் பகைவன் ‘துக்ளக்’ சோ வின் கருத்தே தனது கருத்தும் என இவர் கூறியுள்ளார். இராசிவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகிய நான்கு பேருக்கும் கருணை காட்டுமாறு இந்திய ஆட்சித் தலைவருக்கு கையெழுத்துக்கள் வாங்கி அனுப்பப்பட்டன. திரைத்துறையில் இருப்பவர்களிடம் கையெழுத்து சேகரித்தவரில் கவிஞர், தமிழ்த் தேசிய உணர்வாளர் அறிவுமதியும் ஒருவர். கவிஞர் அறிவுமதி அவர்கள், நடிகர் சேகரிடம் கையெழுத்துக் கேட்டபோது கையெழுத்துப்போட மறுத்த அவர் சொன்ன பதில்தான் இது. 'தூக்குத் தண்டனையை ஒருபோதும் குறைக்கக்கூடாது' என்பதுதான் துக்ளக் சோவின் கருத்து.

தமிழில் பெயர்ப்பலகை, தமிழ்மொழியில் திருக்கோயில் வழிபாடு போன்றவற்றுக்கு நடிகர் சேகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர் செல்வி ஜெயலலிதா. தமிழீழ விடுதலைப்போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றும் வி. .புலிகளை பயங்கரவாதிகள் என்றும் கொச்சைப்படுத்தி கடுமையாகத் தாக்கிப்பேசி வருகிறார்.

விடுதலைப் புலிகளுக்கு வாய்மொழி ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக எல்லை கடந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்திய நடுவண் அரசால் கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தைத் தமிழ்த் தேசியவாதிகளான மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட 9 பேர் மீது ஏவி அவர்களைக் கைது செய்து வெஞ்சிறைகளில் 19 மாதங்கள் ஜெயலலிதா அடைத்து வைத்தார். ஜெயலலிதாவின் இப்படிப்பட்ட வெறிபிடித்த நடவடிக்கைகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்தான் நடிகர் சேகர்.

தமிழகத்தில் இருந்து கொண்டு எமக்காகக் குரல் கொடுக்கும் இனமானத் தமிழர்களது குரல்வளையை நசிப்பதில் முன்னிற்கும் ஜெயலலிதாவிற்கு தோள் கொடுக்கும் சேகர் போன்றவர்களை நாமே பெருந்தொகைப் பணம் கொடுத்து இங்கு அழைப்பது எமக்காக சிறை சென்றவர்களை அவமதிப்பது போன்றதாகும்.

நடிகர் சேகர் வருவதையிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோடு பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வர நண்பர்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நாம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

எனவே தமிழினப் பகைவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நடிகர் சேகர் கலந்துகொள்ளும் விழாவை முற்றாகப் புறக்கணிக்குமாறு கனடாவாழ் தமிழ் மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விழாவில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டாம் என்று கலைஞர்களையும் நடன ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

விழா பற்றிய விளம்பரங்களை வெளியிடவேண்டாம் என சகல இனமான ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே விழா விளம்பரங்களை முழக்கம், உலகத்தமிழர் போன்ற கிழமை ஏடுகள் பிரசுரிக்க மறுத்துள்ளதற்கு எமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் தேசியவாதிகள் தங்களுக்குள் முரண்படுவது விரும்பத்தக்கதல்ல. அது தமிழ்ப் பகைவர்களுக்கு அனுகூலமாக இருந்துவிடும். இந்தக் கடைசி நேரத்திலாவது நடிகர் சேகர் வருகையை விழா ஏற்பாட்டாளர் நிறுத்தினால் கலை விழா வெற்றி பெற சகல உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


- shanmuhi - 06-10-2005

Quote:இந்தக் கடைசி நேரத்திலாவது நடிகர் சேகர் வருகையை விழா ஏற்பாட்டாளர் நிறுத்தினால் கலை விழா வெற்றி பெற சகல உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விழா ஏற்பாட்டாளருக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அல்லது... பார்வையாளர்கள் நிகழ்வை புறக்கணியுங்கள்.


- jeya - 06-10-2005

அண்ணா ஆழவந்தான் நம்மால் உங்களுடன் கூடநின்று உதவி செய்ய ஏலாத தூரத்தில் நிற்கிறேன். நம்மவர்(ஈழத்தவர்)காசில படத்தை நல்ல விலைக்கு விற்று வெற்றிப்படம் அது இது என்று கூத்தடிக்கிற புறம்போக்கு நாய் நமக்கெதிரா பரப்புரை செய்து கொண்டு பாப்பனர்களுக்கு மாமா வேலை செய்து கொண்டு கனடாவில வந்து மாட்டுப்பல் வாயால சிரிச்சுக் கதைசொல்ல போதோ பச்சோந்தி?? விடக்கூடாது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கமா தெரியப்படுத்துங்கோ.... அவர்கள் ஏற்காமல் போனால்.. முழு நிகழ்ச்சியையும் நிறுத்தி விட ஈழத்து உறவுகளை கூட்டி நிகழ்சி ஏற்பாட்டாளர்களுக்கு நல்ல பாடம் கற்பியுங்கள். இந்த உதாரணம் நம்முடன் சொறிபவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையட்டுமே...

கருத்துக்களத்தில் இது சம்மந்தமாக நிறைய கருத்துக்கள் பகிரப்பட வேண்டும்.


- adithadi - 06-10-2005

பார்ப்பண்ர்களான விசு, சோ, S.V சேகர் தமிழ்தேதியத்திற்கு எதிராக செயல்படும் இவ் பரதேசிகளுக்கு சரியான பாடம் கொடுப்பார்கள் எமது ரொரோண்டோ தமிழர்கள். விசுவிற்கு நடந்த கதிதான் S.V சேகருக்கும்.


- தூயா - 06-10-2005

பட்டால் தான் புரியும் சிலருக்கு. :twisted:


- sathiri - 06-10-2005

பதுங்கியிருக்கிற இன்னொரு பச்சோந்தி உவனை கூப்பிடுறது யார் எங்கடை கோணங்கியளோ??? :twisted:


- sinnappu - 06-14-2005

¾¢Õ󾡾 ¦³ýÁí¸û
¯Åí¸Ç¢ý¼ «Ãº¡í¸õ ±í¸ÙìÌ Óи¢Ä ÌòÐÐ ¿¡í¸û ¬Ã¡ò¾¢ ±ÎòÐ ÅçÅü츢Èõ

Å¡ú¸ ¾Á¢Æý ÅÇ÷¸ «Åý À½¢

±ì§¸Î ±ñ¼¡Öõ ¦¸ðÎô§À¡í§¸¡
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Niththila - 06-14-2005

ஜூனியர் விகடனில இந்த துரோகியின் பேட்டி வெளியானதே வசி அண்ணா கூட இங்கு இணைப்பு கொடுத்திருந்தாரே

இப்படியான தமிழ் துரோகிகளுக்கு அழைப்பு விட்டவர்கள் தமிழர்களா :evil: :evil:


- nirmalan - 06-14-2005

இந்த நிகழ்வு தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. தங்கதீபம் பத்திரிகைக்காரர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

கொடுமை என்னவென்றால் இவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது கனடாவிலுள்ள படைப்பாளிகள் கழகம். எஸ்.வி.சேகர் புலிகள் தான் தன் வரவை தடுத்ததாக கூறியிருக்கிறார்.


- தூயா - 06-14-2005

எல்லத்துக்கும் புலிகளை சொல்லி பப்ளிசிட்டி தேடுறது சிலருக்கு தொழில் :twisted: