![]() |
|
நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும் (/showthread.php?tid=4111) |
நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும் - hari - 06-10-2005 <b>நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும் சுடரவன்</b> போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, சமஷ்டி, இடைக்கால நிர்வாகம் என கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் மனங்களை நிறைத்திருந்த சமாதான மாயை படிப்படியாக விலகி மீண்டுமொரு யுத்த சூழல் விரைவாக உருவாகி வருகிறது. சிங்களப் பேரினவாதத்தால் தாம் மற்றுமொரு தடவை ஏமாற்றப்பட்ட உணர்வு, தமிழ் மக்கள் மத்தியில் ஆழப்பதிய ஆரம்பித்துவிட்டது. தீவிரமடைந்துள்ள சிறிலங்கா படைத்தரப்பின் மறைமுக மற்றும் நேரடி நடவடிக்கைகள் தமிழர் தரப்பை யுத்தத்திற்கு வலிந்திழுக்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தப் புறச் சூழ்நிலையில் யுத்தம் தவிர்க்கப்படக் கூடிய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவே தோன்றுகிறது. பல்வேறு கட்டங்களாக பிரித்து நோக்கப்படும் தமிழீழ விடுதலைப் போர் பொதுவாக ஈழப்போர் என பல தரப்பினராலும் குறிப்பிடப்படுகிறது. ஈழப்போர் இதுவரை மூன்று கட்டங்களாக அதாவது ஈழப் போர்-1, ஈழப்போர்-2, ஈழப்போர்-3 என நடைபெற்றுள்ளதாகக் கொள்ளப்படுகிறது. இனிவர இருப்பது ஈழப்போர்-4! ஈழப் போர் கடந்து வந்த ஒவ்வொரு கால கட்டத்தையும் ஆராயும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் சிறிலங்கா படைத்தரப்புடன் ஒப்பிடும் போது தமிழர் தரப்புப் பலம் மேலோங்கிச் சென்றுள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறிலங்கா படைத்தரப்பு தன் படைத்துறைக் கட்டுமானத்தை ஆள், ஆயுத ரீதியில் அதிகரித்த போதும் நவீன தொழில்நுட்பம், போரியல் உத்திகளை பயன்படுத்திய போதும் தமிழர் தரப்பு வலுவாற்றலை முறியடித்து வெற்றிகொள்ள முடியவில்லை. மாறாக தமிழர் தரப்பின் போரியல் உத்திகள் ஆயுதக் கையாள்கை என்பற்றால் சிறிலங்காப் படைத்துறையின் வலு சிதறடிக்கப்பட்டுள்ளது. எது எப்படியிருப்பினும் சிறிலங்கா அரசும் படைத்துறையினரும் யுத்தத்தை முன்னெடுக்க முடிவெடுத்துவிட்டார்கள் என்பது திண்ணம். ஆனால், தமிழர் தரப்புடனான இந்த நான்காம் கட்ட ஈழப்போரை அவர்கள் எவ்வாறு நகர்த்தப் போகின்றனர் என்பதே சிந்திக்க வேண்டிய விடயமாகிறது. <img src='http://www.battieelanatham.com/weeklymatter/1006/photo/1.jpg' border='0' alt='user posted image'> ஜெயசிக்குறு போன்ற பெருமெடுப்பிலான நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க படைத்தரப்பு உடனடியாக முயலாது என நம்பலாம். கடந்த காலத்தில் பெற்ற கசப்பான பாடங்களை அவர்கள் அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். அத்துடன் ஒரு காலத்தில் புலிகளிடம் நீண்ட வீச்சு பிரதேசப் படைக் கலங்கள் (longe range area weapons) இல்லாத அல்லது குறைவாக இருந்த காலகட்டத்தில் இவ்வகையான நடவடிக்கைகள் சில வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும் தற்போது பற்றரிக் கணக்கில் (Battery) வளர்ந்துள்ள தமிழர் தரப்பின் மோட்டார், ஆட்டிலறிப் பலம் என்பவற்றின் முன் பெருமெடுப்பு நடவடிக்கைகளின் வெற்றி இலகுவான விடயமாக இருக்கப் போவதில்லை. மேலும் 85000 படையினர் படையை விட்டோடியுள்ள இச்சந்தர்ப்பத்தில் படையினரின் இத்தகைய நடவடிக்கைக்கான சாத்தியப்பாடு மேலும் வலுவிழக்கின்றது. இவ்வாறு நோக்கும் போது தமிழர் தரப்பின் வலுநிலைத் தளப்பிரதேசம் நோக்கிய பாரிய படை நடவடிக்கைகளுக்கான உடனடிச் சாத்தியப்பாடு மிகக் குறைவானதே. படைத் தரப்பைப் பொறுத்தவரை இம்முறை தென்தமிழீழப் பகுதியிலேயே அவர்களது படை நடவடிக்கைகள் பெருமளவு இடம் பெறும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. சிறிலங்கா படைத்துறை மூலோபாய வகுப்பாளர்களின் கருத்துப்படி கிழக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் என்பது மிக முக்கியமான விடயமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. (எனினும் சிறிலங்காவின் படைத்துறை நடவடிக்கைகள், படைத்துறை நோக்கிற்கு அப்பாற்பட்டதாக அரசியல் இலாப நோக்கில் முன்னெடுக்கப்படுவது மிகவும் பரிதாபகரமானது என மூத்த இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.) சிறிலங்கா படைத்துறை மூலோபாயக் குறிப்புக்களை நோக்கும் போது கிழக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதை வடக்கில் இருந்து பிரிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். "If east deprived to the L.T.T.E eelam concept is killed" "Jaffna / wanni are generally considered to be the head of the problem the heart lies in east" -Alternative strategy - by SL Army இதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழரது தாயகக் கோட்பாட்டை அவர்களது அபிலாசைகளை இல்லாதொழிப்பதற்கான வழியாக கிழக்கைப் பிரித்தல் எனும் விடயம் அமைவதுடன் படைத்துறை ரீதியில் தமிழர் தரப்பின் பலத்தை சிதறடிக்கும் தாக்கமான வழிமுறையாகவும் இது அமைகிறது. இத்தடவை இம்மூலோபாயத்திற்கு சிறிலங்கா அரசும் அதன் படைகளும் முன்னுரிமை கொடுத்து செயற்படும் என நம்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கருணாவால் கிழக்கில் தோன்றியுள்ள நிலையை படையினர் தமக்குச் சாதகமாக பயனபடுத்திவரும் தற்போதய நிலையில் இந்த மூலோபாயத்தை முன்னெடுப்பது பொருத்தமானதென படைத்தரப்புக் கருதலாம். அத்துடன் மட்டக்களப்பு போலவே திருமலையிலும் படையினர் ஒட்டுப்படையினரின் துணையுடன் படைச் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சாத்தியப்பாடுகளும் தென்படுகின்றன. அண்மையில் வெலிக்கந்த பகுதியில் கொல்லப்பட்ட ஈ.என்.டி.எல்.எப்; குழுவை திருமலைப் பகுதியில் பயன்படுத்தவே சிறிலங்கா படைத்துறைப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் தற்போது திருமலையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலைமைகளையும் இவற்றுடன் தொடர்புபடுத்தியே நாம் நோக்க வேண்டியுள்ளது. கிழக்குக்குரிய படைத்துறையுத்திகள் இவ்வாறு வகுக்கப்பட வடக்கில் தமிழர் தரப்பின் வலுநிலைப் படைதுறைத் தளப் பிரதேசமாக விளங்கும் வன்னிப் பெருநிலப் பரப்பில் நிலைமைகள் வேறுவிதமாக அமையலாம். <img src='http://www.battieelanatham.com/weeklymatter/1006/photo/2.jpg' border='0' alt='user posted image'> முக்கியமாக தமிழர் தரப்பின் தலைமை, முக்கிய தளபதிகளை குறி வைத்து சிறுகுழு நடவடிக்கைகள் (small unit operation) பரவலாக முன்னெடுக்கப்படலாம். இதில் ஆழ ஊடுருவித் தாக்குதல், பிரதான பங்கை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் அதன் டிவிசன்களால் கூட பெற முடியாமல் போன பயன் விளைவுகளை ஆழ ஊடுருவித் தாக்கும் சிறு பிரிவுகள் (Deep Penetration/ L.R.R.P) பெற்றுக் கொடுத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. வழமையாக சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவுகளால் (S.F, commando) முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளில் இம்முறை பொலிஸ் விசேட அதிரடிப் படையும் (S.T.F) இணைந்து கொள்ளும் வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிகிறது. <img src='http://www.battieelanatham.com/weeklymatter/1006/photo/4.jpg' border='0' alt='user posted image'> இவர்களுக்கான இத்தகைய பயிற்சிகள் முதன் முறையாக பொத்துவில் பகுதியில் கடந்த வாரங்களில் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்புப் படைப் பிரிவுகளைப் பயன்படுத்தி கொமாண்டோப் பாணியிலான அதிரடித் தாக்குதல்களை புலிகளின் முக்கிய இலக்குகள் மீது நிகழ்த்தும் வாய்ப்புக்களும் நிராகரிக்க முடியாதவையே. இச்செயற்பாடுகளில்; விமானப் படையும்;; ஒன்றி ணைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். சிறிலங்கா படைத் துறையினரின் நடவடிக்கைகள் மேற்கண்டவாறு அமையலாம் என நாம் எதிர்பார்க்கும் அதேவேளை தமிழர் தரப்பின் உத்திகள் தொடர்பிலும் சிலவற்றை ஆராய்வது பொருத்தமானது. தமிழர் தரப்பின் படைத்துறைத் தயார்ப்படுத்தல்களை உற்று நோக்கும் போது அவர்களும் சிறு குழு நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அவர்களின் படைத்துறைப் பயிற்சி தொடர்பாக வெளிவருகின்ற தகவல்களின் படி ஆழ ஊடுருவும் அணிகள், சிறப்பு அதிரடிப் பிரிவுகள் என்பனவற்றிற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் நடைபெற்று பெற்று வருவதை அறிய முடிகிறது. அத்துடன் சிறப்பு ஆயுத பயிற்சி நெறிகளை முடித்து வெளியேறும் அணிகள் தொடர்பான செய்திகளும் வெளி வருகின்றன. தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இம்முறை போரை சிறிலங்காவின் சகல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்குடனான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு சிறிலங்காவின் படைத்துறை இலக்குகள் மட்டுமன்றி பொருளாதார மையங்களும் குறிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் யாழ். குடாநாட்டை மீளக் கைப்பற்றும் விடயமானது விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அதிமுன்னுரிமை அளிக்கப்பட்ட விடயமாக இம்முறை அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இரு தரப்பினரதும் படைத்துறை உத்திகள் இவ்வாறு அமையலாம் என நாம் எதிர்பார்க்கும் அதேவேளை பயன்படுத்தப்படவுள்ள போர்க்கல வலுவாற்றல் பற்றியும் சிறிது நோக்குவது பொருத்தம். சிறிலங்கா படைத் தரப்பைப் பொறுத்தவரை கடந்த காலத்தில் பயன்படுத்திய போர்க் கலங்களைவிட புதிதாக எதையும் பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள் இதுவரை தெரியவில்லை. ஆயினும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து சூட்டுவலுவை அதிகரிக்க அவர்களால் இயலும். <img src='http://www.battieelanatham.com/weeklymatter/1006/photo/3.jpg' border='0' alt='user posted image'> தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இம்முறை அவர்களது ஆட்டிலறி சூட்டு வலுவாற்றல் பன்மடங்கு அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. அவர்களது ஆட்டிலறி படைப்பிரிவில் 130 mm பற்றரிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிறிலங்கா படைத்தரப்பு முன்பை விட பன்மடங்கு பலமான தமிழர் தரப்பின் சூட்டாற்றலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். இரு தரப்பினதும் கடற்படைப் பலம் பற்றிக் குறிப்பிடும் Jane"s பாதுகாப்பு சஞ்சிகை, கடந்த காலத்தில் சிறிலங்கா கடற்படையின் கடற்கல பலத்தில் மூன்றிலொன்று அல்லது அரைவாசி அழிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழர் தரப்பு கடற்படை வலுவாற்றல் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. அத்துடன் இம்முறை தமிழர் தரப்பில்; வான்வலு நிட்சயம் ஈடுபடுத்தப்படும் என்பது யாவராலும் இலகுவாக ஊகிக்கக் கூடியதொன்றே. இரண்டு விமானங்கள் என படைத் தரப்பால் கூறப்படுகின்ற போதும் தமிழர் தரப்பின் வான்வலு ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்குவாட்றன்களை (squadron) கொண்டதாக இருக்கலாம் எனவும் நம்பப்டுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதியுயர் செயற்றிறன் மிக்க தற்கொடை அணிகளும் முழுவீச்சுடன் களமிறகங்கும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க எதிர்வுகூறலேயாகும். சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் இடம்பெறப்போகும் நான்காம் கட்ட ஈழப்போரை தமிழர்; தரப்பை பலவீனப்படுத்தும் அல்லது பணிய வைக்கும் ஒரு கட்ட யுத்தமாக கருதினாலும் தமிழர் தரப்பு இதனை ஒரு இறுதி யுத்தமாகவே முன்னெடுக்கும் என்பதை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். - Sooriyakumar - 06-10-2005 கரி அண்ணா சண்டைபிடிக்க போராளிகளே இல்லாமல் எப்படி சண்டைபிடிப்பது?. எப்படி வெற்றிபெறுவது? யதார்த்த நிலைமை உண்மையான நிலை அப்படியிருக்க வாய்தர்க்கத்தால் வெற்றிபெற்றால்மட்டும் போதுமா? - hari - 06-10-2005 சண்டை வராது ஆனால் திணிக்கப்பட்டால் 4ம் ஈழப்போர் வெடிக்கும்! உங்கள் சந்தேகங்களுக்கு தலைவரிடம் தான் பதில் உண்டு, நம்பிக்கையுடன் இருங்கள்! இப்படி ஆயிரம் சந்தேகங்களுக்கு முடிவு கட்டியவர் எங்கள் தலைவர்! - Nilavan - 06-10-2005 Quote:கரி அண்ணா சண்டைபிடிக்க போராளிகளே இல்லாமல் எப்படி சண்டைபிடிப்பது?. எப்படி வெற்றிபெறுவது? யதார்த்த நிலைமை உண்மையான நிலை அப்படியிருக்க வாய்தர்க்கத்தால் வெற்றிபெற்றால்மட்டும் போதுமா? அப்பு சூரியகுமார் போராளிகள் யாரிடம் இல்லை? ஸ்ரீலங்காவிடமா அல்லது தமிழீழத்திடமா? தமிழீழத்தில் இருக்கும் ஒரு போராளி சிஸ்றீலங்காவில் இருக்கும் 25 கூலிப்படைகளுக்கு ஒப்பாகும்..... வாய்ப்பேச்சு எங்கள் தலைவனிடம் இல்லை செயற்பாட்டால் வெற்றி பெறும் பலம் அவரிடமிருக்கிறது... சத்தியமாய் உங்களை போராட எவரும் அழைக்க மாட்டார்கள் கவலை வேண்டாம்..........யதார்த்த உண்மையை நீங்கள் மறந்து அல்லது மறைத்து களததில் எழுதுவதால் எந்'த பிரயோசனமும் இல்லை உண்மை எதுவோ அது நான்காம் ஈழப்போர் ஆரம்பித்தால் தெரியும்...... - cannon - 06-10-2005 நான்காம் கட்ட ஈழப்போர்? தமிழர் தரப்போ அல்லது சர்வதேசமோ விரும்புகிறதோ இல்லையோ அது தமிழர் மீது திணிக்கப்பட போவதும் அதை தமிழர் தரப்பு எதிர் கொள்ள வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடப் போகிறது. இதை செயற்படுத்துவதற்கு, திணிப்பதற்கு சிங்கள அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக கிழக்கில் புலிகளுக்கெதிராக நிழல் யுத்தம், ஊடுருவித் தாக்கும் நிகழ்வுகள் கொழும்பில் கைதுக்கள், கொலைகள் நடைபெறுகையில் தெற்கில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு, ஆயுதக் கொள்வனவு பெருமெடுப்பில் நடைபெற்று வருகின்றது. தெற்கிலுள்ள சகல இராணுவ முகாங்களில் ஏராளமான சிறுவர்களுக்கு பயிற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று இருக்கும் கேள்வி இவற்றை தமிழர் தரப்பு எப்படி தந்திரமாக எதிர் கொள்ளப் போகின்றதென்பதே??????????? ஆரம்ப காலம் தொட்டு ஈழப் போர்கள் வடக்கு, கிழக்கையே இலக்காக கொண்டு பாரிய போர்கள் நடைபெற்றன. ஆனால் இறுதியாக நடைபெற்ற மூன்றாம் ஈழப்போரானது முடிபுக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது கட்டுநாயக்கா விமானப்படைத் தள தாக்குதலே! இந்த நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழர் தரப்பு வெற்றி, தோல்வியை தீர்மாணிக்கப் போவது, சிறீலங்காவின் தலைநகர் உட்பட தென்பகுதிகளை எவ்வாறு செயலிலக்கப் பண்ணுவதிலேயே தங்கியிருக்கப் போகிறது. இதில் தெற்கில் யத்த களத்தைத் திறப்பதிலேயே வடக்கு, கிழக்கில் இழப்புகளையும் தவிர்க்கக் கூடியதாகவிருக்கும். இதில் எங்கு, எவ்வாறு, எப்படி யுத்தக் கதவுகளைத் திறக்கச் செய்ய வேண்டுமென்பதில் ஈழத் தமிழர்களின் காப்பரன்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மாறாக அற்புதமான தலைவனின் கரங்களை புலத்திலிருந்து தொடர்ந்து பலப்படுத்துவதிலேயே, எமக்கோர் நிம்மதியான, சுதந்திராமான, நம்மை நாம் ஆளும் வாழ்வு பிறக்கும். எமது வலிமையிலேயே எம் வாழ்வும் வளமும் தங்கியிருக்கிறது. - narathar - 06-10-2005 Sooriyakumar Wrote:கரி அண்ணா சண்டைபிடிக்க போராளிகளே இல்லாமல் எப்படி சண்டைபிடிப்பது?. எப்படி வெற்றிபெறுவது? யதார்த்த நிலைமை உண்மையான நிலை அப்படியிருக்க வாய்தர்க்கத்தால் வெற்றிபெற்றால்மட்டும் போதுமா? சண்டையென்பது வெறும் ஆள் எண்ணிகையில் தங்ஙியில்லை, அது வீவேகத்திலும்,வீரத்திலும் தங்கி உள்ளது.களம் எங்கு எங்கு விருயுது எண்டு பாருன்கோவன். - ஊமை - 06-10-2005 narathar Wrote:Sooriyakumar Wrote:கரி அண்ணா சண்டைபிடிக்க போராளிகளே இல்லாமல் எப்படி சண்டைபிடிப்பது?. எப்படி வெற்றிபெறுவது? யதார்த்த நிலைமை உண்மையான நிலை அப்படியிருக்க வாய்தர்க்கத்தால் வெற்றிபெற்றால்மட்டும் போதுமா? நாரதர் கூறியது முற்றிலும் உண்மை. உதாரணமாக 1992ம் ஆண்டு சிங்களத்தின் கெமுணுவாம் டென்சில் கொப்பேகடுவ தலைமையில் யாழ் நகரை ஆக்கிரமிக்க 40 ஆயிரம் சிங்களப்படைகள் கனரக சூட்டுவலுக்கொண்ட ஆயுதங்களுடன் களமிறங்கத்தயாரானபோது அப்போது எமது கதை முடிந்தது என யாழ் தமிழர்களே எண்ண, தமிழர் தலையில் பாரிய இடிவிழுத்த சிங்களம் களமிறங்கும் சில மணி நேரங்களுக்கு முன் மூக்கிலே விரல் வைக்குமாற்போல் எமது தலைவன் கொடியவர்களிடம் இருந்து எம்மைக் காப்பாற்றினான். அது அன்றைய வரலாறு சிங்கள இராணுவ மேலாளரோடு வடபிரார்திய கட்டளைப்பீடமே பரலோகம் போனது அராலித்துறையில். என்ன மறந்துவிட்டீர்களா ? யாப்பாபடின சேவையில் புலிகளின் கடைசி நாட்கள் எண்ணப்படுகிறது. அதனால் அதை எண்ணும்போது அவர்களுக்கு அவர்களை அறியாமலே சிறுநீர் கழிகிறது என கொச்சைத்தமிழில் பேசிய யாழ் சிங்களத்தளபதி விஜயவிமலரத்தின தனது கடைசி நாட்கள் எண்ணப்படுகிண்றது என்பதை கனவிலும் நினைத்திருக்கமாட்டார். அது அன்று. இன்றோ யாழ்குடநாட்டை எதிரி வலைப்பின்னல் போல் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளான். அத்தோடு தமிழ் துரோக கும்பல்களும் அங்கு தாராளமாகவே அலைகின்றனர். பாரிய யுத்தத்திற்கு தாம் ஈடுகொடுக்க தயார் என்பது போல் சிங்களப்படைகளும் காவலரண்களை அமைத்து அதை பலப்படுத்தியும் வருவதை காணக்கூடிதாக இருந்தது. அப்பால் வன்னியில் புலிப்படையும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது காணக்கூடியதாகவே இருந்தது. தரைப்படை, கடற்படை, வான்படை, அத்தோடு உப படைப்பிரிவுகளான ஆட்டிலறிப் படை, கவசப்படை, கவச எதிர்ப்புப் படை, விசேடமாக ஒருகுழல் எறிகணை செலுத்தியிலிருந்து மல்றிபரல் எனப்படும் பலகுழல் எறிகணைகளை ஏவுவதற்கு பல்வேறு பெயர்களில் படையணிகள், அத்தோடு விசேட தாக்குதல் - மின்னல் வேக தாக்குதல் அணிகள். என்வற்றோடு கட்டளையிடுங்கள் கதை முடிக்கிறோம் என தமிழீழம் மீட்க்க தமிழ்ப்படைகள் தயாராகவே உள்ளன. தக்க தருணத்தில் எங்கள் தலைவன் சொல்லி அல்ல செய்து காட்டுவான். அதனால் நாம் எமது மனங்களில் தேவை இல்லாதவற்றை நினைத்து கலங்காமல் தலைவனின் கைகளை புலத்தில் இருந்து பலப்படுத்துவோம். தலைவன் இன்னும் பொறுமைகாக்கிறான் அதனால் இன்னும்................ இதை நான் சுனாமியின் போது இலங்கை சென்று அங்கிருந்து தமிழீழம் சென்றபோது காண - கேட்க கூடியதாய் இருந்தது. - kuruvikal - 06-11-2005 மீண்டும் ஓர் மனித அவலம் இலங்கைத்தீவில் அவசியமா... பல்லாயிரம் மனிதர்களின் துன்பத்தின் மீது.... ஒரு விடிவு... அதைவிட இயன்றவரை பொறுமைகாத்து...சர்வதேச ஆதரவை தமிழர்கள் தம் பக்கம் ஆக்கிக் கொண்டால்...ஓர் இரவுக்குள்..கிழக்குத் தீமோர் போல..நாமும் சுதந்திர தேசம் படைக்கலாம்...அதற்கான நகர்வுகளே இப்போது அவசியம்...! சிங்களவர்கள் எங்களுக்கு ஆக்கித்தந்திருக்கும் அருமையான நேரமிது...இதில் இராணுவ சமனிலையில் இருந்து கொண்டு விவேகத்துக்கு வேலை கொடுக்க வேண்டும்...! இதில் தாயகம் புலம் என்ற வேறுபாடின்றி மக்கள் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்...!
- narathar - 06-11-2005 எதற்காகக் காத்திருக்க வேண்டும்? Saturday, 11 June 2005 ----------------------------------------------------------- சமாதானம் உணர்ச்சிமயமான இடங்களுக்குள்ளால் வெடித்து மேலெழும்பி யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை சின்னாபின்னமாக்கி விடும் போல் தெரிகிறது. தமிழர்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்கு (கிழக்கு) பொருளாதாரத் தடையை நீக்கக் கோரியும் புதிய காவலரண்கள், சோதனைச் சாவடிகள் அமைப்பதை நிறுத்தக்கோரியும் ஆக்கிரமிப்பின் அடையாளப்பொருளாக சிங்கள தேசத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த புத்தர் சிலை தமது பிரதேசத்தில் நிர்மானிக்கப்படுவதை அகற்றக்கோரியும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிடப் போவதாக சர்வதேசப் பரபரப்புகளை ஏற்படுத்தி விட்ட சமாதானத்தில் இன்று தமிழர்கள் எதற்கெல்லாம் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. சமாதானம் நீளநீள இப்படிக் கஞ்சிக்கும், கூழுக்கும், கிலுகிலுப்பைக்கும் போராட்டம் நடத்தவேண்டி இருப்பது இரத்தம் சிந்திப் போராடிய மக்களுக்கு ஒரு துர்க்குறியே அல்லாமல் வேறென்ன? நின்று போன பேச்சுவார்ததையை மீளத் தொடங்குவதா, இல்லையா? என்ற பேச்சுக்கூட இல்லாமல், போட்ட காவலரணை மீள எடுப்பதா, வைத்த சிலையை மீளப் பெறுவதா என்ற பேச்சுக்குள் சிக்குப்பட்டுக் கிடக்கிறது சமாதானம். இப்படிச் சின்னத்தனங்களுக்குள் சிக்கவைத்து விட்டுக் கொடுப்பது, விடாப்பிடியாக நிற்பது,விசாரணை நடத்துவது என்று காலவிரயம் செய்து காலத்தால் இலாபம் ஈட்டிக்கொள்ளும் சிங்களத்து அரசியல் தமிழர்களுக்குப் புதிதல்ல. ஆனால் இம்முறைச் சமாதானம் சர்வதேசத்தின் கவனம், ஈடுபாடு, கண்காணிப்பு ஆகியவற்றால் காவலிடப்பட்டிருக்கிறது என்றுதான் தமிழர்கள் நம்பினார்கள்.வழமைப் பிரகாரமாய் இம்முறையும் ஆகிவிடாது என்ற எண்ணத்தில்தான் காலெடுத்தும் வைத்தார்கள். எல்லாமே பொய்யாகிப் போகிறது. நாய்வாலை நிமிர்த்த எங்களால் இயலாது என்று தெரியும். வெள்ளையராலும் இயலாதென்று இப்பொழுதுதான் விளங்க வேண்டியதாயிற்று.இன்றும் சிலகாலம் நீண்டால் தமிழர்கள் எதற்கெல்லாம் போராடட்டம் நடத்தவேண்டி நேரிடுமோ? வரப்போவது சமாதானம் என்றால் புண்களைத் தாங்கியாவது பொறுத்திருக்கலாம்.வரப்போவது யுத்தம்தான் என்பது அனேகமாக எல்லோர் கண்களுக்கும் தெரிந்து விட்டது.அது நாளை வந்தால் என்ன? இன்று வந்தால் என்ன? நன்றி: ஆசிரியர் தலையங்கம்: ‘சுதந்திரப் பறவைகள்’ (விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடு) பங்குனி, சித்திரை, வைகாசி 2005 இதழ் கணனித் தட்டச்சு : திரு (ரஷ்யா) - Thala - 06-12-2005 தலைவர் வெறும் 500 போரளிகலொடு 33000 இந்தியன் ராணுவதை மணலாத்தில வைச்சு ஓட விட்டது தானே வரலாறு. வெளியில வந்த Amy காட்டுக்க புலி அடிக்கேல்ல பேய் அடிக்குது எண்டெல்ல சொன்னவை. எல்லாத்துக்கும் பதில் தலைவரிட இருக்கு அனா எப்ப வரும் எண்டு தான் தெரியாது...காரமாய் வரும். அது மட்டும் தெரியும் - kurukaalapoovan - 06-12-2005 சிங்கள மக்களுக்கு உணரவைக்கும் ஓரு இறுதிப்போராகவும் இருக்குமா? hவவி:ஃஃறறற.வயஅடைழழளயi.உழஅஃழழளயi.யளி?னைஸ்ரீ5572ரூஉயவஐனுஸ்ரீ2 - Mathan - 06-13-2005 அடுத்த ஈழபோர் ஒன்று வராமல் என்று ஒன்று வராமல் தமிழர் பிரைச்சனை சுமுகமாக தீரும் என்று நம்புபோம், ஏற்கனவே மூன்று ஈழபோர்களையும் சுனாமியையும் சந்தித்த தமிழ் மக்களின் துயரம் இன்னுமொரு போரை சந்திக்காமலே தீரட்டும். - Sooriyakumar - 06-13-2005 அண்ணாமாரே அக்காமாரே வெறும் வாய்ச்சவடால் மாத்திரம் போதாது. படைபலம் மிக மிக அவசியம். நாலாம்கட்ட ஈழப்போருக்கு ஆதரவுதேடும் நீங்கள் ஏன் அங்குசென்று போருக்கு ஆட்பலம் சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கேள்வி. சுனாமிக்குப்பின் நடைபெற்ற அத்தனையும் தமிழருக்குப் பாதகமாகவே அமைந்திருக்கின்றது. எந்தவெரு நாடுகூட நம்பகுதிகளுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்குவதற்கு சம்மதிக்கவில்லை. அப்படியிருக்க வாய்ச்சவடால் வெற்றியைமட்டும் வெற்றியாகக் கணிக்கும் நமது தமிழர் பண்பாட்டுக்குமட்டும் இங்கு குறைவு இல்லை.யதார்த்தத்துக்கு வாருங்கள். நமக்கு படைபலம் தேவை உங்களில் எத்தனைபேர் உங்கள் வளர்ந்த பிள்ளைகளை போருக்கு அனுப்ப தயாராக உள்ளீர்கள்? அப்படி அனுப்புவதற்கு உங்களுக்கு விருப்பமின்மையாயிருந்தால் போருக்காக கூச்சலிடுவதை விடுங்கள். சமாதான வழிமுறைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் - இவோன் - 06-13-2005 Quote:மாறாக அற்புதமான தலைவனின் கரங்களை புலத்திலிருந்து தொடர்ந்து பலப்படுத்துவதிலேயே Quote: தலைவனின் கைகளை புலத்தில் இருந்து பலப்படுத்துவோம்அதுதான் சொல்லிவிட்டார்களே. புலத்தில் இருந்து பலப்படுத்துவோம் என்று. எவ்வளவு அவதானமாக புலத்தில் என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறார்கள். வாய்ப்பேச்சில் வீரரடி.. - Bond007 - 06-14-2005 Quote:நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும்Nkw;nrhd;d $w;W Ajj;jjlij njhlf;FtJ ehky;y type;J njhLf;Fk; 4k; Aj;jk; gw;wpNa NgRfpwJ. epw;w jpU #u[a FkhUtplk; r[py Nfs;tpfs;. 1. Aj;jk; ek; kPJ jpzpff;gLk; gl;rj;jpy; ehk; ek;ik jahuhf itj;jpUf;f Ntz;Lkh? My;yJ ek; tpUg;G ntWg;Gfis tpLj;J mtu;fspd; gpd; Gwj;ij ef;f NtZkh? 2. Nguspit Vw;gLj;jpa Rdhkp epjpia ntsp ehLfs; nfhLj;Jk; mij nfhLf;f $lhJ vd;gjpy; epq;fs; ,zthjpfs; ijNfhu;j;J jkpo; kf;fs; ve;j tpjj;jpYk; ed;ikailaf; $lhJ vd;gjpy; fz;Zk; fUj;JkhapUf;Fk; rpq;fs Ngupdthjpfs; ekf;F Gfl;Lk; ghljl;ij tpLj;J Gypfs; vd; GLq;Ffpwhu;fs; vd;gjpy; kl;Lk; ftdkhapUf;f NtZkh? 3. ,jd; Kykk; ePq;fs; mbf;fb $Wk; ,e;j Gyk; ngau; kf;fs; Aj;jk; kPj fhjy; fj;jupf;fha; nfhz;zltu;fs; mtu; jk; gps;isfis mDg;g jahuh vd;W mwPtPdkhf Nfs;tpfis vOg;g Kd; ehk; vy;yhk; jg;gp te;jtu;fs;. tpUk;gpNah tpUk;ghkNyh Xb te;J tpl;L tpyhrk; vOg;gyhk;. Mdhy; Aj;jj;ij re;jpf;fg;NghtJ ehky;y.! Mdhy; fhyj;jpd; fl;lhak; ek;ikAk; mq;F xU ehs; ,Of;Fk;. Mdhy; ve;j xU fhuzj;jpw;Fk; ahUk; Aj;jj;ij tpUk;gtpy;iy Mdhy; jpzpf;fgLk; Aj;jj;ij vjpu; nfhs;s mtu;fs; jahu; vd;gJ jhd; ajhu;jk;. 4. ,e;j Nghu;epWj;jij Kjypy; nfhz;L te;jjNjGypfs; jhd;. Mij Kjypy; Qhgfj;jpy; itj;Jf;nfhs;Sq;fs;. Mdhy; mg;g mit gae;J jhd; te;jit vz;L nrhd;d cq;fs; jutspaSf;F ,g;g ,e;j epahak; vq;ifapUe;J te;jjJ? ஜஙரழவநஸ நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும் சுடரவன் போர் நிறுத்தம்இ பேச்சுவார்த்தைஇ சமஷ்டிஇ இடைக்கால நிர்வாகம் என கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் மனங்களை நிறைத்திருந்த சமாதான மாயை படிப்படியாக விலகி மீண்டுமொரு யுத்த சூழல் விரைவாக உருவாகி வருகிறது. சிங்களப் பேரினவாதத்தால் தாம் மற்றுமொரு தடவை ஏமாற்றப்பட்ட உணர்வுஇ தமிழ் மக்கள் மத்தியில் ஆழப்பதிய ஆரம்பித்துவிட்டது. தீவிரமடைந்துள்ள சிறிலங்கா படைத்தரப்பின் மறைமுக மற்றும் நேரடி நடவடிக்கைகள் தமிழர் தரப்பை யுத்தத்திற்கு வலிந்திழுக்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஜஃஙரழவநஸ மேற்சொன்ன கூற்று யுதத்ததடதை தொடக்குவது நாமல்ல வலிந்து தொடுக்கும் 4ம் யுத்தம் பற்றியே பேசுகிறது. நிற்ற திரு சூரஜய குமாருவிடம் சஜில கேள்விகள். 1. யுத்தம் நம் மீது திணிகக்படும் பட்சத்தில் நாம் நம்மை தயாராக வைத்திருக்க வேண்டுமா? ஆல்லது நம் விருப்பு வெறுப்புகளை விடுத்து அவர்களின் பின் புறத்தை நக்க வேணுமா? 2. பேரளிவை ஏற்படுத்திய சுனாமி நிதியை வெளி நாடுகள் கொடுத்தும் அதை கொடுக்க கூடாது என்பதில் நிங்கள் இணவாதிகள் தைகோர்த்து தமிழ் மக்கள் எந்த விதத்திலும் நன்மையடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாயிருக்கும் சிங்கள பேரினவாதிகள் நமக்கு புகட்டும் பாடதட்தை விடுத்து புலிகள் என் புடுங்குகிறார்கள் என்பதில் மட்டும் கவனமாயிருக்க வேணுமா? 3. இதன் முலமம் நீங்கள் அடிக்கடி கூறும் இந்த புலம் பெயர் மக்கள் யுத்தம் மீத காதல் கத்தரிக்காய் கொண்ணடவர்கள் அவர் தம் பிள்ளைகளை அனுப்ப தயாரா என்று அறீவீனமாக கேள்விகளை எழுப்ப முன் நாம் எல்லாம் தப்பி வந்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ ஓடி வந்து விட்டு விலாசம் எழுப்பலாம். ஆனால் யுத்தத்தை சந்திக்கப்போவது நாமல்ல.! ஆனால் காலத்தின் கட்டாயம் நம்மையும் அங்கு ஒரு நாள் இழுக்கும். ஆனால் எந்த ஒரு காரணத்திற்கும் யாரும் யுத்தத்தை விரும்பவில்லை ஆனால் திணிக்கபடும் யுத்தத்தை எதிர் கொள்ள அவர்கள் தயார் என்பது தான் யதார்தம். 4. இந்த போர்நிறுத்ததை முதலில் கொண்டு வந்தததேபுலிகள் தான். ஆதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அப்ப அவை பயந்து தான் வந்தவை எண்டு சொன்ன உங்கள் தரவளியளுக்கு இப்ப இந்த நியாயம் எங்கையிருந்து வந்ததது? - வெண்ணிலா - 06-14-2005 Quote:Nkw;nrhd;d $w;W Ajj;jjlij njhlf;FtJ ehky;y type;J njhLf;Fk; 4k; Aj;jk; gw;wpNa NgRfpwJ. epw;w jpU #u[a FkhUtplk; r[py Nfs;tpfs;. மேற்சொன்ன கூற்று யுதத்ததடதை தொடக்குவது நாமல்ல வலிந்து தொடுக்கும் 4ம் யுத்தம் பற்றியே பேசுகிறது. நிற்ற திரு சூரஜய குமாருவிடம் சஜில கேள்விகள். 1. யுத்தம் நம் மீது திணிகக்படும் பட்சத்தில் நாம் நம்மை தயாராக வைத்திருக்க வேண்டுமா? ஆல்லது நம் விருப்பு வெறுப்புகளை விடுத்து அவர்களின் பின் புறத்தை நக்க வேணுமா? 2. பேரளிவை ஏற்படுத்திய சுனாமி நிதியை வெளி நாடுகள் கொடுத்தும் அதை கொடுக்க கூடாது என்பதில் நிங்கள் இணவாதிகள் தைகோர்த்து தமிழ் மக்கள் எந்த விதத்திலும் நன்மையடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாயிருக்கும் சிங்கள பேரினவாதிகள் நமக்கு புகட்டும் பாடதட்தை விடுத்து புலிகள் என் புடுங்குகிறார்கள் என்பதில் மட்டும் கவனமாயிருக்க வேணுமா? 3. இதன் முலமம் நீங்கள் அடிக்கடி கூறும் இந்த புலம் பெயர் மக்கள் யுத்தம் மீத காதல் கத்தரிக்காய் கொண்ணடவர்கள் அவர் தம் பிள்ளைகளை அனுப்ப தயாரா என்று அறீவீனமாக கேள்விகளை எழுப்ப முன் நாம் எல்லாம் தப்பி வந்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ ஓடி வந்து விட்டு விலாசம் எழுப்பலாம். ஆனால் யுத்தத்தை சந்திக்கப்போவது நாமல்ல.! ஆனால் காலத்தின் கட்டாயம் நம்மையும் அங்கு ஒரு நாள் இழுக்கும். ஆனால் எந்த ஒரு காரணத்திற்கும் யாரும் யுத்தத்தை விரும்பவில்லை ஆனால் திணிக்கபடும் யுத்தத்தை எதிர் கொள்ள அவர்கள் தயார் என்பது தான் யதார்தம். 4. இந்த போர்நிறுத்ததை முதலில் கொண்டு வந்தததேபுலிகள் தான். ஆதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அப்ப அவை பயந்து தான் வந்தவை எண்டு சொன்ன உங்கள் தரவளியளுக்கு இப்ப இந்த நியாயம் எங்கையிருந்து வந்ததது? - nirmalan - 06-14-2005 ஜனாதிபதி தேர்தல் வரை விடுதலைப் புலிகளை ஏமாற்றிக்கொண்டிருக்கலாம் என்று சந்திரிகா திட்டமிடுகிறார். அது சாத்தியமற்றது. பொதுக்கட்டமைப்பு கையெழுத்திட முன்னதாகவே அவர் பாரிய அழுத்தங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகிறார். நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் பெயரில் ஆர்ப்பாட்டம். நாளை 80 தொழிற்சங்கங்கள் பொதுக்கட்டமைப்புக்கு ஆர்ப்பாட்டம். போரின் தாக்கங்களை சிங்கள மக்கள் கூட சிந்திக்கிறார்களில்லை. சூரியகுமார் நன்றாகவே ஆதங்கப்படுகிறார் என நினைக்கிறேன். கருணாவின் பிளவு, ஆழிப்பேரலை ஆகியவற்றால் விடுதலைப் புலிகள் நலிவடைந்திருப்பதாக தோற்றம் காட்டினாலும் அது முற்றிலும் தவறு. விடுதலைப் புலிகள் இயக்கம் சிதைந்ததாக தோற்றம் காட்டினால் விடுதலைப் புலிகள் தமது படைக்கட்டுமாணத்தை என்றுமே சிதற விட்டதாக இல்லை. நாம் எம்மையே பலவீனமாவர்களாக நினைக்கக்கூடாது. வெளிநாட்டில் இருக்கும் நாம் அங்கே சென்று போரிடலாம் என்று கூட கருத்தினை இங்கே சூரியகுமார் முன்வைத்திருக்கிறார். புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கின்ற தமிழர்களால் தான் தாய் நிலத்திலிருக்கின்ற எம் மக்களுக்கு அன்றிலிருந்து பலம் சேர்த்து வருகிறார்கள். நாமும் அவர்களுள் ஒருவர் என்பதனை மறக்கக்கூடாது. இங்கிருந்து சென்று நாம் அங்கு போராட வேண்டும் என்றுதான் இல்லை. இங்கிருந்து தார்மீக ரீதியாக விடுதலைப் புலிகளுக்கும், அந்த மக்களுக்கும் குரல் கொடுக்கலாம். முதலில் நாம் வசிக்கும் நாட்டிலுள்ள மக்களுக்கு எமது பிரச்சனைகளின் உண்மைத்தன்மையை புரியவைக்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் செய்தாலே நாம் எமகான தளத்தினை புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கலாம். 4 ஆவது ஈழப்போர் தொடங்கினால் முன்னைய காலகட்டத்தைப் போன்று விளைவுகள் சிறியதாக இராது. விளைவுகள் பாரியதாக சிங்கள தேசத்திற்கு விளையும். சர்வேதசம் சிறிலங்காவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. முன்னரைப்போன்று தான் தோன்றித்தனமாக சிறிலங்கா அரசாங்கம் எதனையும் செய்ய முடியாது. 4 ஆம் ஈழப் போரின் மையப்புள்ளி கொழும்பிலிருந்தோ அல்லது கிழக்கிலிருந்தோ ஆரம்பிக்கலாம். எல்லாம் அந்த சொல்லுக்கு முன் செயல்காட்டும் தலைவருக்குத்தான் தெரியும். அதுவரை காத்திருப்போம். |